அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
அத்தியாயம்-37
பால்கனியில் நின்றவாறு யாருடனோ தன் அலைபேசியில்
பேசிக் கொண்டு இருந்தவன்...தன் உரையாடலை முடித்துவிட்டு தன் அறைக்கு உள்ளே வர, அங்கே சுரபி மட்டும்
ட்ரெஸ்ஸிங் டேபில் முன்னால் அமர்ந்து இருந்தாள்.
அவள் அருகே சென்று அவளின் பின்புறம் நிக்க, அந்த ஆளுயர கண்ணாடியில், தன் பின்னால் நின்றிருந்தவனை ஓரப் பார்வையால் பார்க்க, அவளின் கன்னி மனம்
ததும்பியது..!
அவன் அணிந்திருந்த கோட்டை மட்டும் கழட்டி இருக்க, இன்னுமே பார்மல் பேன்ட், ஷர்ட்டில்தான் இருந்தான்..!
சட்டையை கை முட்டிக்கும் மேலே வரைக்கும் சுருட்டி
விட்டிருந்தான்...!
அந்த டைட்டான வெள்ளை நிற பார்மல் ஷர்ட் அவனுக்கு பாந்தமாக
பொருந்தி இருக்க, அந்த சட்டையும் மீறி திமிறிக்கொண்டிருந்த அவனின்
ஆண்மை...படிக்கட்டு தேகம்... இறுகிய புஜங்கள்.. என அவனின் ஒவ்வொரு பாகமுமே அவளை
ரொம்பவும் கட்டி இழுத்தது..!
தன்னவனையே இமைக்க மறந்து ரசித்துகொண்டிருந்தாள் அவன் அறியாமல்..!
அப்படித்தான் எண்ணிக்கொண்டிருந்தாள்..!
ஆனால் அவனோ அவளின் கள்ளப்பார்வையை கண்டு கொண்டான்..!
அவளைப்போல கள்ளப்பார்வை பார்க்காமல், நேரடியாக, அந்த கண்ணாடியில்
தெரிந்த அவளின் பிம்பத்தை ரசனையோடு பார்த்திருந்தான்..!
அவனின் அந்த வசீகர, காந்த பார்வையை கண்டு கொண்டவள் நெஞ்சம் படபடத்தது..!
கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸை கழட்ட முடியாமல் அவளின் கரங்கள்
வலுவிழந்து போயின..!
இவன் பார்வைக்கு இவ்வளவு சக்தியா? அப்படியே பார்வையாலயே குந்தியை
கர்ப்பமாக்கிய சூரியன் மாதிரியே..!
ஓ.. இவன் பெயரும் விகர்த்தனன் ஆயிற்றே...விகர்த்தனன் என்றால் சூரியன் என்று தானே அர்த்தம்..!
அதான் இவன் பார்வைக்கு இவ்வளவு சக்தி..! பார்வையாலயே எதிரியை
சுட்டெரிப்பதும் சூரியன்தான்..! அதே ஒளியை நிலவுக்கு கொடுத்து மற்றவர்களை குளிர
வைப்பதும் இவன் தான்..!
“ப்பா... என்ன பார்வை இது....! பார்வையாலேயே கர்ப்பமாக்கி
விடுவான் போல...” என்று மனதுக்குள் எண்ணியவள்
தன்னை மறந்து புன்னகைக்க,
“என்ன ஜோக் சுபி?...எனக்கும்
சொல்லேன்..! .நானும் தெரிஞ்சுக்கிறேன்..! “ என்று அவள் அருகில் வந்திருந்தவன், மெல்ல குனிந்து அவளின்
காதில் கிசுகிசுக்க,
திடீரென்று வெகு நெருக்கத்தில் கேட்ட அவன் குரலில்
தூக்கிவாரிப்போட, திடுக்கிட்டு
பார்வையை மட்டும் உயர்த்தி மேலே பார்த்தாள்..!
அவள் அமர்ந்து இருந்த உயரத்துக்கு குனிந்தவாறு, அவளின் காதோரம் கிசுகிசுத்தவன்...திடீரென்று சுரபி தன் தலையை
லேசாக நிமிர்த்தி அவனை பார்த்ததில், அவன் இதழ்கள்
அவளின் காது மடலை உரசி நின்றது..!
அவ்வளவுதான்..! அவளின்
உடல் சூடேறியது..! உள்ளுக்குள் குப்பென்று வியர்த்தது..! வயிற்றுக்குள் லட்சம்
பட்டாம்பூச்சிகள் குபீரென்று பறக்க, அதை மறைக்க
முயன்றவாறு,
“நத்திங்......” என்று முனுமுனுத்துவிட்டு, லேசான தடுமாற்றத்துடன்
அந்த நெக்லஸை கழட்ட முயல, அதுவோ கழன்டு
கொள்ளாமல் அடம் பிடித்தது..!
அவளின் தடுமாற்றத்தையும், அவள் உடலில் வந்திருந்த அதிர்வையும் கண்டு கொண்டவன் இன்னுமாய்
கல்லுண்ட வண்டாகி போனான்..!
அவளை இன்னும் கொஞ்சம் சீண்ட எண்ணி,
“லெட் மி ட்ரை....” என்றவன், அவள் கழுத்தில் அணிந்திருந்த
நெக்லஸ் ன் ஹூக்கை கழட்ட முயல, அதுவோ அவனுக்கும் வரமாட்டேன் என்று அடம் பிடித்தது...!
அடுத்த நொடி, குனிந்து தன்
பற்களால் கடித்து அதை கழட்ட, அவனின் அழுத்தமான இதழ்கள் அவளின் பின்னங்கழுத்தில் உரசியதால்
பளீரென்று அவள் மேனியில் வெட்டிச்சென்றது மின்னல் ஒன்று..!
சுளீரென்று அடிவயிற்றில் வலியும் தான்..! ஆனால் சுகமான வலி
அது..!
அவள் கழுத்தில் பதிந்த அவன் இதழ்கள் உடனே விலகாமல், கழுத்திலேயே இருக்க, அவளோ கண்ணாடியில் வழியாகக் கூட அவனை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லாதவளாய் வெட்கத்தில்
தலைகுனிய, அவனின் இதழ்களோ
அவளின் கழுத்தில் இருந்து தன் ஊர்வலத்தை தொடங்கி இருந்தன..!
அவனின் கரங்களோ, இரண்டு பக்கமும்
இருந்த அவளின் மென் கரங்களை பற்றி, அதில் அவள்
அணிந்திருந்த வளையல்களை கழட்ட, அதுவோ அவன் கை
பட்டதும் தானாக கையோடு வந்தது..!
அதை அருகில் இருந்த டேபிலில் வைத்தவன், அடுத்து அவளின் இடைக்கு சென்றது..!
பின்பக்கமாய் நின்றவாறு, முன்பக்கம் கைகளை கொண்டு வந்தவன்...அதுவரை அவள் இடையை இறுக்கி
பிடித்திருந்த ஒட்டியானத்தின் ஹூக்கை கழட்டிவிட்டு அதற்கு விடுதலை கொடுத்தான்..!
விடுதலை கொடுத்ததற்கு பரிசாக, அவளின் சிற்றிடை அவன் கரங்களுக்கு அழைப்பு விடுக்க, கொஞ்சமாக விலகி இருந்த புடவையை இன்னுமாய் விலக்கி விட்டு, அவளின் சிற்றிடையை அழுந்த பற்றினான்..!
அவ்வளவுதான்..! பெண்ணவள் துடித்து போனாள்.!
அதுவரை உறங்கி கொண்டிருந்த அவளின் பெண்மை விழித்துக்கொள்ள, அவளின் கரத்தின்
தீண்டலுக்கு அவளின் இடை குலைந்தது..!
அவளின் உணர்வுகள் கிளர்ந்து எழ, அதன் தாக்கத்தை தாங்க முடியாமல் அவளின் திரண்ட இதழ்கள் துடிக்க
ஆரம்பித்தன..!
அவளின் தவிப்பை, உருகலை, குலைவை கண்ணாடி வழியாக பார்த்தவாறே, கிறங்கி போனவன் இன்னும் முன்னேறினான்..!
கழுத்தில் ஆரம்பித்த இதழ் ஊர்வலம்...பின்னால் இருந்தபடியே அவளின்
கன்னத்தை தொட்டு நின்றது..!
அவளின் ஆப்பிள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன், அவள் அமர்ந்து இருந்த அந்த சுழல் நாற்காலியை சுற்றி, அவளை தன் பக்கமாக கொண்டு வந்தவன்...
அவளின் முகத்தை தன் இரு கரங்களால் ஏந்தி நிமிர்த்தி அவளின்
கண்ணுக்குள் மாறி மாறி ஊடுருவி பார்த்தான்..!
அவனின் பார்வை வீச்சை தாங்காமல் , அவளின் இமைகள் குடைபோல கவிந்தன...!
கவிழ்ந்த அவளின் இமை மீது மெல்ல இதழ் பதித்தவன்,
“ஐம் ஸோ ஹேப்பி சுபி...! திஸ் இஸ் தி பெஸ்ட் டே இன் மை
லைப்....” என்று நெகிழ்ந்தவாறு
கிறக்கத்துடன் அவளின் முன் உச்சி நெற்றியில் முத்தமிட்டான்..!
அவனின் மகிழ்ச்சி அவளுக்கும் புரிகிறதுதான்..!
அவன் மகிழ்ச்சிக்கான காரணம் அவன் மகள்..! வந்திருந்த அத்தனை பேரும் அவர்கள் இருவரின் உருவ
ஒற்றுமை...மற்றும் அவள் அவனின் ஜெராக்ஸ் ஐ போல இருக்கிறாள்... என்று புகழ்ந்து சொல்ல, விகர்த்தனனுக்கு எல்லை இல்லா பெருமிதம்...!
அந்த மகிழ்ச்சிதான் அவன் உள்ளே பொங்குகிறது என்று புரிகிறது..!
அவளால் ஒன்றும் அவன் பொங்கவில்லை என்று
அறிவுக்கு உரைக்கிறதுதான்..!
ஆனாலும் ஏனோ அவளால் முறுக்கி கொண்டு அவனை விட்டு விலக
முடியவில்லை..! அவனின் மகிழ்ச்சி எப்பவும் இதே போல நீடித்து இருக்கட்டும் என்று
வேண்டிக்கொள்ளத்தான் செய்கிறது..!
நெற்றியில் முத்தமிட்டவனோ, அவன் இருந்த சந்தோஷத்தில், எதேதோ பிதற்றியபடி, அவளின் நுனிமூக்கில்
அழுந்த இதழ் பதித்தான்..! பின் கீழே
நகர்ந்து அவளின் திரண்ட கன்னத்தை கவ்விக் கொண்டான்..!
தன்னவனின் இந்த தீண்டலில் பெண்ணவளோ முற்றிலும் தன்னிலை இழக்க, அவள் இதழ்கள் அதற்கான அவனின் அணைப்பை வேண்டி இன்னும் வேகமாக
துடித்தன..!
அதை கண்டு கொண்ட அவன் இதழ்கள், கர்வத்துடனும், ஆவலுடனும் அவள் இதழ்களை நோக்கி மெல்லமாக நகர்ந்தது..!
அதன் இலக்கை அடைய நூலிழை
அளவு இடைவெளியில், படீரென்று கதவை
திறக்கும் ஓசை கேட்க, அதில் அனிச்சையாய் தன்
முகத்தை அவள் முகத்தில் இருந்து விலக்கி கொண்டவன், அவன் கரங்களையும் அவள்
முகத்தில் இருந்து விலக்கி கொண்டு திரும்பி பார்த்தான்..!
சுரபிக்கோ ஏதோ ஒரு மாயலோகத்தில் நுழைந்துவிட்டதை போல மலங்க
மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்.
அதுவரை அவளை சுற்றி இருந்த மாயவலை கொஞ்சம் கொஞ்சமாக அறுபட
ஆரம்பித்தது..!
“அப்பா...” என்று நிகா குட்டி ஓடிவந்து அவன் காலை கட்டிக்
கொள்ள, அதற்குள்
அவனும் சுதாரித்துக்கொண்டு குனிந்து அவளை தூக்கி, தலைக்கு மேல போட்டு பிடித்தவன், அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன்
“என்ன செல்லம்? என்ன வேண்டும்....? “ என்று பாசத்தோடு தன்
மகளை விசாரிக்க
“நத்திங்..... சும்மா.... “ என்று அவனைப்போலவே தன் தோளை குலுக்க, தன் மகளின் செய்கையில் மலர்ந்து சிரித்தான்..!
நிகா குட்டி இப்படித்தான்... அவள் எங்கே விளையாண்டு கொண்டு இருந்தாலும், அவளின் எண்ணம் முழுவதும்
அவனையே தான் சுற்றிக் கொண்டே இருக்கும்..!
சில நிமிஷத்துக்கு ஒருமுறை ஓடிவந்து அவன் இருக்கிறானா என்று பார்த்துவிட்டு மீண்டும் ஓடிப்போய் தன் வேலையை
தொடருவாள்..!
அதில் அவனுக்கோ அப்படி ஒரு பெருமை..!
“அம்மா சிக் புடிச்சு என்ன பண்ண...? “ என்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டு, அவன் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்தவாறு கேட்க, விகர்த்தனனுக்கோ புரை ஏறியது..!
என்ன சொல்ல? என்று திருதிருக்க, அவன் திருட்டு முழியை
கண்டு சுரபிக்குமே சிரிப்பு வந்தது..!
தன் இதழை அழுந்த கடித்தபடி தன் சிரிப்பை அடக்க முயன்றாள்..!
“சொல்லு பா... என்ன பண்ண? “ என்று விடாமல் கேட்க,
“அது வந்து....ஆங்... அம்மா கண்ணுல தூசி விழுந்திடுச்சா...
அதான் எடுத்து விட்டேன்...” என்று சமாளிக்க,
“ஓ......” என்று உதடு குவித்து சொல்ல, அந்த அழகில் மயங்கி போனவன், தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..!
பின் அவளை கீழ இறக்கி விட்டவன்,
“சரிடா குட்டிமா... நீ கீழ போய் விளையாடு... அப்பா ட்ரெஸ்
சேன்ஜ் பண்ணிட்டு கீழ வர்றேன்...நாம
ரெண்டு பேரும் விளையாடலாம்..” என்று
புன்னகைக்க,
“ஓகே பா... சீக்கிரம் வா...” என்றவாறு மான்குட்டியாய் துள்ளி குதித்தபடி வெளியில் ஓடிச் சென்றாள்.
அதற்குள் தன்னிலை பெற்றிருந்த சுரபி, வேகமாக தன்
அலங்காரத்தை கலைத்து இருந்தாள்..!
இப்பொழுது தலையில் இருந்த அலங்காரத்தையும் கலைத்துவிட்டு, பின்னலை பிரித்து விட்டு, தலைமுடியை லூசாக விட்டிருக்க, அவளின் நீண்ட கூந்தல் அவனை ஈர்த்தது..!
இதுவரை இந்த மாதிரி நீண்ட கூந்தலை யாரிடமும் கண்டதில்லை அவன்..!
மயில் தோகை போல நீண்டு தொங்கிய கூந்தலை கண்டதும், அவசரமாக குனிந்து
அவளின் பட்டுகேசத்தை கைகளால் அளந்தவன், அவளின்
கூந்தலுக்குள் முகம் புதைத்து வாசம் பிடிக்க, பெண்ணவளோ மீண்டும் தடுமாறினாள்..!
“என்ன சேம்பூ இது சுபி..! செமையா இருக்கு...! அப்படியே ஆளை
இழுக்குது...” என்று அவள் கூந்தலில் முகத்தை வைத்து தேய்க்க, அதில் தன் சித்தம் தடுமாற ஆரம்பித்தாலும் நொடியில் சுதாரித்துக்கொண்டவள், அவனிடமிருந்து விலகி நின்றவள்,
“போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணுங்க... இன்னும் ரெண்டு நிமிஷத்துல உங்க
இளவரசி திரும்பவும் ஓடி வருவா..”
என்று குறும்பாக சிரித்தபடி சொல்ல, அதைக்கேட்டவன் மெல்ல
வெட்கப்பட்டு, தன் பின்னந்தலையை
கோதியவாறு அவளை ஏக்கமாக பார்த்தபடி, தன் ஆடையை மாற்ற
ஆரம்பித்தான்..!
*****
அன்று இரவு படுக்கையில் படுத்தவாறு, தன் மகளை தன் மார்பில் போட்டுக்கொண்டு, அவள் தலையை வருடியபடி, அன்றைய பிறந்தநாள் விழாவை பற்றி, தன் மகளுடன் கதை அடித்துக்
கொண்டிருந்தான்..!
நடு நடுவே சுரபியையும் இணைத்துக் கொண்டான்..!
இருவரும் கலகலப்பாக பேசி சிரிக்க, சற்று நேரத்தில் உறங்கி விட்டாள் சுரபி..!
அசதியில் நன்றாக உறங்கி கொண்டிருந்தவளின் இடையில் இருந்த புடவை விலகியிருக்க, அன்றைக்கு போலவே இன்றும்
அவளின் வெற்றிடையில் ஒரு கரம் அழுந்த பதிய, திடுக்கிட்டு பார்த்தாள்..!
விகர்த்தனனை அவளின் அருகே நெருக்கமாக காணவும், பழைய நினைவுகள் நினைவு வர, முகம் ஜிவ்வென்று ஆனது..!
அவன் கண்களில் இருந்த அவளுக்கான ஏக்கம்...தாபம்... அவளை
இம்சித்தது..!
ஆனாலும் ஏதோ ஒன்று அவளை தடுத்தது..!
என்ன அது என்று அவசரமாக யோசித்தவளுக்கு உடனே புரிந்துவிட்டது..!
அவன் இன்னுமே அவளை என்னவாக எண்ணி இருக்கிறான் என்று புரியவில்லை
அவளுக்கு..! அவளை அவனுக்கு பிடிச்சிருக்கா இல்லையா என்று வாய் திறந்து சொல்லவே
இல்லை..!
அவனின் கண்கள் அவளை அடிக்கடி மேய்வது தெரிந்தாலும் அது
காதலினாலா? இல்லை காமத்தினாலா? புரியவில்லை அவளுக்கு..!
தன் மீது காதல் இல்லாமல் அவனை எப்படி கணவனாக ஏற்றுக்கொள்வது
என்று குழப்பமாக இருந்தது..!
அதே நேரம் அன்று போல இன்று அவனை தள்ளி நிறுத்த முடியவில்லை..!
அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை குலைத்து, அவன் கண்களில் தெரிந்த ஏக்கத்தை...ஆசையை நிராசையாக்க அவளுக்கு மனம் வரவில்லை..!
“இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? காதல் இல்லாமல் கூடல் இல்லை என்று தள்ளி நிறுத்த வேண்டுமா? இல்லை காதல் இல்லாவிட்டாலும் அவன் கட்டின தாலிக்காக அவன்
மனைவியாய் நடந்து கொள்ள வேண்டுமா?”
இருதலை கொல்லி எறும்பாய் தடுமாறியது அவளின் மனம்..!
அவளின் முகத்தில் இருந்த யோசனையை கண்டவன்,
“என்ன? “ என்று பார்வையால்
அவளை கேள்வியாக பார்க்க, அதற்குள் முடிவு
எடுத்து இருந்தாள்..!
“என் மகளுக்கு அப்பா வேண்டும்... அவளின் அப்பா சந்தோஷமாக இருக்க
வேண்டும்... அதற்கு நான் உடலால் அவனின் மனைவியாக வேண்டும் என்றால் இருந்துவிட்டு
போகிறேன்..!
இன்று இல்லாவிட்டாலும் கண்டிப்பாக ஒரு நாள் என் மீது அவனுக்கு
கண்டிப்பாக காதல் வரும்..அதுவரைக்கும் காத்திருப்பாள் இந்த சுரபி...” என்று தீர்மானித்தவள்,
“வந்து...... அம்மு இருக்கிறாள்...”
என்றாள் படுக்கையின் ஓரமாக உறங்கி
கொண்டிருந்த தன் மகளை கண்ணால் ஜாடை காட்டி..!
அதைக் கேட்டதும் அவன் முகத்தில் பளிச்சென்று மின்னல் வெட்டி சென்றது..!
******
இத்தனை நாட்களாக அவள் அவனை நெருங்கி வந்த
பொழுதெல்லாம் தன்னை கட்டுபடுத்தி சமாளித்தவன்... இன்று அவளை அந்த அலங்காரத்தில்
பார்த்ததில் இருந்தே அவன் மனம் தறிகெட்டு ஓட ஆரம்பித்து விட்டது..!
அவனின் நடை, உடை , பாவணை எல்லாவற்றிலும் ஒரு துள்ளல் இருக்கத்தான் செய்தது..!
அதுவும் சில மணி நேரத்துக்கு முன்னால் அரங்கேறிய முத்த ஊர்வலம்
வேறு அவன் உணர்வுகளை தூண்டிவிட்டு இம்சித்தது..!
அதற்குமேல் தன்னால் அவளை விட்டு தள்ளி இருக்க முடியாது என்று
உணர்ந்து கொண்டவன், தன் மகள் உறங்க
காத்திருந்து அவளை தாபத்துடன் நாடினான்..!
ஆனாலும் உள்ளுக்குள் சிறு அச்சம்... அன்றைக்கு போலவே இன்றும்
தன்னை தள்ளி நிருத்தி விடுவாளோ? அப்படி
நிறுத்தும்பொழுது, அவளை கட்டாயபடுத்தி
தன் ஆளுமையை காட்ட அவனுக்கு மனமில்லை..!
அதனாலயே தயக்கத்துடன் அவளை நாட, அவளின் பதிலில் இருந்த அவளின் சம்மதத்தை கண்டு கொண்டவன்
இன்னுமாய் கிறங்கி போனான்..!
“அப்ப பக்கத்து ரூம் ஓகே வா? “ என்று கண் சிமிட்ட, அவள் முகமோ குங்குமமாக சிவந்து போனது.
அவ்வளவுதான்..! தனக்காக
கிரீன் சிக்னல் வரவும், நொடியும் தாமதிக்கவில்லை.
அவளை அப்படியே தன் கரங்களில் அள்ளிக்கொண்டு அந்த அறையை ஒட்டியிருந்த
க்வின் அறைக்கு சென்றான்..!
அந்த அறைகள் இரண்டும் ராஜா ராணி அறை மாடலை கொண்டு இருந்தது...!
அவன் அறையில் இருந்தே அந்த அறைக்கு செல்லலாம்..! நேரடியாக அந்த
அறைக்கு செல்லவும் வழி இருந்தது..!
தன் வீட்டிற்கு மருமகளாக வரப்போகிறவளுக்கும் ப்ரைவசி வேண்டும்
என்று தன் மருமகளுக்காக இப்படி ராஜா, ராணி ஸ்டைலில்
அறைகளை அமைத்து இருந்தார் அகல்யா..!
ஸ்வாதி இருக்கும்வரை அந்த அறையைத்தான் பயன்படுத்தினாள்..! அவள்
சென்ற பிறகு இன்றுவரை அந்த அறை பூட்டிதான் இருந்தது..!
நேற்றுதான் அந்த அறையை சுத்தம் செய்து, அதை நாளைக்காலை சுரபிக்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணி
இருந்தான்..!
அதற்கு அவசியம் இல்லாமல் இப்பொழுதே அதற்கு வேலை வந்துவிட, அவளை அள்ளிக்கொண்டு அந்த அறைக்கு சென்றான்..!
அவளோ வெட்கத்தில் தன் இரு கரத்தால் அவள் முகத்தை மூடிக்கொள்ள, அதில் இன்னுமாய் கிளர்ந்தவன்...
வேக நடையில் அறைக்குள் நுழைந்தவன் அங்கு இருந்த படுக்கையில் கிடத்தியவன் அடுத்த
நொடி தாபத்தோடு அவள் மீது படர்ந்தான்..!
அவளின் உடல் எங்கும் தன் முத்தத்தால் அர்ச்சனை செய்தவன் அடுத்த
கட்டத்திற்கு முன்னேற, சுரபியின் உடல் லேசாக நடுங்க தொடங்கியது.!
அவளின் முகமோ வலித்து விடுமோ
என்று பயத்தை காட்டியது..!
அவளின் அச்சத்தைக் கண்டவன் மென்மையாய் பூவினும் மென்மையாய் அவளை
கையாள, அந்த இன்பமான அவஸ்தையை தாங்க முடியாதவளாய்
தலையணையை இருபக்கமும் இறுக்கி பிடித்துக்கொண்டு தன் கீழ் அதரத்தை அழுந்த கடித்துக்
கொண்டாள்
அப்பொழுதுதான் அவள் இன்னுமே வெர்ஜின் என்பது உரைத்தது அவனுக்கு..!
அதைக்கண்டு அவனுக்கு ஆச்சரியம்..!
இப்படி கூட ஒரு பெண் இருக்க முடியுமா? டீன் ஏஜ் வந்ததுமே தன் உடல் தேவையை தீர்த்துக்கொள்ளும் பெண்களைத்தான் பார்த்து
இருக்கிறான்..! பழகி இருக்கிறான்..!
ஸ்வாதி கூட அவனை மணக்கும்பொழுது வெர்ஜின் இல்லைதான்..! ஆனால்
அவனுக்கு அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை..!
உடல் தேவை என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது..! அவன்
எப்படி தன் தேவையை தீர்த்துகொண்டானோ அதே போலத்தான் ஸ்வாதியும் என்று இயல்பாகத்தான்
எடுத்து கொண்டான்.!
ஆனால் சுரபி...?
இத்தனை வருடங்களாக, அவளின் உணர்வுகளை
கட்டு படுத்தி, நெறி தவறாமல், ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் தனக்கு என்று ஒரு கூட்டை
உருவாக்கிக்கொண்டு அதை விட்டு வெளிவராமல் வாழ்ந்து வந்த தன் மனைவியை எண்ணி பெருமையாக இருந்தது..!
“இனி தன் ஆயுல் வரைக்கும் இவளுக்கு உண்மையாக இருக்க வேண்டும்..!
இவள் மட்டும்தான் இனி என் வாழ்வில்..” என்று உறுதி கொண்டவன் அவளை இன்னுமாய் மென்மையாக ஆட்கொண்டான்..!
முதல் நாள் இருந்த அதிரடி ஆக்சன் இல்லாமல் மென்மையாய் மிக
மென்மையாய் கையாண்ட விதம் அவளுக்கும் புரிந்தது..!
தன் மீதான தன் கணவனின் அக்கறையை கண்டு உள்ளம் குளிர்ந்து போக, அவனின் தேடலுக்கு ஈடு கொடுத்து அவனின் தேவையை தீர்த்து
வைத்தாள்..!
அவஸ்தையான இன்பமான வலிதான் என்றாலும் அது கூட சுகமாகத்தான் இருந்தது
அதுவரை பத்திரமாக காத்து வந்த தன் பெண்மையை முழுவதுமாக தன்
கணவனிடம் அர்பணித்தாள் அந்த மங்கை..!
*****
வழக்கம் போல மறுநாள் அதிகாலையிலயே கண் விழித்துக்கொண்டாள் சுரபி..!
தன்னவனின் மஞ்சத்தில் தலை வைத்து அவனை இறுக்கி கட்டிக்கொண்டு
உறங்கியது தெரிந்தது..! அதோடு நேற்று இரவு சம்பவங்கள் கண் முன்னே வர, அவள் கன்னங்கள் வெட்கத்தை அப்பிக்கொண்டன..!
அப்படியே கொஞ்ச நேரம் அவனின் இதயதுடிப்பை கேட்டு ரசித்தவாறு
படுத்து இருந்தவள், பின் நேரமாவதை
உணர்ந்து எழ முயன்றாள்..!
ஆனால் அவனின் வலிய கரம் எழவிடாமல், அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டது..!
“விடுங்க.... ” என்று சத்தம் இல்லாமல் முனக,
“ம்கூம் மாட்டேன்....விடமாட்டேன்...இனிமேல் எப்பொழுதும் நீ
இங்கதான்..இப்படித்தான்...” என்று பார்வையால் தன் மஞ்சத்தை காட்டி, அவள் காதில் கிசுகிசுக்க
“அச்சோ... இப்ப அம்மு எழுந்துடுவா... அவளுக்கு பாலாற்றி கொடுக்கணும்...” என்று ஒரு தாயின் அக்கறையில் அவனிடமிருந்து
திமிறி விடுபட முயல, அவன் கரமோ அவளை
இன்னுமாய் தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டது..!
“அது என்ன? உன் பொண்ணுக்கு
மட்டும் பால்..? எனக்கும் தான் பால்
வேண்டும்..! ப்ரஷ்ஷான பால்...” என்று அவளை விஷமமாக பார்த்து வைக்க, அவன் எதை சொல்கிறான் என்று புரிந்து கொண்டவளின் கன்னங்கள் செக்க செவேல் என்று ஆனது..!
“சீ....நாட்டி...நீங்க இப்படி எல்லாம் கூட பேசுவிங்களா? “ என்று சிணுங்கியவாறு அவன் கன்னத்தை கிள்ள, அவள் விரலை எடுத்து தன்
வாயில் வைத்து செல்லமாக கடித்தவன்.
“எஸ் எஸ்.. ஐ அம் அ நாட்டிபாய்... பொண்டாட்டிகிட்ட மட்டும்
எவ்வளவு வேணும்னாலும் நாட்டியா இருக்கலாம்னு சட்டம் சொல்லுது...! அதனால இப்ப நான் கேட்ட ப்ரஷ்ஷான ஷ்பெஷல் மில்க் எனக்கு
வேண்டும்... “
என்று அடம்பிடிக்கும் சிறுபிள்ளையாய் தன் முகத்தை சுருக்கி, உதட்டை பிதுக்க, அவளுக்கோ அப்படியே
தன் மகளை பார்ப்பது போல இருந்தது..!
அவள் இப்படித்தான்..! ஏதாவது வேண்டும் என்று அடம்பிடிக்கும்
பொழுது இப்படித்தான் உதட்டை பிதுக்கி, முகத்தை சுருக்கி அழுவதை போல பாவனை செய்து வைப்பாள்..!
அவளின் அந்த பழக்கம் எங்கிருந்து வந்தது என்று இப்பொழுது
புரிந்துவிட, அவளின் இதழில்
பெரிதாய் புன்னகை..!
