அத்தியாயம்-41
எப்படியோ ஐந்து
வருடங்கள் உருண்டோடி விட்டது..!
ஸ்வாதிக்கு இப்பொழுது வாழ்க்கையில் ரொம்பவுமே சலிப்பு தட்ட
ஆரம்பித்து விட்டது..!
வாழ்க்கையில் அவள் அனுபவிக்க நினைத்த அத்தனை சுகங்களையும்
அனுபவித்து விட்டாள்...!
அணிய நினைத்த ஆடை , அணிகலன்கள்..சுற்றி
பார்க்க வேண்டிய இடங்கள் என எல்லாமே அவளுக்கு நிறைவேறி விட்டது..!
என்னதான் தன் மனைவியிடம் பெரிதாக ஒன்ற முடியவில்லை என்றாலும்
ஒரு கணவனுக்கான கடமையை தவறாமல் செய்து வந்தான் விகர்த்தனன்..!
அவள் கேட்டதை எல்லாம் கணக்கு பார்க்காமல் வாங்கி தந்தான்..!
பத்தாதற்கு அவளுக்கென்று க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட் எல்லாம் கொடுத்து அவளுக்கு பிடித்ததை எல்லாம்
வாங்கிக்க சொல்லிவிட்டான்..!
அவளைக் கேட்காமலேயே எல்லாம் அவளுக்கு கிடைத்துவிட ஏனோ அந்த
வாழ்க்கை போரடிக்க சலிப்பு தட்ட
ஆரம்பித்து விட்டது
அப்பொழுதுதான் ஒரு திருமண விழாவில் தன் தோழியை சந்தித்தாள்
ஸ்வாதி..!
அவளும் ஸ்வாதியை போலத்தான்..!
கல்லூரி நாட்களில் தாராளமாக ஊரை சுற்றியவள்..! இப்பொழுது ஒரு
பெரிய செல்வந்தரை மணமுடித்து கூடவே ஒரு
குழந்தையையும் பெற்றுக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி இருந்தாள்...!
அந்த குட்டியை பார்த்ததும் ஸ்வாதிக்கும் ஆசை வந்தது..!
“எனக்கும் ஒரு குழந்தை
பிறக்க வேண்டும்... தாய்மை என்பதையும் அனுபவித்து பார்க்க வேண்டும்...” என்ற ஆசை
வந்தது
தன் ஆசையை விகர்த்தனனிடம் சொல்ல, தன் நெற்றியில்
ஆட்காட்டி விரலை வைத்து அழுத்தியபடி யோசித்தவன்,
“வெல்...உனக்கு பிடிச்சா பெத்துக்கோ...” என்று வழக்கம் போல, தோளை குலுக்கி விட்டு
சென்று விட்டான்..!
அவளும் அதுவரை பின்பற்றி வந்த
பாதுகாப்பு முறைகளை கைவிட்டு அவனுடன் கூடினாள்..!
அடுத்த மாதம் நாட்கள் தள்ளிப் போகும் என்று ஆவலுடன்
எதிர்பார்த்திருக்க, அவள் எதிர்பார்ப்பு
பொய்த்து போனது..! அவள் கருத்தரித்திருக்கவில்லை..!
அடுத்த மாதம்..! அதற்கு
அடுத்த மாதம்... என தன் குழந்தைக்காக காத்திருக்க, அது மட்டும்
நிறைவேறாமல் போனது..!
கிட்டதட்ட ஆறு மாதங்கள் கடந்திருக்க, அதற்கு மேல் காத்திருக்க பிடிக்காமல், தன் கணவனிடம் சென்று நின்றவள்... இருவரும் சென்று டாக்டரை
கன்சல்ட் பண்ணலாமா என்று கேட்க, அவனோ அவளை
முறைத்தவன்,
“என்னிடம் எந்த
குறையும் இல்லை..! நீ வேண்டும் என்றால் போய் செக் பண்ணிக்க..! என் ஆண்மையை பற்றி
எனக்கு தெரியும்..! ஐம் பெர்பெக்ட்லி ஆல்ரைட்...!
என்னால் எத்தனை குழந்தையை வேணும் என்றாலும் உருவாக்க
முடியும்... “ என்று கோபத்துடன் அவளிடம் கத்திவிட்டு சென்று விட்டான்..!
குழந்தை உருவாகாமல் போகிறது என்றால் குறை பெண்களிடம் மட்டும்
தான் என்று காலம்காலமாய் இருந்து வரும் நம்பிக்கை..! விகர்த்தனன் மட்டும் அதற்கு
விதிவிலக்கா என்ன?
