அத்தியாயம்-39
மெல்ல கண்களைத் திறக்க
முயன்றாள் சுரபி..!
தன் இமைகள் மீது ஏதோ பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்து
அழுத்துவதைப் போல அப்படி ஒரு வலி..!
தலை விண் விண்ணென்று வலித்தது..!
உடலெல்லாம் அப்படி ஒரு வலி..! தன் இமைகளை
பிரிக்க மனமே இல்லாமல் பிரிக்க முடியாமல்
மீண்டும் கண்களை அழுந்த மூடிக்கொண்டாள்..!
ஆனால் அடுத்த கணம், கையில் தன் மகளை தூக்கி
வைத்துக் கொண்டு அவளையே பாவமாக, ஏக்கமாக, வேதனையோடு பார்த்துக்
கொண்டிருந்த தன் கணவன் கண் முன்னே வர, அடுத்த நொடி படக்கென்று தன் கண்களை திறந்து கொண்டாள்..!
அவசரமாக பார்வையை சுழற்ற, சற்று முன் மனக்கண்ணில் அவள் கண்ட அதே
காட்சிதான்..!
தன் மகளை மடியில் வைத்துக் கொண்டு, சொல்லொன்னா துயரத்துடன் பாவமாக, ஏக்கமாக, வேதனையோடு அவளையே
பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் ஆருயிர் கணவன்..!
அவனைக் கண்டதும் முகம் விகாசிக்க, டக் என்று எழ முயல, அப்பொழுதுதான் அவள் கையில் இறங்கிக் கொண்டிருந்த
டிரிப்ஸ் ஊசி நறுக் கென்று குத்தி, ஆவென்று அலறி
வைத்தாள்..!
அவளின் அலறலை கேட்டவன், விலுக்கென்று நிமிர்ந்து அவளை பார்த்தவன்,
அவள் விழித்துக் கொண்டாள் என்று
புரிந்ததும்,
“சுபி..... ..... “ என்று அழைத்தவாறு அவள் அருகில்
வர, அவன் கையில் இருந்த நிகா குட்டியும், அம்மா என்று பாய்ந்து சென்று அவள் மார்பில் ஒன்றிக் கொண்டாள்..!
அதற்குள் அங்கிருந்த நர்ஸ் வேகமாக விரைந்து
வந்து, சுரபியை பரிசோதித்து பார்த்துவிட்டு, ஒரு நிம்மதி மூச்சு விட்டார்...
பின் விகர்த்தனன் பக்கம் திரும்பியவள்
“சார்...பாத்திங்களா? நான்தான் சொன்னேனே... இது சாதாரண மயக்கம்... சீக்கிரம் நினைவுக்கு வந்துடுவாங்கனு..! அதுக்குள்ள இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டீங்க..!
பாருங்க நான் சொன்ன மாதிரியே மேடம் கொஞ்ச
நேரத்துல முழிச்சுகிட்டாங்க...” என்று அவனை செல்லமாக முறைத்து விட்டு சிரித்தபடி
நகர்ந்தாள்..!
அவனும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து
வைத்தவன், தன் மனைவியின் கையை எடுத்து தன் கைகளுக்கு வைத்து அழுத்தி
கொடுத்தவன்,
“இப்போ எப்படி இருக்கு டா? “ என்று விசாரிக்கும் முன்னே அவள் முந்திக்கொண்டு,
“தனா.... உங்களுக்கு ஒன்னும் ஆகலையே..! ஆர் யூ ஓ.கே? பேக்டரியில் எல்லாரும்
நல்லா இருக்காங்களா? யாருக்கும்
உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே...” என்று முழு மொத்த அக்கரையுடன்
அவனைப்பற்றியும், அவன் பேக்டரியை
பற்றியும் விசாரிக்க, அதில் நெகிழ்ந்தவன்,
“ஐம் பைன் டி... பாரு
ஜம்முனு இருக்கேன்..! அதோட பேக்டரியில்
இருந்தவங்களுக்கும் பெருசா ஒன்னும் இல்ல...
கொஞ்ச பேருக்கு தீக்காயம் பட்டிருக்கு..! நல்லபடியா எல்லாரையும் வெளியேற்றியாச்சு..!
கொஞ்ச பேர் ஹாஸ்பிட்டல் ல அட்மிட் பண்ணியாச்சு... சரி அத விடு... நீ ஏன்
அப்படி மயக்கம் போட்ட? முதலில் உன்னை யார் அங்க வரச்சொன்னா?
நீ அங்க வந்ததும், மயங்கி சரிந்தது தான் எனக்கு பெரிய ஷாக்... ஏன் டா அப்படி பண்ணின? “
என்று தழுதழுக்க, அவள் கழுத்தை கட்டிக்கொண்டு அவள் மார்பில் படுத்திருந்த நிகா குட்டியும் தன்
தலையை நிமிர்த்தி,
“ஆமா... ஏம்மா அப்படி பண்ணின ? “ என்று பெரிய மனுசியாக அதட்ட, தன் மகளின் அதட்டலில் அவளின் வலி, வேதனை எல்லாம் மறந்து சிரிப்பு வந்தது..!
லேசாக சிரித்து வைக்க,
“சிரிக்காத டி....எதுக்கு அவ்வளவு தூரம்
காரை எடுத்துகிட்டு வந்த... “ என்று கடுப்பாகி
முறைக்க,
“தெரியலப்பா... உங்க பேக்டரியில் ஆக்சிடென்ட் னதும் எனக்கு
உயிரே இல்ல... உங்க போன் வேற ஸ்விட்ச் ஆப்.... அதுக்குமேல என்னால ஒரு கணம் கூட
மூச்சு விட முடியலை...
உங்களை இப்பவே பார்த்தாகணும்... உங்களுக்கு
ஒன்னும் ஆகக்கூடாது மனசு படபடனு அடிச்சுகிச்சு...!
அதான் உடனே சாமி அண்ணனை காரை எடுக்க சொல்லி, வந்திட்டேன்...! உங்களை நேரில் பார்த்த பிறகுதான் எனக்கு போன உயிர்
திரும்பி வந்தது...! “ அவள் பட்ட வேதனை
எல்லாம் முகத்தில் வந்து போக, கண்களை அழுத்த மூடித்
திறந்தாள்..!
அதே வலியும் வேதனையும் தான் அவனுக்கும்...!
அவனும் தன் கண்களை அழுந்த மூடி திறக்க, அப்பொழுது கதவை திறந்து கொண்டு, விஷ்வா, பூங்கோதை, சாமி என எல்லாரும்
உள்ளே வந்தனர்..!
வந்தவர்கள் சுரபியின் நலன் விசாரித்து அவள்
நல்லபடியாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் தான் நிம்மதியுடன் வெளியேறினர்..!
******
விகர்த்தனன், தன் மகளை பூங்கோதையிடம் கொடுத்து, வெளியில் இருக்கும்
பூங்காவில் விளையாட சொல்லி அனுப்பி வைத்தவன்...
அவர்கள் வெளியேறிச் சென்றதும் உடனே அந்த
அறைக்கதவை மூடி தாழிட்டவன், அடுத்த கணம் பாய்ந்து வந்து கட்டிலில் படுத்து இருந்தவளை அள்ளி
தன் மார்போடு சேர்த்து இறுக்கிக் கட்டிக் கொண்டான்..!
அவனின் இதயம் வேகமாக துடிப்பது அவளுக்கும்
கேட்டது..!
அவனின் முதுகை ஆதரவாக வருடி கொடுக்க, இன்னுமாய் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டவன்,
“செத்துட்டேன் டி...! நீ அப்படி மயங்கி சரிவதை
பார்த்ததும் உண்மையிலேயே செத்துட்டேன்..!
வாழ்க்கையில் இதுவரைக்கும் எல்லாவிதமான
உணர்வுகளையும், அனுபவங்களையும் அனுபவித்து முடித்தவன்..!
ஆனால் என் உயிர் பிரிந்தால் எப்படி
வலிக்கும் என்ற வலியையும் இப்ப அனுபவிச்சிட்டேன்..! அந்த மரண வலியை நீ காட்டிட்ட டி...”
என்று வேதனையோடு அவளை அப்படியே தன்னுள் புதைத்து
கொள்பவனை போல, காற்று புகக் கூட
இடம் விடாமல் இறுக்கி கட்டி கொண்டான்..!
அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்
இரண்டு சொட்டு அவள் கன்னத்தில் விழ, திடுக்கிட்டு
நிமிர்ந்து அவனை பார்த்தாள்..!
ஆம்.. கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது அவன்
கண்களில் இருந்து..!
இதுவரை யாருக்காகவும், எதுக்காகவும் கண் கலங்கியிராதவன்..! முதன் முறையாக கண் கலங்கி, தளர்ந்து போய் உடைந்து போய் இருந்தான்..!
எப்பொழுதும் கம்பீரமாக உலா வரும் தன் கணவனை
இப்படி உடைந்து போய் பார்க்க பெண்ணவளின் மனம் திடுக்கிட்டு போனது...!
தனக்காக தன் கணவன் இவ்வளவு உருகுகிறான்
என்பது, இந்த பிறவியின்
பயனை அடைந்து விட்டதை போல பெருமையாக இருந்தது..!
ஆனாலும் அவனின் வேதனையை தாளாதவளாய்,
“தனா........................” என்று
காதலோடு அழைத்தவள்,
“என்ன இது? சிறுபிள்ளை மாதிரி இப்படி அழுதுகிட்டு...ஷேம்... ஷேம்...பப்பி
ஷேம்...” என்று சிரிக்க முயல, அவனோ இன்னுமாய்
இறுக்க கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தான்..!
அதைப் பார்த்தவளின் கண்களிலும் ஈரம் எட்டி
பார்த்தது..!
தன்னால்தான் அவனுக்கு இந்த நிலை என் புரிய, வேதனையில் துடித்துக்கொண்டு இருந்த அவனின் அழுத்தமான இமைகளை
மெல்ல நீவி விட்டவாறு,
“சாரி..........” என்றாள் தயக்கத்துடன்...
“சாரி..? உன் சாரியை கொண்டு போய் குப்பையில் போடு... உன்னை யாரு டி அங்க வர சொன்னது? “ என்று வேதனையில்
கோபமாக மாறி அவளை முறைக்க,
“அதான் சொன்னேனே....! உங்களை பார்க்காமல் என்னால இருக்க முடியல தனா....அதுதான்..” அவன் மார்பில் சாய்ந்து இருந்தவள், அவன் முதுகை வருடியபடி சொல்ல,
“ஏன் என்னை பார்க்காமல் உன்னால இருக்க முடியல..? “ என்றான் புருவங்கள் முடிச்சிட..
“தெரியலையே...ஆனால் உங்களை விட்டு என்னால ஒரு நொடி கூட பிரிந்து
இருக்க முடியாதுனு புரியுது..” என்று உதட்டை பிதுக்க,
“ஏன்..? ஏன் டி? ஏன் என் மீது இவ்வளவு
பைத்தியமாக இருக்க..? “ என்று தழுதழுக்க,
“ஏன்னு தெரியலையே....”
என்று அப்பாவியாக விழி விரிக்க, அவளின் அந்த குழந்தைதனமான செயலில் தன் மகளை கண்டான்..!
சில நேரம் நிகா குட்டியும் இப்படித்தான்... தெரியலை.. புரியலை
என்று விழி விரிப்பாள்..!
தன் மகளின் அந்த ஆக்சன் இவளிடம் இருந்துதான் வந்திருக்கிறது...
என்று கண்டு கொண்டவனுக்கு மெல்ல சிரிப்பு வந்தது..!
அதுவரை அழுத்தி வந்த பாரம் குறைய, மனம் கொஞ்சம் லேசாகி விட
இப்பொழுது குறும்பு மீண்டு இருந்தது..! அவளை அணைத்தவாறு
“எனக்கு தெரியுமே....” என்று ஒற்றை கண் சிமிட்ட,
“என்னது… சொல்லுங்களேன்...” என்றாள் அவளும் ஆர்வமாக..!
“அதுவா.... அது வந்து...”
என்று இழுக்க,
“அது வந்து ..? அதான்
வந்திட்டிங்களே... சீக்கிரம் சொல்லுங்க...” என்று செல்லமாக சிணுங்க,
“அது வந்து... அதற்கு பெயர் தான்
கா..............த............ல்.......” என்று
காதல் என்பதை ஒவ்வொரு எழுத்தாக நிறுத்தி சொல்ல, அதைக்கேட்டவள் விலுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்தவள்
“வாட்? காதலா ? “ என்று அவள் விழி விரிக்க,
“எஸ் மை டியர் பொண்டாட்டி.... காதல் தான்..! நீ என் மேல
வச்சிருக்கிற காதல் தான் உன்னை அப்படி தவிக்க வச்சிருக்கு....” என்று அவளின் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்ட,
ஓரளவுக்கு அது தெரிந்து இருந்தாலும், அதுதானா என்று தெளிவாக தெரிந்திருக்கவில்லை..!
அதுவரை எந்த ஆணிடமும் மயங்கி இராதவள்..! மற்ற பெண்களைப்போல பார்க்கும்
ஆண்களை சைட் அடித்தோ, ரகசியமாய் ரசித்து
பார்த்ததில்லை..! அவளுக்கு அதற்கெல்லாம் மனதில் இடமுமில்லை..!
எப்படியாவது வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்... நன்றாக படித்து, நல்ல வேலைக்கு போய் தன் அன்னையை நன்றாக பார்த்துக்க வேண்டும்
என்ற குறிக்கோளுடன் ஓடிக்கொண்டிருந்தவளுக்கு மற்றதெல்லாம் கருத்தில் படவில்லை..!
அதே நிலைதான் ஷ்யாமிடமும் தொடர்ந்தது..!
அவன் தான் தன் வருங்கால கணவன் என்று நிச்சயித்த பிறகு கூட ஏனோ
அவனிடம் மனம் கிளர்ந்ததில்லை..! அவனும் அழகன் தான்..!
எத்தனையோ பெண்கள் அவனை அலுவலகத்தில் சைட்
அடித்திருக்கிறார்கள்..! அவளின் நிச்சயத்திற்கு பிறகு ஷ்யாம் பற்றி அவளின் தோழிகள்
அவள் காதில் ஓதியது..!
ஆனால் அவன் ஸ்ரீராமன்..! யாரையும் ஏறெடுத்து கூட
பார்த்ததில்லை.. அவளைத்தவிர..
“நீ ரொம்ப லக்கி டீ..” என்று அவள் தோழிகள் ஓட்டும்பொழுது கொஞ்சம்
கர்வமாக, பெருமையாக
இருக்கும் தான்..!
ஆனாலும் ஏனோ அவள் மனம் ஓடிச்சென்று அவனிடம் சரணடையவில்லை..!
ஆனால் விகர்த்தனன்....?
எப்படி அவள் மனதை பாதித்தான் என்று தெரியவில்லை..! ஆனாலும்
அவனிடம் அவள் மனம் மயங்கி போனது..!
யாரிடமும் மொட்டவிழாத அவளின் பெண்மை அவனைக் கண்டாலே மலர்ந்து
மனம் வீசுகிறதே..!
அதுவரை அனுபவித்திராத பலவித உணர்வுகள் அவன் அருகாமையிலும், அவனிடம் மட்டும்தான் கண்டாள்..!
அதற்கெல்லாம் என்ன காரணமாம்..?
காதல்...!
மனதில் காதல் இல்லையென்றால் அவனுடன் கூடி இருக்க முடியாது
அவளால்..!
என்னதான் அவனின் நன்மைக்காக என்று அவன் இழுத்த இழுப்புக்கு
சென்றிருந்தாலும், அவனோடு ஒன்றர
கலந்திருந்தாலும், அவள் மனதில் காதல்
இல்லையென்றால், அவனின் தீண்டல்
அவளுக்கு அருவருத்திருக்கும்..!
அவனின் அணைப்பு அவளுக்கு கசந்து வழிந்திருக்க வேண்டும்..!
மாறாக தித்தித்ததே..! அவனின் குறும்பு பார்வை, அவனின் அருகாமை... அவனின் தீண்டல், அவனின் தொடுகை... எல்லாமே தித்தித்ததே..!
அப்படி என்றால் இதற்கு பெயர்தான் காதலா?
ஆம் என்று இப்பொழுது தெளிவாகிவிட,
“யெஸ். ஐ லவ் ஹிம்...! ஐ லவ் திஸ் ஹிட்லர்... எனக்குள்ளும் காதல்
மலர்ந்து விட்டது...” என்று அவள் உள்ளம் துள்ளி குதித்தது..!
அடுத்த கணம் அவள் முகம் வாடிப்போனது..!
ஆனால் அவன்..? தன் கணவன்...?
“அவன் மனதிலும் என் மீது காதல் வந்திருக்குமா ? நான் காதலிக்கும் இதே
அளவு அவனும் தன்னை நேசிக்கிறானா? தன் மகளுக்காக அல்லாமல்
தனக்காக அவளை நேசிக்கிறானா? “ என்று அறிய வேண்டும்
போல இருந்தது..!
“ஓஹோ... ..! நான் உங்க மேல வச்சிருக்கிற காதல் தான் என்னை
அப்படி தவிக்க வச்சிருக்குனா, நீங்கள் ஏன் அவ்வளவு
தவிச்சிங்களாம்? “ என்று அவன் மீசையை பிடித்து செல்லமாக இழுத்தவாறு, மறைமுகமாக அவன் மனதை அறிந்து கொள்ள முயன்றாள்..!
அவன் தவித்த நொடிகள் மீண்டும் நினைவு வர, அவன் முகத்தில் அப்படி ஒரு வேதனை வந்து போனது..! தன் கண்களை
அழுந்த மூடியவன்,
“இன்னுமா உனக்கு தெரியவில்லை...? “ என்று அவளை குறும்பாக பார்க்க,
“தெரியலையே...” என்று அவளும் இதழ் பிதுக்கி சிறுபிள்ளையாய்
சிணுங்க,
அவளின் திரண்ட இதழ்களை தன் கட்டை விரலால் மிருதுவாய் வருடியவன்,
“ஹ்ம்ம்ம் உனக்கு வந்த அதே வியாதிதான் என்னையும்
தொற்றிக்கொண்டது....” என்று சிறு வெட்கத்துடன் புன்னகைக்க, தன் கணவனின் அந்த வெட்க புன்னகையை இமை தட்டி ரசித்தவள்,
“அப்படியா? என்ன வியாதி அது
நிகாப்பா...? “ என்று அப்பாவியாக
விழி விரித்தாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்..!
“ஹ்ம்ம்ம் தெரிஞ்சுகிட்டியே கேட்கறியே டி...ராட்சசி...” என்று
அவளின் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்ட,
“ம்ஹூம்... தெரியலையே... என்ன வியாதி அது ? எனக்கு வந்தால் உங்களுக்கும் வரும்னா , கொரானா மாதிரியா ? “ அவளும் வேண்டும் என்றே அவனை சீண்டினாள்...!
“ஹா ஹா ஹா.. அப்படித்தான்.. இல்லை இது அதுக்கும் ஒரு படி
மேல...ஆனால் கொரோனா மாதிரி லங்ஸ் ஐ பாதிக்காது..! உடனே ஆளையும் வீழ்த்தாது..! இதயத்தை பாதித்து, கொஞ்சம் கொஞ்சமாக ஆளை கவிழ்க்கும்...” என்றான் மந்தகாச
புன்னகையுடன்..!
“ஓ... அப்படியா? கண்டிப்பா அப்ப இது
புது வியாதிதான்...! அதன் பெயரைத்தான் சொல்லுங்களேன்..! நானும் தெரிஞ்சுக்கறேன்..”
என்று குறும்பாக அவனை சீண்ட,
“ஹ்ம்ம்ம் அந்த வியாதிக்கு பெயர் என்னனா.......... ? “ என்று இழுத்து , நிறுத்தி, அவளின் கண்களை
காதலுடன் நோக்கியவன், அவளின்
விழிகளுக்குள் தன் விழிகளை கலக்க விட்டவன்,
“கா....த..........ல்.....” என்றான்...! அவனின் இத்தனை நாட்கள் சொல்லியிராத
காதல் எல்லாம் அந்த பார்வையிலும், அந்த மூன்றெழுத்து
வார்த்தையிலும் கொட்டிகிடந்தது...!
முதல் முறையாக தன் கணவனின் வாயில் இருந்து காதல் என்ற
வார்த்தையே கேட்கவும் அவளின் இமைகள் சாசர் போல பெரிதாக விரிந்தன..!
இந்த ஒரு வார்த்தையை கேட்கத்தானே இத்தனை நாளாக
காத்திருந்தாள்..!
எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதவளாய்...! அவள் கணவன் அவளை
ஆராதித்தாலும், அவளிடமே தஞ்சம்
அடைந்து இரவு முழுவதும் ஆளிங்கனம் செய்தாலும், அவளின் மனதில், சிறு மூளையில் ஒரு குறை இருந்து கொண்டே தான் இருந்தது..!
இத்தனை நாட்களாக புரியாத அந்த ஏதோ ஒன்று இப்பொழுது
புரிந்துவிட்டது..!
அது... அவள் கணவன் அவளை காதலிக்கவில்லை..! அவன் மகளுக்காகத்தான்
அவளை மனைவியாக்கினான்..! மனைவியானதால் அவளை மனைவியாய் நாடுகிறான்...
ஆனால் காதல்..?
அது தன்மீது அவனுக்கு வரவில்லையே என்ற குறை..!
இப்பொழுது அவனின் வாயாலும், உணர்வாலும் அதை அவன் வெளிப்படுத்திவிட, பெண்ணவளோ துள்ளிக்குதித்தாள்..! விண்ணில் பறந்தாள்..! மலை
உச்சியில் ஏறி ஓ வென்று கத்தினாள்...!
நம்பாமல் தன் கணவனை ஆச்சர்யமாக பார்த்தவள்
“நிஜமாகவா...? “ என்று இன்னுமாய் விழிகளை அகல விரிக்க, அதில் முற்றிலும் கவிழ்ந்து போனவன், அவளின் இமைகளில் அழுந்த முத்தமிட்டவன்,
“எஸ் மை டியர் பொண்டாட்டி.... காதல் தான்... எனக்கும் இப்ப தான்
தெரிந்தது..! நான் உணரும் உணர்வுக்கு என்ன
பெயர் என்று
ஏற்கனவே எத்தனையோ விதமான உணர்வுகளையும் அனுபவங்களையும்
அனுபவித்த நான் இந்த காதல் என்ற உணர்வை மட்டும் உணர்ந்தது உன்னிடம் தான்..!
அதனால்தான் எல்லாவற்றிலும் நீ எனக்கு மேலாக தெரிந்து இருக்கிறாய்
கண்மணி..!
உன் மீது கொண்ட காதல் தான், உன்னை என் மனைவியாகி
என் அருகில் கொண்டு வர செய்திருக்கிறது..!
ஆனால் அதை சரியாக புரிந்து கொள்ள தெரியவில்லை எனக்கு..!
நிகாவுக்காக என்று மனதில் பதிய வைத்துகொண்டு இருந்தேன் போல..!
ஆனால் நீ மயங்கி சரிந்த பொழுது, எங்கே உனக்கு ஏதோ
ஆகிவிட்டது... என்னை விட்டு நீ போய் விடுவாயோ என்ற பயம் வந்த பொழுது தான், எனக்கு என் மனம்
புரிந்தது..!
நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க
முடியவில்லை..!
இந்த உணர்வுக்கு பெயர்தான் காதல்..!
நீ இல்லாமல் நான் இல்லை என்ற நிலையை அப்பொழுதுதான் உணர்ந்தேன்.!
ஐ லவ் யூ சுபி..! ஐ லவ்
யூ மை ஸ்வீட் ஹார்ட்..! ஐ லவ் யூ மை டியர்
பொண்டாட்டி..! “ என்று காதலில் தழுதழுத்தவன், அவளின் முகத்தை கையில் ஏந்தி தன்னவள் முகமெங்கும் முத்த மழை
பொழிந்தான்..!
தன் கணவனின் அன்பு மழையில் திக்குமுக்காடி போனாள் சுரபி...! அவன்
கொடுத்த ஒவ்வொரு முத்தத்தையும், பத்திரமாக
பத்திரபடுத்தியவள்…அவன் கொஞ்சம்
சகஜநிலைக்கு வந்ததும்,
“எப்பொழுது என் மீது உங்களுக்கு இந்த காதல் வந்துச்சாம்? “ என்று ஆர்வமாக கேட்க,
“தெரியலையே....” என்றான்
அவளைப் போலவே தன் உதட்டை பிதுக்கி சிணுங்கியவாறு..!
அவன் தன்னை கலாய்க்கிறான் என்று கண்டு கொண்டவள், செல்லமாக அவனை முறைக்க, அவனும் வாய்விட்டு உல்லாசமாக சிரித்தவன்,
“நிஜமாதான் டி... எப்ப எப்படி எங்க இந்த காதல் வந்தது என்று யாமறியேன்
பராபரமே..! சத்தியமா தெரியவில்லை..! ஆனால்
கண்டிப்பாக உன்னை பார்த்த உடனே எல்லாம் ஒன்றும் உள்ளுக்குள் புரளவில்லை..!
என் பிரின்சஸ் தான் என்னை முதலில் இம்ப்ரெஸ் பண்ணியது..!
அப்பொழுதெல்லாம் அவளின் அம்மாவாகத் தான் உன்னை பார்க்க
ஆரம்பித்தேன்..!
நீ இன்னொருவன் மனைவி என்றதும் உன்னிடம் கண்ணியமாக நடந்து
கொண்டேன்..!
எப்பொழுது, நீ ஷ்யாமின் மனைவி இல்லை...ஷ்யாம் தான் உன்னை விரும்பி பெண் கேட்டு நிச்சயித்தான் என்று
தெரிந்ததோ அப்பொழுதுதான் உன் மனதில்
கண்டிப்பாக ஷ்யாம் இருந்திருக்க மாட்டான் என்பதும் உறைத்தது.
அந்த தைர்யத்தில் தான் உன்னை
கட்டாயபடுத்தி, மிரட்டி, உன் கழுத்தில் தாலி கட்டினேன்..!
மஞ்ச கயிறு மேஜிக் என்பார்களே...அது வேலை செய்து விட்டதோ என்னவோ? கொஞ்சம் கொஞ்சமாக
நானும் காதலில் விழுந்து விட்டேன் போல..!
ஆனால் அது காதல் என்று இப்பொழுதுதான் புரிந்தது..! நீ இல்லாத
ஒரு நொடி கூட நான் இருக்க முடியாது என்று இப்பொழுது புரிந்து கொண்டேன்..!
ஐ லவ் யு டி... லவ் யூ சோ மச்...” என்று தழுதழுத்தவாறு அவளை
மீண்டும் இறுக்க அணைத்து அவளின் முன் உச்சி நெற்றியில் அழுந்த இதழ் பதித்தான்..!
பின் அவளை காதலுடன் பார்த்தவன்,
“சரி... நீ சொல்லு.. எப்ப
இருந்து என்னை உனக்கு பிடித்தது...” என்றான் சிறு புன்னகையுடன்..!
“நீங்க சொன்ன அதே பதில்தான் இங்கயும்..! எப்ப
எப்படி எங்க இந்த காதல் எனக்குள்ளே வந்தது என்று யாமறியேன் பராபரமே..! “ என்று
அவனைப் போலவே உதட்டை பிதுக்கி சொல்ல,
அவளின் இதழில் மென்மையாக முத்தமிட்டவன்
“இப்ப தெரியும் பார்....” என்று கண் சிமிட்டி சொல்ல, அவளும் நாணத்தோடு புன்னகைத்தவள்,
“அன்று ஆபிஸ்ல், அம்முவை காணாமல் தேடிய
பொழுது, அவளை
கையில் தூக்கி வைத்துக் கொண்டு நீங்க நின்று இருந்த அந்த கோலம் அப்படியே என்
மனதில் பதிந்து விட்டது நிகாப்பா..!
அப்பொழுது அவளின் தந்தையே அவளை ஆசையாக தூக்கி வைத்திருப்பதை
போல..!
அவளுக்கு ஒரு தந்தை இருந்தால் எப்படி இருக்குமோ நீங்க அதே
மாதிரி தோன்ற... அந்த பிம்பம் தான் என் மனதில் ஆழ பதிந்து விட்டது.!
அடிக்கடி அந்த காட்சியை மனதில் நினைத்துக்கொள்வேன்...! அப்படியே
சிலிர்த்து போகும்.!
சிறுவயதில் இருந்தே தந்தையின் பாசத்தை அனுபவித்திராதவள் நான்..!
அந்த ஒன்றுக்காக எத்தனையோ முறை ஏங்கி தவித்திருக்கிறேன்.!!
அப்படி ஒரு தந்தையாய் நீங்க அம்முவுடன் பழக, அவளுக்கு வேண்டிய தந்தை பாசத்தை, அன்பை அவள் மேல் பொழிய, என் மனமும் என்னை அறியாமல் உங்களிடம் சாய்ந்து விட்டது..! “
என்றாள் சிறுவெட்கத்துடன்..!
“வாவ்... சூப்பர் டார்லிங்... அப்ப நம்ம காதலுக்கு நிகா
குட்டிதான் புள்ளையார் சுழி போட்டானு சொல்லு....மை ஏஞ்சல்..! என் வாழ்வில் வராமல்
வந்த தேவதை அவள்..” என்று தன் மகளின் நினைவில் ஒரு நொடி கண்மூடி லயித்து
போனான்..!
அதைக்கண்டு அவளுக்கும் பெருமையாக இருந்தது..! இன்னும் வாகாக
அவன் மஞ்சத்தில் சாய்ந்து கொண்டவள்,
“ஆனாலும் நீங்க என்னை கட்டாயப்படுத்தி மணந்ததால்
உங்கள் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டிருந்தேன்..!
ஆனாலும் அது எல்லாம் உங்களை பார்க்கும் வரைக்கும்தான்...உங்களை பார்த்து
விட்டால் என் உடலும் மனமும் பாகாக கரைந்து போனது..” என்றவாறு கண்கள் பளபளக்க, கன்னங்கள் சிவக்க, தன் கணவனின் மஞ்சத்தில் கோலமிட்டாள் மங்கை..!
“ஹா ஹா ஹா அதுதான் எனக்கு தெரியுமே...” என்று கண்சிமிட்டியவன்
“இவ்வளவு காதலை வைத்துக்கொண்டு ஏன் டி
தள்ளிப்போன? எத்தனை தரம் நான் ஆசையாக உன்னிடம் வந்தேன்... நீ ஏன் என்னைத் தள்ளி நிறுத்தினாய்..?” என்று ஆதங்கத்துடன் கேட்க,
“காதல்.....!
காதல் இல்லாமல் வெறும் உடல் சுகத்துக்காக நீங்க
என்னை தேடுறீங்கனு ஒரு வெறுப்பு..! அதுதான் உங்கள் ஆசையை நிறைவேற்ற தடுத்தது..”
“ஹ்ம்ம்ம் கரெக்டு தான்...! என்னுடைய காதலை சொல்லி, அதன்பிறகு உன்னிடம் கணவனாக நெருங்கியிருந்தால்
இவ்வளவு குழப்பங்கள் வந்திருக்காது..!
ஆனால் எனக்குத்தான் இது காதல் என்றே தெரியவில்லையே..!
எப்படியோ..! இப்பயாவது நாம் இருவரும் நம்முள்ளே இருக்கும்
காதலை புரிந்து கொண்டோமே..அதுவரைக்கும் சந்தோஷம்...” என்று புன்னகைக்க, அவளும் மலர்ந்து சிரித்தாள்.
தன் மனையாளின் விரிந்த புன்னகையை ஆசையாக ரசித்தான்..!
“அப்புறம் சுபி... உனக்கு ஒரு குட் நியூஸ்...” என்றான் கண் சிமிட்டி குறும்பாக சிரித்தபடி..!
“என்னது? “ என்று கண்களை அகல
விரிக்க, அருகில் இருந்து ஸ்வீட்
பாக்ஸ் இல் இருந்து ஸ்வீட்டை எடுத்து, அவள் வாயில் வைத்தவன், அவள் கடிக்கவும் அதிலிருந்தே அவனும் ஒரு வாய் எடுத்துக் கொண்டவன்
“என்னுடைய இரண்டு தேவதைகளோடு மூன்றாவதாக எனக்கு
ஒரு குட்டி தேவதை வரப்போகிறாள்...” என்று
கண் சிமிட்ட, அவன் சொன்னதின்
அர்த்தம் புரிய சில நொடிகள் ஆனது பெண்ணவளுக்கு..!
அதன் அர்த்தம் புரியவும், மீண்டும் கண்களை அகல விரித்தவள்,
“நிஜமாகவா? “ என்று ஆச்சரியத்தில்
விழி விரித்தவள், அவசரமாக நாள் கணக்கை
எண்ணிப் பார்த்தாள்.
இரண்டு மாதங்கள் கடந்து இருந்தது..!
அவளுக்கு இருந்த உற்சாகத்தில் அதை கவனிக்க
மறந்து இருந்தாள்..!
“இது எப்படி? “ என்று கேள்வியாக அவனை
நோக்க
“ஹா ஹா ஹா நாம ரெண்டு பேரும் தினமும் நைட் ஒரு
நிமிடமும் வேஸ்ட் பண்ணாம , சின்சியரா உழைத்து, எழுதிய பரீட்சையின்
ரிசல்ட்... இன்னொரு குட்டி தேவதை...!”
என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்ள, அவளோ
வெட்கத்தோடு அவனை பார்த்து சிரித்தாள்..!
அதே நேரம் சுரபிக்கு, ஸ்வாதியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது..! காதலை
இப்பொழுதுதான் உணர்ந்தான் என்றால், அவன் முதல் மனைவி...
ஸ்வாதியை காதலிக்கவில்லையா?
அவள் கர்ப்பமாக இருந்தாள்..! ஏழாவது
மாதத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்துதானே இறந்துவிட்டாள் என்று கேள்விபட்டாள்..!
அப்படி இருக்க, அந்த குழந்தை....? என்று பல கேள்விகள்
அவள் உள்ளே சுழற்றி அடிக்க, தன் கணவனை யோசனையாக
பார்த்தாள்..!
அவளின் முகத்தில் இருந்தே அகத்தை படிப்பவன்
ஆயிற்றே..!
“என்னடா? என்கிட்ட என்ன கேட்கணும்..? எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேள்.. நமக்குள் இனி ஒளிவு மறைவு
என்று எதுவும் இருக்க கூடாது...” என்று ஊக்கபடுத்த, அவளும் தைர்யத்தை வரவழைத்துக்கொண்டு,
“வ... வந்து...ஸ்வாதி.... உங்க பர்ஸ்ட் வைப்.... அவங்களை நீங்க
காதலிக்கலையா? “ என்றாள் தயக்கத்துடன்..!
அதைக்கேட்டதும் அவன் முகத்தில் ஒரு நொடி இறுக்கம் வந்து
போனது..!
ஒரு வெறித்த பார்வையை செலுத்தியவன், ஒரு பெருமூச்சை எடுத்துவிட்டு முதன் முறையாக தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தான்..!
Next episode mam ?????
ReplyDeleteWhat happened mam any health issues?????
ReplyDeleteim fine pa. little busy. will upload the pending epis soon
Delete