மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Monday, October 10, 2022

வராமல் வந்த தேவதை-31

 


அத்தியாயம்-31

 

ன் மகளின் பிறந்த நாள் விழாவுக்கென்று அவள் பக்கம் இருந்து பெரிதாக யாரையும் அழைத்திருக்கவில்லை சுரபி.  

அவளின் அலுவலக்த்தில்  கடைசியாக பணி புரிந்த டீமை மட்டும் அழைத்திருந்தாள்,..

மற்றும் ஷ்யாமின் குடும்பத்தையும், முன்பு அவள் குடியிருந்து வீட்டு ஓனர் ஐயும் அழைத்திருக்க, சற்று முன்னர்தான் அவர்களும் மேடைக்கு வந்து கேக் ஐ வெட்டி, நிகா குட்டிக்கு ஊட்டிவிட்டு, அந்த குட்டியின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து சென்றனர்.

இப்பொழுது அங்கே வந்து நின்றனர் அவளின் அலுவலக கேங்...  

அதிலிருந்த சில பெண்கள் சுரபியை பொறாமையாக பார்த்து வைத்தனர்.

தங்களில் ஒருத்தியாய்...மாதச்சம்பளம் வாங்கிய தங்களைப்போன்ற ஒருத்தி...எப்படி இவ்வளவு பெரிய பணக்காரன்...மல்ட்டி மில்லினருக்கு மனைவியாக அதிர்ஷ்டம் அடித்தது?  கொடுத்து வைத்தவள் இந்த சுரபி...”  

என்று உள்ளுக்குள் கருவிய ரியா , சுரபியின் அருகில் வந்தவள், அவளுக்கு கை குலுக்கி வாழ்த்து சொல்லியவள்,  

“சூப்பர் சுரபி....  பார்க்க ரொம்ப சாதுவா...அமைதியா இருந்த நீ எப்படித்தான் நம்ம பாஸ் ஐ வளைத்து போட்டாயோ..! உன்னை இப்படிப்பட்ட பெண்ணாக எண்ணியிருக்கவில்லை.  இதுக்குத்தான் ஊமையா , ரொம்ப அமைதியாக இருப்பவர்களை நம்பக் கூடாது என்று சொல்லுவார்கள்..!  

அதுவும் சரிதான்..! ஆமா  எப்படி பாஸ் ஐ வளைத்து போட்டாய்?  எப்படி உங்களுக்குள்  கசமுசா நடந்தது?  அப்புறம் ஏன் எங்களுடன் சேர்ந்து வேலைக்கு வந்த? 

என்று அது ஒரு விழா மேடை என்றும் பாராமல்,  பல நாட்கள் தன் மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்த...பல இரவுகள் சுரபியை பற்றிய பொறாமையில் தூக்கமில்லாமல் தவித்த  கேள்விகளை எல்லாம் அங்கே கடகடவென்று கொட்டினாள்.  

மற்றவர்கள் மனதிலும்  அதே கேள்விகள்தான்...! ஆனால் யாருக்கும் கேட்க துணிவில்லை...!

இப்பொழுது சுரபி என்ன பதில் சொல்ல போகிறாளோ என்று எல்லாரும் ஆர்வமாக சுரபியை பார்க்க,  அவளோ  சற்றுமுன்  தன் கணவனிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தை பின்பற்றினாள்.

அவளின் கேள்விக்கும் , மற்றவர்களின் சந்தேகபார்வைக்கும் உள்ளுக்குள் பொங்கி எழுந்தாலும், தன் ஆத்திரத்தை கட்டு படுத்தி வெறும் புன்னகையை மட்டும் பதிலளித்தாள்.

“அது எங்கள்  பர்சனல் மிஸ் ரியா... எனிவே விழாவிற்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி..! பஃப்பே  ஸ்டார்ட் ஆயிடுச்சு...நிறைய வெரைட்டிஸ் இருக்கு...போய் நல்லா சாப்பிட்டு போங்க...”  என்று நாசுக்காக அவளை தவிர்க்க,  

அதே நேரம் சற்று தள்ளி யாரோ ஒரு முக்கியமான வி.ஐ.பி யுடன் பேசிக் கொண்டிருந்தாலும், இங்கே நடந்து கொண்டிருக்கும் உரையாடலையும் காதை தீட்டி வைத்து கேட்டுக் கொண்டிருந்தான் விகர்த்தனன்..!  

அந்த ரியாவின் கேள்வி அவனுக்கும் கோபத்தை வரவைத்தது..!  

ஆனாலும் தன் பல்லைக் கடித்துக் கொண்டு,  கை முஷ்டியை இறுக்க,  அதற்குள் சுரபியே  அழகாக அவளை சமாளித்துவிட,  அதில் கொஞ்சம் வியந்து தான் போனான்.

அவனைப்போலவே அவளும் தன் உணர்வுகளை கட்டுபடுத்தி, வெளியில் சிரித்து சமாளித்தது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.  

மெச்சுதல் பார்வை ஒன்றை அவளைப் பார்த்து வீச, அதே நேரம் அனிச்சையாக அவன் பக்கம்  திரும்பியவள்,  தன் கணவனின் மெச்சுதல்  பார்வையை கண்டு கொண்டு புரியாம என்னவென்று புருவத்தை உயர்த்த,  

“சூப்பரா சமாளிச்ச...”  என்று கண்களால் பதில் சொன்னான்.  

அவனின் மெச்சுதலை புரிந்து கொண்டு,  அழகாக மலர்ந்தது புன்னகை ஒன்று..!

அவர்களின் பார்வை பரிமாற்றத்தையும்...கண்களில் பொங்கிய ஏதோ ஒன்றையும் கண்டு இன்னும் பொறாமையோடு பார்த்தவாறு மேடை இறங்கி சென்றாள் ரியா..!

அதே நேரம்

“ஹாய்... ஏஞ்சல்... மை ஸ்விட் ஹார்ட்... ஹாப்பி பர்த்டே...”  என்று சந்தோஷ கூச்சலிட்டவாறு மேடை ஏறி வந்தாள் சினேகா..! கூடவே விக்னேஷ்..!

இருவரும் சுரபிக்கு கொஞ்சம் க்ளோஸ் என்பதால், அவர்களுக்கு முன்னால் வந்த தங்கள் டீம் உடன் இணைந்து வராமல், இருவரும் கழன்டு கொண்டு, அவர்களுக்கு அடுத்து தனியாக வந்தனர்..!

சினேகா, சுரபியின் தோழியாய் நிகாவுக்கு அறிமுகம் என்பதால், அவளை பார்த்து பெரிதாக சிரித்து வைத்தாள் நிகா குட்டி..!

“வாவ்.. சூப்பரா இருக்கு சின்ட்ரெல்லா....” என்று அந்த குட்டியின் கன்னத்தில் முத்தம் பதிக்க,

“தேங்க்ஸ் ஆன்ட்டி... அப்பா வாங்கி...” என்று பெருமையாக தன் தந்தை இருந்த பக்கம் கை காட்டியது அந்த குட்டி..!

அதுதான் தெரியுமே..! பின் உன் அம்மாவுக்கு இந்த மாதிரி ட்ரெஸ்ஸிங் சென்ஸ் எல்லாம் சுட்டு போட்டாலும் வராதே....பாவம்.. பாஸ் ... எப்படித்தான் இந்த பட்டிக்காட்டை கட்டிகிட்டு சமாளிக்கிறாரோ...”

என்று சுரபியை கலாய்க்க, சுரபியோ அவள் கையில் நறுக்கென்று கிள்ளி அவளை முறைத்து வைத்தாள்.

“அவுச்... என்னடி.. இப்படி கிள்ளி வைக்கிற? ஓ... உன் புருஷனை கிள்ளி வைத்த பழக்க தோஷமா? “ என்று சுரபியின் காதோரம் கிசுகிசுக்க, இன்னுமாய் முறைத்தாள்..! கூடவே சிறு வெட்கம்..!

சினேகா உடன் வந்திருந்த விக்னேஷ் ம் அவன் வாங்கி வந்திருந்த பரிசை நிகாவிடம் கொடுத்துவிட்டு, அவளிடம் வாழ்த்து சொல்லிக்கொண்டு நிமிர,

அதே நேரம் அந்த வி.ஐ.பி ஐ அனுப்பி விட்டு,  அங்கு வந்து சேர்ந்தான் விகர்த்தனன்..!

சினேகாவை பார்த்து புன்னகைத்தவன், அப்பொழுது நிகா குட்டியின் உயரத்துக்கு குனிந்துவிட்டு நிமிர்ந்த  விக்னேஷ் ஐ  பார்த்ததும் தன்  புருவத்தை சுருக்கினான் விகர்த்தனன்.  

தன் நெற்றி பொட்டில், ஆட்காட்டி விரலை வைத்து அழுத்தியவாறு  ஒரு நொடி யோசித்தவன், அடுத்த கணம் விக்னேஷ் ஐ அடையாளம் கண்டு கொண்டான்..!

“ஹே...நீ  விக்கி...விக்னேஷ் தான... உன்னைத்தான் நான் அப்பவே வேலையை விட்டு, தூக்க சொல்லி இருந்தேனே..! நீ இன்னுமா  ஆபீஸ்ல இருக்க? என்று யோசனையுடன் கேட்க, அதைக்கேட்டு தூக்கிவாரிப் போட அதிர்ந்து போனான் விக்னேஷ்..!

“ஆஹான்..!  இந்த சிங்கத்துகிட்ட தானா வந்து சிக்கிட்டனா? இவரை பற்றி நன்றாக தெரிந்தும், நம்மளை எல்லாம் மறந்து இருப்பார் என்று அஜாக்கிரதையாக வந்து மாட்டிக்கிட்டேனே..!  

ஆனாலும் இந்த மனுஷனுக்கு இவ்வளவு ஞாபகசக்தி இருக்கக்கூடாது..!  இதுவரை எத்தனையோ பேரை பார்த்து இருப்பார்..!  எத்தனையோ பேரை வேலையை விட்டு தூக்கி இருப்பார்..!  

இப்படியா எல்லாரையுமே ஞாபகம் வைத்திருப்பார்?  “ என்று உள்ளுக்குள் புலம்ப,

“ஹ்ம்ம்ம் அதுவும் போயும் போயும்  உன் மூஞ்சியை மறக்காமல் நியாபகம் வச்சிருக்காரே.! உன்னை எல்லாம் மறக்காம நியாபகம் வச்சிருக்கிற மூஞ்சியா இது? .

அதுதான் என்னால தாங்க முடியலை..! லைட்டா நெஞ்சு வலிக்குது விக்கி...” என்று தன் நெஞ்சை நீவி விட்டுக்கொண்டது அவன் மனஸ்...!

தன் மனஸ் ஐ மானசீகமாக முறைத்து வைத்தவன், இப்ப எப்படி சமாளிக்க என்று புரியாமல்  திருதிருவென்று விழித்துக் கொண்டிருக்க, ஆபத்பாந்தவனாய் அங்கே வந்தான் விஷ்வா..!

அவனைக்கண்டதும் போன உயிர் திரும்பி வந்ததை போல இருந்தது விக்கிக்கு..!

சந்தோஷத்தில் மானசீகமாக ஓடிப்போய் தன் நண்பனை இறுக்க கட்டி அணைத்து, அவன் கன்னத்தில் பசக் என்று முத்தம் ஒன்றை வைத்தான்..!  

விகர்த்தனனிடம் ஏதோ கேட்பதற்காக அங்கே வந்த விஷ்வா,  அங்கு சினேகாவை கண்டதும் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான்..!

தன்னை மறந்து,  ஒரு நொடி அவளை ஆசையோடு, ரசனையொடு பார்த்து வைத்தான்..!

அவன் பார்வையை கண்டு கொண்ட சினேகாவுக்கு அப்பொழுதுதான் நிம்மதியாக இருந்தது..!  

கிட்டதட்ட இரண்டு மணி நேரம் செலவு செய்து... சிரத்தை எடுத்து, விஷ்வாவிற்காக  தன்னை  பார்த்து பார்த்து அலங்கரித்துக்  கொண்டு வந்திருக்க,  அவனோ,  இவளை கண்டு கொள்ளாமல் பம்பரமாகச் இங்கேயும் அங்கேயும் சுற்றி கொண்டிருந்தான்..!

அவனின் பார்வையில் படவேண்டும் என்றே, அவன் இருக்கும் இடத்திற்கு காரணமே சென்று அவன் பார்வை படும் இடத்தில் நின்று கொண்டு, யாரென்றே தெரியாதவர்களிடம் கூட

“ஹாய் அங்கிள்.. ஹாய் ஆன்ட்டி... “ என்று அழைத்து ஏதாவது சம்பந்தமே இல்லாமல் பேசி வைத்தாள்.. !

அப்படித்தான் ஒரு பெண்மணியிடம்

“ஹாய் ஆன்ட்டி...உங்க பையன் எப்ப பாரின்ல இருந்து வர்றார்? என்று கேட்டு வைக்க, அந்த பெண்மணியோ திருதிருத்தார்.

அவருக்கு திருமணம் ஆகாமல் , சிங்கிளாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்... அவரை பார்த்து உங்க பையன் எப்ப பாரின்ல இருந்து வர்றார் என்று கேட்டு வைக்க, அந்த பெண்பணி அவளை மேலும் கீழுமாய் ஏற இறங்க பார்த்து வைத்தாள்..!

இவளும் அசட்டு சிரிப்பை சிரித்து நழுவினாள்..!

அதற்கு மேல் வழிய சென்று அவனை பாலோ பண்ண பிடிக்கவில்லை...!

அதே கடுப்புடன் திரும்பி வர, அங்கே அவளுடைய டீம் ஏற்கனவே மேடை ஏறி இருக்க, விக்னேஷ் மட்டும் அவளுக்காக காத்து கொண்டிருந்தான்..!

முகத்தில் கடுப்புடன் அங்கு சென்றவளை பார்த்து நமட்டு சிரிப்பை சிரித்தான் விக்னேஷ்..!

“என்ன இளிப்பு? “ என்று ஸ்னேகா அவனை முறைக்க,

“ஹே ஸ்நேக்... எதுக்கு உனக்கு இந்த  வேண்டாத வேலை?”  என்று நக்கலாக சிரிக்க,

“என்ன வேண்டாத வேலை? என்று அவளும் திருப்பி முறைக்க,  

“அதுதான்...  அந்த விஷ்வா பய பின்னாடியே ரெண்டு வருஷமா சுத்திக்கிட்டு இருக்கியே..!  ஏதாவது முன்னேற்றம் தெரிந்ததா? அதான் எதுக்கு உனக்கு இந்த  வேண்டாத வேலைனு கேட்டேன்..” என்று மீண்டும் நக்கலாக சிரிக்க,  

“ஹ்ம்ம்ம் இரண்டு வருசமா சுத்தி வந்தாலும், அந்த சாமியார் தான் என்னை கண்டுக்கவே மாட்டேங்கறானே..!  

அவனுக்கு அவனுடைய பாஸ்ம்,   பாஸ் கொடுக்கிற வேலையும் மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது.  

இப்படி ஒரு அழகான பெண் அவன் பின்னால் சுற்றி வருவதை கண்டுக்கவே மாட்டேங்குறான்...சரியான சாமியார்....”  என்று சோகமாக முகத்தை சுளித்தவாறு அவனை திட்ட,

விக்னேஷ் ஓ  தன் நெற்றியின் மீது  கையை விரித்து வைத்து யாரையோ  தேடுவதை போல ஆக்சன் பண்ண,  

“என்ன தேடற விக்கி? என்று ஸ்னேகா அவனை கேள்வியாக பார்க்க,  

“இல்லை...ஏதோ  அழகான பொண்ணுன்னு சொன்னியே..!  அது தான் யாருனு  தேடி பார்த்தேன்...”  என்று சீரியஸாக சொல்ல,  அதைக்கேட்டவள் மீண்டும் கடுப்பாகியவள்,

:ஐய. இதெல்லாம் ஓல்டு ஜோக்..!  வேணும்னா என்னை இம்ப்ரெஸ் பண்ணனும்னா வேற ஏதாவது புதுசா ட்ரை பண்ணு விக்கி…” என்று அவளை முறைக்க,

“ஹீ ஹீ ஹீ வரவர இந்த  பொண்ணுங்க எல்லாம் ரொம்ப ஸ்மார்ட்டா ஆயிட்டு வர்றாங்க... ஜோக்கு கூட எதையும் காப்பி அடிச்சு சொல்ல முடியல..!  கரெக்டா கண்டுபிடிச்சிடறாங்க...”  என்று வாய்விட்டு புலம்பியவன்,  

“அது சரி ஸ்நேக்... அவன்தான் சாமியாருனு  நீயே சொல்லிட்டியே..!  அப்புறம் எதுக்கு அந்த சாமியார் பின்னாடியே சுத்திகிட்டு இருக்க...!  

அந்த வீணாப்போன விஷ்வா பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா?  இந்த விக்கி மாதிரி சாதாரண குண்டு பல்ப் எல்லாம் வேண்டாமா? என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைக்க,  அவளோ  மீண்டும் கடுப்பானாள்.  

“ஹ்ம்ம்ம் உங்களையெல்லாம் லவ் பண்றதுக்கு நான் கல்யாணம் ஆகாமல் கன்னியாகவே இருந்திடலாம்...” என்று கழுத்தை நொடித்து நக்கலாக சொல்ல,

“சை.. க்ரேட் இன்சல்ட் டா விக்கி... தேவையா உனக்கு இது...” என்று தன்னைத்தானே பார்த்து புலம்பியவன், சினேகா பக்கம் பார்த்து

“ஹ்ம்ம்ம் அப்படி என்னமா என்கிட்ட குறைச்சல்? என்று பாவமாக பார்த்து வைக்க,  

“ஹ்ம்ம்ம் எல்லாமே தான் குறைச்சல்... ஆனால் ஒன்னே ஒன்னு மட்டும் நீளம்...” என்று நமட்டு சிரிப்பை சிரிக்க, அதே நேரம் அவள் பார்வை சென்ற இடத்தைப் பார்த்து  பக்கென்றது விக்கிக்கு...!

“ஹே உனக்கு எப்படி அது தெரியும்..?  என்று அதிர்ச்சியோடு அவள்  முகத்தை பார்க்க,  அதற்குள்  அவன் எதை நினைத்துக் கொண்டான்  என்று  புரிந்து கொண்டவள், களுக் என்று கிளுக்கி சிரித்தாள்.

அதுவரை கடுகடுத்தவள், திடீரென்று கலகலவென்று சிரிக்கவும்,  ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்தான் விக்னேஷ்..! 

ஒரு வழியாக தன் வயிற்றை பிடித்துக்கொண்டு குலுங்கி சிரித்து முடித்தவள், 

“ஐயோ...  விக்கி...  நான் நீளம் னு சொன்னது உங்க வாயை...ஐ மீன் நாக்கை...நீங்க என்ன  நினைச்சுக்கிட்டீங்க?  என்று குறும்பாக புருவத்தை உயர்த்த,  அப்பொழுது தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது..!

“ஆத்தி... இந்த வாயாடிகிட்ட நாம வாய கொடுத்து, நாமளே மாட்டிக்க கூடாது...எனக்கு ஒரு தேன்மொழி... கனிமொழி...செம்மொழி பொறந்திருக்காமலயே போய்டுவா...  வுடு ஜூட்...”  என்று மனதில் எண்ணிக் கொண்டவன்,

“அதே... அதே... அதேதான் நானும்  சொன்னேன்...” என்று சமாளிக்க,

“எதே...எதே...? “ என்று அவளும் விடாமல் நோண்ட,

“நீ சொன்ன அதேதான் நான் சொன்னதும்...  சரி சரி வா நம்ம டீம்  கீழே இறங்கி போய்ட்டாங்க. நாம போய் ஒரு அட்டெண்டன்ஸ் ஐ  போட்டுட்டு அப்படியே டைனிங்ஹால் பக்கம் ஒதுங்கி விடலாம்..! 

லீலா வருவதற்கு ஒரு சிக்னல் முன்பே வெய்ட் பண்ணிகிட்டு இருந்தபொழுதே வாசம் சும்மா கும்முனு வந்தது... வளவளனு பேசிகிட்டு இருக்காம சீக்கிரம் வா ஸ்நேக்...”

என்று அவள்  கையை பிடித்து இழுத்துக்கொண்டு மேடைக்கு  வந்திருந்தான் விக்னேஷ்..!

விக்னேஷ் ன் அலப்பறையில், ஸ்னேகாவிற்கு விஷ்வா மீது இருந்த கோபம் மறைந்து,  சிரித்த முகமாகவே சுரபியின்  மகளிடமும்,  அவளிடமும் பேசிக் கொண்டிருக்க,  அப்பொழுதுதான் அங்கே வந்த விஷ்வா அவளை ஒரு நொடி ரசித்து பார்த்து வைத்தான்.

அதுவரை அவளை கண்டு கொண்டிராதவனின் அந்த நொடிப்பார்வையே போதுமானதாக இருந்தது பாவை அவளுக்கு...!

விஷ்வாவின் அந்த ஒரு நொடி பார்வையே  அவளுக்கு உள்ளுக்குள் சிலிர்த்தது..! 

அவனுக்காக மணிகணக்கில், கண்ணாடி முன்னால் அமர்ந்து மேக்கப் போட்டது வீண்  போகவில்லை..! 

“எப்படியோ ஒரு நொடியாவது இந்த சாமியார் கண்ணில் பட்டு வைத்தேன்..!  அது போதும்...”  என்று உள்ளுக்குள் துள்ளிக் குதித்தாள்.

*****

ரு நொடி ஸ்னேகாவை ரசனையோடு பார்த்தவன், உடனே  தன் தலையை  உலுக்கிக் கொண்டு தன் பார்வையை மாற்றிக்கொண்டு,

“பாஸ்... “ என்று ஆரம்பித்து ஏதோ கேட்க ஆரம்பிக்க, அதற்குள் இடை மறித்த விகர்த்தனன்,  

“டேய் விஷ்வா...  இவன்  விக்னேஷ் தான... இவன் சீட்டை கிழிக்க சொல்லி இருந்தேனே...இவன் எப்படி இன்னும் ஆபிஸ்ல?  என்று மீண்டும் அந்த டாபிக்கை பிடித்துக் கொள்ள, திக் என்றது விஷ்வாவுக்கு..!

“ஆஹான்... இந்த எரும இப்படி பாஸ் முன்னால வந்து மாட்டிக்கிட்டானே..! அவன் மாட்டினதோட என்னையும்   சேர்த்து மாட்டி வச்சிட்டானே... இன்னைக்கு செத்தாண்டா சேகரு...”  

என்று உள்ளுக்குள் நொந்து கொண்டவன், விக்னேஷ் ஐ ஓரக்கண்ணால் பார்த்து முறைக்க, விக்னேஷ் ஓ தன் நண்பனை பாவமாக பார்த்து வைத்து எப்படியாவது காப்பாத்து நண்பா என்று பார்வையால் சைகை செய்து கெஞ்சினான்.

மீண்டும் அவனை முறைத்து விட்டு,  

“அப்படியா பாஸ்..?  இவனையா லே ஆப் பண்ண சொன்னீங்க? “ என்று விஷ்வா யோசிப்பவனை போல பாவனை செய்ய, விஷ்வா வை முறைத்துப் பார்த்தான் விகர்த்தனன்..!

“டேய் விஷ்வா..! அப்ப  நீயும் இதுல கூட்டு களவானியா? இரு உன்னையும் சேர்த்து சீட்டை கிழிக்கிறேன்...” என்று முறைக்க, அதைக்கேட்டு அதிர்ந்த விஷ்வா,

“ஐயையோ...  அப்படி எல்லாம் அவசரப்பட்டு பண்ணிடாதீங்க பாஸ்...! உங்களுக்கு பி.ஏ..லெப்ட் ஹேன்ட்...ரைட் ஹேன்ட்  னு சொல்லிகிட்டு  காலரை தூக்கிவிட்டுகிட்டு  சுத்திகிட்டு இருக்கேன்.  

அப்புறம் எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல பாஸ்... பொண்ணு தேடறப்ப, தி கிரேட் பிசினஸ்மேன்...இன்டஸ்ட்ரியலிட்.. விகர்த்தனன் அசிஸ்டென்ட் னு சொல்லிதான் பொண்ணு பார்க்க சொல்லி இருக்கேன்..!

அட்லீஸ்ட் என் கல்யாணம் முடிகிற வரைக்குமாவது  இந்த பதவியை கொடுங்க பாஸ்..!” என்று கெஞ்சலுடன் பார்த்து வைக்க,   

“ஹ்ம்ம்ம் அப்ப கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்? “ என்று விகர்த்தனன் புருவத்தை உயர்த்த,

“ஹீ ஹீ ஹீ  அத அப்புறம் பாத்துக்கலாம் பாஸ்...”  என்று சிரிக்க, அதைக்கேட்ட ஸ்னேகாவுக்கோ புசுபுசுவென்று கோபம் பொங்கி வந்தது..!   

“இரண்டு வருஷமா இவன் பின்னாலயே நாய் மாதிரி லோ..லோ  னு சுத்தி வர்ற என்னை விட்டுட்டு இவனுக்கு வேற பொண்ணு பார்க்கிற வேலை எல்லாம் கூட இருக்கா?  

இங்க ஒருத்தி இவனுக்காக ரெண்டு வருஷமா காத்துகிட்டு இருக்கறது அந்த நொல்ல கண்ணுக்கு தெரியல..!  

வேற எவளையோ பொண்ணு பார்க்க போறேன்... கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றானே..! இவனை என்ன செய்யலாம்?  என்று மனதுக்குள் பொங்கியவள்,

பெருசா எதுவும் உடனே செய்ய முடியாவிட்டாலும், சிறுசா அவனை அலறவாவது வைக்க வேண்டும்... என்னை விடுத்து வேற பொண்ணை பார்க்க போறேனு சொன்ன வாய்க்கு சின்னதாவேணும் தண்டனை கொடுக்க வேண்டும்...”

என்று சிலிர்த்துக்கொண்டவள், தன் ஹை ஹீல்ஸ் செருப்பு காலை தூக்கி அவள் அருகிலிருந்த விஷ்வாவின் காலை ஓங்கி மிதித்தாள்.  

அவளின் முகத்தில் வந்து போன வில்லத்தனத்தை நொடியில் கண்டு கொண்டான் விஷ்வா..! விகர்த்தனன் பி.ஏ வாயிற்றே..!  

அவளின் செயலை யூகித்தவன் அவசரமாக தன் காலை நகர்த்திக்கொள்ள, அதே நேரம் அனிச்சயாய் கொஞ்ச்மாய் நகர்ந்து நின்ற விக்னேஷ் பாதத்தில் பதிந்தது அவளின் ஹை-ஹீல்ஸ்..!

அடுத்த நொடி

“ஆ.....என்று  அலறி வைத்தான்..! சத்தம் யாருக்கும் கேட்டுவிடக்கூடாதே என்று தன் வலியையும் பொறுத்துக்கொண்டு மெல்லத்தான் அலறி வைத்தான்..!

அவனின் மெல்லிய முனகலும், வலியில் சுருங்கிய முகமும் கண்டு வாய் பொத்தி, கண்களால் சிரித்தான் விஷ்வா..!

“தேங்க் காட்..ஜஸ்ட் மிஸ்...” என்று தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்..!  

அவனின் கண்களில் ஒளிர்ந்த சிரிப்பை கண்டு கொண்டவள்,

“ஐயோ...இவன் சிரிக்கிறான் என்றால், ஆ வென்று சத்தம் இல்லாமல் அலறியது யார் ?”  என்று அவசரமாக அருகில் பார்க்க, அங்கே விக்கிதான் ஆப்பு அடித்த குரங்கு மாதிரி, வலியை வெளியிலும் சொல்ல முடியாமல், முழுங்கவும் முடியாமல் காலை லேசாக உதறிக் கொண்டிருந்தான்..!

அதைக்கண்டவளுக்கு பாவமாகி விட,

“ஸாரி விக்கி..... உங்க கால் னு தெரியாம மிதிச்சிட்டேன்..ரொம்ப வலிக்குதா? .” என்று கிசுகிசுத்தவாறு அசடு வழிய

“அடிப்பாவி....கிராதகி..நீதான் அந்த வேலையை செய்தியா? ஆமா... என் கால் னு தெரியாம மிதிச்சிட்டேனா,  அப்ப வேற யாரு காலுக்கு  குறி வச்ச? “ என்று முறைத்தவாறு, அவளைப் போலவே ரகசியமாய் கிசுகிசுக்க,

“வேற யார்... எல்லாம் உங்க ஆருயிர் தோழனுக்குத்தான்...! அது எப்படி நான் இருக்க, என் கண் முன்னாடியே வேற பொண்ணை பார்ப்பேன்..கல்யாணம் பண்ணிக்க போறேனு சொல்லலாம்... அதான்...  அவன் காலை  டார்க்கெட் பண்ணினேன்... நடுவுல நீ மாட்டிகிட்ட...”  

என்று விஷ்வாவை  முறைக்க,  அவனோ  அடக்கப்பட்ட சிரிப்புடன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்..!  

“அம்மா... தாயே.. இனிமேல் இந்த மாதிரி வில்லத்தனம் செய்யறப்ப , சொல்லிட்டு செய்யுமா? நான் அலர்ட் ஆகிடறேன்..! இல்லைனா இந்த பிஞ்சு உடம்பு தாங்காது...” என்று பாவமாக புலம்ப, அவர்களின் அந்த நாடகம் சுரபியின் பார்வைக்கும் தப்பவில்லை..!

சுரபிக்கும் சிரிப்பு பொங்கி வர, அதை  கஷ்டப்பட்டு அடக்கி, மெல்லமாக சிரித்து வைத்தாள்.

தன் மனையாளின் அடக்கப்பட்ட சிரிப்பை கண்ட விகர்த்தனன,  

“என்னாச்சு ?  “ என்று புருவம் உயர்த்தி பார்வையால் வினவ, அவளும் தலையை இருபக்கமும் ஆட்டி ஒன்றுமில்லை என்று புன்னகைத்தாள்.

“ஆல் ரைட் விஷ்வா... இந்த ஒரு தரம் உன்னை மன்னித்து விடறேன்..! இனிமேல் நீ யாருக்கும் பாவம் பார்க்க கூடாது.. தொழிலில் மட்டும் ப்ரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் என்று பாவம் பார்க்க கூடாது...!

கடமையை செய்யலைனா அதற்கான பனிஷ்மென்ட் கொடுத்தாகணும்... அன்டர்ஸ்டான்ட்...!” என்று முறைக்க,

“யெஸ் பாஸ்....” என்றான் விரைத்து அட்டென்ஸன் பொசிசனில் நின்றபடி.. சல்யூட் மட்டும்தான் மிச்சம்.!

“தட்ஸ் குட்...ஸோ.. நீ என்ன பண்ற, நாளைக்கு முதல் வேலையா இந்த விக்கியின்  சீட்டைக் கிழிக்கிற..! “ என்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வர

“ஆஹான்.. இந்த நெட்ட பாஸ் என் சீட்டை கிழிக்கிறதுலயே குறியா இருக்காரே...” என்று அதிர்ந்து போய் பார்க்க, சினேகா வோ வந்த சிரிப்பை, வாயில் கை வைத்து அடக்கினாள்..!

அதைக்கண்டு இன்னும் கடுப்பானான் விக்னேஷ்..!

“ஹ்ம்ம்ம் உனக்கு ஏம்மா இந்த  ரணகளத்திலும் ஒரு குதூகலமா?  உனக்கெல்லாம் என் நிலையை பார்த்து சிரிப்பா இருக்கு...! எல்லாம் என் நேரம்.. “ என்று சலித்துக்கொண்டவன், அடுத்து சுரபியின் பக்கமாக நகர்ந்து, சுரபியை பாவமாக பார்த்து,  

“சுரபி மேடம்... நீங்களாவது என் மேல கொஞ்சம் கருணை காட்டுங்களேன்..!  விஷ்வா பயலை போலவே என்னையும் மன்னுச்சு விட்டுட சொல்லுங்களேன்...” என்று மரியாதையுடன் அவளிடம் கெஞ்சி வைத்தான்..!

அதைக்கண்ட சுரபிக்கும் பாவமாக இருந்தது..!

எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியவள்,

“பரவாயில்லை தனா...  பாவம் விக்கி... இனிமேல் பஞ்சுவலா இருப்பார்..! எல்லா மீட்டிங்ம் ப்ராப்பரா அட்டென்ட் பண்ணுவார்...ப்ளீஸ்...” என்று கொஞ்சம் குழைந்து , கெஞ்சலாக கேட்க, தன் மனைவியின் ப்ளீஸில் க்ளீன் போல்டாகிப் போனான் விகர்த்தனன்..!

அவளின் குவிந்த இதழ்களையே ஒரு நொடி தாபத்தோடு பார்த்து வைத்தான்..!

இங்கு சினேகாவோ  சுரபி சொன்னதைக் கேட்டு மீண்டும் வாயில் நாசுக்காக விரலை வைத்து  பொத்திக் கொண்டு சிரித்தாள்..!  

நேற்று நடந்த க்ளைன்ட்  மீட்டிங்கிற்கு பத்து  நிமிடங்கள் தாமதமாக வந்து விட்டு, அந்த க்ளைன்ட் இடம்  லெப்ட் அன்ட் ரைட் வாங்கி கட்டிக்கொண்டது, நினைவு வர முழங்கையால் விக்கியை இடித்தாள் சினேகா.

“நீயெல்லாம் பஞ்சுவலா இருந்திடுவியா என்ன ?”  என்று நக்கலாக பார்த்து வைக்க, அவனோ  அவளை முறைத்தான்..!  அமைதியாக இரு என்று பார்வையால் அதட்ட,

“அப்படியா விக்கி...! இனிமேல் பஞ்சுவலா இருப்பியா?  என்று விகர்த்தனன், புருவத்தை உயர்த்தி அவனை ஊடுருவிப் பார்க்க,  

“எ...எ...  எஸ் பாஸ்...இப்பல்லாம் நான்  பஞ்சுவலாத்தான் இருக்கேன் பாஸ்... உங்க மீட்டிங்கிற்கு பிறகு எல்லா மீட்டிங் ஐயும் பக்காவா அட்டென்ட் பண்ணிடறேன் பாஸ்...” என்று எக்ஸ்ட்ரா  பில்டப் கொடுத்து  மீண்டும் மாட்டிக்கொண்டான்..!

“அப்படியா? அப்ப நேற்று நடந்த  அந்த கிளைன்ட்  மீட்டிங்கிற்கு  ஏன் 10 நிமிஷம் லேட்டாக வந்த?”  என்று மடக்கிவிட, அங்கிருந்த  அனைவர் முகத்திலும் அப்படி ஒரு ஆச்சரியம்..!

விக்னேஷ் முகத்திலோ அப்பட்டமான அதிர்ச்சி..!  

“எப்படி தெரிந்தது?  அதுவும்  ஒரு சாதாரண ப்ராஜக்ட் மேனேஜர்... அவன் ஒரு க்ளைன்ட் மீட்டிங்கிற்கு தாமதமாக வந்தது எப்படி தெரிந்தது..!  அதைக்கூட நோட் பண்ணி வச்சிருக்கானே இந்த நெட்டை...”   என்று புரிய,  

“ஹீ ஹீ ஹீ.... “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தவன்

“பாஸ்.. எப்படி பாஸ் தெரிந்தது....?  என்று விக்னேஷ் வார்த்தை வராமல் தடுமாற

“டேய் விக்கி...!  நான் ஒரு பிசினஸ்மேன்...  எனக்கு என் அலுவலகத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் என் பார்வைக்கு வந்து விடும்..! அது சிறு தூசி, துரும்பாக இருந்தாலும்  கூட என் பார்வைக்கு வந்துவிடும்...

அதனால் தான் சக்ஸஸ்புல்  பிஸ்னஸ் மேன் ஆக இருக்கிறேன்...”  என்று சிரிக்க, சுரபிக்கோ  தன் கணவனை எண்ணி பெருமையாக இருந்தது.  

அவன் சொல்வது கரெக்ட் தானே..! அவனை சுற்றி ஆயிரம் கண்கள் எப்பொழுதும் விழித்துக் கொண்டே இருக்கும் என்று அடிக்கடி சொல்வது எவ்வளவு உண்மை என்று இந்த விக்கி விஷயத்திலயே தெரிந்து விட்டதே என்று  பூரிப்புடன் தன் கணவனை மெச்சுதல் பார்வை பார்த்தாள்.!

“இட்ஸ் ஓகே தனா..!  இந்த ஒரு முறை மன்னித்து விட்டுடுங்க... இனிமேல் விக்கி அப்படி நடந்துக்க மாட்டார்..!  ஆமா தானே விக்கி? “ என்று கண்களால் ஜாடை செய்ய,

“ஆமா ஆமா இனிமேல் இப்பவும், எப்பவும்  பஞ்சுவலா ஆன் டைம்க்கு வந்திடுவேன்..!  உங்க பொண்ணோட இந்த ஹேப்பி டே  ல இந்த அடியேனையும் மன்னித்து ஹேப்பியா  அனுப்பி வைங்க பாஸ்...” என்று காலில் விழாத குறையாக கெஞ்ச,  

விகர்த்தனனோ   தன்னை மறந்து வேற உலகத்திற்கு சென்று கொண்டிருந்தான்..!  

தன்னவளின்  தனா  என்ற அழைப்பு அவனை  எங்கேயோ மாய உலகுக்கு இழுத்துச் சென்றிருந்தது..!  

முதல் முறை அவள் அவனை தனா என்று அழைத்த பொழுது புரியவில்லை அவனுக்கு..!  

அதன் பிறகுதான் புரிந்தது..!

தனா  என்பது அவன் பெயரின் இறுதியாக இருந்த தனன் என்பதை  செல்லமாக சுருக்கியிருக்கிறாள் என்று..!

இதுவரை எல்லாரும் அவனை விகா என்றுதான் அழைத்தது..!  இல்லையேல் அவன் முழுப்பெரையும் சொல்லி விகர்த்தனன் என்றுதான் அழைத்திருக்கிறார்கள்..!

தனா என்று யாரும் அழைத்ததில்லை..!  

சிலநேரம் அவன் அன்னை மட்டும் தனா என்று  சொல்லி அவனை செல்லம் கொஞ்சி இருக்கிறாள்.  

திடீரென்று சுரபி அவனை  அப்படி அழைக்கவும், அவன் உள்ளம் துள்ளி குதித்தது..!

கண்களில் காதல் பொங்க,  தன் மனைவியை ரசனையோடு பார்த்து வைத்தான் விகர்த்தனன்..!

தன் கணவனின் அந்தப் பார்வை அவளுக்குள்ளும் சிலிர்ப்பை உண்டாக்கியது. அப்பொழுதுதான் தன்னை மறந்து அவனை தனா  என்று அழைத்து வைத்தது மண்டையில் உரைத்தது..!

அவனை மனதிற்குள் அப்படி அழைத்து செல்லம் கொஞ்சியது.இன்று தன்னை மறந்து வெளிவந்து விட்டதை எண்ணி அவள் முகம் கன்றிப்போனாள்..!  

கன்னங்கள் செம்மையுற, தன் கீழ் உதட்டை கடித்துக்கொண்டு  தலையை குனிந்து கொண்டாள்

அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்ட மற்றவர்களுக்கு ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது..!  

விக்கிக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது..!

“அப்பாடா... பாஸ் இப்ப ரொமாண்டிக் மூடில் இருக்கிறார்..!  இதை சாக்காக வைத்துக் கொண்டு எப்படியாவது எஸ் ஆகிவிட வேண்டும்...”  என்று அவசரமாக எண்ணியவன்,

“பாஸ்...  அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேன்...  நாளைக்கு கரெக்ட் டைமுக்கு ஆபீஸ் வந்திடறேன்... என்னுடைய ஐடி கார்ட் எதுவும்  பிளாக் ஆகிடாதே...”  என்று  பவ்யமாக கேட்க,  அதற்குள் தன் மனைவ்யிடம் இருந்து தன் பார்வையை மாற்றிக் கொண்டவன்

“ஹே... பிராடு... எங்க எஸ் ஆக பார்க்கிற..! நான் எப்ப உன்னுடைய லேப் ஆப் ஐ விட்றா பண்ணேன்? “ என்று குறும்பாக சிரிக்க,

“ஹீ ஹீ ஹீ.. அதுதான் எனக்காக உங்க மேலிடமே ரெக்கமண்ட் லெட்டர் கொடுத்து இருக்காங்களே..! இன்னுமா என்னை மன்னிக்க மாட்டிங்க? “ என்று குறும்பாக விக்கியும் சிரிக்க,

“ஆஹான்... மேலிடமாவது.. கீழிடமாவது..? யாருடைய ரெக்கமண்டேசன் வந்தாலும் இந்த விகா அவன் நினைத்ததைத்தான் செய்வான்..!

ஸோ விஷ்வா...  நாளைக்கு..இல்லை இல்லை.. இன்னைக்கே  இவனுடைய ஐ.டி கார்டை பிளாக் பண்ணு...”  என்று செல்லமாக முறைக்க,  

“ஐய்யய்யோ... பாஸ் நான் வாங்கின இ.எம்.ஐ எல்லாம் இருக்கே..ஒரு ட்யூ மிஸ் ஆனாலும் அதுக்கு இன்ட்ரெஸ்ட்..பெனாலிட்டி.. அந்த பெனாலிட்டிக்கு ஒரு ஜி.எஸ்.டி என்று போட்டு தாக்கிடுவாங்க பாஸ்...!

தயவு செய்து இந்த ஒரு தரம் மன்னிச்சிடுங்க... சுரபி மேடம் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா ரெகமெண்டேஷன் பண்ணுங்க...”  என்று கெஞ்ச,  

அருகில் நின்ற விஷ்வாவோ, தன் நண்பனை பாக்க பாவமாக இருக்க, போனால் போகட்டும்  என்று   கொஞ்சம் மனம் இறங்கியவன், தன் பாஸ் ன் வீக் பாயிண்ட் ஐ அறிந்து இருந்தவன், தன் நண்பனுக்கு ஐடியா கொடுத்தான்..!  

“டேய் விக்கி... ! பெரிய இடத்தை விட சின்ன மேடத்தோட காலை புடி...நம்ம பாஸ்கிட்ட  இந்த சின்ன மேடத்தோட பேச்சு தான் எடுபடும்...” என்று அவன் காதில் கிசுகிசுக்க,

“அப்படியா? அதையும் தான் செஞ்சுடலாம்...செஞ்சுதான் ஆகணும்...! எல்லாம் என் நேரம்..!

ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டா வந்தா என்னமோ பெரிய கொலை குத்தம் பண்ணிட்ட மாதிரி இந்த ஹிட்லர் பாஸ் இப்படி பனிஷ் பண்றாரே... தி இஸ் நாட் பேர்.... ”

என்று மனதிற்குள் கருவியவன், தன் நிலையை எண்ணி நொந்து கொண்டான் விக்கி..!

Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews