மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Showing posts with label varamal vantha devathai. Show all posts
Showing posts with label varamal vantha devathai. Show all posts

Thursday, February 16, 2023

வராமல் வந்த தேவதை-42(Final)

 


அத்தியாயம்-42

 

இரண்டு வருடங்களுக்கு பிறகு

ன்று வெள்ளிக்கிழமை..!  

மாலை ஆறு மணி அளவில் அதிவேகமாக வந்து நின்றது அந்த ஆடி கார்..!  

அதிலிருந்து வேகமாக இறங்கியவன்...  தன் வீட்டிற்குள் இருந்த பூங்காவை நோக்கி துள்ளலுடன் நடந்தான் விகர்த்தனன்..!  

அவனை சற்று தொலைவிலிருந்து கண்டுகொண்டதுமே அப்பா.....  என்று சந்தோஷ கூச்சலிட்டவாறு  ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்குவதற்கு ஓடுபவளைப் போல வேகமாக ஓடிவந்தாள் நிகா குட்டி..!

அவளைத் தொடர்ந்து தன் குட்டிப் பாதங்களை எடுத்து வைத்து வேகமாக ஓடி வர முயன்று கொண்டிருந்தாள் அடுத்து ஒரு குட்டி தேவதை..!

இருவரும் ஒரே நிறமான பிங்க் நிறத்தில் இலகுவான காட்டன் கவுன்களை அணிந்திருந்தனர்..!  

“பாத்து டி... விழுந்திடாதிங்க...” .  என்று அவர்களை அதட்டியபடி அவர்களின் பின்னால் ஓடி வந்தாள் சுரபி..!  

தன்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்த அந்த மூன்று தேவதைகளையும் ரசித்தபடி ஒரு கணம் அப்படியே மெய் மறந்து நின்று விட்டான் விகர்த்தனன்..!

அதற்குள் முதலில் அவனை எட்டியிருந்த நிகா அவன் காலை கட்டிக்கொள்ள, அதில் விழித்துக்கொண்டவன்...  குனிந்து அப்படியே தன் மகளை  அள்ளிக் கொண்டவன்...  

அடுத்து ஓடி வந்து கொண்டிருந்த அடுத்த குட்டி தேவதையை நோக்கி வேக எட்டு  வைத்தவன்,  அவளையும் குனிந்து மற்றொரு கையால் தூக்கிக் கொண்டான்..!  

அந்த சின்ன குட்டியும் மலர்ந்து சிரித்து பா... என்று அப்பொழுதுதான் முளைத்திருந்த ஒன்றிரண்டு பால் பற்களை காட்டி வெள்ளையாய் சிரித்தவள்...

அவன் கழுத்தை கட்டிக்கொண்டு  அவன் கன்னத்தில் எச்சில் முத்தமிட,  அவளுக்கு போட்டியாய் நிகா குட்டியும் அவனின் மற்றொரு கன்னத்தில் இச் என்று முத்தமிட்டாள்..!  

அதில் இன்னுமாய் சிலிர்த்துப் போனவன்...  தன் இரண்டு மகள்களையும் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு,  இருவருக்கும் முத்தங்களை வாரி வழங்கினான்..!  

அவர்களை தொடர்ந்து வந்த சுரபி... தன் மகள்களை ஒரு வித பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..!  

உடலுக்கு இலகுவான அழகிய சந்தன நிறத்திலான காட்டன் புடவை...தளர  பின்னிய நீண்ட கூந்தல்..!  

அதில் அவனுக்கு பிடித்தமான மல்லிகை பூக்களை நெருக்கமாக தொடுத்து, அதை மடித்து நான்கு சரமாக அழகாக தொங்கவிட்டு வைத்திருந்தாள்.  

வகிட்டில் சின்னதாய் குங்குமம்.!  இதழ்களின் அழகாக விரிந்திருந்த புன்னகை..!  

முன்பு இருந்ததை விட இன்னும் மெருகேறி இருந்தது அவளின் பட்டு மேனி..!

கன்னங்கள் இன்னும் கொஞ்சம் குண்டாகி இருக்க, இதழ்களும் சற்றே பெருத்து இருந்தது..!  

இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்த பொழுதும் சிக்கென்று இருந்த அவளின் ஒல்லியான சிற்றிடை எப்பொழுதும் போல இப்பொழுதும்,  என்னை கட்டிக்கோ என்று அவனை தாபத்துடன் அழைத்து வைத்தது..!

தன் மனைவியை  கண்களால் ஒரு முறை ரசித்து பார்வையாலேயே அவளை விழுங்கிக் கொண்டிருந்தான்..!  

தன் கணவனின் அந்த பார்வை... அவளுக்கே அவளுக்கான பிரத்தியேக பார்வையில்  சுரபியின் கன்னங்கள் தானாக ரோஜாக்களை பூக்க வைத்தது..!  

அந்த ரோஜா பூக்களை நிமிண்டி பார்க்க ஆசை வர,  தன் மகள்களை இரு கையால் தூக்கியபடியே அவளை நோக்கி வந்தான் விகர்த்தனன்..!

அவளின் பார்வையில் தெரிந்த பொறாமையை கண்டு கொண்டவன்,  

“ஹோய் பொண்டாட்டி... என்ன பொறாமையா? “  என்று கண்சிமிட்டி கிண்டலாக கேட்க

“ஆமா...  பொறாமைதான்....”  என்று முகத்தை நொடித்தாள்..!  

“ஹா ஹா ஹா வேணும்னா சொல்லு...!  உன்னையும் இப்பவே தூக்கிக்கிறேன்...” என்று சில்மிஷமாக சொல்ல,

“சீ போங்க... புள்ளைங்க முன்னாடியா? “ என்று செல்லமாக சிணுங்கினாள்..!

“ஹ்ம்ம்ம் கவலைப்படாதே செல்லம்..!  நைட்டு  என் பிரின்சஸ்கள்  தூங்கின பிறகு உன்னை இப்படி தூக்கிக்கிறேன்...”  என்று ரகசியமாக காதில் சொல்ல அவளுக்கோ மீண்டும் கன்னங்கள் சிவந்து போனது..!  

கூடவே அப்பொழுதே  அன்றிரவு நடக்க இருக்கும் அவன் சொன்ன கற்பனையும் கண் முன்னே வர,  அவளுக்கு வெட்கமாக இருந்தது

கூடவே அப்பொழுதிலிருந்தே அந்த நேரத்தை ஆவலாக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டாள்..!  

*****

ன் மகள்களை அள்ளிக்  கொண்டவன்...தன் ஆடையை கூட மாற்றாமல்  அங்கிருந்த பூங்காவிற்கு சென்று அவர்களோடு விளையாட ஆரம்பிக்க,  சுரபியும் அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டு அவர்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்..!  

விகர்த்தனன் தன் மகள்களுடன் விளையாண்டு கொண்டிருந்தாலும்,  நொடிக்கொருதரம் அவன் பார்வை அவளிடமே வந்து நின்றது..!  

அதை கண்டு அவளுக்கு பெருமையாகவும் கர்வமாக இருந்தது

“என் புருஷன்... என் தனா...”   என்று மனதிற்குள்  சொல்லிக் கொண்டவள்  நினைவு இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்றது..!  

*****

ருவரும் தங்கள் காதலை உணர்ந்த பிறகு...அதோடு சுரபி கருவுற்றிருப்பதும் தெரிய,  அவளை தங்கத்தட்டில் வைத்து தாங்கினான் விகர்த்தனன்..!  

அதுவும் மூன்றாவது மாதத்தில் அவளுக்கு மார்னிங் சிக்னஸ் ஆரம்பித்துவிட,  அவள் ஒவ்வொரு முறையும் வாமிட் பண்ணும் பொழுது துடித்து போனான்  விகர்த்தனன்..!

சுரபிக்கு இது இரண்டாவது அனுபவம் என்பதால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை..!

ஆனால் அவன்தான் அவளின் ஒவ்வொரு செயலுக்கும் பதறி தவித்தான்..!  

அதைக் கண்டவளுக்கு ஆச்சரியமாக இருந்தது

கூடவே தன் முதல் குழந்தைக்கு இப்படி எல்லாம் தாங்க,  கணவன் இல்லையே என்று  இப்பொழுது வருத்தமாக இருந்தது..!  

அதை எல்லாம் தீர்த்து வைப்பதாய்,  அவளை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டான் விகர்த்தனன்.

ஏழாம் மாதம் ஊரையே கூட்டி அவளுக்கு விமரிசையாக வளைகாப்பு நடத்தினான்..!  

நிகா வயிற்றில் இருந்த பொழுது,  இந்த மாதிரி செய்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் எப்பொழுதுமே அவள் மனதில் இருக்கும்

அவளின் வருத்தம்...ஏக்கத்தை போக்குவதற்கு என்று தன் இரண்டாம் மகளுக்கு சீமந்த விழாவை விமரிசையாக கொண்டாடினான்..!  

அவள்  நடக்க சிரமப்படும் பொழுதெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் அவளை அப்படியே கரங்களில் அள்ளிக் கொண்டு செல்வான்..!  

இரவு வீங்கியிருக்கும் அவள் பாதத்திற்கு ஒத்தடம் கொடுத்து... கால் அமுக்கி விட்டு...நடுவில் அவள் பாத்ரூம் செல்ல எழுந்தால், அவனும் உடனே எழுந்து அவள் உடனே சென்று  என  அவளை அப்படி கவனித்துக் கொண்டான்..!  

தன் கணவனின் அன்பில்...  அவன் காதலில் ரொம்பவும் உருகித்தான் போனாள் பெண்ணவள்

லேபர் வார்டில் அவளை அனுமதித்துவிட்டு அவளைவிட அவன் பயந்து போனான்..!  

அப்பொழுதுதான் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது எவ்வளவு கடினமான ஒன்று என்று புரிந்தது..!

அவளின் கையை நடுக்கத்துடன் பற்றிக்கொண்டவன்,  

“சுபி மா...  நீ இப்படி கஷ்டப்படுவேனு  தெரிஞ்சிருந்தா நமக்கு நிகா மட்டுமே போதும் என்று நிறுத்தியிருக்கலாம்...!  தெரியவில்லையே..!  எனக்கு நீ இப்படி கஷ்டப்பட வேண்டும் என்று தெரியவில்லையே...”  என்று கண்ணீர் வடித்தான்..!

அவ்வளவு பெரிய ஆண்மகன்..! இதுவரை எதற்காகவும் கண்ணீர் வடித்திராதவன்.! தன் பெற்றோர்களின் இழப்பை கூட சர்வ சாதாரணமாக கடந்து வந்தவன்..!

அவள்...தன் மனைவி என்று வரும்பொழுது மட்டும் ரொம்பவும் உடைந்து போனான்..!

அவள் மயங்கி சரிந்தபொழுது ரொம்பவும் உடைந்து போய் கண்கலங்கினான் என்றால், அதற்கு அடுத்து இப்பொழுதுதான் மீண்டும் உடைந்து கண்ணீர் சொரிந்தான்..!

ஏனோ ஸ்வாதி அவன் குழந்தையை சுமந்த பொழுது கூட அவனுக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை..!  

அதுவே சுரபியை  காணும்பொழுது தன் வாரிசு... தன் மனைவி என்று நெஞ்சம் பொங்கியது..!

அவளின் சிறு முகச்சுளிப்பு கூட அவனுக்கு வேதனையாக இருந்தது..!  

ஏன் இந்த வித்தியாசம் என்று ஆராய்ந்தவனுக்கு உடனேயே தெரிந்துவிட்டது..!  

காதல்..!  

ஆம் காதல் தான்..!

இந்த காதல் தான்  எவ்வளவு அற்புதமானது..!  ஸ்வாதியின் மீது காதல் இல்லாததால் தான் அவளால்  அவனை அவளிடமே பிடித்து வைக்க முடியவில்லை..!  

அப்படி எதுவும் உள்ளுக்குள் புரளாதலால் தான் அவளிடம் பெரிதாக நாட்டம் இல்லை..!  

ஆனால்  இவள்..? “ என்று யோசித்து அவளை மீண்டும் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தான்..!

******

ப்படியோ  ஒரு அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு தான்  தன் மகளை பெற்றெடுத்தாள் சுரபி..!  

அப்பொழுது தான் பிறந்த பச்சிளம் குழந்தையை கையில் நடுக்கத்துடன் ஏந்திய விகர்த்தனனுக்கு  சொல்லவே வேண்டாம்..!  

அப்படி ஒரு மகிழ்ச்சி... பேரானந்தம்..! ராஜ போதையை விட அதிகமான போதையை, கிறக்கத்தை கொடுத்தது தன் மகளை கையில் ஏந்திய அந்த நொடி..!   

நிகாவை முதன் முதலில் தூக்கிய பொழுது எப்படி அவன் உள்ளே சிலிர்த்ததோ  அதேபோன்று இந்த குட்டி ரோஜாவை கைகளில் ஏந்திய பொழுதும் அவன் உள்ளே அப்படி ஒரு சிலிர்ப்பு..!  

கொஞ்சம் கூட பயமில்லாமல் லாவகமாக கைகளில் ஏந்திக் கொண்டான்..!  

அன்றிலிருந்து தன் இரு மகன்களுக்கும் அவன் தான் பார்த்து பார்த்து எல்லாம் செய்வது..! அலுவலக நேரம் தவிர, அவனுக்கு அவன் இரு தேவதைகள் தான் உலகம்..!

தன் கணவனை நினைத்து பெருமையாக இருந்தது..!  அவளை கொண்டாடுவதோடு அவள் கேட்பதை  எல்லாம் மறக்காமல் செய்துவிடுவான்..!

சுரபியும் பெரிதாக ஒன்றும் கேட்க மாட்டாள் தான்..! அவளாக தன் கணவனிடம் கேட்டது ஒன்றே ஒன்றுதான்..!  

அது, விஷ்வா மற்றும் சினேகாவின் திருமணத்தை நடத்தி வைக்க சொன்னது

 

******

மூன்று வருடங்களாக விஷ்வா பின்னால் சுற்றி வந்த சினேகா... அதற்கு மேல் பொறுமை இல்லாமல் விஷ்வாவை சட்டையை பிடித்து உலுக்கி அவள் காதலை சொல்லி விட,  அவனோ அதை ஏற்க மறுத்துவிட்டான்..!  

காரணம் என்ன என்று கேட்க அவன் தான் ஒரு அனாதை...!  சினேகா வீட்டில் அவனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று மறுக்க,  அவன் சொன்னது போலத்தான் நடந்தது..!

விஷ்வா கை நிறைய சம்பாதித்தாலும் சரியான பின்புலம் இல்லை...அவன் ஒரு அனாதை  என்று சினேகா வீட்டில் மறுத்துவிட்டனர்.  

அவள் சுரபியிடம் இதை சொல்லி புலம்ப,  சுரபி ஒருநாள் இரவு தன் கணவனின் மஞ்சத்தில் சாய்ந்தபடி,  அவர்களின் திருமணத்தை நடத்த சொல்லி கோரிக்கை வைக்க,  

அவ்வளவுதான்..!  தன் வாரிசை சுமந்து கொண்டிருப்பவளின்  ஆசையே நிறைவேற்றாமல் விட்டு விடுவானா?  

சுரபி மற்றும் விஷ்வாவை அழைத்துக்கொண்டு, நேரடியாக சினேகாவின் வீட்டிற்கே சென்று விஷ்வாவின் சார்பாக பொண்ணு  கேட்டான்..!  

கூடவே

“விஷ்வா ஒன்றும்  அனாதை இல்லை..!  அவனுக்கு நாங்கள் இருக்கிறோம்...”  என்று அவனையும் சுரபியையும் சேர்த்துக்கொள்ள,  விஷ்வாவிற்கு கண் கலங்கி விட்டது

அவனை நன்றியோடு கட்டிக்கொண்டான்..!  

அதற்குமேல் சினேகாவின் தந்தை எதுவும் யோசிக்காமல்  திருமணத்திற்கு  சம்மதம் சொல்லிவிட,  அவர்களின் திருமணத்தை விமரிசையாக நடத்தி வைத்தான் விகர்த்தனன்..!

எல்லாம் தனக்காகத்தான் என்று சுரபிக்கு புரியாமல் இல்லை..!  தன் மீது இவ்வளவு காதலா என்று ஆச்சர்யமாக இருந்தது...! 

*****

ழைய நினைவுகளில் இருந்து திரும்பியவள்... தன் மீதும் தங்கள் குழந்தைகள் மீதும்  உயிராக இருக்கும் தன் கணவனையே ஆசையாக ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் சுரபி..!  

ஓரக்கண்ணால் தன்னையே நொடிக்கொருதரம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் தன் கணவனை,  அவளும் ரசித்து பார்க்க,  அதைக் கண்டு கொண்டவன்  என்ன என்று பார்வையாள்  வினவினான்..

அவளும் தன் கீழ் உதட்டை கடித்துக்கொண்டு  நத்திங்...  என்று உதடு குவித்து சைகையால் சொல்லி கண் சிமிட்டினாள்..!

****

ன்றிரவு இரவு உணவை முடித்து விட்டு படுக்கையில் படுத்து இருந்தான் விகர்த்தனன்...!  

அவனின் மார்பில் ஒருபக்கம் கர்ணிகாவும்,  மற்றொரு பக்கம் அருணிகா வும் படுத்து இருந்தனர்..!  

விகர்த்தனன் பரம்பரைப்படி வழக்கப்படி, சூரியன் பெயரைக்கொண்டு பெயர் வைக்க வேண்டும் என்பதால் அருணிகா என்று வைத்திருந்தாள் சுரபி..!

அருணிகா என்றால் அதிகாலை சூரிய ஒளி என்பதால் அதை வைத்திருந்தாள்..! அதிசயமாக கர்ணிகாவை போலவே இரண்டாவது குட்டிக்கும் அதே சூரிய மச்சம்..!

அவள் பிறந்ததுமே அந்த மச்சத்தை தன் மனையாளிடம்  கண்களால் ஜாடைக் காட்டி    பெருமையாக சிரித்துக் கொண்டான்..! 

அந்த இரண்டு தேவதைகளும் தன் தந்தையின் கழுத்தை இருபக்கமும் கட்டிக்கொண்டு ஆர்வமாக கதை கேட்க,  அவர்களை பார்த்து ரசித்தபடி,  அவனின் கழுத்தில் முகம் புதைத்தபடி அவனை ஒட்டி படுத்து இருந்தாள் சுரபி..!  

தன் வாழ்வில் இனி நிம்மதி இல்லை என்று தனிமையில் வாடியவனுக்கு ஒன்றுக்கு மூன்றாக மூன்று தேவதைகள் வந்து சேர்ந்திருக்க அவன் மனம் பூரித்தது..!  

தன் மகள்களை தட்டிக்கொடுத்து தூங்க வைத்தவன்..! அவர்களை தன் மார்பில் இருந்து பிரித்து எடுத்து படுக்கையில்  படுக்க வைத்தவன், அவர்கள் கீழே விழுந்துவிடாமல் அணை போட்டு தடுத்தவன்...

அடுத்த நொடி தன்னவளை கைகளில் அள்ளிக் கொண்டு  பக்கத்திலிருந்த தங்கள் அந்தப்புரத்தை நோக்கி சென்றான்..!  

அதற்காகவே காத்துக் கொண்டிருந்த பெண்ணவளும்,  தன்னவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக்கி போட்டுக்கொண்டு,  மையலுடன் தன் கணவனை பார்த்து வைக்க, விகர்த்தனனுக்கோ இன்னும் போதையேறி போனது..!

அதே கிறக்கத்தில், வேக நடையுடன் பக்கத்து அறையை அடைந்து,  அவளை படுக்கையில் கிடத்தி அடுத்த கணம் அவள் மீது படர்ந்தான்

தன் கணவனின் இறுகிய அணைப்பில் உருகியவள்... அவன் தேடலுக்கு இசைந்து கொடுக்க,  அவனோ அவளுள்  புதைந்து முத்தெடுத்தான்...!  

இருவரும் தங்கள் மோகம் தீர கூடி களித்தவர்கள்...கலைத்து போய் படுக்கையில் கிடக்க,  அவளோ அவனின் மஞ்சத்தில் தலை சாய்த்திருந்தாள்..!  

அவளின் முன் உச்சி கேசத்தை ஆதூரமாக வருடியவன்,  

“ரொம்ப தேங்க்ஸ் சுபி...”  என்ற காதல் பொங்க சொல்ல,  

அவளும் நிமிர்ந்து அவனை பார்த்தவள் பார்வையால் எதுக்கு?  என்றாள்

“எல்லாத்துக்கும் தான்...  நீ என் வாழ்வில்  வருவதற்கு முன்னால் என் வாழ்க்கை அப்படி ஒரு நரகமாக இருந்தது..!  

தொழிலில் கொடிகட்டி ராஜா போல பறந்து கொண்டிருந்தாலும் வீட்டில் அன்புக்கு பாசத்திற்கு ஏங்கும் ஏழையாகத்தான் இருந்தேன்..!  

தனிமை எவ்வளவு கொடுமையாக இருந்தது தெரியுமா? “  என்று அந்த நாள் வேதனையில் அவன் முகம் சுருங்க, அதைக்காண தாளவில்லை..!

அவளும் அந்த தனிமையை கொஞ்ச நாட்கள் அனுபவித்தவள் ஆயிற்றே...! அதைப் போக்கத்தானே தனக்கு என்று ஒரு துணை வேண்டும் என்று நிகாவை வயிற்றில் சுமக்க தயாரானது..!

இப்பொழுது அவன் வேதனையை காண  தாளாதவளாய் ... அவன் இமைகளை நீவி விட்டு, அவன் கன்னத்தில் மெல்லியதாய் முத்தம் வைத்தாள்..!  

அதில் கொஞ்சம் இலகியவன், அடுத்த கணம் அவளை இறுக்கி அணைத்து அவள்  கொடுத்ததை திருப்பி கொடுத்தான்  இடத்தை மாற்றி..!  

அவளின் திரண்ட அதரங்களில் முத்தமிட்டு முடித்தவன்  மீண்டும் தொடர்ந்தான்..!  

“வறண்டு கிடந்த இந்த பாலைவனத்தை... என் வாழ்க்கையை  வண்ணமயமாக்க வந்தவள்  என் மகள்...!  வராமல் வந்த தேவதை அவள்..” என்று நிகாவின் நினைவில் பெருமையுடன் சொல்ல,  

“அப்ப நான் உங்க தேவதை இல்லையா? “  சிலிர்த்துக் கொண்டாள் மனையாள்

“ஹா ஹா ஹா நீயும் என் தேவதை தான் டி...!  ஆனாலும் இந்த பெரிய தேவதையே என்னிடம் கூட்டி வந்த குட்டி தேவதை என் நிகா குட்டி தானே

அவள் மட்டும் அன்று என்னைத் தேடி வந்து அப்பா என்று கட்டிக் கொண்டிருக்காவிட்டால்,  உன்னை நான் சந்திக்காமலேயே போயிருப்பேன்..!  

நீ என் வீட்டில் அடி எடுத்து வைத்து வந்ததும் தான் என் வாழ்க்கை வண்ணமயமாகிப்  போனது..!

வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் இருந்த எனக்கு, வாழ்க்கையின் அர்த்தத்தை...அது தரும் வசந்தத்தை வழங்கிய தேவதை என் நிகா குட்டி.....அவளால் எனக்கு கிடைத்த தேவதை நீ..!

நிகா குட்டியினால் தந்தை பாசத்தை கண்டு கொண்ட நான்...காதல் என்ற அற்புதமான உணர்வை உணர்ந்தது உன்னால் தான்..!

நீ மட்டும் என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால், இந்த காதல் என்ற உணர்வுக்கு இடமே இல்லாமல் போயிருக்கும்..! அதோடு  தந்தை என்ற உன்னதமும்...  அதன் பரவசமும் புரியாமலேயே போயிருக்கும்

உனக்கு ஒன்று தெரியுமா சுபி?  நான் இதுவரை எந்த பெண்ணிடம் ஒரு முறைக்கு மேல் நாடியதில்லை..!  

ஸ்வாதி கூட...”  என்று ஆரம்பிக்க அவளோ அருவருப்பாய் முகத்தை சுருக்கினாள்.

எந்த ஒரு மனைவியும் தன் கணவன், முதலும் கடைசியுமாக தன்னை மட்டும்தான் நாடி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்..!

இங்கு விகர்த்தனனுக்கு,  தான் இரண்டாவது மனைவி என்பதையே ஜீரணிக்க முடியாதவளுக்கு, அவன் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறான் என்பதை சகித்து கொள்ள முடியவில்லைதான்..!

முயன்று அதை மறக்க முயல்பவளிடம், அவன் அதை பற்றி குறிப்பிடவும் அவளுக்கு வேதனையாகவும், அருவருப்பாகவும் இருந்தது..!     

“சாரி மா...உனக்கு கேட்க கஷ்டமாகத்தான் இருக்கும்..!  ஆனால் இந்த ஒரு முறை மட்டும் நான் சொல்லி விடுகிறேன்

அப்பொழுதுதான் நான் எதையும் உன்னிடம் மறைக்கவில்லை என்ற நிம்மதி எனக்கு வரும்..! “  என்றவன் மேலும் தொடர்ந்தான்..!

ஸ்வாதி நல்ல அழகிதான்.ஆனாலும் எனக்கு அவளிடம் பெரிதாக ஈடுபாடு இல்லை..!  கடமைக்காகத் தான் அவளுடன் இணைந்ததே..!  

ஆனால் நீ அப்படி ஒன்றும் பேரழகி இல்லை....”  என்று நிறுத்த, அதற்குள் இயல்பிற்கு வந்திருந்தவள், தன் கணவன் சொன்னதை கேட்டதும், முகத்தில் கோபம் பொங்க, அவனின் கன்னத்தில் நறுக்கென்று கடித்து வைத்தாள்..!  

“நான் பேரழகி இல்லையா?  அப்ப ஏன்  தினமும் இப்படி என்னை தூங்கவிடாமல் தொல்லை பண்றீங்களாம்? “  என்று முறைத்து  தன் கழுத்தை  நொடித்துக் கொண்டாள் சுரபி..!  

“ஹா ஹா ஹா சொல்ல வந்ததை முழுசா கேளுடி... அவசர குடுக்கை..!  

நீ பெரிய உலக அழகியாக  இல்லாத பொழுதும்,  என்னை உன் கண்களுக்குள்  கட்டி வைத்திருக்கிறாயே..! அது போதாதா? “ என்று சிரித்தவன்,  

“மற்றவர்களை ஒருமுறைக்கு மேல் நாடாதவன்...  இப்பொழுது தினம் தினம் உன்னிடமே சரணடைந்து கிடப்பது  எல்லாம் இந்த காதலினால் தான் என்றும்  கண்டு கொண்டேன் கண்மணி..!” என்று மந்தகாசமாக புன்னகைத்தான்..!

அதைக்கேட்ட சுரபிக்குத்தான் திக் என்றது..! அவளின் கண்கள் கலங்கின..! தன் கணவனை அடிபட்ட பார்வை பார்த்தவள்,   

“அப்படி என்றால் சீக்கிரம் உங்களுக்கு நான் சலித்து விடுவேனா? அப்படி சலித்து விட்டால், வேற பெண்ணிடம்..... “  என்று முடிக்க முடியாமல் தொண்டை கட்டிக்கொண்டது..!

வார்த்தை வராமல் சிக்கிக் கொள்ள, அவனையே பார்த்திருந்தாள் கண்களில் பொங்கும் வேதனையோடு..!

“ஹே லூசு...! அப்படி ஒன்றும் சலித்து விடுபவள்  அல்ல நீ...  ஒவ்வொரு நாளும் எனக்கு புதுவித இன்பத்தை வாரி வழங்கும் அமுதசுரபி டீ நீ....

என் மாமனார், மாமியார் உனக்கு சரியான பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள்...! சு...ர....பி....!

எனக்கு தேவையான சந்தோஷம்...மகிழ்ச்சி...உற்சாகம்...நான் தேடும் அந்த சுகம் எல்லாம் திகட்ட திகட்ட வாரி வழங்கும் அமுத சுரபி டி....

அதோடு எனக்கே எனக்கான அந்த ஸ்பெஷல் ............. ” என்று அவளின் காதில் ரகசியமாக கிசுகிசுத்தவன்

“அதையும் வாரி வழங்கி என் பசியாற்றும் சுரபி டி நீ... நீ எப்படி அதற்குள் எனக்கு சலித்து போவாயாம்..! எத்தனை வருடங்கள் ஆனாலும் உன் மீது நான் கொள்ளும் இந்த மோகம் கொஞ்சமும் குறையாது...! ஐ ஸ்வேர்...! “

என்று குறும்பாக கண் சிமிட்டியவன்,  மீண்டும் அவளின் வெற்றிடையை பற்றி அழுத்தியவன்... தன் சில்மிஷங்களை தொடர்ந்தான்..!  

அவன் தீண்டலினால் இன்ப அவஷ்தையில் நெளிந்தவள்... அவன் கையை பட்டென்று தட்டிவிட்டவள், அவன் மீசையை செல்லமாக இழுத்தபடி தன் மனதில் இருப்பதை கொட்டினாள்..!  

“நீங்க  சொன்ன மாதிரிதான் எனக்கும் நிகா ப்பா...! நான் உண்டு என் மகள்  உண்டு என்று இருந்த என் வாழ்வில் புது அர்த்தம் சேர்க்க வந்தவர் நீங்க..!  

இப்பொழுது ஒன்றுக்கு இரண்டு மகள்கள்..! என் மீது உயிராக இருக்கும் காதல்  கணவன்...! ..  என் குழந்தைகள் என்று எல்லோரையும் போல எனக்கும் ஒரு வாழ்க்கையைகுடும்பத்தை  அமைத்துக் கொடுத்த தேவதூதன் நீங்க...”  என்று கண்கலங்கினாள்..!

அதில் அவன் நெகிழ்ந்து விட, தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தவன், அவளை நார்மலாக்க எண்ணி,  

“ஹே போதும் டி...லெட்ஸ் ஸ்டாப் திஸ் டாபிக்...  இது  ஒன்னும் செண்டிமென்டாக  பேசி வீணாக்கற  நேரமில்லை...”  என்று அவளை சீண்ட, அதற்குள் தன்னை சமனபடுத்திக்கொண்டவள்,  

“வேற என்ன நேரமாம்? “  அவளும் குறும்பாக கேட்க

“ஹ்ம்ம்ம் செகண்ட் இன்னிங்க்ஸ்... ஸ்டார்ட் பண்ண வேண்டிய நேரம் இது...”  என்றான்  தன் உதட்டால் அவன் இதழை ஈரபடுத்தியபடி  அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவாறு..!

அதில் கன்னம் சிவந்தாலும் அதை மறைத்துக்கொண்டு  

“ஆஹான்... இரண்டு பிள்ளைகளுக்கு அப்பா ஆன பிறகும் உங்களுக்கு தினமும் இரண்டு இன்னிங்க்ஸ் வேணுமாக்கும்...”  என்று நக்கலாக சிரிக்க,  

“எஸ் எஸ் இரண்டு என்ன..? மூன்று...நான்கு  விளையாடக்கூட நான் ரெடி பேபி..! ஆனால் பாவம் நீதான் இரண்டிலே ரொம்பவும் கலைத்து போகிறாய்..!  

உன்னை அதற்கு மேலயும் கஷ்டப்படுத்த கூடாது என்றுதான் இரண்டோடு நிறுத்திக் கொள்கிறேன்...”  என்று மார்க்கமாக சிரிக்க

“ப்பா... பேசியே இப்படி ஆளை கவிழ்க்கிற  வித்தையை உங்க கிட்டதான் கத்துக்கணும்...” என்று செல்லமாக சிணுங்க,  

“ஓ...  சாரி மா...  பேச வேண்டாமா? சரி விடு இனி ஆக்சனில் இறங்கிடலாம்...”  என்று சில்மிஷமாய் சிரித்தவன்..!

நொடியும் தாமதிக்காமல், தன் மஞ்சத்தில் கிடந்தவளை பக்கவாட்டில் சரித்து மீண்டுமாய் அவள் மீது படர்ந்து அவனுடைய இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்தான் காதல் கணவனாய்..!

அவர்களின் அந்த ஆட்டம் தொடர்கதையாக எப்பொழுதும் தொடரட்டும்..!

இருவரும் இதே போல் என்றென்றும் காதலும், மோகமும், தாபமும்  குறையாது பல ஜென்மங்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுவோம்..! நன்றி..!!! வணக்கம்...!!!

*****சுபம்*****

 

இந்த கதையை பொறுமையாக வாசித்து ரசித்த அனைத்து வாசகர்   தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

மீண்டும் ஒரு புதிய கதையுடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன்...நன்றி!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்.

Share:

Tuesday, February 7, 2023

வராமல் வந்த தேவதை-41(Pre-Final)

 


அத்தியாயம்-41

 

ப்படியோ  ஐந்து வருடங்கள் உருண்டோடி விட்டது..!

ஸ்வாதிக்கு இப்பொழுது வாழ்க்கையில் ரொம்பவுமே சலிப்பு தட்ட ஆரம்பித்து விட்டது..!

வாழ்க்கையில் அவள் அனுபவிக்க நினைத்த அத்தனை சுகங்களையும் அனுபவித்து விட்டாள்...!

அணிய நினைத்த ஆடை , அணிகலன்கள்..சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் என எல்லாமே அவளுக்கு நிறைவேறி விட்டது..!

என்னதான் தன் மனைவியிடம் பெரிதாக ஒன்ற முடியவில்லை என்றாலும் ஒரு கணவனுக்கான கடமையை தவறாமல் செய்து வந்தான் விகர்த்தனன்..!

அவள் கேட்டதை எல்லாம் கணக்கு பார்க்காமல் வாங்கி தந்தான்..! பத்தாதற்கு அவளுக்கென்று க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட் எல்லாம் கொடுத்து அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கிக்க சொல்லிவிட்டான்..!

அவளைக் கேட்காமலேயே எல்லாம் அவளுக்கு கிடைத்துவிட ஏனோ அந்த வாழ்க்கை  போரடிக்க சலிப்பு தட்ட ஆரம்பித்து விட்டது

அப்பொழுதுதான் ஒரு திருமண விழாவில் தன் தோழியை சந்தித்தாள் ஸ்வாதி..!  

அவளும் ஸ்வாதியை போலத்தான்..! 

கல்லூரி நாட்களில் தாராளமாக ஊரை சுற்றியவள்..! இப்பொழுது ஒரு பெரிய செல்வந்தரை  மணமுடித்து கூடவே ஒரு குழந்தையையும் பெற்றுக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி இருந்தாள்...!

அந்த குட்டியை பார்த்ததும் ஸ்வாதிக்கும் ஆசை வந்தது..! 

“எனக்கும்  ஒரு குழந்தை பிறக்க வேண்டும்... தாய்மை என்பதையும் அனுபவித்து பார்க்க வேண்டும்...” என்ற ஆசை வந்தது

தன் ஆசையை விகர்த்தனனிடம் சொல்ல,  தன் நெற்றியில் ஆட்காட்டி விரலை வைத்து அழுத்தியபடி யோசித்தவன்,

“வெல்...உனக்கு பிடிச்சா பெத்துக்கோ...” என்று  வழக்கம் போல,  தோளை குலுக்கி விட்டு சென்று விட்டான்..!

அவளும் அதுவரை பின்பற்றி வந்த  பாதுகாப்பு முறைகளை கைவிட்டு அவனுடன் கூடினாள்..!

அடுத்த மாதம் நாட்கள் தள்ளிப் போகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, அவள் எதிர்பார்ப்பு பொய்த்து போனது..! அவள் கருத்தரித்திருக்கவில்லை..!  

அடுத்த மாதம்..!  அதற்கு அடுத்த மாதம்... என தன் குழந்தைக்காக காத்திருக்க,  அது மட்டும் நிறைவேறாமல் போனது..!  

கிட்டதட்ட ஆறு மாதங்கள் கடந்திருக்க, அதற்கு மேல் காத்திருக்க பிடிக்காமல், தன் கணவனிடம் சென்று நின்றவள்... இருவரும் சென்று டாக்டரை கன்சல்ட் பண்ணலாமா என்று கேட்க,  அவனோ  அவளை முறைத்தவன்,

என்னிடம் எந்த குறையும் இல்லை..! நீ வேண்டும் என்றால் போய் செக் பண்ணிக்க..! என் ஆண்மையை பற்றி எனக்கு தெரியும்..! ஐம் பெர்பெக்ட்லி ஆல்ரைட்...!

என்னால் எத்தனை குழந்தையை வேணும் என்றாலும் உருவாக்க முடியும்... “ என்று கோபத்துடன் அவளிடம் கத்திவிட்டு  சென்று விட்டான்..!   

குழந்தை உருவாகாமல் போகிறது என்றால் குறை பெண்களிடம் மட்டும் தான் என்று காலம்காலமாய் இருந்து வரும் நம்பிக்கை..! விகர்த்தனன் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

தன்னை பற்றி...தன் உடலை பற்றி...தன் ஆரோக்கியத்தை பற்றி  அதீத நம்பிக்கை  கொண்டவனால், தன்னால் ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..!

ஸ்வாதியிடம் தான் குறை இருக்கும் என்று ஆணித்தரமாக நம்பினான்..!

அவன் எண்ணியதை போலவேதான் ஆனது..!

*****

விகர்த்தனன் பரிசோதனைக்கு வர மறுத்து விட, வேற வழியில்லாமல் ஸ்வாதி மட்டும்   தனியாக சென்று அவளை பரிசோதித்தாள்..!  

ஸ்வாதியை பரிசோதித்த மருத்துவரும், சில பல டெஸ்ட்டுகளை எடுத்து பார்த்து விட்டு அவளுக்கு விளக்கமளித்தார்..!

அவள்  தொடர்ந்து பல வருடங்களாக பயன்படுத்திய கருத்தடை மாத்திரைகள்... தவறான உடல் சேர்க்கை...அவளின் தவறான உணவு பழக்க வழக்கங்கள்...இதெல்லாம் தான் அவளுக்கு  கருத்தரிப்பை உண்டாக்கவில்லை.

அதோடு அவளின் கருமுட்டைகள் தரமானதாக இல்லை என்று சொல்லி, அதை சரி செய்ய சில பல மாத்திரைகளை எழுதி கொடுத்தார்..!

அதை கொஞ்ச நாட்கள் பயன்படுத்தியும் எந்த பயனுமில்லை..!

அப்பொழுதுதான் செயற்கை முறை கருத்தரிப்பு பற்றி செய்தியை கேள்விப்பட்டு அதை பற்றி ஆராய ஆரம்பித்தாள் ஸ்வாதி..!  

மற்றொரு தோழி அந்த முறையை பின்பற்றி கர்ப்பமாகி இருக்க,  அவளும் அதையே பின்பற்றுவது என்று முடிவு செய்தாள்..!

அவளுடைய உடல்நிலைக்கு, கருப்பையின் வீக்கான நிலைக்கு, IUI சிகிச்சை முறை வெற்றி பெறாது....!

நேரடியாக IVF முறையை பின்பற்றி பார்க்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்த, விகர்த்தனனிடம் அவளின் திட்டத்தை சொல்ல கொஞ்சம் தயக்கமாக இருந்தது...!  

வேறு வழி எதுவும் இல்லை எனும் பொழுது, இதையும் முயற்சி செய்து பார்த்துவிட தயாரானாள் ஸ்வாதி..!  

அதோடு இதுவரை அவள் கேட்டு எதையும் மறுத்திடாதவன்..! இதையும் ஒத்துக்கொள்வான் என்று  எண்ணியவள், தன் கணவனிடம் விஷயத்தை சொல்ல, அவனோ அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை..!  

“லுக் ஸ்வாதி..! விஷயம் வெளியில் கசிந்தால் என்னுடைய இமேஜ் என்னாவது?  ஒரு குழந்தைக்கு தகப்பனாகும்... ஒரு குழந்தையை  கொடுக்கும் தகுதி எனக்கு இல்லையா என்ற பேச்சு வரும்..!

அதனால் இதெல்லாம் முடியாது..! கொஞ்ச நாள் வெய்ட் பண்ணு...! நீயும் ப்ரெக்னென்ட் ஆவ....”  என்று மறுத்து விட, ஸ்வாதிக்கு அதில் நம்பிக்கை இல்லை..!

டாக்டர் தான் அடித்து சொல்லி விட்டாரே..! இயற்கையாக அவள் கருத்தரிக்க வாய்ப்பே இல்லை என்று...! அதனால் இன்னும் நாட்களை வீணாக்க அவளுக்கு விருப்பமில்லை..!  

அப்பொழுதுதான் சென்னையில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற ஃபெர்டிலிடி சென்டர் பற்றி தெரிந்து கொண்டாள்.  

பெங்களூரில் ட்ரீட்மென்ட் எடுத்தால் தானே விஷயம் கசியும்..!

நாம் யாரென்று தெரியாத சென்னைக்கு சென்று விட்டால்..? அதோடு இந்த சென்டரில் அவர்களுடைய பேசன்ட்ஸ் பற்றிய விவரத்தை ரகசியமாக வைத்திருப்பார்கள்..!

ப்ளீஸ் விகா... எனக்காக இந்த ஒரு முறை சம்மதிங்க...”  என்று அவனிடம்  கெஞ்ச, ஒரு வழியாக மனசு மாறி சரி என்று தலையசைத்து வைத்தான்..!  

அதன்படி சென்னையில் இருந்த அந்த பிரபல பெர்டிலிட்டி சென்டருக்கு சென்றனர்..!

இருவருக்கும் சில பல டெஸ்ட்டுகளை எடுத்தபின் அதற்கான புரசிஜரை ஸ்டார்ட் பண்ணினர்..!

அவளின் கருமுட்டையை ஊசிக்குழல் மூலம் எடுத்து, அதில் விகர்த்தனனின் விந்தணுக்களை  இணைய வைத்து, செயற்கை முறையில் கருவை உருவாக்க வைத்து, அந்த கரு எட்டு செல்லாக வளர்ந்ததும், அதை ஸ்வாதியின் கருப்பபையில் செலுத்தி விடுவது என்று முடிவு செய்தனர்..!

இந்த சிகிச்சைக்காக சென்னையிலயே சில நாட்கள் தங்கி இருக்க வேண்டி வர, விகர்த்தனன் அத்தனை நாட்கள் அங்கே தங்க முடியாது என்பதால், அவனுடைய விந்தணுக்களை  கொடுத்துவிட்டு, ஸ்வாதிக்கு துணைக்கு, நம்பகமான ஒரு ஆளையும் நியமித்துவிட்டு  அவசர வேலையாக பெங்களூர் வந்து விட்டான்..!  

ஸ்வாதி மட்டும் சென்னையிலயே தங்கி அந்த சிகிச்சையை தொடர்ந்தாள்..!

செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கருவை கூட அவளின் கருப்பை ஏற்றுக் கொள்ளவில்லை..!  

நான்கு முறை ஃபெயிலியர் ஆகிவிட, மருத்துவர் கூட நம்பிக்கை இழந்து போனார்..!

இதை இதோடு நிறுத்தி கொள்ளலாம் என்க, ஸ்வாதி பிடிவாதமாக மறுத்துவிட்டாள்..

“நான் ஒரு குழந்தையை சுமந்து தான் ஆக வேண்டும்...”  என்று பிடிவாதம் பிடித்து,  பல கஷ்டங்களை, உடல் உபாதைகளையும் தாங்கிக் கொண்டு, அந்த சிகிச்சையை தொடர சொல்லி பிடிவாதம் பிடித்தாள்..!  

வேறு வழியில்லாமல்  அந்த மருத்துவரும், வருகிற வரை லாபம் என்று அவர்களும் ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய தொகையை கறந்து கொண்டு அவளுக்கு சிகிச்சை அளிக்க,  எப்படியோ ஐந்தாவது முறை கருப்பையில் கரு தங்கிவிட்டது..!

******

டுத்த மாதம் நாட்கள் தள்ளிப்போக,  உற்சாகத்தில் துள்ளிக் குதித்தாள்  ஸ்வாதி..!    

தன் வயிற்றில் வளரும் அந்த குழந்தையை தொட்டு கொடுத்தும், தடவிக் கொடுத்தும் பூரித்து போனாள்..!

குழந்தை அவள் வயிற்றில் வளர வளர, அவளுக்குள் அப்படி ஒரு சந்தோஷம்...!  

தன் சந்தோஷத்தை எல்லாம் தன் கணவனிடம் பகிர்ந்து கொள்ள, அவனோ அதை எல்லாம் காதிலயே போட்டுக்கொள்ளவில்லை..!

அவளுக்கு தேவையானவற்றை செய்ய ஒரு செவிலியரை அவள் உடனே இருந்து பார்த்து கொள்ள நியமித்து விட்டு,  தன் வேலையையும் தன் உல்லாச வாழ்க்கையையும்  தொடர்ந்து கொண்டுதான் இருந்தான்..!  

ஆறாவது மாதம் ஆரம்பித்ததும், அவள் வயிற்றில் குழந்தை புரள ஆரம்பிக்க, அது  ஸ்வாதிக்கு ஏகாந்த நிலையை கொடுத்தது..!  

இதுவரை அவள் அனுபவித்திராத,  புதுவித  உணர்வு... சுகமாக இருந்தது..!   ஒவ்வொரு முறை தன் குழந்தையின் அசைவை உணரும் பொழுதும் அப்படி பூரித்து போனாள்..! தாய்மை என்பது எப்படிபட்ட வரம் என்று அந்த நொடியில் உணர்ந்தாள்..!

தன் சந்தோஷத்தை... தன் குழந்தையின் அசைவ தன் கணவனிடம் பகிர்ந்து கொண்டு, அவனின் கையை எடுத்து அவளின் அடிவயிற்றில் வைத்து காட்ட, அவனோ வெடுக்கென்று தன் கையை உருவிக்கொண்டான்..!    

“இடியட்... எனக்கு இதெல்லாம் பிடிக்காது..! குடும்பம், குழந்தை இதில் எல்லாம் எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை..! நீ ஆசைபட்டாய் என்றுதான் இந்த குழந்தைக்கு சம்மதித்தது..! மற்றபடி இந்த குழந்தைமீது எனக்கு கொஞ்சமும் இன்ட்ரெஸ்ட் இல்லை...!

ஆனால் உனக்கு என்ன வேண்டுமோ அதை நான் செஞ்சு தர்ரேன்..! மற்றபடி என்னை எதற்கும் தொந்தரவு செய்யாதே..!” என்று சுள்ளென்று எரிந்து விழுந்தான்..!

அவளின் முகம் வாடிப்போனது..!

ஆனாலும் தன் குழந்தையை கொஞ்சுவதை அவள் நிறுத்தவில்லை..!

ஒருநாள் அவர்களின்  அறை முழுவதும் பலவிதமான குழந்தைகளின் புகைப்படங்களாக மாட்டி வைத்திருக்க, அதைக் கண்டு எரிச்சல் தான் வந்தது விகர்த்தனனுக்கு..!

“இத்தனை போட்டோவை எதுக்குடி மாட்டி வச்சிருக்க..இது என்ன பெட்ரூமா? இல்ல நர்சரியா? “ என்று உச்சக் கட்டத்தில் கத்த,  

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... மெதுவா பேசுங்க... என் வயித்துல வளர்ற உங்க பாப்பா பயந்துக்க போறா..

பொண்ணுங்க ப்ரெக்னென்ட் ஆ இருக்கிறப்ப  இந்த மாதிரி அழகழகான பேபிஸ் போட்டோவா அடிக்கடி பார்த்தா,  இதே மாதிரி அழகா பாப்பா பொறக்குமாம்.

என் ஃப்ரெண்ட் சொன்னா...  அதுக்கு தான் இவ்வளவு பாப்பா படத்தையும் மாட்டி வச்சிருக்கேன்...” என்று கன்னம் குழிய சிரித்தாள் அவன் மனைவி...

“புல்ஷிட்...  இதெல்லாம் என்ன ஒரு மூடநம்பிக்கை...போட்டோவை பார்த்தால் அதே மாதிரியே குழந்தை பிறக்குமா? ரிடிகுலஸ்... ”  என்று மீண்டும் எரிந்து விழுந்தான்

“என்னவோ பண்ணித்தொலை...”என்று  மீண்டும் எரிச்சலுடன் மொழிந்து விட்டு விடுவிடுவென்று சென்று விட்டான்..!

****

ப்பொழுது அவளுக்கு ஏழாவது மாதம் ஆரம்பித்திருக்க,  ஒருநாள் சீக்கிரமாகவே விகர்த்தனன் அலுவலகம் கிளம்பி சென்றுவிட்டான்..!  

அறையில் உறங்கி கொண்டிருந்த ஸ்வாதி, பாதி தூக்கத்தில்  எழுந்தவள்,, ஏதோ எடுக்கவென்று  தூக்க கலக்கத்துடன் மாடியிலிருந்து கீழே இறங்கியவள்..  கால் இடறி அப்படியே உருள ஆரம்பித்தாள்.  

அதில் அதிர்ந்து போனவள், தன் குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று வயிற்றில் கை வைத்து அழுத்திக் கொண்டே உருண்டாள்..!  

அது நீண்ட படிக்கட்டு என்பதால் அவளால் உருளுவதை தடுக்க முடியவில்லை..!  

அவளின் அலறல் கேட்டு வேலையாட்கள் ஓடி வருவதற்குள் கீழ்ப்படியை  அடைந்து தரையில் விழுந்து கிடந்தாள்..!  

வயிற்றில் நன்றாக அடிபட்டுவிட, அப்பொழுதே ப்ளீடிங் ஆக ஆரம்பித்தது..! அதைக்கண்டு தன் குழந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று உணர்ந்தவள் அலறி மயங்கி சரிந்தாள்..!   

வேலையாட்கள் விகர்த்தனனை அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டு அவர்களாகவே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..!

எவ்வளவு முயன்றும் அவளையும் குழந்தையையும் காப்பாற்ற முடியவில்லை..!

அவளின் இழப்பு, விகர்த்தனனுக்கு கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது..!  

ஆனாலும் மனைவி குழந்தை என்று பெரிதாக ஈடுபாடு இல்லாமல்...  ஒட்டாமல் இருந்தவனுக்கு அவர்களின் இழப்பு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை..!  

இரண்டு நாட்கள் அவளுக்காக வீட்டோடு தங்கி இருந்தவன், அதன் பிறகு அவன் தன்னுடைய வழக்கமான வாழ்க்கையை  தொடர்ந்து கொண்டுதான் இருந்தான்..!  

அதே நிலை தொடர, அடுத்த சில  வருடங்களில் அவனுக்கு எல்லாவற்றிலும் சலிப்பு ஏற்பட்டது..!  

தனிமை அவனை கொன்றது. வாழ்க்கையே நரகமாக இருந்தது..!  

ஒரு வருடமாக தனிமையில் தவித்துக்கொண்டிருந்தவனுக்கு வாழ்வில் வசந்தமாக வந்தாள் அவன் தேவதை...! நிகா...!   

*****

ரு பெருமூச்சு எடுத்து விட்டு ஸ்வாதி பற்றிய தன் கதையை சொல்லி முடித்தான் விகர்த்தனன்..!

“ஏனோ ஸ்வாதியிடம் எனக்கு பெரிதாக ஒட்டுதல் இல்லை சுபி..!  

நீ சொல்வதைப் போல அவள் மீது காதல் இல்லாமல்,  கடமைக்காக கணவன்-மனைவியாக வாழ்ந்ததால் இருக்குமோ?  

ஆனால் உன்னிடம் அப்படி தோன்றவில்லை..! கடமைக்காக உன்னை அணைக்கவில்லை..! உன்னை பார்க்கும் பொழுதே எனக்குள் ஏதேதோ உணர்வுகள் பொங்கி எழும்..!

அதிலும் முதல் நாள் உன்னை நான் அணைக்க வந்தபொழுது நீ அதை தடுத்து விட்டாய்...! என்னை நிராகரித்தாய்..! அப்பொழுது எவ்வளவு அடிபட்டு போனேன் தெரியுமா?

என்னை நிராகரித்த முதல் பெண் நீதான்  என்று அவ்வளவு கோபம் உன் மீது..!

ஆனாலும் என்னை முயன்று கட்டு படுத்திக்கொண்டேன்..!   

ஆரம்பத்தில் நீ ஒன்றும் என்னை இம்ப்ரெஸ் செய்யவில்லை..  இன்னொருவன் மனைவி என்பதால் கூட இருக்கலாம்..!  

“ஹ்ம்ம்ம் அதுதான் தெரியுமே..! சார் ஒரு நாள் கூட என்னை பார்த்ததில்லை..! நான் ஒருத்தி இருப்பதை கூட கண்டு கொள்ளவில்லை...” என்று செல்லமாக முறைத்தாள் அவன் மனையாள்.!

“ஹா ஹா ஹா நீ சொல்வதும் சரிதான்..! அப்பொழுது எல்லாம் எனக்கு நிகா மட்டும்தான் முக்கியமாக தெரிந்தாள்...!   

ஆனாலும் மனதில் ஒரு ஓரத்தில் உன்னை பார்த்ததுமே ஒரு சிறு தடுமாற்றம்தான்..! ஆனால் அதை நான் அப்பொழுது உணரவில்லை..!

எப்பொழுது நீ  என் மனைவியாய் ஆனாயோ, அதிலிருந்து என் மனம் என்னை அறியாமலயே கொஞ்சம் கொஞ்சமாக உன்னிடம் சாய்ந்து விட்டது..! என் மனதில் அப்படி ஒரு பாதிப்பு..!  

ஒவ்வொரு முறை உன்னை பார்க்கும் பொழுதும்,  என் மனதில் ஒரு தவிப்பு..ஒரு சிலிர்ப்பு...! உன்னை எப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.. எப்பொழுதும் உன் அருகிலயே இருக்க வேண்டும் என்று தவிப்பாக இருக்கும்..!   

இதற்கு பெயர்தான் காதல் என்று அன்று  தெரியாமல் போனது..!  

ஆனால் இன்று நீ மயங்கி சரிந்தபொழுதுதான்...  நீ இல்லாமல் என் வாழ்க்கையே இல்லை என்று மண்டையில்  உறைத்தது..!  

உன்னை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று என் ஒவ்வொரு அணுவும் துடித்தது..!  ஆனால் ஸ்வாதி அடிபட்டு  இறந்தபொழுது இப்படியெல்லாம் எதுவும் தோன்றவில்லை

யாரோ ஒரு மூன்றாம் மனுஷி... மறைந்து விட்டாள் என்றுதான் எனக்கு தோன்றியது..! பெரிதாக வருத்தப்படவும் இல்லை..! வெகு இயல்பாக அந்த சூழ்நிலையை கடந்து வந்துவிட்டேன்..!

ஆனால் என்னால் உன்னிடம் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை..!

அப்பொழுது தான் நீ என் மனதில் எந்த அளவுக்கு ஆழப்பதிந்து போனாய் என்று புரிந்தது ..!

“ஐ லவ் யூ சுபி... நீ இல்லாமல் இனி என் வாழ்க்கையே இல்லை...”  என்று தழுதழுத்தவாறு அவளை இறுக்க அணைத்து கொண்டான் விகர்த்தனன்..!

அவளும் தன் கணவன் அன்பில் நெகிழ்ந்து உருகித்தான் போனாள்..!

ஆனாலும் மனதில் ஒரு ஓரமாக நிகா எப்படி உருவானாள்  என்ற கேள்வி இன்னும் பாக்கி இருக்க,  அதற்கும் அவனே விடை சொன்னான்..!  

*****

நீ உனக்கென்று ஒரு கணவன் இல்லாமல், செயற்கை முறை கருத்தரிப்பு முறையில் குழந்தையை சுமக்க வேண்டும் என்று ஸ்வாதி ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டிருந்த அதே  பெர்டிலிட்டி சென்டரை  அணுகியிருக்கிறாய்..!  

விந்தணுக்களை தானம் செய்த ஒருவரின் விந்தணுவைத் தான் உனக்கு கர்ப்பப்பையில் செலுத்துவதாக இருந்திருக்கிறார்கள்..!  

எப்படியோ  அங்கிருந்த செவிலியரின் அஜாக்கிரதையால் விந்தணுக்கள் சேகரித்து வைத்திருந்த ட்யூப் தவறி கீழ விழுந்துவிட்டது..!  

ஏற்கனவே உனக்கு புரசிஜர் ஆரம்பித்து விட்டதால்,  உன்னிடம் அந்த காரணத்தை அப்படியே சொல்ல முடியாமல் தவித்த அந்த செவிலி, ஸ்வாதியின் ட்ரீட்மென்ட்க்காக வைத்திருந்த என்னுடைய விந்தணுக்களை எடுத்து கொடுத்து விட்டாள்.  

மருத்துவரும் அதை எல்லாம் பார்க்காமல் உனக்குள்  செலுத்தி விட்டார்..!  

ஆனால் என்ன ஆச்சரியம்..!  

ஸ்வாதியின் கருமுட்டையுடன் என்  உயிர் இணைவதற்கு அவ்வளவு பாடுபட்டார்கள்..!

ஆனால் உன் கருமுட்டையுடன் என் விந்தணுக்கள் உடனேயே இணைந்து விட்டதாகவும், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுவிட்டதாக மருத்துவர் லதா சொன்னார்..!

அவர்தான் உனக்கும் ஸ்வாதிக்கும் ட்ரீட்மென்ட் கொடுத்த கைனகாலஜிஸ்ட்..! ஸ்வாதியின் ட்ரீட்மென்டிற்காக ஓரிரு முறை அவரை நேரில் சந்தித்து இருக்கிறேன்..! 

இப்பொழுது நிகாவை பற்றி தெரிந்து கொள்ள, முதலில் அவரைத்தான் நாடினேன்..!

முதலில் சொல்ல மறுத்தார்...!  நான் மிரட்டி பார்த்தும் அவரிடம் பலிக்கவில்லை..!

அப்பொழுதுதான் உன்னை பற்றி சொன்னேன்..!

கூடவே நிகா என் குழந்தை.. அவள் தந்தைக்காக எப்படி ஏங்கறா.. அந்த குழந்தைக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்றால் அதற்கு அவளை பற்றிய உண்மை தெரியவேண்டும்.

என்று கொஞ்சம் சென்டிமென்ட்டாக பேச, அதில் கொஞ்சம் இறங்கி வந்தவர் அப்பொழுதுதான் நடந்ததை எல்லாம் சொன்னார்..!

அப்பொழுதுதான் உனக்கான ட்ரீட்மென்ட்  முதல் முயற்சியிலயே வெற்றி பெற்றதையும் சேர்த்து சொல்லி

“நீங்கள் இருவரும் தான் இந்த ஜென்மத்தில் இணையவேண்டும் என்று இருக்கிறது..!  

இதற்கு நடுவே என்னென்னவோ குழப்பங்கள்..!  இருந்தாலும் கடைசியில் இணைந்து விட்டீர்கள்..! நீங்கள் இருவரும் சந்தோஷமாக இணைபிரியாமல் வாழ வேண்டும்...”  என்று வாழ்த்தினார் என்று தழுதழுத்தவாறு சொல்ல, சுரபியின்  கண்கள் நிறைந்து போனது..!  

“அவர் சொன்னது உண்மை என்று இந்தக் குட்டிப் பாப்பாவும் நிரூபித்து விட்டாள்...”  என்று அவளின் வயிற்றை மெல்ல ஆசையாக தொட்டு பார்த்தான்  

“ஸ்வாதி என் குழந்தையை  அவள் வயிற்றில் சுமக்க எவ்வளவு பாடுபட்டாள் தெரியுமா?

தினமும் இரண்டு முறையாவது என்னை டார்ச்சர் பண்ணி அவள் உடன் இணைய வைப்பாள்.. ஆனாலும் ஏனோ என் குழந்தை அவள் வயிற்றில் இயற்கையாக உருவாகவில்லை..!

ஆனால் நீ..?

அப்பொழுது மட்டும் அல்ல.. இப்பொழுதும் கூட..பர்ஸ்ட் அட்டெம்ப்ட் லயே என் குழந்தை உருவாகி விட்டாள்..!  

இதிலிருந்தே தெரியவில்லையா..!  நீதான்  என்னுடைய இணை...! என் சரி பாதி..! என்னுடைய பெர்பெக்ட் மேட்ச்..! எனக்கென பிறந்தவள்..! மை ஸ்வீட் ஹார்ட்...”

என்று மீண்டும் அவளை இறுக்கி அணைத்து அவள் நெற்றியில்  முத்தமழை பொழிந்தான்..!     

தன் கணவனின் அன்பில் நெகிழ்ந்து அவன்  மஞ்சத்தில் இன்னுமாய் வாகாக சாய்ந்து கொண்டாள்

அவளுக்கும் அவளை நினைத்து ஆச்சரியம் தான்..!  

அவள்  மீது உயிராக இருந்த ஷ்யாமிடம்  தோன்றாத இந்த காதல்..!

விகர்த்தனனை,  தன் மகளுடன் பார்த்த பொழுதே  அவளின் மனதில் ஆழ பதிந்து விட்டான்..!  முதல் பார்வையிலயே அவள்  இதயத்தில் பெரும்  பாதிப்பு தான்..!

ஆனால் தன்னை ஷ்யாமின் மனைவியாக உருவகபடுத்திக்கொண்டு இருந்தவள்..! அவனை தவிர வேற யாரையும் அவள் நினைக்க கூடாது..! வேற யாரிடமும் அவள் மயங்கிவிடக்கூடாது..!  

அது ஷ்யாமிற்கு செய்யும் துரோகம்..!

அவன் இறக்கும்பொழுது அவளை காதலுடன் பார்த்துக்கொண்டே தான் இறந்தான்..!

அந்த காதலுக்கு பரிசாக, அவள் எப்பொழுதும் அவனையே நினைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று தன் மனதை இறுக்கிக் கொண்டு அவனிடமிருந்து தள்ளி நின்றிருந்தாள்..!

இப்பொழுது எண்ணிப் பார்த்தால் அது வேடிக்கையாக இருந்தது..!

அவள் ஷ்யாமிற்கு... அவன் காதலுக்கு திருப்பி செய்தது நன்றி கடன் மட்டுமே..!

தன் அன்னையை அழைத்து வரச் சென்றுதான் அவன் விபத்தில் மாட்டிக் கொண்டான்..!  அதனால்தான் உயிரிழந்தான்..!  

அதற்கான நன்றிக் கடனாகத் தான் அவன் இடத்தில் இருந்து அவன் குடும்பத்தை கரை சேர்த்தது..!  

கூடவே நன்றிக்கடனாக அவனையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்தது.

ஆனால் காதல் வேறு..!  நன்றிகடன் வேறு..!  

எந்த நிலையிலும் அவன் இறந்த பிறகும் கூட ஷ்யாம்  மீது அனுதாபமும் வேதனையும் தான் வந்ததே தவிர காதல் வரவில்லை..!  

ஆனால் விகர்த்தனனைப் பார்த்ததுமே அவள்  காதல் கொண்டுவிட்டாள் என்று இப்பொழுது இன்னுமே தெளிவாகப் புரிந்தது..!  

அந்த தெளிவில் இன்னுமாய்  முகம் மலர்ந்தவள்

“ஐ லவ் யூ தனா...! லவ் யூ சோ மச்...! “  என்று காதலுடன் தழுதழுத்தவள், நிமிர்ந்து அவன் கழுத்தை வளைத்து தன் அருகில் இழுத்து அவன்  இதழில் அழுந்த  முத்தமிட்டாள் சுரபி..!

அவளிடமிருந்து, அவளாகவே தந்த  முதல் முத்தம்..! அதுவும் இதழ் முத்தம்..! கிறுகிறுத்து போனான் விகர்த்தனன்..!  

“உங்களை பார்த்த முதல் நாளே எனக்கும் கொஞ்சம் பாதிப்புதான்..! ஒவ்வொரு முறையும் என்னை அழைக்கும்பொழுது,  ஸ்வாதி என்று  உங்கள் முதல் மனைவியின் பெயரை  சொல்லும்போது,  

அவள் மீதான காதலால் தான் நீங்கள் அவளை மறக்க முடியாமல் தான் அவள் பெயரையே அடிக்கடி அழைத்து வைக்கறிங்க என்று   தவித்து போனேன்.

அந்த முகம் தெரியாத ஸ்வாதி மீது அப்படி கோபமாக வந்தது..! அவள் பெயரை கேட்டாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தியதை போல நாரசமாக இருந்தது..!

அதெல்லாம் உங்கள் மீதான என் காதலால் தான் என்று அப்பொழுது தெரியவில்லை....!

ஆழ்மனதில் உங்கள் மீதான ஈர்ப்பு இருந்ததால் தான், நீங்க அம்முவை பார்க்க வரும்பொழுது பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டு விட்டேன்..!

நம் திருமணத்திற்கு பிறகு, உங்கள் வீட்டிற்கு வந்த முதல் நாள்...உங்களை அந்த ஸ்வாதியுடன் இணைத்து...அதுவும் மணக்கோலத்தில் பார்த்த பொழுது என் மனதில் அப்படி ஒரு வலி..!

நீங்கள் ஏற்கனவே வேற ஒருத்திக்கு சொந்தமானவர்...! இப்பொழுது கூட அவள் நினைவால் தான் என்னை அடிக்கடி ஸ்வாதி என்று அழைத்து வைப்பது என்று எண்ணிவிட்டேன்..!

அதோடு நீங்க அம்முவுக்காகத்தான் என்னை மணந்தது..! என் மீது உங்களுக்கு கொஞ்சமும் பாசமோ, அன்போ , ஈர்ப்போ இல்லை..!   

உங்கள் காதல் எனக்கு கிடைக்கவே கிடைக்காதா என்று ஏக்கமாக இருக்கும்

ஆனாலும் வாய்விட்டு அதை சொல்லி உங்கள் காதலை பெற எனக்கு பிடிக்கவில்லை..!  

நீங்களாகவே என் மீதான நேசத்தை உணர வேண்டும் என்று தான் காத்திருந்தேன்..!  

நேசம் இல்லாத...  காதல் இல்லாத கூடல் எனக்கு பிடிக்கவில்லை..!  

அதனால் தான்  உங்களை தள்ளி வைத்தது..!  தள்ளி நிறுத்தியது..!

அப்பொழுதெல்லாம்  எனக்கும் எவ்வளவு வேதனையாக இருக்கும் தெரியுமா? உங்களை கஷ்டபடுத்தறேனோ என்று கஷ்டமாக இருக்கும்..! ஆனாலும் ஏனோ என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...”  

என்று கண்களை அழுந்த மூடி அப்போதைய வேதனையை இப்பொழுதும் அனுபவித்தான்.  

அவளின் வேதனையால் சுருங்கி இருந்த கண் இமைகளை  நீவி விட்டவன், அதற்கு ஒரு அழுத்தமான முத்தத்தை  கொடுத்தவன்,    

“ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட் நௌ சுபி மா...!  இப்பதான் அதெல்லாம் புரியுது..! நானும்  உன்னை  ரொம்பவும்  கஷ்டப் படுத்திட்டேன்..!  

வீட்டில் இருக்கும் பொழுது ஸ்வாதியின்  பெயரை மட்டும்தான் சில வருடங்களாக சொல்லியதால் சரளமாக அது வாயில் வந்துவிட்டது..!  

மற்றபடி நான் ஏற்கனவே சொன்னது போல பெரிதாக ஒன்றும்..! அவள் மீது காதல் எதுவும் இல்லை என்றுதான் சொல்லி விட்டேனே...”  என்று அவள்  தலையை ஆதரவாக வருடியவன்

“என் முதலும் கடைசியுமான காதல் நீதான் டி... நீ மட்டும்தான்..!  என் மீதி  வாழ்வின்  உயிர்ப்பு நீதான்..ஐ லவ் யூ கண்மணி..! “  என்று அவளின் கன்னத்தில் அழுத்தமாக காதலுடன் இதழ் பதித்தான் அந்த காதல் கணவன்..!

Share:

Followers

Total Pageviews