“என்ன சிரிப்பு? சொன்னால் நானும்
சிரிப்பேன் இல்ல...” என்று அவளின் கன்னத்தை செல்லமாய் கடித்தபடி கிறக்கத்துடன்
கேட்க, அவளும் சிரித்தபடி தான் மனதில் நினைத்தை சொல்லி
வைத்தாள்..!
அதைக்கேட்டவனுக்கோ தலைகால் புரியாத மகிழ்ச்சி..!
“அவ அப்பா பொண்ணு டி... அப்படியே என்னோட ஜெராக்ஸ் ஆக்கும்..”
என்று பெருமையாக காலரை தூக்கி விட்டுக்கொள்ள, சுரபிக்கும் பெருமையாக இருந்தது..!
அதோடு தன் மகள் தன்னைப்போல இருப்பதில் இந்த அப்பாக்களுக்குத்தான்
எத்தனை பெருமை...! அவள் கூட அவள் அப்பாவை உரித்து வைத்து பிறந்ததாக, சகுந்தலை அடிக்கடி பெருமை பட்டுக் கொள்வார்..!
அவள் தந்தையும் அவளை இப்படித்தான் கொஞ்சினாராம்..! ஆனால்
அவளுக்குத்தான் அதெல்லாம் நினைவில் இல்லை..!
எப்படியோ நான் இழந்த அந்த தந்தை பாசம் என் மகளுக்காவது கிடைத்து
விட்டதே..! அவசரத்தில் நான் எடுத்த முடிவையும் நல்ல படியாக மாற்றி தன் மகளை அவள்
தந்தையிடம் சேர்த்துவிட்ட அந்த கடவுளுக்கு மனதார நன்றி சொன்னாள்..!
“கடவுள் மட்டும் கண் அசைத்து நடந்ததில்லையே..! உன் புருஷனின் பிடிவாத குணம்... தன் மகளைக்
கண்டதும் கண்டு கொண்டதும், அவளையே சுற்றி
வந்து அவளைப்பற்றிய உண்மையை கண்டு கொண்டு, உன்னுடன் போராடி அல்லவா உன் மகளுக்கு இந்த வாழ்க்கையை கொடுத்து
இருக்கிறார்..!
அப்படி பார்த்தால் உன் புருஷனைத்தான் நீ தெய்வமாக
கொண்டாடவேண்டும்...” என்று இன்னொரு மனம் அவளுக்கு இடித்துரைக்க, மஞ்சத்தில் படுத்தவாறே நிமிர்ந்து அவனை நன்றியோடு பார்த்து
வைத்தாள்..!
அவள் முகத்தில் இருந்த பெருமிதத்தையும், அவனை ஒரு மாதிரி பார்த்து வைத்ததையும் கண்டு கொண்டவன்
“என்னாச்சு டி? ஏன் திடீர்னு
சைலன்ட் ஆகிட்ட..? “ என்று முன்னால்
விழுந்திருந்த தலைமுடியை எடுத்து, அவளின் காதிற்கு பின்னால் சொருகியபடி கேட்க, அவளோ பதில் எதுவும் சொல்லாமல் எக்கி அவனின் கன்னத்தில்
முத்தமிட்டாள்..!
அதில் சிலிர்த்தவன், அவளை இன்னும் சீண்ட
எண்ணி,
“ஹோய் பொண்டாட்டி... நான் என்ன கேட்டேன்...? நீ என்ன கொடுக்கற? இதெல்லாம்
செல்லாது...” என்று சிணுங்க, அவன் கேட்டதை மறந்து
போனவளாய்,
“என்ன கேட்டிங்க ...? “ என்று கேள்வியாக
அவனை பார்க்க,
“போச்சுடா... அதுக்குள்ள மறந்துட்டியா.? எனக்கு..... “ என்று அவனுக்கு வேண்டியதை ரகசியமாக அவள் காதில்
சொல்ல, அதைக்கேட்டவளின் உடலில் பளிச் என்ற மின்னல்
வெட்டி சென்றது..!
கன்னங்கள் மீண்டும் செவ்வானமாக சிவந்து போக,
“சீ.... நாட்டி... அதெல்லாம் முடியாது...” என்று செல்லமாக முறைக்க,
“ஹீ ஹீ ஹீ நீ கொடுக்காட்டி
போ... இந்த நாட்டி பாய் அவனுக்கு வேண்டியதை அவனே எடுத்துப்பானாம்...” என்று கண்
சிமிட்டி விஷமமாக சிரித்தவன்,
அடுத்த கணம் தன் மேல் கிடந்தவளை பக்கவாட்டில் சரித்து, அவள் மேல் படர்ந்தவன் அவன் கேட்டதை அவளிடமிருந்து அவனாகவே பெற்றுக்கொண்டான்..!
நேற்று இரவு முழுவதும் அரங்கேறிய அவர்களின் காதல் களியாட்டம், அந்த அதிகாலையிலும் ஒரு
காட்சி அரங்கேற, பெண்ணவள்தான் ரொம்பவே
சோர்ந்து போனாள்..!
அவனின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், அவனின் வேட்கையில் களித்து, கலைத்து, தளர்ந்து, துவண்டு அப்படியே மீண்டும்
உறங்கி போனாள்..!
*****
மீண்டும் கண் விழித்து பார்த்த பொழுது, அவள் பக்கத்தில் படுக்கை காலியாக இருந்தது..!
கண்ணை கசக்கி கொண்டு அறையை சுற்றி பார்க்க, அவன் இல்லை அங்கே..!
அதே நேரம்,
“அப்பா..... அம்மா
எங்கே? நான் அம்மாவை பார்க்கணும்....! “ என்ற தன் மகளின் குரலைக் கேட்டு, அடித்து பிடித்து
எழுந்தாள் சுரபி..!
அப்பொழுதுதான் அவள் உடலில் ஆடை எதுவும் இல்லாமல் இருப்பது
உரைக்க, உடனே
போர்வையால் தன்னை மூடிக் கொண்டாள்..!
தன் கணவனின் செய்கை எல்லாம் நினைவு வர, மீண்டும் அவள் கன்னங்கள் சிவந்து போனது..!
“ப்பா...சரியான முரடன்...ரௌடி பேபி....” என்று தனக்குள்ளே
சிரித்துக் கொண்டாள்..!
“அம்மா க்கு டயர்டா இருக்குது குட்டிமா...உள்ள தூங்கிகிட்டு
இருக்காங்க... அவங்களை டிஸ்டர்ப் பண்ண கூடாது...” என்று விகர்த்தனன் தன் மகளை சமாதானம் செய்து கொண்டிருப்பது அவளுக்கு
கேட்டது.
“ஏன் டயர்டா இருக்காங்க? “ என்று குறுக்கு கேள்வி கேட்க, சுரபிக்கோ
சிரிப்பு பொங்கி வந்தது.
“அது வந்து....வந்து...” என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருத்தான்..!
இதுவரை யாரிடமும் தடுமாறி நிக்காதவன்..! மற்றவர்களை முழி
பிதுங்க வைத்தவன்..! இப்பொழுது தன் மகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முழி பிதுங்கி
நின்றான்..!
“சொல்லு பா... ஏன் அம்மா டயர்டா இருக்காங்க...” என்று மீண்டும்
துருவ,
“அது வந்து... நேற்று
குட்டிமா பர்த்டே பார்ட்டில கலந்துக்கிட்டாங்க இல்லையா...! அதனால டயர்டா இருக்காங்க..”
என்று சமாளிக்க
“ஹ்ம்ம் அப்ப நானும்தான் கலந்துகிட்டேன்..! எனக்குத்தான் பாத்தி... எத்தனை கெஸ்ட்கிட்ட பேசினேன். ஆனா
எனக்கு டயர்டா இல்லை...! நீயும் டயர்டா இல்லை.... அம்மாக்கு மட்டும் எப்படி
டயர்டா இருக்கும்?” என்று சந்தேகமாக
கேட்க,
“அது வந்து... நைட்
அம்மாக்கு கொஞ்சம் வேலை டா...அதான்
டயர்ட்...” என்று சமாளிக்க முயன்றான் அடக்கப்பட்ட
சிரிப்புடன்...
“ஹ்ம்ம்ம் என்ன வேலை? “ என்று விடாமல்
கேட்டு வைக்க, அவர்கள் செய்த
வேலையை நினைக்கவும் புரை ஏறியது அவனுக்கு...!
கூடவே கொஞ்சமாய் வெட்கமும் சேர்ந்து கொள்ள, அவன் முகத்திலும் லேசான வெட்கம் படர்ந்தது..!
அதோடு விடாமல், நிக்க வைத்து
கேள்வி கேட்கும் தன் மகளைக் காண பெருமை பொங்கியது..!
அவளை அப்படியே அள்ளி எடுத்து இறுக்க அணைத்துக்கொண்டவன்,
“அதெல்லாம் வெளில சொல்ல முடியாத வேலை, குட்டிமா...” என்று அவளின் காதோரம் ரகசியமாக சொல்ல, அவளும் அவனைப் போலவே ரகசியம் பேசும் குரலில்,
“அது என்ன வெளில சொல்ல முடியாத வேலை? “ என்று கிசுகிசுப்பாக கேட்க, அவனோ மீண்டும் திருதிருத்தான்..!
தன் மகளிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் தன் கணவனை நினைத்து சுரபிக்கு
மீண்டும் சிரிப்பு பொங்கி வந்தது..!
சத்தமில்லாமல் சிரித்தபடி, அவசரமாக படுக்கையின் ஓரமாக தூக்கி வீசப்பட்டிருந்த தன் புடவையை எடுத்து, உடலில் சுற்றிக்கொண்டு குளியலறைக்குள் விரைந்தாள்.
“அது....அப்பா.... அம்மா...வேலை....” என்று வெட்கத்துடன்
சிரித்தபடி சொல்ல,
“ஓ....அப்ப நீயும் அம்மா கூட வேலை செஞ்சு?” என்று கேள்வியை அடுக்க,
“யெஸ்...யெஸ்... அப்பாதான் ரொம்ப வேலை செஞ்சு....” என்று
மீண்டும் சிரிக்க,
“அப்ப நீ ஏன் டயர்ட் ஆகல... அம்மா மட்டும் என் டயர்ட்....? “ என்று அதிமுக்கிய பாய்ன்ட்டை பிடித்து கேட்க,
“ஆஹான்... விகா... உன் பொண்ணு ஆனாலும் இவ்வளவு புத்திசாலித்தனமாக
இருக்க கூடாதுடா... சி.பி., சி.ஐ.டி மாதிரி இப்படி நோண்டி நோண்டி கேட்கறா... பார்க்கலாம்..
நீ எப்படி இந்த குட்டியை சமாளிக்கிறனு..? “ என்று நக்கலாக
சிரித்துக்கொண்டது அவன் மனஸ்...
“அதுவா குட்டிமா...உன் அம்மா சரியான வீக் பாடி...அதான் கொஞ்ச
நேரத்திலயே டயர்ட் ஆகிட்டா..அப்பா ஸ்ட்ராங் இல்ல... அதான் நான் டயர்ட் ஆகவே
இல்ல....” என்றவனின் நினைவுகள் தன்னவளிடம் சென்று நின்றது..!
அவன் வேகத்தை தாங்காமல் அவள் பட்ட பாடு நினைவு வர, அவன் முகத்தில் அழகாய் ஒரு புன்முறுவல் பூத்தது..!
“வாய் தான் இவளுக்கு
நீளம்...! என்கிட்ட சண்டைக்கு வர்றதுனா ஸ்ட்ராங்கா நிக்கறா.., மத்ததுல ரொம்பவும் வீக்...நிறைய மாத்தனும்....” என்று
தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்..!
“அம்மா வீக் பாடி இல்ல... அம்முமா மாதிரி அம்மாவும் பால் குச்சி...அம்மா ஸ்ட்ராங்....ஐ
வாண்ட் டு சீ மம்மி....” என்று மீண்டும்
அடம்பிடிக்க, அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் தன் மகளை அடுத்த அறைக்கு உள்ளே
அழைத்து வந்தான்.
“ஐயோ...இவ வேற இப்ப எந்த கோலத்தில இருக்கிறாளோ? அதை பார்த்து வேற இந்த நிகா குட்டி ஆயிரம் கேள்வி கேட்பாளே...”
என்று உள்ளுக்குள் கொஞ்சம் உதறலுடன் அறைக்கு உள்ளே வந்தவனுக்கு, சுரபி படுக்கையில்
இல்லாமல், குளித்துக் கொண்டிருக்கும்
சத்தம் கேட்கவும் அப்பாடா என்று நிம்மதியாக இருந்தது.
“தேங்க் காட்...ஜஸ்ட் மிஸ்... நான் தப்பிச்சேன்...” என்று அந்த
கடவுளுக்கு மனதுக்குள் நன்றி சொல்லியவன்,
“அம்மா குளிக்கிறா டா... இப்ப வந்திடுவா... வாங்க நாம கீழ போய்
விளையாடலாம்... “ என்று தன் மகளை திசை
திருப்ப முயல, அவளோ
“இல்லை... நான் அம்மாவைப் பாக்கனும்...” என்று அடம் பிடித்தபடி, கன்னத்தில் கை வைத்தபடி அங்கேயே படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அவனும் ஒரு பெருமூச்சு விட்டு, தன் மகள் அருகில், அவளைப்போலவே
கன்னத்தில் கை வைத்தபடி, குளியலறை கதவை
பார்த்தபடி அமர்ந்து கொண்டான்...!
உள்ளுக்குள் குளித்துக் கொண்டிருந்த சுரபிக்கு இவர்களின்
உரையாடல் கேட்கவில்லை.
அவசரமாக குளித்து முடித்தவள், உடலில் ஒரு டவலை
மட்டும் சுற்றிக் கொண்டு, அவசரமாக வெளியே வர, அங்கு படுக்கையில், கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்த
இருவரையும் கண்டு விழி விரித்தாள்.
விகர்த்தனன் தன்னவளை அந்த கோலத்தில் பார்க்க, அவ்வளவுதான்..! கிளீன் போல்ட் ஆகி போனான்..!
இரவில் விடிவிளக்கிலும், அதிகாலை இருளிலும்
அவ்வளவாக பார்த்திராத அவளின் அந்தரங்க அழகை, இப்பொழுது
வெளிச்சத்தில் காண, மீண்டும் அவன்
உணர்வுகள் கிளர்ந்து எழ, கள்ளுண்ட வண்டாக
போதையேறிப் போக, தலை கிறுகிறுத்தது..!
அப்படியே அவளை அள்ளிக் கொள்ள அவன் கரங்கள் தவிக்க, படுக்கையிலிருந்து
எழுந்து, அவளை நோக்கி செல்ல
ஓரடி எடுத்து வைத்து விட்டேன்.
உடனே அவன் கையை
பிடித்து இழுத்து அவனை நிறுத்தினாள் அவன் செல்ல
மகள்..!
“அப்பா... அம்மா குளிச்சு இல்ல... இப்ப ட்ரெஸ் பண்ணுவாங்க... நாம வெளில போலாம்...”
என்று பெரிய மனுஷியாக அறிவுரை சொல்ல, அப்பொழுதுதான் அவள்
அங்கே இருப்பது அவனுக்கு உரைத்தது..!
உடனே அவன் முகம் விளக்கெண்ணையை குடித்தவனை போல அசடு வழிய, அவன் பார்வையோ ஈரம் சொட்ட சொட்ட பனியில் நனைந்த ரோஜாவாய், சிறு வெட்கத்துடன் அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றிருந்த
தன்னவளை அள்ளி பருகியது..!
“ஹ்ம்ம்ம் கமான்.. லெட்ஸ் கோ...” என்று அவன் கையை பிடித்து
வாயிலை நோக்கி இழுத்து செல்ல, அவனும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தவன்,
மீண்டும் தன்னவளை கண்களால் அள்ளிப் பருகிய படி, அவளை ஏக்கமாக பார்த்தபடி, தன் மகளை அள்ளிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்..!
சுரபிக்கோ மீண்டும் சிரிப்பு பொங்கி வந்தது...!
தன் கணவனின் கண்களில் தெரிந்த ஏக்கமும், தாபமும், அவள் மீதான மோகமும்
கண்டு கர்வம் கொண்டாள்..!
தன்னிடம் இந்த அளவுக்கு கிறங்கி போன தன் கணவனை எண்ணி பெருமை
கொண்டாள்..!
“சே... சரியான ரவுடி பேபி... நைட் எல்லாம் என்னை தூங்கவே
விடாமல் ஆடின ஆட்டம் பத்தாது என்று பகலிலும் ஒரு மேட்ச் ஆடி முடிச்சிருக்கான்..!
இன்னும் அவன் தாபம் தீரலையா? இப்பவும் கண்களில்
அத்தனை ஏக்கமாக போகிறானே..! சரியான முரட்டு பையன்....” என்று மீண்டும் பெருமையுடன்
சிரித்துக் கொண்டாள்.
******
பின் அவசரமாக அங்கிருந்த வாட்ரோபில் இருந்த ஒரு
புடைவையை எடுத்து அணிந்து கொண்டு, அங்கிருந்த
ட்ரெஸ்ஸிங் டேபில் முன்னே அமர்ந்தவள், தன்னை பார்த்து
பார்த்து அலங்கரித்துக் கொண்டாள்..!
முன்னெல்லாம் மேக்கப் என்றாலே முகத்தை சுளிப்பவள்..! அதைக்கண்டு காத தூரம் ஓடுபவள்..! இப்பொழுது தன்
கணவனுக்காக பார்த்து பார்த்து தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.
அவளை பார்த்ததும் அவன் பார்வை எப்படி விரியும் என்று எண்ணி
சிலிர்த்துக் கொண்டவள், தன் ஒப்பனையை
தொடர்ந்தாள்..!
அவளை நினைத்து அவளுக்கே சிரிப்பாக வந்தது..!
“இதுதான் மஞ்சக்கயிறு மேஜிக் என்பதா? இந்த கயிறு...இந்த தாலி
தான் ஒருத்தரை எப்படி மாற்றுகிறது? “ என்று தன் மார்பில்
தொங்கிய தாலியை வருடியவள், அதை தன் கண்களில்
ஒற்றிக்கொண்டு, தனக்குள்ளே சிரித்து
கொண்டாள் சுரபி..!
0 comments:
Post a Comment