அத்தியாயம்-35
நிகா அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்க
பட்டிருந்தபொழுது, அவள் தன் குழந்தை
என்று தெரிந்ததுமே அதற்கான ஆதாரங்களை திரட்டி விட்டான் விகர்த்தனன்..!
அதே நேரம் நிகா வுக்கும் உடல்நிலை தேறி இருக்க, ஏனோ அவளை. தன் மகளை
விட்டு பிரிய மனம் வரவில்லை அவனுக்கு..!
அதோடு சுரபியோடு அவளை அனுப்பி வைக்கவும் அவனுக்கு பிடிக்கவில்லை..!
“அரண்மனை போல என் வீடு இருக்க, என் மகள்...என் வாரிசு...என் இளவரசி...
அந்த குட்டி வீட்டில்...இரண்டு அடி எட்டி வைத்து வேகமாக ஓடினால் இடித்துக் கொள்ளும் அந்த தீப்பெட்டி
சைஸில் இருக்கும் வீட்டில் வசிப்பதா? நெவர்...!
என்று தலையை சிலுப்பிக் கொண்டவன் நேரடியாக சுரபியிடம் வந்தான்..!
தன் மகள் உறங்கிக் கொண்டிருக்க, அவளுடன் கொஞ்சம் பேச
வேண்டும் என்று சுரபியை அருகில் இருக்கும் காபி ஷாப்பிற்கு அழைத்துச் சென்றான்.
சுரபிக்கோ மனம் திக் திக் என்று அடித்துக் கொண்டது
என்ன பேசப் போகிறான்? தன்னை பற்றியா? இல்லை தன் குழந்தையைப் பற்றிய தாக இருக்கும்..! அவளுக்கு
ஏதாவது பெரிதாக அடிபட்டு விட்டதா? அதை சொல்லத்தான்
என்னை தனியாக அழைத்து வந்திருக்கிறானா?
கடந்த இரண்டு நாட்களாகவே அவன் ஒருவித டென்ஷனில் இருந்தது
அவளுக்கும் புரிந்தது..! அடிக்கடி போன் பண்ணி யாரிடமோ எதையோ தீவிரமாக ஆலோசித்து
கொண்டு இருந்தது அவள் கண்ணிலும் பட்டு வைத்தது..!
“கடவுளே.. என் பிள்ளைக்கு எதுவும் ஆகிடக்கூடாது.. எனக்ன்று
இருக்கும் ஒரே ஆதரவு அவள் மட்டும்தான்..! அவளையும் என்னிடம் இருந்து பறித்துக் கொள்ளாதே...”
என்று உள்ளுக்குள் குமுறியபடி ஒரு வித டென்சன் உடனேயே அவனைப் பின் தொடர்ந்தாள்..!
காபி ஷாப் உள்ளே சென்றதும், இருவர் மட்டும் அமரும் வகையில் , ஓரமாக இருந்த ஒரு மேஜைக்கு சென்று, இருக்கையில் அமர்ந்து, தங்களுக்கு பிடித்த
காபியை ஆர்டர் பண்ணி விட்டு சுரபியை துளைக்கும் பார்வை பார்த்து வைத்தான்
விகர்த்தனன்..!
அவளோ அவனை... அவனின் துளைக்கும்
பார்வையை எதிர்கொள்ள முடியாமல், வேறு எதையோ பார்ப்பதைப் போல பார்வையை திருப்பிக்
கொண்டான்
அவன் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்..! தன் தொண்டையை
செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தான்..!
“உன் ஹஸ்பென்ட் எப்ப ரிடர்ன் வர்றார் சுரபி? “ என்று திடீர் என்று
கேட்க, சுரபிக்கோ
தூக்கி வாரிப்போட்டது..!
சம்பந்தமில்லாமல் இதை ஏன் கேட்கிறான் என்று குழப்பத்துடன் அவனைப் பார்க்க,
“சொல்லு சுரபி... உன் ஹஸ்பென்ட் எப்ப ரிடர்ன் வர்றார்? “ என்றான் மீண்டும் கண்கள் இடுங்க.
“அது வந்து.....” என்று
இழுக்க, அவனோ அவளையே ஊடுருவி பார்க்க, அவன் பார்வைக்கு அவளின் குரல் நடுங்கியது. ஏனோ அவனிடம் பொய்
சொல்ல வரவில்லை..!
ஆனாலும் முயன்று தன்னை சமனபடுத்தியவள்,
“வந்து....இன்னும் ஒரு மூன்று வருஷ கான்ட்ராக்ட் இருக்கு..! அது முடிந்த பிறகு தான் வருவார்...” என்று தயக்கத்துடன் இழுக்க
“வேண்டாம் சுரபி.. இந்த பொய்யை சொல்லி நீ எத்தனை பேரை வேண்டுமானாலும்
ஏமாற்றி இருக்கலாம்..! ஆனால் இந்த விகர்த்தனனை ஏமாற்ற முடியாது...மைன்ட்
இட்...” என்று அடிக்குரலில் சிறியவன்
“உண்மையைச் சொல்...உண்மையை மட்டும் சொல்... எதற்காக இந்த நாடகம்? “ என்று கர்ஜிக்க, அவளோ புரியாமல் மலங்க
முழித்தவள்,
“எந்த நாடகம்? “ என்றாள் தன் படபடப்பை மறைத்தபடி
“அதுதான்... உன் ஹஸ்பென்ட் என்று ஒருவன் ஃபாரின்ல இருக்கார் னு சொல்லும் நாடகம்...” என்று தன் உதட்டை வளைத்து ஏளனமாக சொல்ல,
அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவள், தன் தயக்கத்தை தூக்கி
தூர எறிந்தவள்...முழு உயரத்துக்கும் நிமிர்ந்து அமர்ந்து, அவனை நேராக உற்று நோக்கியவள்,
“அது ஒன்னும் நாடகம் இல்லை...உண்மைதான்..! என் ஹஸ்பென்ட்
ஷ்யாம்...நியூயார்க்கில் இருக்கிறார்...” என்று மிடுக்காக சொல்ல,
“வாவ்...சூப்பர்.... இல்லாத ஹஸ்பென்ட் ஐ ஐந்து வருட கான்ட்ராக்டில்
ஃபாரின் அனுப்பிய முதல் பொண்டாட்டி நீ தான்...” என்று மீண்டும் ஏளனமாக உதட்டை வளைத்து, நக்கலாக பார்த்து வைக்க, அதைக் கேட்டு இன்னுமாய்
அதிர்ந்து போனாள் சுரபி..!
இவனுக்கு எப்படி தெரிந்தது என்று அவரசமாக யோசித்தவள்,
“உங்களுக்கு எப்படி? “ என்று தன்னை மறந்து தயக்கத்துடன் இழுக்க
“அது எப்படி? ஏன்? என்பதெல்லாம் உனக்கு தேவையில்லாதது..!
தேவையில்லாததை நான் சொல்வதில்லை...! நான் கேட்டதுக்கு நீ பதில்
சொல். நான் சொல்வது உண்மையா இல்லையா? “ என்று மீண்டும் அவளை துளைக்கும் பார்வை பார்த்தான்..!
அவளும் அவனின் நேரடியான, ஆளை துளைக்கும் ஆராய்ச்சி பார்வைக்கும் பதில் சொல்ல முடியாமல்
தலை குனிந்தாள்...”
“சொல்லு சுரபி... எதுக்கு இந்த நாடகம்? ஏன் உன் ஹஸ்பென்ட் பாரின் ல இருக்கார்னு நாடகம் ஆடின? “ என்று மீண்டும் அதட்டலான குரலில் அவளை வினவ, குனிந்து இருந்தவள் நிமிர்ந்து அவனை நேருக்கு நேர் பார்த்தவள்,
“நாடகம்..? ஹாங்...
நாடகம்தான்..! வேற என்ன செய்யறது சார்? இந்த சமுதாயத்தில் ஒரு பெண்... அதுவும் இளம்
பெண் கையில் குழந்தையுடன் தனியாக இருக்கிறாள் என்றால் இந்த சமுதாயம் அவளை சும்மா
விட்டு விடுகிறதா?
முதலில் கணவன் எங்கே என்ற கேள்வி...! கணவன் இல்லை என்றால், வேலி இல்லாத பயிர் போல
யார் வேணாலும் மேயலாம் என்று தானாகவே அவர்களுக்கு தைரியம் வந்து விடுகிறது
அதுவே வேலி என்று ஒன்றிருந்தால் சற்று தள்ளி தான் நிற்கிறார்கள்..!
அதற்குத்தான் இல்லாத என் புருஷனை
இருப்பதாக உருவாக்கிக் கொண்டேன்..! இதில் என்ன தவறு?
அப்படி சொல்லி நான் யாரையாவது ஏமாற்றி அவர்கள் சொத்தை கொள்ளை
அடித்துவிட்டேனா? என்
பாதுக்காப்புக்காக அப்படி சொல்லி வைத்தேன்? இது எப்படி நாடகம் ஆகும்? “ என்று படபடப்புடன்
பொரிந்து தள்ளினாள்..!
“ஆல் ரைட்.... உன் ஹஸ்பென்ட் தான் இல்லையே..! ஆனால் உன் குழந்தை...? அவள் எப்படி? “ என்று அடுத்த
கேள்வியை கேட்க, அதற்கு இன்னுமாய் அதிர்ந்து போனாள்.
“என்ன பேசறீங்க? என் ஹஸ்பென்ட் இப்பொழுதுதான் இல்லை...குழந்தை
பிறந்ததும் ஒரு ஆக்சிடெண்டில் இறந்து விட்டார்...” என்று வாய்க்கு வந்ததை சொல்லி வைக்க,
“ஆஹான்... அப்புறம்? “ என்று அவளை நக்கலாக பார்க்க,
அவளோ அவன் தன்னை கிண்டலடிக்கிறான்... கலாய்க்கிறான் என்று
தெரிந்து கொண்டவள், விலுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைக்க
“உண்மையைச் சொல் சுரபி...! நீ எப்பொழுதும் உண்மையை மட்டும்தான் சொல்பவள் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்..! என்னிடம் மறைக்காதே..! உண்மையைச் சொல்...” என்றான்
இடுங்கும் கண்களுடன்..!
“என்ன உண்மை? “ என்றாள் மிடுக்குடன்...!
“ஹ்ம்ம்ம் நிகா பற்றிய உண்மை... நிகாவின் பிறப்பை பற்றிய உண்மை...!
அவள் எப்படி பிறந்தாள் என்ற உண்மை...” என்று மீண்டுமாய் அவளை கண்கள் இடுங்க கேட்க,
“ஏன் சொல்லவேண்டும்? நான் ஏன் அதை உங்களிடம் சொல்ல வேண்டும்? அது என்னுடைய பர்சனல்...
நான் யாரிடமும் அதைப் பகிர்ந்து கொள்ள
தேவை இல்லை..!
இதைப் பற்றித்தான் பேச என்னை அழைத்தீர்கள் என்றால், நான் கிளம்பறேன்..! எனக்கு பேச பிடிக்கவில்லை..பேசவும் மாட்டேன்...நான் வருகிறேன்...” என்று இருக்கையிலிருந்து எழ, அவனும் பட்டென்று அவள்
கையை பற்றி இழுத்து அமர வைத்தான்..!
“சுரபி.... பாதியில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அதற்குள்
எழுந்து போனால் எப்படி? பாதியில் எழுந்து செல்வதுதான் நாகரீகமா? “ என்று அதட்ட
“அந்த பேச்சு எனக்கு பிடிக்கவில்லை என்றால் எழுந்து செல்லலாம்...தப்பில்லை...”
என்றாள் இன்னுமாய் மிடுக்குடன்..!
உள்ளுக்குள் சிறு அச்சம்தான்..! எங்கே ஏதாவது செய்து தன் மகளை
தன்னிடம் இருந்து பிரித்து விடுவானோ என்ற அச்சம் உள்ளுக்குள் சூறாவளி
ஆடிக்கொண்டிருந்தது.!
“ஹ்ம்ம்ம் உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ... அதைப்பற்றி இப்ப பேசியாக வேண்டும்...! நிகாவை பற்றி பேசியாக வேண்டும்...” என்றான் ஆளுமையான, மற்றும் அமர்த்தலான குரலில்.
அவனின் குரலில் இருந்த அமர்த்தலை, அதிகார தோரணையை கண்டவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது..!
“ஏனோ? என் மகள் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? “ என்று அவனைப்போலவே
ஏளனமாக உதட்டைப் பிதுக்க,
“ஹ்ம்ம்ம் ஏன்னா.... நான் அவள் அப்பா....” என்றான் விகர்த்தனன் மிடுக்குடன்..
“ஹான்... அவள் வெறும் வாய் வார்த்தைக்காக உங்களை அப்பா என்று
சொல்லிவிட்டால், உடனே நீங்கள் தான் அவளின் அப்பா என்று வரிந்து
கட்டுக்கொண்டு வந்து விடுவீர்களோ?
அப்படி என்றால் அதை முதலில் அழித்துவிடுங்கள்..!
என் குழந்தைக்கு அப்பா இல்லை...! அம்மா நான் மட்டும்தான்...! “ என்று மீண்டுமாய் படபடவென்று பொரிந்து தள்ள,
அவளை பேச விட்டு அமைதியாக அமர்ந்திருந்தான் விகர்த்தனன்..!
அதை நினைத்து அவனுக்குமே ஆச்சர்யமாக இருந்தது..!
இதுவே வேறு யாராவது அவனிடம் இப்படி படபடவென்று பொரிந்து
பேசியிருந்தாலும், விரல் நீட்டி
ஏளனமாக, அலட்சியமாக பேசி இருந்தால், அடுத்த நொடி
அவர்களுக்கு பேச நாக்கு இருந்திருக்காது..!
ஒரு பார்வையாலயே அவர்களை அடக்கி இருப்பான்..!
ஆனால் ஏனோ அவளிடம் தன் ஆளுமையையும், அதிகாரத்தையும் காட்ட
மனம் வரவில்லை
முடிந்த அளவு பொறுமையாகவே அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்..!
“ஹ்ம்ம்ம் நான் அப்பா இல்லையா? அப்படி என்றால் வேற
யாரு அப்பா? “ என்று மீண்டும் கண்கள் இடுங்க கேட்க
“ஷ்யாம் சுந்தர்... அவர்தான் என் குழந்தையின் அப்பா...” என்று வெறுப்புடன் சொல்ல
“அப்படியா? ஷ்யாம் ஆக்சிடெண்டில் இறக்கும்பொழுது உனக்கும், ஷ்யாமிற்கும் திருமணமே ஆகியிருக்கவில்லை..! அப்புறம் எப்படி?
ஒருவேளை திருமணத்திற்கு முன்னரே ஃபர்ஸ்ட் நைட்.. ஃபர்ஸ்ட்
பகலெல்லாம் முடிந்துவிட்டதோ? அதில்தான் நிகா
பிறந்தாளோ? “ என்று
வேண்டுமென்றே அவளை சீண்ட,
:”ஷட் அப் மிஸ்டர்
விகர்த்தனன்..! என்னைப்பற்றி என்ன
நினைச்சுகிட்டு இருக்கீங்க? ஷ்யாமின் சுண்டு விரல் நகம் கூட என் மீது பட்டதில்லை..!
எங்களின் திருமண நிச்சயத்திற்கு பிறகு கூட, கட்டிக்கப் போறவதானே
என்று ஷ்யாம் என்னை எந்த ஒரு தப்பான பார்வை கூட பார்த்ததில்லை...! ஹி வாஸ் சச் அ ஜென்டில்மேன்...” என்று படபடவென்று பொரிய, அவன் முகத்திலோ
“என்கிட்ட மாட்டினியா?” என்றதாய் ஒரு நமட்டு சிரிப்பு..!
“ஸோ... சுண்டு விரல் நகம் கூட படாமல் எப்படியம்மா குழந்தை
வந்தது? அதுவும் ஷ்யாம்
சுந்தரின் குழந்தை.? “ என்று நக்களாக
அவளைப் பார்த்து கேட்க, அதில் திடுக்கிட்டு
போனாள்..!
அப்பொழுதுதான் அவள் மாட்டிக்கொண்டது புரிந்தது..!
“அவள் வாயாலேயே தன்
மகள் ஷ்யாமின் குழந்தை இல்லை என்று சொல்ல வைத்து விட்டானே..” என்று அதிர்ச்சியும் சேர்ந்து கொண்டது
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், தப்பு பண்ணிவிட்டு ஆசிரியரிடம் மாட்டிக்கொண்ட மாணவியாய், திருதிருவென்று முழித்துக்
கொண்டிருக்க, அவனோ அவளை நேரடியாகப் பார்த்தவன்,
“கூடவே இன்னொரு பாய்ன்ட் இடிக்குது..! உன் கணவன்... அதாவது நீ
கணவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே..!
மிஸ்டர் ஷ்யாம்...ஷ்யாம் சுந்தர்...
அவர் இறந்தது ஆறு வருடங்களுக்கு முன்னால்...!
ஆனால் நிகா பிறந்தது இரண்டரை வருடங்களுக்கு முன்னால்..? இது எப்படி சாத்தியம்? “ என்று அவளை ஊடுருவி
பார்க்க,
அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் மீண்டும் திருதிருத்தாள்..!
இவனுக்கு எல்லாமே தெரிந்து விட்டதோ? அதுதான் இப்படி நோண்டி நோண்டி கேட்டுக் கொண்டிருக்கிறானோ? என்று ஐயம் எழுந்தது..!
கூடவே இவனிடம் இப்படி எல்லாம் கேள்விகளை கேட்க வேண்டியதாகி
இருக்கிறதே என்று வேதனையுடன் முகத்தை
சுருக்க, கண்களில் நீர் எட்டிப் பார்த்தது..!
அதுவரை அவளை அதட்டிக் கொண்டிருந்தவன்...அவளை கிண்டல் அடித்துக்
கொண்டிருந்தவன்..!
அவள் முகத்தில் வந்த வேதனையையும்...அவள் கண்களில் திரண்டிருந்த கண்ணீரையும்
கொண்டு கொண்டவன் அதற்கு மேல் அவளை விரட்ட மனமில்லாமல்,
“ஆல்ரைட் ... நானே
நேரடியாக சொல்லிடறேன்....!
சுரபி... நீ என் கிட்ட அடிக்கடி கேட்டாயே... எனக்கும், நிகாக்கும் என்ன சம்பந்தம் என்று அடிக்கடி
கேட்பியே..!
சம்பந்தம் இருக்கிறது...! எனக்கும் நிகாக்கும் சம்பந்தம் இருக்கிறது..! அது என்னவென்றால்.....?
நிகாவின் உண்மையான பயாலஜிக்கல் டாட் நான்தான்....” என்று நிறுத்தி நிதானமாக சொன்னான்....!
அதைக் கேட்டவளோ பலமாக
அதிர்ந்து போனாள்..!
“வாட்? “ என்று இருக்கையில் இருந்து துள்ளி குதித்து
எழுந்து நின்றாள்..!
அவளின் கை பிடித்து இழுத்து, மீண்டும் இருக்கையில் அமர வைத்தவன்,
“எஸ்...நான் தான் நிகாவின் தந்தை...! நிகா மை
பேபி...என் இரத்தம்..! என் வாரிசு....! என் உயிரில் ஜனித்தவள்...! மை பிரின்சஸ்....” என்று கண்களை அழுந்த மூடி, திறந்து பெருமையாக, சிறு கர்வத்துடன் சொல்ல, அதைக் கேட்டேவளோ பலமாக அதிர்ந்து போனாள்...!
“இல்லை... நீங்க சொல்றது உண்மை இல்லை...! இது எப்படி? என்று அதிர்ச்சியோடு
கேட்க
அவன் கையில் வைத்திருந்த , நிகா பற்றிய விவரங்கள்
அடங்கி இருந்த மெடிக்கல் பைல்களை அவள்
முன்னே தூக்கி போட்டான்
“பார்...நன்றாக உற்று பார்... இது எனக்கும் நிகாவுக்குமான டி.என்.ஏ டெஸ்ட்..! 100% அவள் என் மகள்தான்
என்று சொல்லும் டி.என்.ஏ டெஸ்ட்..!
இது சென்னையில் உள்ள ஐ.வி.எப் சென்டரில் நீ செய்து கொண்ட
செயற்கை கருத்தரிப்புக்கான எவிடென்ஸ்..!
உனக்கு கருத்தரிப்புக்காக
பயன்படுத்தப்பட்ட விந்தணுக்கள் என்னுடையது..! புரியவில்லை...? உன் கருப்பையில்
செலுத்தப்பட்ட விந்தணுக்கள் என் உயிர்..!
உனக்கு இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், உனக்கும் எனக்கும்
பிறந்தவள் தான் நிகா... கர்ணிகா....” என்று அழுத்தமாக சொல்ல, பெண்ணவளோ தலையில் ஆணி அடித்தாற் போல சமைந்து அமர்ந்து விட்டாள்..!
“இது எப்படி சாத்தியம்? “ என்று யோசிக்கமுடியாமல்
அவள் மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.
“இது எப்படி ? “ என்று அவனிடமே
கேட்க
“அது உனக்கு
அவசியமில்லாதது..! நீ கேட்ட எனக்கும், நிகாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதற்கான விடை இதுதான்..!
அவள் என் குழந்தை..! என் பேபி...” என்றான் மீண்டும் பெருமையும், பூரிப்பும் கலந்த கலவையான குரலில்...!
“இல்லை... அப்படி
எல்லாம் இல்லை.... அப்படியே இருந்தாலும் நான் விந்தணுக்களை தானமாகத்தான் பெற்றேன்..!
அப்படி தானமாக பெறும் பொழுது, அந்த நபருக்கு குழந்தையிடம்
எந்த உரிமையும் கொண்டாட கூடாது என்றுதான் சட்டமே இருக்கிறது
என்னால் நிகாவை விட்டுத்தர முடியாது...அவள் என் மகள்
மட்டும்தான்....” மிடுக்குடனே அதட்டினாள்.. ஆனால் உள்ளுக்குள் உதற ஆரம்பித்து
இருந்தது...!
“ஆஹான்... பரவாயில்லையே...!
நன்றாக அலசி ஆராய்ந்து செயற்கை முறை கருத்தரிப்பு
பற்றிய சட்டத்தை எல்லாம் கூட தெரிந்து வைத்திருக்கிறாய்...! வெரிகுட்... “
ஆனால் பெண்ணே...! அதில்
ஒன்றை கவனித்தாயா?
தானம்.....!
தானமாக கொடுத்தால் மட்டும் தான் மற்றவர்கள் யூஸ் பண்ண முடியும்...!
ஆனால் என் அனுமதி இல்லாமல் என்னுடைய
விந்தணுக்களை யூஸ் பண்ணி இருந்தால்...?
அது எப்படி தானம் ஆகும்..? அப்படி உருவான குழந்தை எப்படி உனக்கு மட்டும் சொந்தமாகும்...? “ என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி, அவளை நக்கலாக பார்க்க,
“வாட் டு யூ மீன்? “ என்றாள் கண்கள் இடுங்க, அவனை யோசனையாக பார்த்து...!
“ஐ மீன்... என்னுடைய
அனுமதி இல்லாமல் தான் என்னுடைய விந்தணுக்கள் உன் கருப்பையில் செலுத்தப்பட்டு
இருக்கிறது...! நான் ஒன்றும் என் உயிரை யாருக்கும் தானமாக கொடுக்கவில்லை..!
அதனால் நிகா என் குழந்தை... அவள் மீது எனக்கு முழு உரிமையும் இருக்கிறது...! அவள் என் குழந்தை...” என்று அவன் ஆணித்தரமாக சொல்ல, அதைக்கேட்டு இன்னுமாய் அதிர்ந்து போனாள்..!
“ஓ மை காட்... இது
எப்படி சாத்தியம்? அந்த ஐ.வி.எப் சென்டரில் தானமாக பெறப்பட்ட
விந்தணுக்களை மட்டும் தானே பயன்படுத்துவதாக சொன்னார்கள்..! இது எப்படி? “ என்று அவர் உடைந்து
போய் இருக்கையில் தளர்ந்து அமர,
“ஹ்ம்ம்ம் காசு... பணம்...துட்டு... மணி....தான்...! சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அந்த
சென்டரின் உரிமையாளருக்கு..!
கூடவே உன்னைப்போன்ற அரை லூசுகள்... ஒரு குழந்தை வேண்டும்
என்பதற்காக இந்த மாதிரி குறுக்கு வழியை பின்பற்றினால்...?
அவர்கள் தொழில் தர்மத்தை பார்க்காமல்... எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள்
என்பதற்கு இது ஒன்றே சான்று..!
அவர்களுக்கு வேண்டியது பணம்..!
அந்த பணம் கிடைக்கிறது என்பதற்காக, தானமாக வந்ததைத்தான் பயன்படுத்த
வேண்டும் என்று இல்லாமல் திருடினால் கூட பரவாயில்லை என்ற கொள்கை
உடையவர்கள்..!
அவர்களுக்கெல்லாம் பணம் மட்டுமே பிரதானம்...” என்று பற்களை நற நறவென்று கடித்து துப்பினான்..!
பின் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன்,
“எது எப்படியோ? நடந்ததை மாற்ற முடியாது..! அதே போல நிகா என் குழந்தை என்பதையும் மாற்ற முடியாது..! இந்த டி.என்.ஏ டெஸ்ட்டிலிருந்து, அவள் கருவில் உருவானதில் இருந்து அவள் பிறக்கும் வரைக்குமான அத்தனை
ரிப்போர்ட்களும் அவள் என் மகள் என்று அடித்து சொல்கிறது..!
அதோடு இந்த காகிதங்கள் சொல்வதைவிட... என்னைப் பார்த்தவுடனேயே நான் தான் அவள் அப்பா என்று கண்டுகொண்டாளே..!
அவளை தூக்கிய...அவளை ஸ்பரிசித்த அந்த கணமே என்னுள் அப்படி ஒரு
சிலிர்ப்பு..! அந்த கணமே நானும் அவளை கண்டு கொண்டேன்..!
இடையில் நீ சொன்ன உன் ஹஸ்பென்ட்... பாரின் கான்ட்ராக்ட்... கதைதான் என்னை குழப்பி விட்டது..!
இப்பொழுது அதுவும் தெளிவாகிவிட்டது.!
நான் இப்பொழுது பேச வந்தது நிகாவின் கடந்த காலத்தையோ, நிகழ்காலத்தையோ பற்றி இல்லை...! அவளின் எதிர்காலத்தைப் பற்றி...” என்று நிறுத்த, அதற்குள் சுற்றி வளைத்து அவன் எங்க வருகிறான் என்று புரிந்து
கொண்டவளுக்கு நெஞ்சம் படபடத்தது..!
“நிகாவின் எதிர்காலத்தைப் பற்றி என்ன பேச வேண்டும்? “ என்றாள் பதற்றத்துடன்.
“அவள் என் மகள்...என்னுடன் தான் இருக்க வேண்டும்...” என்று
முடிக்கும் முன்னே,
“நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
“ என்று வீறிட்டு கத்தினாள் சுரபி..!
0 comments:
Post a Comment