அத்தியாயம்-21
அன்று மாலை சீக்கிரமாகவே வீடு திரும்பிவிட்டான்
விகர்த்தனன்.
ஏனோ அவனுக்கு தன் மகளை பிரிந்து இருக்க முடியவில்லை..!
மகளை மட்டும் தானா என்று அவனின் ஆழ்மனம் கண்சிமிட்டி சிரித்தது.
அவனும் வெட்கப் புன்னகையுடன்
“எஸ்... என் மகள்...என் தேவதை மட்டும்தான்...” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன், துள்ளலுடன் வீட்டிற்கு
வந்தான்.
வீட்டிற்குள் வரவும், அதே நேரம் தன் மகளை துரத்திக்கொண்டு ஓடி வந்த சுரபி, திடீரென்று தன்
முன்னால் வந்து நின்ற விகர்த்தனன் மீது முட்டிக் கொண்டு அதிர்ச்சியில் கீழ சரிந்தாள்.
ஹே... என்று மெல்ல அழைத்தவாறு, அனிச்சையாய் விகர்த்தனனின் கரம் நீண்டு அவளின் இடையோடு பற்றி அவள் சாயாமல்
நிறுத்த முயன்றது.
அவளின் மெல்லிய கொடியிடையில் அவனின் வலிய கரம் அழுத்தமாக பதிய, அவ்வளவுதான்...
பெண்ணவள் உள்ளே மின்சாரம் பாய்ந்ததை போல மின்னல் பளிச்சிட, அவசரமாய் துள்ளிக்
குதித்து அவன் கையிலிருந்து விலகி தள்ளி நின்று கொண்டாள்.
விகர்த்தனனுக்கும் புது
மாதிரியான, வித்தியாசமான உணர்வுதான்.
இதற்கும் அவன் ஒன்றும் பெண் வாசம் நுகராதவன் அல்ல.
உலக அழகிகளில் இருந்து, பல நாட்டு அழகிய பெண்களின் இடையை பற்றி இருக்கிறான். அதற்குமேலும்
பலவகையான இன்ப அனுபவங்களை அனுபவித்தும் இருக்கிறான்.
ஆனால் ஒருவர் கூட அவனின் கை தீண்டலுக்கு இப்படி துள்ளி குதித்தி
விலகியது இல்லை.
அவன் கை பட்டதுமே மோகம் கொண்டு, தாபத்தோடு அவனை இறுக்கி அணைத்துதான் பார்த்து இருக்கிறான்.
ஆனால் இவள்...?
இதற்கும் அவன் ஒன்றும் காமத்தோடோ தாபத்தோடு அவளை
பிடிக்கவில்லைதான். அவளை கீழ விழாமல் தடுக்க, அனிச்சையாய் கை கொடுத்து தூக்க முயன்றான். அவன் கை பட்ட இடம்
அவளின் இடையாகி போனது.
ஆனால் அதற்கு போய் அவள் துள்ளி குதிப்பானேன்...? கேள்வியோடு அவளை ஒரு கணம் ஆராய்ச்சி பார்வை பார்த்து வைத்தான்.
அதோடு அவளின் இடை தொட்ட அந்த நொடி அவன் உள்ளேயும் ஏதேதோ ரசாயன
மாற்றங்கள்..!
அந்த குட்டியை சந்தித்ததில் இருந்தே அவனின் தந்தை பாசம் மட்டுமே
மேல் எழுந்து நிற்க, அவளை சந்தித்த ந்ஆளில் இருந்து இன்று வரை எந்த பெண்ணையும் அவன் நாடியதில்லை.
அவனுக்கு அது தேவையும் இல்லாததாய் அவனின் ஆண்மை உறங்கிக்
கிடந்தது.
ஆனால் இப்பொழுதெல்லாம்
சுரபியை பார்க்கும் பொழுது அவனின் கணவன் மனமும் விழித்துக் கொள்கிறது.
நேற்று இரவு அவன் பார்த்த அவளின் அபாயகரமான வளைவுகள் வேறு அவ்வபொழுது கண் ம்உன்னே வந்து இம்சிக்கிறது
தான். ஆனாலும் தன் உணர்வுகளை கட்டுபடுத்தி அவளுக்கு கொடுத்த வாக்கிற்காக தள்ளி
நிற்கிறான்.
இப்பொழுது அவளின் இடையை தொட்டதில் அவன் விரல்களுக்கும் மின்சாரம்
பாய்ந்ததை போல அவன் உள்ளே அப்படி ஒரு பரவசம்.
அதுவும் அவன் விரல்கள் ஸ்பரிசித்ததால் உணர்வுகள் தூண்டப்பட்ட அவளின்
படபடக்கும் இமைகளும்... திரண்ட செர்ரியாய்
சிவந்து நிற்கும் இதழ்களும்...வெட்கத்தில் பளபளத்த அவளின் ஆப்பிள் கன்னங்களை காண அவனையும் மீறி போதை ஏறியது அவன் உள்ளே.
அவனின் அந்த பார்வை வீச்சை தாங்காமல் பெண்ணவள் தவித்து
கொண்டிருந்தாள். அவனின் அந்த பார்வையே அவளை பித்தம் கொள்ள வைத்துக்கொண்டிருந்தது.
உடலில் சிறு நடுக்கத்துடன் தவிப்பின் எல்லைக்கு சென்று
கொண்டிருந்தாள் அந்த பேதைப்பெண்.
அதே நேரம்
“ஹை... அப்பா....” என்று அழைத்த தன் மகளின் குரலில் கனவுலகில்
சஞ்சரித்தவன் நினைவுலகுக்கு அவசரமாக திரும்பி வந்தவன், தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.
அடுத்த கணம் ஒரு அடி பாய்ந்து சென்று அந்த குட்டியை கரங்களில்
அள்ளிக்கொண்டவன்,
“ஹாய் பிரின்சஸ்... ஹௌ ஆர் யூ? ஹௌ வாஸ் யுவர் டே ? ...” என்று செல்லம் கொஞ்சியபடி குனிந்து அவளை
தூக்கிக் கொள்ள, அவனின் பார்வை
வீச்சில் இருந்து தப்பித்தவள்,
“ஊப்ப்... “ என்று நிம்மதி மூச்சு விட்ட சுரபி, அப்படியே நழுவி சமையலறைக்குள் ஓடிவிட்டாள்.
தன் மகளை பார்த்த குசியில் அவளுடன் செல்லம் கொஞ்சினான், ஓரக்கண்ணால் முகம் சிவக்க, சமையல் அறையை நோக்கி ஓடிய சுரபியை, மெல்ல புன்னகைத்தபடி, இன்னுமாய் ரசித்து பார்த்துக்
கொண்டிருந்தான் விகர்த்தனன்.
******
அன்று இரவு டைனிங் டேபிளில் தன் மகளுடன்
அமர்ந்திருந்தான் விகர்த்தனன்.
தன் எஜமானனை குடும்பம் சகிதமாக காண சாமிக்கு மனம் நிறைந்து
போனது.
அங்கு வேலை செய்யும் எத்தனையோ வேலையாட்களில் சாமி மட்டும்
ரொம்பவும் வித்தியாசமானவன்.
அதற்கு காரணம் செஞ்சோற்று கடன் என்பான்..!
ஐந்து தங்கைகளுக்கு அண்ணனாகி விட்ட சாமிக்கு , குடும்பத்தை தாங்கும் பொறுப்பு சிறு வயதிலயே வந்து விட, பொழப்பு தேடி பெங்களூர்க்கு வந்தவன். பசி மயக்கத்தில் ரோட்டில்
மயங்கி சரிய, திடீர் பிரேக்
இட்டு நின்றது கார் ஒன்று.
அதில் இருந்து வேகமாக இறங்கிய விகர்த்தனன் அன்னை அகல்யா , பசியில் வாடி கிடந்த விடலை பையனை கண்டதும் மனம் கனிந்து
போனார்.
தனக்கு நேரமாகிறது என்று அவள் கணவன்...விகர்த்தனன் தந்தை சூரிய ப்ரகாஷ்
முறைத்த பொழுதும் அதை பொருட்படுத்தாமல் அவனை அருகில் இருந்த சிறு ஹோட்டலுக்கு
அழைத்துச் சென்று முதலில் அவனின் பசியை ஆற்றினாள்.
அவனும் பல நாட்களாக வெறும் கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை மட்டும் பிடித்து குடித்து வயிற்றை நிரப்பியவன்
, சாப்பாட்டை பார்த்ததும், முகம் மலர , அவசர அவசரமாக அதை
அள்ளிக் கொட்டிக்கொண்டான்.
அவன் சாப்பிடுவதையே தாய் அன்புடன் கவனித்து கொண்டிருந்தாள்
அகல்யா. அவள் கணவனுக்கோ பொறுமை இல்லாமல் அவரை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார்.
அதை கண்டு கொள்ளாமல் அவன் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் அமைதியாக
அமர்ந்து இருந்தவர், சாப்பிட்டு
முடித்ததும் தன் கைப்பையை திறந்து அதில் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து
நீட்டினாள்.
தடுக்க வந்த தன் கணவனையும் கெஞ்சலுடன் பார்த்து வைக்க, அவரும் என்னவோ பண்ணித்தொலை என்று விட்டு விட்டார்.
அந்த பையன் கையில் அந்த ரூபாயை திணிக்க, அவவ்னோ அதை பார்த்ததும் முகம் மலர்ந்து உடனே வாங்கி கொள்ளாமல்,
எனக்கு பணம் வேண்டாம் மா... ஏதாவது வேலை போட்டு கொடுங்க... எந்த
வேலைனாலும் செய்வேன்...” என்று கெஞ்சினான்.
அவனின் அம்மா என்ற விளிப்பில் அவர்
மனம் இன்னுமாய் கனிந்தது.
அந்த அழைப்பை கேட்டு எத்தனை
நாட்களாயிற்று..! மேடம் என்றே எல்லாரும் அவளை அழைத்து வைக்க, அவரின் மனமும் செவியும் அம்மா என்ற
அழைப்புக்கு அல்லவா ஏங்கி கிடந்தது.
அப்படி அழைப்பதற்காக அந்த இறைவன்
அனுப்பி இருந்த அவரின் ஒரே மகன்,
அம்மா என்று பாசத்தோடு,
அன்போடு அழைக்க, அவளின் அருகில்
இல்லை.
அதை நினைக்கும்பொழுது எல்லாம் தாய்
உள்ளம் தவிக்கும்.
இப்பொழுது யாரோ ஊர், பேர் தெரியாத அந்த சிறுவன் அவரை அம்மா
என்று அழைக்க, அதில்
இன்னுமாய் உருகி போனவள்,
அவனை தன்னுடனேயே அழைத்துக்கொண்டு வந்து விட்டாள்.
தன் கணவனின் முறைப்பையும் , மறுப்பையும் சட்டை செய்யவில்லை...
“ப்ளீஸ் ப்ரகாஷ்.... இருக்கட்டும்..”
என்ற ஒற்றை ப்ளீஸில் அவள் கணவனும் ப்ளீஸாகி போனார்.
அன்று அழைத்து வரப்பட்ட சாமி, ஆரம்பத்தில் தோட்ட வேலை செய்து
கொண்டிருந்தான்.
பின் கொஞ்சம் கொஞ்சமாக சமையலையும்
கற்றுக்கொண்டு அந்த வீட்டின் சமையல் காரன் ஆகிப்போனான்.
மூன்று வேளை சாப்பாடு போட்டு, தங்குவதற்கு இடமும் கொடுத்து நல்ல சம்பளம்...கிடைத்துவிட, அகமகிழ்ந்து போனான் சாமி.
தன் சமபளத்தை தனக்கு என்று எதுவும்
சேர்த்து வைக்காமல் தன் தங்கைகளுக்காக செலவு செய்தான்.
எல்லாரையும் நல்ல இடத்தில் திருமணமும்
செய்து முடித்து திரும்பி பார்க்க கா லம் ரொம்பவுமே கந்டது போய் இருந்தது.
நாற்பது வயதை தொட்டு இருந்தான்.
அதற்குமேல் அவனுக்கு என்று ஒரு குடும்பத்தை
அமைத்துக்கொள்ள அவனுக்கு பிடிக்கவில்லை. தனிக்கட்டையாகவே நின்று விட்டான்.
ஆனால் சின்ன வயதில் பார்த்து வந்த
சின்னய்யா மீது அவனுக்கு தனிப்பிரியம்.
*****
இன்று தன் பிரியமான சின்னய்யாவுடன் இப்பொழுது
குட்டி எஜமானியும் சேர்ந்து கொள்ள, சாமிக்கு கொள்ளை
சந்தோஷம்.
இதுவரை இருண்டு கிடந்த அந்த வீட்டிற்கு வெளிச்சம்
வந்ததாய்...பேச்சு, சிரிப்பு என்பதே
இல்லாமல், பேய் பங்களா மாதிரி
மயான அமைதியில் இருந்த அந்த பங்களாவிற்கு தேவதை குடி வந்ததை போல பூரித்து போனான்.
அதுவும் ஒரு தேவதைக்கு பதிலாக இரண்டு தேவதைகள் அல்லவா
வந்திருக்கிறார்கள்..!
அதுவும் அந்த குட்டி தேவதை வந்த பிறகு தன்னுடைய சின்னய்யா
முகத்தில் பூத்திருக்கும் பூரிப்பையும், சந்தோஷத்தையும் காண
சாமிக்கு ஆச்சர்யமாக இருந்தது.
ஏற்கனவே தன் சின்னய்யா அலுவலகம் செல்லும் வழியில் ஒரு சின்ன குழந்தையுடன்
கொஞ்சி பேசுகிறார்...வார இறுதியில் அவளுடன் தான் நேரத்தை செலவிடுகிறார்.
கார் ஓட்ட தன்னைக்கூட வேண்டாம் என்றுவிட்டு அவரே காரை ஓட்டி
செல்கிறார்... என்று கார் ட்ரைவர் முத்து சாமியிடம் சொன்ன பொழுது சாமியால் அதை
நம்பமுடியவில்லை.
இவன் ஏதோ உளறுகிறான்..ஏனென்றால் தன் சின்னய்யா பற்றிதான்
அவனுக்கு தெரியுமே..! குடும்பம் என்ற சூழலில் ஒட்டாத விகர்த்தனன் குணம்.
அவனின் மனைவியாய் ஸ்வாதி அடி எடுத்து வைத்து , இந்த வீட்டில் வந்த பொழுதும், வாழ்ந்த பொழுதும் பெரிதாக தன் மனைவியிடம் ஒட்டி உறவாட
வில்லையே..!
அவ்வளவு ஏன்..! அந்த பெண் கர்ப்பமாக இருந்த பொழுது, அந்த வீட்டில் இருந்த அத்தனை வேலைக்காரர்கள் எல்லாம் மகிழ்ந்து
போனார்கள்.
இந்த வீட்டுக்கு ஒரு வாரிசு வரப்போகிறது என்று. அவர்களின்
சந்தோஷத்தில் ஒரு துளி கூட அவன் முகத்தில் தெரியவில்லையே..!
யாருக்கு வந்த விருந்தோ என்றதாய்த்தான் விகர்த்தனன் அப்பொழுது
நடந்து கொண்டான்.
தன் கருவை...உயிரை சுமக்கும் தன் மனைவியை மருந்துக்கு கூட
கொண்டாடியதில்லை. மருத்துவமனைக்கு கூட அந்த பெண் கட்டாயபடுத்தி தான் அழைத்து செல்வாள்.
அப்படி ஒட்டாமல் வாழ்ந்த சின்னய்யா.... இப்பொழுது யாரோ ஒரு
குழந்தையிடம் செல்லம் கொஞ்சுகிறான்..நேரத்தை செலவிடுகிறான் என்று முத்து சொன்ன
பொழுது, சாமியால் நம்பமுடியவில்லைதான்..!
ஆனால் திடீரென்று தன் மனைவி, மகள் என்று இந்த
இருவரையும் அழைத்து வந்தபொழுதுதான் முத்து சொன்னது மண்டையில் உரைத்தது.
முத்து சொன்ன குட்டி, இந்த குட்டிதானோ என்று சந்தேகத்துடன் பார்த்த
சாமிக்கு, முத்து கண் ஜாடை
காட்டி ஆமாம் என்று ஊர்ஜித படுத்தினான்.
புதிதாக வந்த பெண்...அதுவும் ஒரு குழந்தையை காட்டி தன்
சின்னய்யாவை மடக்கி விட்டாள் போல.
அப்படிப்பட்ட பெண் எப்படி இந்த வீட்டிற்கு செட்டாவாளோ என்று
அச்சத்துடன் சுரபியின் நடவடிக்கையை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான் சாமி.
அவன் பயந்ததை போல சுரபி எந்த மிடுக்கும் காட்டவில்லை...
மாறாக அந்த இடத்தையே மிரட்சியாக பார்த்து வைத்ததும், அலைபாயாத கண்களும், குடும்ப
குத்துவிளக்கு போன்ற தெய்வீக அழகும், முகத்தில் தெரிந்த
கருணையும் சாந்தமும் இவள் நல்லவள் என்று பறைசாற்ற, சாமிக்கு இன்னுமே மகிழ்ச்சியாகிப் போனது.
அதனால் அன்றைய இரவு உணவை தடபுடலாக அசத்தி இருந்தான்..! அதுவும்
புதிதாக வந்திருக்கும் தன் சின்ன எஜமானிக்கு
பிடித்த பதார்த்தங்களை செய்து அசத்தியிருந்தான் சாமி.
தன் சின்னய்யா விரும்பி சாப்பிடும் அசைவ வகைகளும், குழந்தை சாப்பிடும் வகையில் மிருதுவான சப்பாத்தி.. பன்னீர்
பட்டர் மசாலா, கடாய் மஸ்ரூம் என்று
பல ஐட்டங்களை சமைத்து கடை பரப்பி இருந்தான்.
ஒரே நேரத்தில் இருபதுக்கும் மேலான பேர் அமர்ந்து சாப்பிடும்
அளவுக்கு பெரிதாக இருந்த அந்த டைனிங் டேபிளில் விகர்த்தனன் அமர்ந்து இருக்க, தன் அருகில் நிகாவை அமர்த்திக் கொண்டான்.
அவள் உயரத்துக்கு தகுந்த மாதிரி உயரமான சின்ன சேர்... நிகா வை அடுத்து சுரபி அமர்ந்திருந்தாள். .
தட்டில் இருந்த உணவை சாப்பிட்டுக்கொண்டே தன் மகளின் தட்டில்
இருந்ததை பார்வையிட்டாள்.
அவளோ சப்பாத்தியை பிச்சு சாப்பிடாமல், தட்டில் அலைந்தபடி போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள்...
“சப்பாத்தியை பிச்சு சாப்பிடு அம்முமா...” என்று சுரபி கண்டிப்பான குரலில் சொல்ல, அவளோ திருதிருவென்று முழித்தவள்,
“அம்மா.... ஊட்டி....” என்று தன் வாயை ஆ வென்று பிளந்து காட்டினாள்
நிகா குட்டி.
பொதுவாக சுரபி தன் மகளுக்கு உணவை ஊட்டி விடுவாள் தான்...
சமீபமாக விகர்த்தனன் அவள் தனியாக சாப்பிட வேண்டும் என்று நிகா
குட்டிக்கும் தட்டை வைத்து உணவை சாப்பிட பழக்கிக் கொண்டிருந்தான்.
தந்தை சொல்லை தட்டாத மகளாய் அவளும் முயன்று பார்த்தாள் தான்..! ஆனாலும் அந்த பிஞ்சு கரத்தில் சப்பாத்தியை
பிச்சு சாப்பிட கஷ்டமாக இருக்க, இலகுவான வழியைக் கண்டுபிடித்து விட்டாள்.
தன் அன்னை ஊட்டி
விடுவது தான் நல்லது என்று கண்டுகொண்டு இப்பொழுது சுரபி இடம் தனக்கு ஊட்டச் சொன்னாள்.
சுரபியும் அவளை செல்லமாக முறைத்த படி, அவள் தட்டில் இருந்த
சப்பாத்தியை பிய்த்து, அருகில்
கிண்ணத்தில் ஊற்றி வைத்திருந்த பன்னீர் பட்டர் மசாலாவில் குளிப்பாட்டு அவளுக்கு
ஊட்டி விட, ஆ வென்று தன் வாயைப் பிளந்து வாங்கிக் கொண்டவள், உல்லாசமாக அதை மென்று முழுங்கி
விட்டு,
“அப்பாவுக்கும் ஊட்டி....”
என்று அருகில் அமர்ந்திருந்த விகர்த்தனனை
கை காட்டினாள் அந்த குட்டி எஜமானி.
அதைக்கேட்டு திடுக்கிட்டாள் சுரபி.
ஆனாலும் தன் அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு, மெல்ல புன்னகையுடன்
“அப்பா பெரியவங்க இல்லையா குட்டிமா... அவங்களே சாப்பிட்டுக்குவாங்க செல்லம்... நீதான் குட்டிப் பொண்ணு. அதனால உனக்குத்தான் ஊட்டி விடனும்...” என்று சமாதானம் சொல்ல, அவளோ அதை ஏற்க மறுத்தாள்.
இல்ல... அப்பா பாவ்... அப்பாக்கும் கை வக்கி... அப்பாக்கும் ஊட்டி....” அப்பா
பாவம்.. அவருக்கும் கை வலிக்கும்.. அவருக்கும் ஊட்டுங்க... என்பதை தன் மழலையில்
அவள் சாப்பிடும் சப்பாத்தியை போல பாதி பாதியாய் பிச்சு சொல்லி, விகர்த்தனனுக்கு
வக்காலத்து வாங்க, அதைக்கண்டு அவள் அருகில் அமர்ந்து இருந்தவன்
மனம் நெகிழ்ந்து போனான்.
தன் மகளையும், அவளுக்கு அழகாக
ஊட்டி விட்டுக்கொண்டிருந்த தன் மனைவியையும் ரசித்தபடிதான் அவனும் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
அதுவும் தன் மகளுக்கு ஊட்டி விடும்பொழுது சுரபியின், முகத்தில் பொங்கிய
அந்த தாய்மையும், தன் மகள்
தன்னைத்தான் தேடுகிறாள் என்ற கர்வமும் ஒன்றாய் மிளிர, சிறு புன்னகையோடு தன் மகளுக்கு ஊட்டி விட்ட பாங்கு அவன் மனதை
அள்ளியது.
இந்த தாய்மை உணர்வு...இந்த மிளிர்வு அவன் எந்த பெண்ணிடமும்
கண்டிராதது. அவன் பார்த்து பழகிய பெண்களின் கண்களில் எப்பொழுதும் ஒரு தேடல்... ஒரு
போதை...இருக்கும்
ஆனால் இவள் கண்களில்....?
ஓரக்கண்ணால் ரகசியமாய் தன்னவளை ரசித்து கொண்டிருந்தவனுக்கு ஒரு
ஜாக்பட் பரிசை அவன் மகள் வாரி வழங்கினாள்.
அவனுக்கும் ஊட்டி விடச்சொல்லி தன் தாயிடம் அடம்பிடித்துக் கொண்டிருக்கும்
தன் மகளை காண அவனுக்கு கண்ணோரம் கரித்தது.
அவன்தான் அவளின் தந்தை என்று அறியாத பொழுதே அவன் மீது பாசத்தை
கொட்டியவள்..! பார்த்த அடுத்த நாளில், அவன் சாப்பிடவில்லை
என்று அறிந்ததும் அவனுக்கு உணவு ஊட்ட உடனே தன் டிபன் பாக்ஸ் ஐ தேடியவள்..!
பல மில்லியன் கோடிகளுக்கு அதிபனாக இருந்ததில் கிட்டாத அந்த திருப்தி...மன
நிறைவு.. தன் மீதான தன் மகளின் பாசத்தில் அவனுக்கு கிட்டியது.
அவளை எண்ணி அவன் மனம் பெருமையில், பூரிப்பில் சிலாகித்தது.
“என் தேவதை...” சொல்லிக்கொண்டான் தன் உள்ளே..!
சுரபியோ தன் மகளை அதட்டவும் வழி இல்லாமல், அவளை திட்டமும் முடியாமல் சங்கடத்துடன் தெளிந்தவள், ஏதாவது சொல்லி சமாளிங்களேன்
என்று விகர்த்தனனிடம் கண்களால் கெஞ்ச,
அவனோ தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை எண்ணி உள்ளுக்குள் விசில்
அடித்தவன்...அந்த பெண்ணவளின் முகத்தில் தெரிந்த அந்த அசட்டு பாவத்தை ரசித்தவன்… அவளை இன்னுமாய் சீண்டினான்.
“அதுதான் குழந்தை சொல்லிட்டா இல்ல... எனக்கும் ஊட்டி விடு சுரபி...” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, அவளை வம்புக்கு இழுக்க, அதில் இன்னுமாய் அதிர்ந்து போனாள் பெண்.
அவன் ஏதாவது சொல்லி அந்த குட்டியை சமாதானம் செய்வான் என்று
எதிர்பார்த்தவளுக்கு அவனும் தன் மகளுடன் சேர்ந்து கொண்டு ஊட்ட சொல்ல, கடுப்பாக இருந்தது அவளுக்கு.
“ஆங்... தடிமாடு மாதிரி இருந்துகிட்டு உங்களுக்கெல்லாம் ஊட்டி விட முடியாது...” என்று அவனுக்கும் மட்டும் கேட்கும் விதமாய்
கிசுகிசுத்து முறைக்க,
“பிரின்சஸ்... பாருடா செல்லம்... உன் அம்மா உனக்கு மட்டும்தான் ஊட்டி விடுவாளாம்... எனக்கு கிடையாதாம்... இது எந்த ஊர் நியாயம்...நீயே கேளு...” என்று தன் மகளிடம் பஞ்சாயத்துக்கு வந்தான் விகர்த்தனன்.
அவளும் தன் தந்தையின் பாவமான முகத்தை கண்டு, பெரிய மனுசியாய் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, மிடுக்குடன்,
“அம்மா... அப்பாக்கு ஊட்டி...”
என்று அமர்த்தலாக சொல்ல, சற்று தொலைவில் நின்றிருந்த சாமிக்கு சிரிப்பு பொங்கி வந்தது.
தோளில் போட்டு இருந்த துண்டால் வாயை பொத்திக்கொண்டு சிரிக்க, எதையோ துடைப்பதை போல பாவணை செய்து கொண்டு, இங்கு உணவு மேஜையில் நடந்து கொண்டிருந்த உடையாடலை
கேட்டுக்கொண்டிருந்த பூங்கோதைக்கும் சிரிப்பு வந்தது.
அவளும் தரையை பார்த்தபடி சத்தம் இல்லாமல் சிரித்து வைத்தாள்.
சுரபிக்குத்தான் இன்னுமே சங்கடமாக இருந்தது.
அதற்குமேல் மறுத்தால், இந்த குட்டி பிசாசு
இன்னும் அடம் பிடிப்பாள்... கண்ணை கசக்கி கொண்டு அழுது சாதிப்பாள்.
டாக்டர் வேறு அவளை அழ விடக்கூடாது என்று சொல்லி இருக்க, வேறு வழியில்லாமல், அவனை முறைத்தபடி அவள் தட்டில் இருந்த சப்பாத்தியை சிக்கன் கறியில்
தோய்த்து எடுத்தவள், தன் மகளை தாண்டி
அடுத்து அமர்ந்து இருந்தவன் வாய் அருகில் கொண்டு வர, அவள் கரம் நடுங்கியது.
அவனும் தன் வாயை திறக்காமல், அவளையே குறுகுறுவென்று ஒரு
மார்க்கமாக பார்த்து வைக்க, அந்தப் பார்வையில்
இன்னுமாய் படபடத்தாள் பெண்ணவள்.
தன் உள்ளத்து படபடப்பை முகத்தில் காட்டாமல் முயன்று சமாளித்தவள்,
“ப்ளீஸ்.... வாங்கிக்கங்க...” என்று மெல்ல உதடு குவித்து, கண்களால் கெஞ்சினாள்.
அவளின் அந்த ப்ளீஸ் ல் ஒரு நொடி ஜெர்க் ஆகித்தான் போனான் அந்த
ஆண்மகன். ஒரு நொடியேனும் வளைந்து , சுளித்த அவளின் திரண்ட
அதரங்கள் அவனுக்குள் என்னவோ செய்தது.
மீண்டும் கெஞ்சல் பார்வையுடன் தன் கரத்தை அவனுக்கு வாய் அருகில்
கொண்டு செல்ல, அவளின் பாவமான
முகத்தை பார்த்தவன், போனால் போகட்டும்
என்று மனம் இறங்கி, அவள் கையில் இருந்ததை
வாங்கிக் கொண்டான்.
அதை ரசித்து உண்டவனுக்கோ அந்த சப்பாத்தி தேனாமிர்தமாக இருந்தது.
அவன் முப்பது வருடங்களாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும், ச்ஆமியின் கை மனத்தில் சாப்பிடும் அதே சப்பாத்தியும், சிக்கனும்தான். ஆனால் இன்று ஏனோ அது தனிசுவையாக இருந்தது.
காரணம்..?
அந்த அதீத சுவை சாமி சமைத்த சிக்கனில் இல்லை.. அந்த ஊட்டிய
பெண்ணவளின் கரங்களினால் என புரிய அவன் உள்ளே அப்படி ஒரு சிலிர்ப்பு..!
இந்த மாதிரி ஒரு உணர்வை... அதுவும் அவளின் பட்டு விரல்கள் சிறு
நடுக்கத்துடன் அவனின் அழுத்தமான இதழ்களில் லேசாக உராய்ந்தபொழுது உண்டான் சிறு
அதிரிவு.. அதனால் எழுந்த பரவசம் என எல்லாமுமே அவனுக்கு புதிதான அனுபவத்தை
கொடுத்தது.
அதை ரசித்து அனுபவித்த படி, தன் மகளை பார்த்தவன்
“வாவ்... செம டேஸ்ட் ஆ இருக்குடா குட்டிமா... இன்னொரு வாய் ஊட்ட
சொல்லேன்...” என்று தன் மகளிடம் அப்ளிகேசன் போட, அவ்வளவுதான்..!
விட்டுவிடுவாளா.. அந்த குட்டி ராட்சசி..!
தன் அன்னையை மீண்டும் ஊட்டி விடச்சொல்லி அடம்பிடிக்க, ஒரு வாய் உடன் நிறுத்த முடியாமல், அடுத்ததாய் சுரபியே இருவருக்குமாய் மாறி மாறி ஊட்டி விட்டாள்.
விகர்த்தனன் கண்கள்
கலங்கி போனது..!
இதைப்போன்று அவன் அன்னை
கூட அவனுக்கு பாசமாக ஊட்டியதில்லை.
அவளின் மெல்லிய கரத்தில் தவழ்ந்த அந்த சப்பாத்தி தேவாமிர்தமாக
இருக்க, அவளின்
கையாலேயே அந்த இரவு உணவை சாப்பிட்டு முடித்தான்.
வழக்கமாக சாப்பிடும் அளவை விட இரண்டு கூடுதலாக சாப்பிட்டு இருந்தான் அவனையும்
அறியாமல்..!
0 comments:
Post a Comment