தன்னை பற்றி...தன் உடலை பற்றி...தன் ஆரோக்கியத்தை பற்றி அதீத நம்பிக்கை கொண்டவனால், தன்னால் ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியவில்லை என்பதை ஏற்றுக்
கொள்ள முடியவில்லை..!
ஸ்வாதியிடம் தான் குறை இருக்கும் என்று ஆணித்தரமாக நம்பினான்..!
அவன் எண்ணியதை போலவேதான் ஆனது..!
*****
விகர்த்தனன் பரிசோதனைக்கு வர மறுத்து விட, வேற வழியில்லாமல் ஸ்வாதி மட்டும் தனியாக
சென்று அவளை பரிசோதித்தாள்..!
ஸ்வாதியை பரிசோதித்த மருத்துவரும், சில பல டெஸ்ட்டுகளை எடுத்து பார்த்து விட்டு அவளுக்கு
விளக்கமளித்தார்..!
அவள் தொடர்ந்து பல
வருடங்களாக பயன்படுத்திய கருத்தடை மாத்திரைகள்... தவறான உடல் சேர்க்கை...அவளின் தவறான
உணவு பழக்க வழக்கங்கள்...இதெல்லாம் தான் அவளுக்கு கருத்தரிப்பை உண்டாக்கவில்லை.
அதோடு அவளின் கருமுட்டைகள் தரமானதாக இல்லை என்று சொல்லி, அதை சரி செய்ய சில பல மாத்திரைகளை எழுதி கொடுத்தார்..!
அதை கொஞ்ச நாட்கள் பயன்படுத்தியும் எந்த பயனுமில்லை..!
அப்பொழுதுதான் செயற்கை முறை கருத்தரிப்பு பற்றி செய்தியை கேள்விப்பட்டு
அதை பற்றி ஆராய ஆரம்பித்தாள் ஸ்வாதி..!
மற்றொரு தோழி அந்த முறையை பின்பற்றி கர்ப்பமாகி இருக்க, அவளும் அதையே
பின்பற்றுவது என்று முடிவு செய்தாள்..!
அவளுடைய உடல்நிலைக்கு, கருப்பையின் வீக்கான
நிலைக்கு, IUI சிகிச்சை முறை வெற்றி பெறாது....!
நேரடியாக IVF முறையை பின்பற்றி
பார்க்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்த, விகர்த்தனனிடம் அவளின் திட்டத்தை சொல்ல கொஞ்சம் தயக்கமாக
இருந்தது...!
வேறு வழி எதுவும் இல்லை எனும் பொழுது, இதையும் முயற்சி செய்து பார்த்துவிட தயாரானாள் ஸ்வாதி..!
அதோடு இதுவரை அவள் கேட்டு எதையும் மறுத்திடாதவன்..! இதையும்
ஒத்துக்கொள்வான் என்று எண்ணியவள், தன் கணவனிடம் விஷயத்தை சொல்ல, அவனோ அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை..!
“லுக் ஸ்வாதி..! விஷயம் வெளியில் கசிந்தால் என்னுடைய இமேஜ்
என்னாவது? ஒரு குழந்தைக்கு தகப்பனாகும்... ஒரு குழந்தையை கொடுக்கும் தகுதி எனக்கு இல்லையா என்ற பேச்சு
வரும்..!
அதனால் இதெல்லாம் முடியாது..! கொஞ்ச நாள் வெய்ட் பண்ணு...!
நீயும் ப்ரெக்னென்ட் ஆவ....” என்று
மறுத்து விட, ஸ்வாதிக்கு அதில்
நம்பிக்கை இல்லை..!
டாக்டர் தான் அடித்து சொல்லி விட்டாரே..! இயற்கையாக அவள் கருத்தரிக்க
வாய்ப்பே இல்லை என்று...! அதனால் இன்னும் நாட்களை வீணாக்க அவளுக்கு
விருப்பமில்லை..!
அப்பொழுதுதான் சென்னையில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற ஃபெர்டிலிடி
சென்டர் பற்றி தெரிந்து கொண்டாள்.
பெங்களூரில் ட்ரீட்மென்ட் எடுத்தால் தானே விஷயம் கசியும்..!
“நாம் யாரென்று
தெரியாத சென்னைக்கு சென்று விட்டால்..? அதோடு இந்த
சென்டரில் அவர்களுடைய பேசன்ட்ஸ் பற்றிய விவரத்தை ரகசியமாக வைத்திருப்பார்கள்..!
ப்ளீஸ் விகா... எனக்காக இந்த ஒரு முறை சம்மதிங்க...” என்று அவனிடம் கெஞ்ச, ஒரு வழியாக மனசு
மாறி சரி என்று தலையசைத்து வைத்தான்..!
அதன்படி சென்னையில் இருந்த அந்த பிரபல பெர்டிலிட்டி சென்டருக்கு
சென்றனர்..!
இருவருக்கும் சில பல டெஸ்ட்டுகளை எடுத்தபின் அதற்கான புரசிஜரை
ஸ்டார்ட் பண்ணினர்..!
அவளின் கருமுட்டையை ஊசிக்குழல் மூலம் எடுத்து, அதில் விகர்த்தனனின் விந்தணுக்களை இணைய வைத்து, செயற்கை முறையில் கருவை உருவாக்க வைத்து, அந்த கரு எட்டு செல்லாக வளர்ந்ததும், அதை ஸ்வாதியின் கருப்பபையில் செலுத்தி விடுவது என்று முடிவு
செய்தனர்..!
இந்த சிகிச்சைக்காக சென்னையிலயே சில நாட்கள் தங்கி இருக்க
வேண்டி வர, விகர்த்தனன் அத்தனை
நாட்கள் அங்கே தங்க முடியாது என்பதால், அவனுடைய
விந்தணுக்களை கொடுத்துவிட்டு, ஸ்வாதிக்கு துணைக்கு, நம்பகமான ஒரு ஆளையும்
நியமித்துவிட்டு அவசர வேலையாக பெங்களூர்
வந்து விட்டான்..!
ஸ்வாதி மட்டும் சென்னையிலயே தங்கி அந்த சிகிச்சையை தொடர்ந்தாள்..!
செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கருவை கூட அவளின் கருப்பை
ஏற்றுக் கொள்ளவில்லை..!
நான்கு முறை ஃபெயிலியர் ஆகிவிட, மருத்துவர் கூட நம்பிக்கை இழந்து போனார்..!
இதை இதோடு நிறுத்தி கொள்ளலாம் என்க, ஸ்வாதி பிடிவாதமாக மறுத்துவிட்டாள்..
“நான் ஒரு குழந்தையை சுமந்து தான் ஆக வேண்டும்...” என்று பிடிவாதம் பிடித்து, பல கஷ்டங்களை, உடல் உபாதைகளையும் தாங்கிக் கொண்டு, அந்த சிகிச்சையை தொடர சொல்லி பிடிவாதம் பிடித்தாள்..!
வேறு வழியில்லாமல் அந்த
மருத்துவரும், வருகிற வரை லாபம் என்று
அவர்களும் ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய தொகையை கறந்து கொண்டு அவளுக்கு சிகிச்சை
அளிக்க, எப்படியோ
ஐந்தாவது முறை கருப்பையில் கரு தங்கிவிட்டது..!
******
அடுத்த மாதம் நாட்கள் தள்ளிப்போக, உற்சாகத்தில் துள்ளிக் குதித்தாள் ஸ்வாதி..!
தன் வயிற்றில் வளரும் அந்த குழந்தையை தொட்டு கொடுத்தும், தடவிக் கொடுத்தும் பூரித்து போனாள்..!
குழந்தை அவள் வயிற்றில் வளர வளர, அவளுக்குள் அப்படி ஒரு சந்தோஷம்...!
தன் சந்தோஷத்தை எல்லாம் தன் கணவனிடம் பகிர்ந்து கொள்ள, அவனோ அதை எல்லாம் காதிலயே போட்டுக்கொள்ளவில்லை..!
அவளுக்கு தேவையானவற்றை செய்ய ஒரு செவிலியரை அவள் உடனே இருந்து
பார்த்து கொள்ள நியமித்து விட்டு, தன் வேலையையும் தன் உல்லாச வாழ்க்கையையும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தான்..!
ஆறாவது மாதம் ஆரம்பித்ததும், அவள் வயிற்றில் குழந்தை புரள ஆரம்பிக்க, அது ஸ்வாதிக்கு ஏகாந்த
நிலையை கொடுத்தது..!
இதுவரை அவள் அனுபவித்திராத, புதுவித
உணர்வு... சுகமாக இருந்தது..! ஒவ்வொரு முறை தன் குழந்தையின் அசைவை உணரும்
பொழுதும் அப்படி பூரித்து போனாள்..! தாய்மை என்பது எப்படிபட்ட வரம் என்று அந்த
நொடியில் உணர்ந்தாள்..!
தன் சந்தோஷத்தை... தன் குழந்தையின் அசைவ தன் கணவனிடம் பகிர்ந்து
கொண்டு, அவனின் கையை எடுத்து அவளின் அடிவயிற்றில் வைத்து
காட்ட, அவனோ வெடுக்கென்று தன் கையை உருவிக்கொண்டான்..!
“இடியட்... எனக்கு இதெல்லாம் பிடிக்காது..! குடும்பம், குழந்தை இதில் எல்லாம் எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை..! நீ
ஆசைபட்டாய் என்றுதான் இந்த குழந்தைக்கு சம்மதித்தது..! மற்றபடி இந்த குழந்தைமீது எனக்கு கொஞ்சமும் இன்ட்ரெஸ்ட்
இல்லை...!
ஆனால் உனக்கு என்ன வேண்டுமோ அதை நான் செஞ்சு தர்ரேன்..! மற்றபடி
என்னை எதற்கும் தொந்தரவு செய்யாதே..!” என்று சுள்ளென்று எரிந்து விழுந்தான்..!
அவளின் முகம் வாடிப்போனது..!
ஆனாலும் தன் குழந்தையை கொஞ்சுவதை அவள் நிறுத்தவில்லை..!
ஒருநாள் அவர்களின் அறை
முழுவதும் பலவிதமான குழந்தைகளின் புகைப்படங்களாக மாட்டி வைத்திருக்க, அதைக் கண்டு எரிச்சல் தான் வந்தது விகர்த்தனனுக்கு..!
“இத்தனை போட்டோவை எதுக்குடி மாட்டி வச்சிருக்க..இது என்ன
பெட்ரூமா? இல்ல நர்சரியா? “ என்று உச்சக் கட்டத்தில் கத்த,
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... மெதுவா பேசுங்க... என் வயித்துல வளர்ற உங்க
பாப்பா பயந்துக்க போறா..
பொண்ணுங்க ப்ரெக்னென்ட் ஆ இருக்கிறப்ப இந்த மாதிரி அழகழகான பேபிஸ் போட்டோவா அடிக்கடி
பார்த்தா, இதே மாதிரி அழகா பாப்பா பொறக்குமாம்.
என் ஃப்ரெண்ட் சொன்னா... அதுக்கு தான் இவ்வளவு பாப்பா படத்தையும் மாட்டி
வச்சிருக்கேன்...” என்று கன்னம் குழிய சிரித்தாள் அவன் மனைவி...
“புல்ஷிட்... இதெல்லாம்
என்ன ஒரு மூடநம்பிக்கை...போட்டோவை பார்த்தால் அதே மாதிரியே குழந்தை பிறக்குமா? ரிடிகுலஸ்... ” என்று மீண்டும்
எரிந்து விழுந்தான்
“என்னவோ பண்ணித்தொலை...”என்று
மீண்டும் எரிச்சலுடன் மொழிந்து விட்டு விடுவிடுவென்று சென்று விட்டான்..!
****
இப்பொழுது அவளுக்கு ஏழாவது மாதம் ஆரம்பித்திருக்க, ஒருநாள் சீக்கிரமாகவே விகர்த்தனன்
அலுவலகம் கிளம்பி சென்றுவிட்டான்..!
அறையில் உறங்கி கொண்டிருந்த ஸ்வாதி, பாதி தூக்கத்தில் எழுந்தவள்,, ஏதோ எடுக்கவென்று தூக்க கலக்கத்துடன் மாடியிலிருந்து கீழே இறங்கியவள்..
கால் இடறி அப்படியே உருள ஆரம்பித்தாள்.
அதில் அதிர்ந்து போனவள், தன் குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று வயிற்றில் கை வைத்து
அழுத்திக் கொண்டே உருண்டாள்..!
அது நீண்ட படிக்கட்டு என்பதால் அவளால் உருளுவதை தடுக்க
முடியவில்லை..!
அவளின் அலறல் கேட்டு வேலையாட்கள் ஓடி வருவதற்குள் கீழ்ப்படியை அடைந்து தரையில் விழுந்து கிடந்தாள்..!
வயிற்றில் நன்றாக அடிபட்டுவிட, அப்பொழுதே ப்ளீடிங் ஆக ஆரம்பித்தது..! அதைக்கண்டு தன்
குழந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று உணர்ந்தவள் அலறி மயங்கி சரிந்தாள்..!
வேலையாட்கள் விகர்த்தனனை அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டு
அவர்களாகவே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..!
எவ்வளவு முயன்றும் அவளையும் குழந்தையையும் காப்பாற்ற
முடியவில்லை..!
அவளின் இழப்பு, விகர்த்தனனுக்கு
கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது..!
ஆனாலும் மனைவி குழந்தை என்று பெரிதாக ஈடுபாடு இல்லாமல்... ஒட்டாமல் இருந்தவனுக்கு அவர்களின் இழப்பு
ஒன்றும் பெரிதாக தெரியவில்லை..!
இரண்டு நாட்கள் அவளுக்காக வீட்டோடு தங்கி இருந்தவன், அதன் பிறகு அவன் தன்னுடைய வழக்கமான வாழ்க்கையை தொடர்ந்து கொண்டுதான் இருந்தான்..!
அதே நிலை தொடர, அடுத்த சில வருடங்களில் அவனுக்கு எல்லாவற்றிலும் சலிப்பு
ஏற்பட்டது..!
தனிமை அவனை கொன்றது. வாழ்க்கையே நரகமாக இருந்தது..!
ஒரு வருடமாக தனிமையில் தவித்துக்கொண்டிருந்தவனுக்கு வாழ்வில்
வசந்தமாக வந்தாள் அவன் தேவதை...! நிகா...!
*****
ஒரு பெருமூச்சு எடுத்து விட்டு ஸ்வாதி பற்றிய தன்
கதையை சொல்லி முடித்தான் விகர்த்தனன்..!
“ஏனோ ஸ்வாதியிடம் எனக்கு பெரிதாக ஒட்டுதல் இல்லை சுபி..!
நீ சொல்வதைப் போல அவள் மீது காதல் இல்லாமல், கடமைக்காக
கணவன்-மனைவியாக வாழ்ந்ததால் இருக்குமோ?
ஆனால் உன்னிடம் அப்படி தோன்றவில்லை..! கடமைக்காக உன்னை
அணைக்கவில்லை..! உன்னை பார்க்கும் பொழுதே எனக்குள் ஏதேதோ உணர்வுகள் பொங்கி
எழும்..!
அதிலும் முதல் நாள் உன்னை நான் அணைக்க வந்தபொழுது நீ அதை
தடுத்து விட்டாய்...! என்னை நிராகரித்தாய்..! அப்பொழுது எவ்வளவு அடிபட்டு போனேன்
தெரியுமா?
என்னை நிராகரித்த முதல் பெண் நீதான் என்று அவ்வளவு கோபம் உன் மீது..!
ஆனாலும் என்னை முயன்று கட்டு படுத்திக்கொண்டேன்..!
ஆரம்பத்தில் நீ ஒன்றும் என்னை இம்ப்ரெஸ் செய்யவில்லை.. இன்னொருவன் மனைவி என்பதால் கூட இருக்கலாம்..!
“ஹ்ம்ம்ம் அதுதான் தெரியுமே..! சார் ஒரு நாள் கூட என்னை
பார்த்ததில்லை..! நான் ஒருத்தி இருப்பதை கூட கண்டு கொள்ளவில்லை...” என்று செல்லமாக
முறைத்தாள் அவன் மனையாள்.!
“ஹா ஹா ஹா நீ சொல்வதும் சரிதான்..! அப்பொழுது எல்லாம் எனக்கு
நிகா மட்டும்தான் முக்கியமாக தெரிந்தாள்...!
ஆனாலும் மனதில் ஒரு ஓரத்தில் உன்னை பார்த்ததுமே ஒரு சிறு தடுமாற்றம்தான்..! ஆனால்
அதை நான் அப்பொழுது உணரவில்லை..!
எப்பொழுது நீ என்
மனைவியாய் ஆனாயோ, அதிலிருந்து என்
மனம் என்னை அறியாமலயே கொஞ்சம் கொஞ்சமாக உன்னிடம் சாய்ந்து விட்டது..! என் மனதில்
அப்படி ஒரு பாதிப்பு..!
ஒவ்வொரு முறை உன்னை பார்க்கும் பொழுதும், என் மனதில் ஒரு தவிப்பு..ஒரு
சிலிர்ப்பு...! உன்னை எப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.. எப்பொழுதும்
உன் அருகிலயே இருக்க வேண்டும் என்று தவிப்பாக இருக்கும்..!
இதற்கு பெயர்தான் காதல் என்று அன்று தெரியாமல் போனது..!
ஆனால் இன்று நீ மயங்கி சரிந்தபொழுதுதான்... நீ
இல்லாமல் என் வாழ்க்கையே இல்லை என்று மண்டையில் உறைத்தது..!
உன்னை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று என் ஒவ்வொரு
அணுவும் துடித்தது..! ஆனால் ஸ்வாதி அடிபட்டு
இறந்தபொழுது இப்படியெல்லாம் எதுவும் தோன்றவில்லை
யாரோ ஒரு மூன்றாம் மனுஷி... மறைந்து விட்டாள் என்றுதான் எனக்கு
தோன்றியது..! பெரிதாக வருத்தப்படவும் இல்லை..! வெகு இயல்பாக அந்த சூழ்நிலையை
கடந்து வந்துவிட்டேன்..!
ஆனால் என்னால் உன்னிடம் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை..!
அப்பொழுது தான் நீ என் மனதில் எந்த அளவுக்கு ஆழப்பதிந்து போனாய்
என்று புரிந்தது ..!
“ஐ லவ் யூ சுபி... நீ இல்லாமல் இனி என் வாழ்க்கையே இல்லை...” என்று தழுதழுத்தவாறு அவளை இறுக்க அணைத்து கொண்டான்
விகர்த்தனன்..!
அவளும் தன் கணவன் அன்பில் நெகிழ்ந்து உருகித்தான் போனாள்..!
ஆனாலும் மனதில் ஒரு ஓரமாக நிகா எப்படி உருவானாள் என்ற கேள்வி இன்னும் பாக்கி இருக்க, அதற்கும் அவனே விடை
சொன்னான்..!
*****
“நீ உனக்கென்று ஒரு கணவன் இல்லாமல், செயற்கை முறை கருத்தரிப்பு முறையில் குழந்தையை சுமக்க வேண்டும்
என்று ஸ்வாதி ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டிருந்த அதே பெர்டிலிட்டி சென்டரை அணுகியிருக்கிறாய்..!
விந்தணுக்களை தானம் செய்த ஒருவரின் விந்தணுவைத் தான் உனக்கு
கர்ப்பப்பையில் செலுத்துவதாக இருந்திருக்கிறார்கள்..!
எப்படியோ அங்கிருந்த செவிலியரின்
அஜாக்கிரதையால் விந்தணுக்கள் சேகரித்து வைத்திருந்த ட்யூப் தவறி கீழ விழுந்துவிட்டது..!
ஏற்கனவே உனக்கு புரசிஜர் ஆரம்பித்து விட்டதால், உன்னிடம் அந்த காரணத்தை
அப்படியே சொல்ல முடியாமல் தவித்த அந்த செவிலி, ஸ்வாதியின் ட்ரீட்மென்ட்க்காக வைத்திருந்த என்னுடைய
விந்தணுக்களை எடுத்து கொடுத்து விட்டாள்.
மருத்துவரும் அதை எல்லாம் பார்க்காமல் உனக்குள் செலுத்தி விட்டார்..!
ஆனால் என்ன ஆச்சரியம்..!
ஸ்வாதியின் கருமுட்டையுடன் என் உயிர் இணைவதற்கு அவ்வளவு பாடுபட்டார்கள்..!
ஆனால் உன் கருமுட்டையுடன் என் விந்தணுக்கள் உடனேயே இணைந்து
விட்டதாகவும், முதல் முயற்சியிலேயே
வெற்றி பெற்றுவிட்டதாக மருத்துவர் லதா சொன்னார்..!
அவர்தான் உனக்கும் ஸ்வாதிக்கும் ட்ரீட்மென்ட் கொடுத்த
கைனகாலஜிஸ்ட்..! ஸ்வாதியின் ட்ரீட்மென்டிற்காக ஓரிரு முறை அவரை நேரில் சந்தித்து
இருக்கிறேன்..!
இப்பொழுது நிகாவை பற்றி தெரிந்து கொள்ள, முதலில் அவரைத்தான் நாடினேன்..!
முதலில் சொல்ல மறுத்தார்...! நான் மிரட்டி பார்த்தும் அவரிடம்
பலிக்கவில்லை..!
அப்பொழுதுதான் உன்னை பற்றி சொன்னேன்..!
கூடவே நிகா என் குழந்தை.. அவள் தந்தைக்காக எப்படி ஏங்கறா.. அந்த
குழந்தைக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்றால் அதற்கு அவளை பற்றிய உண்மை
தெரியவேண்டும்.
என்று கொஞ்சம் சென்டிமென்ட்டாக பேச, அதில் கொஞ்சம் இறங்கி வந்தவர் அப்பொழுதுதான் நடந்ததை எல்லாம்
சொன்னார்..!
அப்பொழுதுதான் உனக்கான ட்ரீட்மென்ட் முதல் முயற்சியிலயே வெற்றி பெற்றதையும்
சேர்த்து சொல்லி
“நீங்கள் இருவரும் தான் இந்த ஜென்மத்தில் இணையவேண்டும் என்று இருக்கிறது..!
இதற்கு நடுவே என்னென்னவோ குழப்பங்கள்..! இருந்தாலும் கடைசியில் இணைந்து விட்டீர்கள்..! நீங்கள்
இருவரும் சந்தோஷமாக இணைபிரியாமல் வாழ வேண்டும்...” என்று வாழ்த்தினார் என்று தழுதழுத்தவாறு சொல்ல, சுரபியின் கண்கள்
நிறைந்து போனது..!
“அவர் சொன்னது உண்மை என்று இந்தக் குட்டிப் பாப்பாவும்
நிரூபித்து விட்டாள்...” என்று அவளின்
வயிற்றை மெல்ல ஆசையாக தொட்டு பார்த்தான்
“ஸ்வாதி என் குழந்தையை அவள் வயிற்றில் சுமக்க எவ்வளவு பாடுபட்டாள்
தெரியுமா?
தினமும் இரண்டு முறையாவது என்னை டார்ச்சர் பண்ணி அவள் உடன் இணைய
வைப்பாள்.. ஆனாலும் ஏனோ என் குழந்தை அவள் வயிற்றில் இயற்கையாக உருவாகவில்லை..!
ஆனால் நீ..?
அப்பொழுது மட்டும் அல்ல.. இப்பொழுதும் கூட..பர்ஸ்ட் அட்டெம்ப்ட்
லயே என் குழந்தை உருவாகி விட்டாள்..!
இதிலிருந்தே தெரியவில்லையா..! நீதான் என்னுடைய இணை...! என் சரி பாதி..! என்னுடைய
பெர்பெக்ட் மேட்ச்..! எனக்கென பிறந்தவள்..! மை ஸ்வீட் ஹார்ட்...”
என்று மீண்டும் அவளை இறுக்கி அணைத்து அவள் நெற்றியில் முத்தமழை பொழிந்தான்..!
தன் கணவனின் அன்பில் நெகிழ்ந்து அவன் மஞ்சத்தில் இன்னுமாய் வாகாக சாய்ந்து கொண்டாள்
அவளுக்கும் அவளை நினைத்து ஆச்சரியம் தான்..!
அவள் மீது உயிராக
இருந்த ஷ்யாமிடம் தோன்றாத இந்த காதல்..!
விகர்த்தனனை, தன் மகளுடன் பார்த்த பொழுதே அவளின் மனதில் ஆழ பதிந்து விட்டான்..! முதல் பார்வையிலயே அவள் இதயத்தில் பெரும் பாதிப்பு தான்..!
ஆனால் தன்னை ஷ்யாமின் மனைவியாக உருவகபடுத்திக்கொண்டு
இருந்தவள்..! அவனை தவிர வேற யாரையும் அவள் நினைக்க கூடாது..! வேற யாரிடமும் அவள்
மயங்கிவிடக்கூடாது..!
அது ஷ்யாமிற்கு செய்யும் துரோகம்..!
அவன் இறக்கும்பொழுது அவளை காதலுடன் பார்த்துக்கொண்டே தான்
இறந்தான்..!
அந்த காதலுக்கு பரிசாக, அவள் எப்பொழுதும் அவனையே நினைத்துக்கொண்டு இருக்க வேண்டும்
என்று தன் மனதை இறுக்கிக் கொண்டு அவனிடமிருந்து தள்ளி நின்றிருந்தாள்..!
இப்பொழுது எண்ணிப் பார்த்தால் அது வேடிக்கையாக இருந்தது..!
அவள் ஷ்யாமிற்கு... அவன் காதலுக்கு திருப்பி செய்தது நன்றி கடன்
மட்டுமே..!
தன் அன்னையை அழைத்து வரச் சென்றுதான் அவன் விபத்தில் மாட்டிக்
கொண்டான்..! அதனால்தான் உயிரிழந்தான்..!
அதற்கான நன்றிக் கடனாகத் தான் அவன் இடத்தில் இருந்து அவன்
குடும்பத்தை கரை சேர்த்தது..!
கூடவே நன்றிக்கடனாக அவனையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்
என்று முடிவு செய்தது.
ஆனால் காதல் வேறு..! நன்றிகடன் வேறு..!
எந்த நிலையிலும் அவன் இறந்த பிறகும் கூட ஷ்யாம் மீது அனுதாபமும் வேதனையும் தான் வந்ததே தவிர
காதல் வரவில்லை..!
ஆனால் விகர்த்தனனைப் பார்த்ததுமே அவள் காதல் கொண்டுவிட்டாள் என்று இப்பொழுது இன்னுமே
தெளிவாகப் புரிந்தது..!
அந்த தெளிவில் இன்னுமாய்
முகம் மலர்ந்தவள்
“ஐ லவ் யூ தனா...! லவ் யூ சோ மச்...! “ என்று காதலுடன் தழுதழுத்தவள், நிமிர்ந்து அவன் கழுத்தை வளைத்து தன் அருகில் இழுத்து அவன் இதழில் அழுந்த முத்தமிட்டாள் சுரபி..!
அவளிடமிருந்து, அவளாகவே தந்த முதல் முத்தம்..! அதுவும் இதழ் முத்தம்..!
கிறுகிறுத்து போனான் விகர்த்தனன்..!
“உங்களை பார்த்த முதல் நாளே எனக்கும் கொஞ்சம் பாதிப்புதான்..! ஒவ்வொரு
முறையும் என்னை அழைக்கும்பொழுது, ஸ்வாதி என்று உங்கள் முதல் மனைவியின் பெயரை சொல்லும்போது,
அவள் மீதான காதலால் தான் நீங்கள் அவளை மறக்க முடியாமல் தான்
அவள் பெயரையே அடிக்கடி அழைத்து வைக்கறிங்க என்று
தவித்து போனேன்.
அந்த முகம் தெரியாத ஸ்வாதி மீது அப்படி கோபமாக வந்தது..! அவள்
பெயரை கேட்டாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தியதை போல நாரசமாக இருந்தது..!
அதெல்லாம் உங்கள் மீதான என் காதலால் தான் என்று அப்பொழுது
தெரியவில்லை....!
ஆழ்மனதில் உங்கள் மீதான ஈர்ப்பு இருந்ததால் தான், நீங்க அம்முவை பார்க்க வரும்பொழுது பெரிதாக எதிர்ப்பு
தெரிவிக்காமல் விட்டு விட்டேன்..!
நம் திருமணத்திற்கு பிறகு, உங்கள் வீட்டிற்கு வந்த முதல் நாள்...உங்களை அந்த ஸ்வாதியுடன்
இணைத்து...அதுவும் மணக்கோலத்தில் பார்த்த பொழுது என் மனதில் அப்படி ஒரு வலி..!
நீங்கள் ஏற்கனவே வேற ஒருத்திக்கு சொந்தமானவர்...! இப்பொழுது கூட
அவள் நினைவால் தான் என்னை அடிக்கடி ஸ்வாதி என்று அழைத்து வைப்பது என்று
எண்ணிவிட்டேன்..!
அதோடு நீங்க அம்முவுக்காகத்தான் என்னை மணந்தது..! என் மீது
உங்களுக்கு கொஞ்சமும் பாசமோ, அன்போ , ஈர்ப்போ இல்லை..!
உங்கள் காதல் எனக்கு கிடைக்கவே கிடைக்காதா என்று ஏக்கமாக
இருக்கும்
ஆனாலும் வாய்விட்டு அதை சொல்லி உங்கள் காதலை பெற எனக்கு
பிடிக்கவில்லை..!
நீங்களாகவே என் மீதான நேசத்தை உணர வேண்டும் என்று தான்
காத்திருந்தேன்..!
நேசம் இல்லாத... காதல் இல்லாத கூடல் எனக்கு
பிடிக்கவில்லை..!
அதனால் தான் உங்களை
தள்ளி வைத்தது..! தள்ளி நிறுத்தியது..!
அப்பொழுதெல்லாம் எனக்கும் எவ்வளவு வேதனையாக இருக்கும் தெரியுமா? உங்களை கஷ்டபடுத்தறேனோ என்று கஷ்டமாக இருக்கும்..! ஆனாலும் ஏனோ
என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...”
என்று கண்களை அழுந்த மூடி அப்போதைய வேதனையை இப்பொழுதும்
அனுபவித்தான்.
அவளின் வேதனையால் சுருங்கி இருந்த கண் இமைகளை நீவி விட்டவன், அதற்கு ஒரு அழுத்தமான முத்தத்தை கொடுத்தவன்,
“ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட் நௌ சுபி மா...! இப்பதான் அதெல்லாம் புரியுது..! நானும் உன்னை ரொம்பவும் கஷ்டப் படுத்திட்டேன்..!
வீட்டில் இருக்கும் பொழுது ஸ்வாதியின் பெயரை மட்டும்தான் சில வருடங்களாக சொல்லியதால்
சரளமாக அது வாயில் வந்துவிட்டது..!
மற்றபடி நான் ஏற்கனவே சொன்னது போல பெரிதாக ஒன்றும்..! அவள் மீது
காதல் எதுவும் இல்லை என்றுதான் சொல்லி விட்டேனே...” என்று அவள் தலையை ஆதரவாக வருடியவன்
“என் முதலும் கடைசியுமான காதல் நீதான் டி... நீ மட்டும்தான்..! என் மீதி வாழ்வின் உயிர்ப்பு நீதான்..ஐ லவ் யூ கண்மணி..! “ என்று அவளின் கன்னத்தில் அழுத்தமாக காதலுடன் இதழ்
பதித்தான் அந்த காதல் கணவன்..!
0 comments:
Post a Comment