அத்தியாயம்-29
ஒவ்வொரு முறை தோற்று போனாலும் விடாது 17 முறை போர் தொடுத்து இறுதியில் 18ஆவது முறை வெற்றி
பெற்ற கஜினி முகம்மதுவைப் போல, ஸ்ருதியும்
விகர்த்தனன் வீட்டை நோக்கி தினமும் விடாமல் படை எடுத்துக் கொண்டுதான் இருந்தாள்..!
.
ஒவ்வொரு முறையும் அவளின் முயற்சி தோல்வியுற்றாலும், விடாமல் தன் முயற்சியை தொடர்ந்து கொண்டுதான் இருந்தாள்
ஆனால் பலன்தான் பூஜ்ஜியமாக இருந்தது..!
இதற்கிடையில் கிட்டதட்ட மூன்று வருடங்கள் கடந்து விட்டது அவள்
அக்கா ஸ்வாதி இறந்து போய்.
ஆனால் விகர்த்தனன் அப்பொழுது எப்படி இருந்தானோ அதே அளவு
இடைவெளியுடன்தான் அவளிடம் இன்னுமே பழகி வந்தான்.
அவளும் எப்படியாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா.. கோட்டையை
பிடித்து கொடியை நாட்டி விடலாம்...என்று இலவு காத்த கிளியைப்போல காத்திருந்தாள்
ஸ்ருதி.
அப்பொழுதுதான் அவளுடைய நண்பர்கள் எல்லாம் வேர்ல்ட் ட்ரிப் போவதாக திட்டமிட்டு இருக்க, அதை கேள்வி பட்ட விகர்த்தனன்
அவளுக்கும் டிக்கெட் புக் பண்ணி, அவளை வற்புறுத்தி தன் செலவிலேயே அவளை அந்த வெளிநாட்டு
பயணத்திற்கு அனுப்பி வைத்தான்.
******
உல்லாசமாக, மனம் நிறைய மகிழ்ச்சியோடு உலகத்தின் முக்கிய பகுதிகளை எல்லாம்
சுற்றி பார்த்து விட்டு தாயகம் திரும்பிய ஸ்ருதிக்கு பெரிய அதிர்ச்சி
காத்திருந்தது.
அது விகா அத்தான்
இரண்டாம் திருமணம் செய்து கொண்டான்..! அதுவும் ஒரு மகளோடு இருக்கும் பெண்ணை...! அவள்தான்
தன் மகள் என்று மீடியாவிடமும் சொல்லி இருக்கிறான் என்ற செய்தி காதில் இடியாக இறங்கியது.
நேற்று இரவு பெங்களூர் வந்தவள்.... இன்று காலையில் எழுந்ததும் இந்த செய்தியை
கேட்டதும் அதி காலையிலேயே கிளம்பி இங்கே வந்து விட்டாள்.
அப்பொழுதுதான் ஜிம்மில் விகர்த்தனன் உடற்பயிற்சி செய்துகொண்டு
இருந்தான்..!
நேற்றிரவு நிகழ்வின் தாக்கம் அவனை ரொம்பவே புரட்டி போட்டு இருந்தது
தாபத்தோடு தன்னவளை அணைக்க வந்தவனை, சுரபி விலக்கி நிறுத்தியது இப்பொழுதும் அவன்
உள்ளே கனன்று கொண்டிருந்தது.
அதோடு அவன் ஷ்யாமை பற்றி சொன்னதும், அவள் கதறி அழுதது வேறு அவன் இதயத்தை வால் கொண்டு அறுத்தது..!
அவள் இன்னுமே ஷ்யாமை நினைத்துக்கொண்டு இருக்கிறாள் என்பது அவன்
மனதை ரணமாக்கியது..!
நீண்ட நேரம் பால்கனியில் உலாத்தியவன்...ஒரு பாக்கெட்
சிகரெட்டும் காலியானதும் தான் தன் நடையை நிறுத்தினான்..!
பின் கால்கள் வலிக்க ஆரம்பிக்க, தன் அறைக்கு திரும்பி வர, அங்கே சுரபி அழுதபடி தரையிலயே சரிந்து உறங்கி விட்டது தெரிய, அவன் மனம் மீண்டும் கனத்து போனது..!
அவளை அப்படியே விட மனம் இல்லாமல், அவளை தன் கரங்களில் அள்ளி எடுத்தவன், படுக்கையில் படுக்க வைத்து, போர்வையால் போர்த்திவிட்டு, அவனும் படுக்கையில் விழுந்து தன் மகளை அணைத்த படி உறங்கி
போனான்..!
ஆனாலும் நேற்றைய அவளின் ஒதுக்கம்... அதனால் எழுந்த தன் கோபம்...
ஆத்திரம்... எரிச்சல்..இயலாமை எல்லாம் திரட்டி அந்த ட்ரெட் மில்லில் காண்பித்தான்.
எப்பொழுதும் ஓடியிராத அதி வேகத்தில் ஓடி பார்த்தான்...! பல
கடினமான உடற்பயிற்சிகளை செய்து தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கே வந்த ஸ்ருதி, அவனின் ஆண்மை ததும்பிய அவன் தேகத்தை ஒருவித ஆற்றாமையுடன்
பார்த்து ரசித்தவள்... அவன் இவளை கண்டு கொள்ளவும், புன்னகைத்தபடி அவன் அருகில் ஓடி சென்றாள்.
வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பிறகு,
“போங்க அத்தான்... கடைசி வரைக்கும் நான் கேட்டது எனக்கு கிடைக்கவில்லை...அது
எப்படி நான் இல்லாமல் நீங்கள் திருமணத்தை நடத்தி இருக்கலாம்? “
என்று தன் மனக்குமுறலை மறைமுகமாக சொல்ல, அதைக் கேட்டவனும் மெல்ல புன்னகைத்தான்.
ஆனாலும் அவன் முகத்தில் இருந்த கடுகடுப்பு... புதிதாக திருமணமானவன் என்பதை போல இல்லாமல், வேற ஏதோ விஷயம் என்று எடுத்துக் காட்டியது
“ஒருவேளை இவனுக்கும் புது மனைவிக்கும் இடையில் ஏதோ இருக்குமோ..!
இல்லை என்றால் காலையிலயே அத்தான்
முகத்தில் இந்த அளவுக்கு கோபம்...கடுகடுப்பு...எரிச்சல் இருக்காதே...”
என்று ஓரளவுக்கு சரியாக யூகித்தவள்… சுரபியை கண்டதும் தன் கணிப்பு சரிதான் என்று ஊர்ஜிதம் பண்ணிக்
கொண்டாள்.
விகர்த்தனன் சுரபியை அறிமுக படுத்தி வைத்ததும், அவளைக் கண்ட ஸ்ருதிக்கு பற்றிக்கொண்டு வந்தது.
அதோடு அவளின் குடும்ப பாங்கான தோற்றம்...விகர்த்தனன் உடன் ஒட்டாமல் பழகிய விதமும் இருவருக்கும் இடையில்
ஏதோ சம்திங் சம்திங் இருக்கு என்று கண்டு கொண்டாள் ஸ்ருதி.
எப்படியாவது அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டவள், சுரபியை வெறுப்பேற்ற என்றே விகர்த்தனன் உடன் ஒட்டி உரசி
நெருக்கமாக பழகினாள்.
அதிசயித்திலும் அதிசயமாய் விகா அத்தானும் அவளை விலக்கி
நிறுத்தாமல் அவளுக்கு மறைமுகமாக பச்சைக்கொடி காட்டி இருக்க, அந்த குஷியில் அவன் உடனே அலுவலக அறைக்கு சென்று விட்டாள்.
அறையில் இருந்து சற்று நேரம் கழித்து திரும்பி வந்தவள்...
அறைக்குள் நடந்ததையெல்லாம் சொல்லி, சுரபியை வெறுப்பேற்றி
விஷயத்தை கறக்க திட்டம் போட்டிருந்தாள்.
ஆனால் சுரபியோ எதையும் வாய்விட்டு
சொல்லாமல் மனதுக்குள் போட்டு போட்டிக் கொண்டாள்.
ஸ்ருதி எப்படி எப்படியோ பிட்டை போட்டு பார்த்தாலும், சுரபி ஒரு வார்த்தை கூட அதிகம் பேசிவிடாமல் அமைதி காத்தாள்.
“சை... சரியான அழுத்தக்காரி தான்... ஏதாவது வாயை திறந்து
சொல்றாளானு பார்...” என்று உள்ளம் உலைக்கலமாக கொதித்தாலும், அந்த குட்டியை பற்றிய சந்தேகத்தை கேட்டு தெளிவு படுத்திக்
கொள்ள முயன்றாள்.
அதற்கான விடை கிடைத்தால், அதை வைத்து எப்படி காய் நகர்த்துவது என்று தெரிந்து விடும்
என்று திட்டமிட்டவள்...! அதற்காக சுரபியை கொஞ்சம் சீண்டி விட்டாள்..!
அவள் எதிர்பார்த்த மாதிரியே, சுரபி விகர்த்தனனை அதற்கு முன் பார்த்ததே இல்லை
என்று சிறு துருப்பு சீட்டை எடுத்து
போட்டு விட, அதற்கு பிறகு என்ன
வேண்டும்..!
ஆனாலும் அவளை இன்னும் கொஞ்சம் ஆராய, அடுத்த கேள்வியை கேட்டு வைக்க, அதற்குள் விழித்துக் கொண்டாள் சுரபி.
ஸ்ருதியிடம் எதுவும் சொல்லாமல் முகத்தை
திருப்பிக் கொண்டு தன் மகளை பார்த்தவாறு அமர்ந்து கொண்டாள்.
“சொல்லு சுரபி... நீ விகா அத்தனை முன்ன
பின்ன பார்த்ததில்லை என்றால் இந்த குழந்தை எப்படி? “ என்று மீண்டும் தன் சந்தேகத்தை கேட்க,
“அது என்னுடைய பர்சனல் மிஸ் ஸ்ருதி...! நீங்க
படிச்சசங்க..டீசன்டான ஹை க்ளாஸ் மக்கள்... நீங்க அடுத்தவங்களோட பர்சனல்ல மூக்கை நுழைக்க மாட்டிங்கனு நம்பறேன்...”
என்று தெளிவாக சொல்லி அவளை அழுத்தமாக
பார்த்தவள், அதற்கு மேல் அங்கு
இருக்க பிடிக்காமல், அவள் உட்கார்ந்திருந்த பெஞ்சில் இருந்து
எழுந்து தன் மகள் விளையாடும் இடத்திற்கு சென்று விட்டாள்.
அதைக் கண்டு ஒரு நொடி திகைத்து போனாள் ஸ்ருதி..!
“எவ்வளவு திமிர் இவளுக்கு..! நான் பேசிக் கொண்டிருக்கும்
போதே எழுந்து போகிறாள்..! இவளை சீக்கிரம் இந்த வீட்டை விட்டு… விகா அத்தான் வாழ்வில் இருந்து ஓட ஓட விரட்ட வேண்டும்...” என்று தனக்குள்ளே சூளுரைத்துக் கொண்டாள் ஸ்ருதி.
******
அன்று மதிய உணவை
முடித்த பிறகு, ஸ்ருதியை அழைத்துக்
கொண்டு வெளியில் சென்றுவிட்டான் விகர்த்தனன்..!
சுரபிக்குத்தான் மனம் கொதித்தது..!
“இத்தனை பேர் இருக்கும் பொழுதே தோட்டத்திலும், அலுவலக அறைக்குள்ளுமே உல்லாசமாக இருந்தவர்கள்...
இப்பொழுது வெளியில் எங்க, எப்படி ஆட்டம்
போடுவார்களோ?
இவள் ஒருத்தி மட்டும் தானா? இல்லை இன்னும் பல பேரா?
ஹ்ம்ம்ம் இப்படி உல்லாசமாக இருப்பவன்
எதற்காக என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்? “ என்று தனக்குத்தானே கேட்டவளுக்கு
விடை உடனே கிடைத்தது
அவன் தான் தன்னை அவனின் ஆத்மார்த்த
மனைவியாக ஏற்றுக் கொள்ளவில்லையே..!
அவனின் மகளுக்காகத் தானே, தன்னை அவன் மனைவியாக இங்கு அழைத்து வந்தான்...!
அதுவும் பெயருக்காக மனைவி மட்டுமே..!
மற்றபடி ஒரு மனைவியாய் எந்த உரிமையும்
எடுத்துக்க கூடாது என்று கன்டிஷன்
போட்டுத்தானே அழைத்து வந்தான்..!
ஒருவேளை அவன் மனைவியாய் அவனை கண்டிக்கக்
கூடாது என்பதற்காக அந்த கண்டிஷனை போட்டு இருக்கலாம்..!
அவனுடைய சுதந்திர வாழ்க்கை...உல்லாச
வாழ்க்கை பறிபோகக்கூடாது என்று தான் அப்படி சொல்லியிருக்கிறான்.
ஆனால் அதற்காக எப்படியோ போகட்டும் என்று அவளால் விட்டு விட முடியவில்லை..!
******
அன்று இரவு, வெகு நேரம் ஆகியும்
வீடு திரும்பி இருக்க வில்லை விகர்த்தனன்.
அவன் மகளோ அப்பா
எப்பொழுது வருவார் என்று ஆயிரம் முறை கேட்டு விட்டாள்.
எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமை அன்று
முழுவதுமே அவளுடன் தான் விளையாடிக் கொண்டிருப்பான் விகர்த்தனன்..!
தன் அலுவலக வேலை எதுவும் கண்டு கொள்ளாமல், அன்று ஒருநாள் முழுவதும் தனக்காக... தன் மகளுக்காக என்று ஒதுக்கி விடுவான்.
அப்படி இருந்தவன்... இன்று தன் உடன் இல்லாததால் நிகா குட்டி தந்தைக்காக ஏங்க
ஆரம்பித்து விட்டாள்..!
வீட்டு வாயிலேயே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள்...!
மகள் மட்டும் அல்லாமல் அந்த மகளை பெற்ற
அன்னையும் உடன் சேர்ந்து அவனின் வருகைக்காக வாயிலையே பார்த்து கொண்டிருந்தாள்..!
அவர்களின் தேடலை உணராத விகத்தனனோ, வெகு நேரமாகியும் வீடு
வந்திருக்கவில்லை..!
வழக்கமாக இரவு நேரம் கதை சொல்லும் தன்
தந்தை இல்லாமல் உறங்க மறுத்து முரண்டு பண்ணினாள் நிகா குட்டி..!
எப்படியோ சுரபி, அவளை படுக்கையில்
படுக்க வைத்து, தட்டிக் கொடுத்து... ஏதோ தெரிந்த கதையை சொல்லி உறங்க வைக்க முயல,
அவளோ
“மா...நீ சொல்லும் கதை நல்லாவே இல்லை... அப்பா சொல்ற மாதிரி இல்லை..! எனக்கு சிண்ட்ரெல்லா கதை சொல்லு...” என்று
அடம்பிடிக்க, சுரபியும் அவளை
முறைத்தபடி, தன் அலைபேசியை எடுத்து
அவசரமாக சில சின்றெல்லா கதையை தேடிபிடித்து சொல்ல,
“ஐய... இது இல்ல... நீ தப்பா சொல்ற...அப்பா சொல்ற மாதிரி நீ சொல்லல...! எனக்கு பிடிக்கல..! அப்பா வேண்டும்...” படுக்கையில் படுத்தவாறு காலை
உதைத்துக் கொண்டு அழுவ, சுரபிக்கோ என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்
கொண்டிருந்தாள்
தன் மகளை அதற்கு மேல் அதட்டி, மிரட்டவும் அவளுக்கு பயமாக இருந்தது..!
அவள் அழ ஆரம்பித்து விட்டால், அழுகையை நிறுத்துவது கஷ்டம்...!
டாக்டர் வேறு அவள், இன்னும் ஆறு மாசத்துக்கு அழக்கூடாது என்று சொல்லி
விட்டாரே..!
அதனால் முடிந்த அளவு தன் பொறுமையை இழுத்துப்
பிடித்து, எதை எதையோ பேசி உறங்க
வைத்து விட்டாள்..!
ஆனால் அவளுக்குத்தான் பொட்டுத் தூக்கம்
இல்லை..!
அடிக்கடி எழுந்து ஜன்னல் வழியாக வீட்டு நுழை
வாயிலிலேயே பார்த்துக் கொண்டிருந்தான்..!
கூடவே அடி மனதில் ஏதோ ஒரு பயம் சுரக்க
ஆரம்பித்து இருந்தது..!
இவ்வளவு நேரம் ஆகியும் வரவில்லையே..! அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று அவள் உள்ளே பதைபதைத்தது.
பேசாமல் அவனை அழைத்து விடலாமா? என்று கூட யோசித்தவள்... அலைபேசியை கையில் எடுத்து, அவனுடைய பெயரை தேர்வு செய்து, அழுத்துவதற்கு தயாராக இருக்க, ஆனால் ஏதோ ஒன்று அவளை தடுத்தது.
பட்டனை அழுத்தாமல் அப்படியே விரலை வைத்தபடி, அந்த அலைபேசியையே வெறித்துக்கொண்டிருந்தாள். ..!
ஒவ்வொரு நிமிடங்களும் ஒரு வருடமாக தொலைந்து
கொண்டிருந்தது
ஒவ்வொரு நொடி கடக்கும் பொழுதும், அவன் வராமல் போக, அவள் இதயம் முன்பு போலவே
பதைபதைத்தது.
அதற்கு மேல் அவனை காணாமல்...அவனுக்கு
அழைக்காமல் இருக்க முடியாது என்று தோன்றிவிட, தன் பிடிவாதத்தை எல்லாம் தூக்கி போட்டு விட்டு, அலைபேசியில் இருந்த பட்டனை அழுத்த, அடுத்த நொடி அதிர்ந்து
போனாள்.
அது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.
அவ்வளவுதான்..! அவள் மனம் வேகமாக அடித்துக் கொண்டது
அதே நேரம் இரவு மணி பன்னிரெண்டை தொட்டிருக்க, அவன் இன்னுமே வராமல் போக, அவள் அவ்வப்பொழுது படிக்கும் சாலை விபத்துக்கள்
பற்றிய செய்திகள் எல்லாம் நினைவு வந்தது..!
அதோடு ஷ்யாமின் முகம்..! அவன் முகம் கண் முன்னே வர, அவ்வளவுதான்..!
இன்னுமாய் அவளை கிலி பிடித்துக் கொண்டது..!
“ஷ்யாம்...!
அவனைத்தான் இழந்துவிட்டேன்...! என்னால் தான் ஷ்யாம் இறந்தான். ஒருவேளை என்னால் தான் இவனும் வெளியில் சென்றானோ? நேற்று அவன் கேட்டதை தரவில்லை என்றுதான் இன்று வெளியில் தன்
தேவையை தீர்த்துக்க சென்று விட்டானோ?
அப்படி சென்றவன் திரும்பி வரும்பொழுது
ஏதாவது ஆகிவிட்டதோ? “ என்று தன் கற்பனை
குதிரையை தட்டிவிட்டு ஏதேதோ யோசித்து ரொம்பவுமே பயந்து போனாள் சுரபி..
“இல்லை....ஷ்யாம் போல இவனையும் நான் இழந்து
விடக்கூடாது..!
விகர்த்தனன் எனக்கு வேண்டும்... இல்லை... இல்லை... நிகாவுக்கு வேண்டும்..!... நிகாவுக்கு மட்டுமாகத்தான்
வேண்டும்..!
கடவுளே எப்படியாவது நிகா அப்பாவை எந்த
ஆபத்தும் இல்லாமல் என்னிடம் சேர்த்துவிடு..!
இனிமேல் பத்திரமாக அவனை பார்த்துக் கொள்வேன்..என்
அம்முவுக்காக.... என் நிகாவுக்காக அவனை
பத்திரமாக பார்த்துக்குவேன்... அவனை திருப்பி கொடுத்து விடு...” என்று மனதிற்குள் அரற்றிக் கொண்டிருக்க,
அதே நேரம் படுக்கை அறையின் கதவை திறந்து கொண்டே உள்ளே வந்தான் விகர்த்தனன்.
யாரோ உள்ளே வரும் அரவம் கேட்டு, விலுக்கென்று
நிமிர்ந்து அறை வாயிலை பார்த்தவள்... அடுத்த நொடி அனைத்தும் மறந்து தனா..... என்று அழைத்தவாறு
பாய்ந்து சென்று அவனை இறுக்கி
கட்டியணைத்துக் கொண்டாள் சுரபி.
விகர்த்தனனோ அவளின் செய்கையில் ஒரு நொடி
திகைத்துப் போனான்..!
இதை எதிர்பார்த்திருக்கவில்லை அவன்...!
இந்நேரம் இருவரும் உறங்கி இருப்பார்கள் என்று எண்ணி வந்திருக்க, அவளோ உறங்காமல்
காத்திருக்கவும்...
அதோடு தன்னைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொள்ளவும் ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.!
தன்னை இறுக்கி அணைத்து இருந்தவளின் உடல்
லேசாக நடுங்கி கொண்டிருந்தது அவன் மேனி வழியாக அவனுக்கு உரைத்தது..!
அனிச்சையாய் அவன் கரம் உயர்ந்து அவளின் முதுகை
ஆதுரமாக வருடியவன்,
“என்னாச்சு சுரபி? ஏன் இவ்வளவு டென்சன்? “ என்ற பொறுமையாக கேட்க
“உ...உ.... உங்களுக்கு ஒன்னும் இல்லையே...
உங்க போன் ஸ்விட்ச் ஆஃப் ஆக இருந்ததே...” என்று தட்டுத்தடுமாறி கேட்க, அப்பொழுது தான் அவனுக்கு விஷயம் புரிந்தது.
“என்னை இவ்வளவு நேரம் காணாமல் அவள் தவித்திருக்கிறாள்..! எனக்கு என்னவோ ஆகிவிட்டது என்று பதறி இருக்கிறாள்..!
அதனால்தான் என்னை பார்த்ததும் இப்படி கட்டியணைத்துக்
கொண்டாளோ? “ என்று
எண்ணும்பொழுதே அவன் உள்ளே மழைச்சாரல்.
உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவன்... மனதிற்குள்ளேயே விசில்
அடித்தபடி, ஒரு நொடி ஆடி முடித்தவன், தன் மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு
“ஹே... எனக்கு ஒன்னும் இல்லமா...! ஐம் பெர்பெக்ட்லி ஆல்ரைட்...போன் சார்ஜ் இல்லாமல் ஆப்
ஆயிடுச்சு...! அவ்வளவுதான்..!
நீ என் மேல இவ்வளவு அக்கறையாக இருப்பதற்கு
ரொம்ப தேங்க்ஸ்...” என்று குனிந்து அவள்
காதோரம் கிசுகிசுக்க, அப்பொழுதுதான் அவனிடம்
இருந்து வந்த மதுவின் நெடி அவளின் நாசியை தீண்டியது.
அடுத்த கணம் இறுக்கி அணைத்து இருந்தவள்...தன்
கையை வெடுக்கென்று விலக்கிக் கொண்டு, அவனிடமிருந்து இரண்டடி
தள்ளி நின்று கொண்டவள், அவனை முறைத்து பார்த்து, ...
“குடிச்சிருக்கீங்களா? “என்றாள் கோபமாக
“குடிக்கிறதா ? யூ மீன் ட்ரிங்ஸ்? அது கொஞ்சமா எடுத்துக்கிட்டேன். பழைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் மீட்
பண்ணினோம்... அவங்களுக்கு முன்னால குடிக்காமல்
இருக்க முடியாது.
அதான் லைட்டா ட்ரிங்ஸ்
எடுத்துக்கிட்டேன்...! நிகா முன்னாடி அப்படியே வர தயக்கம்..!
என் பொண்ணு என்னை மாதிரி ஷார்ப் ஆச்சே..!
அவள் விடாமல் கேள்வி கேட்டு வைப்பாள்..” என்று அந்த நிலையிலும் தன் மகளைப்பற்றி
பெருமிதம் கொண்டவன்...
“அதுதான் அவள் தூங்கின பிறகு வரலாம் என்று வெயிட்
பண்ணேன்...” என்று பொறுமையாக விளக்கம் சொன்னான்..!
“அப்போ பிரண்ட்ஸ் குடிக்க சொன்னா, குடிச்சிருக்கீங்க... அவங்க எது செய்ய
சொன்னாலும் அப்படியே செஞ்சிருவிங்களா? “ என்று இடுப்பில் கை வைத்து
முறைத்த படி அவனை கோபமாக பார்த்து வைக்க,
அவளின் அந்த அதிகார தோரணையும், அமர்த்தலான குரலும் கண்டு அவனின் புருவங்கள் ஒரு நொடி
ஆச்சர்யத்தில் ஏறி இறங்கின.
அந்த இரவு வேளையிலும் கலைந்து முன்னால்
வந்து விழுந்திருந்த முடிக்கற்றைகளும், கோபத்தில் விடைத்து சிவந்திருந்த நுனிமூக்கும், துடிக்கும் அவளின் இதழ்கள் என அவளின் ஒவ்வொரு அங்கமும் அவனை ஏகத்துக்கும் வசீகரித்தன.
அவளை கொஞ்சம் சீண்டிப் பார்க்க எண்ணியவன்,
“அப்கோர்ஸ்... இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம். நான் என் இஷ்டப்படிதான் நடந்து கொள்வேன்..! இதில்
தலையிட யாருக்கும் உரிமை இல்லை...” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன், மெத்தனமாக சொல்ல,
“ஏன் உரிமை இல்லை... இதோ நீங்க என் கழுத்தில் கட்டிய தாலி இருக்கு. சட்டப்படியும் ரெஜிஸ்டர் ஆகி இருக்கு. நான் தான்
உங்களுடைய சட்டப்படி மனைவி என்று
அப்படி இருக்க, உங்களை தட்டிக் கேட்க உரிமை இருக்கிறது...நீங்க
எப்படியோ போய் தொலையட்டும் என்று என்னால் விட்டு விட முடியாது...” என்று மிரட்டலாக அவனை விரல் நீட்டி எச்சரிக்க,
“அப்போ என்னை மிரட்டுவதற்கும், அதட்டுவதற்கும், என்னை கட்டுபடுத்த
மட்டும்தான் பொண்டாட்டியா? அதற்கான இன்னொரு கடமை
உனக்கு ஞாபகம் இருக்கா? “ என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைக்க,
“வேற என்ன வேண்டும்? இந்த உடலா? நான் நேற்று உங்களை
தள்ளி வச்சதாலதான் அந்த ஸ்ருதி கூட காலைல
அப்படி நடந்துகிட்டிங்க இல்ல? “ என்று கண்களில்
கோபம் மின்ன கேட்க,
“எப்படி நடந்து கிட்டேன்? “ என்று அவனும் கண்கள்
இடுங்க கேட்க,
“அதை வேற என் வாயால சொல்லனுமா? “ என்று கழுத்தை நொடித்தாள் சுரபி.
“எல்லாரும் வாயால சொல்வதாகத் தான் எனக்கு ஞாபகம். நான் அப்படித்தான். அம்மையார் எப்படியோ?” என்று குறும்பாக
சிரிக்க,
“ஐய... ஜோக்கு...ஈஈஈஈஈஈஈஈஈ இளிச்சிட்டேன் போதுமா? “ என்று தன் வாயை
இருகோட்டுக்கும் இழுத்து வைத்து முறைத்தபடி சிலிர்த்துக் கொண்டு நிக்க, அவனுக்கோ இன்னும் சுவாரஸ்யம் கூடியது.
அதோடு தன் முன்னே சண்டைக்கோழியாய் சிலிர்த்துக்கொண்டு
நிற்பவளின் சிற்றிடையை பற்றி இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு,
தன் முன்னே இருக்கோட்டுக்கும் இழுத்து வைத்திருக்கும் அவளின்
இதழை சுண்டி விட்டு, அதற்கு தன் இதழால்
தண்டனை கொடுக்க அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் தவித்தது.
ஆனாலும் முயன்று தன்னை கட்டுபடுத்தியவன்,
“வாவ்....இந்த போசில் செம க்யூட் ஆ இருக்க
பொண்டாட்டி...அப்படியே ராட்சசி மாதிரி... அழகான ராட்சசி.... என்னை இம்சிக்கும் அழகான
ராட்சசி...” என்று கடைசி வரியை மட்டும் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்..!
அவனின் புகழாரத்தில் ஒரு நொடி சொக்கினாலும், அடுத்த நொடி மீண்டும் சிலிர்த்துக் கொண்டவள்,
“என்னை புகழ்ந்தது போதும்... நீங்க பேச்சை மாத்தாதிங்க...”
என்று மீண்டும் முறைக்க,
“என்ன பேச்சு? எதை மாத்தினேன்?” என்று ஒன்றும் தெரியாதவனாய் விழி விரிக்க,
“ஆஹான்... இதான் ஒன்னும் தெரியாத பாப்பா.. போட்டாளாம் தாப்பா...
னு சொல்வாங்க..
“பண்றதையும் பண்ணிட்டு, இப்ப எப்படி ஒன்னும் தெரியாதவர் மாதிரி முழிக்கிறதை பார்...”
என்று பொரிய,
“அப்படி என்னடி பண்ணினேன்... கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லித் தொலையேன்...”
என்று சற்று சலிப்புடன் முனக,
“நீங்க பண்ணினதை, அடிச்ச கூத்தைத்தான்
காலையிலேயே பார்த்தேனே...” என்று
அருவருப்புடன் முகத்தை சுளிக்க,
“என்ன பார்த்த? “ என்றான் மீண்டும் கண்கள் இடுங்க...
“அதான்...நீங்க, உங்க கூட அட்டை மாதிரி ஒட்டி உரசிக்கிட்டு இருந்த அந்த மேனா
மினுக்கியை...தோட்டம் என்று கூட பார்க்காமல் வெட்ட வெளியில் கட்டி புடிச்சிகிட்டு
நின்னிங்களே..!
அது பத்தாதென்று அலுவலக அறைக்குள்ளேயும், அவளை இழுத்துகிட்டு போய் தாள்ப்பாள் போட்டுகிட்டிங்களே...! அந்த
கூத்தைத்தான் சொல்றேன்...”
என்று முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, படபடவென்று பொரிந்தவள் , வேக வேக மூச்சுக்களை எடுத்துவிட்டு தன்னை சமனபடுத்த முயன்றாள்.
அவளையும் அவள் சொன்ன விஷயத்தையும் கேட்டு, அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
அவள் சொன்னதில் இருந்து
ஸ்ருதி ஏதோ இவளிடம் நாடகமாடி இருக்கிறாள் என்று புரிய, மீண்டும் கொஞ்சம் அவளை
ஆழம் பார்க்க ஆரம்பித்தான்.
“அப்படியா? சரி சந்தோஷம்...! என்னைப் பற்றி.. என் கேரக்டர் பற்றி நான் சொல்லத் தேவையில்லை.
அதுதான் உனக்கு தெரிஞ்சு போச்சே...” என்று அலட்சியமாக தன் தோளை குலுக்கியவன்....
வெகு அலட்சியமாய் தன் உதட்டைப் பிதுக்க, சுரபிக்குத்தான் ஏதோ ஒன்று உள்ளுக்குள் உடைந்து நொறுங்கியது
அவள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு , அப்படியெல்லாம் இல்லை என்று மறுத்து விடுவான்...! அந்த ஸ்ருதி ஏதோ கதை சொல்லியிருக்கிறாள். அதை எல்லாம் நம்பாதே என்று சமாதானம் செய்வான் என்று எதிர்பார்த்தவளுக்கு பெருத்த ஏமாற்றம்.
அவள் சொல்லியதை எல்லாம் ஏற்றுக்கொண்டவன்..கூடவே அவன் அப்படித்தான் என்று
ஒத்துக் கொண்டது ஏனோ பெண்ணவள் மனதை தைத்தது.
அவன் மீது அவள்
வைத்திருந்த நம்பிக்கை நொறுங்கி போவதைப் போல இருந்தது.
கண்களில் வலியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“ஏன் ஸ்ருதி மட்டும்தானா? இல்லை இன்னும் எத்தனை
பேர்?..” என்று
வலியோடு கேட்க,
“அதெல்லாம் கவுன்ட்லெஸ்...! நான் எப்பவும் ஒருத்தியோடு திருப்தி அடைவதில்லை...”
என்று இயல்பாக தோளை குலுக்க, அதைக் கேட்டு இன்னும்
துடித்துப் போனாள் சுரபி.
“இல்லை.... இவனை
இப்படியே விட்டுவிடக்கூடாது.. அம்முவுக்கு ஒரு நல்ல தந்தையாய் இவன் காலம் முழுக்க
வேண்டும்...” என்று அந்த நொடி முடிவு செய்தவள்,
“இனி அப்படி எல்லாம் நீங்க வெளியில் போகக்கூடாது....யார் கூடயும் சேர்ந்து
கூத்தடிக்க கூடாது...” என்றாள் அமர்த்தலான
கட்டளையிடும் குரலில்
“போகாமல்...? என்னுடைய ஸ்ட்ரெஸ் போக என்ன வழி? “ என்று அவளையே குறுகுறுவென்று
பார்த்து வைக்க,
“அதுக்குத்தான் வெளில சுத்தறிங்களா? உங்களுக்கு மனஅழுத்தம் போக… ஸ்ட்ரெஸ் பர்ஸ்ட்டரா ஒரு பொம்பளை உடல் தானே வேண்டும். அப்படி என்றால் என்னையவே எடுத்துக்கோங்க. இந்த உடம்பையே
எடுத்துக்குங்க...”
என்றவள், அவன் எதிர்பாராத வண்ணம், அவள் மேலே போட்டு இருந்த புடவை முந்தானையை இழுத்து கீழ போட்டவள் , மாராப்பு இல்லாமல் அவனுக்கு காட்சி அளிக்க, அவளின் அந்த திடீர் செய்கையில்
ஒரு நொடி திகைத்துப் போனான் விகர்த்தனன்.
“இதுதான் டிபிக்கல் இந்திய மனைவியின் அவதாரமா?... கட்டின கணவன் தன்னிடம் மட்டும்தான் எதையும் தேட வேண்டுமென்ற
அக்கறையா?
அவன் நல்லதுக்காக , தனக்கு
பிடிக்கவில்லை என்றாலும் பல்லை கடித்துக்கொண்டு, இரவு உடல் நோக வலியை அனுபவித்தவாறு, தன் கணவன் கேட்பதை
கொடுத்து அவன் தேடலை தீர்த்து வைப்பாள் மனைவி...என்று கேள்விபட்டிருக்கிறான்..!
ஆனால் ஸ்வாதி அப்படி இல்லையே..! அவள் கண் முன்னாலேயே மற்ற பெண்களோடு உல்லாசமாக இருந்த
பொழுது கூட, எதையும் கண்டு கொள்ளவில்லையே
எத்தனையோ இரவுகள் குடித்துவிட்டு வந்திருக்கிறான். ஒருமுறைகூட ஏன் இப்படி செய்யறிங்க என்று அவனை
தட்டி கேட்டதில்லை ஸ்வாதி. இவளைப்போல அவள் காத்துக்கொண்டிருக்கவும் இல்லை..!
பல நாட்கள் அவன் வரும்முன்னே உறங்கிவிடுவாள்..!
அவன் சாப்பிட்டானா? இல்லையா என்று கூட
கண்டு கொண்டதில்லை..!
“அவளும் என் மனைவிதானே..! அவள் ஏன் என்னை கண்டிக்கவில்லை...? அவள் ஏன் எனக்காக காத்திருக்கவில்லை..! எனக்கு ஏதோ ஒன்று என்று
பதறி துடித்ததில்லை...!
அப்படி என்றால் என் மீது அவளுக்கு பெரிதாக அக்கறையில்லை. என் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்று கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம்..!
ஆனால் இவள்......?
என் மீது உண்மையான அக்கறை கொண்டிருக்கிறாள்...! பாசம் வைத்திருக்கிறாள்..! நான் கொஞ்சம் நேரம்
தாண்டி வந்தாலும் என்னை காணாமல் தவித்து போகிறாள்..!
நான் கெட்ட வழிக்கு சென்றுவிடக்கூடாது என்று உண்மையாக அக்கறை
கொண்டு என்னை கண்டிக்கிறாள்.
அவ்வளவு தானா?
இல்லை... அதையும் தாண்டி இவளிடம் ஏதோ ஒன்று இருக்கிறதே? அது என்ன? “ என்று ஆராய எண்ணினாலும், இப்பொழுது அதற்கு அவகாசமில்லாமல், அவளோ இன்னும் முன்னேறினாள்.
“கமான் மிஸ்டர் விகர்த்தனன்...! உங்களுக்கு இந்த உடல்தானே வேண்டும்...எடுத்துக்குங்க...”
என்று அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டில்
இருந்த கொக்கியை கழற்ற முயல,
அதே நேரம் அவன் நின்றிருந்த இடத்தில் இருந்து ஓரடி முன்னால் எடுத்து
வைத்து அவளை அடைந்தவன், ஜாக்கெட்டின் மீது
இருந்த அவள் கையை பற்றிக் கொண்டு, தலையை இருபக்கமும்
வேண்டாம் என்று மறுப்பாக ஆட்டினான்.
அதோடு கீழே கிடந்த புடவை முந்தானையை எடுத்து, அவள் மேல போட்டு விட்டவன்...
அவளின் கண்களுக்குள் ஊடுருவி பார்த்தவன்,
“ஸோ..... என்னை இந்த
அளவுக்கு கேவலமா, கீழ்த்தரமா எண்ணி
இருக்க..? ஏன் டி... என்னை
பார்த்தா, அப்படியா இருக்கு?
நீ என் கூட இவ்வளவு நாளா பழகி இருக்கியே..! நீ என் வைப்பா
இல்லாத பொழுது ஒரு முறையாவது என் பார்வை தப்பா உன் மேல பட்டிருக்குமா?
இப்ப என் பார்வை உன் மேல அலைபாயுதுனா அதுக்கு என்ன காரணம் னு
யோசிக்க மாட்டியா?
லுக் சுரபி... ஒரு
உண்மையை சொல்றேன்...கேட்டுக்க... எப்பொழுது உன்னை ஐ மீன் என் பொண்ணை பார்த்தேனோ, அன்றிலிருந்து என் மனமும், உடலும் வேற யாரையும் தேடியதில்லை...” என்றான் தன் கண்களை அழுந்த மூடி தன் வேதனையை
உள்ளடக்கியவனாய்..!
அதைக் கேட்டதும் விலுக்கென்று நிமிர்ந்தவள், அவனை தலை சரித்து நக்கலாக பார்த்தவள்,
“அப்படி என்றால் காலையில் தோட்டத்தில் ரெண்டு பேரும் கட்டிபிடிச்சு கிட்டு
நெருக்கமா இருந்திங்களே...அப்புறம் ஆபிஸ் ரூம்க்குள்ள போய்...”
என்று சொல்லும் பொழுதே ஸ்ருதி வெட்கத்தோடு உள்ளே நடந்ததை
சொன்னது நினைவு வர, அவள் முகம்
அருவருப்பில் சுருங்கியது.
அவள் முடிக்கும் முன்னே, வேகமாக அவள் பக்கம் திரும்பியவன்,
“இடியட்...ஷட் அப் சுரபி...இன்னொருதரம் ஸ்ருதியை என்னோடு
சேர்த்து பேசாதே... அவள் எனக்கு தங்கை மாதிரி. அவள் என்னிடம் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் அதிக
உரிமை எடுத்துக் கொள்வாள்
விளையாட்டு பிள்ளை என்று நானும் விட்டுவிட்டேன்....” என்று பெருமூச்சு விட,
“அது எப்படி விளையாட்டாகும்? நான் என் கண்ணால பார்த்தேனே...” என்று இன்னும் நம்பாதவளாக
சொல்ல,
“என்னத்த டி பார்த்த? இதுதான் நடந்தது..”
என்று அவளை தன் அருகில் இழுத்தவன், அவள் மோவாயை பற்றி
நிமிர்த்தி அவள் கண்களுக்குள் ஊதுவது போல பாவனை செய்ய, அப்பொழுதுதான் சுரபிக்கு அதுவரை ப்யூஸ் ஆகி இருந்த பல்ப் எரிய
ஆரம்பித்தது.
“ஓ...அப்ப அவ கண்ணில் விழுந்த தூசியைத்தான் எடுத்து
விட்டிருக்கிறான்..! அவன் எடுக்கும் பொழுது, அந்த ஸ்ருதி அவன் முதுகோடு சேர்த்து கட்டி அணைப்பதை போல கையை
வைத்து இருக்கிறாள்.
அதை சுரபி மாடியில் இருந்து பார்க்கவும், இருவரும் கட்டி அணைத்து இதழ் தழுவி நிற்பது போல தோன்றி
இருக்கிறது என்று தெளிவாக புரிந்தது.
அதை புரிந்ததும் அவள் முகம் கன்றிப்போக, அவள் மனஓட்டத்தை படித்தவனாய்,
“ஹ்ம்ம்ம் நான்
மார்னிங் எக்ஸைஸ் பண்றப்பதான் ஸ்ருதி வந்தா...தோட்டத்தில நடந்து கிட்டே பேசலாம்
என்று கூப்பிட்டா.. நானும் அவ கூட போனேன்.
திடீர்னு ஆ என்று கத்தினாள்...! என்னன்னு கேட்டா கண்ணுல தூசி விழுந்திடுச்சுனா...
அதனால் தான் அவள் கண்ணுக்குள் ஊதி விட்டேன்.
அதைத்தான் நீ பார்த்திருப்பாய்...”
என்று அவளை முறைத்தபடி சொல்ல, அப்பொழுதுதான்
சுரபிக்கு இன்னும் கொஞ்சம் புரிந்தது.
ஸ்ருதி வேண்டுமென்றே தான் தன் கணவனை தோட்டத்திற்கு அழைத்துச்
சென்றிருக்கிறாள்.
அதோடு கண்ணில் விழாத தூசியை விழுந்ததாக சொல்லி, தன் கணவனுடன்
நெருக்கமாக இருப்பதை போல காட்டிக் கொண்டிருக்கிறாள்.
“யாருக்காம் அந்தக் காட்சி? “ என்று தனக்குள்ளே கேட்டுக்கொள்ள,
“வேற யாருக்கு...? உனக்குத்தான்... அதோடு இந்த வீட்டு வேலைக்காரர்களுக்கும் தான். அப்பதான் பிற்காலத்தில் இவள் போடும் ட்ராமாவுக்கு
அவர்களும் சாட்சியாக இருப்பார்களே..!
அது தெரியாத மக்கா
இருக்கியே நீ..! “ என்று அவள் தலையில்
நங்கென்று ஒரு கொட்டு வைத்தது அவள் மனஸ்.
“ஹ்ம்ம்ம் ஏன் டி..! பூங்கோதை கிட்ட மட்டும் தெளிவா சொன்னியே..! என்
புருஷன் அப்படி எல்லாம் நடந்துக்க மாட்டார் என்று..! அந்த அறிவு, தெளிவு எல்லாம் வெறும் பேச்சுக்குத்தான் மட்டுமா?
“நான் கூட நீ பூங்கோதைகிட்ட அடிச்சு சொல்றதை வச்சு , என் பொண்டாட்டி எவ்வளவு அறிவானவ? எதையும் நாலு கோணத்தில் சிந்தித்து பார்க்கிறாள்..” என்று
சிலாகித்துக் கொண்டேன்.
ஆனால் இந்த மண்டைக்குள்ள, அப்படி ஒன்றும் பெரிதாக
மசாலா இல்லை என்று இப்பொழுது காட்டிவிட்டாய்...” என்று தன் கோபம் மறந்து நக்கலாக சிரிக்க, அவனை முறைத்தவள்,
“பின்ன ஏன் ஆபிஸ் ரூம்ல...கதவை சாத்திகிட்டு....நீங்க அவளை....
ஏன் அந்த ஸ்ருதி அப்படி சொன்னா? “ என்று பாதி
பாதியாக பிச்சு பிச்சு சொல்ல,
“எப்படி சொன்னா? “ என்றான் கண்கள்
இடுங்க.
ஸ்ருதி சொன்னதை எல்லாம் நினைத்து பார்க்க, அவள் முகம் கன்றிப்போனது.
தன் கீழ் அதரத்தை அழுந்த கடித்துக்கொண்டு நிற்க, அவளின் நிலையில் இருந்தே, ஸ்ருதி ஏதோ
வில்லங்கமாக சொல்லி வைத்திருக்கிறாள் என்று தெளிவாக புரிந்தது.
“ஹ்ம்ம்ம் அவள் அப்படி சொன்னால் உனக்கு அறிவு எங்க போச்சு....? கண்ணால் காண்பதும் பொய்.
காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்.. என்று உனக்கு தெரியாதா?
ஸ்ருதியோடு உல்லாசமாக இருக்க வேண்டுமென்றால் இப்படியா எல்லாரும்
பார்க்கும் படி தோட்டத்தில் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றிருப்பேன்?
அதே போல வீட்டில் அத்தனை பேரும் இருக்க, அவர்கள் முன்னாலயா அலுவலக அறைக்குள் சென்று அவளோடு நான் குடும்பம் நடத்த முடியும்?
அது என்னை பற்றி கீழ்த்தரமாக நானே வெளிச்சம் போட்டு காட்டுவது
போல இருக்காதா?
கொஞ்சம் கூட இதை எல்லாம் யோசிக்கவே மாட்டியா? “ என்று செல்லமாக அவளை முறைத்தான்.
கூடவே முன்பு அவள் கன்னத்தை பிடித்து இருந்தவன், கையை எடுக்காமலயே இருந்தவன் இப்பொழுது செல்லமாக அவளின் குண்டு
கன்னத்தை கிள்ளினான்..!
தன் கணவன் சொன்ன விளக்கத்தை கேட்டதும் தான், போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது
பெண்ணவளுக்கு.
என் புருஷன் அப்படி பட்டவன் அல்ல... கொஞ்சம் நல்லவன்தான் என்று
சிலாகித்துக் கொண்டாள்.
ஆனாலும் இன்று மதியம் அவளுடன் சென்றவன்... இப்பொழுதுதானே
திரும்பி வந்திருக்கிறான்..!
“அப்படி என்றால் அவள் உடன்தானே சுற்றி இருக்க வேண்டும். அவளே
அவனை ஒட்டி உரசி பழகுகிறாள் என்று தெரிந்தும், அவளிடம் ஏன் நெருக்கமாக பழக வேண்டும்.
தீக்குள் விரலை விட்டுவிட்டு அப்புறம் சுட்டுடுச்சே என்று
அவதிப் படுவானேன்...” தனக்குள்ளே... அவள் உள்ளே மட்டும்தான் இத்தனை வாதங்களும்.
வாய் திறந்து ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை.. சொல்ல
முடியவில்லை...
ஆனால் அவள் சொல்லாமலயே அவள் மனதை அறிந்தவனாய்,
“ஸ்ருதியை மதியமே அவள் வீட்டில் விட்டுவிட்டேன். நான்
மட்டும்தான் என் ப்ரெண்ட்ஸ் ஐ மீட் பண்ண சென்றது..!
லுக் சுரபி... இதுதான் பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட்... இனிமேல் நான்
இதுமாதிரி எல்லாம் எதுக்கும் விளக்கம் கொடுத்து கொண்டிருக்க மாட்டேன். நீ என்னை
முழுதாக நம்பனும்.
நம்ம திருமணத்திற்கு முன்பு நான் எப்படி வேணா இருந்திருக்கலாம்.
ஆனால் நீ வந்த பிறகு...ஐ மீன் நிகா என் வாழ்வில வந்த பிறகு... நீ மட்டும் தான்...ஐ மீன் நிகா மட்டும்தான். ட்ரஸ்ட் மீ...
முன்பு என் வாழ்வில் நிகா மட்டும் போதும் என்று இருந்தேன்...!
ஆனால் இப்பொழுதெல்லாம் என் மனமும் , உடலும் நிகாவோடு சேர்த்து உன்னையும் தான் தேடுகிறது.
ஆனால் அதுக்காக உனக்கு விருப்பம் இல்லாமல் நான் உன்னை எடுத்துக்க மாட்டேன்.
எப்பொழுது நீ உன்னை தர மனதார ஒப்புக் கொள்கிறாயா, அப்பொழுது எடுத்துக்
கொள்கிறேன்.
இப்பொழுது நீ படுத்து தூங்கு.. நான் குளித்துவிட்டு வருகிறேன்...” என்றவன் , அவள் கன்னத்தை லேசாக தட்டிவிட்டு, குளியலறைக்குள்
புகுந்து கொண்டான்..!
அவன் பேசிய பேச்சை கேட்டு, சந்தோஷத்தின் உச்சத்தில் பேச்சிலிழந்து நின்றிருந்தாள் பெண்ணவள்..!
0 comments:
Post a Comment