அத்தியாயம்-34
சுரபி தனியாக வசிப்பதை கண்டு கொண்ட சில குடிமகன்கள்...
அவளை நோட்டமிடுவதும், விடைத்து பார்ப்பதும்… தெருவில் அவள் நடக்கும்
பொழுது, நெருங்கி
வந்து பேசுவதுமாக அவளுக்கு சங்கடத்தை கொடுத்தனர்...!
அதனாலயே, அவள் இருந்த
தெருவில் எல்லாரும் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தனர்..!
எல்லாத்துக்கும் மேலாக, அவள் தனியாக இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டு இரவில் ஒருவன்
குடித்துவிட்டு வந்து அவள் வீட்டு கதவை தட்ட, ஏற்கனவே சிலபல பாதுகாப்பு வசதிகள் எல்லாம் செய்து வைத்திருந்த
போதிலும் அன்று ரொம்பவுமே பயந்து போனாள்..!
மற்றொரு நாள் இரவு அலுவலகத்தில் இருந்து கொஞ்சம் தாமதமாக வீடு
திரும்பியவளை வழிமறித்து, ஒருவன் அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயல, சுரபி விதிர்விதிர்த்து
போனாள்..!
எல்லாத்துக்கும் காரணம் என்ன என்று யோசித்தபொழுதுதான் அவளுக்கு
விடை கிடைத்தது..!
தனிமை..!
ஆம்..என்னதான் டிஜிட்டல் இந்தியா..! மாடர்ன் ஜெனரேசன்...என்று
மார் தட்டிக்கொண்டாலும் ஒரு வயது பெண் தனியாக இருக்கிறாள் என்றால், அவளுக்கான பாதுகாப்பு இங்கே குறைவுதான்..!
அதை அனுபவித்து தெரிந்து கொண்டவளுக்கு இந்த நிலையை தாண்டி
வரவேண்டும்..! தன் தனிமையையும் விரட்ட வேண்டும்..! என்று யோசித்தவளுக்கு அப்பொழுதுதான் ஒரு வழி
கிடைத்தது..!
தனக்கென்று ஒரு எதிர்காலம் வேண்டும்.! தன் தனிமையை போக்க ஒரு துணை வேண்டும்..! என்று யோசித்தவள், அந்த துணை கண்டிப்பாக ஒரு
ஆணாக, துணைவனாக
இருக்க முடியாது என்றும் உறுதி செய்து கொண்டாள்.
ஏனோ ஷ்யாமை...அவன் காதலை...அவன் துடிக்க துடிக்க இறந்ததை பார்த்தவளுக்கு
மீண்டும் வேறு ஒருவனை கணவனாக எண்ணிப் பார்க்க முடியவில்லை.
அவள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறாள் என்று தெரிந்து
கொண்டு, எத்தனையோ பேர் அவளை மணந்து கொள்வதாக சொல்லி அணுகினார்கள்..!
சுந்தரி கூட ஒரு சில வரன்களை கொண்டு வந்தார்..!
ஆனால் ஏனோ சுரபிக்கு யாரையும் பிடிக்கவில்லை ..!
கூடவே ஆழ்மனதில் அவள் அறியாமல் சிறு பயம்..!
தன்னை மணக்க முன் வருகிறவனுக்கு ஷ்யாமைப் போல, அவர்களுக்கும் ஏதாவது
ஆகிவிட்டால் என்று அவளையும் அறியாமல் ஒரு சிறு பயம்..!
அதனாலேயே தனக்கு திருமணம் என்பதை மறுத்துவிட்டாள்.
ஆனால் இப்பொழுது தனிமை ரொம்பவுமே வாட்ட, அதை தடுக்க என்ன வழி
என்று யோசித்தாள்..!
அப்பொழுதுதான் அவள் அன்னை சகுந்தலையின் நினைவு வந்தது..!
தன் தாயும் இதே நிலையை கடந்து வந்தவள் தானே..!
சிறு வயதிலயே கணவனை இழந்துவிட்டதால் அவருக்கும் இதே மாதிரி
தொல்லைகள்...சிக்கல்கள் வந்துதானே இருக்கும்..!
அதைவிட தன் அன்னைக்கும்
தனிமை வாட்டி இருக்குமே..! அவர் எப்படி
அவளுடைய தனிமையை போக்கினாள்? “ என்று யோசித்தவளுக்கு விடை அவள் என்று
கிடைத்தது..!
ஆம்...! அவள் அன்னை தன்
மகளைத்தான் பற்றுகோலாக பற்றிக் கொண்டு இந்த வாழ்க்கை பயணத்தை கடந்தாள்.
“நானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது ? என் வாழ்க்கையிலும் ஒரு
குழந்தை வேண்டும்..! என் அம்மா எனக்காக வாழ்ந்த மாதிரி, நான் அந்த குழந்தைக்காகவே வாழ வேண்டும்
கண்டிப்பாக வறண்டு போயிருக்கும் என் வாழ்க்கையிலும் வெளிச்சத்தை
கொண்டுவர , ஒரு குழந்தை வேண்டும் என்று எண்ணியவளுக்கு முகம் பிரகாசித்தது
ஆனால் திருமணம் ஆகாமல் குழந்தையை எப்படி பெற்றுக்கொள்வது என்று அடுத்து
யோசித்தவள், பேசாமல் ஒரு
குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாள்..
இப்பொழுது தான் பெற்றோர்களால் கைவிடப்பட்ட எத்தனையோ குழந்தைகள்...
அனாதைகளாக ஆசிரமங்களில் வளர்கிறார்களே..!
அவர்களில் ஒருவரை தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு
செய்தாள்.
அந்த வார இறுதி விடுமுறையில் கிளம்பி அனாதை ஆசிரமத்திற்கு, சென்று அங்கிருக்கும்
குழந்தைகளையும் பார்வையிட்டாள்.
எல்லோரும் கொஞ்சம் வளர்ந்தவர்களாக இருந்தனர்.!
தாய்... தந்தையின் பாசத்திற்கு ஏங்குபவர்களாகத் தான்
இருந்தார்கள்..!
ஏனோ அவர்களை பார்த்த பொழுது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
என்று தான் தோன்றியதே தவிர, அவர்களில் ஒருவருக்கு, தான் அன்னையாக வேண்டும்
என்று மனதில் பதியவில்லை.
அதனால் ஒரு தொகையை நன்கொடையாக கொடுத்துவிட்டு வந்துவிட்டாள்
வேறு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் இணையத்தில்
வந்த ஒரு செய்தி, அவள் கவனத்தை ஈர்த்தது.
*****
எழுபது வயது மதிக்கத்தக்க, குஜராத் ஐ சேர்ந்த மூதாட்டி ஒருவர்...
செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சையின் மூலமாக தனக்கே தனக்கான ஒரு
குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார் என்ற செய்தி அவளை ஈர்த்தது..!
எழுவது வயதை கடந்து இருந்த அந்த வயதான தம்பதியர்கள்..! நீண்ட
வருடங்களாக தங்களுக்கு குழந்தை இல்லை என்று வருந்தி இருக்கின்றனர்..! தங்கள்
வருத்தத்தை போக்க என்று ஒரு சிறுவனை
தத்தெடுத்து வளர்த்தார்கள்..!
அவனும் வளர்ந்ததும் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றவன்...
அதன்பின் திரும்பி வரவில்லை..! தன்னை வளர்த்தவர்களையும் கண்டு கொள்ளவில்லை..!
அதனால் மனம் வருந்திய அந்த தம்பதியர் தங்களுக்கு என்று தங்கள்
ரத்தத்தில் ஜனித்த ஒரு குழந்தை வேண்டும்
என்று செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சை மூலமாக ஒரு குழந்தையை பெற்றெடுத்த
செய்தியைப் பார்த்ததும் சுரபிக்கு மூளையில் மின்னல் வெட்டியது,,!
“என் எதிர்காலத்துக்கு, எனக்கு ஒரு துணை வேண்டும்..! கணவன் என்ற ஒருவன் இல்லாமல், என்னுடைய ரத்தத்தில்
உருவான ஒரு குழந்தை வேண்டும்..” என்ற
எண்ணம் அவள் மனதில் உதித்தது..!
“நானும் அதைப்போல ஏன் முயற்சிக்கக்கூடாது...? ஏதோ ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கு பதிலாக, என் ரத்தத்தில்...என்
கருவில் ஜனித்த என் குழந்தையாக ஏன்
இருக்கக்கூடாது
நானும் தாய்மையின் மகத்துவத்தை அறிய வேண்டும்..! ஒரு குழந்தையை சுமந்து பெற்றெடுப்பது எவ்வளவு
சுகமான சுமை என்று நானும் உணர வேண்டும்..!
எஸ்... எனக்கே எனக்கான... என் கருவில் ஜனித்த குழந்தை வேண்டும்..! என் குழந்தை வேண்டும்...” என்று அவள் மனதில் உறுதி செய்து கொண்டவள், அதற்கான வழிமுறைகளை
ஆராய ஆரம்பித்தாள்..!
அவள் கேள்விபட்ட, செயற்கை முறை
கருத்தரிப்பு சிகிச்சை முறையைப் பற்றி இணையத்தில் ஆராய்ந்தாள்...
அப்பொழுதுதான் இப்பொழுதெல்லாம் இந்த முறை சர்வ சாதாரணமாகி
விட்டது என்பது புரிந்தது..!
ஒரு குழந்தை உருவாக, ஆணும் பெண்ணும் தேவை...
பொதுவாக கணவனும், மனைவியும் ஒருவர்
மீது ஒருவர் காதல் கொண்டு, காதல் மிக, கலவி கொண்டு, இனிய
தாம்பத்தியத்தில் இணைந்து தங்கள் சந்ததியை உருவாக்குவர்..!
இப்பொழுது அதற்கு கூட அவசியமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது..!
எல்லாத்துக்கும் அவசரப்படும் இந்த அவசர உலகத்தில் ஒரு குழந்தையை
உருவாக்க,
ஒரு பெண்ணின் கரு முட்டையும், ஆணின் விந்தணுவும் இருந்தால் போதும்..! குழந்தையை உருவாக்கிவிடலாம் என்பதை கண்டு
ஆச்சரியப்பட்டு போனாள் சுரபி..!
இந்த மாதிரியான செயற்கை முறையிலான கருத்தரிப்பு முறையை...
முதலில் விலங்கினங்கள் இடம்தான் செயல்படுத்தினர்..!
அதுவும் கிராமங்களில் மாடு, எருமை
வளர்ப்பவர்களுக்கு, இந்த செயற்கை முறை கருத்தரித்தல் ஒரு வரப்பிரசாதமானது..!
முன்பெல்லாம் மாட்டை கருத்தரிக்க வைக்க வேண்டும் என்றால், காளை இருக்கும் இடத்தை தேடி, மாட்டை இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும்..!
அதற்கான இடத்தில் கட்டி வைத்து, அதை கஷ்டப்பட்டு அடக்கி, காளையை அதன் மீது ஏறவிட்டு, கருத்தரிக்க வைக்க
வேண்டும்
அதுவும் முதல் முறை சரியாகவில்லை என்றால், இரண்டு முறை, மூன்று முறை இழுத்துக் கொண்டு
செல்ல வேண்டும்..!
அந்த கஷ்டத்தை தீர்க்கத்தான், காளையின் விந்தணுவை, ஒரு ஊசியின் மூலமாகவே மாட்டின்
கருப்பையில் செலுத்தி விடும் முறை வந்தது.!
எத்தனையோ பேர் அப்பாடா என்று இருந்த இடத்திலேயே வேலையை
முடித்துக் கொண்டனர்.
அதே முறையை இப்பொழுது மனிதர்களிடமும் பின்பற்றுவது
வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருந்தது..!
******.
ஒரு வாரமாக, இணையத்தில் உள்ள எல்லா இணையதளங்களிலும் இந்த
முறையைப் பற்றி அலசி ஆராய்ந்து, அதில் இருக்கும் சாதக பாதகங்களை பட்டியலிட்டு
அலசி ஆராய்ந்தாள் சுரபி..!
செயற்கை முறை கருத்தரிப்பில் இரண்டு முறைகள் உண்டு..!
ஒன்று IUI (Intrauterine
Insemination) சிகிச்சை முறை:
பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முப்பது நாட்களுக்கு ஒரு
முறை வரும்பொழுது அவர்களுக்கு பதினான்காம் நாளில் கருமுட்டை
வெடித்து வளரும்.
அப்பொழுது தாம்பத்தியத்தில் ஈடுபடும் பொழுது ஆணின் விந்தணுக்கள் வேகமாக நீந்தி, பெண்ணின் கருமுட்டையுடன்
இணைந்து, கருவாக மாறி, இயல்பாக
கருக்குழாயிலிருந்து கருப்பைக்குள் சென்று கரு வளரும்..!
IUI சிகிச்சை என்பது, மாத்திரைகள் மூலம் பெண்ணின் கருமுட்டையை வெடிக்க வைத்து, ஆண்களின் விந்தணுக்களில் தரமானதை மட்டும் எடுத்து அதை ப்ராசஸ்
செய்து, ஊசி மூலம் நேரடியாக பெண்களின் கருப்பைக்குள் செலுத்துவார்கள்..!
ஒரு முறையோடு நிறுத்தாமல், பல மாதங்கள் இதை முயற்சி செய்து வெற்றி பெற வைப்பார்கள்..!
அப்படியும் ஒரு பெண் கருத்தரிக்கவில்லை என்றால் அடுத்த முறையான IVF முறையை பின்பற்றுவர்..!
இரண்டாவது IVF
– In Vitro Fertilization- இந்த சிகிச்சை முறையில், மாத்திரைகள் மூலம் பெண்ணின் கருமுட்டையை வெடிக்க வைத்து, ஊசிக்குழல் மூலம் கருமுட்டையை வெளியே எடுப்பார்கள்.
இதே போன்று ஆண்களின் விந்தணுக்களையும் வெளியே எடுப்பார்கள். ஆணின்
விந்தணுக்கள் கோடிக்கணக்கில் ஐ.வி.எஃப் டிஷ்ஷில் வைக்கப்பட்டிருக்கும்.
ஊசிக்குழலில் எடுத்த கருமுட்டையை இந்த விந்தணுக்களுடன்
கலப்பார்கள். பதினெட்டு மணி நேரங்கள் வரை வைத்து, இரண்டும் கலந்து
கருத்தரிப்பு நடந்திருக்கும்.
அதன் பிறகு எழுபத்தி இரண்டு மணி நேரத்தில் அந்த கரு எட்டு செல் நிலைக்கு வந்த
பிறகு மீண்டும் ஊசிக்குழல் மூலம் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்துவார்கள்..!
இதுதான் ஐ.வி.எஃப் (IVF)
சிகிச்சை முறை
என்பதாகும்.
இயல்பாகவே தாம்பத்தியத்தில் ஈடுபடும்பொழுது, பெண்ணின் உடலில் நடைபெறக்கூடியதை, செயற்கையாக, வெளியில் நடைபெற செய்து, பிறகு கருப்பைக்குள்
செலுத்தப் படுவதால் இது ஐ.வி.எஃப் என்று அழைக்கப் படுகிறது.
இந்த முறையில் உருவாகும் குழந்தையைத்தான் டெஸ்ட் ட்யூப் பேபி
என்று அழைப்பார்கள்..!
இந்த முறையில் ஒரு தம்பதியர்களின் பெண்ணின் கருமுட்டையோ அல்லது ஆணின் விந்தணுக்களோ தரமில்லாததாக
இருந்துவிட்டால், இரண்டு முறையும்
பலன் அளிக்காது..!
அதையும் நிவர்த்தி செய்ய, பெண்ணின் கருமுட்டையோ அல்லது ஆணின் விந்தணுக்களையோ மற்றவர்களிடமிருந்து
தானமாக பெற்றுக்கொள்ளலாம்..!
இரத்ததானம் போல இப்பொழுது கருமுட்டை தானம், விந்தணுக்களின் தானம் கூட மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது..!
*இணையத்தில் படித்தது...
******
விந்தணுக்களை கூட தானமாக பெற்றுக் கொள்ளலாம் என்ற கட்டுரையை, அதற்கான விளக்கத்தை படித்து பார்த்தாள் சுரபி.
அப்பொழுதுதான் அவளுக்கு இந்த செயற்கை முறை கருத்தரிப்பு
சிகிச்சை முறை மீது இன்னுமாய் ஆர்வம் வந்தது..!
கூடவே சென்னையில் புகழ்பெற்ற ஐ.வி.எஃப் சென்டருக்கு சென்று, தன்னுடைய சந்தேகங்களை
கேட்டு தெளிவு படுத்திக் கொண்டாள்..!
அவர்களின் ஆலோசனைப்படி, முதலில் தன் உடலை பரிசோதித்துக் கொண்டாள்.
ஒரு கருவை சுமக்க, ஏதுவானதாக இருக்க, சில பல டெஸ்ட்களை எடுத்து உறுதி செய்துகொண்டாள்.
அவள் செய்த தவறு... தனக்கு ஒரு எதிர்காலம் வேண்டும் என்றுதான் யோசித்தாள்.
கணவன் இல்லாமல் தனியாக வாழ்ந்து விடலாம்..என்று உறுதியாக நம்பினாள்..!
ஆனால் இப்படி தகப்பன் இல்லாமல், தாயினால் மட்டும்
உருவாக்கப்பட்ட குழந்தை... அந்த குழந்தை தந்தை இல்லாமல் வளர்ப்பது, வளர்வது எவ்வளவு
கஷ்டம் என்பதை பட்டு தெரிந்து கொண்டாள்..!
*****
எப்படியோ ஒரு
குருட்டு தைர்யத்தில், அசட்டு துணிச்சலில், குழந்தை மீதான ஆர்வத்தில், அந்த ஐ.வி.எப் சென்டரில் கேட்ட பெரும் தொகையை கட்டி, அதற்கான புரசிஜரை ஸ்டார்ட் பண்ணி விட்டாள் சுரபி..!
அவள் இன்னும் வெர்ஜின்...திருமணம் ஆகாதவள் என்பதை அறிந்ததும் முதலில் அவளுக்கு சிகிச்சை
அளிக்க மறுத்தனர்..!
குழந்தை வேண்டும் என்றால் பேசாமல் யாரையாவது திருமணம் செய்து
கொண்டு, இயற்கையாகவே குழந்தையை பெற்றுக் கொள்ள
அறிவுறுத்தினர்..!
ஆனால் சுரபிக்கு இன்னொரு திருமணம் என்பதில் ஆர்வம் இல்லை..!
அதனால் அவர்களிடம் நயமாக பேசி, இன்னும் கொஞ்சம்
பணத்தை கொடுத்து சிகிச்சையை ஆரம்பிக்க வைத்து விட்டாள்..!
அதன் மூலம் அவளுக்கு கருமுட்டையை வெடிக்க வைக்கவென, உணர்வுகளை தூண்ட, ஹார்மோன் ஊசியை
செலுத்தினார்கள்..!
அப்பொழுதுதான் சுரபிக்கு இந்த முறையில் இருக்கும் சிக்கல்
புரிந்தது..!
மருந்தின் வீரியத்தில் அவளின் உணர்வுகள் கிளர்ந்து எழுந்தன..!
அதை கட்டுபடுத்த படாதபாடு பட்டு போனாள்..! எப்படியோ போராடி, சில பல கஷ்டங்களை அனுபவித்து, தன்னை அந்த
சிகிச்சைக்கு தயார் படுத்தினாள்..!
அவளுக்குள் செலுத்தப்படும் விந்தணு யாருடையது என்றெல்லாம் அவள்
ஆராய்ந்து இருக்கவில்லை..!
அதை சொல்லவும் மாட்டோம் என்று அந்த சென்டரில் சொல்லிவிட, அவளுக்கும் அது தேவை
இல்லாதது என்பதால் விட்டு விட்டாள்.
அவளின் நல்ல காலம்..! முதல் முயற்சியிலேயே கரு உருவாகி, உறுதியாகி விட, பூரித்துப் போனாள் சுரபி..!
மனைவியாக ஒருவன் தாலியை சுமந்து, தாம்பத்தியத்தின் இன்பத்தை அனுபவித்து , அவனின் உயிரை தன் கருவில்
சுமக்காமல்…
மனைவி ஆகாமலயே தாயாகி
விட்ட, அந்த
கன்னித்தாய்..! தன் குழந்தையை தன்
கருவிலேயே, தன் வயிற்றுக்குள்ளேயே
நேசிக்க ஆரம்பித்து விட்டாள்..!
கருவில், தன் குழந்தையின்
வளர்ச்சியை, ஒவ்வொரு நிலையிலும் கண்டு பூரித்து போனாள்..!
அவளின் இந்த முடிவை அவள் யாரிடமும் சொல்லி இருக்கவில்லை..!
தாய்மையின் ஆரம்ப காலத்தில், தாய்மைக்கே உரித்தான உபாதைகள்... மார்னிங் சிக்னெஸ் ஆரம்பித்து
இருக்க, ரொம்பவும் கஷ்டப்பட்டு போனாள்..!
காலையில் எதுவுமே உண்ண முடிந்ததில்லை..! முயன்று கஷ்டப்பட்டு
கொஞ்சம் உள்ளே தள்ளினாலும், அடுத்த நொடி
வயிற்றை புரட்டிக்கொண்டு வர, முன்பு
சாப்பிட்டதும் சேர்ந்து வெளியில் வந்தது..!
அதற்குமேல் முடியாமல் சோர்ந்து படுத்துவிட்டாள்..!
*****
போனில் பேசும்பொழுது , சுரபி தன்னிடம் இயல்பாக
பேசாமல் தவிர்ப்பதும், தவிப்பதையும் கண்டு கொண்ட சுந்தரி, அவளை காண நேரில் வந்து
விட்டார்.
படுக்கையில் சுருண்டு படுத்திருந்த சுரபியை கண்டதும், அவர் மனம் பதைத்தது..!
வேகமாக அருகில் வந்தவர், என்னவாயிற்று என்று விசாரிக்க, சுரபி
“ஒன்றுமில்லை அத்தை... கொஞ்சம் உடல் சோர்வாக இருக்கிறது...! காய்ச்சல் வரும் போல இருக்கு..! கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்தால் சீக்கிரம் சரியாகிவிடும்... நீங்க கிளம்புங்க...” என்று அவரை கிளப்புவதிலேயே குறியாக இருந்தாள்.
எங்கே பெரியவள் தன்னை
கண்டு கொள்வாளோ என்ற சங்கடத்தில் ஏதேதோ சமாதானம் சொல்லி கிளப்ப முயன்றாள்..!
ஆனால் அவள் முகத்தில் தெரிந்த சோர்வும்...கன்னங்களில் மின்னிய பளபளப்பும்,, உடலில் தெரிந்த மினுமினுப்பும், மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த அந்தத் தாய் கண்ணுக்கு தெரிந்துவிட்டது..!
சுரபி இப்பொழுது தாயாக இருக்கிறாள் என்று கண்டு கொண்டாள் அந்த தாய்..!
அதை கண்டு கொண்டதும் பெரிதாக அதிர்ந்து போனாள் சுந்தரி...!
“இது எப்படி? சுரபி எப்பொழுதும் விழிப்புடன் இருப்பவள்
ஆயிற்றே..! அவளாக மனம் ஒப்பி, திருமணம் ஆகாமல்
இந்த மாதிரி ஒரு நிலைக்கு வந்திருக்க மாட்டாள்..!
ஒருவேளை யாராவது அவளை கட்டாயப்படுத்தி... “ என்று யோசிக்கும் பொழுதுதான், அவளை தனியாக விட்ட
அவரின் மடத்தனம் இடித்தது..! நெஞ்சம்
பதைத்தது..!
அவளின் போக்கின் படி சுரபியை தனியாக தங்க விட்டிருக்க கூடாதோ..? தங்கள் குடும்பத்துக்காக உழைத்தவள்.. அவளுக்கு ஒரு
பாதுக்காப்பாக, துணையாக இல்லாமல்
போய்விட்டமோ? “ என்று அவரின்
மனம் அவரை குற்றம் சாட்டியது..!
படுக்கையில் படுத்திருந்த அவளின் தலைமாட்டில் அமர்ந்தவாறு, அவளின் தலையை மெல்ல
வருடி கொடுத்தவர்,
“சுரபி மா? என்னாச்சு உனக்கு? என்னடாமா ஆச்சு?” என்று அக்கறையுடன்
விசாரிக்க, அவரின் பரிவில், அக்கறையில் தன் அன்னையின் அருகாமையை உணர்ந்தாள்..!
அதுவரை தன் அன்னையின் மடிக்காக ஏங்கி கொண்டிருந்தவள்...
சுந்தரியின் அந்த கனிவான, அக்கறையான
குரலிலும், பாசமான தலை
வருடலிலும், மொத்தமாக
தொலைந்தவள்.. !
தன் அன்னையின் நியாபகம் இன்னும் அதிகமாக வந்துவிட, தன் அருகில் அமர்ந்திருந்தவளின்
மடியில் முகத்தை புதைத்துக்கொண்டு, அவரை இடையோடு
கட்டிக்கொண்டு கதறினாள் சுரபி..!
அதைக் கண்டு இன்னும் திடுக்கிட்டுப் போனாள் சுந்தரி..!
“என்னாச்சுடா மா? ஏன் இப்படி கதறி
அழுகிறாய்..? உன்னை பார்த்தால் சாதாரண சோர்வாக தெரியவில்லை..! என் வீட்டிற்கு மருமகளாக ஆகாமல் போயிருந்தாலும்
நீயும் எனக்கு மருமகள்தான்...
நீ என் வயிற்றில் பிறக்க விட்டாலும், நீயும் எனக்கு ஒரு மகள் தான்..!
என்னை உன் தாயாக எண்ணினால், நடந்ததைச் சொல்..! என்னாச்சு உனக்கு? நீ எப்படி தாய் ஆகினாய்? “ என்று நேரடியாக
விஷயத்துக்கு வந்து விட, சுரபிக்கோ தூக்கிவாரிப்போட்டது..!
“அத்தை......? “ எப்படி தெரிந்தது
என்று சொல்லாமல் அதிர்ச்சியோடு அவர் முகம் பார்க்க, அவரோ மெல்ல புன்னகைத்தவள்,
“உன்னை பார்த்த உடனே கண்டு கொண்டேன் சுரபிமா...!
நானும் ஒன்றுக்கு மூன்று பிள்ளைகள பெற்றெடுத்தவள்..! இந்த நிலையை மூன்று முறை
அனுபவித்து கடந்து வந்தவள்!
எனக்கு தெரியாதா? சரி சொல்லு? இது எப்படி நடந்தது? உன்னை யாராவது
பலவந்த படுத்தினார்களா? உன் வாழ்க்கையை அளித்த அந்த கயவன் யார்? “ என்று கனிவோடு ஆரம்பித்து, கோபமாக விசாரிக்க
அப்பொழுதுதான் வாழ்வின் நிதர்சனம் புரிந்தது சுரபிக்கு..!
ஒரு பெண் தாயாகினாள் என்றால், அதற்கு பின்னால்
இருக்கும் பல அர்த்தங்கள் அப்பொழுதுதான் புரிந்தது..!
அதில் இன்னுமாய் திடுக்கிட்டு நிமிர்ந்தவள்
“அத்தை....அப்படி எல்லாம் எதுவும் நடக்கலை? என்னை யாரும்
கட்டாயப்படுத்தவில்லை... என் வாழ்க்கையை யாரும் அழிக்கவில்லை..! நான் கெட்டுப் போகவும் இல்லை...!
இன்னுமே நான் வெர்ஜினாகத்தான் இருக்கிறேன்...என்னை நம்புங்க...
” என்று தன்னை சுத்தமானவள் என்று உணர்த்தி
விட, படபடவென்று பொரிந்து தள்ளினாள்..!
அதைக்கேட்ட சுந்தரிக்குத் தான் குழப்பமானது..!
ஆனாலும் தன் குழப்பத்தை உள்ளே வைத்து மறைத்துக்கொண்டு,
“உன்னை நம்பறேன் சுரபி மா..! உன்னை பற்றி எனக்கு தெரியாதா? தாலி கட்டிக்காமலேயே என் மகனை உன் புருஷனாக மனதில் சுமப்பவள் ஆயிற்றே..!
உன்னைப்பற்றி எனக்கு தெரியும்..! அதனால் தான் கேட்கிறேன்..! இது எப்படி நடந்தது? “ என்று மீண்டும்
விசாரிக்க, அதற்குமேல் அவளால் மறைக்க முடியவில்லை..!
நடந்ததை அப்படியே சொல்லிவிட்டாள்..!
அதைக்கேட்ட சுந்தரி தான் ஆடிப் போனாள்...! அவரால் அவள் சொன்னதை
எல்லாம் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை..!
“என்ன சொல்ற சுரபி மா? நீ புத்திசாலினு நினைச்சேனே...! இப்படி ஒரு முட்டாள்தனத்தை பண்ணி வைத்திருக்கிறாயே..!
இதனால் உன் எதிர்காலம் என்னவாகும் என்று
கொஞ்சமாவது யோசித்தாயா? “ என்று எவ்வளவு கட்டுபடுத்தியும், முடியாமல் கொஞ்சம் கடினமாகவே அவளை கண்டித்தார்..!
சுரபிக்கும் கொஞ்சம் ஆதரவாக இருந்தது..!
தான் ஒரு அனாதை இல்லை..! தன் நல்லது, கெட்டதுகளில் பங்கெடுத்துக் கொள்ள, அவள் மடி சாய இந்த பெரியவள் இருக்கிறாள் என்று கொஞ்சம்
மகிழ்ச்சியாக இருந்தது...!
“இல்லை அத்தை...அது வந்து என் எதிர்காலத்திற்காகத்தான் நான் இந்த முடிவை
எடுத்தேன்...” என்று சமாளிக்க,
“என்னம்மா இது? இந்த காலத்தில் ஒரு வயசு பொண்ணு, புருஷன் இல்லாம இருப்பது
எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
எப்படியும் இந்த வருடத்திற்குள், உன் மனதை மாற்றி, உனக்கு ஒரு கல்யாணத்தை
பண்ணி பார்க்கணும் என்று எண்ணியிருந்தோம்...!
அதற்குள் இப்படி ஒரு முட்டாள்தனத்தை பண்ணி வைத்திருக்கிறாயே..!
இப்ப என்ன செய்ய? “ என்று ஆதங்கத்துடன் தழுதழுக்க,
“இல்லை அத்தை... இது
முட்டாள் தனம் இல்லை...! நான் நன்றாக
யோசித்து அலசி ஆராய்ந்து எடுத்த முடிவு தான் இது..!
என் வாழ்வில் கணவன் என்ற பாத்திரம் உங்க புள்ள ஷ்யாமிற்கு மட்டும்தான்..! வேற யாருக்கும் அதை...அந்த உரிமையை என்னால் கொடுக்க முடியாது..!
அப்படி இருக்க, எனக்கு எதிர்காலம் என்று ஒன்று வேண்டும்..! வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வேண்டும் என்று தான்
இந்த முடிவை எடுத்தேன்.!
உங்ககிட்ட சொன்னா நீங்க கண்டிப்பா ஒத்துக்க மாட்டீங்கன்னு
தெரியும். ஏதாவது சொல்லி என் மனசை மாத்திடுவிங்கனு தெரியும்..!
அதனால் தான் இந்த முடிவை யாரிடமும் சொல்லாமல், நானே எடுத்து விட்டேன்..!
இப்பொழுது என் குழந்தை என் வயிற்றில்..! உங்க பேரனோ , பேத்தியோ என் வயிற்றில்... மூன்று மாதம் இப்பொழுது...” என்று பெருமையாக சிரிக்க, சுந்தரிக்கு தான் தலை
சுற்றியது.
அவருக்கு அழுவதா, சிரிப்பதா என்று
நொந்து போனாள்..!
“முன்ன பின்ன, நல்லது கெட்டதை
யோசிக்காமல், விளையாட்டுத்தனமாக, இந்த பெண் இப்படி பண்ணி வைத்திருக்கிறாளே..!”
என்று உள்ளுக்குள் குமுறியவர், அதற்கு மேல் அவளுக்கு
சொல்லி புரிய வைக்க முடியாது என்று ஒரு பெருமூச்சு விட்டு தன் மனதை தேற்றிக்
கொண்டார்..!
ஆனாலும் அவளுக்கு உடனிருந்து அவ்வப்பொழுது உதவி செய்தார்..!
சுந்தரியின் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் அந்த செய்தியை
கேள்விப்பட்டு அதிர்ச்சி தான்..!
ஆனால் நடந்து விட்டதை யாராலும் மாற்ற முடியாது..!
அதோடு சுரபியின் பிடிவாத குணம் தெரிந்தவர்கள்..!
அவள் பிடிவாதத்தை தான், தங்கள் மகன் இறந்த
பின்னும், மருமகளாக அந்த
வீட்டிற்கு வந்து, மருமகளாக பொறுப்பேற்று நடத்திய அவளின் பிடிவாதத்தை
பார்த்து இருந்தார்களே..!
அதனால் எதுவும் சொல்லாமல், எல்லாருமே அவளுக்கு துணை நின்றனர்..!
ஆனால் வெளியில் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை..!
*******
நாட்கள் உருண்டோட, மெல்ல அவளின் வயிறு பெரிதாக ஆரம்பித்தது..!
அலுவலகத்தில் அதை பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர்..!
அலுவலகம் மட்டுமின்றி அக்கம் பக்கத்திலும் அவளை ஒரு மாதிரியாக
பார்த்து வைத்தனர்..!
கூடவே அவர்களின் சந்தேகத்தை அவளிடமே சில பேர் கேட்டு வைத்தனர்..!
ஏனோ இந்த மாடர்ன் உலகத்தில் ஒரு பெண் தன் குழந்தையை செயற்கை
முறையில் உருவாக்கி சுமக்கிறேன் என்று பெருமையாகவும் கர்வமாகவும் சொல்லிக் கொள்ள
முடியவில்லை..!
அந்த அளவு நம் மக்களின் மனம் இன்னும் முன்னேறி இருக்கவில்லை..!
செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கவும், வேற ஒருவரின் இதயத்தை எடுத்து மற்றொருவருக்கு வைத்து உயிர்பிக்க
வைக்கும் அளவுக்கு விஞ்ஞானம் வேகமாக முன்னேறி இருந்தாலும், மக்களின் மனம் இன்னும் அந்த
அளவுக்கு வேகமாக முன்னேறி இருக்கவில்லை..!
ஒரு பெண் கணவன் இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்வதில்லை..!
அதனாலயே தன்னைப் பற்றி விசாரிப்பவர்களிடம், பதில் எதுவும்
சொல்லாமல் ஒரு புன்னகையுடன் அவர்களை கடந்து விடுவாள்..1
அப்படி கடந்து போவது சிறுகதையாக முடிந்து விடாமல் தொடர்கதையாக
தொடர, ஒவ்வொருவருக்கும் அவளால் பதில் சொல்லிக்
கொண்டிருக்க முடியவில்லை..!
அப்பொழுது தான் யோசித்து தன்னுடைய அலுவலகத்தையும்
இருப்பிடத்தையும் வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டாள் சுரபி..!
அவளை பற்றி அறிந்திராதவர்கள் இருந்த பகுதிக்கு குடிபெயர்ந்து
விட்டாள்..!
தன் கணவனைப் பற்றிய கேள்விக்கு, தன்னை சுரபி ஷ்யாம் சுந்தர்
என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள்..!
தன் வயிற்றில் வளர்வது ஷ்யாமின் குழந்தை..! அவன் தான் தன் கணவன்.! என்று மனதால் வரித்துக் கொண்டவள், அதையேதான் பின்பற்றினாள்..!
******
எப்படியோ கஷ்டப்பட்டு குழந்தையை பெற்றெடுத்து
விட்டாள் தான்
ஆனால் அதற்குப் பிறகுதான் பல சோதனைகள் வந்து சேர்ந்தது..!
அவள் செல்லும் இடத்தில் எல்லாம் குழந்தையின் அப்பா எங்கே என்ற
கேள்வி வந்தது
என்ன சொல்வாளாம்? என் மகளுக்கு அப்பா
இல்லை... நான் சிங்கிளாக என் மகளை
பெற்றெடுத்தேன் என்று சொன்னால், எல்லாரும் சிரிப்பார்கள்
அதனாலேயே அவர் பாரினில் இருக்கிறார் என்ற கற்பனைக் கதையை உண்மை
போலவே சொல்லி சமாளித்தாள்..!
அப்படியும் அவளைப் பற்றிய வதந்திகள் பரவத்தான் செய்தது..!
புதிதாக குடியேறிய பகுதியிலும், அவளைப்பற்றிய பல கற்பனை கதைகள் உலா வந்தன..! சிலர் அவள் தனியாக
இருக்கிறாள் என்று அத்து மீறவும் ஆரம்பித்தனர்..!
அதனாலயே சென்னையே வேண்டாம் என்று பெங்களூர்க்கு மாற்றிக்கொண்டு
வந்து விட்டாள்..!
இங்கு வந்த பிறகு அந்த மாதிரியான தொல்லைகள் எதுவும் இல்லை..!
வீட்டு ஓனரிடம் மட்டும் வழக்கம் போல தன் கணவன் வெளிநாட்டில்
இருக்கிறார் என்று விடவும் , அதுவே அந்த
பகுதியில் உண்மையாக பரவியது..!
எப்படியோ மற்றவர்களை சமாளித்தவளால் தன் பிள்ளையை சமாளிக்க முடியவில்லை..!
அவள் கொஞ்சம் பெரியவளாகி, அப்பா எங்கே என்று கேட்ட பொழுதெல்லாம் உள்ளுக்குள் நொறுங்கி போனாள்
சுரபி..!
அவளை சமாளிக்க, ஷ்யாமின்
புகைப்படத்தை காட்டி இவர்தான் உன் அப்பா என்று சொல்லி வைக்க, அவளும் அதையே பிடித்துக் கொண்டாள்..!
நேரில் பார்த்திராத தன் தந்தை மீது அத்தனை பாசமாக இருந்தாள்..!
திடீரென்று அதுவரை புகைப்படத்தில் மட்டும் பார்த்து வந்த தன்
தந்தையின் சாயலில் விகர்த்தனனை காணவும் அப்பா....
என்று அழைத்து அவனுடன் ஒட்டிக்கொண்டாள் பிள்ளை..!
சுரபிக்கும் முதலில் விகர்த்தனனை பார்த்து அதிர்ச்சிதான்..!
அதுவும் அவன் ஷ்யாம் சாயலில் இருக்க, ஒருவேளை திரைப்படத்தில் பார்த்ததை போல, ஷ்யாம் இறக்கவில்லை..நேரில் வந்து விட்டானோ என்று கூட ஒரு நொடி
எண்ணி விட்டால்தான்..!
ஆனால் அறிவை தட்டி எழுப்பி, யோசிக்க அப்பொழுதுதான் அவன் ஷ்யாம் இல்லை... விகர்த்தனன் என்று
புரிந்தது..!
எப்படியோ அவள் மகள் அவனிடம் ஒட்டிக்கொள்ள, இறுதியில் அவனே அவளின் தந்தையாகிப் போனதுதான் விதியின் சதி என்று நொந்து கொண்டாள்
சுரபி..!
தன் கருவில் செலுத்தப்பட்டது எப்படி விகர்த்தனன்
விந்தணுவானது என்று இன்று வரை குழப்பம் தான்..!
அவன் ஒன்றும் தன் விந்தணுக்களை தானம் செய்த மாதிரியெல்லாம்
தெரியவில்லை..! பிறகு எப்படி? என்ற கேள்வி இன்றுமே
அவள் மனதில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது..!
அதற்கான பதிலை அவன் சொல்ல மறுத்துவிட்டான்..!
அதோடு தன் மகளையும், அவளை சுமந்தவளை தன்
மனைவியாக்கி தன் இடத்திற்கே அழைத்து வந்து விட்டான் விகர்த்தனன்..!
Superb......atlast surabikku oru life kidachudhu.....romance ivungalukulla varumaa ? Varaadhaa????😋😋😋😋😋😋😋
ReplyDelete