மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Saturday, February 11, 2023

கனவே கை சேர வா-22

 


இந்த நாவல் இப்பொழுது ஆடியோ நாவலாக நம் சேனலில் வெளியாகி உள்ளது. கேட்டுப் பாருங்க..!

அத்தியாயம்-22 

தேநேரம் அந்த ப்ளாக் ஆடி கார் மினிஸ்டர் அன்று தங்கி இருந்த தலைமை செயலகத்தை அடைந்திருக்க,  காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு கீழ இறங்கினான் வெற்றி.

பொதிகையும்  தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.  

இதுவரை இலகுவாக இருந்தவளுக்கு இப்பொழுது கொஞ்சம் படபடப்பாக இருந்தது.  

அவளின் படபடப்பை புரிந்து கொண்டவன் அவள் கையை தன் கைக்குள் வைத்துக் கொண்டு

“நோ டென்சன் பேபி..!  அல்ரெடி உனக்கு  சொல்லிருக்கேன்..!  மினிஸ்டர் ஒன்னும் சிங்கமோ புலியோ இல்லை..!  ஏற்கனவே நம்ம ப்ராஜெக்ட் ஐ பற்றி லைட்டா சொல்லி இருக்கேன்.  

அதனால ஈசியா இரு... எல்லாம் நல்லபடியா முடியும்..! நல்லதே நடக்கும்...”  என்று  அவளை மெல்ல அணைத்து விட்டவன்,  அவள் கையோடு கை கோர்த்துக்கொண்டே  அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தான்..!  

அவனைக் கண்டதும், கல்வி அமைச்சரின் உதவியாளர் ராகவன்  வெற்றியை அடையாளம் கண்டுகொண்டு, அவனிடம் விரைந்து வந்தார்..!  

“வாங்க... வாங்க... வெற்றி தம்பி...!  வீட்ல எல்லாரும் சௌக்கியமா? என்று வாயெல்லாம் பல்லாக நலம் விசாரிக்க, அவனும் அவரை பார்த்து புன்னகைத்து

“எல்லாரும் பரம சௌக்கியம் அங்கிள்..! நீங்க எப்படி இருக்கிங்க? வீட்ல ஆன்ட்டி, பசங்க எப்படி இருக்காங்க...?” என்று பார்மாலிட்டிக்காக அவரை பற்றி விசாரிக்க, அவரும் இன்னுமாய் மலர்ந்து போனார்..!

அவனுக்கு பதில் அளித்தவாறு  அடுத்து அவரின் பார்வை கேள்வியுடன் அவன் அருகில் நின்றிருந்த பொதிகையிடம்  சென்றது.

இரண்டு மூன்று முறை மினிஸ்டரை சந்திக்க வேண்டும் என்று பொதிகை, ராகவனை அணுகியதும், அப்பாயின்ட்மென்ட் இல்லை என்று அவளை திருப்பி அனுப்பியதும் ராகவனுக்கு அப்பொழுது நினைவு வர, யோசனையுடன் பொதிகையை பார்த்து வைத்தார் மனிதர்..!

அதை புரிந்து கொண்ட வெற்றி, அவளை அவருக்கு அறிமுகபடுத்தி வைத்தான்..!   

“இவ தான்  என்னுடைய ப்யான்சி அங்கிள்..பேர் பொதிகை..! “ என்று சிறுவெட்கத்துடன்  சிரிக்க, அதைக்கேட்டு ஒரு நொடி அதிர்ந்து போனார்..!

அவசரமாக வெற்றியையும், பொதிகையும் ஒப்பிட்டு பார்த்தது..!

பெண் அப்படி ஒன்றும் பேரழகி இல்லை..! வெற்றியின் கம்பீரத்திற்கும், அந்தஸ்திற்கும்  பெண் கொடுக்க, எத்தனையோ மத்திய, மாநில அமைச்சர்கள் வரிசையில் காத்துக்கொண்டிருக்க, அவனுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாத இந்த பெண்ணை பிடித்து இருக்கிறானே..! என்று ஒரு கணம் முகத்தை நொடிக்காமல் இருக்கவில்லை..!

ஆனாலும் இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம். நமக்கு எதுக்கு என்று தன்னை சமாளித்துக்கொண்டவர், வரவழைத்த அசட்டு சிரிப்புடன்,

“வணக்கம் மா... ஹீ ஹீ ஹீ நீங்கதான் வெற்றித்தம்பிய கட்டிக்க போறவங்கனு அன்னைக்கே சொல்லி இருக்கலாமே..! 

நீங்க யாருனு தெரியாததால அன்னிக்கு சார் கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கி தரமுடியலை...” என்று எட்டாக வளைந்து தலையை சொரிந்து மீண்டும் அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தார்..!

பொதிகைக்கு அவரின் செயல் ஆச்சர்யமாக இருந்தது..!

அன்று வந்தபொழுது எவ்வளவு மிடுக்குடன் அவளை விரட்டி அடித்தார்.. ! என்று ஏன் இப்படி மனிதர் எட்டாக வளைகிறார் என்று அவசரமாக யோசித்தவளுக்கு உடனே வித்தியாசம் புரிந்துவிட்டது..!

வெற்றி..!

“ஓ..அப்ப இந்த அல்லக்கை வெற்றிக்கு தெரிந்தவரா? இவரை மடக்கித்தான் இந்த அப்பாயின்ட்மென்ட்டை வாங்கி இருக்கிறான்..!

சே..! என்னதான் கஷ்டப்பட்டு நாம உழைத்தாலும் சில நேரம் பெரிய மனிதர்களின் சப்போர்ட் இல்லாமல் காயை நகர்த்த முடிவதில்லை...”  என்று அப்பொழுது கற்றுக்கொண்டாள்..!

ஓரக்கண்ணால் வெற்றியை முறைத்து பார்க்க, அப்பொழுதுதான் வெற்றிக்கு அவளின் மனவோட்டம் புரிந்தது..!

“அச்சோ...இந்த மனிதர் ரொம்ப வழியறாரே..! என் தயவால்தான் இந்த சந்திப்பு என்று கண்டுகொண்டால், இந்த வீம்புக்காரி முறுக்கிகிட்டு போய்டுவாளே...” என்று ஜெர்க்கானவன், சுதாரித்துக்கொண்டான்..!

“மினிஸ்டர் அப்ப பிசியா இருந்தார்னு இவளுக்கு தெரியல அங்கிள். அதான் அப்ப வந்திருக்கா..! அதோட மேடம் கொஞ்சம் சுயகௌரவம் பார்க்கிறவ. இது முழுக்க முழுக்க இவளுடைய ப்ராஜெக்ட். அதனால அவளே எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்சுகிட்டு இருக்கா...” என்று சமாளிக்க,

“ரொம்ப சந்தோஷம் மா...எங்க வெற்றி தம்பியை கட்டிக்க நீங்க கொடுத்து வைச்சிருக்கணும்...” என்று வாயெல்லாம் பல்லாக வெற்றியை ஒரு நொடி புகழ்ந்து தள்ளியவர்,

“அப்புறம் தம்பி...எப்ப கல்யாண சாப்பாடு போடப்போறிங்க...” என்று சிரிக்க,

“எல்லாம் உங்க கையிலயும், உள்ள இருக்கிற மினிஸ்டர் கையிலயும்தான் இருக்கு... இந்த ப்ராஜெக்ட் ஓ.கே ஆனாதான் கல்யாணத்தை பத்தியே யோசிக்க முடியும்....” என்று உள்ளுக்குள் நொந்து கொண்டவன்,

“ஹீ ஹீ ஹீ சீக்கிரமே அங்கிள்..!...உங்களுக்கும் இன்விடேஷன் வரும்.  கண்டிப்பா குடும்பத்தோட வந்து சாப்பிட்டுட்டு போங்க...” என்று குறும்புடன் சிரிக்க,

“கண்டிப்பா... தம்பி...! எத்தனை வருஷமா டிமிக்கி கொடுத்துட்டு இருந்த.  இப்ப நம்ம ஊரு பொண்ணாவே புடிச்சிட்ட. எப்படியோ இப்பயாச்சும் சம்சார கடலில் குதிக்க தைர்யம் வந்ததே..

பாவம்.. ஜமீன்தார் தான் பாக்கிறப்ப எல்லாம் புலம்பிகிட்டிருப்பார்....இந்த பய கல்யாணம் பண்ணிக்காம இன்னுமே கட்ட பிரம்மச்சாரியா  சுத்திகிட்டு இருக்கானே என்று...!  இப்ப அவருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே...! ” என்று சிரித்து வைத்தார்.

******

வெற்றிமாறனின் தந்தை நெடுமாறன் , கல்வி அமைச்சர் பொன்வண்ணனுக்கு ரொம்பவும் நெருங்கிய சிநேகிதர்...

துறையூர் பகுதியை சேர்ந்தவர்..! ஒருவகையில் அமைச்சர் இந்த அரசியலுக்கு வர, வெற்றிமாறனின் தந்தையும் ஒரு காரணம்தான்..!

அவருடைய நண்பர் என்பதாலயே அந்த பகுதி மக்களுக்கு பொன்வண்ணன் மீது தனிப்பிரியம்..! அதோடு நேர்மையான அரசியல் புரியும் அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் என்பதால் மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பு.!

அவரின் பி.ஏ ராகவன்...முசிறியை சேர்ந்தவர்..! பொன்வண்ணனின் வலது கை, இடது கை, அல்லக்கை, நொல்லக்கை எல்லாம அவர்தான்..!

மினிஸ்டர் உடன் அவரும் ஜமீன்தாரை சந்திக்க அடிக்கடி வீட்டிற்கு செல்வதால், அவருக்கும் ரொம்ப பழக்கம்..! அதனாலயே வெற்றியிடம் கொஞ்சம் உரிமையுடன் கலாய்த்தார் மனிதர்..!

வெற்றியிடம் சற்று நேரம் பேசிவிட்டு,  பின்  அவர்களை அமைச்சரின் அறைக்கு உள்ளே  அனுப்பி வைத்தார் ராகவன்.

****

ருவித டென்சனுடனேயே அறைக்கு உள்ளே சென்றாள் பொதிகை..!  

வெற்றி சொன்னது போலவே,  அமைச்சர் பொன்வண்ணனுக்கு வெற்றியை தெரியும் என்பதால், உள்ளே வந்த வெற்றியை பார்த்ததும், புன்னகையுடன் தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து வெற்றியை கட்டி அணைத்துக் கொண்டார்.

பின் பொதிகையை பார்த்து,

“வாம்மா...மருமகளே..! எப்படி இருக்க? “ என்று நட்பு கலந்த உரிமையுடன் இளையவளை வரவேற்க, பொதிகைக்கு அதிர்ச்சியாகிப்போனது..!

“வாட்? மருமகளா? “ என்று அதிர்ச்சியோடு வெற்றியை பார்க்க, அவனோ “போச்சுடா....” என்று மானசீகமாக தன் தலையில் கைவைத்துக்கொண்டான்..!

“என்னைத்தெரியாத மாதிரி காட்டிக்குங்க அங்கிள்...” என்று அத்தனை முறை சொல்லி வைத்திருக்க, தன்னை மறந்து அவர் வெற்றியை வரவேற்று வைத்திருக்க, அதில் பெண் கொஞ்சம் விழித்துக்கொண்டாள்..!

வெற்றி ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்து , குறும்பாக கண் சிமிட்ட, அவனை முறைத்து வைத்தாலும், ஏனோ அதுவரை இருந்த பதட்டம் மட்டுபட்டது பெண்ணுக்கு..!

என்னதான் ஒரு நிறுவனத்தின் தலைவி..பல பெரிய பெரிய வாடிக்கையாளர்களிடம் பழகி இருக்கிறாள் என்றாலும், அரசியல் சம்பந்தமான எதிலும் இதுவரை ஈடுபட்டதில்லை..!

பெரும்பாலும் திரைப்படங்களில் அரசியல்வாதிகளை பற்றி மோசமாக  காட்டி இருக்க, பொதிகையின் மனதில் அரசியல்வாதிகளை பற்றிய ஒரு தவறான பிம்பம் பதிவாகி இருந்தது..!

அதனாலயே ஒரு அமைச்சரை சந்திக்க போகிறோம்? எப்படி அமர்த்தலாக நடந்து கொள்வாரோ என்று டென்சனுடன் வந்தவளுக்கு, பொன்வண்ணனின் அந்த எளிமையான தோற்றமும், சிரித்த முகமும் அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், அவரின் வரவேற்பிலிருந்தே அவர் வெற்றிக்கு தெரிந்தவர்..!  என்று புரிந்தது..!

ஆக.. அவள் அமைச்சரை சந்திப்பது   வெற்றியின் செல்வாக்கினாள்தான் என்று இப்பொழுது தெளிவாகிவிட்டது..!

முதலில் மனம் சுணங்கினாலும்,முன்பு வெற்றி சொன்னது போல அவன் வேறு அவள் வேறு அல்லவே..! அவன் எது செய்தாலும் அதில் அவளும் அடக்கம் அல்லவா என்று மனதை தேற்றிக்கொண்டவள், மெல்ல புன்னகைத்து

“வணக்கம் சார்...” என்று தன் இருகரம் குவித்து அவருக்கு வணக்கம் சொல்ல, அதில் முகம் மலர்ந்தவர்,

“ஆஹான்.. டேய் மாறா.. ஒருநாளாவது நீ இப்படி வணக்கம் சொல்லி இருப்பியா? மருமக வணக்கம் வைக்கிற தோரணையில் அப்படியே அந்த ஜமீன்தாரை பார்ப்பது போல இருக்குடா...

சரியான பொண்ணைத்தான் தேடிபிடிச்சிருக்க...” என்று அவனின் முதுகில் செல்லமாக தட்டியவர்,

“வாம்மா... பொதி... எப்படி இவன சமாளிக்கிற..? “ என்று ஜாலியாக உரையை ஆரம்பிக்க, பெண்ணுக்கு இன்னுமே சௌகர்யமாகி போனது..!

கூடவே தன் பெயரைக்கூட தெரிந்து வைத்திருக்கிறாரே என்று ஆச்சர்யம்..!

அதற்கெல்லாம் காரணம் அவளவன் என்று அறிந்திருக்கவில்லை பெண்ணவள்..!

******

சென்றவாரம் ஜமீன்தாரை பார்க்க அவரது இல்லத்திற்கு சென்றிருந்தார் பொன்வண்ணன்..!

பொதிகையின் ப்ராஜெக்ட்டை பற்றி  விளக்க, மினிஸ்டரை நேரில் சென்று சந்திக்க எண்ணி இருந்தான் வெற்றிமாறன்..!

முதலில் அவள் வழியாகவே அவரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் வாங்கட்டும் என்று அவள் போக்கில் விட்டுவிட்டான்..!

ஆனால் இரண்டு மூன்று முறை முயன்றும் ராகவன் அங்கிள் அவளுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்கவில்லை என்று தெரிந்ததும், அவனே களத்தில் இறங்க முடிவு செய்தான்..!  

அவன் மட்டுமாய் அவரை நேரில் சென்று சந்திக்க இருக்க, இப்பொழுது அவரே தன் வீட்டிற்கு  வருகிறார் என்று தெரிந்ததுமே கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி, வெற்றி அவரை சந்திக்க என்று அலுவலகத்துக்கு செல்லாமல் இருந்து விட்டான்..!

வந்தவரும் ஜமீன்தாருடன் பேசிக்கொண்டிருக்க, பேசி முடித்ததும்,  அவரை தன் அலுவலக அறைக்கு தள்ளிசென்றவன் பொதிகையை பற்றியும், அவளின் ப்ராஜெக்ட்டை பற்றியும் விளக்கி சொல்லி அவரின் உதவியை கேட்டான்..!

அவருக்கும் அந்த ப்ராஜெக்ட் பிடித்துவிட கிட்டதட்ட அப்பொழுதே  ஓ.கே சொல்லிவிட்டார் தான்..!

ஆனால் அதை அப்படியே பெண்ணிடம் சொன்னால், அவன் தயவால் தான் அனுமதி கிடைத்தது என்று முறுக்கி கொள்வாள் என்று, பார்மாலிட்டிக்காக இந்த சந்திப்பை ஏற்பாடு செய்து இருந்தான் வெற்றி..!

அது தெரியாத பெண்ணும் இத்தனை நேரமாக டென்சனாகி இருந்தது..!

இப்பொழுது டென்சன் மறைந்து விட, அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்..!

கூடவே அவள் கையோடு எடுத்து வந்திருந்த அவள் ப்ராஜெக்ட் பற்றிய விவரங்கள் இருந்த கோப்பை அமைச்சரிடம் கொடுத்தாள்..!

அமைச்சரும் அதை புரட்டியபடி, அந்த ப்ராஜெக்ட் பற்றிய விவரங்களை, விளக்கங்களை கேட்டறிந்தார்.  

பொதிகையும் ஆரம்பத்தில் இருந்த தயக்கத்தை விடுத்து தன் ப்ராஜெக்ட் என்றதும்,  மடமடவென்று தன் திட்டத்தை விவரித்தாள்.

வெற்றி சொன்னதை விட, பொதிகை விவரித்த விளக்கங்கள் அவருக்கு இன்னுமாய் திருப்தியை அளித்தது...!  

எதிர்க் கட்சிகளும் தமிழக மாணவர்கள்... அதுவும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்  நீட் தேர்வில் தேர்ச்சி சதவிகிதம் ரொம்பவும் குறைவு என்றும்,  

அதற்கும் ஆளுங்கட்சி தான் காரணம் என்று பழியை போட்டிருக்க,  பொதிகையின்  திட்டத்தை கேட்டதும் பெரும் மகிழ்ச்சியாகிப்போனது அமைச்சருக்கு..!

கூடவே மற்ற அரசாங்கத்தைப்போல எதிர்கட்சியின் வாயை அடைக்க என்று மாணவர்களுக்கு சைக்கிளும் மடிக்கணினியையும்  தந்ததைப்போல இல்லாமல், இந்த ப்ராஜெக்ட் அவர்களின் படிக்கும் முறையை இலகுவாக்கும் ஒரு வழி முறையாகும்.  

நகரத்தில் இருக்கும் மாணவர்களைப் போன்றே கிராமத்து மாணவர்களும் தங்கள் தகுதியை, திறமையை வளர்த்துக்கொள்ள, இது ஒரு பொன்னான வாய்ப்பு என்று புரிந்ததால் அவருக்கு பரம திருப்தியாகிப்போனது..!

பொதிகையை பார்த்து திருப்தியுடன் புன்னகைத்தவர்,

“ரொம்ப நல்ல ப்ராஜெக்ட் பொதி மா...இந்த மாதிரி ஒரு மாற்றத்தைத்தான் நம்ம எஜுகேசன் சிஸ்டத்தில் கொண்டு வர காத்துக்கொண்டிருந்தோம்..! 

கண்டிப்பாக இதை நான் பரிசீலனை செய்கிறேன்...!  நிச்சயம் மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்...”  என்று புன்னகையுடன் சொல்ல, தன் காதுகளையே நம்பமுடியவில்லை பெண்ணுக்கு.

அவள் தன் ப்ராஜெக்ட் பைலை கொடுத்ததும், அதை புரட்டிகூட பார்க்காமல், தூக்கி எறிந்து விடுவாரோ என்று கலங்கி கொண்டிருந்தவளுக்கு, அமைச்சரின் அந்த வார்த்தைகள் வயிற்றில் பாலை வார்த்தது..!

கண்டிப்பாக இந்த ப்ராஜெக்ட்டை ஏற்றுக்கொள்வார்.... பாதி வேலை முடிந்த மாதிரி என்று ஒரு நம்பிக்கை வந்தது பெண்ணுக்கு..!

உற்சாகத்துடன் அமைச்சரிடம் இருந்து விடைபெற்று துள்ளலுடன்  வெளியே வந்தாள்..!

அவள் வெளியில் வந்ததும் வெற்றி ஒரு நொடி பின்தங்கி அமைச்சருக்கு அவசரமாக ஒரு நன்றியை சொல்லிவிட்டு,  வேக நடை எடுத்து வந்து அவளுடன் இணைந்து கொண்டான்..!

*****

துள்ளலுடன் நடந்தவள் பக்கவாட்டில் தன்னவன் வர, எதையும் யோசிக்காமல், அவன் கையோடு தன் கை சேர்த்து கோர்த்துக்கொண்டு, இன்னுமாய் துள்ளலுடன் நடந்தாள்..!

மறந்தும் வெற்றியின் பக்கம் திரும்பவில்லை..! ஒரு வார்த்தையும் பேசவில்லை...!

வெற்றிக்குத்தான் யோசனையாக இருந்தது..!

“என்னாச்சு இவளுக்கு? மினிஸ்டர் கிட்டதட்ட ஓகே சொல்லிவிட்ட மாதிரிதான்..! வெளியில் வந்ததும் ப்ராஜெக்ட் சாங்ஸன் ஆகப்போகும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து போவாள்..

அட்லீஸ்ட் தனக்கு ஒரு தேங்க்ஸ் ஆவது சொல்லுவாள் என்று அவளின் உற்சாகத்தை காண ஆவலுடன் காத்திருக்க, அவளோ எதுவும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அந்த  காரிடரில்  நடந்து கொண்டிருந்தாள்..!

“ராட்சசி...ஏதாவது வாய தொறந்து பேசறாளா பாரு...” என்று வாய்க்குள் முனுமுனுத்தவன்,

“பொதி.......” என்று மெல்ல அழைக்க, அதே நேரம்  ஒரு பெரிய தூண் வர, அவசரமாக தன் பார்வையை சுழற்றி, அந்தப் பக்கமாக யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு,  உடன் வந்த வெற்றியை தூணுக்கு மறுபக்கமாக இழுத்துக் கொண்டு சென்றவள்

அவனை தூணோடு சாய்த்தவள்,  எக்கி அவன் கழுத்தை வளைத்து இதழோடு இதழ் பொருத்தி  இருந்தாள் பொதிகை.  

வெற்றிக்கோ  தன்னவளின் இந்த திடீர் ஆக்சனில், அவள்  என்ன செய்கிறாள்  என்று புரியாமல் இன்பமாய் அதிர்ந்து போனான்.  

தன்னவளுடைய அணைப்பில் இருந்தே, எவ்வளவு சந்தோஷத்தில் இருக்கிறாள் பெண்  என்று புரிந்தது.  

எப்பவுமே ரொம்ப சந்தோஷத்தில் இருந்தால்,  இப்படித்தான் தன்னுடைய சந்தோசத்தை வெளிப்படுத்துவாள் பெண்.  

தன்னவளின் அந்த இதழ்  அணைப்பில்,  கரைந்தவன் கை அனிச்சையாய் உயர்ந்து அவளின் இடையை வளைத்துக்கொள்ள,  இன்னுமாய் தன் சந்தோசத்தை,  மகிழ்ச்சியை எல்லாம் அவனின் இதழ் வழியாக, தன்னவன் உள்ளே பாய்ச்சிக் கொண்டு இருந்தாள் பொதிகை.  

அதே நேரம் அந்தப்பக்கமாக யாரோ வரும் காலடி சத்தம் கேட்க,  வெற்றிதான் முதலில் சுதாரித்துக் கொண்டான்..!

“பொதி மா.... “  என்று ஹஸ்கி குரலில் ஏதோ செல்ல முயல, காற்று கூட அவனிடமிருந்து வரவில்லை..!  

அவன் உதடுகள் தான் அவள் வசம் இருந்ததே..!  

அவனின் இதழை தாபத்தோடு  ருசித்துக்கொண்டிருந்தவள்...அவன் ஏதோ சொல்ல முயல்கிறான் என்று புரிய, அவன் இதழை விடாமலே  என்ன என்று நிமிர்ந்து பார்த்து  பார்வையால் வினவ, அவனோ யாரோ வருகிறார்கள் என்று பார்வையாலேயே பதில் சொல்ல

“வந்துட்டு போகட்டும்...  என் புருஷன்... நான் கிஸ் பண்றேன்...”  என்றதாய் தோளைக் குலுக்கி,  தன் பார்வையாலேயே அவனுக்கு பதில் சொல்லிவிட்டு மீண்டும் இன்னும் ஆழமாய் அழுத்தமாய்  வன்மையாய் முத்தமிட்டாள்..!

திக்கு முக்காடி போனான் காளை..!  

அதே நேரம் அந்த காலடியோசை வெகு அருகிலேயே கேட்டாலும் அவனை விடவில்லை பெண்.

இன்னுமாய் அவனுக்குள் புதைந்து கொண்டு இருக்க,  அந்த இரு ஜோடி காலடி ஓசை அவர்களைத் தாண்டிச் சென்றது.  

சற்று தூரம் சென்றதும் அனிச்சையாய் திரும்பி பின்னால் பார்க்க, தூண் மறைவில் இருந்த  வெற்றியையும், பொதிகையையும்  கண்டு கொண்டது அந்த விழிகள்.

நல்லவேளையாக ஏதோ ஒரு வெள்ளைக்கார தம்பதிகள் தான்..!

லண்டன்லிருந்து தமிழகத்தை சுற்றி பார்க்க வந்திருந்தவர்கள்..! அதில் ஒன்றாக தலைமை செயலகத்தை சுற்றிபார்த்துக் கொண்டிருந்தார்கள்..!

அப்பொழுதுதான் தூண் மறைவில் இருந்தவர்களை கண்டு கொண்டார்கள்..!  

அவர்கள் இவர்களைக் கண்டதும் பெரிதாக புன்னகைத்தார்கள்..! அதே நேரம் வெள்ளை வெளேரென்று இருந்த அந்த வெள்ளைக்கார பெண், தன் இணையிடம் திரும்பி,  

“டார்லிங்...  இந்தியால எல்லாம் நம்மள மாதிரி பப்ளிக் ப்ளேஸ் ல கிஸ் பண்ண மாட்டாங்கனு  சொன்னீங்க.  இது என்னவாம்?”  என்று குறும்பாக தன் கணவனை பார்த்து ஆங்கிலத்தில் கேட்க,  அவனுக்கும் அதே குழப்பம் தான்..!

இந்தியர்களின் கலாச்சாரத்தை பற்றி படித்தும், கேள்வி பட்டும் இருக்கிறான்..! கணவன் மனைவியின் உணர்வுகள் எல்லாம் நாலு சுவற்றுக்குள் தான் வைத்துக் கொள்வார்கள்..!

அவர்களைப்போல பொது இடத்தில் கடை பரப்ப மாட்டார்கள் என்று அறிந்து வைத்திருக்க, இப்பொழுது அவர்கள் கண்ட காட்சி ஆச்சர்யத்தை கொடுத்தது..!   

ஹா ஹா ஹா நாம கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்கள் கலாச்சாரத்தை பின்பற்ற ஆரம்பித்திருக்க, அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நம்ம கலாச்சாரத்திற்கு வந்து விட்டார்கள் போல. நீ வா பேபி...”  

என்று அந்த பெண்ணை இடையோடு கை போட்டு அணைத்தவாறு அழைத்துச் செல்ல, அவர்கள் பேசியதை கேட்ட இருவருக்குமே வெட்கத்துடன் கூடிய சிரிப்பு வந்தது.

அதுவரை தெரியாத வெட்கமும், நாணமும் ஓடி வந்து பெண்ணவளை சூழ்ந்து கொள்ள, அதுவரை அவள் நடத்திக்கொண்டிருந்த இதழ்யுத்தத்தை இப்பொழுது போர் நிறுத்தம் செய்தாள்...!

அந்த யுத்தத்தில் கொஞ்சமாய்  தளர்ந்திருந்தவள், தன்னவனின் இதழிலிருந்து தன் இதழை விலக்கிக் கொள்ள முயன்றாள்..!

ஆனால் விட்டுவிடுவானா எதிரி நாட்டவன்..!

அவள் மூட்டிய மோகத்தீயில் தகித்தவன்,  இப்பொழுது அவளை விலக விடாமல் இறுக்கியணைத்து அவளின் இதழிலில் கதை எழுத ஆரம்பித்தான் வெற்றிமாறன்…!

Share:

2 comments:

Followers

Total Pageviews