மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Sunday, October 2, 2022

வராமல் வந்த தேவதை-27

 


அத்தியாயம்-27

 

றுநாள் காலை படுக்கையில் அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள் சுரபி..!

விடிந்ததன்  அடையாளமாக சில்லென்ற தென்றல் காற்று எங்கேயோ லேசாக திறந்து வைத்து இருந்த ஜன்னல் வழியாக ஓடிவந்து அவளின் கேசம் கலைத்து அவளை துகில் எழுப்ப முயன்றது.

தோட்டத்திலிருந்த கொய்யா மரத்தின் பழங்களை காலையிலேயே ஆசையாக கொத்தித் தின்று கொண்டிருந்த கிளிகள் மற்றும்  குருவிகளின் கீச் கீச் என்ற சந்தோச கூச்சல் அவள் செவிப்பறையை அடைய,  மெல்ல கண் விழித்தாள் சுரபி.  

கண் விழித்தவன் அனிச்சையாக திரும்பிப் பார்க்க,  அந்த படுக்கை காலியாக இருந்தது.  

மற்ற இருவரையும் காணவில்லை..!

அப்பொழுதுதான் நேற்று இரவு சம்பவம் நினைவு வந்தது.

அவள் கணவனாகியவன்... அவளை உரிமையோடு அணைக்க வந்ததும், அவள் அவனை மறுத்து விலக்கியதும், அதைத் தொடர்ந்து ஷ்யாம் பற்றிய பழைய நினைவுகள் எல்லாம் மடை திறந்த வெள்ளமாய் வந்து போனது நினைவு வந்தது.

அதைத் தொடர்ந்து அவள் கதறி அழுதது நினைவு வந்தது. அவள் தரையில் தானே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். பின் எப்படி படுக்கைக்கு வந்தாள்..?

அதுவும் அவள் மீது போர்த்தி இருந்த போர்வை ..?

அவன்தான் அவளை தூக்கி படுக்கையில் படுக்க வைத்து, போர்வையையும் மூடி விட்டிருக்க வேண்டும்.. என்று எண்ணும் பொழுதே அவளையும் மீறி அவள் மனதில் சில்லென்ற மழைச்சாரல்.

கூடவே நேற்று இரவு   வெகுநேரம் அவள் உறங்காமல் அழுது கொண்டிருந்தது இப்பொழுது தலை விண் விண் என்று தெரித்தது.

தன் நெற்றிப்பொட்டில் இரு பக்கமும் இரு கட்டை விரலை வைத்து நன்றாக அழுத்தி விட்டவள்...    அப்பொழுதுதான் எதிரிலிருந்த கடிகாரத்தில் மணியை பார்க்க, அடுத்த கணம்

“ஓ மை காட்...  இவ்வளவு நேரமா தூங்கி இருக்கிறேன்...”  என்று அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தவள், அவசரமாக குளியலறைக்குள் சென்றாள்.

முகம் கழுவியவள்,  தன்  பிரஷ்ஷில் பேஸ்ட் ஐ  எடுத்துக்கொண்டு,  கண்ணாடி முன் நின்று பல் துலக்க,  அப்பொழுதுதான் அவள் கண்கள் சிவந்து இருப்பதும்,  நேற்று இரவு அழுததன்  அடையாளமாக கண்ணோரம் வழிந்திருந்த கண்ணீர் கோடுகள் இன்னுமே கரையாக ஒட்டியிருந்தது.  

அதைத் தொடர்ந்து மீண்டும் நேற்று இரவு சம்பவங்கள் நினைவு வர,  அவள் முகம் வேதனையில் சுருங்கியது.  

ஆனாலும் உதட்டை கடித்து தன் வேதனையை தன் உள்ளே அடக்கிக் கொண்டு பல்லை துலக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில் காலைக் கடன்களை முடித்து ரெப்ரெஷ் ஆகியவள்,  மனம் கொஞ்சம் தெளிவாக இருந்தது.  

குளியலறையை விட்டு வெளியே வர,  அதேநேரம் தோட்டத்திலிருந்து ஒரு பெண்ணின் கலகலவென்ற சிரிப்பு சத்தம் கேட்டது.  

அந்த வீட்டில் பெண் என்றால் அவளைத் தவிர பூங்கோதை மட்டுமே..!  

“மற்ற வேலைக்காரர்கள் எல்லாருமே ஆண்கள் என்பதால் இந்தக் குரல் யாருடையதாக இருக்கும்? “  என்று யோசித்தவாறு தோட்டத்து பக்கமாக இருந்த ஜன்னல் திரையை விலக்கி,  லேசாக திறந்திருந்த ஜன்னலின் வழியாக தோட்டத்திற்குள்  எட்டிப் பார்த்தாள் சுரபி.

அங்கே கண்ட காட்சியில் ஒரு நிமிடம் அதிர்ந்து சிலையாகிப் போனாள்..!  

தோட்டத்தில் யாரோ ஒரு பெண்ணை கட்டி அணைத்தவாறு, அவளின் இதழில் முத்தமிட்டவாறு,  நெருக்கமாக நின்றிருந்தான் அவள் கணவன்.  

அதைக் கண்டதும் ஒரு நொடி அவள் மனதில் வேதனை வந்து போனது..!

அடுத்த நொடி முகம் அருவருப்பை பூசிக்கொள்ள,  பட்டென்று ஜன்னல் திரையை மூடி விட்டாள்.  

திரையை மூடினாலும், ஏனோ  அந்த காட்சியே  திரும்பத் திரும்ப அவள் கண் முன்னே வந்து நின்றது.  

அதில் அவள் கால்கள் தள்ளாட, உடல் நடுங்க அருகிலிருந்த சோபாவில் பொத்தென்று விழுந்தாள்.  

“எப்படி இப்படி பப்ளிக்கா ஒரு பொண்ணை கட்டி புடிச்சுக்கிட்டு இருக்கான்?  யார் அந்த பொண்ணு?  நேற்று இரவு என்னையும் இப்படித்தானே அணைத்திருந்தான்..!  

பன்னிரெண்டு மணி நேரத்தில்...  காலையில் இன்னொரு பெண்ணுடன்... எப்படி..?  அதுவும் தோட்டத்தில் நின்றபடி இழைந்து கொண்டிருக்கிறானே...!  

கொஞ்சம் கூட மேனர்சே இல்லை...”  என்று உள்ளுக்குள் திட்டித் தீர்த்தவளுக்கு,  அப்பொழுதுதான் தன் மகளின் நினைவு வந்தது.  

அவள் பார்த்த பொழுது, விகர்த்தனன் மட்டும்தான் தனியாக அந்த பெண்ணுடன் இருந்தது நினைவு வந்தது.  

அப்போ அம்மு எங்கே?  என்று கேள்வி எழ, அதற்குமேல் எல்லாவற்றையும் மறந்துவிட்டு,  அவசரமாக தலையை வாரி பின்னலிட்டவள்,  

கசங்கி இருந்த புடவையையும்  சரி செய்துகொண்டு வேகமாக அறையை விட்டு வெளிவந்தவள்,  மாடிப்படிகளில் தடதடவென்று இரண்டு இரண்டு படிகளாக தாவி கீழே இறங்கினாள்.

சுரபி இரண்டிரண்டு படிகளாக தாவி கீழே இறங்கி வரவும்,  அங்கே பூங்கோதை முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, நிகாவை தன் இடுப்பில் தூக்கி வைத்தபடி தரை அதிர வேக வேக எட்டு வைத்து உள்ளே வந்து கொண்டிருந்தாள்.

பூங்கோதை கையில் இருந்த  தன் மகளைப் பார்த்ததும் தான் சுரபிக்கு நிம்மதியாக இருந்தது.  

