அத்தியாயம்-38
நாட்கள் உருண்டோட அடுத்த இரண்டு மாதங்கள்
கடந்திருந்தது..!
விகர்த்தனுக்கும் சுரபிக்கும் அடுத்து வந்த ஒவ்வொரு நாளும் சொர்க்கமாக கழிந்தது..!
இப்பொழுதெல்லாம் இரவு படுக்கையில் சுரபியும் தன் மகளோடு சேர்ந்து கொண்டு தன் கணவனுடன்
விளையாடுவதிலும், அவனிடம் கதை
அடிப்பதுமாய் நேரம் இனிமையாக கழிந்தது..!
விகர்த்தனன், தன்னுடைய பிசி
செட்யூலிலும், தன் குடும்பத்துடன்
செலவிடும் இந்த இரவு நேரத்தை தவறவிட மாட்டான்..!
தன் வேலை முடிந்ததும், வீட்டிற்கு பறந்து
வந்து விடுவான்..!
முன்பெல்லாம் வீட்டிற்கு வரவேண்டும் என்றாலே அவனுக்கு எரிச்சலாக
இருக்கும்..! அதுவும் தனிமையில் கழிக்கும் அந்த இரவு நேரம் மிகவும் கொடுமையாக
இருக்கும்..!
இந்த பகல் இப்படியே நீளாதா என்று எரிச்சலாக இருக்கும்..!
ஆனால் இப்பொழுது, பகல் முடிந்து இரவு
எப்பொழுது வரும் என்று அவன் மனம் மணியை பார்க்க ஆரம்பித்து விடும்...!
அந்த அளவுக்கு அவன் வாழ்வை மாற்றி இருந்தனர் அந்த தேவதைகள்
இருவரும்...!
மூவருமே அன்றைய தின அனுபவத்தை பகிர்ந்து கொள்ள, அதுவும் அவன் மகள் மழலையில் சொல்லும் கதையை கேட்க கேட்க திகட்டவில்லை
அவனுக்கு...!
சற்று நேரத்தில், நிகா குட்டி உறங்கிய
பிறகு, நொடியும் தாமதிக்காமல், தன் மனைவியை அள்ளிக்கொண்டு, அவனுடைய அந்தபுரத்திற்கு சென்று விடுவான்...!
விடியும் வரை அவர்களின் காதல் களியாட்டம் தான்..!
தன்னை நினைத்து விகர்த்தனனுக்கே ஆச்சர்யம்..!
இதுவரை எந்த பெண்ணையும் ஒரு முறைக்கு மேல் நாடியிராதவன்...1
இவளிடம் மட்டும் தினம் தினம் சரணடைவது ஏன்..?
இத்தனை நாட்களிலும் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் ஒவ்வொரு நாளும்
முதல் அனுபவமாக அவளிடம் மனம் மயங்குவது ஏன்?
அதுவும் ஒரு நாள் கூட இடைவெளி விடாமல், தினமும் அவளைத்தேடும் தன்னை நினைத்து அவனுக்கே
ஆச்சர்யம்தான்..!
சுரபிக்கும் தன் கணவன் தன் மீது கொண்டிருக்கும் மோகமும், தாபமும் கண்டு பெருமையாகவும், கர்வமாகவும் இருந்தது..!
“அந்த ஸ்ருதி சொன்ன மாதிரி எல்லாம் இல்லை..! அவன் ஒன்றும்
வுமனிஸ்ட் இல்லை..! என்னை மட்டுமே நாடி வருபவன்....! என் புருஷன்..! “ என்று
சிலாகித்து கொண்டவள், அவனின் தேடலுக்கு
துணை நின்றாள்..!
அவளிடம் அவன் தேடிய இன்பத்தை வாரி வழங்கினாள்..!
என்னதான் திகட்ட திகட்ட அவனுக்கு இன்பத்தை வாரி வழங்கினாலும்
சுரபிக்கு மனதில் ஒரு மூலையில் சிறிய வருத்தம், ஏக்கம் என்று இருந்து கொண்டுதான் இருந்தது
அது என்ன என்று அவளுக்கும் சரியாக தெரியவில்லை..!
அவன் இல்லாத நேரத்தில் அது என்ன என்று யோசித்து
கொண்டிருப்பவள்...! தன் கணவன் அருகில் வந்தாலே அனைத்தும் மறந்து, அவனுடன் ஒட்டிக் கொள்வாள்...!
அதோடு அவளின் ஆழ்மனதில் இன்னொரு பயமும் ஒளிந்து கொண்டே
இருந்தது..!
இதுவரை அவளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, சந்தோசம் என்ற ஒன்று
பெரிதாக இல்லாமலே போயிருந்தது..!
