அத்தியாயம்-10
அன்று:
அன்றிரவு உணவை முடித்து விட்டு வழக்கம் போல முற்றத்தில், போட்டிருந்த கட்டிலில், தலைக்கு கீழே கையை மடித்து
வைத்துக் கொண்டு, வானத்தில் உலா வந்து கொண்டிருந்த அந்த வெள்ளி
நிலவை ரசித்துக் கொண்டிருந்தான் ராசய்யா..!
அவன் மஞ்சத்தில் முகம்
புதைத்தவாறு, அட்டையாக ஒட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்
அவனின் செல்ல மகள்.
வீட்டு வேலையை முடித்து விட்டு, அவள் பாக்கி
வைத்திருந்த அலுவலக கணக்கையும் முடித்து விட்டு கையை நெட்டி முறித்தபடி முற்றத்திற்கு
வந்தாள் பூங்கொடி.
மேல் சட்டை எதுவும் அணியாமல் வெற்று மார்புடன் படுத்திருந்த தன்
கணவனை கண்டதும் அவளின் மனம் தடுமாறியது
ஏற்கனவே கட்டழகனாக இருப்பவன்..! இப்பொழுது தினமும் வயலில் கடினமாக உழைப்பதால் இன்னும் அவன் தேகம் நன்றாக உரமேறி இருந்தது.!
அவனின் புஜங்கள் காங்கேயம் காளை திமிலை போல புடைத்துக் கொண்டு
நிற்க, பரந்து
விரிந்த மார்பும், கொஞ்சமும் சதைபிடிப்பு இல்லாமல் இறுகி இருந்த
சிக்ஸ் பேக் தேகத்தையும் கண்டு ரசித்தவாறே அவன் அருகில் வந்தவள் அப்பொழுதுதான் அவள்
இருக்கும் இடத்தில் தன் மகள் இருப்பதைக் கண்டு பொறாமை வந்தது..!
கூடவே லேசான எரிச்சலும் சேர்ந்து கொண்டது..!
உடனே குனிந்து அவளை அவனிடம்
இருந்து பிரித்தெடுக்க, அதில் கண் விழித்தவன் தன் மனைவியை கண்டு புன்னகைத்தவன்,
“ஏன்டி புள்ளைய இப்படி புடுங்கற? “ என்ற செல்லமாக முறைக்க,
“யோவ்..! உனக்கு
கொஞ்சமாச்சும் மண்டைல இருக்கா? காலைல எழுந்ததில் இருந்து ராத்திரி வரைக்கும் புள்ள புள்ள புள்ளைனு இந்த புள்ளையத்தான்
கண்டுக்கிற..!
இந்த புள்ளைய பெத்து எடுத்த ஆத்தாவை கொஞ்சமாச்சும் உன் நொல்ல கண்ணுக்கு தெரியாதா? “ என்று செல்லமாக முறைக்க,
அதைக்கேட்டு ஹா ஹா ஹா என்று பெருங்குரலில் சிரித்தவன்
“அப்படியா? நான் கண்டுக்காம தான் என் பொண்டாட்டி இப்படி
தகதகன்னு ஜொலிக்கறாளாக்கும்?” என்று அவளை உச்சி முதல்
பாதம் வரை ஒரு மார்க்கமாக பார்த்து வைக்க, அதைக்கண்டு
உள்ளுக்குள் துள்ளிக் குதித்தாள் அவன் மனையாள்.
அத்தி பூத்தாற்போல, அதிசயமாக தன் கணவன் பார்வை
இன்று தன்னிடம் படிவதை கண்டவள் அதை
விட்டுவிட மனம் இல்லாமல், தூக்கிய தன் மகளை கொண்டுபோய் அறைக்கு உள்ளே இருந்த மற்றொரு கட்டிலில் படுக்க வைத்தவள், போர்வையை எடுத்து தன் மகளுக்கு போர்த்திவிட்டு துள்ளலுடன்
அவனருகில் ஓடிவந்தாள்.
அடுத்த நொடி அவனின் பரந்து விரிந்த மஞ்சத்தின் மீது படர்ந்து
அவனை இறுக்கக் கட்டிக் கொண்டவள் அவன் கன்னத்தில் தாபத்துடன் முத்தமிட்டாள் பூங்கொடி.
அதில் கிளர்ந்தாலும், தன்னை மறைத்துக்கொண்டு,
“என்னடி? இன்னைக்கு செம மூடுல இருக்க? “ என்று புன்னகைத்தவாறு அவளின் திரண்ட இதழை தன் கட்டை விரலால்
வருட,
“ஹ்ம்ம்ம் தினமுமே எனக்கு உன் கூட இப்படி சரசமாட ஆசைதான்..! ஆனால் எங்க முடியுது..! உன் அருமை மவதான்...
கொள்ளி பிசாசு மாதிரி 12 மணிக்கு வரைக்கும்
கூட தூங்காம உன் கூட அரட்டை அடிச்சிகிட்டு இருக்கா..!
அவ தூங்கறதுக்குள்ள நான்
தூங்கி போய்டறேன்....” என்று கழுத்தை நொடிக்க
“ஹா ஹா ஹா இப்பயாவது புரிஞ்சுதா..! நீ சரியான தூங்கு மூஞ்சி
னு...” என்றவாறு தன் மஞ்சத்தில் கிடந்தவளின்
கன்னத்தை செல்லமாக கடிக்க,
“அப்படியா? அப்பனா இன்னைக்கு பாரு..! உங்களை விடிய விடிய தூங்க
விட மாட்டேன்...” என்று விஷமமாக கண்சிமிட்டியவள், பின் ஏதோ நினைவு வந்தவளாய்,
“மா.....மா......” என்று குழைந்தவாறு அவன் மஞ்சத்தில் தன் ஆட்காட்டி
விரலால் கோலமிட்டாள்..!
அதே நேரம் அவன் கரங்களும் தன்னவளின் மேனியில் ஊர்வலம் வர
ஆரம்பித்திருக்க, தன் மனைவியின் குழைந்த குரலில் இன்னும் மோகம் கொண்டவன்
“என்னடி? “ என்றான் அவளின் காதோரம் மெல்ல கிசுகிசுப்பாக....
“வந்து.....வந்து.....” என்று இழுக்க,
“அதான் இவ்வளவு நெருக்கமா வந்திட்டியே...இன்னும் என்ன வந்து
வந்துனு இழுக்கற? சொல்ல வர்றத சட்டு புட்டுனு சொல்லுடி...எனக்கு வேற வேல
இருக்கு...”
என்று ஒற்றை கண் சிமிட்டி விஷமமாக சிரிக்க, அதில் கவிழ்ந்தாலும் தான் கேட்க வந்த விஷயம் நினைவு வர, உடனே தன்னை சமாளித்துக் கொண்டவள்,
“வந்து... பாப்பாவுக்கு ஏழு வயசு ஆயிடுச்சு...அடுத்து உன்ன
மாதிரி ஒரு பையன் வேணும் மாமா... எனக்காக ஒன்னும் இல்ல.. உன் புள்ளைக்காகத்தான்..!
நாளைக்கு அவ தனியா நின்னுட
கூடாது இல்லையா..! இப்ப அவ விளையாட ஊருக்குள்ளதான்
போக வேண்டியிருக்கு..!
அவளுக்குனு ஒரு தம்பியோ
தங்கச்சியோ இருந்தா, அவளுக்குதான நல்லது..!
நாளைக்கு அவளுக்கு ஒரு நல்லது கெட்டதுனா கூட பொறந்தவங்க தான் முதல்ல வந்து நிப்பாங்க.
அதனால இன்னும் ஒன்னே ஒன்னு... இன்னொரு புள்ளைய பெத்துக்கலாம்
மாமா....” என்று அவன் மீசையை வருடியபடி கொஞ்சி குழைந்து தான் சொல்ல
வந்ததை கேட்டு வைக்க, அதுவரை தன் மனையாளின் சரசத்தில் இலகி கிளர்ந்து இருந்தவன் உடல் சட்டென்று இறுகிப் போனது.
பூங்கொடி பிரசவித்த பொழுது அவள் படும் வேதனையை கண்டு அவன் அனுபவித்த வலியும் வேதனையும்
அச்சு பிசகாமல் அப்படியே இப்பொழுதும் கண் முன்னே வர, அந்த வேதனையில் கண்ணை அழுந்த மூடிக்கொண்டான் ராசய்யா..!
சற்று நேரம் கண்ணை அழுந்த மூடி தன்னை சமனபடுத்திக்கொண்டவன்
“வேணாம் டி... நான் ஒருமுறை செத்து பொழச்சது போதும்..!
குட்டிமாவை பெத்து எடுக்க, நீ அனுபவிச்ச பிரசவ
வலி எனக்கு இன்னும் நெஞ்சிலேயே இருக்கு..!
அதுமாதிரி ஒரு வலியும், வேதனையும் மறுபடியும்
உனக்கு வேண்டாம்..வேண்டவே வேண்டாம்... என்னால இன்னொரு தரம் உன்னை அப்படி பார்க்க
முடியாது..! இந்த ஆசையை இதோட விட்டுடு...”
என்று சமாதானப்படுத்த முயல, தன் கணவனின் தன் மீதான அக்கறையையும், பாசத்தையும், அதையும் தான்டி
அவன் காதலையும் உணர்ந்தவளுக்கும் மனம் பூரித்து போனது..!
ஆனாலும் அதை வெளிக்காட்டாமல்,
“ஐயோ... லூசு மாமா... அப்பதான் எனக்கு சின்ன வயசு..! அனுபவமில்ல... அந்த வலிய
பொறுக்க முடியல..இப்பதான் நான் பெரியவள் ஆயிட்டேனே..! அதெல்லாம் தாங்குவேன்...” என்று செல்லமாக சிணுங்க
“யாரு? நீ பிரசவ வலிய தாங்குவ? ஒரு சின்ன ஊசி குத்தினா
அந்த வலியைக் கூட உன்னால இன்னும் தாங்க முடியல..!
அதோடு இன்னுமே நாம ஒன்னு கூடுற அந்த நேரம்...என்னை மறந்து நான் கொஞ்சம் வேகமா நடந்துகிட்டா… என் வேகத்தை தாங்காம வலியில முகத்தை சுளிக்கிற..
நீ பிரசவ விலைய பொறுத்துகிட்டு இன்னொரு புள்ளைய பெத்து எடுக்க
போறியாக்கும்... “ என்று அவள் நுனி மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டி நக்கலாக
சிரிக்க,
“அது... அது... அது வேற..! இது வேற..!..” என்று செல்லமாக சிணுங்கியபடி முறைக்க,
“எது டி வேற? “ என்றவாறு
அவளின் மெல்லிய இடையில் அழுத்தம் கொடுத்து சில்மிசமாக பார்த்து வைக்க,
“அது...என்பது கிலோ எடையை
எப்படி சமாளிப்பதாம்? “ என்று மீண்டும் சிணுங்க,
“என்பது கிலோ வா? அவ்வளவு பெருசாவா இருக்கு? “ என்று கண்சிமிட்டி
விஷமமாக சிரித்தான்.
அவன் சொன்னதின் அர்த்தம் புரிய, அவள் கன்னங்கள் அந்தி வானமாக சிவந்து போக,
“சீ...போ மாமா.... நான் உன் பாடி வெய்ட்டை சொன்னேன்...” என்று அவன் கன்னத்தை செல்லமாக கடிக்க,
“நானும் அதைத் தான்டி சொன்னேன்... நீ வேற என்ன நினைச்ச? “ என்று அவளை வம்புக்கு இழுக்க
“சீ... போடா கருவாயா...நீ
ரொம்ப மோசமாயிட்ட..” என்று சிணுங்கினாள்.
“அப்படியா? எந்த அளவுக்கு நான் மோசமாயிட்டேன்? சும்மா இருந்தவனை நீதான்டி
சீண்டிவிட்ட..! இப்ப நான் மோசமா?” என்று அவளின் காது மடலை செல்லமாக கடித்தான் ராசய்யா..!
தன் கணவனின் சீண்டலில் அவள் ஆசையையும், ஏக்கத்தையும் மறந்துவிட்டு, அவனோடு இழைந்து சரசமாட ஆரம்பித்தாள் பெண்ணவள்..!
இன்னொரு பிள்ளை வேண்டும் என்ற தன் மனையாளின் பேச்சை மாற்ற என்று
அவளோடு விளையாட ஆரம்பித்தவன்... அதன் பின் தன்னவளுடன் மூழ்கிப்போனான்..!
அதன்பிறகு பூங்கொடி
எத்தனையோ விதமாக இன்னொரு பிள்ளை வேண்டும் என்று கேட்டு பார்த்து விட்டாள்..!
எல்லாவற்றிலும் அவளின் பேச்சை கேட்பவன்... இந்த விஷயத்தில்
மட்டும் அவள் பேச்சை கேட்காமல் பிடிவாதமாக ஒற்றை பிள்ளையாய் தன் மகளுடன் நிறுத்திக்
கொண்டான்..!
******
பத்து வருடத்திற்கு பிறகு:
ராசய்யாவின் வீடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது..!
அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தான் ராசய்யா..!
அவனின் செல்ல மகள் பத்தாம் வகுப்பு முடித்து விட்டாள்..!
அதுவும் மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றிருந்தாள்.!
இன்று மாலை தான் ரிசல்ட் வந்திருந்தது..!
அப்பொழுதெல்லாம் தேர்வு முடிவுகள் மாலையில் வெளியாகும் மாலைமுரசு
நாளிதழில் தான் வெளிவரும்..! ஆனால் ராசய்யா மாலை வரை காத்திருக்காமல், அன்று காலையிலிருந்தே ஊரில்
இருந்த பெட்டிக்கடைக்கு வந்து உட்கார்ந்து
விட்டான்..!
எப்பொழுது பேப்பர் வரும் என்று ஆவலாக காத்திருந்தான்..!
அங்கிருந்தவர்கள் அவனை பார்த்து நக்கலாக சிரித்தனர்..!
“என்ன ராசு..? உன் புள்ளையோட ரிசல்ட் ஐ தெரிஞ்சுக்க, நேத்துல இருந்தே தூங்கல போல இருக்கு..! “ என்று நக்கலடிக்க,
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், அவர்களை பார்த்து தனது ட்ரேட் மார்க் முறைப்பை முறைத்து விட்டு
அங்கிருந்த பெஞ்சில் ஏறி அமர்ந்து விட்டான்.
பூங்கொடியும் தன் கணவனுக்கு எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டாள்..!
மாலையில்தான் முடிவு வரும்...இப்பொழுதே எதற்காக இந்த அலப்பறை என்று திட்டியும்
வைத்தாள்..!
ஆனால் அவன் கேட்பதாக இல்லை..!
அவனின் செல்ல மகளுக்கோ தன்
அப்பாவின் செயலில் பெருமிதமும் பூரிப்பும் பொங்கி வழிந்தது..!
எப்படியாவது தன் அப்பா ஆசைப்பட்ட மாதிரி ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்துவிடவேண்டும்
என்று அந்த ஊர் கருப்பண்ண சாமியை வேண்டிக்
கொண்டிருந்தாள் அந்த சின்ன குட்டி..!
******
மதியம் தாண்டியதும் அதற்கு மேல் பொறுக்க முடியாமல்
நேரடியாக முசிறிக்கே சென்று விட்டான் ராசய்யா..!
பக்கத்து கிராமங்களுக்கு வினியோகிக்கப்படும் செய்திதாள்கள்
முசிறியில் இருந்துதான் அனுப்பபடும்..!
தன் ஊருக்கு செய்தித்தாள் வரும்வரை காத்திருக்க பொறுமை இல்லாமல், தன் பைக்கை எடுத்துக்
கொண்டு முசிறிக்கே சென்று விட்டான்..!
அதே போல பேப்பர் பன்டில்
வந்து இறங்கியதும் ஓடிப்போய் அந்த கட்டில் இருந்த ஒரு பேப்பரை வேகமாக உருவியவன் கரங்கள்
நடுங்கியது..!
தன் மகளின் உபயத்தால், இப்பொழுது அவனுக்கு நன்றாகவே
படிக்க வரும் என்பதால் அந்த செய்தித்தாளை நடுங்கும் கரங்களால் அவசரமாக புரட்டினான்..!
முதல் பக்கத்திலேயே இருந்த, மாநிலத்தில் முதலாவதாக வந்திருந்த மாணவியின் புகைப்படத்திற்கு
தாவியது..!
அதில் இருந்த புகைப்படத்தை பார்த்ததும் பெரிதாக அதிர்ந்து போக, அவன் முகமும் வாடிப்போனது..!
அந்த முதல் பக்கத்தில் தன் மகளின் புகைப்படத்தை எதிர்பார்த்து
வந்திருந்தவன்...அவள் மகளுக்கு பதிலாக வேற ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்ததும்
கொஞ்சம் அதிர்ந்து தான் போனான்..!
ஆனாலும் தன்னை சுதாரித்துக்கொண்டு, அடுத்த பக்கத்தை புரட்ட, அதில் இருந்த பெண்ணின் புகைப்படத்தை கண்டதும் அவன் முகம் மலர்ந்து
போனது..!
அவனின் செல்ல மகள் அழகாக
சிரித்துக் கொண்டிருந்தாள்..!
அந்த மாவட்டத்தில் முதலாவதாக வந்திருந்தாள்..!
அதுவும் ஒரே ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் மாநிலத்தின் முதலாம்
இடத்தை தவற விட்டு இருந்தாள்..!
ஆனாலும் எப்படியோ மாவட்டத்தில் முதலாவதாக வந்து விட்டாள் என்ற செய்தி அவனுக்கு பெருமையாக இருக்க, உடனே அருகில் இருந்த
தன் நட்புக்களை கட்டி அணைத்துக்கொண்டான்..!
அருகில் இருந்த ஸ்வீட் கடையில் இரண்டு கிலோ ஸ்வீட் ஐ வாங்கிக்கொண்டு
வீட்டிற்கு பறந்து வந்தான்..!
அவனின் வருகைக்காக காத்திருந்தாள் அவனின் செல்ல மகள்..!
தன் தந்தையின் பைக்
சத்தம் கேட்டதும் வேகமாக வாசலுக்கு ஓடி வந்தாள்..!
ஆவலாக ஓடிவந்த தன் மகளை கண்டதும் அவன் வந்த பைக்கை ஸ்டான்ட் கூட
போடாமல் அப்படியே கீழ போட்டு விட்டு, ஓடி வந்து தன் மகளை
தூக்கி தட்டாமலை சுற்றினான்..!
தன் தந்தையின் சந்தோஷத்தில் இருந்து அவள் தான் ஸ்டேட் பர்ஸ்ட் என்று யூகித்தவள், சந்தோசத்தில் ஆர்ப்பரித்து
அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்..!
அவர்கள் இருவரின் ஆர்ப்பாட்டத்தை பார்த்து புன்னகைத்து விட்டு, ராசய்யா கையில் இருந்த
பேப்பரை வாங்கி பார்த்தாள் பூங்கொடி.
அவள் மகள் மாநிலத்தில் முதலாவதாக வராமல் போனது கொஞ்சம் வருத்தமாக
இருந்தாலும் மாவட்டத்தில் முதலாவது வந்தது பெருமையாக இருந்தது..!
ஆனாலும் எப்பொழுதும் தன் மகளை மட்டம் தட்டிக் கொண்டிருப்பவள்..!
இப்பொழுது அனிச்சையாய் அதை சொல்லியிருந்தாள்..!
“என்ன மாமா... உன் அரும மவ... ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவான்னு ஊரெல்லாம்
பீத்திக்கிட்ட... இப்ப பாத்தா அப்படி வரக் காணோமே? வேற புள்ள போட்ட இல்ல ஸ்டேட் ஃபர்ஸ்ட் னு இருக்கு...” என்று நக்கலாக சொல்ல,
அதைக்கேட்டு அதுவரை மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்த அந்த குட்டியின் முகம் திடுக்கிட்டுப் போனது.
அதிர்ச்சியோடு தன் தகப்பனின் முகம் பார்க்க, ராசய்யாவுக்கோ பூங்கொடியின் வார்த்தையில் கோபம்
வந்தது..!
“வாய மூடுடி...” என்று சீற்றத்துடன் அவளை அதட்டினான்..!
அவன் முகத்தையும், அவன் குரலில் இருந்த
சீற்றத்தையும் கண்டதும் அப்பொழுதுதான் அவளுக்கு
தான் விளையாட்டுக்கு சொன்னது தன் மகள் மனதை எவ்வளவு பாதிக்கும் என்று உரைத்தது..!
ஆனாலும் எப்பொழுதும் அப்பனும் மகளும் அடிக்கும் கூத்தை பார்த்து
மனதுக்குள் பொங்கி கொண்டிருந்தவள், தன் மனக்குமுறலை எல்லாம் தன்னை மறந்து அப்பொழுது கொட்டினாள்.
“ஹ்ம்ம்ம் உள்ளதத்தான் யா சொன்னேன்..! இங்க பாரு ஸ்டேட் ஃபர்ஸ்ட் ல வேற புள்ள போட்டோ தான்
இருக்கு...”
என்று கையில் இருந்த பேப்பரை கணவன் முன்னே விரித்து காட்ட, அதில் அதிர்ந்து போன அவன் மகள்... தன் தந்தையின் பிடியிலிருந்து
விலகியவள், தன் அன்னையின்
கையில் இருந்த பேப்பரை பிடிங்கி அதன் முதல் பக்கத்தை பார்க்க, அப்படியே அதிர்ச்சியில்
உறைந்து போனாள்.
அவள் அன்னை சொன்னது போல வேறு ஒரு பெண்ணின் புகைப்படம்தான் முதல்
பக்கத்தில் பெரிதாக இருந்தது..!
அடுத்த கணம், அவள் கண்களில் கண்ணீர்
கரகரவென்று சுரக்க, அதைக் கண்டு ராசய்யா பதறி போனான்..!
“குட்டிம்மா... உன் ஆத்தா கெடக்கிறா...அவ பேச்ச நீ கண்டுக்காத...நீ
அடுத்த பக்கத்தை புரட்டு கண்ணு..! அதுல உன் போட்டோவ பெருசா போட்டிருக்காங்க
பாரு..! நீ தான் நம்ம மாவட்டத்திலேயே முதலாவதாக
வந்திருக்க..!
மாநிலத்தில் முதலாவதா வந்த புள்ளைக்கும், உனக்கும் ஒரே ஒரு மார்க்கு
தான் வித்தியாசம் கண்ணு..!
என் மவ எம்புட்டு புத்திசாலியா இருந்தா, அப்பா ஆசைப்பட்ட மாதிரியே மாவட்டத்திலேயே பர்ஸ்ட்
ஆ வந்திருக்கா....” என்று தன் மகளை தாங்கி, அவளை புகழ்ந்து பேச,
அவளோ அதை எல்லாம் காதில் வாங்காமல், ஓவென்று கதறி அழுதபடி பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு வாசல்
கேட்டை திறந்து கொண்டு வெளியில் ஓடினாள்..!
அதைக்கண்டு பெற்றோர்கள் இருவருமே அதிர்ந்து போயினர்..!
தன் மகள் அழுதவாறே வீட்டை விட்டு வெளியேறுவதைக் கண்டு பதறிய
ராசய்யா பூங்கொடியை பார்த்து முறைத்தவன்,
“ஏன் டி..! இப்ப உனக்கு சந்தோசமா? உன் மனசு இப்ப
குளுகுளுனு இருக்குமே..! என் புள்ள எவ்வளவு
சந்தோசமா இருந்தா... அதை கெடுக்கனே வந்திருக்கியே...” என்று பொரிந்து தள்ள,
பூங்கொடிக்கும், தான் கொஞ்சம்
அதிகமாகத்தான் சொல்லிட்டோமோ என்று கஷ்டமாக இருந்தது...!
“மாமா...சும்மா அவளை கொஞ்சம் சீண்டி பார்க்க, அப்படி சொன்னேன்..!
..” குரல் இறங்கி தழுதழுக்க,
“வாய மூடு...! நம்ம புள்ளைய
பத்தி உனக்கு தெரியாதா? அவ அனிச்சமலர் டி. ஒரு வார்த்தை அவளைக் குத்தி சொல்லிட்டா, அவளால தாங்க முடியாதுனு உனக்கு தெரியாது.?
ஆளுதான் வளர்ந்திருக்க.. கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? உன்னை வந்து வச்சுக்கிறேன்...” என்று மீண்டும் ஒருமுறை முறைத்துவிட்டு, செருப்பை மாட்டிக்கொண்டு வேகமாக தன் மகள் சென்ற திசையை நோக்கி ஓடினான்
ராசய்யா..!
அவளோ சற்று தள்ளி இருந்த கருப்பணார் கோவிலுக்கு சென்றவள்..! அங்கிருந்த
கோவில் திண்ணையில் அமர்ந்துகொண்டு அழுது கொண்டிருந்தாள்..!
*****
பத்தாம் வகுப்பில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரவேண்டும் என்று
கனவு கொண்டிருந்தாள்..!
அதுவும் தன் மீது உயிரையே வைத்திருக்கும் தன் அப்பாவுக்காக, தான் ஸ்டேட் பர்ஸ்ட் வரவேண்டும்
என்று வெறித்தனமாக படித்தாள்..!
அரசு பள்ளியில் படித்தாலும், படிப்பில் அவளுக்கு இருந்த ஆர்வத்தால் நன்றாகத்தான் படித்தாள்..!
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பெரும் போராட்டமே
ஆங்கிலம்தான்..!
மற்ற எல்லா பாடங்களிலும் எளிதாக மதிப்பெண் வாங்கிவிடுபவர்கள்...
ஆங்கிலத்தில் மட்டும் கொஞ்சம் தினறத்தான் செய்வார்கள்..!
அதே போலத்தான் அந்த குட்டிக்கும்..!
ஆங்கிலத்தில் கொஞ்சம் மதிப்பெண் குறைத்து விட, ஆங்கில மீடியத்தில் படித்த அந்த மாணவி முதல் இடத்தை பிடித்திருந்தாள்.
தேர்வு முடிவை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த அவள் தந்தையின் ஆர்ப்பாட்டத்தில்
இருந்து அவள் தான் ஸ்டேட் பர்ஸ்ட் என்று எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு அவள் ஸ்டேட் பர்ஸ்ட்
இல்லை என்பதை அவ்வளவு எளிதாக ஏற்று கொள்ள
முடியவில்லை..!
அதைக் கூட கொஞ்சம் நாசுக்காக சொல்லியிருந்தால், ஒருவேளை ஏற்று கொண்டிருப்பாளோ?
எப்பொழுதுமே அவளை கொஞ்சம் மட்டம் தட்டும் அவள் அன்னை...! அவள்
ஸ்டேட் பர்ஸ்ட் வராததை நக்கலாக சொல்லி வைக்க, அதைத்தான் அவளால் தாங்க முடியவில்லை..!
தன் மனக்குமுறலை எல்லாம் அவள் முன்னே அமைதியாக அமர்ந்திருந்த கருப்பணாரிடம் கொட்டிக் கொண்டிருந்தாள்..!
“யோவ் கருப்பு..! நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? நான்தான் ஸ்டேட் பர்ஸ்ட் வரணும்னு சொன்னேனா இல்லையா? தினைக்கும் வந்து உன்னை பாத்துட்டு இதைத்தான சொல்லிட்டு
போனேன்..!
நீ என்ன பண்ணி வச்சிருக்க? இனிமேல் நான் உன் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன்...உன்னை
பார்க்கவும் நான் வரமாட்டேன்...” என்று
படபடவென்று பொரிந்து அந்த கருப்பணாரை வாய்
வலிக்க திட்டிக்கொண்டு இருந்தாள்.
தன் மகளை எங்கெங்கோ தேடி அலைந்தவன், கடைசியாக அவள் இங்கதான் வந்திருப்பாள் என்று யூகித்து அவசரமாக அந்தக் கருப்பணார் கோயிலுக்குள்
வந்தவன்...
அங்கே தன் மகள் அந்த கருப்பணாரை வறுத்து எடுத்துக் கொண்டிருப்பதை கண்டு அதுவரை இருந்த
டென்சன் குறைந்து மனம் கொஞ்சம் லேசானது..!
அதுவரை இறுக்கத்தில் அழுந்த மூடி இருந்த அவன் இதழ்கள் மெல்ல
விரிந்து சிரிக்க ஆரம்பித்தன..!
தன் மகளின் அந்த கோப முகத்தை கண்டதும் அப்படியே தன் மனையாளின்
நினைவே..!
அவளும் இப்படித்தான்..! கோபம் வந்துவிட்டால், சண்டைக்கு போகும் சேவலைப்போல சிலிர்த்துக்கொண்டு எதிரில்
இருப்பவரை ஒரு பிடி பிடித்து விடுவாள்..!
மெதுவாக தன் மகளிடம் சென்றவன், அவள் அருகில் மெல்ல அமர்ந்து கொண்டவன்,
“ஆமா...கருப்பு... இனிமேல் நானும் உன் மூஞ்சில முழிக்க மாட்டேன்..!
என் புள்ள ஆசையை..அவள் கனவை நீ நிறைவேத்தலை
இல்ல... உன் கட்சி கா.. இனிமேல் உன்னை பார்க்க வரமாட்டேன்...! போய்யா...”
என்று வரவழைத்த கோபத்துடன் தன் மகளை ஓரக்கண்ணால் பார்த்தவாறு
அந்த கருப்பணாருடன் சண்டை போட, அதைக்கேட்டு கொஞ்சமாக
மலர்ந்தது அந்த குட்டியின் முகம்..!
ஆனால் அதே நேரம் மீண்டும் தான் ஸ்டேட் பர்ஸ்ட் வரவில்லையே என்ற
ஆதங்கம் நினைவு வர, கண்களிலிருந்து கரகரவென்று
கண்ணீர் சொரிய, மீண்டும் தன்
தந்தையை கட்டிக்கொண்டு ஒரு மூச்சு அழுது
தீர்த்தாள்..!
ராசய்யாவுக்கோ மனம் பதைத்தது..!
இதுவரை தன் மகளை எந்த ஒரு கஷ்டமும் தீண்டாமல் காத்து வந்தவன்..!
இப்பொழுது இப்படி கண்ணீர் வடிக்க, அதை காண தாங்காமல்
தன் மகளை மெல்ல அணைத்துக்கொண்டு அவள் முதுகை ஆதரவாக வருடி கொடுத்தான்..! ,
“ஸ்டேட் பர்ஸ்ட் வரலைனா என்னடா செல்லம்.. அதுதான் நம்ம மாவட்டத்திலயே
முதலாவதா வந்திட்டியே..! உன் போட்டோ எல்லாம் பேப்பர்ல வந்திடுச்சே... இந்த அப்பாக்கு
அது போதும் டா..!
டென்த் மார்க் எல்லாம் ஒன்னும் பெருசே இல்லயாம்..! 12த் மார்க் தான் முக்கியமாம்..! அதுதான் நமக்கு முக்கியம்.
இந்த ஸ்டேட் பர்ஸ்ட் ஐ
எல்லாம் ஒரு நாலு நாளைக்கு தூக்கி வச்சு கொண்டாடுவாங்க..!
அப்புறம் அதை மறந்துட்டு வேற இதுக்கு போயிடுவாங்க..!
இதுக்கு போய் உன் மனச தளர விடலாமா? உன் கனவு... லட்சியம் எல்லாம் என்ன? “ என்று கேட்டு, தன் மகளை பேசவைக்க முயல, அந்த அழுகையின் ஊடே தலை நிமிர்ந்து
“நான் டாக்டராக வேண்டும்..! அதுவும் ஒரு பேமஸ் கார்டியாலஜிஸ்ட்
ஆகணும்..! எல்லாருக்கும் முடிந்தளவு
இலவசமாக வைத்தியம் பார்க்கணும்...” என்று மிடுக்குடன், கண்களில் கனவு மின்ன சொல்ல,
“ஹ்ம்ம்ம் அப்ப அத மட்டும்தான் கருத்துல வைக்கணும் கண்ணு...
இந்த ஸ்டேட் பர்ஸ்ட்...மாவட்டத்தில் பர்ஸ்ட் எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது..! பத்தாம்
வகுப்புல விட்டதை பன்னிரெண்டாம் வகுப்புல
புடிச்சிடலாம் டா.. அதுக்காக இம்புட்டு உன்னை கஷ்டபடுத்திக்க வேண்டாம்..!
நீ இப்படி அழுதா அப்பா மனசு தாங்குமா? அப்ப நானும் அழுவேன்...” என்று இன்னும் ஏதேதோ சொல்லி தன் மகளை சமாதானப்படுத்தினான் அந்த பாசக்கார தந்தை.
அதைக்கேட்டவளும் சிறிது நேரம் மூஞ்சை தூக்கி வைத்திருந்தவள்... மீண்டும்
கண்ணில் நீர் சுரக்க, தன் விடா முயற்சியால் தன் மகளை மெல்ல மெல்ல தேற்றினான்
ராசய்யா..!
பின் கொஞ்ச நேரத்தில் ஓரளவுக்கு தன் மனதை தேற்றிக்கொண்டவள், அங்கிருந்து எழுந்து, மீண்டும் அந்த கருப்பணாரை
ஒரு முறைத்துவிட்டு பின் தன் தந்தையின் கையை
பிடித்துக்கொண்டு இருவரும் வீட்டிற்கு வந்தனர்..!
*****
உள்ளே வந்ததுமே இருவருமே பூங்கொடியை பார்த்து முறைத்து விட்டு கழுத்தை
நொடித்துக் கொண்டு சென்றனர்..!
தன் மகளின் அழுகையை கண்டு பூங்கொடிக்குமே வேதனையாகத்தான்
இருந்தது..!
ஆனால் இப்பொழுது இருவரும் சிரித்தபடி கை கோர்த்துக்கொண்டு வர, அவளின் வேதனை மறந்து பொறாமை எட்டி பார்த்தது..!
அதோடு இது அடிக்கடி நடப்பது என்பதால் அவளும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் ஏனோ மனதில்
சிறு ஏக்கம்..!
தன் மகள் தன்னிடம் அதிகம் ஒட்டவில்லை என்பதாலா? இல்லை தன் கணவன் அவளைத்தான் அதிகம் கண்டு கொள்கிறான் என்பதாலா? அவளுக்கே அது தெரியவில்லை..!
ஏக்கத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டு நிக்க, அதேநேரம்
“பெரியம்மா....” என்று அழைத்தவாறு
ஓடி வந்து அவளின் காலை கட்டிகொண்டது ஒரு சின்ன
வாண்டு..!
அந்த குரலில் மலர்ந்தவள், குனிந்து அந்த குட்டியை தூக்கியவள்
“வாடி என் ராசாத்தி... எப்படி
இருக்க தங்கம்? “ என்று தன் தங்கையின்
மகளை கொஞ்சியபடி, அவளின் கன்னத்தில் அழுந்த
முத்தமிட்டாள் பூங்கொடி.
மலர்க்கொடி தன் மாமனுக்கு கொடுத்த வாக்குபடி, திருமணம் முடிந்து பத்து வருடங்கள் ஆகி இருந்த பொழுதும், தன் கணவனுடன் ஒரு நல்ல இல்லற வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருக்கிறாள்..!
அவர்களின் இனிய இல்லறத்திற்கு சாட்சியாய் இப்பொழுது இரண்டு பிள்ளைகள்..!
மூத்தவள் இதழினி..! இளையவன் இனியவன்..!
மலர் கர்ப்பமாக இருந்தபொழுது சிலம்பாவுக்கு அந்தளவு உடம்பு முடியாமல் போக, பூங்கொடிதான் தன்
அன்னையின் இடத்தில் இருந்து தன் தங்கையை தாங்கினாள்..!
மலரின் பிரவத்தின் பொழுது அவள் தான் உடன் இருந்து பார்த்துக் கொண்டாள்...அந்த குட்டியையும் தன் கையால் தான் முதலில் வாங்கினாள்..!
அதனாலயோ என்னவோ..! அந்தக் குட்டிக்கும் பெரியம்மா என்றால் ரொம்ப
பிரியம்..! வாரம் ஒருமுறையாவது பெரியம்மாவை வந்து பார்க்கவேண்டும் அவளுக்கு..!
தன் மகள் தன்னிடம் ஒட்டாமல் அவள் தந்தையிடம் ஒட்டிக்கொள்ள, அந்த ஏக்கத்தை எல்லாம் தன் தங்கையின் மகளிடம் தீர்த்துக்கொண்டாள்
பூங்கொடி.
தன் காலை ஓடிவந்து கட்டிக் கொண்ட குட்டியை தூக்கியவாறு வாயிலை பார்க்க, தன் அக்காவை பார்த்து சிரித்தபடி, உள்ளே வந்தாள் மலர்க்கொடி.
அவளைத்தொடர்ந்து தன் மகனை கையில் தூக்கியபடி உள்ளே வந்தான்
மதி..!
இருவரையும் பார்த்து புன்னகைத்தபடி வரவேற்க, தன் அக்கா அருகில் வந்த மலர்,
“எங்கக்கா குட்டிமா..? டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட்
வந்துட்டாளே..! நான் அவளை பார்த்து கன்க்ராட்ஸ்
சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்..! “
என்றபடி உள்ளே வர, தன் சித்தியின் குரல் கேட்டதும் அதுவரை தன் முகத்தை உர்ர் என்று
தூக்கி வைத்துக் கொண்டிருந்தவள்...
அந்த அறையை விட்டு ஓடி வந்தவள் சித்தி என்று கூவியவாறு மலரை கட்டிக்
கொள்ள, மலரும் தன் அக்கா மகளை பாராட்டி அவளுக்கு தான்
வாங்கி வந்திருந்த பரிசை கொடுத்தாள்..!
மதியும் புன்னகையுடன் அந்த குட்டியை வாழ்த்த, அவளும் சிரித்து இருவருக்கும் நன்றி சொன்னாள்..!
அப்பொழுது தான் தன் அக்கா
மகளின் உதட்டில் சிரிப்பு இருந்தாலும், முகத்தில் மலர்ச்சி
இல்லாததை கண்டு கொண்டாள் மலர்..!
“ஹோய் வாயாடி..? ஏன் உன் மூஞ்சு
டாலடிக்காம, டல்லடிக்குது?“ என்று கிண்டலாக விசாரிக்க,
அதே நேரம் உள்ளே இருந்து வெளிவந்த ராசய்யாவும் அவர்களை வரவேற்றவன்
தன் மனைவியை முறைத்துவிட்டு
“எல்லாம் இவளால் தான்...” என்று முனுமுனுத்தான்..!
அது பூங்கொடியின் காதில் விழுந்தாலும், அதை கண்டுகொள்ளாமல் தங்கையின்
மகள் உடன் கொஞ்ச ஆரம்பித்தாள்..!
மலரோ விடாமல் தன் அக்கா மகளை விசாரித்தாள்..!
“என்னாச்சு குட்டிமா? நீதான் டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் வந்திருக்கியே..!
அப்புறம் ஏன் டல்லா இருக்க?
உன் போட்டோவ பேப்பர்ல பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? ப்ரௌட் ஆப் யூ குட்டிமா...” என்று
சிலாகித்து தன் இடுப்பை கட்டிக்கொண்டிருந்தவளின் முன் உச்சி முடியை செல்லமாக
கலைத்து விட்டாள் மலர்..!
அதில் கொஞ்சம் தெளிந்தவள்,
“ஆனாலும் ஸ்டேட் பர்ஸ்ட் வரமுடியலையே சித்தி...நான் ஸ்டேட் பர்ஸ்ட் வரணும்னு அப்பா எவ்வளவு கனவு கண்டார் தெரியுமா? அவர் கனவை நிறைவேற்ற முடியாம போய்டுச்சே..! எவ்வளவு ... வருத்தப்படுவார்...”
என்று தழுதழுத்த குரலில் தன் வேதனையைச் சொல்ல, அப்பொழுதுதான் மலருக்கு அவளின் வேதனை புரிந்தது..!
எஜுகேசன் என்பது பிள்ளைகளுக்கு
அறிவை புகட்டி, வாழ்க்கையின்
நெறிமுறைகளை போதித்து, அவர்களை நல்வழி படுத்தும் வழியாக இல்லாமல்
வியாபாரம் ஆகிக்கொண்டு இருந்தது புரிந்தது..!
அதுவும் பத்தாம் வகுப்பிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும்
தாங்கள்தான் ஸ்டேட் பர்ஸ்ட் வரவேண்டும் என்று பெற்றோற்கள் அவர்களின் மனதில் பதிய
வைத்துவிட, அதனாலயே கடினமாக
படிக்க ஆரம்பிக்கின்றனர்.
ஒருவேலை அவர்களால் அப்படி வரமுடியாமல் போய்விட்டால்... அதுவே
பலத்த ஏமாற்றமாக கருதிவிடுகின்றனர்..!
தன் அக்கா மகளும் அப்படிப்பட்ட ஏமாற்றத்தை தாங்க முடியாமல் வேதனை
படுகிறாள் என்று புரிந்து கொண்டவள், அவளை சமாதானம்
படுத்த முயன்றாள்..!
“அடடா...இதுதான் உன் வருத்தமா? ஸ்டேட் பர்ஸ்ட் வரலைனா
என்னடா? அதுதான் டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட் வந்திருக்கியே..!
அதுக்கே கொடுத்து வச்சிருக்கணும் தெரியுமா? அதோட ப்ளஸ் டு ல புடிச்சிடலாம் விடு.. சியர் அப்...” என்று தன்
அக்கா மகளை தேற்ற, அவளும் கொஞ்சம்
தெளிவானாள்..!
அதன் பிறகு ராசய்யா வங்கி வந்து இருந்த இனிப்பை எல்லோருக்கும் அவள்
கையால் கொடுக்க வைக்க, முகத்தில் இப்பொழுது லேசாக புன்னகை வந்திருந்தது பெண்ணுக்கு..!
அதே நேரம் ராசய்யாவின் அந்த சிறிய கையடக்க நோக்கியா போன் அலற, அதை எடுத்துப் பார்த்த பூங்கொடி முதலில் புன்னகையுடன்
“சொல்லுடா... எப்படி இருக்க? “ என்று தன் தம்பியை நலம் விசாரிக்க,
“அதெல்லாம் அப்புறம் சொல்றேன்..முதல்ல போனை அந்த கருவாச்சி கிட்ட கொடுக்கா...” என்றான் சிரிப்புடன்.
“ஆஹான்... இப்பதான் அவ சாமியாடி முடிச்சு கொஞ்சம் மலை இறங்கி வந்து
இருக்கா. நீ கருவாச்சியினு சொல்லி அவளை
மறுபடியும் மலை ஏத்தி விட்டுடாதா ராசா ..!
அதோட உன் மாமா இருக்கிற கடுப்புல, நீ கருவாச்சினு சொன்னது தெரிஞ்சுது, தீட்டி வச்சிருக்கிற அருவால எடுத்துகிட்டு நேரா பஸ் ஏறி நீ
இருக்கிற ஊருக்கே வந்து வெட்ட வந்துருவார்...”
என்று மெல்ல சிரிக்க,
“பின்ன...என் அக்காவை மட்டும் எத்தனை தரம் கருவாச்சினு கூப்பிட்டிருக்கார்..
அதை எல்லாம் சேர்த்து வச்சு நான் அவர் பொண்ணை கூப்பிட வேண்டாமா? அதெல்லாம் முடியாது..நான்
அப்படித்தான் கூப்பிடுவேன்..! நீ முதல்ல போன
அந்த கருவாச்சிக்கிட்ட கொடு..” என்று
சிரிக்க,
“இன்னைக்கு உனக்கு நேரம் நல்லா இல்ல டா மவனே...” என்று வாய்க்குள் சிரித்தபடி தன் மகளின் அருகில்
வந்து போனை தன் மகளிடம் நீட்ட
அதை வாங்காமல் தன் அன்னையை முறைத்தாள் பெண்..!
தன் அன்னை அவளை மட்டமாக பேசியதை இன்னுமே அவளால் மறக்க
முடியவில்லை..! தன் அன்னையை முறைத்துக்கொண்டு நிக்க,
“மாமா உன்கிட்ட பேசணுமாம்...” என்று முறைத்தபடி சொல்ல, மாமா என்றதும் முகம் மலர்ந்தவள், உடனே அந்த போனை பிடுங்கிக் கொண்டாள்.
*****
மாமா என்றால் அவளுக்கு கொள்ளை பிரியம்..!
பின்ன இருக்காதா..! அவள்
பிறந்ததிலிருந்தே தூக்கி வைத்துக்கொண்டு சுற்றியவன் ஆயிற்றே..!
பாதி நேரம் ராசய்யா அவளை கீழே இறக்க விடாமல் தாங்கினான் என்றால் மீதி பாதி நேரம் அவளை மாமன் அன்பரசன் தாங்கி
கொண்டான்..!
அவன் எங்கு சென்றாலும் அவன் போகும் இடமெல்லாம் அவளும் ஆஜர் ஆகிவிடுவாள்.
அவளையும் கூட்டிக்கொண்டேதான் சுற்றுவான்..!
இப்பொழுது அவனும் பிஎஸ்ஸி அக்ரி முடித்துவிட்டு திருநெல்வேலியில்
அக்ரி ஆபிசராக பணிபுரிந்து கொண்டிருக்கிறான் .
தன் அக்கா மகளின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுக்காக இன்று அவனுமே ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்தான்.!
தேர்வு முடிவைப் பார்த்தவுடனே தன் மாமனுக்கு அழைத்திருந்தான்
அக்கா மகளுடன் பேச..!
தன் மாமன் அழைத்திருக்கிறான் என்று தெரிந்ததும், போனை தன் அன்னையின் கையில் இருந்து வெடுக்கென்று பிடுங்கி
கொண்டவள், அதை தன் காதில்
வைத்து
“ஹாய் மாமா....” என்று உற்சாகமாக அழைக்க,
“என்னடி கருவாச்சி? சொன்ன மாதிரியே கலக்கிட்ட..! டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் வந்திட்டியே..! கன்க்ராட்ஸ்...”
என்று வாழ்த்த, அவனின் கருவாச்சி
என்ற அழைப்பில் உற்சாகம் வடிந்து கோபம் புசுபுசுவென்று பொங்கி வர,
“டேய் மாமா... என்னை கருவாச்சினு
கூப்பிடாதனு எத்தனை தரம் சொன்னேன்...” என்று சிலிர்த்துக்கொண்டு சண்டைக்கு நிற்க,
“ஹா ஹா ஹா கருவாச்சிய கருவாச்சினு கூப்பிடாம வேற எப்படி கூப்பிடறதாம்...” என்று
அவளை சீண்ட,
தன் மகளின் முகத்தில் இருந்த கோபத்தை வைத்தே எதிரில் இருப்பவன்
என்ன சொல்லி இருப்பான் என்று கணித்த ராசய்யா... தன் மகளின் கையிலிருந்த கைபேசியை வாங்கி தன்
மச்சானை ஏக வசனத்தில் திட்ட ஆரம்பித்தான்..!
தன் மாமனை அங்கு எதிர்பார்த்திராத அன்பரசன் காதை பொத்திக் கொள்ள
வேண்டியதாயிற்று..!
கடைசியில் அவன்
“சாரி மாம்ஸ்... நீ பக்கத்துல
இருக்கறது தெரியாம அந்த கருவாச்சி... சாரி சாரி உன்
இளவரசியை அப்படி சொல்லிட்டேன்..!
இனிமேல் அப்படி சொல்ல மாட்டேன்...” என்று காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்க,
“அது...அந்த பயம் இருக்கட்டும்...! இனிமேல் மறந்தும் என் புள்ளைய அப்படி சொன்ன, என் பொண்ணுக்கு தாய்மாமன் இல்லைன்னாலும் பரவாயில்லைனு திருநெல்வேலிக்கே வந்து வெட்டுவேன்..!
என்று மிரட்ட, அதைக்கேட்டு அரண்டு
போனான் அவன் மச்சான்..!
“ஆத்தி...அக்கா சொன்னது சரியாதான் இருக்கு..! சரியான டெர்ரர்
மாம்ஸ்...” என்று உள்ளுக்குள் புலம்பியவன்
“ஹீ ஹீ ஹீ எதுக்கு மாம்ஸ்
இந்த கொலவெறி? நான் சும்மா அவளை சீண்டினேன்..! இனிமேல் அப்படி சொல்ல
மாட்டேன்..! இப்ப போனை அவ கிட்ட
கொடுக்கறிங்களா? “ என்று கெஞ்சலுடன்
கேட்க, அவனும் முறைத்தபடி தன் மகளிடம் போனை
நீட்டினான்..
“ஹாய் டி... கன்கிராட்ஸ்...” என்று சமாதானக்கொடியை பறக்கவிட்டு
தன் அக்கா மகளை வாழ்த்த, அவளும் தன் கோபத்தை
மறந்து
“தேங்க்ஸ் மாமா...ஆமா என் கிப்ட் எங்க? “ சலுகையாக தன் மாமனிடம் அரட்டை அடிக்க,
“மாமா நேர்ல வர்றப்போ உனக்கு வாங்கி தரேன்டி...அப்புறம் இனிமேல்
தான் நீ இன்னும் நல்லா படிக்கணும்...ப்ளஸ்டூ
தான் இம்பார்ட்டன்ட்...” என்று ஆரம்பித்து
இன்னும் சில அறிவுரைகளை சொல்ல, அவளும் பொறுமையாக கேட்டுக்கொண்டாள்.
அதன் பின் அனைவரும் பொதுவாக பேசிக்கொண்டிருக்க, ராசய்யாவோ தான் வாங்கி வந்திருந்த சாக்லேட் டப்பாவை
எடுத்துக்கொண்டு, நைசாக நழுவி ஊருக்குள்
வந்தவன் ஊரில் இருக்கும் எல்லோருக்கும் சாக்லேட்
அள்ளி வழங்கினான்..!
ஒன்றிரண்டு என கொடுக்காமல் பார்க்கிறவர்கள் அனைவருக்கும் கை
நிறைய அள்ளி வழங்கினான்..!
பத்தாதற்கு ஒவ்வொரு வீடாக சென்று கை நிறைய சாக்லெட்களை அள்ளி கொடுத்தான்..!
பக்கத்து ஊரிலிருந்து வேலையாக அந்த ஊருக்கு வந்திருந்தவர்களை கூட
நிற்க வைத்து என் பொண்ணு மாவட்டத்தில் முதலாவதாக வந்து விட்டாள் என்று பெருமையாக சொல்லி சாக்லேட்டை அள்ளி கொடுத்து
தன் மகிழ்ச்சியை கொண்டாடினான்..!
தன் தந்தையின் உற்சாகத்தை கண்டு அந்த குட்டிக்கும் ரொம்பவுமே
உற்சாகம் ஆனது..!
அதோடு பத்தாம் வகுப்பு பாசானதுக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம்
பண்ணும் தன் அப்பா... அவள் டாக்டருக்கு படித்துவிட்டால் எப்படி கொண்டாடுவார் என்று
எண்ணி பார்க்க, மெய் சிலிரித்தது..!
எப்படியாவது தான் ஒரு டாக்டராகிவிட வேண்டும் என்பதை இன்னும்
இன்னுமாய் தன் மனதில் ஆழ பதித்துக்கொண்டாள் பெண்..!
Superb.......raasaya ponnukku name illaya ????? Suspense a irukku ???
ReplyDeleteThanks pa!
Delete