அவ்வளவு பெரிய மாளிகை என்றாலும்,  ஏனோ எங்கேயாவது போய் அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்பதை நினைக்கும்பொழுதே அவளின்  நெஞ்சம் பதைத்தது.  

அந்த பதட்டத்துடன் அறையை விட்டு ஓடி வந்து இருந்தாள்.  

இப்பொழுது தன் மகளை நேரில் காணவும் தான் நிம்மதியாக இருந்தது.

வேகமாக பூங்கோதை அருகில் செல்ல,  சுரபியை கண்டதும் அதுவரை கடுகடுவென்று கடுகடுப்பான முகத்துடன் உள்ளே வந்த பூங்கோதை..!  நொடியில் சுரபியை கண்டதும் தன்னை  சுதாரித்துக்கொண்டு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தாள்.  

தன் அன்னையை  கண்டதும் அம்மா என்று அந்த குட்டி அவளிடம் தாவ,  அவளை அள்ளி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.  

“சாப்டியா குட்டிமா? “  என்று குற்ற உணர்வுடனும், கொஞ்சம் பரிவோடும்  கேட்க,

“யெஸ்...  குட்டிமா பூஸ்ட் குச்சி...”  என்று மழலையில் சொல்ல,  அப்பொழுதுதான் அவள் முகம் தெளிவானது.  

பூங்கோதையை பார்த்தவள்,  

“என்னாச்சு அக்கா?  ஏன் உங்க முகம் கடுகடுவென இருக்கு? “  என்று விசாரிக்க,  பூங்கோதை ஒரு நொடி தடுமாறிப் போனாள்.  

என்ன சொல்வது என்று அவசரமாக யோசிக்க,  

“சொல்லுங்க அக்கா...  என்ன பிரச்சனை?  ஏன் கோபமா யாரையோ திட்டிக்கொண்டே உள்ள வந்தீங்க? “  என்று மீண்டும் அமர்த்தலாக விசாரிக்க,  ஏனோ சுரபியின் அக்கா என்ற அழைப்பு பூங்கோதைக்குள் சிலிர்த்தது.

சுரபியிடம் தன் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி விட...அவளுக்கு  உண்மையான வேலைக்காரியாக இருக்க சொல்லி அவள் மனம் குரல்  கொடுத்தது.  

அதனால் ஒரு அக்காவாக தன் மனதில் இருந்த கொதிப்பை எல்லாம் சுரபி இடம் கொட்டினாள்  பூங்கோதை.  

“அது ஒன்னும் இல்ல சின்னம்மா...  வந்து அந்த மேனா மினுக்கிய எனக்கு புடிக்கல.  அவளை பார்த்தாலே எனக்கு வயிறு பத்திக்கிட்டு எரியுது... அந்த மேனா மினுக்கி  ஐயா கூட என்னமா  ஒட்டி உரசிக்கிட்டு,  பேசுவதும் பழகறதும்  எனக்கு சுத்தமா பிடிக்கலை..!  

இப்ப கூட ரெண்டு பேரும் தோட்டத்தில்...”  என்று ஆரம்பித்து தான் சொல்ல வந்ததை பாதியில் நிறுத்திக் கொண்டவள்,  மீண்டும் தன் புலம்பலை தொடர்ந்தாள்.

“இத்தனை நாள்தான் ஐயாவுக்கு யாரும் இல்லை...பொறம்போக்கு நிலம் மாதிரி யார் வேணா வந்து தங்கிட்டு போயிருக்கலாம்..! இந்த மேனா மினுக்கியும்  எப்படி வேணாலும் நடந்துகிட்டு இருக்கலாம்.  

ஆனால் இப்பொழுது தான் ஐயாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.  அவருக்கு பொண்டாட்டியா...சொந்தக்காரியா  நீங்க இருக்கும் பொழுதே அந்த சிறுக்கி இப்படி   வந்து ஐயா கூட ஒட்டிக்கலாமா?

இந்த சின்னய்யாவும் அவளை கண்டிக்காமல்,  அவ கூட ஈசிகிட்டு நிக்கறதை பார்க்கும் பொழுதுதான்  கடுப்பு கடுப்பா வருது...”  என்று சொல்லி முடிக்கும் முன்னே

“போதும் நிறுத்துங்க அக்கா...இன்னொரு தரம் என் புருஷனை பத்தி எதுவும் தப்பா சொல்லாதீங்க.  

அவர் முன்பு   எப்படி இருந்திருந்தாலும் அது அவருடைய கடந்த காலம்...  எப்பொழுது என்னை பார்த்தாரோ  அதிலிருந்து நான் மட்டும்தான் அவருக்கு.  

எத்தனை மேனா மினுக்கிகள் வந்தாலும் அவரை ஒன்றும் செய்து விட முடியாது.

அதோடு இனி ஒரு தரும் வெறும் கண்ணால் பார்ப்பதை  மட்டும் வைத்துக் கொண்டு யாரையும் குற்றம் சாட்டாதிங்க.  

காரணத்தையும் கட்டாயம் ஆராய வேண்டும்...  இனி ஒருதரம் இந்த மாதிரி பேச்சு இருக்க கூடாது. புரிஞ்சுதா? “  என்று குரலை உயர்த்தாமல் ஆனால் கட்டளையிடும் தொனியில் சுரபி கூற,  பூங்கோதைக்கு  ஒரு நொடி கண்கள் கலங்கி  போனது.  

“அப்படியே நம்ப பெரியம்மா மாதிரியே இருக்கிங்க  சின்னம்மா...  அகல்யா அம்மா இப்படித்தான் குரலை உயர்த்தாமல் நல்லது கெட்டதை எங்கள மாதிரி வேலைக்காரங்களுக்கு சொல்லிக் கொடுப்பாங்க..,

அப்படியே நீங்களும் அவங்களை உரிச்சு வச்சிருக்கிறிங்க... சின்னய்யா கொடுத்து வைத்தவர்..!தப்புதான்...  இனிமேல் இப்படி நடந்துக்க மாட்டேன்...”  

என்று சொல்லிவிட்டு சமையலறை பக்கம் செல்ல, சுரபி அனிச்சையாக வாயிலை பார்க்க,  அங்கே தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு, ஒற்றைக்காலை மடக்கி பக்கவாட்டு சுவற்றில்  வைத்தவாறு நின்று கொண்டிருந்தான் விகர்த்தனன்.  

அவன் கண்களிலோ  அப்படி ஒரு ஆச்சரியமும் மெச்சுதல் பார்வையும்..!  

கூடவே அவள் தன்னை  என் புருஷன் என்று சொன்னதில் அவன்  மனம்  பேருவகை கொண்டது.

அதோடு அவள் சொன்ன

அவர் முன்பு எப்படி இருந்திருந்தாலும் அது அவருடைய கடந்த காலம்...  எப்பொழுது என்னை பார்த்தாரோ  அதிலிருந்து நான் மட்டும்தான் அவருக்கு.  

எத்தனை மேனா மினுக்கிகள் வந்தாலும் அவரை ஒன்றும் செய்து விட முடியாது

என்றதில் இருந்த உண்மை  அப்பொழுதுதான் உரைத்தது.  

வாரம் தோறும் விதவிதமான பெண்களை அனுபவித்து ரசித்து ருசித்தவன்... எப்பொழுது அந்தக் குட்டியை பார்த்தானோ... அவளோடு சேர்த்து சுரபியை பார்த்தானோ...

அதிலிருந்து பெண்களின் மீதான தேடல் சுத்தமாகவே மறந்து போனது..!  

மனைவியாய் சுரபி வந்தபிறகு இப்பொழுதுதான் அந்த எண்ணமே வருகிறது..!  

அதுவும் அவன் உடலும் மனமும் சுரபியை மட்டும்தான் தேடுகிறது என்று புரிந்தது.

அது ஏன் என்றுதான் ஆராய மறந்து போனான்..!  

அதை ஆராய்ந்து இருந்தால்,  பின்னால் வரும் சில பல சிக்கல்களுக்கும் வேதனைகளுக்கும் அன்றே விடை கண்டிருப்பான்.  

சிக்கல்களும்,  வேதனைகளும், மனகஷ்டங்களும்  வராமல் தடுத்து இருப்பான்.  

ஆனால் அவன் ஆராயாமல்  விட்டதன்  எதிரொலி அவன்  வாழ்க்கையில்  ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தது.

******  

குறுகுறுவென்று  சுரபியை ஆழ்ந்து பார்த்தவாறு, மெல்ல அடியெடுத்து வைத்து அவள் அருகில் வர,  சுரபிக்கோ  இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.  

அவளின் அருகில் வந்தவன், மூச்சுக்காற்று தொடும் இடைவெளியில் நின்றவன்,  தேங்க்ஸ் என்றான்  ஒற்றை வார்த்தையில்.

அவனின் சூடான மூச்சுக்காற்று அவளின் கழுத்து வளைவில் பட்டு இன்னும் அவளை குறுகுறுக்க செய்தது.  

“எதற்கு? “  என்ற விதமாய் அவளும் கேள்வியுடன் புருவம் உயர்த்தி நிமிர்ந்து அவனை பார்க்க,  

“எல்லாத்துக்கும் தான்...” என்றான் கண்சிமிட்டி குறும்பாக...!

“எல்லாத்துக்கும் என்றால்..?  என்று மீண்டும் புரியாமல் அவனைப் பார்க்க, இன்னுமாய் நெருங்கி வந்தவன், அவளின் கையில் இருந்த தன் மகளின் கன்னத்தில் மெல்லமாய் முத்தம் பதித்தவன்,

“ஹ்ம்ம்ம் என்னைப் பற்றி இந்த அளவுக்கு புரிந்து கொண்டதற்கு..!  அப்புறம் என்னை உன் புருஷன் என்று ஒத்துக் கொண்டதற்கு..! அதுவும்  உன் வாயாலேயே என் புருஷன் என்று சொல்லியதற்கு...”

அவளின் காதோரம் மீசை உரச, மெல்ல ரகசியமாய் சொல்லிவிட்டு, விஷமமாய்  கண்சிமிட்டி சிரிக்க, சுரபிக்கு அப்பொழுது தான், அவள் அவசரத்தில் பூங்கோதை இடம் என் புருஷன் என்று சொல்லியது நினைவு வந்தது.

தன் கீழ் உதட்டை கடித்துக்கொண்டு, ஒரு கணம் தன்னை சமநிலை படுத்தியவள்,

“ஹ்ம்ம்ம் அதுதான் சொல்லி இருக்கீங்களே.... நம்ம ஒப்பந்தம் நமக்குள்ளே மட்டும்... வெளியில நீங்களும் நானும் ஹஸ்பண்ட் அன்ட் வைஃப்...

அப்படித்தான் நடிக்கணும்னு சொல்லி இருந்திங்களே..!  அதான் என் நடிப்பை பூங்கோதை அக்காவிடமிருந்து ஆரம்பித்தேன்...எப்படி என் நடிப்பு? ”  என்று தன் ஒற்றை புருவத்தை வில்லாக உயர்த்தி, தன் தோள்களை குலுக்கி, சமாளிக்க,

அவளையே ஆழ்ந்த பார்வை பர்த்தவன், அவள் கண்களுக்குள் ஊடுருவி பார்த்தவாறு

“அப்படியா? ஹ்ம்ம்ம்  பார்த்தால் நடித்த மாதிரி தெரியலையே....”  என்று மீண்டும் அவளை குறுகுறுவென்று பார்க்க,  அந்த பார்வை அவளை இன்னுமாய்  வசீகரித்தது.

அவளை அப்படியே அவன் கண்களுக்குள் இழுத்துக் கொள்ளும் காந்த பார்வை..!

அதன் வீரியத்தில் அவளின் மேனி சிலிர்த்தது. அவன் பார்வைக்கு பதில் சொல்லாமல் தரையை பார்க்க, அதேநேரம்

“ஹாய் பேப்... என்ன அதுக்குள்ள என்னை தனியா விட்டுட்டு வந்துட்டீங்க? “  என்று செல்லமாக சிணுங்கியவாறு, தோட்டத்திலிருந்து ஓடி வந்தவள்,

அவளுக்கு முதுகு காட்டி நின்றபடி,  சுரபியை சீண்டிக்கொண்டிருந்தவன்  பின்னால் இருந்து,  அவனை இடையோடு கட்டியணைத்துக் கொண்டாள் அந்த மாடர்ன் யுவதி..!  

அவளைப் பார்த்ததும் நிகா குட்டியின் முகம் கூட அஷ்ட கோணலாக சுருங்கியது..!

தொடைக்கு சற்று மேல் வரைக்குமான அரைக்கால் ட்ராயர்... உடலை ஒட்டிய,  கழுத்து பகுதி நன்றாக கீழே இறங்கிய டைட்டான டி ஷர்ட்டும் அணிந்திருந்தாள்..!  

பார்ப்பவர்கள் எப்பொழுது இவள் கீழ குனிவாள்....  என்று தவமிருக்கும் விதமாக தாராளமாக உடை அணிந்திருக்க,  கிட்டதட்ட விகர்த்தனனும் அதே கோலத்தில் தான் இருந்தான்.  

உடற்பயிற்சி செய்து கொண்டிருந்ததால், அரைக்காய்  ட்ராயரும், ஆம்கட் டி-ஷர்ட்  உடன் நின்றிருக்க, இப்பொழுது இருவரையும் அந்த அரைகுறை ஆடையில் பார்க்க,  சுரபியின் முகம் கடுத்தது.  

அந்த பெண்ணின் நெருக்கம் அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது..!

உடல் விறைக்க, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க,  விலுக்கென்று தன் பார்வையை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.  

அவள் முகத்தில் வந்திருப்பது அருவருப்பா? இல்லை... அந்த அழகி அவனை இறுக்க கட்டி அணைத்துக் கொண்டு நிற்பதால்  வந்து போன கோபமா?  பொறாமையோ? எரிச்சலா?  என்னவென்று சொல்ல முடியவில்லை.  

ஆனால் கண்டிப்பாக கோபமும் பொறாமையும் அவளின் கண்களில் தெரிந்தது.  

அப்படி என்றால்?  

உரிமை இருக்கும் இடத்தில் தானே கோபமும் பொறாமையும் வரும்..!  இல்லை என்றால் இந்த பெங்களூரில் பல பூங்காக்களில் எத்தனையோ ஜோடிகள் இதைப் போல கட்டி அணைத்துக் கொண்டும்,  முத்தம் கொடுத்துக் கொண்டும்  இருந்ததை அவளும் தான் பார்த்திருக்கிறாள்.  

அவள் பார்த்ததை அவனும் தான் கவனித்து இருக்கிறான்..!  

அப்பொழுதெல்லாம் கோபம் கொள்ளாதவள்... இது அவர்களது சுதந்திரம் என்று இயல்பாக எடுத்துக்கொண்டவள்...  இப்பொழுது கோபம் கொள்கிறாள் என்றால் என்ன அர்த்தம்? “ என்று ஒரு நொடி அவசரமாக யோசித்தவன், மறுநொடி யாஹுஹூஹூ    என்று உள்ளுக்குள் துள்ளிக் குதித்தான்.  

கண்டிப்பாக பொண்ணுக்கு என் மேல ஒரு இது இருக்கு...ஆனால் அதை தனக்குள்ளே போட்டு பூட்டி வைத்திருக்கிறாள்.

அதன் சாவியை கண்டு பிடித்து பூட்டை திறந்து விட்டால் போதும்...! ப்ராப்ளம் சால்வ்ட்.. ஆனால் அவளின் அந்த மனப்பூட்டை திறப்பதற்கான சாவி எது?

பொறாமை... யெஸ்...இந்த அழுத்தக்காரியின் பொறாமைதான் எனக்கு கிடைத்திருக்கும் துருப்பு சீட்டு. அதை இன்னும் கொஞ்சம் தூண்டி விட்டால்  போதும்.  இந்த ஒட்டடகுச்சியை  என் பக்கம் கொண்டு வந்துவிடலாம்..!  

அப்ப இந்த ஆட்டத்தை இப்பொழுது இருந்தே ஆரம்பிக்கலாம்... அவளின்  பொறாமையை இன்னும் கொஞ்சம் தூண்டிவிட வேண்டும்....”  என்று முடிவு செய்தவன்,  தன்னை  அட்டையாக ஒட்டிக் கொண்டு இருந்த அந்த பெண்ணை தன்னிடமிருந்து பிய்த்து எடுத்து நிறுத்தியவன்...

அவளின் தோளின் மீது உரிமையோடு கையை போட்டு லேசாக அணைத்தவாறு நின்றவன், அந்த பெண்ணின் பக்கமாக  பார்த்து 

“ஹே  ஸ்ருதி... இவதான் சுரபி..... இவ.......” என்று நிறுத்தி சுரபியை  ஒரு கணம் ஆழ்ந்து பார்க்க, சுரபியோ இன்னுமே முகத்தை வேற பக்கம் திருப்பிக் கொண்டுதான் இருந்தாள்.

“இவ...... சோ கால்ட்  மை வைஃப்.....”  என்று சுரபியை அந்தப் பெண்ணிற்கு அறிமுகப்படுத்தியவன்,

“சுரபி....  இவதான் ஸ்ருதி... ஸ்வாதியின் தங்கை...”  என்று அந்த தாராள அழகியை அறிமுகப்படுத்த, அதுவரை அந்த பெண் யாராக இருக்கும் என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டும்,

அவள் யாரா இருந்தா எனக்கென்ன என்ற பாவனையில், அக்கறை இல்லாதவளாக வேற பக்கம் பார்த்துக் கொண்டிருந்தவள் ஸ்வாதி என்ற பெயரை கேட்டதுமே அவளின் இதயம் ஒரு முறை நின்று துடித்தது.    

ஏனோ அந்த பெயரை அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை.

பெயரை மட்டும் அல்ல.. .அந்த பெயரை அவன் சொல்லும் பொழுது ஏனோ உடம்பெல்லாம் பற்றி எரிவது போல கடுப்பாக இருந்தது.

அது ஏன் என்றுதான் அவளுக்கும் புரியவில்லை.

அந்த பெயரை கேட்டாலே  சும்மா உள்ளுக்குள் அதிரும்... அருவருக்கும்...எரிச்சல் வரும்  சுரபிக்கு.

இப்பொழுது அந்த பெயருக்கு சொந்தக்காரியின் தங்கை என்று சொல்லி இன்னொருத்தி வந்து நிக்க, இன்னுமே அவளுக்கு வெறுப்பாக, கடுப்பாக வந்தது. 

விகர்த்தனன் இருவரையும் அறிமுக படுத்தி வைக்க,

என்ன அத்தான்.. ரொம்ப சிம்பிளா முடிச்சிட்டிங்க... நான் யார் னு இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்றதில்லையா? “ என்று செல்லம் கொஞ்சியவள்,

“ஸ்வாதியின் தங்கை மட்டும் அல்ல...அதோடு இவரை மேரேஜ் பண்ணிக்க இருந்தவ... திடீர்னு சொல்லாம கொல்லாம அத்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார்.  

இல்லைன்னா நீ இருக்கும் இந்த இடத்தில்  அவரின் மனைவியாக இந்நேரம்  நான் இருந்திருப்பேன்..”  என்று சுரபியை அனல் கக்கும் பார்வை பார்த்து முறைத்து வைத்தாள் ஸ்ருதி...!   

ஒரு கணம் தான் அப்படி வெறித்து குரோதத்துடன் பார்த்து வைத்தது.!  

அடுத்த கணம் வெகு இயல்பாய் வெகுளியாக தன் முகத்தை வைத்துக் கொண்டவள், விகர்த்தனன் பக்கம் திரும்பி,  

“உங்களுக்காகவே இத்தனை நாளா காத்துகிட்டு இருந்த என்னை ஏமாத்திட்டீங்களே அத்தான்...! திஸ் இஸ் நாட் பேர்...”  என்று செல்லமாக சிணுங்கினாள்.  

அவனோ பதில் எதுவும் சொல்லாமல், சுரபியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு,  புன்னகைத்தவன்,

“ஹ்ம்ம்ம் சில நேரம் நாம எதிர்பார்த்தது நடக்காமல் போவதும்... எதிர்பாராதது நடந்து வைப்பதுதான்  தான் வாழ்க்கை பேபி..!

நானே எதிர்பாராமல் என்னை மீறி நடந்து விட்டது இந்த மேரேஜ்...” என்று பெருமூச்சு விட, சுரபிக்கோ நெஞ்சை அடைத்தது.

“அப்படி என்றால், என்னை திருமணம் செய்து கொண்டது இவனுக்கு எதிர்பாராத கசப்பா? ஆமாம்.. அப்படித்தான் இருக்கும்..

இவன் எதிர்பார்ப்பது எதுவும் என்னிடம் கிடைக்காது எனும்பொழுது இந்த மாதிரி தாராள மனம் படைத்த அழகியை மணந்து இருந்தால் அவன் வாழ்க்கை சொர்க்கமாகத்தான் இருந்திருக்கும்...” என்று தனக்குள்ளே வேதனையுடன் மருகினாள்.  

அதுவரை இரு பெண்களை மட்டுமாய் பார்த்து பேசிக்கொண்டிருந்தவன்... இப்பொழுது தன்னையே ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்த தன் மகளை பார்த்து

“குட்டிமா...  பட்டர்பிளை புடிச்சாச்சா?  எத்தனை புடிச்சிங்க? “  என்று கேட்டவாறு,  சுரபியின் கையிலிருந்த தன் மகளை வாங்க கையை நீட்ட,  அதற்காகவே காத்திருந்தவள் போல அவனிடம் தாவி வந்தாள் நிகா குட்டி.

“பைவ்....”  என்று தன் பத்து விரலையும் நீட்டிக் காட்டி,  பெருமையாக சொல்ல

“வாவ்... பைவ் கிடைச்சுதா....?   சூப்பர் டா குட்டிமா ...”  இன்று தன் மகளை சிலாகித்தான்.

“அப்புறம் குட்டிமா...  இதெல்லாம் பைவ் இல்ல...  ஒன்...  டூ...  த்ரீ... இதுதான் பைவ்...”  என்று இரண்டு கையில் ஒரு கையை மடக்கி,  அவளின் ஒரு கை மட்டும் காட்டி இதுதான் ஐந்து

என்று தன் மகளுக்கு சொல்லிக் கொடுக்க,  அவளும் வெட்கப்பட்டு தன் தந்தையின் தோளில் முகம் புதைத்து கொண்டு, லேசாக அவன் தோளை கடித்து வைத்து,   காலால் உதைத்து குலுங்கி சிரித்தாள்...!

தன் மகளின்  அந்த செய்கையில் மற்ற பெண்களை மறந்து மெய் மறந்து நின்று விட்டான் விகர்த்தனன்..! 
Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews