மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Monday, October 3, 2022

வராமல் வந்த தேவதை-28



அத்தியாயம்-28

காலை உணவிற்காக எல்லோரும் உணவு மேஜையில் அமர்ந்து இருக்க, மேலே தன் அறைக்கு சென்றவன் குளித்து முடித்து ஒரு திரீ போர்த் ட்ராயரும்,  ரவுண்ட் நெக் டி ஷர்ட் அணிந்தவாறு துள்ளலுடன் கீழே இறங்கி வந்தான் விகர்த்தனன்.

அவனை பார்த்ததும் தன் கண்களை அகல விரித்து,  இமைகளை படபடவென கொட்டி விகர்த்தனனை சைட் அடித்த ஸ்ருதி, அவன் அருகில் வரவும்  

“வாவ்...  செம ஹாட்டா  இருக்கீங்க அத்தான்..! இப்பதான் தெரியுது ஏன் எல்லா பொண்ணுங்களும் உங்களையே சுத்தி சுத்தி வர்ராளுங்கனு...”  என்று சுரபியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு,  தன் இதழை வளைத்து அவனை புகழ்வது போல நக்கலாக சொல்ல,  

அவள் சொல்வதின்  அர்த்தம் புரிந்தாலும்,  அதை கண்டுகொள்ளாதவளாக உணவு பதார்த்தங்களை மேஜை மீது அடுக்கிக் கொண்டிருந்தாள் சுரபி.

சாமியும்,  பூங்கோதையும் சமைத்ததை எல்லாம், கொண்டு வந்து கொடுக்க,  அதை எல்லோரும் எடுத்துக் கொள்ளும் விதமாக வைத்து விட்டு நிமிர்ந்து பார்க்க, அப்படியே ஒரு கணம் ப்ரீஸ் ஆகி போனாள் சுரபி.

ஸ்ருதி  சொன்னதைப்  போலவே அவன் அணிந்திருந்த டைட்டான டி-ஷர்ட் அவனின் ஆண்மையை எடுத்துக் காட்ட, ஆணின் இலக்கணமாய், கம்பீரமாக அமர்ந்து இருந்தவனை  ஒரு நொடி தன்னை மறந்து ரசிக்கத்தான் செய்தாள் பெண்ணவள்.  

ஆனாலும் அடுத்த கணம் தன்னை சுதாரித்துக்கொண்டு, தன் பார்வையை மாற்றிக் கொண்டு,  எல்லாருக்கும் தட்டில் உணவு பதார்த்தங்களை எடுத்து வைத்தாள்.

“இட்லி,  பொங்கல்,  மெதுவடை என்று சவுத் இந்தியன் ஸ்டைலிலும்,  ஓட்ஸ்,  கார்ன்பலக்ஸ், பேன்கேக்,  பிரெட் ஆம்லெட் என வெஸ்டர்ன் ஸ்டைல் உணவுகள் அங்கே இருந்தன

அனிச்சையாக சுரபி,  இட்லியை எடுத்து ஸ்ருதியின் தட்டில் வைத்து விட அடுத்த நொடி ஏய் என்று கர்ஜித்தாள் ஸ்ருதி.  

“எனக்கு இட்லி பிடிக்காது...  இட்லி மட்டுமல்ல சவுத் இந்தியன் புட் எதுவும் பிடிக்காது..!  நான் எப்பொழுதும் வெஸ்டன் தான்.. ஏன் உனக்கு தெரியாதா?  இடியட்... “  என்று திட்டிக்கொண்டே தட்டை வேகமாக நகர்த்தினாள்  ஸ்ருதி.

“ஹே சில் பேபி... இதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகற?  உனக்கு பிடிச்சத நீ எடுத்து போட்டு சாப்பிடு....” என்று ஸ்ருதியை சமாதானம் செய்ய, சுரபிக்கோ   கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது

அவளை...அந்த ஸ்ருதியை எதிர்த்து  ஒரு வார்த்தை கேட்காமல்,   அவன் பொறுமையாக சொல்லியது அவளுக்கு பிடிக்கவில்லை.

கண்ணோரம் துளிர்த்த கண்ணீரை மறைமுகமாக சுண்டி விட்டுக்கொண்டு தன் மகளுக்கு கொஞ்சம் பொங்கலை எடுத்து வைத்து,  அவளுக்காக ஒரு இட்லியை எடுத்து வைத்துக் கொண்டாள்

மறந்தும் விகர்த்தனன்ன் பக்கம் திரும்பவில்லை.  

அங்கே ஸ்ருதியோ  மறுபக்கம் அவனை ஒட்டி அமர்ந்து கொண்டு,  மேஜை மீது இருந்து எதையாவது அடிக்கடி எட்டி எடுக்கும் சாக்கில் அவளின் உடல் விகர்த்தனன் உடலோடு ஒட்டி உரசும் படி குழைந்து கொண்டிருந்தாள்.

அவனும் அவளை தள்ளி நிறுத்தாமல், அவளின் செய்கையை, அவளின் தீண்டலை ரசித்தபடி, அவளுடன் வளவளத்தபடி  உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்  

ஓரக்கண்ணால் அவர்களை பார்த்த சுரபிக்கு உள்ளுக்குள் கொதித்தது.  

“சை...கட்டின பொண்டாட்டி முன்னாடியே இப்படி விவஸ்தை இல்லாமல் ஒட்டி , உரசி, குழைந்து வைக்கிறாளே...! என்ன ஜென்மமோ? “  என்று உள்ளுக்குள் பல்லை  நறநறவென்று கடித்தாள் சுரபி.

அவள் மட்டும் அல்ல. அந்த காட்சியைக் கண்ட அந்த வீட்டு வேலைக்காரர்கள் கூட முகத்தை அருவருப்புடன் சுளித்தனர்.

பூங்கோதையோ சுரபிக்கு ஒரு படி மேல போய் பல்லே நொறுங்கிவிடும் அளவில் பல்லை நறநறத்தாள்.

சுரபி ஏதோ உணவை எடுத்து வரச் சொல்ல, அதை எடுத்து வந்தவள், டங் என்று மேஜை மீது வைத்தவள் , விடுவிடுவென்று சமையல் அறைக்குள் சென்று விட்டாள் பூங்கோதை..!  

விகர்த்தனன் பார்வையில் அதெல்லாம் படவில்லை.

அவன் பார்வை ஓரக்கண்ணால் தன்னவளின் மீதே நிலைத்து இருந்தது.

சுரபியின் முகத்தில் வந்திருந்த கடுகடுப்பும், அவள் உள்ளே பல்லை நறநறப்பதும் அவன் கண்களுக்கு தெரிந்தது.

“யாஹுஹூஹூ...” என்று அவன் மனம் துள்ளிக் குதிக்க, இன்னுமாய் அந்த ஸ்ருதியோடு ஸ்ருதி சேர்த்து அவனும் அவளுடன் இழைய ஆரம்பித்தான்.

எப்பொழுதும் கலகலப்பாக செல்லும் அந்த காலை உணவு நேரம், இன்று கடுப்புடன் , எரிச்சலுடன் சென்றது.

அவர்கள் இருவரின் நெருக்கத்தை கண்ட சுரபிக்கு, காலை உணவு உள்ளே செல்ல மறுத்து,  மருந்தாக தொண்டைக்குள் இறங்கியது.  

எப்படியோ ஸ்ருதி உடனான கொஞ்சலுடன் காலை உணவை முடித்தவன், கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி,  அலுவலக அறைக்குள் சென்று விட,  அந்த ஸ்ருதியும் வால் பிடித்ததை போல,  அவனை பின் தொடர்ந்து சென்றவள்,

சுரபியை பார்த்து ஒற்றைக் கண் அடித்து, வெற்றிப்புன்னகையை சிந்தியவள், அந்த அலுவலக அறைக்  கதவை அறைந்து மூடிக் கொண்டாள்.

அதைக் கண்ட சுரபிக்கோ உள்ளுக்குள்  இன்னும் கொதிக்க ஆரம்பித்தது.  

வெட்ட வெளியிலேயே,  தோட்டத்தில் நெருக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றவர்கள்...  இங்கு உணவு மேஜையில் இத்தனை பேர் இருக்க, அப்படி ஒட்டி உரசி குலாவியவள்...  தனி அறையில் அதுவும் தாளிடப்பட்ட அறையில் சும்மாவா இருப்பாள்?

அதோடு விகர்த்தனன் அவளிடம் நேற்று காலையில் இருந்து நடந்து கொண்டது நினைவு வந்தது.  

அவள் அவ்வளவு இழுத்து மூடி இருந்த பொழுதும்,  லேசாக அவளின்  மாராப்பு விலகியதை  பார்த்ததிலிருந்தே  ஒரு மார்க்கமாக சுற்றியவன்...!  அவளை தாபத்துடன் இழுத்து அணைத்தது நினைவு வந்தது

அதுக்கே அப்படி மயங்கி போனான் என்றால்,  இவளோ இந்த அரைகுறை உடையில் என்னவெல்லாம் காட்சி தருவாள்..!  

அதை பார்த்து இவன்  எப்படி நடந்து கொள்வானோ?  என்று மனம் தித்திக் என்று  அடித்துக் கொண்டது.  

அதே நேரம் அவன் அப்படிப்பட்டவனா?  என்று இன்னொரு மனம் அவளை முறைத்தது.

*****  

லுவலகத்தில் எந்த பெண்ணையும் தவறாக பார்த்ததில்லை அவன்...!  

ஏன் அவளின் திருமணத்திற்கு முன்பு வரை,  அவனின் பார்வை அவளின் கழுத்துக்கு கீழே சென்றதில்லை.  

வெளியில் அவன் நடத்தை  எப்படியோ?  

ஆனால் அலுவலகத்தில் ஒருமுறையேனும் அவன் தவறாக யாரையும் பார்த்ததில்லை.  

எப்பொழுதும் கடுகடுவென்று கடுவன் பூனை போல  தன்னை இறுக்கி கொண்டு, அவனை யாரும் அவ்வளவு எளிதாக நெருங்க முடியாதவாறு தான் உலா வந்திருக்கிறான்.  

“அப்படி இருந்தவன் நேற்று ஏன் என்னிடம் அப்படி நடந்து கொண்டான்?

ஒருவேளை மனைவி என்ற உரிமையிலா? அப்படி என்றால் இந்த ஸ்ருதி அவனின்  மனைவியாக ஆக இருந்தவள்  என்று சொன்னாளே...!  

அவளையும் இப்படித்தான் அணைத்திருப்பானோ? “ என்று பல விடை தெரியாத கேள்விகள் அவள் உள்ளே முட்டி மோதிக் கொண்டிருந்தன.

அதற்கு விடை தேடி ஆராய,  தலைவலி வந்ததுதான் மிச்சம்..! எதற்கும் இதுதான் காரணம், இதுதான் விடை என்று ஒன்றும் புரிபடவில்லை.  

அதற்கு மேல் மூச்சு முட்ட, தன் காலை உணவை முடித்துவிட்டு,  மதிய உணவிற்கான மெனுவை சாமியிடம் சொல்லி விட்டு,  தன் மகளை தூக்கிக் கொண்டு தோட்டத்திற்கு சென்று விட்டாள் சுரபி.

******

ன் மகன் விளையாடுவதற்கு என்று அங்கு  சிறிய விளையாட்டு மைதானத்தை உருவாக்கியிருந்தான் விகர்த்தனன்.  

பூங்காவில் இருப்பது போல சீசா ... சறுக்கி விளையாட சிறிய சறுக்கல்... குடை ராட்டினம்..  என்று ஒரு குட்டி பூங்காவையே  உருவாக்கியிருந்தான்  விகர்த்தனன்.

அதை பார்க்கும் பொழுதெல்லாம் தன் மகள் மீது இவ்வளவு பாசமா என்று ஆச்சர்யமாக இருக்கும் சுரபிக்கு..!  

நிகா குட்டியை சீசாவில் அமர வைத்தவள், தன் மகளோடு சேர்ந்து சற்று நேரம் விளையாட, அவள் மனமோ அந்த விளையாட்டில் ஒன்ற மறுத்தது.

சற்று நேரம் வலுக்கட்டாயமாக தன்னை விளையாட்டில் ஈடுபடுத்தியவள்... அதற்கு மேல் முடியாமல் போய்விட,  தன் மகளை மட்டும் விளையாடச் சொல்லி விட்டு,  அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டு தன் மகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பார்வை தன் மகளிடம் இருந்தாலும், அவள் மனமோ  இன்னுமாய் அவர்கள் இருவரையும் சுற்றி வந்து கொண்டிருந்தது.

தாளிட்ட அறைக்குள் என்ன நடந்து கொண்டிருக்கும் என்பதை பற்றியே அவள் மனம்  யோசித்துக் கொண்டிருந்தது

திடீரென்று யாரோ அவள்  அருகில் அமரும் அரவம் கேட்க,  திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.

அங்கே ஸ்ருதிதான்  அமர்ந்திருந்தாள்.

அதோடு சுரபியை பார்த்து ஏதோ மர்மமாக சிரித்து வைத்தாள்..!  

அனிச்சையாய் ஸ்ருதியின் முகத்தை கவனித்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது..!  

அவள்  கன்னத்தில் லேசாக  ஆங்காங்கே கன்றி  போயிருக்க, அவள்  உதட்டில் போட்டு இருந்த லிப்ஸ்டிக் கலைந்து,  ஆங்காங்கே திட்டு திட்டாக காணாமல் போயிருந்தது.  

அவள் கழுத்துக்கு கீழே ஆங்காங்கே நகக்கீறல்கள்..!  

அதை பார்த்ததும் திக்கென்றது சுரபிக்கு..!

அவள் மனம் எதைஎதையோ எண்ணி பதைத்தது. ஆனாலும் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,  ஸ்ருதியை பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு,  தன் மகள்  பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள் சுரபி.

ஆனால் அந்த ஸ்ருதி அவளை விடுவதாக இல்லை... அருகில் அமைதியாக அமர்ந்து இருந்தவள், திடீரென்று,  

“நீ ரொம்ப கொடுத்து வச்சவ சுரபி...”  என்றாள்  மொட்டையாக

சுரபி எதுவும் புரியாமல் திரும்பி கேள்வியாக அவளைப் பார்க்க

“அப்பா...!  என்ன வேகம்...!  என்ன ஒரு முரட்டுத்தனம்..!  எப்படித்தான் இந்த அத்தானை தினமும் நைட் நீ சமாளிக்கிறியோ..!

என்னால ஒரு அரை மணி நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியல..!  

இங்கே பார்...  என் கன்னம் எப்படி வீங்கிப் போச்சு..! லிப்ஸ் கூட பெருசாயிடுச்சு...!  கழுத்தை கூட விட்டு வைக்கல...!  இப்படி கடிச்சி வச்சிருக்கார்...!  

காலையிலேயே செம மூடு போல..!

ஏன் அத்தான் இப்படி நடந்துக்கறிங்கனு கேட்டதுக்கு,  நேற்று அவர் உன்கிட்ட ஆசையா வந்தப்ப, நீ அவரை தள்ளி வச்சிட்டியாம்..!  அந்த ஏக்கத்தை...ஆசையை எல்லாம் தான் என்கிட்ட காண்பிச்சாராம்..!

அத்தான் அணைப்பு எப்பொழுதும் சொர்க்கம் தான்...ஆனாலும் இன்னைக்கு அவர் என்கிட்ட நடந்து கிட்டது....! சான்ஸே இல்லை... இட் வாஸ் அமேசிங்..!“

என்று வராத வெட்கத்தை வரவைத்து, நாணத்துடன் கண்சிமிட்டி சிரிக்க,  சுரபிக்கு உலகமே தலைகீழாக சுற்றுவது போல இருந்தது...!  

அப்படி என்றால் அவள் நினைத்தது சரிதான்..!  

மூடிய கதவுக்கு பின்னே  அவர்கள் இருவரும், அலுவலக வேலையை பார்க்காமல் அந்தரங்க வேலையை பார்த்திருக்கிறார்கள்...!   

அதுதான் இவளின் தோற்றமே  காட்டிக் கொடுக்கிறதே... என்று உள்ளுக்குள் குமுறியவள்,  அருவருப்புடன் தன் முகத்தை சுளித்தாள்.

ஸ்ருதியோ அதோடு நிறுத்திக் கொள்ளாமல், எரிகிற நெருப்பியில் நெய்யை குடம் குடமாய் கொட்டுவதைப் போல இன்னுமாய் தொடர்ந்தாள்.  

முன்பெல்லாம் அத்தானிடம் இவ்வளவு வேகம் இருந்ததில்லை..!  ரொம்பவும் சாஃப்ட்டாகத் தான் ஹேண்டில் பண்ணுவார்..!  இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை..? “  

என்று மீண்டும் மையலுடன் தலை சரித்து சிரித்து, சுரபியின்  தலையில்  குண்டை  தூக்கிப் போட்டாள்.

அப்படி என்றால் இது அடிக்கடி நடக்கும் கன்றாவதியா? சை... இவளும் வெட்கமில்லாமல் இதை எல்லாம் வாய்விட்டு சொல்கிறாளே..?”  என்று அருவருப்பாக இருந்தது

அவளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் மீண்டும் பார்வையை தன் மகளிடம் திருப்பிக் கொண்டாள் சுரபி.

அந்த ஸ்ருதிக்கோ சுரபியின் செயலைக்கண்டு கடுப்பும், எரிச்சலும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது.

“இவ்வளவு சொல்றேன்...அதுவும் எவ்வளவு  பில்டப் பண்ணி சொல்றேன்...! கொஞ்சமாச்சும் அசரறாளா?

நான் சொன்னதைக்கேட்டு, அடுத்த கணம் பொட்டியை தூக்கிக் கொண்டு, அவள் பெத்த  புள்ளையும் கூட்டிகிட்டு இந்த வீட்டை விட்டு போயிடுவானு பார்த்தா, அப்படியே கல்லுளி மங்கி...கடப்பாரை முழுங்கியவளைப் போல எவ்வளவு அழுத்தமாக,  வாயே திறக்காமல் உட்கார்ந்து இருக்கிறாள்..!

எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்..! ஹ்ம்ம் எல்லாம் இந்த காசு.. பணம் செய்யும் வேலை...!

பொட்டியை தூக்கிகிட்டு போயிட்டா, பல மில்லியன் கோடி டாலர் சொத்துக்கு சொந்தக்காரி ன்ற உரிமை போய்விடுமே...!

அதுதான் புருஷன் எப்படி நடந்து கொண்டாலும், அதை கண்டுக்காமல் இருக்க பழகிகிட்டா போல.... ஆனால் இந்த ஸ்ருதியை பற்றி இவளுக்கு இன்னும் சரியா தெரியலை..!

ஸ்ருதினா கொக்கா? இந்த சுரபியை எப்படி வீட்டை விட்டு விரட்டுவது என்று எனக்கு தெரியும்? சீக்கிரமே இவளை துண்டைக் காணோம்... துணியக்காணோம் என்று ஓட ஓட விரட்டுகிறேன்..

அப்படி இல்லைனா என் பெயர் ஸ்ருதி இல்லை ... “ என்று உள்ளுக்குள் தலையை சிலுப்பிக் கொண்டு சூளுரைத்தாள் ஸ்ருதி...!

*****

பின் ஒரு முடிவுடன், சுரபியின் பக்கம் பார்த்தவள்,

“ஆமா சுரபி...உன்கிட்ட நான் ஒன்னு  கேட்கவா? “  என்று பீடிகையுடன் இழுக்க, ஏற்கனவே அந்த ஸ்ருதி கொலுத்தி போட்ட வெடி நன்றாக வெடித்து , சுரபியின் உள்ளுக்குள் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

அது போதாதென்று, அந்த ஸ்ருதி மீண்டும் ஆரம்பிக்க,  

“ஹ்ம்ம்ம் நான் வேண்டாம்னு சொன்னா நீ விட்டறவா போற...  சொல்லித் தொலை...”  என்று உள்ளுக்குள் கடுப்பானவள்  கேள்  என்றவாறு தலையசைக்க,  

“ஹ்ம்ம்ம் உன்னை பார்த்தால் ஒரு குடும்ப குத்துவிளக்கு...ஐ மீன் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண் மாதிரி இருக்க.  அப்புறம் எப்படி விகா அத்தான் கிட்ட ஏமாந்த? “  என்று கேட்க

அவள் கேள்வியின் அர்த்தம் புரியாமல்,  அவளை பார்த்து என்ன சொல்ற என்று புருவங்களை உயர்த்த,

“ஆமா... இவ பெரிய  மகாராணி..! வாயை தொறந்து என்னனு கேட்காம, பார்வையாலயே தான் பேசுவா...அந்த அளவுக்கு திமிர் இவளுக்கு...! ”

என்று உள்ளுக்குள் பல்லை கடித்து சுரபியை அர்ச்சனை செய்தவள், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், தன் முப்பத்திரண்டு பல்லையும் காட்டி அசட்டு சிரிப்பை சிரித்தவள் , 

“ஐ மீன் எத்தனையோ பொண்ணுங்க கூட நெருக்கமாக பழகியவர் தான் விகா அத்தான்...” என்று நிறுத்த, முதன் முறையாக தன் வாய் திறந்த சுரபி,  

“அப்படியா?  அது தெரிந்துதான் உன் அக்கா அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டாளா?”  என்று இப்பொழுது ஸ்ருதியை ஏளனமாக பார்த்து, நக்கலாக உதட்டை சுளித்து கேள்வி கேட்டாள்  சுரபி...

அதைக்கேட்டதும் இன்னும் கடுப்பானான் ஸ்ருதி.!

“பாருடா... இந்த புள்ள பூச்சியெல்லாம் கூட நக்கம் அடிக்குது...எல்லாம் என் நேறம்... “ என்று தனக்குள்ளே  நக்கல் அடித்தவள்,  

“ஹா ஹா ஹா அதெல்லாம் பிசினஸ்ல  இருக்கிறவங்களுக்கு  சகஜம்தான் சுரபி...ஹை க்ளாஸ்  ஃபேமிலியில்  இருப்பவர்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்....” என்று வெகு இயல்பாக சொல்ல,  

அதைகேட்ட சுரபிக்கோ அதிர்ச்சியாக இருந்தது..!  

“அப்படி என்றால் ஒழுக்கமற்றவன் என்று தெரிந்தே தான் ஸ்வாதியின் பெற்றோர் தங்கள் மகளை அவனுக்கு மணமுடித்து கொடுத்தார்களா?   

அவளுக்கு தெரிந்தவரை, ஒரு பெண்ணுக்கு திருமணம் என்றால் அந்த மாப்பிள்ளையை பற்றி எப்படி தோண்டி , துருவி விசாரிப்பார்கள்?

பையனுக்கு சிகரெட் பழக்கம் இருக்கு என்று தெரிந்தால் கூட பெண் கொடுக்க தயங்குவார்கள்.

அவள் அன்னை சகுந்தலை...அப்படித்தானே ஷ்யாம் பற்றி அக்கு வேறு,  ஆணி வேறாக அலசி ஆராய்ந்த பிறகுதானே சம்மதம் சொன்னார்.

இங்கே என்னடாவென்றால், மாப்பிள்ளை வடி கட்டின அயோக்கியன்... பல பெண்களுடன் பல முறை உல்லாசமாக இருந்தவன்..இன்னுமே இருக்கிறவன் என்று தெரிந்த பிறகும் பொண்ணை கொடுத்து இருக்கிறார்களே..!

காரணம்...?

பணம்...!

விகர்த்தனனிடம் கொட்டி கிடக்கும்  பணம்...! வசதி...! செல்வாக்கு..! இந்த அரண்மனை..!

அப்படி என்றால், ஒழுக்கம்,  கற்பு என்ற நியதியெல்லாம் மேல்தட்டு மக்களுக்கும், கீழ்தட்டு மக்களுக்கும் வேறு வேறா?  

மேல்தட்டு மக்கள் அதை எல்லாம் பின்பற்ற வேண்டாமா? இந்த விதிமுறைகளை யார் வகுத்தது?

ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் பொதுவானது தானே..! மேல்தட்டு மக்கள் மட்டும் எப்படி வேண்டுமானாலும் கூத்தடிக்கலாம்  என்று யார் வகுத்தது? “ அவள் மனம் குமுறியது.

அதை அறியாத ஸ்ருதியோ  இன்னுமாய் தொடர்ந்து கொண்டிருந்தாள்..!  

“ஹ்ம்ம்ம் அத்தான் திருமணத்திற்கு பிறகு மாறிவிடுவார் என்றுதான் எண்ணியிருந்தனர் எங்க வீட்டில்..!  ஆனால் விகா அத்தான்  மாறவே இல்லை.  

ஸ்வாதியால் அவரைத் திருப்திப்படுத்த முடியவில்லை போல..! திருமணத்திற்கு பிறகும்  அவரின் தேடல்...  மற்ற பெண்களுடனான தொடர்பு...  தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.  

ஸ்வாதியும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை..! அவர் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்று  விட்டு விட்டாள்.  

அதனால் அத்தானின்  உல்லாச வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.  

மற்ற பெண்களைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும்..!  அவர்களெல்லாம் விகா அத்தான் தூக்கிப் போடும் காசுக்காக... அவரிடம் இருந்து கிடைக்கும் சுகத்துக்காக அவரை சுற்றி வந்தவர்கள்..!  

ஆனால் நீ ?

உன்னை பார்த்தால் அப்படி தெரியவில்லை. பின் எப்படி அவரிடம் மயங்கிப் போனாய்?  

கண்டிப்பாக அவர் திருமணம் ஆனவர் என்று தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் எப்படி அவருடன் உறவாடினாய்..?”   என்று முகத்தை சுளித்தவள், பின் அவளாகவே ஏதோ யோசித்து,  

“ஓஹோ இப்பதான் புரியுது உன் நாடகம்...எப்படியும் விகா அத்தான் பெரிய வளமான பின்புலம் உள்ளவர்...  

அவரை  ஏமாற்றி,  அவர்  குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு அவருக்கு தெரியாமல் பெற்றெடுத்து  விட்டால்,  குழந்தையைக் காட்டி அவரை மடக்கி விடலாம்.

அவரின் அரண்மனைக்கு ராணியாக வந்துவிடலாம்...! அப்படியே அத்தானை மயக்கி,  உன் முந்தானைக்குள் முடிஞ்சு வச்சுக்கலாம்...அதற்கு பிறகு அவரின் பல மில்லியன் கோடி டாலர் சொத்துக்கு சொந்தக்காரியாகி விடலாம் என்று திட்டம் போட்டு இருப்பாய்

உன் திட்டத்திற்கு இன்னும் வாய்ப்பாக இந்த ஸ்வாதி வேறு திடீர்னு மண்டையை போட்டு விட்டாள்.  

அதுதான் உன் மகளை காட்டி, அத்தானை மடக்கி,  இந்த கோட்டைக்குள் வந்து விட்டாய்.  நீ கெட்டிக்காரி தான்...”  என்று வரிசையாக தன் யூகங்களை அடுக்கிக் கொண்டே போனாள்.

அதுவரை ஸ்ருதி உளறியதை எல்லாம் சிரத்தையே இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தவள்... அவள் வரிசையாக அடுக்கிய கற்பனை காட்சிகளை கேட்டு,   அதற்கு மேல் தாங்க முடியாமல் பொறுமையை இழந்த சுரபி,

“ஷட் அப்  ஸ்ருதி....நாக்கு இருக்குனு என்ன வேணாலும் பேசி வைக்காத. எனக்கு நிகா அப்பாவை ஐந்து மாதங்களாகத் தான் தெரியும்.  அதற்கு முன்னே நான் அவரை பார்த்தது கூட கிடையாது..! இப்படி  அபத்தமாக எதையாவது உளறி வைக்காதே...”  என்று கர்ஜித்தாள் சுரபி.  

அதைக்கேட்ட ஸ்ருதி  திடுக்கிட்டு அதிர்ந்து போனவளுக்கு  தலையை சுற்றியது..!

அதுவரை  அமைதியாய்... பேசா மடந்தையாய்...அவள் எத்தனைதான் தூண்டி, துரிவி, நோன்டிக் கொண்டிருந்தாலும்,  எதற்கும் அசையாமல், யாருக்கு வந்த விருந்தோ என்றதாய், அழுத்தமாக அமர்ந்து இருந்தவள்..! இப்பொழுது இப்படி பொங்குவது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது..!  

அதோடு அவள் சொன்னதன் அர்த்தம் அவளுக்கு குழப்பியது..!

“என்ன சொல்கிறாள் இவள்?  அத்தானை இவள் பார்த்ததில்லையா?  அப்ப இந்த குழந்தை? “  என்று  சற்று தொலைவில் விளையாடிக் கொண்டிருந்த கர்ணிகாவை பார்க்க,  அப்படியே விகர்த்தனனை உரித்து வைத்திருந்தாள் அந்த குட்டி.

விளையாடும் பொழுது அவளின் ஒவ்வொரு அசைவும், நடக்கும்பொழுது தெரிந்த மேனரிசம் எல்லாமே அப்படியே விகர்த்தனனின் ஜெராக்ஸ் ஆக இருந்தாள்.

“கண்டிப்பாக இது அத்தான் குழந்தைதான்...  ஆனால் எப்படி? “  என்று குழம்பியவள்  

“என்ன சொல்ற சுரபி?  நீ அத்தானை முன்ன பின்ன பார்த்ததில்லையா?  அப்ப இந்த குழந்தை? “  என்று தன் மனதில் இருந்த கேள்வியை வெளிப்படையாக கேட்டு,   சுரபியை ஊடுருவிப் பார்க்க,  

அப்பொழுதுதான் சுரபிக்கு  தன் தவறு புரிந்தது.  வாய் தவறி இந்த பெண்ணிடம் தான் உளறி வைத்தது உரைக்க, பதில் எதுவும் சொல்லாமல்  அமைதியாக அமர்ந்திருந்தாள் சுரபி.

ஸ்ருதிக்கோ டென்ஷன் ஏறிக்கொண்டிருந்தது.

அவளுக்கு விகர்த்தனனின் இரண்டாம்  திருமணம்  செய்தி  அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்ன்றால்  அவள் அல்லவா அந்த இடத்திற்கு வரக் காத்திருந்தாள்.

******

வள் அக்கா ஸ்வாதியின் திருமணத்தின் பொழுது,  கம்பீரமும் ஆளுமையும் கூடவே பெரிய வளமான பின்புலமும் கொண்ட,  ஹிந்தி பட ஹீரோவை போல இருந்த விகர்த்தனனை கண்டு மயங்கித் தான் போனாள் ஸ்ருதி.

அப்பொழுது கல்லூரியில்  படித்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.  

அவளின் அக்கா திருமணத்திற்கு வந்திருந்த அவளின் தோழிகள் வேறு,  

“உன் அக்கா ஹஸ்பென்ட் எவ்வளவு கேன்ட்ஸமா இருக்கார் டி...  நீ ரொம்ப லக்கி...  உன் அக்கா உடன்  சேர்த்து உன்னையும் அடிக்கடி கவனிச்சிக்குவார்.

பேசாம உன் அக்காவுக்கு பதிலாக நீயே இவரை கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம்... மிஸ் பண்ணிட்ட...”  

என்று ஏதேதோ சொல்லி அவளை ஏற்றிவிட, அப்பொழுதுதான் இருபது வயதில் அடி எடுத்து வைத்து இருந்தவளுக்கு, தோழிகள் சொன்னதைப்போல, விகர்த்தனன் பெரிய ஹீரோவாக தெரிந்தான்..!

அப்பொழுதே விகர்த்தனன்  அவளின் மனதில் ஆழ பதிந்து விட்டான்.  

திருமணம் முடிந்த பிறகும், அடிக்கடி அவனை பார்க்க வேண்டும் போல இருந்தது.

பார்ப்பதோடு  அவன் அருகில் நெருக்கமாக நிற்பதும், அவன்  மீது ஒட்டி உரசுவதிலயே  அலாதி சுகம் அவளுக்கு.  

அதனாலேயே ஏதாவது காரணத்தை சொல்லிக் கொண்டு தன் அக்காவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து விடுவாள்.  

இயல்பாக கட்டி அணைப்பதை போல,  அவனை இறுக்கக் கட்டியணைத்து முத்தமிட்டுக்  கொள்வாள்.  

அவனும் அவள் சிறு பெண்...மச்சினிச்சி வேறு...  தன்னிடம் உரிமையோடு விளையாடுகிறாள்  என்று எதார்த்தமாக எடுத்துக்கொண்டான்.  

ஆனால் ஸ்வாதிக்கு தன் தங்கை அடிக்கடி அங்கு வருவதற்கான காரணம் புரிந்துவிட்டது.

ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு தன் தங்கை என்றால் அவ்வளவாக பிடிக்காது.

இப்பொழுது தன் கணவனுடன் அவள் இப்படி ஒட்டி, உரசி இழைவது சுத்தமாக பிடிக்கவில்லை..!  

தன் தங்கையை எத்தனையோ முறை அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று சொன்னாலும் ஸ்ருதி கேட்கவில்லை.

தன் அக்கா வீட்டின் விஜயத்தையும், தன் அத்தானுடன் ஒட்டி, உரசி பழகுவதையும் நிறுத்தவில்லை.

******  

ந்த நிலையில் தான், தன்  கல்லூரி படிப்பை முடித்துவிட்டு,  தன் தந்தையின் தொழிலில் ஈடுபட்டாள் ஸ்ருதி.  

தன் கவனத்தை எல்லாம் தொழிலின் மீது காட்டி,  அதை இன்னும் நல்ல நிலைக்கு கொண்டு வந்தாள் தான். ஆனாலும் தன் அத்தான் மீதான அவளின் மோகம் மட்டும் குறையவில்லை.  

இந்த நிலையில் திடீரென்று அவள் அக்கா ஸ்வாதி இறந்து விட,  அடுத்த நொடி துள்ளிக் குதிக்கத்  தான் செய்தது அவள் ஆழ் மனம்.  

எப்படியாவது தன் மனதில் இருந்தவனையே அடைந்து விட வேண்டும் என்ற வேகம் எழுந்தது.  

அவள் அக்கா இறந்த மூன்றாவது வாரம்,  தன் பெற்றோர்களிடம் சொல்லி, விகர்த்தனனை தானே மணந்து கொள்வதாக பேசச் சொன்னாள்.    

ஆனால் அவளின் துரதிஷ்டம்... விகர்த்தனன் அதை  மறுத்துவிட்டான்.  

இனி தன் வாழ்வில் திருமணம் என்ற ஒன்று வேண்டாம் என்று முடிவாக சொல்லிவிட்டான்.

அதைக்கேட்ட ஸ்ருதிக்கோ அதிர்ச்சியாக இருந்தது..!

அவனை பார்த்ததும், தன் மனதில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதை போல, தன் அத்தான் மனதிலும் அவள் மீது ஈர்ப்பு இருந்திருக்கும். தன் அக்காவுக்காக பார்த்து அதை வெளிக்காட்டாமல் இருந்திருப்பான்.

இல்லை என்றால் அவள் அவனோடு நெருக்கமாக பழகிய பொழுது தடுக்கவில்லையே..!

அந்த நம்பிக்கையில் தான் அவள் பெற்றோர்களிடம் சொல்லி, திருமண பேச்சை ஆரம்பித்தது. உடனே அவனும் தன்னை மணந்து கொள்ள சம்மதித்து விடுவான் என்றுதான் எண்ணி இருந்தாள்.

ஆனால் அவள் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக அவளை மணந்து கொள்ள மறுத்து விட்டான்..!

இதில் தன்மானம் சீண்டப்பட்டவளாய் பொங்கி எழுந்தாள் ஸ்ருதி..!

“அது தான் வாரம்  ஒருத்தியோடு சுற்றிக்கொண்டிருக்கும்  இவனுக்கு மனைவி என்று தனியாக ஒருத்தி எதுக்கு..? இவ்வளவு நாட்களாக ஏதோ பேருக்காக மனைவி என்று ஒருத்தி இருந்தாள்.

இப்பொழுது அவளும் தொலைந்துவிட, இனிமேல் திருமணமே வேண்டாம் என்று சொல்றாராக்கும்...ஆனால் அப்படி எளிதாக விட்டு விடுபவள் அல்ல இந்த ஸ்ருதி..! 

விகா அத்தான்... என்னையவா வேண்டாம் என்று சொன்ன? உன்னை எப்படியாவது மடக்கி,  என் கழுத்தில் தாலி கட்ட வைத்து விடவேண்டும்.  

அதற்குப் பிறகு உன்னை எப்படி என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க போகிறேன் பார்.. வெய்ட் அன்ட் சீ...”  என்று தனக்குள்ளே சபதம் எடுத்துக்கொண்டாள்.

தன் சவாலை நிறைவேற்ற சில பல     திட்டங்களையும் போட்டு வைத்திருந்தாள்.  

அடிக்கடி அவனை  வந்து பார்ப்பது...  அவன் பெட் ரூமிற்குள் நுழைந்து அவனை இறுக்கி அணைத்து கொள்வது...

அவன் முன்னே கொஞ்சம் தாராளமாக உடையணிந்து வந்து குனிந்து, நிமிர்ந்து தன் அந்தரங்க அழகை அவனுக்கு காட்டி அவனை கவிழ்க்க  முயல்வதும் வாடிக்கையாக நடப்பது தான்.  

அவளின் செயல்கள் எல்லாம் அவனுக்கு சிறுபிள்ளை தனமாகத்தான் தோன்றியது. ஏதோ தன்னிடம் விளையாடுகிறாள் என்று பெரிதாக அவளை கண்டு கொள்ளவில்லை.

அதோடு அவனின் பெற்றோர்கள் மறைந்த பிறகு...மனைவி என்று இருந்த ஒருத்தியும் மறைந்த பிறகு அவனுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை.

ஸ்ருதி மட்டும்தான் அவ்வபொழுது வந்து அத்தான் என்று அவனை உரிமையோடு அழைத்து அவனிடம் சொந்தம் கொண்டாடினாள்.

அதனாலயே அவளின் வருகையை அவனும் தடுக்கவில்லை. அதோடு இப்படி எல்லாம் தன்னிடம் நடந்து கொள்ளக்கூடாது என்று   எத்தனையோ முறை அவளுக்கு எடுத்து  சொல்லி பார்த்துவிட்டான்.  

“ஏன் விகா அத்தான்? என்னை பிடிக்கவில்லையா?  இல்லை மத்த பொண்ணுங்ககிட்ட இருக்கிற மாதிரி ஸ்பெஷலா என்கிட்ட இல்லையா?  ஏன் என்னை பிடிக்க வில்லை? “  என்று ஒரு தரம் தன் வெட்கத்தை விட்டு, வாய் விட்டு கேட்டுவிட

“லுக் ஸ்ருதி.... நீ ஸ்வாதி உடைய தங்கச்சி...  அப்ப  எனக்கும் நீ தங்கை மாதிரி தான்...” என்று சொல்லும் பொழுதே நடுவில் புகுந்தவள்,  

“இப்பதான் அவள் இல்லையே அத்தான்....” என்று மையலுடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு,  அவன் சட்டை பொத்தானை திருக, அவளை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தியவன்

“ப்ச்... அவள் இல்லை என்றாலும் உன்னை நான் தங்கை மாதிரி தான் பார்த்திருக்கிறேன்...  பழகியிருக்கிறேன்... இனிமேல்  என்னிடம் இப்படி நடக்க கூடாது....

அது மீறி திரும்பவும்  இப்படியெல்லாம் நடப்பதாக இருந்தால்,  இந்த வீட்டு பக்கமே வராத...  

இத்தனை நாள் உன் அக்காவிற்காக பார்த்து தான் உன்னை அனுமதித்தேன்.  எப்போ நீ எல்லை தாண்ட ஆரம்பித்து விட்டாயோ,  இனி நீ இங்கே வராதே...”  என்று அதட்டலாக சொல்ல,  அதில் விதிர்விதிர்த்து போனாள் ஸ்ருதி.  

“ஐயோ அத்தான்...அப்படி எல்லாம் இல்லை. சும்மா உங்க கூட விளையாண்டேன். இனிமேல் இப்படி நடந்துக்க மாட்டேன்....”  

என்று  அப்போதைக்கு ஏதேதோ  சமாதானம் சொல்லி சமாளித்தாலும்,  அடுத்த நாளே மீண்டும் வந்து அவனோடு ஒட்டி உரசத்தான் செய்தாள் ஸ்ருதி.  

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் அசையும் என்ற பழமொழி படி, அடிக்கடி அவன் கண் முன்னே வந்து சென்றால், எப்படியும் ஒரு கணத்தில் தடுமாறி போய் விடுவான்  என்ற குருட்டு நம்பிக்கையில் தன் செயலை தொடர்ந்து கொண்டுதான் இருந்தாள் அந்த பேதைப்பெண்.

அது  அவனைப்பற்றிய அவளின்  தவறான நம்பிக்கை...!

விகர்த்தனனை பற்றிய அவளின் தவறான கணிப்பு என்று பட்டு தெரிந்து கொண்டாள் அந்த பேதைப்பெண். 

Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews