அத்தியாயம்-42
அன்று வெள்ளிக்கிழமை..!
மாலை ஆறு மணி அளவில் அதிவேகமாக வந்து
நின்றது அந்த ஆடி கார்..!
அதிலிருந்து வேகமாக இறங்கியவன்... தன் வீட்டிற்குள் இருந்த பூங்காவை நோக்கி
துள்ளலுடன் நடந்தான் விகர்த்தனன்..!
அவனை சற்று தொலைவிலிருந்து கண்டுகொண்டதுமே
அப்பா..... என்று சந்தோஷ கூச்சலிட்டவாறு ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்குவதற்கு ஓடுபவளைப் போல
வேகமாக ஓடிவந்தாள் நிகா குட்டி..!
அவளைத் தொடர்ந்து தன் குட்டிப் பாதங்களை
எடுத்து வைத்து வேகமாக ஓடி வர முயன்று கொண்டிருந்தாள் அடுத்து ஒரு குட்டி தேவதை..!
இருவரும் ஒரே நிறமான பிங்க் நிறத்தில்
இலகுவான காட்டன் கவுன்களை அணிந்திருந்தனர்..!
“பாத்து டி... விழுந்திடாதிங்க...” . என்று அவர்களை அதட்டியபடி அவர்களின் பின்னால்
ஓடி வந்தாள் சுரபி..!
தன்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்த அந்த மூன்று
தேவதைகளையும் ரசித்தபடி ஒரு கணம் அப்படியே மெய் மறந்து நின்று விட்டான் விகர்த்தனன்..!
அதற்குள் முதலில் அவனை எட்டியிருந்த நிகா
அவன் காலை கட்டிக்கொள்ள, அதில்
விழித்துக்கொண்டவன்... குனிந்து அப்படியே
தன் மகளை அள்ளிக் கொண்டவன்...
அடுத்து ஓடி வந்து கொண்டிருந்த அடுத்த
குட்டி தேவதையை நோக்கி வேக எட்டு வைத்தவன், அவளையும் குனிந்து மற்றொரு கையால் தூக்கிக்
கொண்டான்..!
அந்த சின்ன குட்டியும் மலர்ந்து சிரித்து
பா... என்று அப்பொழுதுதான் முளைத்திருந்த ஒன்றிரண்டு பால் பற்களை காட்டி வெள்ளையாய்
சிரித்தவள்...
அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் எச்சில் முத்தமிட, அவளுக்கு போட்டியாய் நிகா குட்டியும் அவனின் மற்றொரு
கன்னத்தில் இச் என்று முத்தமிட்டாள்..!
அதில் இன்னுமாய் சிலிர்த்துப் போனவன்... தன் இரண்டு மகள்களையும் தன் மார்போடு சேர்த்து
அணைத்துக் கொண்டு, இருவருக்கும்
முத்தங்களை வாரி வழங்கினான்..!
அவர்களை தொடர்ந்து வந்த சுரபி... தன் மகள்களை
ஒரு வித பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..!
உடலுக்கு இலகுவான அழகிய சந்தன நிறத்திலான
காட்டன் புடவை...தளர பின்னிய நீண்ட கூந்தல்..!
அதில் அவனுக்கு பிடித்தமான மல்லிகை பூக்களை
நெருக்கமாக தொடுத்து, அதை மடித்து நான்கு சரமாக அழகாக தொங்கவிட்டு வைத்திருந்தாள்.
வகிட்டில் சின்னதாய் குங்குமம்.! இதழ்களின் அழகாக விரிந்திருந்த புன்னகை..!
முன்பு இருந்ததை விட இன்னும் மெருகேறி
இருந்தது அவளின் பட்டு மேனி..!
கன்னங்கள் இன்னும் கொஞ்சம் குண்டாகி இருக்க, இதழ்களும் சற்றே பெருத்து இருந்தது..!
இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்த பொழுதும்
சிக்கென்று இருந்த அவளின் ஒல்லியான சிற்றிடை எப்பொழுதும் போல இப்பொழுதும், என்னை கட்டிக்கோ என்று
அவனை தாபத்துடன் அழைத்து வைத்தது..!
தன் மனைவியை கண்களால் ஒரு முறை ரசித்து பார்வையாலேயே அவளை
விழுங்கிக் கொண்டிருந்தான்..!
தன் கணவனின் அந்த பார்வை... அவளுக்கே
அவளுக்கான பிரத்தியேக பார்வையில் சுரபியின் கன்னங்கள் தானாக ரோஜாக்களை பூக்க
வைத்தது..!
அந்த ரோஜா பூக்களை நிமிண்டி பார்க்க ஆசை வர, தன் மகள்களை இரு கையால் தூக்கியபடியே அவளை
நோக்கி வந்தான் விகர்த்தனன்..!
அவளின் பார்வையில் தெரிந்த பொறாமையை கண்டு
கொண்டவன்,
“ஹோய் பொண்டாட்டி... என்ன பொறாமையா? “ என்று கண்சிமிட்டி
கிண்டலாக கேட்க
“ஆமா... பொறாமைதான்....” என்று முகத்தை நொடித்தாள்..!
“ஹா ஹா ஹா வேணும்னா சொல்லு...! உன்னையும் இப்பவே தூக்கிக்கிறேன்...” என்று சில்மிஷமாக
சொல்ல,
“சீ போங்க... புள்ளைங்க முன்னாடியா? “ என்று செல்லமாக சிணுங்கினாள்..!
“ஹ்ம்ம்ம் கவலைப்படாதே செல்லம்..! நைட்டு என்
பிரின்சஸ்கள் தூங்கின பிறகு உன்னை இப்படி
தூக்கிக்கிறேன்...” என்று ரகசியமாக காதில்
சொல்ல அவளுக்கோ மீண்டும் கன்னங்கள் சிவந்து போனது..!
கூடவே அப்பொழுதே அன்றிரவு நடக்க இருக்கும் அவன் சொன்ன கற்பனையும்
கண் முன்னே வர, அவளுக்கு வெட்கமாக
இருந்தது
கூடவே அப்பொழுதிலிருந்தே அந்த நேரத்தை ஆவலாக
எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டாள்..!
*****
தன் மகள்களை அள்ளிக் கொண்டவன்...தன் ஆடையை கூட மாற்றாமல் அங்கிருந்த பூங்காவிற்கு சென்று அவர்களோடு
விளையாட ஆரம்பிக்க, சுரபியும் அருகிலிருந்த
பெஞ்சில் அமர்ந்து கொண்டு அவர்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்..!
விகர்த்தனன் தன் மகள்களுடன் விளையாண்டு
கொண்டிருந்தாலும், நொடிக்கொருதரம் அவன் பார்வை
அவளிடமே வந்து நின்றது..!
அதை கண்டு அவளுக்கு பெருமையாகவும் கர்வமாக இருந்தது
“என் புருஷன்... என் தனா...” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் நினைவு இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்றது..!
*****
இருவரும் தங்கள் காதலை உணர்ந்த பிறகு...அதோடு
சுரபி கருவுற்றிருப்பதும் தெரிய, அவளை தங்கத்தட்டில் வைத்து தாங்கினான் விகர்த்தனன்..!
அதுவும் மூன்றாவது மாதத்தில் அவளுக்கு மார்னிங் சிக்னஸ்
ஆரம்பித்துவிட, அவள் ஒவ்வொரு முறையும் வாமிட் பண்ணும் பொழுது
துடித்து போனான் விகர்த்தனன்..!
சுரபிக்கு இது இரண்டாவது அனுபவம் என்பதால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை..!
ஆனால் அவன்தான் அவளின் ஒவ்வொரு செயலுக்கும் பதறி தவித்தான்..!
அதைக் கண்டவளுக்கு ஆச்சரியமாக இருந்தது
கூடவே தன் முதல் குழந்தைக்கு இப்படி எல்லாம் தாங்க, கணவன் இல்லையே என்று இப்பொழுது வருத்தமாக இருந்தது..!
அதை எல்லாம் தீர்த்து வைப்பதாய், அவளை பார்த்து பார்த்து
கவனித்துக் கொண்டான் விகர்த்தனன்.
ஏழாம் மாதம் ஊரையே கூட்டி அவளுக்கு விமரிசையாக வளைகாப்பு
நடத்தினான்..!
நிகா வயிற்றில் இருந்த பொழுது, இந்த மாதிரி செய்து
கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் எப்பொழுதுமே அவள் மனதில் இருக்கும்
அவளின் வருத்தம்...ஏக்கத்தை போக்குவதற்கு என்று தன் இரண்டாம்
மகளுக்கு சீமந்த விழாவை விமரிசையாக கொண்டாடினான்..!
அவள் நடக்க சிரமப்படும்
பொழுதெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் அவளை அப்படியே கரங்களில் அள்ளிக் கொண்டு
செல்வான்..!
இரவு வீங்கியிருக்கும் அவள் பாதத்திற்கு ஒத்தடம் கொடுத்து...
கால் அமுக்கி விட்டு...நடுவில் அவள் பாத்ரூம் செல்ல எழுந்தால், அவனும் உடனே எழுந்து அவள் உடனே சென்று என அவளை அப்படி கவனித்துக் கொண்டான்..!
தன் கணவனின் அன்பில்... அவன் காதலில் ரொம்பவும் உருகித்தான் போனாள்
பெண்ணவள்
லேபர் வார்டில் அவளை அனுமதித்துவிட்டு அவளைவிட அவன் பயந்து
போனான்..!
அப்பொழுதுதான் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது எவ்வளவு
கடினமான ஒன்று என்று புரிந்தது..!
அவளின் கையை நடுக்கத்துடன் பற்றிக்கொண்டவன்,
“சுபி மா... நீ இப்படி
கஷ்டப்படுவேனு தெரிஞ்சிருந்தா நமக்கு நிகா
மட்டுமே போதும் என்று நிறுத்தியிருக்கலாம்...! தெரியவில்லையே..! எனக்கு நீ இப்படி கஷ்டப்பட வேண்டும் என்று
தெரியவில்லையே...” என்று கண்ணீர்
வடித்தான்..!
அவ்வளவு பெரிய ஆண்மகன்..! இதுவரை எதற்காகவும் கண்ணீர்
வடித்திராதவன்.! தன் பெற்றோர்களின் இழப்பை கூட சர்வ சாதாரணமாக கடந்து வந்தவன்..!
அவள்...தன் மனைவி என்று வரும்பொழுது மட்டும் ரொம்பவும் உடைந்து
போனான்..!
அவள் மயங்கி சரிந்தபொழுது ரொம்பவும் உடைந்து போய் கண்கலங்கினான்
என்றால், அதற்கு அடுத்து
இப்பொழுதுதான் மீண்டும் உடைந்து கண்ணீர் சொரிந்தான்..!
ஏனோ ஸ்வாதி அவன் குழந்தையை சுமந்த பொழுது கூட அவனுக்கு பெரிதாக
ஒன்றும் தோன்றவில்லை..!
அதுவே சுரபியை காணும்பொழுது தன் வாரிசு... தன் மனைவி என்று
நெஞ்சம் பொங்கியது..!
அவளின் சிறு முகச்சுளிப்பு கூட அவனுக்கு வேதனையாக இருந்தது..!
ஏன் இந்த வித்தியாசம் என்று ஆராய்ந்தவனுக்கு உடனேயே
தெரிந்துவிட்டது..!
காதல்..!
ஆம் காதல் தான்..!
இந்த காதல் தான் எவ்வளவு அற்புதமானது..! ஸ்வாதியின் மீது காதல் இல்லாததால் தான் அவளால் அவனை அவளிடமே பிடித்து வைக்க முடியவில்லை..!
அப்படி எதுவும் உள்ளுக்குள் புரளாதலால் தான் அவளிடம் பெரிதாக
நாட்டம் இல்லை..!
ஆனால் இவள்..? “ என்று யோசித்து அவளை மீண்டும் கட்டிக்கொண்டு கண்ணீர்
வடித்தான்..!
******
எப்படியோ ஒரு அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு தான் தன் மகளை பெற்றெடுத்தாள் சுரபி..!
அப்பொழுது தான் பிறந்த பச்சிளம் குழந்தையை கையில் நடுக்கத்துடன்
ஏந்திய விகர்த்தனனுக்கு சொல்லவே வேண்டாம்..!
அப்படி ஒரு மகிழ்ச்சி... பேரானந்தம்..! ராஜ போதையை விட அதிகமான
போதையை, கிறக்கத்தை கொடுத்தது தன் மகளை கையில் ஏந்திய
அந்த நொடி..!
நிகாவை முதன் முதலில் தூக்கிய பொழுது எப்படி அவன் உள்ளே
சிலிர்த்ததோ அதேபோன்று இந்த குட்டி ரோஜாவை
கைகளில் ஏந்திய பொழுதும் அவன் உள்ளே அப்படி ஒரு சிலிர்ப்பு..!
கொஞ்சம் கூட பயமில்லாமல் லாவகமாக கைகளில் ஏந்திக் கொண்டான்..!
அன்றிலிருந்து தன் இரு மகன்களுக்கும் அவன் தான் பார்த்து
பார்த்து எல்லாம் செய்வது..! அலுவலக நேரம் தவிர, அவனுக்கு அவன் இரு தேவதைகள் தான் உலகம்..!
தன் கணவனை நினைத்து பெருமையாக இருந்தது..! அவளை கொண்டாடுவதோடு அவள் கேட்பதை எல்லாம் மறக்காமல் செய்துவிடுவான்..!
சுரபியும் பெரிதாக ஒன்றும் கேட்க மாட்டாள் தான்..! அவளாக தன்
கணவனிடம் கேட்டது ஒன்றே ஒன்றுதான்..!
அது, விஷ்வா மற்றும்
சினேகாவின் திருமணத்தை நடத்தி வைக்க சொன்னது
******
மூன்று வருடங்களாக விஷ்வா பின்னால் சுற்றி வந்த
சினேகா... அதற்கு மேல் பொறுமை இல்லாமல் விஷ்வாவை சட்டையை பிடித்து உலுக்கி அவள்
காதலை சொல்லி விட, அவனோ அதை ஏற்க மறுத்துவிட்டான்..!
காரணம் என்ன என்று கேட்க அவன் தான் ஒரு அனாதை...! சினேகா வீட்டில் அவனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்
என்று மறுக்க, அவன் சொன்னது போலத்தான் நடந்தது..!
விஷ்வா கை நிறைய சம்பாதித்தாலும் சரியான பின்புலம் இல்லை...அவன்
ஒரு அனாதை என்று சினேகா வீட்டில்
மறுத்துவிட்டனர்.
அவள் சுரபியிடம் இதை சொல்லி புலம்ப, சுரபி ஒருநாள் இரவு தன்
கணவனின் மஞ்சத்தில் சாய்ந்தபடி, அவர்களின் திருமணத்தை நடத்த சொல்லி கோரிக்கை
வைக்க,
அவ்வளவுதான்..! தன் வாரிசை
சுமந்து கொண்டிருப்பவளின் ஆசையே
நிறைவேற்றாமல் விட்டு விடுவானா?
சுரபி மற்றும் விஷ்வாவை அழைத்துக்கொண்டு, நேரடியாக சினேகாவின் வீட்டிற்கே சென்று விஷ்வாவின் சார்பாக பொண்ணு
கேட்டான்..!
கூடவே
“விஷ்வா ஒன்றும் அனாதை
இல்லை..! அவனுக்கு நாங்கள் இருக்கிறோம்...”
என்று அவனையும் சுரபியையும்
சேர்த்துக்கொள்ள, விஷ்வாவிற்கு கண் கலங்கி விட்டது
அவனை நன்றியோடு கட்டிக்கொண்டான்..!
அதற்குமேல் சினேகாவின் தந்தை எதுவும் யோசிக்காமல் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட, அவர்களின் திருமணத்தை
விமரிசையாக நடத்தி வைத்தான் விகர்த்தனன்..!
எல்லாம் தனக்காகத்தான் என்று சுரபிக்கு புரியாமல் இல்லை..! தன் மீது இவ்வளவு காதலா என்று ஆச்சர்யமாக
இருந்தது...!
*****
பழைய நினைவுகளில் இருந்து திரும்பியவள்... தன்
மீதும் தங்கள் குழந்தைகள் மீதும் உயிராக
இருக்கும் தன் கணவனையே ஆசையாக ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் சுரபி..!
ஓரக்கண்ணால் தன்னையே நொடிக்கொருதரம் பார்த்து ரசித்துக்
கொண்டிருக்கும் தன் கணவனை, அவளும் ரசித்து பார்க்க, அதைக் கண்டு கொண்டவன் என்ன என்று பார்வையாள் வினவினான்..
