மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Monday, October 17, 2022

கனவே கை சேர வா-6

 


அத்தியாயம்–6

 

கிண்டியில் நூறு ஏக்கர் நிலப்பரப்பில் கம்பீரமாக நின்றிருந்piதது அண்ணா பல்கலைக்கழகம்.

1978 ல், கிண்டி பொறியியல் கல்லூரிஅழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரிமெட்ராஸ் தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து அண்ணா பல்கலைக்கழகம் என்று உருவாக்கப் பட்டது.

அதன் தரமான கல்வியால், இந்தியாவின் தலை சிறந்து முன்னனி தொழில்நுட்ப பல்கலைகழகங்களில் ஒன்றாக விளங்குகிறது.

பிரதான சாலையில் இருந்து பல்கலைகழகத்தின் உள்ளே செல்லும் நீண்ட அகன்ற சாலையின் இரண்டு பக்கமும் விதவிதமான அழகு செடிகள் பூத்துக்குலுங்க, சின்னதும் பெரியதுமாய் பல கார்கள் சர் சர் என்று உள்ளே செல்வதும், வெளியேருவதுமாய்  பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது அந்த பல்கலைக்கழகம்.

அந்த பல்கலைகழக வளாகத்தின் முதலாமாண்டு மாணவர்களுக்கான  பிரிவில்  தயக்கத்துடன்   நுழைந்தாள் பொதிகை.

அதுவரை சென்னை மாதிரி பெரிய பட்டணத்திற்கு வந்திராதவள்...அந்த பல்கலைகழகத்தை ப்ஓன்று பிரம்மாண்ட கட்டிடங்களை பார்த்திராதவள்...

கண்களில் கொஞ்சம் மிரட்சி, கொஞ்சம் பயம்... கொஞ்சம் ஆர்வம்...என்று எல்லாமும் கலந்து கொட்டி கிடக்க, மெல்ல  அடி எடுத்து வைத்து அந்த வளாகத்தின் உள்ளே வந்தாள் பொதிகை.

ஆளை அடிக்கும் நிறமில்லாமல்  மனதை வருடும் லாவண்டர் வண்ண சுடிதார் அணிந்திருந்தாள்.

இன்றைய நவீன யுவதிகள் போன்று,  பேருக்கு ஷால் என்று போட்டு மறைக்க வேண்டியதை மறைக்காமல் ஸ்டைலாக உலாவருவதைப் போல அல்லாமல், இரண்டும் பக்கமும் ஷாலை போட்டு அது நழுவாமிலிருக்க பின்னையும் குத்தியிருந்தாள்.

சந்தனத்தை குழைத்து வார்த்ததை பொன்ற பொன்னிற மேனியில்லை. மாறாக அடர்ந்த கருப்பும் அல்லாமல், சிவப்பும் அல்லாமல்  இடைப்பட்ட மாநிறம்...

மாதம் ஒருமுறை அழகு நிலையத்திற்கு  சென்று திருத்தவேண்டிய அவசியம் இல்லாமல், இயற்கியிலயே நீண்டு அடர்ந்து வில்லாய் வளைந்திருந்த புருவங்கள்.

ஓரிடத்தில் நிக்காமல் அவ்வபொழுது தாவி கொண்டிருக்கும் கருவிழிகள்...அதற்கு குடை பிடிக்கும் அழகான இமைகள்... எடுப்பான நாசி...குண்டு கன்னங்கள்...லிப்ஸ்டிக் போடாமலயே கொஞ்சமாய் சிவந்திருந்த திரண்ட ஆரஞ்சு சுளை இதழ்கள்.

மொத்தத்தில் முதலில் பார்த்ததும் கவரப்படாவிட்டாலும் அடுத்தமுறை பார்க்கும்பொழுது கண்டிப்பாக பிடித்துவிடும் அழகு முகம் கொண்டவள்.

*****

ப்பொழுது, எதிலும்  பஞ்சுவல் ஆக இருப்பவள்...நேரத்தை சரியாக கடைபிடிப்பவள்...சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிடும் பழக்கம் உடையவள்.

இன்று கல்லூரிக்கு முதல் நாள் என்பதால்,  முன்னதாகவே வந்துவிட்டாள் பொதிகை.

மஞ்சப்பையை தன் மார்போடு அணைத்தவாறு, அவ்வளவு பெரிய வளாகத்தில் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றாள். 

அப்பொழுதுதான் அங்கு இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்த ஒரு கேங்  அவளை பார்த்துவிட்டது…

அவளின் முழியில் இருந்தே அவள் முதலாமாண்டு மாணவி என்று கண்டு கொண்டனர். அவளையே குறுகுறுவென்று பார்க்க, அதைக் கண்டு முதலில் மிரண்டாள்.  

அடுத்த நொடி அவளுக்கு தான் படித்த, சிறுவயதில் இருந்தே மனதில் உருப்போட்டு வரும்  பாரதியாரின் பாடல் நினைவு வந்தது.  

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே..!

 

என்று தனக்குள்ளே சொல்லிக்கொள்ள, அதே நேரம் அங்த கேங்கில் இருந்த ஒருவன் கை காட்டி அவளை அருகில் வரச்சொன்னான்.

அதைக்கேட்டு திக் என்றது பெண்ணவளுக்கு.

அவர்கள் முகத்தையும், அமர்ந்து இருந்த விதத்தையும், இப்பொழுது திமிராக அவளை கையைச்சு அழைத்ததையும் கண்டு நொடியில் புரிந்துவிட்டது பொதிகைக்கு...!

ரேகிங்...!

கல்லூரியில் ரேகிங் இருக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறாள். ஆனால் இப்பொழுது அதற்கு தடை விதித்து இருந்தாலும் சில நேரம் அந்த விதிகளை மீறி சில மாணவர்கள் ரேகிங் செய்வதும் உண்டு என்று கேள்வி பட்டிருந்தாள்.

இந்த கேங்கை பார்க்க, அப்படித்தான் தோன்றியது.

அவர்கள் அழைத்தும் அருகில் செல்லாமல், தயக்கத்துடன் நிக்க, அதற்குள் மற்றொருவன்

“ஹோய்...மஞ்சப்பை... கை காட்டினா அர்த்தம் புரியாத? இங்கன வா.. இதர் ஆவோ...இக்கட பன்னி, இக்கட ரா ...” என்று பல மொழிகளில் சொல்லி நக்கலாக சிரித்தான்.

அதைக்கேட்டு மற்றொருவனோ

“மச்சான்..பின்றடா... எப்படிடா இத்தனை பாஷயும் தெரிஞ்சு வச்சிருக்கிற...”  என்று ஆச்சர்யமாக கேட்க,

“ஹீ ஹீ ஹீ அதான் நம்ம கூகுல் மச்சான் இருக்காரே...  இதுல இருந்துதான்... என்று தன் அலைபேசியை ஆட்டிக்காட்டினான் அசட்டு சிரிப்பை சிரித்தவாறு.

அதே நேரம் பொதிகையும் அதற்குமேல் தயங்கி நிற்காமல், நிமிர்ந்த நடையும், யாருக்கும் அஞ்சாத நேர்கொண்ட பார்வையுமாய்,  அவர்களை நோக்கி சென்றாள்.

உள்ளுக்குள் பயம்தான்...ஆனாலும் தன் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களை அடைந்தவள்,

“குட் மார்னிங் அண்ணாஸ்...”  என்று அனைவரையும் பார்த்து பொதுவாக சொல்ல, அதைக் கேட்டவர்கள் ஜெர்க்காகி போனார்கள்.

உடனே சமாளித்துக்கொண்டவர்கள்,

“டேய் உன்னத்தான் டா உன் தங்கச்சி அண்ணா னு பாசமா கூப்பிடுது...” என்று ஒவ்வொருவனும் மற்றவனை கைகாட்ட,  பொதிகைக்கு சிரிப்பு பொங்கி வந்தது.  

ஆனாலும் முயன்று தன் சிரிப்பை அடக்கிக் கொண்டவள்,  மீண்டும் அவர்களை நேருக்கு நேராக பார்த்தவள்,

“நான் எல்லாரையும் தான் சொல்லுறேன்....”  என்று பெரிதாக புன்னகைத்தாள்.

அதற்குள் அவர்களும் சுதாரித்துக் கொண்டவர்கள்,

“ஆமா தங்கச்சி... நம்ம அப்பாவுக்கு சொத்து பத்தெல்லாம் நிறைய இருக்கு தானே... இந்த அண்ணன்களோட பாக்கெட் மணி காலி ஆய்டுச்சு. நம்மா அப்பா கிட்ட சொல்லி கொஞ்சம் பணம்  வாங்கி கொடுக்கறியா?“ என்று ஒருவன்  நக்கலடிக்க, அவளும் கொஞ்சமும் தாமதிக்காமல்,

“கண்டிப்பா அண்ணா.... உங்க கையில தொங்குதே ரோலக்ஸ் வாட்ச் அதை வாங்கிக் கொடுத்த அப்பா,  உங்க கைச்செலவுக்கு பணம் கொடுக்க மாட்டாரா என்ன?  எவ்வளவு வேணும் சொல்லுங்க...”  என்று மிடுக்காக மொழிய,  அதை கேட்டவுடன் ஆ வென்று வாயைப் பிளந்தனர் அனைவரும்.  

அந்த கேங்கில் ஒருவனாய் அமர்ந்திருந்த வெற்றிமாறன்,

அவளின் நிமிர்வான,  சாதுரியமான, தைர்யமான பேச்சையும், அவளின்  நேர்கொண்ட பார்வையும் கண்டு, அவளையே  ரசனையாக பார்த்திருந்தான்.  

மற்றவர்களோ பொதிகையை எப்படி எப்படியோ கலாய்த்து மடக்க பார்க்க,  அவளும் எல்லாரையும் அசால்ட்டாக சமாளித்துக் கொண்டு இருந்தாள்.

அவளை அவுட்டாக்க என்று அவர்கள் போட்ட பாலையெல்லாம் சிக்ஸர்களாக விலாசி தள்ளிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுதுதான் வெற்றிமாறன் எதுவும் பேசாமல் அமதியாக இருப்பதை கண்ட அவன் நண்பன் புகழ், அவன் தோளை தட்டி,  

“டேய் வெற்றி...  என்னடா யோசிச்சுக்கிட்டு இருக்க?  யாரைப் பார்த்தாலும் முதல்ல நீதான் கலாய்ப்ப. இப்ப இந்த ஒல்லிக்குச்சி,  நம்மளை எல்லாம் வச்சு கலாய்ச்சுக்கிட்டு இருக்கா...

நீ அமைதியா இருக்க.  ஏதாவது சொல்லி அவ வாய அடைடா...” என்று வெற்றிமாறனிடம் சரணடைந்தான் புகழ்.  

மற்றவர்களும் ஆமோதிப்பதாய் பார்வையால் அவனை பார்க்க,  அப்பொழுதுதான் அவளை உற்று பார்த்தான் வெற்றிமாறன்.

ஹோய்கருவாச்சி... உன் பெயர் என்ன? என்று அதட்டலாக கேட்க,  அதுவரை  இயல்பாக, நக்கலுடன்  மற்றவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த பொதிகை, கருவாச்சி என்று அழைக்க கேட்டதும்  புசுபுசுவென்று பொங்கி வந்தது கோபம்.

இதுவரை இலகுவாய், அங்கிருந்த அத்தனை பேரையும் கலாய்த்துக் கொண்டிருந்தவள்,  முகம் கோபத்தில் ஜொலி ஜொலிக்க, வெற்றிமாறனை வெட்டவா, குத்தவா என்று முறைத்துக் கொண்டு நின்றவளை கண்டதும்,  மற்றவர்களுக்கு பரம திருப்தி ஆகிப்போனது.

அவளை தடுமாற வைத்து, தங்கள் முன்னால் தலை குனிந்து நிக்க வைக்கத்தானே இவ்வளவு நேரம் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களால் முடியாததை வெற்றிமாறன் சாதித்துவிட, எல்லாரும் வெற்றிமாறனுக்கு ஹை-பை கொடுத்தார்கள்.  

அவனும் ஒரு வெற்றிப் புன்னகையை சிந்தியவன், மீண்டும் பொதிகையை பார்த்து

“ஹோய் கருவாச்சி... கேட்கறேன் இல்ல... உன் பெயர் என்ன? “ என்றான் அவளை  நக்கலாக பார்த்தவாறு.

“நான் ஒன்னும் கருவாச்சி இல்லை...” என்றாள் தன் கோபத்தை முடிந்தளவு கட்டுபடுத்திக் கொண்டு பற்களை கடித்தபடி.

“ஓஹோ...நீ கருவாச்சி இல்லாமல்,  சுண்டினால் ரத்தம் வரும் சிவப்பழகியோ?” வெற்றிமாறன்  நக்கலாக கேட்க,  

“ஆமா...எனக்கு  நான் சிவப்புதான். உனக்கென்ன..? இன்னொரு தரம் என்னை கருவாச்சி ன்னு கூப்பிட்ட?  என்று அவள் முடிக்கும் முன்னே

“கூப்பிட்டா ?  கூப்பிட்டா  என்னடி பண்ணுவ? “ என்று முறைக்க,  அதைக் கேட்டு அதிர்ந்தவள்

“என்னது? டீ யா?  நான் என்ன உன் பொண்டாட்டியா? என்று பொதிகை பொங்கி எழ,

“ஆமான் டி... பொண்டாட்டி தான்...”  என்று அவனும் திருப்பிக் கொடுக்க,  அவன்  நண்பர்களோ அதிர்ந்து போய் வெற்றிமாறனை  மார்க்கமாய் பார்க்க, அப்பதான்  என்ன சொல்லி வைத்தோம் என்பது மண்டையில் உறைக்க, தன்  நாக்கை கடித்துக் கொண்டான் வெற்றிமாறன்.

“டேய்...பொண்டாட்டி கிண்டாட்டினா  செருப்பு பிஞ்சிடும். அப்புறம் தமிழில் எனக்கு  பிடிக்காத ஒரே வார்த்தை கருவாச்சியாக்கும்.

இன்னொரு தரம் என்னை அப்படி கூப்பிட்ட, என்ன செய்வேனு எனக்கே தெரியாது... ஜாக்கிரதை... அம்புட்டுதான்... சொல்லிபுட்டேன்......” என்று படபடவென்று பொரிந்தாள் பொதிகை.

கோபத்தில் முகம் செந்தனலாய் ஜொலிக்க, அவளின் கோபத்தை கண்டு ரசிக்கத்தான் தோன்றியது வெற்றிமாறனுக்கு.

மூக்கு குடை மிளகாய் போல சிவந்து விடைத்து நிற்க,  காது இரண்டும்  மூஞ்சூறு காதைப் போல  சிலிர்த்துக் கொண்டு நிற்க, அவள்  தலைமுடி கூட கோபத்தில் சிலிர்த்துக் கொண்டு நின்றது.

அந்த பெண்ணவளை அப்படிக்காண, கோபம் கொண்டு பொங்கி எழும் கடலைப்போல, சிலிர்த்துக்கொண்டு நிக்கும் பெண்புலியைப் போல நின்றிருந்தவளை காண, ஏனோ அவன் மனம் கிளர்ந்தது அந்த நொடியில்.

அவளை அப்படியே இறுக்கி அணைத்து,  படபடவென்று பொரியும் அவளின் திரண்ட  இதழ்களை அழுத்தமாய் அணைத்து அவளின் கோபத்தை தணிக்க வேண்டும் போல பரபரத்தது அவன் உள்ளே.  

அதை உணர்ந்த வெற்றிமாறன் அடுத்த கணம் திடுக்கிட்டு போனான்.  

இதுவரை எந்த பெண்ணையும் தப்பான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை அவன்.    அந்த பல்கலைகழகத்தின் அன்டர்க்ராஜுவேட் பிரிவின் மாணவர் சங்கத்தின் தலைவன்.

படிப்பாகட்டும்...விளையாட்டு ஆகட்டும்...எந்த ஒரு நிகழ்ச்சியை பொறுப்பேற்வதாகட்டும். எல்லாவற்றிலும் வெற்றிமாறன் முன் நிற்பான்.

மொத்தத்தில் அந்த கல்லூரியின் முடிசூடா மன்னன்... ஹீரோ...அவன் தான் . எல்லா கன்னிப்பெண்களின் மனதிலும் கனவு நாயகனாக வலம் வருபவன்.

ஆறடிக்கும் மேலான உயரத்துடன் கட்டுக்கோப்பான  உடற்கட்டுடன்  ஆண்மையின் இலக்கணமாய் வலைய வருபவன் மாணவர்கள் அனைவரிடமும் எப்பொழுதும் சிரித்த முகமாக ஜாலியாக பேசுபவன்.

அவனை கவர்வதற்கு என்றே பெண்களின் கூட்டம் வழிய வந்து அவன் மேல விழுந்து வைத்தாலும், நாசுக்காக புறக்கணித்துவிட்டு செல்பவன்.   

அப்படிப்பட்டவன்  இன்று தன் மனதை ஆரம்பத்திலிருந்தே அந்த கருவாச்சியிடம் அலைபாய விட்டு விட்டான்.

பொதிகையை ஆரம்பத்தில் இருந்தே ஆர்வமாய் பார்த்து வைத்தான்...தன் நண்பர்களுக்காக அவளை கலாய்க்க என்று அவளை சீண்டியவன் வாய் தவறி  டீ போட்டு அழைத்துவிட்டான். அதற்குமேல் அவளை தன் பொண்டாட்டி என்று உளறி வைத்தான்.

இப்பொழுது என்னடாவென்றால், அதையும் தாண்டி, மானசீகமாய்,   அந்தரங்கமாய் அவளை கட்டி அணைக்கும் அளவுக்கு அவன் மனம் தடுமாறியதைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது.

இதுவரை யாரிடமும் அதுபோல எதுவும் தோன்றியதில்லை அவனுக்கு.

எத்தனையோ அழகிகள் அவனிடம் வந்து காதலை ப்ரபோஸ் பண்ணி, அவனுக்காக ஏக்கத்துடன் காத்திருந்த பொழுதெல்லாம் கிளறாத அவன் மனம் இந்த கருவாச்சியிடம் தடுமாறுவதை கண்டு  அதிர்ந்து போனான்.  

ஆனாலும் அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொண்டு, வரவழைத்த கோபத்துடன் அவளை பார்த்து முறைத்தவன்

“ஹோய்...நான் யார் தெரியுமா?  என்னையவே டா போட்டு கூப்பிடறியா? “ என்று உள்ளுக்குள் சிரித்தபடி அவளை முறைக்க,

“நீ யாரா இருந்தா எனக்கென்ன? எந்த ஊர் மஹாராஜா வா இருந்தா எனக்கு என்ன?  இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட். இனிமேல் என்னை கருவாச்சி னு சொன்ன?“ என்று அவள் முடிக்கும் முன்னே  

“சொன்னா? என்று தன் இடது புருவத்தை மட்டும் உயர்த்தி கேட்டான்.

அவன் முகத்திலோ வரவழைத்த கோபம்கூட மறைந்து போய்விட, முகம் முழுவதும் குறும்பு கூத்தாடியது.  

வெற்றிமாறன் ஒரு மார்க்கமாக அவளையே ஊடுருவிப் பார்க்க, அவனை எதிர்த்துக் கொண்டு நேருக்கு நேராக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு    நின்றவள்,  அவனின் அந்த மார்க்கமான பார்வை வீச்சை தாங்க முடியாமல் தடுமாறிப் போனாள்.

அவன் அவளிடம் எதிர்த்து சண்டை போட்டிருந்தால் இவளும் லெப்ட் அன்ட் ரைட் வாங்கி இருந்திருப்பாள். ஆனால் இப்படி ஒரு மார்க்கமாக நேரடியாகவே பார்த்து வைக்க, அவன் பார்வை வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அவள்  கன்னங்கள் தானாக சிவந்து போனது.

தலையை உடனே தாழ்த்திக் கொண்டாள்.

அவள் கன்னங்கள் சிவந்து போனது அவளின் மாநிறத்திலும் அழகாய் அவன் கண்ணுக்கு தெரிய, அதுவரை ஜான்சிராணியாய் சிலிர்த்துக்கொண்டு நின்றவள், இப்பொழுது நாணத்தோடு தலை குனிந்து கொண்டதை காண அவன் உள்ளம் எகிறி குதித்தது.

அவளை இன்னுமாய் சீண்ட எண்ணியவன்

“சொல்லுங்க மேடம்... கருவாச்சினு சொன்னா என்ன பண்ணுவ?“ என்று இதழ்க்கடையோரம் அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க, இப்பொழுது விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள், அவன் முகத்தை உற்று பார்த்துவிட்டு

“போடா... வெள்ளப்பன்னி....” என்று சொல்லிவிட்டு,  அங்கிருந்து சிட்டாக பறந்து விட்டாள்.  

அவள் சொன்னதைக்கேட்டு திகைத்துப் போனான் வெற்றிமாறன்.  

வெள்ளைப்பன்னியா?  அப்படினா என்னடா அர்த்தம்? “ அருகிலிருந்த புகழிடம் விசாரிக்க, புகழும் நக்கலாக சிரித்தவன்

“ஹா ஹா ஹா வைட்பிக் டா...”  என்று சிரிக்க,  

“டேய்... அவ சொன்னதை  இங்கிலீஷ் ல ட்ரான்ஸ்லேசன் பண்ண எனக்கு தெரியாதா? அது என்ன வைட் பிக்? “ என்று முறைத்தவன்,  அவசரமாக தன் ஐ போனை எடுத்து அதில் வைட் பிக் என்று செர்ச் பண்ணி பார்த்தான்.

விதவிதமான வெள்ளப்பன்னி புகைப்படங்கள் கூகுளில் வந்து குதிக்க, அதைக்கண்டவன் முகத்தில் கோபம் கடுகளவும்  வரவில்லை.

மாறாக அவனின் அழுத்தமான இதழில் தானாக தவழ்ந்தது குறுநகை.

வெற்றிமாறன் நல்ல கலராக வெள்ளையாக இருப்பவன். கொலுகொலுவென்ற கன்னமும், கொஞ்சம் பூசினாற் போன்ற உடல் தோற்றம் கொண்டவன்.

அதனால்தான் அவனை அப்படி சொல்லி இருக்கிறாள்  என்று புரிய அடுத்த கணம் கலகலவென வாய்விட்டு சிரித்தான் வெற்றிமாறன்.

அவன் நண்பர்கள், ஏன் சிரிக்கிறான் என்று புரியாமல், அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவர்கள்,

“டேய் மச்சான்...  என்னடா ஆச்சு... தானா  சிரிக்கிற? “ என்று ஆராய்ச்சியுடன் மேலிருந்து கீழாக அவனை பார்க்க

“ஹீ ஹீ ஹீ...ஒன்னும் இல்லையே...நத்திங்...” என்று அசட்டு சிரிப்பை சிரித்து அங்கிருந்து நழுவினான் வெற்றிமாறன்..!


Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews