அத்தியாயம்-40
விகர்த்தனன் தந்தைவழி பரம்பரை வழிவழியாக ரகு வம்சத்தை சேர்ந்தவர்கள்...!
அந்தக் காலத்தில் தர்மபுரியை சுற்றி இருந்த பகுதிகளில் இருந்த குறுநில
மன்னர்களில் ஒரு மன்னராக இருந்தவர் அவனின்
மூதாதையர்..!
மன்னர்கள் மறைந்து அடுத்து ஜமீன் முறை தொடர, அவனின் குடும்பத்தார் பரம்பரை ஜமீன் ஆக மாறியது..!
இப்பொழுது ஜமீன் முறையும் ஒளிந்து இருந்தாலும், அதன் தாக்கம் கொஞ்சம்
இருக்கத்தான் செய்தது
விகர்த்தனன் தந்தை
சூரியபிரகாஷ்..!
அந்த பரம்பரையில் கடைசி ஜமீன்தார்..!
அவர்களின் பரம்பரையில் வரும் வாரிசுகளுக்கு சூரியனின் முத்திரை
பதித்த மச்சம் இருக்கும்..!
அதே போன்று அந்தப் பிள்ளைகளின் பெயர்கள் சூரியன் பெயர் அர்த்தம்
வருமாறு பெயர் வைப்பார்கள்..!
அப்படித்தான் சூரியபிரகாஷ் பெயரும் வந்திருந்தது
ஜமீன் முறை மறைந்தாலும், தர்மபுரியை ஒட்டிய பகுதியில் அவரின் ஜமீன்
சொத்துக்கள் பறந்து விரிந்துதான் இருந்தன.
ஆனாலும் சூரியபிரகாஷ்க்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல், அந்த ஜமீன்
சொத்துக்களை பாதுகாப்பது மட்டும் கடமை என கொள்ளாமல், தொழிலில் நாட்டம் சென்றது..!
அதனால் பெங்களூரில் தன் தொழிலை ஆரம்பித்தவர், அவரின் ஆர்வத்தாலும், கடின உழைப்பாலும் இன்னுமாய்
அதை விரிவு படுத்தினார்..!
திருமண வயது வந்ததும், பக்கத்து ஜமீன்
பரம்பரையை சேர்ந்த அகல்யாவை மணமுடித்து பெங்களூருக்கே குடிபெயர்ந்து விட்டார்..!
அகல்யாவும், பிரகாஷ் ம் மனமொத்த
தம்பதிகளாக வாழ்க்கையை நடத்தினர்..!
திருமணம் ஆகியும் பல வருடங்கள் குழந்தை இல்லாமல், பலரின் வேண்டுதலுக்கு பிறகு பிறந்தவன் விகர்த்தனன்..!
தன் மகன் பிறந்ததும் பிரகாஷ் முதன்முதலாக தேடியது அந்த சூரிய
மச்சத்தை தான்..!
அவர் எதிர்பார்த்தபடியே சூரிய மச்சத்துடன் பிறந்திருந்த
தன் மகனைப் பார்த்ததும் அளவில்லாத
மகிழ்ச்சி..!
அதனாலயே சூரியன் பெயர் கொண்ட விகர்த்தனன் என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தார் சூரியபிரகாஷ்..!
*****
சிறுவயதிலேயே தன் மகன் எல்லாவற்றிலும் சிறந்தவனாக
வரவேண்டும் என்று அவனை கொடைக்கானலில் உள்ள போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டார்..!
ஒரே மகனாக நின்று போய்விட்ட தன் மகன் மீது உயிராக இருந்தார் அகல்யா..!
தன் கணவன் மீது உயிராக இருந்தாலும், அவரின் விருப்பத்திற்கு எதிராக, தன் கணவனை எதிர்த்து தன் மகனை தன்னுடனே வைத்துக்கொள்ள முயலவில்லை.!
அதனால் கண்களில் வலியுடனே தன் மகனை கொடைக்கானலுக்கு அனுப்பி
வைத்தார்.. ஆனாலும் வாரம்தோறும் மறக்காமல் சென்று இரண்டு நாட்கள் தங்கி, தன் மகனை பார்த்து வருவார்..!
அந்த சிறு வயதிலேயே தாய் அன்பும் தந்தை பாசம் இல்லாமல் தனித்து
விடப்பட்டான் விகர்த்தனன்..!
எப்படியோ நிதர்சனத்தை புரிந்து கொண்டு, தன் தனிமையை, தன் ஏக்கத்தை, தாயை காணாத தன் தவிப்பை
விரட்ட, படிப்பிலும், அங்கிருக்கும் பல ஆக்டிவிட்டிஸ் களிலும் தன்னை
நுழைத்துக்கொண்டான்..!
அதன் பலனாக, அவனின் தந்தை
எதிர்பார்த்ததை போலவே அவனும் எல்லாவற்றிலும் சிறந்தவனாக தேர்ச்சி பெற்றான்..!
ஆனால் குடும்பம், அன்பு, பாசம் இது எல்லாம் அவனிடம் காணாமல் போய்விட்டது..!
தாயிடம் பேசும் பொழுது கூட ஒரு வித ஒதுக்கதுடன்தான் பேச
ஆரம்பித்தான்..! அதை பார்க்கும்பொழுது அகல்யாவுக்கு மனம் வலிக்கும்..!
12 ஆம் வகுப்பை
முடித்தவன், மேல்படிப்புக்காக வெளிநாட்டில் இருக்கும் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில்
சேர்த்துவிட்டான் சூரியபிரகாஷ்..!
விடலைப்பருவத்தில்... அந்நிய தேசத்தில், புதுவிதமான கலாச்சாரத்தில் பழக ஆரம்பித்தவனின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறிப்போயிருந்தது
வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ளவும்... எல்லா சுகத்தையும்
அனுபவிக்கவும் கற்றுக் கொண்டிருந்தான்..!
தன் இளநிலை, முதுநிலை படிப்பை அங்கேயே முடித்தவன், திரும்பி வந்து தன்
தந்தையின் தொழிலை பொறுப்பேற்றுக் கொண்டான்..!
ஆனால் அவன் கற்றுவந்த பாடத்தோடு மற்ற வேண்டாதவைகளும், மேல்நாட்டு கலாச்சாரமும் அவனுடனேயே
வந்திருந்தது..!
இங்கு வந்த பிறகும் தன்
உல்லாச வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருந்தான்
விகர்த்தனன்..!
அதை கண்டு அகல்யாதான்
மிகவும் தவித்துப் போனாள்..! அவருக்கு இந்த மாதிரி கலாச்சாரம் சுத்தமாக
பிடிக்காது..!
இன்றுவரை தன்னை மட்டுமே நினைத்து ஸ்ரீராமனாக வாழும் தன்
கணவனுக்கும், தனக்கும் இப்படி
ஒரு மகனா என்று அவர் மனம் குமுறியது..!
ஒரு பொறுப்புள்ள அன்னையாய் அவனுக்கு எடுத்து சொல்ல, அவனோ அதை காதில்
வாங்கிக் கொள்ளவேயில்லை..!
*****
இப்படியே நாட்கள் செல்ல அவனுக்கு திருமண வயது
தாண்டியிருந்தது..!
எங்கு சென்றாலும் எல்லாரும் தன் மகனுக்கு திருமணம் செய்ய
வில்லையா என்று கேட்க, அதில் கொஞ்சம் வேதனை கொண்டாள் அகல்யா...!
அவரின் தோழியர், உறவினர்
வட்டாரத்தில் அவன் வயது பிள்ளைகள் எல்லாரும் திருமணம் முடித்து இருக்க, தன் மகன் மட்டும் இப்படி தனிமரமாக நிற்பது அவரின் மனதை
பதைத்தது..!
அதனால் மெல்ல தன் மகனின் திருமண பேச்சை ஆரம்பித்தார்.! அவர்
எதிர்பார்த்த மாதிரியே மறுத்துவிட்டான் விகர்த்தனன்..!
ஆனாலும் தன் முயற்சியை விடாமல் எப்படியோ கெஞ்சி கொஞ்சி அவன் காலில் விழாத குறையாக
கெஞ்சி இறுதியில் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டார்..!
அவனுக்கும் மற்ற
பெண்கள் எல்லாம் அலுத்துவிட, தன் அன்னையின்
வற்புறுத்தலையும் கருத்தில் கொண்டு,
“இந்த திருமணத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? அதையும் தான் பார்த்து
விடலாம்....” என்று தான் தன் அன்னைக்கு
சம்மதம் சொல்லியது.
அவன் சம்மதம் கிடைத்த உடன் அகமகிழ்ந்து போனார் அகல்யா..!
உடனேயே தனக்கு தெரிந்த நட்பு வட்டாரத்தில் பெண் தேட ஆரம்பித்துவிட்டார்...!
அப்படி வந்ததுதான் ஸ்வாதியின் புரபைல்..!
லயன்ஸ் கிளப் மெம்பர் ஆக இருந்தவர் சுவாதியின் அன்னை
சுலக்சனா..!
அதில் மெம்பராக இருந்த அகல்யாவை பற்றி ..அவளின் பின்புலத்தை
பற்றி தெரிந்து கொண்டு, தானாகவே தேடி வந்து
நட்பு பாராட்டி, அகல்யாவின்
நெருங்கிய தோழியாக தன்னை மாற்றிக்கொண்டாள் சுலக்சனா..!
ரொம்ப நாளாகவே விகர்த்தனனை தன் மருமகன் ஆக்கிக்கொள்ள வேண்டும்..!
அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசான அவனை மணந்து
கொண்டால் தன் மகள் ராணி போல வாழலாம் என்று கனவு கண்டு அகல்யாவை மறைமுகமாக தூண்டி
கொண்டிருந்தாள் சுலக்சனா
இறுதியில் அவள் நினைத்தபடியே அகல்யா சுலக்சனாவிடம் பெண் கேட்க, சுலக்சனாக்கு உள்ளுக்குள்
ஏகப்பட்ட சந்தோஷம்..!
ஆனாலும் அதை மறைத்துக் கொண்டு
“அது வந்து அகல்... விகா பத்திதான் எனக்கும் தெரியுமே... கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிற பையன்..! கல்யாணத்துக்குப் பிறகு....” என்று இழுக்க,
“ஹ்ம்ம்ம் உனக்கு தெரியாததா சுலோ..! பெரிய இடத்துல இதெல்லாம் சகஜம்தானே..! கல்யாணத்திற்கு முன்னால்
உல்லாசமாக இருப்பது எல்லாருக்கும் வழக்கம் தானே..!
திருமணத்திற்கு பிறகு என் பையன் மாறிடுவான்..! ஸ்வாதி மாற்றி விடுவாள்… என்று நம்பிக்கை கொடுக்க, அதைத் தொடர்ந்து சுலக்சனா தன் மகளிடம் திருமணப் பேச்சை ஆரம்பித்தாள்..!
*****
விகர்த்தனனை போலவேதான் ஸ்வாதியும்..!
அவள் தன் ஆரம்ப கல்வியை போர்டிங் ஸ்கூலில் முடித்தவள்..!
மேல்படிப்பை வெளிநாட்டில் படித்து
வந்ததால் அத்தனை இன்பத்தையும், சந்தோசத்தையும், அனுபவித்திருந்தவள்..!
அதுவும் ஆண் நண்பர்களுடன் நெருங்கி பழகி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு
சுகத்தை அனுபவித்தவள்... இன்றுமே அனுபவித்துக் கொண்டிருப்பவள்..!
அத்தனையும் இப்பொழுது பழகி விட்டதால், அந்த வாழ்க்கையும்
சலிப்பு தட்ட, அப்பொழுதுதான் ஒரு பார்ட்டியில் விகர்த்தனனை சந்தித்தாள் ஸ்வாதி...!
அந்த பார்ட்டியில் அத்தனை பேரின் கண்களும், அவள் மீது இருக்க, விகர்த்தனன்
மட்டும் அவளை கண்டு கொள்ள வில்லை.!
ஆனாலும் அவனின் கட்டுக்கோப்பான உடற்கட்டும்... படிக்கட்டு
தேகமும்...அந்த பார்ட்டியிலயே அவன் மட்டுமாய் ஆணழகனாய்... ஆளுமையுடவனாய்...
அத்தனை பெண்களின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்து
வைத்திருந்தவனின் பக்கமாக அவள் பார்வையை திரும்பி
பார்க்க வைத்தது..!
அவனின் கட்டுடலில் கிறங்கி போனவள், அவளாகவே அவனை நாடிச் சென்று தன்னை அறிமுகபடுத்திக் கொண்டாள்..!
ஆனால் அவனோ அவளின் அறிமுகத்தை கண்டுகொள்ளாமல் அவாய்ட் பண்ணி
விட்டு சென்று விட்டான்..!
அவனின் நிராகரிப்பு அவளுடைய தன்மானத்தை சீண்டி பார்த்தது..!
அவனை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று தனக்குள்
சூளுரைத்துக் கொண்டாள்..!
அவனை எப்படி அடைவது என்று யோசித்துக்கொண்டிருக்க, அதற்கான வழியை அவள் அன்னையே ஏற்படுத்தி கொடுத்தாள்..!
சுலக்சனா, ஸ்வாதியின் திருமண
பேச்சை எடுக்கவும், விகர்த்தனன் தான்
மாப்பிள்ளை என்று தெரியவும் துள்ளிக் குதித்தாள் ஸ்வாதி..!
உடனேயே திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட, சுலக்சனாவுக்குத்தான் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது..!
தன் மகளைப் பற்றி தெரிந்து இருந்ததால், எப்படியும் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு சொல்வாள் என்று எண்ணி
தயக்கத்துடனே ஒருவாறு திருமண பேச்சை பேச
ஆரம்பித்தாள்.
விகர்த்தனன் என்ற பெயரைக் கேட்டதும் தன் மகள் உடனடியாக சம்மதம்
என்று சொல்லிவிட சுலக்சனாவுக்குத்தான் தன் காதையே நம்ப முடியவில்லை..!
ஒருமுறைக்கு இருமுறை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர்தான்
அகல்யாவிடம் சம்மதத்தை சொன்னாள்.
******
இருபக்கமும் எந்த தடையும் இல்லாததால் அடுத்து வந்த
முகூர்த்தத்திலயே பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில்
அவர்களின் திருமணம் விமரிசையாக நடந்தேறியது..!
அன்றிரவு அதே நட்சத்திர ஹோட்டலில் அவர்களின் முதல் இரவு ஏற்பாடு
செய்யப்பட்டு இருந்தது..!
முதலிரவு அறைக்கு, ஒருவித வெட்கமோ, நாணமோ கொஞ்சமும் இல்லாமல்
நிமிர்வுடன் உள் நுழைந்தாள் ஸ்வாதி..!
அவள் முகத்தில் தான் நினைத்ததை சாதித்து விட்ட சாதனை
பொங்கியது..!
அதோடு இது ஒன்றும் அவளுக்கு முதல் இரவு அல்லவே..! எத்தனையோ
முதல் இரவுகளையும், முதல் பகலையும்
கொண்டாடி இருந்தவளுக்கு இது ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை..!
ஒரே ஒரு வித்தியாசம்..!
“இவன் அவளை கவர்ந்தவன்..! பல பெண்களை தன்னை சுற்றி வர
செய்தவன்..இப்பொழுது தனக்கே தனக்கு என்று சொந்தமாகிவிட்டான்...” என்ற கர்வத்துடன் அந்த
அறைக்குள் அடி எடுத்து வைத்துச் செல்ல, அவனும் அவளை சாதாரணமாகவே எதிர்கொண்டான்..!
அவனுக்கும் பெரிதாக எந்த ஆர்வமும் பரபரப்பும் படபடப்பும் தோன்றவில்லை
அவன் பார்த்து பழகிய எத்தனையோ பெண்களில் ஒருத்தியாகத்தான் ஸ்வாதியும்
அவன் கண்ணுக்கு தெரிந்தாள்..!
இருவருக்குமிடையில் பெரிதாக ஈர்ப்பு என்று எதுவும் வரவில்லை..!
காதல் இல்லாமல் ஒருவரை பற்றி ஒருவர் எந்த ஒரு புரிதலும்
இல்லாமல் அந்த நேரத்தில் உடல் தேவைக்காக இருவரும் கூடி களித்து கலைத்தனர்..!
அன்றிரவு மட்டுமல்ல அதற்குப் பிறகு வந்த ஒவ்வொரு இரவுகளும் ஸ்வாதிக்கு
இனிமையாகத்தான் இருந்தது..!
அவனின் வித்தியாசமான அணுகுமுறை அவளுக்கு பிடிக்கத்தான் செய்தது..!
இதுவரை யாரிடமும் அனுபவித்திராத பேரின்பத்தை வாரி வழங்கினான் தான்..!
ஆனால் அவனுக்கோ அவளிடம்
அப்படி ஒன்றும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை.
ஒரு வாரம் தேனிலவுக்காக
சென்றவர்கள்... இரவு பகல் என்று பாராமல் கூடி, களித்து, கலைத்து தங்கள்
உடல் தேவையை தீர்த்துக் கொண்டனர்..!
ஒரு வாரத்திலேயே விகர்த்தனனுக்கு ஸ்வாதி போரடிக்க ஆரம்பித்து விட்டாள்..!
“சை...இந்த மேரேஜ் லைப்ல் என்ன இருக்கிறது...! இதை ஏன் எல்லாரும் பெரிதாக கொண்டாடுகிறார்கள்..? அதுவும் ஒருத்தியுடன் மட்டும் லைப் லாங்...? நோ வே...!
என்னால எல்லாம் இப்படி ஒருத்தியிடம் மட்டும் கட்டுண்டு கிடக்க முடியாது...ஐ வான்ட்
டு என்ஜாய் மை லைப்... ஐ வான்ட் டு டேஸ்ட் டிப்ரன்ட் கேர்ள்ஸ்...” என்று தலையை
சிலுப்பி கொண்டான்..!
தேனிலவில் இருந்து திரும்பி வந்தவுடன் மீண்டும் பழைய
வாழ்க்கைக்குத் திரும்பி விட்டான்..!
ஸ்வாதியும் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை..!
இந்த திருமண பேச்சின் ஆரம்பத்திலேயே
அவளை சந்தித்து மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தான்..!
அவனுடைய சுதந்திரத்தில்
அவள் தலையிடக்கூடாது..! அதேபோல அவளுடைய சுதந்திரத்தில் அவன் தலையிட மாட்டான் என்று தெளிவாகச்
சொல்லியிருந்தான்..!
ஸ்வாதியும் அதற்கு சம்மதித்து இருந்தாள்..!
அதனால் கொடுத்த வாக்கை காப்பாற்றவும், கூடவே தன் கணவனை விட்டு கொடுக்கும் தாராள மனம் படைத்தவள்
என்பதால் அவனை தடுக்க முயலவில்லை...அது பிடிக்கவும் இல்லை..!
ஒவ்வொருவருக்கும் அவரவருக்கென்ற விருப்பு, வெறுப்பு, தேடல் என்று
இருக்கும்.
திருமணத்தையோ, கணவன்/ மனைவி என்ற
பந்தத்தையோ காட்டியோ யாரையும் கட்டுபடுத்த
கூடாது என்ற தாராள கொள்கை உடையவள்..!
அதனால் அவன் போக்கிற்கே விட்டு விட்டாள்..! அவளுக்கு தேவை
எனும்பொழுது அவளாகவே அவனை நாடி தன் தேவையை தீர்த்துக் கொண்டாள்..!
அகல்யா தான் நொந்து போனாள்.!
எப்படியும் தன் மகன் திருமணத்திற்கு பிறகு மாறிவிடுவான் என்று கட்டியிருந்த கோட்டை இடிந்து போனது..!
அதோடு தன் மருமகளும் அவனுக்கு துணை நிற்பது வேதனையாக
இருந்தது..!
ஒரு ஆண்மகன் நல்ல முறையில் வாழ்வது அவன் துணைவியின் கையில்
அல்லவா இருக்கிறது..! திருமணத்திற்கு பிறகு அவனை தன்னுள் கட்டிப்போடும் வித்தை
மனைவிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்..!
ஆனால் தன் மருமகள் ஸ்வாதி..ஏன் அப்படி செய்யவில்லை..! அது
எப்படி அவன் போக்கிற்கே இவள் விட்டுவிடலாம்? அப்படியென்றால் அவள் புருஷன் மீது இவளுக்கு அக்கறை இல்லையா? என்று தனக்குள்ளே பல
கேள்விகளை கேட்டுக்கொண்டார்.
நாசுக்காக தன் மருமகளிடம் சொல்லி தன் மகனை தடுக்க சொல்ல, அவளோ அவரின் கவலையை
கண்டு கொள்ளாமல் தன் தோளை குலுக்கி விட்டு
“அவருக்கு தெரியாததா? அவர் இஷ்டத்துக்கு விடுங்க ஆன்ட்டி...” என்று சென்று விட்டாள்..!
சரி.. அவனுக்கென்று ஒரு
குழந்தை பிறந்தாலாவது திருந்தி விடுவான்
என்று அந்த வீட்டில் குழந்தை சத்தம் கேட்பதற்காக காத்திருந்தாள் அகல்யா
ஆனால் இருவருமே இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று
தள்ளிப்போட்டு இருக்க, அது தெரியாத அகல்யா, ஒவ்வொரு மாதமும் தன் மருமகள் ஏதாவது நல்ல செய்தியை சொல்வாளா என்று ஏக்கத்துடன் காத்திருந்தார்..!
அவரின் ஏக்கம் கடைசிவரை ஏக்கமாகவே போய்விட்டது..! தன் பேரனையோ, பேத்தியையோ பார்க்க வேண்டும் என்ற ஆசை, நிராசையாகவே போய்விட்டது..!
விகர்த்தனனுக்கு திருமணம் ஆகி மூன்றாவது வருடம்... ஒரு கார்
விபத்தில் அகல்யா மற்றும் சூர்யபிரகாஷ் இருவருமே இந்த உலகை விட்டு சென்று விட்டனர்..!
தன் பெற்றோர் உயிரோடு இருந்த பொழுதே அவர்களை பெரிதாக கண்டு கொண்டிராதவன்… அவர்கள் இல்லாதது அவனுக்கு ஒன்றும் பெரிய இழப்பாக
தோன்றவில்லை..!
அவர்களுக்கு செய்ய வேண்டிய பார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்துவிட்டு வழக்கம் போல தன் வேலையை பார்க்க சென்று விட்டான்..!
0 comments:
Post a Comment