எப்பொழுதும் ஏதாவது ஒரு கவலை, வேதனை அவளை அறித்துக்கொண்டேதான் இருக்கும்..!
சிறு வயதில் அவள் தந்தை அவளை விட்டு சென்றது..! தன் அன்னைதான்
தனக்கு உயிர் என்று இருக்க, அவரும் அவளை
பாதியில் அனாதையாக விட்டு சென்று விட்டார்..!
தனக்கு கணவனாக ஒருவன் வரப்போகிறான் என்று எண்ணி இருந்தவனும், கனவாகவே போய்விட்டான்..!
அடுத்து தன் மகள்.. அவளை பெற்று, வளர்க்க அவள் பட்ட கஷ்டங்கள்.. அவள் அப்பா எங்கே எனும்பொழுது
நெஞ்சில் தோன்றிய சுருக் என்ற வலி...!
இப்பொழுதுதான் தன்னுடைய அத்தனை வலி, வேதனை எல்லாம் மறந்து கொஞ்ச நாட்களாக மகிழ்ச்சியாக
இருக்கிறாள்..!
எங்கே அந்த மகிழ்ச்சியும் பறிபோய்விடுமோ என்ற எச்சரிக்கை...பய
உணர்வு அடிக்கடி அவள் முகத்தில் வந்து
போகிறது..!
****
அன்று காலையில் எழும்போதே, சுரபியின் வலது கண் துடிக்க ஆரம்பித்தது.
ஏதோ ஒரு கெட்டது நடக்க போகிறது என்று அவளின் ஆழ்மனம் அடித்துக்கொள்ள, கொஞ்சம் பயத்துடனே தன்
கணவனின் அணைப்பிலிருந்து விலகி , எழுந்து குளித்து
தயாராகி பூஜை அறைக்கு சென்றாள்..!
விளக்கேற்றி வைத்து, பூஜை செய்தவள், அங்கிருந்த தெய்வங்களின் முன்னால் கரம் குவித்து நின்றவள்
“கடவுளே எனக்கு கிடைத்த வாழ்க்கை இதே மாதிரி எப்பொழுதும் நீடித்திருக்க
வேண்டும்...! இப்பதான் கொஞ்ச நாட்களாக நான் நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கிறேன்..!
இப்ப கிடைத்திருக்கும் என் நிம்மதி, மகிழ்ச்சி, சந்தோஷத்தை என்னிடமிருந்து
தட்டி பறிச்சுக்காதே....” என்று மனமுருகி
வேண்டிக்கொண்டாள்..!
எப்பொழுதும், எங்கேயும் நாம்
ஒன்றை பாசிட்டிவாக எண்ண வேண்டும்... பாசிட்டிவாகத்தான் வேண்டுதல் வைக்க
வேண்டும்..!
பறிச்சுக்காதே…கஷ்டத்தை கொடுக்காதே
என்பதற்கு பதிலாக சந்தோஷத்தை கொடு...நிம்மதியை கொடு என்று எண்ண வேண்டும் என்பதை
அந்த நொடி மறந்து போனாள் சுரபி.
நமது எண்ணங்களுக்கு கூட சக்தி உண்டு..! நாம் என்ன எண்ணுகிறோமோ
அதுவே விரைவில் நடந்தேறும் என்பதை அந்த கணம் மறந்து போனாள்.!
மறக்க வைத்திருந்தார் அந்த விதியார்..!
அவளின் ஆழ்மனதில் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருந்த இந்த
மகிழ்ச்சி தனக்கு நீடிக்காது என்பதே இப்பொழுது பிரார்த்தனையாக அவள் வாயிலிருந்து
வந்திருந்தது..!
*****
அன்று அலுவலகத்தில் முக்கியமான வேலை இருப்பதாக
சொல்லி காலையிலேயே தன் காலை உணவை அவசரமாக முடித்துவிட்டு, அவசரமாக அலுவலகம்
கிளம்பி கொண்டிருந்தான் விகர்த்தனன்..!
நிகா தோட்டத்தில் பூங்கோதையுடன் விளையாடிக்கொண்டிருக்க, சுரபி அவனுக்கு தேவையானவற்றை எல்லாம் எடுத்து கொடுத்து உதவி
கொண்டிருந்தாள்..!
அவளின் பார்வையோ ஏனோ தன்னவனை
அங்குலம் அங்குலமாக ரசித்துப் பார்த்து தன் மனதில் பத்திரப்படுத்திக்
கொண்டிருந்தது..!
அவளின் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று அவனை தடுமாற செய்தது..!
“எந்நாளும் இல்லாத திருநாளாக இவள் ஏன் இப்படி என்னை பார்த்து
வைக்கிறாள்? “ என்று மனதுக்குள்
சிரித்துக் கொண்டவன்,
“ஹோய் பொண்டாட்டி...? என்ன என்னை இப்படி
பார்த்து சைட் அடிக்கிற? “ என்று கண் சிமிட்டி குறும்பாக சிரிக்க, அவன் கண் சிமிட்டினாலே சிவந்து போகும் அவள் கன்னங்கள் ரோஜாக்களை
பூக்க வைக்கவில்லை..!
மாறாக அந்த கண்களில் அப்படி ஒரு உணர்வு..!
என்ன அது? அவனால் கண்டு கொள்ள
முடியவில்லை..!
அவள் எடுத்து கொடுத்த பைலை தன் ப்ரீப் கேஸ்க்குள் வைத்து அதை
மூடியவன், நிமிர்ந்து அவளை
பார்க்க, ஏதோ சொல்ல வருவதும், பின் சொல்லாமல் நிறுத்துவதுமாக தவிப்புடன் நின்றிருந்த தன்னவளை
காண அவன் மனம் உருகியது..!
எட்டி அவளின் இடையை பற்றி தன் அருகில் இழுக்க, அவனும் அவன் மஞ்சத்தில் வாகாக வந்து விழுந்தாள்..!
“என்னடா? என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க ?” என்று கனிவுடன்
கேட்க, அவ்வளவுதான்..!
அவள் கண்களில் நீர் திரண்டு நின்றது..! கண்கள் கண்ணீரை கொட்டவா வேண்டாமா என்ற
யோசனையுடன் அவளின் கட்டளைக்காக காத்திருக்க, அதைக் கண்டவன் பதறிப்போனான்..!
உடனே அவளின் மோவாயை பிடித்து நிமிர்த்தி,
“ஹே சுபி... எதுக்கு இப்ப கண் கலங்கற? ஏன் காலையில் இருந்து என்னவோ போல இருக்க? உடம்பு எதுவும் சரியில்லையா? “ என்று அவளின் கழுத்தில் கை வைத்து சுரம் எதுவும் இருக்கிறதா
என்று அவசரமாக ஆராய்ந்தான்..!
தன் கணவனின் கண்களில் தெரிந்த பதட்டமும், அவள் மீதான அக்கறையும் கண்டு இன்னுமே பெண்ணவளுக்கு நெஞ்சை
அடைத்தது..!
“சொல்லு மா? வாட் ஹேப்பன்ட்..? எனி ப்ராப்ளம்..? “ என்று மீண்டும்
விசாரிக்க,
“ப்ச்... நத்திங்...! என்னனு தெரியல.. காலையில் எழுந்ததில்
இருந்து என்னவோ போல இருக்கு நிகாப்பா..! நீங்க இன்னைக்கு ஆபிஸ் போய்த்தான் ஆகணுமா? “ என்றாள் கொஞ்சம்
பதட்டத்துடன்.
அவளின் பதட்டத்தை கண்டவனுக்கும் மனம் பதைத்தது.!
“ஹே என்ன ஆச்சு மா? இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு..
போய்த்தான் ஆகணும்...மீட்டிங் முடிச்சதும், என் மகாராணியை பார்க்க ஓடி வந்திடறேன்... ஓ.கே வா?
இப்ப இந்த குட்டி மண்டைக்குள் எதையும் போட்டு குழப்பிக்
கொண்டிருக்காத...” என்று புன்னகைத்தபடி, அவளின் தலையில் கையை வைத்து செல்லமாக ஆட்ட, அவளோ தன் தலையிலிருந்த அவன் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்திக்கொண்டவள்,
“என்னனு தெரியல தனா...ஒரு மாதிரி இருக்கு..ஏதோ நடக்க கூடாதது
நடக்க போவதைப் போல...நெஞ்சுக்குள் அடிச்சுக்கிது....” என்றாள் மீண்டும் வேதனையுடன் தன் கண்களை அழுந்த
மூடியபடி..!
அவளின் சுருங்கிய இமைகளை மெல்ல நீவி விட்டவன்,
“ஏதாவது கெட்ட கனவு கண்டியா ? “ என்று அக்கறையுடன்
கேட்க,
இல்லை என்றதாய் தன் தலையை இருபக்கமும் ஆட்டினாள்..!
“ஹ்ம்ம்ம் பின்ன என்னமா? “ என்று மீண்டும்
யோசனையுடன் விசாரிக்க
“ஹ்ம்ம்ம் அதுதான் தெரியல... எப்படி சொல்றதுன்னும் தெரியல... ஆனா என்னவோ போல இருக்கே...” என்று தன் உதட்டை பிதுக்கினாள்..!
அவளின் அந்த சிவந்த இதழ்களை தன் கட்டை விரலால் வருடியவன், அவளை சீண்ட, சிரிக்க, சிவக்க வைக்க எண்ணி,
“ஹ்ம்ம்ம்ம் ஒருவேளை நைட் நாம ஆடின ஆட்டம் பத்தலையோ..! வேணும்னா
இப்ப ஒரு மேட்ச் ஆடலாமா? அதுவும் எனக்கான
அந்த ஸ்பெஷல் .............இப்ப கிடைக்குமா? “
என்று அவள் காதில் தன் மீசை உரச கிசுகிசுக்க, அவன் எதிர்பாத்த
மாதிரியே அதுவரை வெளிறி இருந்த அவள் கன்னங்கள் இப்பொழுது செம்மையை
பூசிக்கொண்டது..!
தவிப்புடன் மிளிர்ந்த அவள் கண்கள் இப்பொழுது வெட்கத்தில்
படபடத்தது..!
நொடியில் அவளிடம் வந்த மாற்றத்தை தன்னை மறந்து ரசித்து
பார்த்தான்..!
“சீ போங்க தனா... உங்களுக்கு எப்ப பாரு அந்த நினைப்பு
மட்டும்தான்...” செல்லமாக சிணுங்கினாள்..
அவளின் விரல்களோ அவன் அணிந்திருந்த சட்டை பொத்தானை திருகி கொண்டிருந்தது..!
“ஹா ஹா ஹா பின்ன...காலங்காத்தாலயே இப்படி கட்டிகிட்டு நின்னா, மனுஷனுக்கு வேற எந்த நினைப்புடி வரும்?” என்று விஷமமாக சிரிக்க, அப்பொழுதுதான் அவள் அவனை கட்டிக்கொண்டு அவன் மார்பில் புதைந்து
இருப்பது தெரிந்தது..!
அவனின் அந்த கதகதப்பான அணைப்பும், அவனின் நெருக்கமும் அவளுக்கு தேவையாக இருந்தது..! அவள் உள்ளே
இருந்த படபடப்பு அவன் அருகில் இருந்தால் மட்டும்தான் காணாமல் போவது புரிந்தது..!
தன்னவனிடம் இருந்து விலக மனம் வராமல், இன்னுமாய் அவனை இறுக்கி கட்டிக்கொண்டவள்,
“ஐய... நானா கட்டிகிட்டேன்.. நீங்கதான் தள்ளி நின்ன என்னை
இழுத்து இப்படி ஒட்டிக்கிட்டது...” அவன்
சட்டை பட்டனில் இருந்த கை , இப்பொழுது முன்னேறி
அவனின் மீசையை இழுத்து கொண்டிருந்தது.!
தன் மனைவியின் அந்த கொஞ்சலில் அவன் கணவன் மனம் மீண்டும்
விழித்துக்கொண்டது..
அவன் உணர்வுகள் கிளர்ந்தெழ, தாபத்தோடு அவளின் எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு தன்னோடு
சேர்த்து இறுக்கி அணைத்தவன், அவளின் செவ்விதழை
சிறைபிடித்தான்..!
அப்பொழுதுதான் முதல் முறை அவளின் இதழை தழுவுபவனைப் போல அப்படி ஒரு வேகம் அவனிடத்தில்..!
சுரபிக்குமே அந்த அணைப்பு தேவையாக இருந்தது..! தன் கணவனின் அணைப்பில், தன் படபடப்பை மறந்து லேசாகி போனாள்..!
இருவரும் தங்களை மறந்து ஒருவருக்குள் ஒருவர் உருகி, கரைந்து கொண்டிருக்க, அதை கலைக்கும்
விதமாக அவனின் அலைபேசி அலறியது..!
அதில் சுயநினைவுக்கு வந்தவர்கள், பிரிய மனம் இல்லாமல் விலகினர்..!
டேபிலில் இருந்த தன் அலைபேசியை எடுக்க, விஷ்வாதான் அழைத்து இருந்தான்..!
அன்றைய அஜென்டாவை அவனுக்கு நினைவு படுத்த, அப்பொழுதுதான் அலுவலகத்து செல்ல நேரமானது புரிந்தது..!
எப்பொழுதும் நேரம் தவறாமையை கடை பிடிப்பவன்..! இன்று தன் மனையாளின்
அலப்பறையில் தன்னை மறந்து, தன் கடமை மறந்து அவளிடம்
ஒன்றிக்கொண்டது மண்டையில் உரைக்க,
“எப்படி என்னை மாற்றிவிட்டாள் இந்த ராட்சசி..... “ என்று
தனக்குள்ளே சிரித்துக் கொண்டவன், தன்னவளை சிறு வெட்கத்தோடு நோக்கியவன்,
“சரி மா...கடமை அழைக்கிறது..! இப்ப நான் அவசரமாக கிளம்பனும்..! எனக்கு
முக்கியமான மீட்டிங் இருக்கு... அது முடிஞ்சதும்
உடனே சீக்கிரம் வந்திடறேன்...!
மற்ற வேலை எல்லாம் இங்கிருந்து பார்த்துக்கிறேன்... ஓகே வா...
இப்ப கொஞ்சம் சிரியேன்..” என்று புன்னகைத்தபடி, அவள் தாடையை பிடித்து ஆட்ட, அப்பொழுதுதான் அவளின்
முகத்தில் தெளிவு வந்தது.
“ஹ்ம்ம்ம்ம் சீக்கிரம் வந்திடுங்க...” என்று அவனை ஏக்கமாக பார்த்து சொல்ல
ஏனோ அவளின் அந்த ஏக்கமான
முகம் அவன் மனதில் ஆழ பதிந்தது..!
அதே நேரம் அப்பா....... என்று அழைத்தபடி, அறைக்கதவை திறந்து கொண்டு ஓடி வந்து அவன் காலை கட்டிக்கொண்டாள்
அவன் செல்ல மகள்..!
அடுத்த கணம் குனிந்து தன் மகளை கையில் அள்ளியவன் அவள்
கன்னத்தில் முத்தமிட, அவளும் அவனுக்கு
திருப்பி கொடுத்தவள்,
“அப்பா..... சீக்கிரம் வா..... “ என்று ஏக்கமாக சொல்ல, சற்றுமுன் தன் மனைவியிடம் கண்ட அதே ஏக்க பார்வை....அப்படியே
உருகி போனான் விகர்த்தனன்..!
தனக்கென்று யாருமில்லை என்று வாழ்க்கையை வெறுத்து வளைய வந்தவனுக்கு , இன்று அவனுக்காக இரு இதயங்கள் ஏங்குவதை காண கர்வமாக இருந்தது...!
“கண்டிப்பா குட்டிமா... உனக்காகவே அப்பா சீக்கிரம் வேலையை
முடிச்சிட்டு ஓடி வந்திடறேன்...நீ சமத்தா அம்மா கூட விளையாடுவியாம்..”
என்றவாறு மீண்டும் தன் மகளுக்கு ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு
அவளை சுரபியிடம் கொடுத்தவன், டக்கென்று அவளின்
கன்னத்திலும் அழுத்தமாக முத்தம் பதித்துவிட்டு கண் சிமிட்டி சிரித்தவாறு
“பை பொண்டாட்டி.....” என்று காதோரம் கிசுகிசுத்தவன்,
“பை ப்ரின்சஸ்... “ என்று கை அசைத்துவிட்டு அறையின் வாயிலை
நோக்கி நடந்தவன், வாயிலை தாண்டும்
முன் ஒரு கணம் நின்று திரும்பி பார்க்க, அங்கே சுரபி தன் மகளை
கையில் வைத்துக் கொண்டு அவனையே ஏக்கமாகவும் தவிப்புடனும் பார்த்திருந்தாள்...!
அவளை மேலிருந்து கீழாக ஒரு முறை ரசித்து பார்த்து தன்
கண்களுக்குள் நிரப்பி கொண்டவன்,
“சுபி..........” என்று அழைத்து ஏதோ சொல்ல வந்தவன், பின் தன் தலையை இடவலமாக
ஆட்டி பின்னந்தலையை கோதிக் கொண்டவன்,
“பை டியர்ஸ்.... டேக் கேர்.... “ என்று தலையசைத்து விடைபெற, சுரபியும் கண்களில் வழியும் நீரோடு அவனுக்கு கையசைத்து விடை கொடுத்தாள்...!
சற்று நேரத்தில், அவன் கார் கிளம்பி
போகும் சத்தம் கேட்க, அதுவரை சிலையாக
அவன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தவள்...
இப்பொழுது சிலைக்கு
உயிர் வந்ததைப்போல, தன் மகளை
தூக்கியபடி, ஓடிப்போய் ஜன்னல் திரையை
திறந்து விட்டு வெளியில் பார்க்க, அவள் பார்ப்பாள் என்று தெரிந்தே காரை நிறுத்தி
இருந்தான் போல..!
அவள் அறையின் ஜன்னல் பக்கமாக பார்த்து கையசைக்க. அவளும் மீண்டுமாய் கண்களில் கலக்கத்துடன் கை
அசைத்து வைத்தாள்..!
“பை...பா.....” என்று அவள் மகளும் பால் பற்களை காட்டி சிரித்து
வைத்தாள்..!
அந்த காட்சியை தன் கண்களில் நிரப்பிக்கொண்டு, மனமே இல்லாமல் தன் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பி சென்றான்..!
*****
விகர்த்தனன் கிளம்பி சென்ற பிறகும், அவள் மனம் அமைதி
அடையாமல் பிசைந்து கொண்டே இருந்தது..!
தன் மகளுக்கு காலை உணவை ஊட்டி விட்டு, அவளும் ஏதோ பேருக்கு
சாப்பிட்டு விட்டு, தங்களை அறைக்கு
திரும்பி வந்தவள்...படுக்கையில் படுத்தவாறு ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்தாள்..!
அவள் எண்ணம் முழுவதுமே தன் கணவனை சுற்றியே இருந்தது...!
திடீரென்று விகர்த்தனன் அவளுக்கு கை அசைத்து விடைபெற்று சென்ற
தருணம் நினைவு வந்தது..!
அதோடு அறைவாயிலை அடைந்தவன், திரும்பி நின்று அவளை உச்சி முதல் பாதம் வரை ஆழ்ந்து பார்த்த
அந்த காட்சி நினைவு வந்தது...!
அதே மாதிரி ஒரு காட்சியை ஏற்கனவே அவள் கண்டு இருக்கிறாள் என்று அறிவு
எடுத்துரைக்க, அது எந்த கட்சி என்று அவசரமாக மூளையை கசக்கி
யோசித்தவளுக்கு தூக்கி வாரி போட்டது..!
அது, கடைசியாக ஷ்யாம் அவளை
பார்த்துவிட்டு சென்ற காட்சி..!
ஷ்யாம் அவளிடம் விடைபெற்று சென்ற பொழுது இதே போலத்தான் அவளை
உச்சி முதல் பாதம் வரை கண்களால் ஆரத்தழுவி நிரப்பிக்கொண்டு ஒருவித பிரிய
மனமில்லாமல் தான் அன்று கிளம்பி சென்றான்..!
அதே பார்வை தான் தன் கணவன் இன்றைய பார்வை என்று புரிந்து விட, அடுத்த கணம் அவள் உடல் தூக்கிப்போட,
“ஓ மை காட்..... தனா......”
என்று வீறிட்டு கத்தினாள்..!
அடுத்த நொடி பாய்ந்து சென்று தன் அலைபேசியை எடுத்து அவனின்
எண்ணிற்கு அழைக்க, அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
முக்கியமான க்ளைன்ட் மீட்டிங் பொழுது அவன் தன் அலைபேசியை சுவிட்ச் ஆப் பண்ணி விடுவது வழக்கம் தான்..!
ஆனால் அந்த வழக்கமான வழக்கமே
அவளுக்கு வயிற்றுக்குள் புளியைக் கரைத்தது..!
அடுத்து வேகமாக
விஷ்வாவை அழைக்க, அவன் அலைபேசியும் அணைக்கப் பட்டிருந்தது.
அவ்வளவு தான்..! பெண்ணவளின்
உடலில் பதற்றம் தொற்றிக்கொண்டது..!
மீண்டும் தன் அலைபேசியை எடுத்து விக்கிக்கு அழைக்க, அதுவோ முழுவதுமாக அடித்து
நின்று போனது..!
அட்லீஸ்ட் தன் கணவன் அலுவலகத்தில் பத்திரமாகத்தான் இருக்கிறான்
என்று தெரிந்து கொள்ள வேண்டி, விக்கியை மீண்டும் அழைக்க, இந்த முறை விக்கி போனை எடுத்து
இருந்தான்..!
“சொல்லுங்க மேடம்...” எப்படி இருக்கீங்க? சின்ன மேடம் எப்படி இருக்காங்க? “ என்று இயல்பாக நலம் விசாரிக்க, சுரபிக்கோ அவனுக்கு பதில் சொல்ல எல்லாம் நேரமில்லை..!
“விக்கி..... அவர்
அங்கு வந்து இருக்காரா? “ என்று தடாலடியாக கேட்க,
“எவர் ? “ என்று கேள்வியாக கேட்க,
“அதான் அவர்....என் புருஷன்......” என்று சொல்லும்பொழுதே அவள்
தவித்து போனாள்..!
அப்பொழுதுதான் அவள் விகர்த்தனனை பற்றி கேட்கிறாள் என்று விக்கியின்
மண்டையில் பல்ப் எரிய, அதோடு அவளின்
குரலில் இருந்த பதற்றம் ஏதோ சரியில்லை என்று புரிய, தன் விளையாட்டு தனத்தை விடுத்து அவனும் சீரியஸ் மோட்க்கு
மாறினான்..!
“இன்னைக்கு பாஸ்க்கு இங்க
வேலை இல்லையே சுரபி...! பீனியா வில் இருக்கும் மேனுபேக்ச்சரிங் யூனிட்டில்
அல்லவா வேலை என்று விஷ்வா புலம்பிக் கொண்டிருந்தான்..!
அப்ப பாஸ் அங்கதான் போயிருப்பார்..! என்னாச்சு சுரபி? எனிதிங் சீரியஸ்..? “ என்று அக்கறையுடன் விசாரிக்க, அதற்குள் தன்னை சமாளித்துக்கொண்டவள்,
“நத்திங்.... சும்மாதான்.... அவருடைய போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது... அதுதான் கொஞ்சம் டென்ஷனாகிடுச்சு...” என்று முயன்று தன்னை இயல்பாக காட்டிக்கொண்டாள். ங்கே
“டோன்ட் வொர்ரி மா....பாஸ் மீட்டிங்ல இருக்கிறப்ப போன் ஸ்விட்ச்
ஆப் பண்ணி வைக்கிறது வழக்கதானே...! விஷ்வாவும்
அவர் கூடத்தான் இருக்கான்... நீ அவனுக்கு அடிச்சு
பாரு... விஷ்வா நம்பர் இருக்குதானே...”
“ஹ்ம்ம்ம் இருக்கு விக்கி... அவருக்கு போன் அடிச்சேன்...
அவருடையது அணைக்கபட்டு இருக்கு... இன்னொருதரம் ட்ரை பண்ணி
பார்க்கிறேன்...தேங்க்ஸ்...”
என்றவாறு தன் அலைபேசியை வைத்தவள், மீண்டும் விஷ்வாவுக்கும், விகர்த்தனனுக்கும் மாறி மாறி முயற்சி செய்ய இரண்டுமே அணைக்கப் பட்டிருந்தது.
அப்பொழுதுதான் அந்த அறையில் இருந்த குட்டி சேரில் அமர்ந்து
கொண்டு, கார்ட்டுன் சேனலை பார்த்துக் கொண்டிருந்த நிகா
குட்டி, அது போர் அடிக்க, ரிமோட்டில் ஒவ்வொரு
சேனலாக மாற்றி மாற்றி அழுத்திக் கொண்டிருக்க
எதேச்சையாக லோக்கல் சேனலில் வந்து நின்றது
அதில் பீனியாவில் தீ விபத்து என்று செய்தி வாசிப்பாளர் சொல்ல, அதுவரை டிவியில் கவனம் வைத்திராதவள், பீனியா என்று கேட்டதும் விக்கி பாஸ் பீனியாவுக்கு
ப்ஓயிருக்கிறார் என்றது நினைவு வர, டக்கென்று திரும்பி
டிவியை பார்த்தாள்..!
அப்பொழுதுதான் ப்ளாஸ் நியீசில், விகர்த்தனன் குரூப் ஆஃப் கம்பெனிஸ்
மேனுஃபாக்சரிங் யூனிட் தீ விபத்துக்கு உள்ளான செய்தியை காட்டிக் கொண்டிருந்தார்கள்..!
சற்றுமுன் விக்கி சொன்ன ஆபீஸ் இதுதான் என்பது உரைக்க செய்தியை
உற்றுக் கவனித்தாள்..!
விகர்த்தனன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் எம்.டி மிஸ்டர் விகர்த்தனன் உட்பட, அந்த பேக்டரில் வேலை செய்த மற்றவர்களும் தீயில் மாட்டிக்
கொண்டிருப்பதாக செய்தி சொல்ல, அவ்வளவுதான்
தனா..... என்று மீண்டும் வீறிட்டு அலறியவள், உடனே மயங்கி சரியாமல், சுதாரித்தவள்... அவனை... தன்னவனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற வேகத்தில்
தடதடவென்று மாடி இறங்கி கீழே வந்தாள்...!
அவளின் அலறலை கேட்டு, சமையல் அறையில்
இருந்து ஓடி வந்திருந்த சாமியிடம் காரை எடுக்க சொல்லி கத்த, அவனும் அவசரமாக ஓடிப்
போய் காரை எடுத்து வர, வேகமாக அதில்
அமர்ந்தவள் அடுத்து காரை பீனியா நோக்கி விரட்ட
சொன்னாள்..!
*****
அடுத்த அரை மணி நேரத்தில் கார் , பேக்டரியை அடைந்து இருந்தது..!
கார் நிற்கும் வரைக்கும் பொறுமை இல்லாதவள்... வேகமாக கதவை
திறந்து காரை விட்டு இறங்கியவள், தடதடவென்று அங்கு
எரிந்து கொண்டிருந்த பேக்டரியை நோக்கி ஓடினாள்.
சாமி அவளை தடுக்க என்று சின்னம்மா என்று கத்திக்கொண்டே அவள்
பின்னால் ஓடிவர, அதற்குள் இடத்தை
நெருங்கி விட்டாள்..!
அங்கு தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்து கொண்டிருக்க, எரிந்து கொண்டிருந்த
கட்டிடத்தை பார்த்தவளுக்கு ஒரு நொடி உயிர் நின்று போனது..!
அதில் மாட்டிக் கொண்டு இருந்தவர்கள் உயிர் பிழைப்பது உறுதி
இல்லை என்பது உரைக்க அவ்வளவுதான்..!
எப்படியாவது தன்னவனை கண்டுகொள்ள வேண்டும்...அவனை காப்பாற்ற
வேண்டும் என்று அத்தனை கும்பலையும்
விலக்கிக் கொண்டு முன்னே ஓடியவள், எரிந்து கொண்டிருந்த கட்டிடத்திற்குள் வேகமாக நுழைய முயல, தீயணைப்பு படையினர் ஓடிவந்து
அவளை தடுத்தனர்..!
“மேடம்....கிட்ட வராதீங்க... கொஞ்சம் தள்ளி நில்லுங்க...” என்று அவளை தடுக்க
“இல்லை... என் புருஷன்...
என் தனா... நிகா அப்பா.... உள்ளே... அவரை நான் பார்த்தே ஆக வேண்டும்... அவரை காப்பாத்துங்க... அவரை எப்படியாவது காப்பாத்துங்க...என் தனாவை
எப்படியாவது காப்பாத்துங்க..” என்று
இருகரம் கூப்பி, அந்த தீயணைப்பு வீரரிடம் இறைஞ்சினாள்...!
“கண்டிப்பா மேடம்.... அதுக்குத் தான் நாங்க இருக்கோம்...
கண்டிப்பா காப்பாத்திடலாம்... நீங்க ஓரமா
நில்லுங்க... எல்லாரையும் காப்பாத்திடலாம்..” என்று சமாதானம் சொல்லிவிட்டு தன் வேலையை தொடர,
“இல்லை... நான் இப்பவே அவரை பார்க்கணும்... நான் உள்ள
போகணும்... என்னை விடுங்க...”
என்று அவள் அடம் பிடித்துக் கொண்டிருந்தவள், திடீரென்று தீக்குள்
பாய முயல, ஒரு வலிய கரம் ஒன்று அவளின் இடையோடு பற்றி
தடுத்து நிறுத்தியது...!
“ஏய் சுபி... நீ எங்க இங்கே? “ என்ற ஆச்சர்ய
மற்றும் அதட்டலான குரலை கேட்டதும் விலுக்கென்று திரும்பி பார்க்க, அங்கே முகத்தில் சிறு
ஆச்சர்யத்தோடு நின்றிருந்தான் அவள் கணவன்..!
தன் கண்ணை நம்பாதவளாய், தன் கண்களை சிமிட்டி, மீண்டும் உற்று
பார்க்க, அவனேதான்..!
தன்னவனேதான்...!
அவசரமாக அவனை மேலிருந்து கீழாக ஆராய்ச்சியோடு பார்க்க, அவள் காலையில் ஆசையாக அணிவித்து இருந்த ஷர்ட் ஐ முழங்கைக்கு மேல் வரை சுருட்டி
விட்டிருக்க, மற்ற பகுதிகள் ஆங்காங்கே
கிழிந்து இருக்க, முகத்திலும் உடலிலும்
ஆங்காங்கே தீக்காயங்கள்..!
தீ விபத்தில் மாட்டிக்கொண்டவர்களை வெளிக்கொண்டு வர, அவனுமே களத்தில் இறங்கி
இருக்க, அதனால் தீக்கங்குகள் பட்டதில் அவன் உடலில் லேசான
தீக்காயங்கள்..!
எப்படியோ...தன் கணவன் முழுதாக, பத்திரமாக இருக்கிறான்
என்று உறுதி செய்து கொண்டவள், அடுத்த கணம்
“தனா.....” என்று
சந்தோஷ கூச்சலிட்டு, தன்னவனை இறுக்கி கட்டிக் கொண்டவள்...
அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த உறுதி, திடம், தைர்யம் எல்லாம் இப்பொழுது அவளிடமிருந்து விடைபெற்று விட,அப்படியே தொய்ந்து மயங்கி அவன் மார்பில் சரிந்தாள் அவன் மனையாள்..!
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
ReplyDelete