அவளும் தன் கீழ் உதட்டை கடித்துக்கொண்டு நத்திங்... என்று உதடு குவித்து சைகையால் சொல்லி கண்
சிமிட்டினாள்..!
****
அன்றிரவு இரவு உணவை முடித்து விட்டு படுக்கையில்
படுத்து இருந்தான் விகர்த்தனன்...!
அவனின் மார்பில் ஒருபக்கம் கர்ணிகாவும், மற்றொரு பக்கம் அருணிகா
வும் படுத்து இருந்தனர்..!
விகர்த்தனன் பரம்பரைப்படி வழக்கப்படி, சூரியன் பெயரைக்கொண்டு பெயர் வைக்க வேண்டும் என்பதால் அருணிகா
என்று வைத்திருந்தாள் சுரபி..!
அருணிகா என்றால் அதிகாலை சூரிய ஒளி என்பதால் அதை
வைத்திருந்தாள்..! அதிசயமாக கர்ணிகாவை போலவே இரண்டாவது குட்டிக்கும் அதே சூரிய
மச்சம்..!
அவள் பிறந்ததுமே அந்த மச்சத்தை தன் மனையாளிடம் கண்களால் ஜாடைக் காட்டி பெருமையாக சிரித்துக் கொண்டான்..!
அந்த இரண்டு தேவதைகளும் தன் தந்தையின் கழுத்தை இருபக்கமும்
கட்டிக்கொண்டு ஆர்வமாக கதை கேட்க, அவர்களை பார்த்து ரசித்தபடி, அவனின் கழுத்தில் முகம்
புதைத்தபடி அவனை ஒட்டி படுத்து இருந்தாள் சுரபி..!
தன் வாழ்வில் இனி நிம்மதி இல்லை என்று தனிமையில் வாடியவனுக்கு
ஒன்றுக்கு மூன்றாக மூன்று தேவதைகள் வந்து சேர்ந்திருக்க அவன் மனம் பூரித்தது..!
தன் மகள்களை தட்டிக்கொடுத்து தூங்க வைத்தவன்..! அவர்களை தன்
மார்பில் இருந்து பிரித்து எடுத்து படுக்கையில் படுக்க வைத்தவன், அவர்கள் கீழே விழுந்துவிடாமல் அணை போட்டு தடுத்தவன்...
அடுத்த நொடி தன்னவளை கைகளில் அள்ளிக் கொண்டு பக்கத்திலிருந்த தங்கள் அந்தப்புரத்தை நோக்கி
சென்றான்..!
அதற்காகவே காத்துக் கொண்டிருந்த பெண்ணவளும், தன்னவன் கழுத்தில் தன்
கைகளை மாலையாக்கி போட்டுக்கொண்டு, மையலுடன் தன் கணவனை பார்த்து வைக்க, விகர்த்தனனுக்கோ இன்னும் போதையேறி போனது..!
அதே கிறக்கத்தில், வேக நடையுடன்
பக்கத்து அறையை அடைந்து, அவளை படுக்கையில் கிடத்தி அடுத்த கணம் அவள் மீது
படர்ந்தான்
தன் கணவனின் இறுகிய அணைப்பில் உருகியவள்... அவன் தேடலுக்கு
இசைந்து கொடுக்க, அவனோ அவளுள் புதைந்து முத்தெடுத்தான்...!
இருவரும் தங்கள் மோகம் தீர கூடி களித்தவர்கள்...கலைத்து போய்
படுக்கையில் கிடக்க, அவளோ அவனின் மஞ்சத்தில் தலை சாய்த்திருந்தாள்..!
அவளின் முன் உச்சி கேசத்தை ஆதூரமாக வருடியவன்,
“ரொம்ப தேங்க்ஸ் சுபி...” என்ற காதல் பொங்க சொல்ல,
அவளும் நிமிர்ந்து அவனை பார்த்தவள் பார்வையால் எதுக்கு? என்றாள்
“எல்லாத்துக்கும் தான்... நீ என் வாழ்வில் வருவதற்கு முன்னால் என் வாழ்க்கை அப்படி ஒரு
நரகமாக இருந்தது..!
தொழிலில் கொடிகட்டி ராஜா போல பறந்து கொண்டிருந்தாலும் வீட்டில்
அன்புக்கு பாசத்திற்கு ஏங்கும் ஏழையாகத்தான் இருந்தேன்..!
தனிமை எவ்வளவு கொடுமையாக இருந்தது தெரியுமா? “ என்று அந்த நாள்
வேதனையில் அவன் முகம் சுருங்க, அதைக்காண
தாளவில்லை..!
அவளும் அந்த தனிமையை கொஞ்ச நாட்கள் அனுபவித்தவள் ஆயிற்றே...!
அதைப் போக்கத்தானே தனக்கு என்று ஒரு துணை வேண்டும் என்று நிகாவை வயிற்றில் சுமக்க
தயாரானது..!
இப்பொழுது அவன் வேதனையை காண தாளாதவளாய் ... அவன் இமைகளை நீவி விட்டு, அவன் கன்னத்தில் மெல்லியதாய் முத்தம் வைத்தாள்..!
அதில் கொஞ்சம் இலகியவன், அடுத்த கணம் அவளை இறுக்கி அணைத்து அவள் கொடுத்ததை திருப்பி கொடுத்தான் இடத்தை மாற்றி..!
அவளின் திரண்ட அதரங்களில் முத்தமிட்டு முடித்தவன் மீண்டும் தொடர்ந்தான்..!
“வறண்டு கிடந்த இந்த பாலைவனத்தை... என் வாழ்க்கையை வண்ணமயமாக்க வந்தவள் என் மகள்...! வராமல் வந்த தேவதை அவள்..” என்று நிகாவின்
நினைவில் பெருமையுடன் சொல்ல,
“அப்ப நான் உங்க தேவதை இல்லையா? “ சிலிர்த்துக்
கொண்டாள் மனையாள்
“ஹா ஹா ஹா நீயும் என் தேவதை தான் டி...! ஆனாலும் இந்த பெரிய தேவதையே என்னிடம் கூட்டி
வந்த குட்டி தேவதை என் நிகா குட்டி தானே
அவள் மட்டும் அன்று என்னைத் தேடி வந்து அப்பா என்று கட்டிக் கொண்டிருக்காவிட்டால், உன்னை நான்
சந்திக்காமலேயே போயிருப்பேன்..!
நீ என் வீட்டில் அடி எடுத்து வைத்து வந்ததும் தான் என் வாழ்க்கை
வண்ணமயமாகிப் போனது..!
வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் இருந்த எனக்கு, வாழ்க்கையின் அர்த்தத்தை...அது தரும் வசந்தத்தை வழங்கிய தேவதை
என் நிகா குட்டி.....அவளால் எனக்கு கிடைத்த தேவதை நீ..!
நிகா குட்டியினால் தந்தை பாசத்தை கண்டு கொண்ட நான்...காதல் என்ற
அற்புதமான உணர்வை உணர்ந்தது உன்னால் தான்..!
நீ மட்டும் என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால், இந்த காதல் என்ற உணர்வுக்கு இடமே இல்லாமல் போயிருக்கும்..!
அதோடு தந்தை என்ற உன்னதமும்... அதன் பரவசமும் புரியாமலேயே போயிருக்கும்
உனக்கு ஒன்று தெரியுமா சுபி? நான் இதுவரை எந்த
பெண்ணிடம் ஒரு முறைக்கு மேல் நாடியதில்லை..!
ஸ்வாதி கூட...” என்று
ஆரம்பிக்க அவளோ அருவருப்பாய் முகத்தை சுருக்கினாள்.
எந்த ஒரு மனைவியும் தன் கணவன், முதலும் கடைசியுமாக தன்னை மட்டும்தான் நாடி இருக்க வேண்டும்
என்று எதிர்பார்ப்பாள்..!
இங்கு விகர்த்தனனுக்கு, தான் இரண்டாவது மனைவி
என்பதையே ஜீரணிக்க முடியாதவளுக்கு, அவன் பல பெண்களுடன்
உல்லாசமாக இருந்திருக்கிறான் என்பதை சகித்து கொள்ள முடியவில்லைதான்..!
முயன்று அதை மறக்க முயல்பவளிடம், அவன் அதை பற்றி குறிப்பிடவும் அவளுக்கு வேதனையாகவும், அருவருப்பாகவும் இருந்தது..!
“சாரி மா...உனக்கு கேட்க கஷ்டமாகத்தான் இருக்கும்..! ஆனால் இந்த ஒரு முறை மட்டும் நான் சொல்லி
விடுகிறேன்
அப்பொழுதுதான் நான் எதையும் உன்னிடம் மறைக்கவில்லை என்ற நிம்மதி
எனக்கு வரும்..! “ என்றவன் மேலும்
தொடர்ந்தான்..!
ஸ்வாதி நல்ல அழகிதான்.ஆனாலும் எனக்கு அவளிடம் பெரிதாக ஈடுபாடு
இல்லை..! கடமைக்காகத் தான் அவளுடன் இணைந்ததே..!
ஆனால் நீ அப்படி ஒன்றும் பேரழகி இல்லை....” என்று நிறுத்த, அதற்குள் இயல்பிற்கு வந்திருந்தவள், தன் கணவன் சொன்னதை கேட்டதும், முகத்தில் கோபம் பொங்க, அவனின் கன்னத்தில் நறுக்கென்று கடித்து வைத்தாள்..!
“நான் பேரழகி இல்லையா? அப்ப ஏன்
தினமும் இப்படி என்னை தூங்கவிடாமல் தொல்லை பண்றீங்களாம்? “ என்று முறைத்து தன் கழுத்தை நொடித்துக் கொண்டாள் சுரபி..!
“ஹா ஹா ஹா சொல்ல வந்ததை முழுசா கேளுடி... அவசர குடுக்கை..!
நீ பெரிய உலக அழகியாக இல்லாத பொழுதும், என்னை உன் கண்களுக்குள்
கட்டி வைத்திருக்கிறாயே..! அது போதாதா? “ என்று சிரித்தவன்,
“மற்றவர்களை ஒருமுறைக்கு மேல் நாடாதவன்... இப்பொழுது தினம் தினம் உன்னிடமே சரணடைந்து
கிடப்பது எல்லாம் இந்த காதலினால் தான்
என்றும் கண்டு கொண்டேன் கண்மணி..!” என்று
மந்தகாசமாக புன்னகைத்தான்..!
அதைக்கேட்ட சுரபிக்குத்தான் திக் என்றது..! அவளின் கண்கள்
கலங்கின..! தன் கணவனை அடிபட்ட பார்வை பார்த்தவள்,
“அப்படி என்றால் சீக்கிரம் உங்களுக்கு நான் சலித்து விடுவேனா? அப்படி சலித்து விட்டால், வேற பெண்ணிடம்..... “ என்று முடிக்க முடியாமல் தொண்டை
கட்டிக்கொண்டது..!
வார்த்தை வராமல் சிக்கிக் கொள்ள, அவனையே பார்த்திருந்தாள் கண்களில் பொங்கும் வேதனையோடு..!
“ஹே லூசு...! அப்படி ஒன்றும் சலித்து விடுபவள் அல்ல நீ... ஒவ்வொரு நாளும் எனக்கு புதுவித இன்பத்தை வாரி
வழங்கும் அமுதசுரபி டீ நீ....
என் மாமனார், மாமியார் உனக்கு
சரியான பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள்...! சு...ர....பி....!
எனக்கு தேவையான சந்தோஷம்...மகிழ்ச்சி...உற்சாகம்...நான் தேடும்
அந்த சுகம் எல்லாம் திகட்ட திகட்ட வாரி வழங்கும் அமுத சுரபி டி....
அதோடு எனக்கே எனக்கான அந்த ஸ்பெஷல் ............. ” என்று
அவளின் காதில் ரகசியமாக கிசுகிசுத்தவன்
“அதையும் வாரி வழங்கி என் பசியாற்றும் சுரபி டி நீ... நீ எப்படி
அதற்குள் எனக்கு சலித்து போவாயாம்..! எத்தனை வருடங்கள் ஆனாலும் உன் மீது நான்
கொள்ளும் இந்த மோகம் கொஞ்சமும் குறையாது...! ஐ ஸ்வேர்...! “
என்று குறும்பாக கண் சிமிட்டியவன், மீண்டும் அவளின் வெற்றிடையை
பற்றி அழுத்தியவன்... தன் சில்மிஷங்களை தொடர்ந்தான்..!
அவன் தீண்டலினால் இன்ப அவஷ்தையில் நெளிந்தவள்... அவன் கையை
பட்டென்று தட்டிவிட்டவள், அவன் மீசையை
செல்லமாக இழுத்தபடி தன் மனதில் இருப்பதை கொட்டினாள்..!
“நீங்க சொன்ன
மாதிரிதான் எனக்கும் நிகா ப்பா...! நான் உண்டு என் மகள் உண்டு என்று இருந்த என் வாழ்வில் புது அர்த்தம்
சேர்க்க வந்தவர் நீங்க..!
இப்பொழுது ஒன்றுக்கு இரண்டு மகள்கள்..! என் மீது உயிராக
இருக்கும் காதல் கணவன்...! .. என் குழந்தைகள் என்று எல்லோரையும் போல எனக்கும்
ஒரு வாழ்க்கையை…குடும்பத்தை அமைத்துக் கொடுத்த தேவதூதன் நீங்க...” என்று கண்கலங்கினாள்..!
அதில் அவன் நெகிழ்ந்து விட, தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தவன், அவளை நார்மலாக்க எண்ணி,
“ஹே போதும் டி...லெட்ஸ் ஸ்டாப் திஸ் டாபிக்... இது
ஒன்னும் செண்டிமென்டாக பேசி வீணாக்கற
நேரமில்லை...” என்று அவளை சீண்ட, அதற்குள் தன்னை சமனபடுத்திக்கொண்டவள்,
“வேற என்ன நேரமாம்? “ அவளும் குறும்பாக கேட்க
“ஹ்ம்ம்ம் செகண்ட் இன்னிங்க்ஸ்... ஸ்டார்ட் பண்ண வேண்டிய நேரம்
இது...” என்றான் தன் உதட்டால் அவன் இதழை ஈரபடுத்தியபடி அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவாறு..!
அதில் கன்னம் சிவந்தாலும் அதை மறைத்துக்கொண்டு
“ஆஹான்... இரண்டு பிள்ளைகளுக்கு அப்பா ஆன பிறகும் உங்களுக்கு
தினமும் இரண்டு இன்னிங்க்ஸ் வேணுமாக்கும்...” என்று நக்கலாக சிரிக்க,
“எஸ் எஸ் இரண்டு என்ன..? மூன்று...நான்கு விளையாடக்கூட நான் ரெடி பேபி..! ஆனால் பாவம் நீதான் இரண்டிலே
ரொம்பவும் கலைத்து போகிறாய்..!
உன்னை அதற்கு மேலயும் கஷ்டப்படுத்த கூடாது என்றுதான் இரண்டோடு
நிறுத்திக் கொள்கிறேன்...” என்று
மார்க்கமாக சிரிக்க
“ப்பா... பேசியே இப்படி ஆளை கவிழ்க்கிற வித்தையை உங்க கிட்டதான் கத்துக்கணும்...” என்று
செல்லமாக சிணுங்க,
“ஓ... சாரி மா... பேச வேண்டாமா? சரி விடு இனி ஆக்சனில் இறங்கிடலாம்...” என்று சில்மிஷமாய் சிரித்தவன்..!
நொடியும் தாமதிக்காமல், தன் மஞ்சத்தில் கிடந்தவளை பக்கவாட்டில் சரித்து மீண்டுமாய் அவள்
மீது படர்ந்து அவனுடைய இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்தான் காதல் கணவனாய்..!
அவர்களின் அந்த ஆட்டம் தொடர்கதையாக எப்பொழுதும்
தொடரட்டும்..!
இருவரும் இதே போல் என்றென்றும் காதலும், மோகமும், தாபமும் குறையாது பல ஜென்மங்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுவோம்..! நன்றி..!!!
வணக்கம்...!!!
*****சுபம்*****
இந்த கதையை
பொறுமையாக வாசித்து ரசித்த அனைத்து வாசகர்
தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த கதையை பற்றிய உங்கள்
கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மீண்டும் ஒரு புதிய கதையுடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன்...நன்றி!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்.
Nice .. superb story.....mam...pls continue writing......💐💐💐💐💐💐
ReplyDeleteThanks pa!!
Delete