அத்தியாயம்-32
அங்கு நின்றபடி, யாரோ கொடுத்த சின்ட்ரெல்லா பொம்மையை ஆசையாக வருடியபடி, அவர்களின் பேச்சை
சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்த நிகா குட்டியின் முன்னால் இரண்டு காலையும்
மடக்கி மண்டியிட்டு அவள் உயரத்துக்கு
அமர்ந்தான் விக்கி..!
“நிகா குட்டி... இந்த மாமாவை உனக்கு ரொம்ப புடிக்கும்
தானே..! உன் அப்பாகிட்ட சொல்லி, இந்த மாமாவை வேலையை
விட்டு தூக்க வேண்டாம்னு சொல்லுடா செல்லம்...
நீ சொன்னா , உன் அப்பா
கண்டிப்பா கேட்பார். சொல்லுடா செல்லம்..” என்று பவ்யமாக கேட்க, அவனின் பாவமான முகத்தை கண்டு அந்த
குட்டிக்கு சிரிப்பு பொங்கி வந்தது.
உடனே தன் மார்புக்கு குறுக்காக கையை கட்டிக்கொண்டு,
“ஹ்ம்ம்ம் நீங்க என்ன தப்பு பண்ணினிங்க?” என்றாள் மிடுக்காக...
“தப்பா ? தப்பெல்லாம் பண்ணவே இல்ல டா... என்ன மீட்டிங்க்கு ஒரு அஞ்சு
நிமிஷம் லேட்டா வந்துட்டேன்..! இது ஒரு
பெரிய குத்தமா?
இதுக்கு போய் உங்க அப்பா என் சீட்டை கிழிக்கிறாரே..! கொஞ்சம்
எடுத்து சொல்லுடா செல்லம்..!” என்று பவ்யமாக
சொல்ல
“ஹ்ம்ம்ம் ஃபைவ் மினிட்ஸ் லேட்டா? அப்பா எல்லாத்துலயும் பஞ்சுவலா
இருக்கணும்னு எதிர்பார்ப்பார்..!
அவர்கிட்ட வேலை செய்றீங்க..! நீங்களும் அப்படித்தான இருக்கணும்? “ என்று அவனைப்போலவே அதட்டலாக, அமர்த்தலாக சொல்ல, அதைக்கேட்டு வாயடைத்துப் போய் நின்றிருந்தான் விகர்த்தனன்.
இந்தச் சின்ன வயதிலயே எவ்வளவு அறிவு பூர்வமாக பேசுகிறாளே என்று தன் மகளை எண்ணி பெருமையாக இருந்தது..!
மற்றவர்களுக்கும் அதே எண்ணம்தான்..! எல்லாரும் அந்த குட்டியையே
ஆச்சர்யத்தோடு பார்த்து இருந்தனர்.
விக்கியும்
“ஷ் அப்பா... அப்படியே குட்டி பாஸ் மாதிரியே இருக்கே இந்த
சின்னகுட்டி...” என்று உள்ளுக்குள்
சிரித்துக்கொண்டவன், ஆனாலும் தன் முகத்தை
பாவமாக வைத்துக் கொண்டு,
“தப்புதான் சின்ன மேடம்... இனிமேல் அந்த தப்பு செய்யாமல் பார்த்துக்கிறேன்...
கொஞ்சம் கருணை காட்டுங்க...” என்று ஒற்றை விரலை நீட்டி அதட்டியவாறு சொல்ல, தன் மகளையே இமைக்க மறந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்
விகர்த்தனன்..!
பின் அந்த குட்டியும் தன் தந்தையின் கையை பிடித்து இழுக்க, அவனும் அவளின்
உயரத்திற்கு குனிந்தவன்,
“சொல்லுடா பிரின்சஸ்...” என்று குழைவுடன் பவ்யமாக கேட்க, அதைப் பார்த்த மற்றவர்களுக்கு இன்னுமாய் ஆச்சரியம்..!
அதுவரை அதிகாரமாக அமர்த்தலாக விக்கியிடம் பேசிக் கொண்டிருந்தவன்...
தன் மகளிடம் எவ்வளவு கனிவுடனும், குழைவுடனும்
பேசுகிறார் என்று ஆச்சரியமாக இருந்தது..!
“ஹ்ம்ம்ம் இந்த நாட்டுக்கே ராஜாவானாலும், தன் மகளிடம் அடிபணிந்து
தான் போக வேண்டும் என்று சொல்வார்களே..!
அந்த பொன்மொழி, இந்த மல்டி
மில்லினர்...தி க்ரேட் பிசினஸ் மேன்... விகர்த்தனனுக்கும்
பொருந்தும் என்று அந்த நொடி புரிந்துகொண்டனர்.
“ப்பா... ஒருத்தவங்க அவங்க தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால், மன்னிச்சுடனும்னு நீங்கதானே கதை சொன்னீங்க..!
இப்போ இந்த மாமா... இனிமேல்
மீட்டிங் லேட்டா வர மாட்டேன் னு சொல்லி... பாவம் மன்னிச்சு... விட்டுடலாம்...” என்று கொஞ்சலாக
சொல்ல
“அப்படிங்கிற? அப்ப விட்டுடலாமா? இனிமேல் கரெக்ட்டா டைம் மேனேஜ்மென்ட் கீப் அப் பண்ணுவானா?” என்று சிரிப்பை
அடக்கிக்கொண்டு கேட்க, விக்கி
முந்திக்கொண்டு,
“எஸ் பாஸ்....கண்டிப்பா..” என்று பவ்யமாக சொல்ல,
“ஹ்ம்ம்ம் ஓகே..! ஐ வில் கிவ் ஒன் மன்த் அப்சர்வேசன் பீரியட்..! ஒரு நாள் சரியா வரலைனாலும், உன் சீட்டு கிழிந்து
விடும்...என் பொண்ணோட ரெகமென்டேசனால தான்
இந்த ஆஃபர்...” என்று அதட்டியபடி புன்முறுவலிக்க,
அதில் பெருமிதம் கொண்டவள் தன் தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டு
“லவ் யூ பா...” என்று அவனின்
பளிங்கு கண்ணத்தில் பசக் என்று முத்தமிட்டாள்..!
அவ்வளவுதான்...! இந்த உலகமே மறந்து போனான் விகர்த்தனன்..!
அவளின் அந்த செல்ல முத்தத்தில் அப்படியே மெய் சிலிர்த்து போனான்..!
அதுவரை அவன் அனுபவித்திராத ஒரு பரவசம் அது..! தன் சந்தோஷம்...
மன நிம்மதி... மன நிறைவு எல்லாம் அந்த தேவதையிடம்தான் ..அவளின் அந்த எச்சில்
முத்தத்தில் அவனுக்கு கிடைத்து விட்டது..!
தன் மகளை அப்படியே வாரி
எடுத்து அள்ளி அணைத்துக் கொள்ள, சுரபிக்கோ, அவன் முகத்தில் வந்திருந்த பரவசத்தையும், தன் மகளின் முகத்தில் ஒளிர்ந்து மிளிர்வையும் கண்டு, ஆனந்தத்தில் கண்ணோரம் கரித்துக்
கொண்டு வந்தது.
“என் புருஷன்...! என் மகள்..! என் குடும்பம்..! “ என்று பெருமையாக புன்னகைத்துக் கொண்டாள்..!
******
விழா சிறப்பாக முடிந்து இருக்க, மனம் எல்லாம் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினர் மூவரும்..!
அவர்கள் மூவரையும் வாயிலிலேயே நிற்க வைத்து ஆரத்தி எடுத்தாள் பூங்கோதை..!
“இன்னைக்கு எல்லார் கண்ணும் உங்க மூணு பேருமேலதான் இருந்தது..!
அதுவும் சின்னய்யாவ இப்படி குடும்பமா பார்க்க எவ்வளவு சந்தோசமா
இருக்கு...! எப்பவும் இப்படியே
நீங்க மூனுபேரும் சந்தோஷமா சிரிச்சுகிட்டே இருக்கோணும்...” என்று பூங்கோதை தழுதழுத்தவாறு ஆரத்தியை
சுற்றினாள்..!
“ஆமாம் சின்னய்யா....உங்கள இப்படி பாக்க, இப்பதான் மனசு
நிறைஞ்சு இருக்கு...” என்று சாமியும்
கண்கலங்கினார்..!
ஆரத்தி எடுத்த தட்டில் ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து போட்டவன், அருகில் நின்றிருந்த சாமியை தோளோடு சேர்த்து மெல்ல அணைத்து
விடுவித்தான்..!
அவன் இதழ்களிலும் அப்படி ஒரு நிறைவான புன்னகை...!
தன் சின்னய்யாவின் அந்த அணைப்பே சாமிக்கு லட்ச ரூபாய் லாட்டரி சீட் விழுந்ததை போல உள்ளம்
பூரிக்க, முகம் எல்லாம்
தவுசன்ட் வாட்ஸ் பல்ப் ஒளிர்ந்தது.!
விகர்த்தனன் மனதிலுமே அப்படி ஒரு நிறைவு..!
தனிமனிதனாக இருந்தவன்..! இன்று தன் மனைவி...மகள்... என்று ஒரு தோப்பாக, குடும்பமாக நின்றதில்
அவனுக்கு அத்தனை அத்தனை ஆனந்தம்..!
இந்த நிறைவு ஸ்வாதியை கரம் பிடித்த பொழுது இல்லை..!
அவர்களின் திருமணமே ஏதோ ஒரு பிசினெஸ் டீல்...புது ப்ராஜெக்ட்
அப்படித்தான் தோன்றியது அவனுக்கு..! அந்த ப்ராஜெக்ட்டை எக்ஸ்க்யூட் பண்ணுவதை
போலத்தான் அவளுடன் வாழ்ந்த நாட்களும்...!
கடமைக்காக.... கணவன் என்ற கடமைக்காக...அவளை அவ்வபொழுது அணைத்து, கூடி கலந்ததும்... அவன் மனைவியாய் இருவரும் ஒரு ரெடிமேட்
புன்னகையுடன் பார்ட்டிகளிலும், தொழில் முறை
விழாக்களிலும் உலா வந்தனர்..!
அப்பொழுதெல்லாம் அவன் உள்ளே இனம் புரியாத ஒரு
வெறுமை....மனநிறைவின்மை இருக்கத்தான் செய்தது..!
ஆனால் இப்பொழுது...?
ஏன் அப்படி தோன்றவில்லை..! மனதில் எப்படி இப்படி ஒரு
நிறைவு..நிம்மதி....சந்தோஷம் வந்து சேர்ந்தது?
“அவனின் ஒவ்வொரு நொடியுமே அர்த்தம் உள்ளதாக, ஆனந்தமாக கழிகிறதே.. ஏன்..? “ விடை தெரியாத அந்த
கேள்வி ஒன்று மட்டும் அவன் மனதில் இன்னுமே உறுத்திக் கொண்டேதான் இருந்தது..!
விடை தெரியாத கேள்வி அது..! ஆனால் அந்த கேள்விக்கான விடை அவனின் ஆழ்மனதில்
ரகசியமாக புதைந்து கிடப்பதை அறிவானா அந்த அழுத்தக்காரன்..!
*****
தங்கள் அறைக்கு வந்த சுரபி, தன் மகளின் ஆடையையும், அவளின் அலங்காரத்தையும் களைந்து விட்டு, வேறு ஒரு இலகுவான ஆடையை
மாற்றி விட்டாள்..!
“மா... பர்த்டே பார்ட்டி பத்தி பூங்கோதை அத்தையிடமும், சாமி தாத்தாவிடமும் சொல்லனும்.. பை...” என்று சொல்லிவிட்டு குதித்தபடி வெளியே ஓடி விட்டாள்.!
அவளுக்கோ எப்பொழுதும் மூனு நாலு பேர் மட்டும் சுத்தி நின்று
சிம்பிளாக கேக் வெட்டிய தன் முந்தைய பிறந்த நாளை போல இல்லாமல், தன் அப்பா அவ்வளவு பெரிய ஹோட்டலில்,
அவளை சின்ட்ரெல்லா போல அலங்கரித்து, அவ்வளவு பெரிய கேக் வெட்டி, நிறைய பேர் வந்து நிறைய கிப்ட்ஸ் கொடுத்து கொண்டாடியதை இன்னுமே
நம்பமுடியவில்லை..!
தன் சந்தோஷத்தை எல்லாம் அத்தை என்று உரிமையாக பழகும்
பூங்கோதையிடம் சொல்ல ஓடி சென்றாள் அந்த குட்டி..!
தன் மகள் சென்றதும், அங்கிருந்த ட்ரெஸ்ஸிங்
டேபிள் முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, தன்னுடைய அலங்காரத்தை கழைத்துக்
கொண்டிருந்தாள் சுரபி..!
அவளின் மனமோ தன் மகளை சுற்றியும், தன் கணவனை சுற்றியுமே
இருந்தது..!
அவள் மகளின் முதல் இரண்டு பிறந்த நாட்கள் இந்தளவு விமரிசையாக
இல்லை..!
அதுவும் முதல் பிறந்தநாள், யாரையும் அழைக்காமல் அவள் மட்டுமே தன் மகளுக்கு கேக் வெட்டி கொண்டாடி இருந்தாள்...!
இரண்டாவது பிறந்த நாள், தன் மாமியர் வீட்டை
மட்டுமே அழைத்து சிம்பிளாக கேக் வெட்டி கொண்டாடி இருந்தாள்.
ஆனால் இந்த பிறந்தநாள்..?
தன் மகளின் முகத்தில் பூத்திருந்த சந்தோஷமும், பெருமையும் கண்டு சுரபிக்கு மகிழ்ச்சியாக இருந்தது..!
“அதோடு இதையெல்லாம் தன் மகளுக்கு கொடுக்காமல் தொலைத்து விட இருந்தேனே...சரியான நேரத்தில் தனா
மட்டும் தன் வாழ்வில் வராமல் இருந்திருந்தால்..? தன் மகளுடன் பழகாமல் இருந்திருந்தால்..?
அவன் தான் அவளின் தந்தை என்று கண்டு கொள்ளாமல்
இருந்திருந்தால்..? அவன் தான் தந்தை
என்று அறிந்து கொண்ட உடனேயே தன் மகளை விட்டு கொடுக்காததும், அதோடு அவளையும் சேர்த்து மனைவியாய் அழைத்து கொண்டு வந்து
விட்டானே..!
அவன் தன் வாழ்வில் வராமல் இருந்திருந்தால், தன் மகளுக்கு இப்படி ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்காமல்
போயிருக்குமே..! அதை தராமல் தடுத்த பாவியாகி இருப்பேனே..! “ என்ற குற்ற உணர்வே மேலெழுந்து நின்றது..!
அதோடு தன்னால் தனாவுக்குத்தான் எத்தனை கஷ்டம்..!
எத்தனை பேர் நிகாவை பற்றி கேட்டு விட்டார்கள்? எத்தனை பேர் அவனை கிண்டலும், கேலியும், நக்கலும் செய்து
வைத்தார்கள்..!
இதுவரை தன் பிசினஸ் வட்டாரத்தில் எந்த ஒரு கருப்பு ப்உள்ளியும்
இல்லாமல், நெஞ்ச நிமிர்த்தி
ராஜாவாக உலா வந்தவனை... அவன் சொந்த வாழ்வில் சிறு குறையாய்...கருப்பு புள்ளியாய்
அவன் மகள் பற்றிய கேள்வி வர, தான் காரணம்
ஆகிவிட்டோமே என்று மனம் பதைத்தது...!
அதோடு எதுவும் யோசிக்காமல் அவள் எடுத்த முடிவில், அவளுடைய சுயநலம் மட்டுமே முழுக்க முழுக்க இருந்தது அப்பொழுதுதான் புரிந்தது..!
அதை உணர்ந்ததும் அவள் மனம் வேதனையில் தவித்தது..!
அவளையும் மறந்து அவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றது..!
Super
ReplyDeleteThanks pa!
Delete