மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Sunday, September 25, 2022

வராமல் வந்த தேவதை-9



அத்தியாயம்-9

றுநாள் மாலை அவள் வீட்டுக்கு அருகில் இருந்த பூங்கா ஒன்றில் தன் மகளை அழைத்துக் கொண்டு சென்று இருந்தாள் சுரபி.

பெங்களூரின் இன்னொரு சிறப்பு ஆங்காங்கே இருக்கும் ஏரிகள்...!

இப்பொழுது நிறைய ஏரிகள் மூடப்பட்டு, கட்டிடங்களாக எழுப்பி இருந்த பொழுதும்,  ஆங்காங்கே சில ஏரிகளை பார்க்கலாம். அதில் ஒன்று தான் இந்த ஏரியும்.

அந்த ஏரியைச்சுற்றி நடைபயணம் செய்யும் வகையில் சீரமைத்து இருக்க, அதன் ஒரு பகுதியில் சிறிய பூங்கா ஒன்றும் அமைத்து இருந்தனர்.  

அந்த பூங்காவில், பிள்ளைகள் விளையாடும்  வகையில், சறுக்கு மரம், ஊஞ்சல், சீசா போன்ற  சிறு சிறு வசதிகள் இருக்க, அந்த பூங்காவில் தன் மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் சுரபி.  

பிள்ளையோடு சிறு பிள்ளையாக அவளும் சீசாவில் அமர்ந்தும், புல்வெளியில்  தன் மகளுடன் ஓடிப்பிடித்தும்  விளையாண்டு கொண்டு இருந்தாள்.  

அங்கு இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து இருந்த மற்றவர்கள் அவர்கள்  விளையாட்டை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.  

வழக்கமாக அலுவலகத்துக்கு அணியும்  ஜீன்ஸ் அன்ட்  டாப்ஸ் இல்லாமல், இலகுவான வெள்ளை நிற காட்டன் சல்வாரை அணிந்திருந்தாள்.

அவள் மகளுக்கும், பருத்தியிலான ஒரு அழகிய குட்டி ப்ராக் ஐ அணிவித்து இருந்தாள்.

புல்தரையில்,  தன் மகளை ஓடி பிடிப்பதைப் போல போக்கு காட்டி,  அவளை  துரத்துவதை போல பாவ்லா செய்ய, அந்த குட்டியும்  கிளுக்கி சிரித்தபடி,  தன் அன்னையின்  கைக்கு கிடைக்காமல் வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள்.   

திடீரென்று வழியில் கிடந்த சிறு  கல் தடுக்கி விடவும், அப்பா.....  என்று அலறியபடி கீழே சரிய, ஒரு நொடி  பதறி விட்டாள் சுரபி.  

அந்த புல்வெளியின் ஓரத்தில், அதற்கு பாய்ச்சும் தண்ணீர் வெளியில் செல்லாமல் இருக்கவும், அதில் போட்டிருந்த மண் துகள்கள் நடைபாதையில் வந்து விடாமல் இருக்கவும்,  அழகாக கான்க்ரீட் கற்களால் தடுத்து இருந்தனர்.

அவள் விழுந்து கொண்டிருந்த இடம், சரியாக அந்த கல்லின் மீதுதான்.

என்ன செய்வது என்று ஒரு கணம் பெரியவள் மறத்து போய் நிக்க, அந்த குட்டி கீழ விழும் முன்னே  நீண்ட வலிய கரம் ஒன்று அவளை தாங்கி பிடித்து,  அப்படியே உயர தூக்கி கொண்டது.

அப்பொழுதுதான் போன உயிர் திரும்பி வந்தது பெரியவளுக்கு.

“ஊப்ப்ப்ப்ப்...தேங்க் காட்....”   என்று பெருமூச்சு விட்டவள்,  நன்றியுடன் அந்த வலிய கரத்திற்கு சொந்தக்காரனை  நிமிர்ந்து பார்க்க,  அடுத்த நொடி அதிர்ந்து போனாள்.  

அவன்... அதே நெடியவன்...தன் மகள் அப்பா என்று அழைத்து செல்லம் கொஞ்சும் அதே கார்க்காரன்...

“ஓ மை காட்.. இவன் எங்கே இங்க? ஒருவேளை இவன் வீடும் பக்கத்தில் தான் இருக்கிறதோ?  இல்லையே... வீடு  பக்கத்தில் இருந்தால்,  தினமும் எதற்காக காரில்  அலுவலகத்திற்கு வரவேண்டும்? 

ஏதேதோ மனதில் ஓட,  அவனை குழப்பத்தோடும், அதிர்ச்சியோடும்  பார்த்திருந்தாள் பெண்  

அவள் மகளோ எந்த குழப்பமும் இல்லாமல்...போச்சு கீழ விழப் போகிறோம்...நன்றாக அடி படப்போகிறது...அது தரும் வலியைவிட, தன் அன்னையிடம் திட்டு வாங்க வேண்டும் என்ற அதிர்ச்சியில் இருந்தவள்...

கீழ விழாமல் காப்பாற்றப்பட்ட சந்தோஷம் ஒரு பக்கம்...அப்படி அவளை காப்பாற்றியவன்.. அவளின் பாசத்திற்குரிய அப்பா...  என்ற   சந்தோசம் மறுபக்கம்.

அவ்வளவுதான்...  தன் அப்பாவை பார்த்துவிட்ட சந்தோசம் அதிகமாக, அப்பா.... என்று சந்தோஷ கூச்சலிட்டவாறு,  வழக்கம் போல அவன் கழுத்தை இறுக்கி கட்டிக்கொண்டு,  அவன் கன்னத்தில் அழுந்த   முத்தமிட்டாள்.  

அந்த குட்டியை வாரி அணைத்து செல்லம் கொஞ்சியவன்

“அம்மும்மா.... விளையாடும் பொழுது எப்பொழுதும் கவனமாக விளையாடனும். இப்ப நீ தவறி கல்லில் விழுந்திருந்தால் என்னவாகி  இருக்கும்? இந்த மாதிரி கற்கள் இருக்கும் இடத்தில் ஓடி பிடித்து விளையாடக்கூடாது.

எப்பொழுதும் ஆபத்து இல்லாத பகுதியிதான் விளையாட வேண்டும்... என்ன புரிஞ்சுதா?   என்று அந்த குட்டிக்கு எடுத்துச் சொல்ல,  அவளும் புரிந்தது போல தலையை ஆட்டி வைத்தாள்.  

சுரபிக்கோ சங்கடமாக இருந்தது...

தன்னுடைய அஜாக்கிரதையினால் தான்,  தன் மகள் விழ இருந்தாள் என்று மண்டையில் உரைத்தது.

அதோடு அவனும் அதையேதான் மறைமுகமாக சுட்டி காட்டினான்.

முகம் கன்ற, தன்  கீழுதட்டைக் கடித்துக்கொண்டு அவனை பார்ப்பதை தவிர்த்து வேற பக்கம் பார்த்து வைத்தாள்.

தன் அருகில் நின்றிருந்தவளை ஒரு நொடி பார்த்தவன், அவளிடம்  எதுவும் சொல்லாமல்,  அந்த குட்டியை தூக்கி கொண்டு சென்று அவளுடன் விளையாட ஆரம்பித்து விட்டான் விகர்த்தனன்.  

பெண்ணவளுக்கோ  என்ன செய்வது என்று தெரியாமல், நகர்ந்து சென்று, அருகில் இருந்த  ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துகொண்டு மெல்ல நிமிர்ந்து அவர்களை பார்த்தாள்.  

அங்கே பனைமரத்தில் பாதி உயரத்திற்கு மேல் இருந்தவன்... தன்  முட்டி வரைக்கும் கூட இல்லாமல் இருந்த அந்த குட்டியுடன் சரிக்கு சரியாக குனிந்து, உடலை வளைத்து விளையாண்டு கொண்டு இருந்தான்.  

வழக்கமான ஃபார்மல் ட்ரெஸ்சில் இல்லாமல்,  கருப்பு நிற ஜீன்ஸ் ஒரு ரவுண்ட் நெக் நீலவண்ண டி-ஷர்ட்டும் அணிந்திருந்தான்.

அந்த டைட்டான டி-ஷர்ட்டில்  அவனின்  திடகாத்திரமான ஆண்மை பிதுங்கிக் கொண்டு நின்றது.

கொஞ்சமும் சதைபிடிப்பில்லாத முறுக்கேறிய சிக்ஸ் பேக் தேகம்...பரந்து விரிந்த மார்பு...உறுதியான, வலுவான புஜங்கள் என ஆண்மையின் இலக்கணமாய் இருந்தவனை  கண்ட பெண்கள் எல்லாருமே அவனைத்தான் சைட் அடித்துக் கொண்டிருந்தார்கள்.  

ஒரு சிலர் சுரபியை பொறாமையுடன் பார்த்து, ஒரு ஏக்க பெருமூச்சு  விட்டனர்.  

ஏன் தன்னை அப்படி பார்க்கிறார்கள் என்று குழப்பமாக இருந்தது சுரபிக்கி.

சர்று நேரத்தில் அதற்கான விடையும் அவளுக்கு  கிடைத்தது. ஆனால் அந்த விடைத்தான் அவளுக்கு உவப்பானதாக இல்லை.

******

ந்த பூங்காவிற்கு அவள் அடிக்கடி வந்து செல்பவள் என்பதால்,  அவளை அறிந்த ஒரு பெண்மணி வந்து அவள் அருகில் அமர்ந்தாள்.

“என்ன சுரபி.. உன் ஹஸ்பென்ட் ஃபாரின்ல இருந்து வந்து விட்டார் போல...  

சும்மா சொல்லக்கூடாது...ஆளு செம ஹேன்ட்சமா இருக்கார்... அதோட புள்ள மேல எவ்வளவு பாசமா இருக்கிறார்..!

இவ்வளவு பாசமா  இருக்கிறவர்,  எப்படி உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு வெளிநாட்டுக்கு போனாராம்?

இனிமேலாச்சும் அவரை பெங்களூர்லயே  புடிச்சு வச்சுக்கோ...வெளிநாட்டுக்கு எல்லாம்  தனியா  அனுப்பாத. அதோடு உன் மகளும்  அப்பா பாசத்துக்காக ரொம்பவும் ஏங்கிக் கிடக்கிறா போல...!  

கீழ விழறப்ப கூட வழக்காம எல்லாரும் அழைப்பதை போல அம்மானு கூப்பிடாம   அப்பா என்று சொல்லிக்கிட்டு தான் கீழ விழப்போனா...

நானும் அங்கதான் இருந்தேன். எனக்குமே ஈரக்கொலையே நடுங்கி விட்டது. சின்ன கல்லுனாலும், படாத இடத்தில பட்டு இருந்தா...?  

நல்ல வேளை உன் ஹஸ்பென்ட் ஓடி வந்து புடிச்சுகிட்டார். எப்படி அவரை கட்டிகிட்டானு பார்த்த இல்ல.

அதனாலதான் சொல்றேன்... இனிமேல் உன் மகளுக்கு அம்மா...அப்பா... ரெண்டு பேரும் வேண்டும்... “  என்று இன்னும் சில பல  அறிவுரைகளை வாரி வழங்கினார்.

சுரபி இடையில் மறுத்து சொல்ல முயன்ற பொழுதும், அவர் அதை கவனிக்காமல் அவர் பாட்டுக்கு தன் மனதில் இருந்ததை எல்லாம் சுரபியிடம் கொட்டிக் கொண்டிருந்தார்.

அதைக் கேட்ட  சுரபிக்கோ  தூக்கி வாரிப்போட்டது....  

“ஹஸ்பென்ட் ஆ? இவனா ? என்று நிமிர்ந்து அவனைப் பார்க்க,  அதே நேரம் அனிச்சையாய் நிமிர்ந்தவன், தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளைக்  கண்டதும்,  புருவங்கள் முடிச்சிட, தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி பார்வையால்   என்னவென்று விசாரிக்க,  அதில் திடுக்கிட்டவள், தன் கன்னம் சிவக்க,  தன் கீழுதட்டை கடித்துக் கொண்டு கீழே குனிந்து கொண்டாள்.  

விகர்த்தனனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.  

*****

டந்த ஒரு வாரமாகத்தான்   அவளை பார்த்துக் கொண்டிருக்கிறான்.  

கடந்த ஒரு வாரமும்,  அவனுக்கு புது உலகத்தை காட்டி இருந்தது.

முதன்முதலாக அந்தக் குட்டியை கண்டதும்,  அதுவும் அப்பா என்று தன்னைக் கட்டிக்கொண்டதும்  அவன் உள்ளே ஒரு புதுவித  உற்சாகம் பரவியது.  

தினமும் காலையில் அந்த குட்டியை பார்க்கும் ஆர்வத்தில் தினமும் காரில் வந்து அவளை ஏற்றிக்கொண்டு செல்ல பழக்கப் படுத்திக் கொண்டான்.

சில நேரம் அவன் கார் சீக்கிரமே வந்து  விட்டாலும், சாலையின் ஓரமாக  சற்று நேரம் காத்திருந்து,  அவள் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் வந்து குட்டியை காரில் ஏற்றிக்கொண்டு அலுவலகத்திற்கு வருவான்.  

அந்த குட்டியிடம் செலவிடும் அந்த ஐந்து நிமிடங்கள் தான் அவனுக்கான உற்சாக டானிக்காக இருந்தது.

*****  

நேற்று சனிக்கிழமை அலுவலகம் இல்லாததால், அந்த குட்டியை பார்க்க முடியவில்லை.

அவளைக் காணாமல் என்னவோ போல இருந்தது. அவளின் மழலையை கேட்காமல் ... அவளின் மழலை முத்தத்தை பெறாமல்...என்னவோ போல இருந்தது.

அவன் உள்ளே நமநம வென்று ஏதோ ஒரு அரிப்பு... இப்பொழுதே அந்த குட்டியை பார்க்க வேண்டும் என்று அவன் உடலில் ஒவ்வொரு செல்லும் தவித்தது.  

ஆனால் அவளை எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை.  

அவள் அன்னை தான் அவனைக் கண்டாலே எரிந்து விழுகிறாள்.  

தினமும் எப்படியோ வம்படியாக கட்டாயபடுத்தி அவளை காரில் ஏற்றிக்கொண்டு வருவதற்கே அவனுக்கு மலையை புரட்டிய பெருமிதம் தான்.

ஆனாலும் அவள் முன்னே தன் கெத்தை விட்டு கொடுக்காமல், அவனின் அமர்த்தலான குரலிலயே அவளை அமைதி படுத்தி வைத்திருந்தான்.

இன்றோ அலுவலகம் விடுமுறை...!

எப்படி பார்ப்பது?  அதுவும் இன்று அவள்  வீட்டில்தான் இருப்பாள்.  கூடவே அவள் கணவனும் இருப்பானே...!  எப்படி போய் பார்ப்பது?  என்று யோசனையுடன் நேரத்தை நெட்டி தள்ளினான்.  

தன் தனிமையை  சமாளிக்க...  தன் உள்ளே புழுபோல அரித்துக் கொண்டிருக்கும் வெறுமையை போக்க தன் அலுவலக வேலைகளில் கவனத்தை செலுத்தினான்.

நெருப்புக்கோழி மண்ணுக்குள் தலையை நுழைத்துக் கொண்டு தன் எதிரிகளிடமிருந்து தப்பித்து விட்டதாய் எண்ணுவதைப் போல, அவனும்  தன் தனிமை என்ற எதிரியிடம் இருந்து தப்பித்துக் கொள்ள அலுவலக வேலைகளுக்குள்  தலையை நுழைத்துக் கொண்டான்.

எப்படியோ  சனிக்கிழமையை ஒருவாறு  கடத்தி விட்டான்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை அவனுக்குமே ஒரு ரிப்ரெஸ்மென்ட்... தேவைப்பட்டது.

காலையில் தாமதமாக எழுந்தவன்... சாமி செய்து வைத்திருந்த காலை உணவில் கொஞ்சமாக கொரித்துவிட்டு,  அவன் வழக்கமாக செல்லும் பப்புக்கு சென்றான்.

வழக்கமாக அவன் அருந்து எந்த மதுபானமும் ருசிக்கவில்லை. வேற புதியதாய் மார்க்கெட்டிற்கு வந்திருந்த  மதுபானத்தையும் டேஸ்ட் பார்க்க, ஏனோ குமட்டிக் கொண்டு வரும்போல இருந்தது.  

மதுதான் ருசிக்கவில்லை...சரி மாதுவையாவது நாடலாம் என்றால் அதிலயும் மண் விழுந்தது.

அந்தப் பப்பில் அவன் நுழைந்ததில் இருந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த அழகி... அவன் பார்வையால் யாரையோ தேடுவதைப் பார்த்ததும்,  உள்ளம் துள்ளி குதிக்க, ஓடி வந்து அவன் மடியில் அமர்ந்து கொண்டு,  அவன்  கழுத்தில்  கை போட்டு வளைத்துக்கொண்டு மையலுடன் பார்த்து சிரித்தாள்.

இடைக்கு சற்று கீழ் வரைக்குமே இருந்த குட்டையான ஸ்கர்ட்ம், கழுத்துக்கு கீழ ரொம்பவும் தாராளமாக இறங்கியிருந்த ஆபாசமான மேலாடையும் கண்டால், தவமிருக்கும் ரிஷிக்கு  கூட எழுந்து வந்து அந்த அழகியுடன் சரசமாட தோன்றிவிடும்.

அவனின் ஒரு கரம், அவளின் வழுவழுப்பான நீண்ட கால்களை அனிச்சையாக பற்றி இருக்க, மற்றொரு கரமோ அவளின் மெல்லிய இடையை அழுத்தி பிடித்து கொண்டு இருந்தது.

இந்த மாதிரி எத்தனையோ அழகிகளை அவன் வாழ்வில் சந்தித்து விட்டான். அதுவும் இந்த மாதிரி முன்னழகை தூக்கி காட்டும் அழகிகளை கண்டாலே, மதுவை தொடாமலே அவனுக்கு போதை ஏறிவிடும்.

போதையில் கிறங்கிப் போய்,  அடுத்த நொடி அந்த அழகியை கையில் அள்ளிக்கொண்டு அங்கிருக்கும் அறைக்கு சென்று விடுவான். அவன் மோகம் தீரும் வரைக்கும் உல்லாசமாக களிப்பான்.

இப்பொழுதும் அதே போல ஒரு அழகிதான் அவன் மடியில் அமர்ந்து இருக்கிறாள்.

இன்னும் சொல்லப்போனால் அவன் இதுவரை சந்தித்த பெண்களை விடவும் ரொம்பவும் பேரழகியாய்...சுண்டு விரல் பட்டாலே பற்றிக்கொள்ளும் அளவுக்கு ஹாட் ஆகத்தான்  இருந்தாள்.

ஆனால் அவனுக்குத்தான் போதை ஏறவில்லை. அவனின் அணைப்புக்காக தவிக்கும் அவளின் செவ்விதழ்கள் அவனை ஈற்கவில்லை.

சற்றுநேரம் அவனின் முத்தத்திற்காக காத்திருந்த அழகி, அவனிடம் எந்த அசைவும் இல்லாததால் அவளாகவே ஆரம்பித்தாள்...!  

“ஹாய் பேப்...ஐ வான்ட் யூ... ஐ நீட் யூ மேட்லி... கமான்... என்ஜாய் அவர் டைம்...” என்று கிறக்கத்துடன் கிசுகிசுத்தவள், அவன் இதழில் இதழ் ஒற்றி காமவெறியோடு சுவைக்க ஆரம்பித்தாள்.

ஏனோ அவனுக்கு அந்த முத்தம் சுகிக்கவில்லை...!

அந்த குட்டி தேவதை அவன்  கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்ட பொழுது அடைந்த பரவசம் தான் அவன் கண் முன்னே வந்தது.  

அதே நேரம் அந்த குட்டி தந்த முத்தத்திற்கு முன்னே  அந்த அழகி தந்த முத்தம் அருவருப்பாக இருந்தது.

அடுத்த கணம், தன் இதழை அவளிடமிருந்து பிரித்து எடுத்தவன்...  தன்மீது அட்டையாக ஒட்டிக் கொண்டிருந்தவளை பிரித்து எடுத்து இருக்கையில் அமர வைத்து விட்டு வேகமாக எழுந்து, அவளை திரும்பியும் பார்க்காமல் விடுவிடுவென்று வெளியேறி சென்று விட்டான் விகர்த்தனன்.

அதன் பிறகு வேற எங்கும் செல்ல பிடிக்காமல்,  நேராக தன் வீட்டிற்கு சென்று விட்டான்..

மதிய உணவு நேரம் அங்கு வந்த தன் எஜமானனைக் கண்டதும் பிரியமான சமையல்க்காரன் சாமி உள்ளம் மகிழ்ந்து போனான்.  

உடனே சமையல் அறைக்கு ஓடிச் சென்று எல்லா வகையான அசைவ வகையிலும் உணவை சமைத்து விட்டு வந்து விகர்த்தனனை சாப்பிட அழைக்க, அவனும்  மறுக்க மனமில்லாமல் டைனிங் ஹாலுக்கு சென்றான்.

அங்கே அவன் விரும்பி சாப்பிடும் இறால் வறுவல்,  மீன் கறியும், நண்டு சூப் என வரிசையாக கடை பரப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஏனோ அவை எதுவும் அவனை ஈர்க்கவில்லை.  

அவன் மனம் முழுவதும் அந்த குட்டியே ஆக்கிரமித்து இருந்தாள்.  

பேருக்கு ஏதோ கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு தன் அறைக்குச் திரும்பிச் சென்று படுக்கையில் விழ, தூக்கமும் அவனை அரவணைத்துக் கொள்ள  மறுத்தது.  

மதியம் உறங்கி பழக்கம் இல்லாதவன்...!   

இப்படியும் அப்படியுமாக நேரத்தை நெட்டித் தள்ளினாலும், மாலை வந்ததும் ,  அவனால் தாங்க முடியவில்லை.  

அதற்குமேல் சமாளிக்க முடியாமல் அந்த குட்டியை இப்பொழுது பார்த்தே ஆக வேண்டும் என்று மனது தவிக்க,  தன் ஐ போனை எடுத்தான்.

அவளுடைய பெயர் சுரபி என்றதை ஞாபகம் வைத்து, தன்னுடைய எம்ப்ளாயிஸ் லிஸ்ட்டில் தேடி பார்த்து  அவசரமாக அவளுடைய காண்டாக்ட் நம்பரை எடுத்தான்.

அவன் உருவாக்கி வைத்திருந்த ட்ராக்கிங் அப்ளிகேசன் மூலமாக, அவள் எண்ணை வைத்து, அவள் எங்கே இருக்கிறாள் என்று தேட,  அதுவும்  அவள் இருக்கும் இடத்தை துள்ளியமாக கட்டியது.  

அவ்வளவுதான்..!  எதைப் பற்றியும் யோசிக்கவில்லை விகர்த்தனன்..!  

அவள் கணவனும் உடன் இருப்பான் என்பதையும் கருத்தில் கொள்ளவில்லை.

அவசரமாக குளியல் அறைக்கு சென்றவன், குளித்து முடித்தவன் ஜீன்ஸ்ம் , டீசர்ட்ம் எடுத்து   அணிந்து கொண்டு,  தன் காரை எடுத்துக்கொண்டு அந்த பார்க்கிற்கு வந்துவிட்டான்.

பார்க் உள்ளே நுழைந்ததும் அவன் கண்கள் அந்த குட்டியைத்தான் தேடின...!

அங்கே பல குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகுடன் விளையாண்டு கொண்டிருந்தாலும் அவன் கண்கள் என்னவோ அந்த குட்டியைத்தான் தேடியது.

சில நொடிகளில் கண்டு கொண்டான்..!

மாலை நேரத்து, மனதை மயக்கும் இளமஞ்சள்  வெய்யிலில், வெள்ளை நிற குட்டி தேவதையாய் புல்வெளியில் ஓடிக்கொண்டிருந்தாள் அவன் தேடி வந்த தேவதை...!

அவளை துரத்தியபடி அடுத்ததாய் அவள் அன்னையும் துரத்திக் கொண்டு வர, தன் அன்னையின் கைக்கு கிடைக்காமல் லாவகமாக சிரித்தபடி ஓடிக் கொண்டிருந்தவளையே இமைக்க மறந்து பார்த்திருந்தான்.

அவளைக்கண்டதும் அவன் உள்ளே அரித்துக்கொண்டிருந்த தனிமை என்ற வேதனைப்புழு அடங்கி போனது. அவன் உள்ளே இருந்த தவிப்பும் காணாமல் போய் இருந்தது.

தாயும் , மகளும் சிரித்தபடி ஓடி பிடித்து விளையாடும் அழகு ஒரு கவிதையாய்... கோட்டோவியம் போல மனதுக்கு இதத்தை தர,

அவன் நின்ற இடத்தில் இருந்தவாறு  அவர்களை  பார்த்து ரசித்துக் கொண்டிருக்க,  அப்பொழுதுதான் சுரபியை முதல் முதலாக ஆழ்ந்து பார்த்தான்.

வெகு எளிமையான தோற்றம் அளித்த பளிச்சென்ற முகம்..!

அவன் பார்த்து, அனுபவித்த அழகிகளை போன்று அதீத அழகு இல்லை என்றாலும்,  அவள்  கண்களில் பொங்கிய கருணையும்,  அன்பும்,  பாசமும் அவளுக்கு தனி அழகை கொடுத்தது.

அதுவும் அந்த சல்வாரில் இன்னுமே சின்ன பெண்ணாக தெரிந்தாள்.

பெண்களின் சராசரி உயரத்திற்கும் சற்று அதிகமான உயரம்...செயற்கை பூச்சில்லாமல் இயற்கையாகவே மெருகேறி இருந்த பொன்னிற மேனி.. கொஞ்சமும் சதைப்பிடிப்பில்லாத சிக்கென்று இருந்த மெல்லிய கொடி இடை...

துப்பட்டாவை போட்டு மறைத்திருந்தாலும், அவனால் கணிக்க முடிந்த எடுப்பான முன்னழகு...

அவன் பார்க்கும் பொழுதெல்லாம் அவனை முறைத்துக் கொண்டிருந்தவள்...  இப்பொழுது  தன் மகளுடன் மலர்ந்து சிரித்ததில்,  அவள்  கன்னத்தில் விழுந்த ஆழமான குழி...

“ஹ்ம்ம்ம்ம் அழகாகத்தான் இருக்கிறாள்...” என்று மெல்ல புன்னகைத்துக் கொண்டவன், சில நொடிகள் தன்னை மறந்து அவளை   ரசித்தவாறு நின்றிருந்தான்.  

அடுத்த நொடி தன் தலையை உலுக்கிக் கொண்டு,  அவன் பார்வையை அவளிடம் இருந்து திருப்பிக் கொண்டு, அங்கே ஓடிப்பிடித்து விளையாண்டு கொண்டிருந்த அந்த குட்டியின் மீது மட்டுமே பதித்தான்.

அப்பொழுதுதான் அது நிகழ்ந்தது..!

திடீரென்று கல் தடுக்கி கீழ  விழப் போக,  ஒரு நொடி சப்தநாடியும் ஆடிப்போனது அவனுக்கு.

புயலென பாய்ந்து சென்று அவளை தாங்கி பிடித்து, தன் கரத்தில் ஏந்தி கொண்டான்.

அதோடு அவனுக்கு பலத்த ஆச்சரியம்...

அவள் விழும்பொழுது  அப்பா என்று அழைத்தது தான்.

அவள்  அப்பா என்று அழைத்தது அந்தக் குழந்தை உடைய தந்தையை  கூட இருக்கலாம்.     

ஆனாலும் அவள்  அப்பா என்று தன்னைத்தான் அழைத்திருக்கிறாள்  என்று பூரித்தவன், அந்த குட்டியை தன் மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.

அந்த நொடி அவனை அந்த குழந்தையின் தந்தையாகவே உணர்ந்தான்.

அதன் பின் தன்னை மறந்து அந்த குழந்தையோடு விளையாட ஆரம்பித்தான்.  

அவன் மனதை அழுத்தி வந்த  பாரம் விலகி இருந்தது.  

இரண்டு நாட்களாக தவித்து வந்த வெறுமை இப்பொழுது சுனாமியால் அடித்துச் சென்று விட்டதை போல மகிழ்ச்சியாக இருந்தது.  

அந்த மகிழ்ச்சியில், அந்த சந்தோஷத்தில், தன்னை மறந்து அவள் உடன் ஒன்றி விளையாட ஆரம்பித்தான் விகர்த்தனன்..!   


Share:

1 comment:

  1. Superb mam....site is very beautiful......
    Story superb......enna duration la ud varum mam.....
    Weekly twice or daily basis

    ReplyDelete

Followers

Total Pageviews

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *