மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Wednesday, September 28, 2022

கனவே கை சேர வா-2

 


அத்தியாயம்-2

ள்ளி முடிந்து வந்ததும் அம்மா அம்மா என்று அவளை சுற்றிக் கொண்டிருப்பாள் பூங்கொடி மகள்...!   

ஆனால் வயலில் வேலை முடிந்து ராசய்யா வீட்டிற்கு வந்ததும், அதுவரை சுற்றிக்கொண்டிருந்த அம்மாவை அம்போ வென விட்டுவிட்டு அப்பா என்று ஓடிச்சென்று அவனை கட்டிக் கொள்வாள்..

அவன் குனிந்து அவளை  அள்ளி எடுத்துதலைக்கு மேல தூக்கி போட்டு பிடித்து, அவள் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து, பின் சற்று நேரம் தன் மகளை கொஞ்சிவிட்டுத்தான்  குளிக்க செல்வான்..!  

அந்த குட்டியும், வாயெல்லாம் பல்லாக சிரித்தபடி, கையோடு டவலை எடுத்துக்கொண்டு போய் குளியலறைக்கு பக்கத்திலேயே நின்று கொள்வாள்.  

ராசய்யா குளித்துவிட்டு வந்ததும், தன் மகளை தூக்கிக்கொள்ள,  தன் தந்தைக்கு அவளே  தலையை துவட்டி விடுவாள்.  

அதை பார்க்கும் பூங்கொடிக்குத் தான் காதில் புகை வட்ட வட்டமாக வரும்

அவளுக்கு திருமணம் ஆன நாளிலிருந்தே பூங்கொடி தான் தன் மாமனுக்கு தலையை துவட்டி விடுவாள்.

குளித்து விட்டு ஈரம் சொட்ட சொட்ட வரும் தன் கணவனை வெகு அருகில் நின்று சைட் அடிக்கவும், துவட்டும்பொழுது வேண்டும் மென்றே அவன் உடலோடு ஒட்டி உரச கிடைக்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பாள்..!    

அவள் எதிர் பார்த்ததை போலவே ராசய்யாவும் அவளின் இடை பற்றி இழுத்து தன்னோடு செர்த்து அணைத்துக் கொள்ள, அப்பொழுது நடக்கும் ஒரு குட்டி ரொமான்ஸ்க்காகவே தவம் இருப்பாள் பூங்கொடி.  

அதனாலேயே அவன் குளித்துவிட்டு வரும்போதெல்லாம், கையில் டவலை வைத்துக்கொண்டு,  தயாராக நிற்பாள் பெண்ணவள்.  

ஆனால், தன் மகளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்ததும்,  இந்த தலை துவட்டும் உரிமை  அவளிடம் சென்று விட்டது.

தான்தான் தன் அப்பாவுக்கு துவட்டி விடுவேன் என்று டவலை எடுத்துக்கொண்டு ஓடி விடுவாள்.  

சில நேரம் பூங்கொடியும் எரிச்சலுடன் தன் மகளுடன் மல்லுக்கு நிப்பாள்.

“நான் தான் என் புருஷனுக்கு தலை துவட்டுவேன்... அந்த உரிமை எனக்கு மட்டுமே...” என்க, அந்த குட்டியும் விடாமல்

“நான்தான் என் அப்பாக்கு தலை துவட்டுவேன்...அப்பாக்கு நான்தான் பர்ஸ்ட்...” என்று கழுத்தை நொடித்துக்கொண்டு போட்டிக்கு நிக்க,  தாய்க்கும் மகளுக்கும் பெரும் சண்டையே நடக்கும்.  

அதைக்கண்டு ராசய்யா இதழ் விரித்து சத்தமாக சிரித்து கொள்வான்.

ஆனாலும் தன் மகளுக்குத் தான் முதல் உரிமை கொடுப்பான்.  

அதைக்கண்டு, புசுபுசுவென்று கோபம் பொங்க, தோள்பட்டையில் முகத்தை இடித்துக் கொண்டு,  இருவரையும் ஒரு முறை முறைத்தபடி நகர்ந்து சென்று விடுவாள் பூங்கொடி.

தாய், மகளின் உரிமைப்போராட்டம்   அத்தோடு நின்று விடாது..!  

ராசய்யா சாப்பிட வரும்போது அவனுக்கு  தட்டை எடுத்து வைத்து, அந்த தட்டில் பூங்கொடி சமைத்து வைத்திருக்கும் பதார்த்தங்களை  எல்லாம் எடுத்து வைப்பது...தண்ணீர்  கொண்டு வந்து வைப்பது என  தன் தந்தைக்காக அத்தனையும் பார்த்து பார்த்து செய்தாள் அவன் மகள்..!  

அதை காணக் காண,  பற்றி கொண்டு வரும் பூங்கொடிக்கு.  

தன் மகளை முறைத்தபடி அவளும் உட்கார்ந்து சாப்பிடுவாள்.  

ராசய்யாவும் தன் மனைவியின் கோபத்தை ரசித்தபடியே, தன் மகளை அருகில் அமர வைத்துக்கொண்டு, அவளுக்கும் ஊட்டி விட்டவாறு அவனும் உண்டு முடிப்பான்..!

சாப்பிட்ட பின் கதை இன்னும் மோசமாகி இருக்கும்..!

கை கழுவியதும், தன் மகளை அள்ளிக்கொண்டு அங்கு தாழ்வாரத்தில்  காத்தாட போடப்பட்டிருக்கும் கட்டிலுக்கு செல்வான்.  

தன் மகளை தன் மார்பில் படுக்க வைத்துக்கொண்டு, அவள் தலையை வருடியபடி,   அன்றைய கதைகளை சொல்லுவான்

அந்த குட்டியும், அவன் மீசையைப் பிடித்து இழுத்தும்,  தலைமுடியை களைத்தும், கிளுக்கி சிரித்தபடி தன் தந்தை மீது படுத்துக்கொண்டு கதை கேட்பாள்.  

பூங்கொடி வேண்டுமென்றே அவன் பக்கத்தில் தன் கட்டிலை தூக்கி சென்று பொத்தென்று  போட்டுவிட்டு, அதில் ஏறி படுத்துக்கொண்டு இருவரையும் பார்த்து முறைத்துக் கொண்டிருப்பாள்.

தன் மனைவியின் சிறுபிள்ளைத்தனமான கோபத்தைக்காண  ராசய்யாவுக்கு சிரிப்பு பொங்கி வரும். ஆனாலும் அதை அடக்கி கொண்டு, வேண்டுமென்றே தன் மகளுடன் மட்டுமே கதை அடிப்பான்.  

கதை பேசி முடிந்த பிறகு அவள் மகள் உறங்கியதும்  அவளை கஷ்டப்பட்டு அவன் மார்பில் இருந்து பிரித்து எடுத்து அறைக்கு உள்ளே  இருக்கும் படுக்கையில்  படுக்க வைத்து விட்டு வருபவனுக்கு, அப்பொழுதுதான் தன் மனைவி கண்ணில் படுவாள்..!

சண்டைக் கோழியாய் சிலிர்த்துக்கொண்டும், முறுக்கிக்கொண்டு படுத்திருக்கும் தன் மனையாளின் அருகில் சென்று அவளை அள்ளி அணைத்துக் கொள்வான்.  

அதுவரை தன் கணவனை துவம்சம் செய்யும் ஆவேசத்தில் இருந்த பெண்ணவளோ,  அவனின் அந்த தாப அணைப்பில்   அப்படியே பாகாக உருகி விடுவாள்.  

தன் கோபத்தை எல்லாம் மறந்துவிட்டு  தன் கணவனுடன் இழைந்து விடுவாள்.  

ஆனால் அதற்கும்  சில நேரம் ஆப்பு வைத்து விடுவாள் அவள் மகள்..!

அவர்கள் கூடலின் நடுவில், படுக்கையில் இருந்து  எழுந்து வந்து விடுவாள் அந்த குட்டி..  

தன் மகளின் சிறு அசைவு கேட்டாலும்,  தன் மனைவியை அம்போவென்று விட்டு விட்டு அவசரமாக எழுந்து சென்று, தூக்கத்தில் எழுந்து கண்ணை கசக்கியபடி வரும் தன் மகளை  அள்ளிக்கொண்டு, படுக்கைக்கு சென்று,  அவளை படுக்க வைத்து, தட்டி கொடுத்து, அவளை உறங்க வைப்பதில் மும்முரமாகி போவான் அந்த பாசக்கார தந்தை..!  

உணர்வுகள் தூண்டப்பட்ட நிலையில் அதை அடக்குவது பூங்கொடிக்குத்தான் கஷ்டமாக இருக்கும்.  

அப்பொழுதெல்லாம் தன் மகளின் மீது எல்லையில்லாத கோபம் பொங்கி வரும் பெண்ணவளுக்கு.. 

“சை.. சரியான தொல்லை இவ...என் புருஷனை என்கிட்ட இருந்து பிரிக்க வேண்டியே  பொறந்து வந்து இருக்கா... பேசாம அன்னைக்கு என் புருஷன் சொன்ன மாதிரி, கருவிலயே இவளை  கலைச்சு இருக்கணும்.

அவர் சொல்ல சொல்ல கேட்காம நான்தானே பெத்துக்கிட்டேன்.. இப்ப அனுபவிக்கிறேன்... “ என்று வாய்விட்டு புலம்பி, செல்லமாக தன் மகளை திட்டி தீர்ப்பாள் பூங்கொடி.

அதனால் இரவைத் தவிர்த்து பகலில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தன் மாமனுடன் இழைந்து கொள்வாள்  பூங்கொடி.  

இப்பொழுதும் அப்படித்தான்..!  

அந்த அந்தி சாயும் வேளையில் தன் மாமனை தனியாக சந்திக்க, அவனோடு சரசமாட வந்திருந்தவளின் ஆசையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டாள் அந்த குட்டி.

“சே... நாங்க கொஞ்சம் நேரம்  சந்தோஷமா இருந்தா பொறுக்காதே இந்த குட்டி கருவாச்சிக்கு.. இதோ  நந்தி மாதிரி குறுக்க வந்துட்டா...! இனிமேல் இந்த மனுசனுக்கு நானெல்லாம் கண்ணிலயே படமாட்டேன்... ”

என்று மனதிற்குள் கருவியவள், மானசீகமாக கழுத்தை நொடித்தபடி, தூரத்தில் ஓடி வந்து கொண்டிருந்த தன் மகளை எரிச்சலோடு உறுத்து விழித்தாள்...!  

பூபோட்ட காட்டன் பாவாடையும்,  அதற்கு ஏற்ற மாதிரியான மேல் சட்டையும் அணிந்து கொண்டு, தன்  இரு கைகளையும் பக்கவாட்டில் விரித்து வைத்துக் கொண்டு,  கீழே விழுந்து விடாமல் வரப்பில்  பேலன்ஸ் பண்ணியவாறு  அவர்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள் அந்த குட்டி தேவதை.  

தன் மகளைக் கண்டதும் ராசய்யாவின் முகம் பிரகாசித்தது.

அவள் அவன் அருகில் வரும்வரை காத்திருக்காமல், வேகமாக எட்டு வைத்து தன் மகளை  நோக்கி சென்றவன்...

அவளை அப்படியே கையில் அள்ளிக் கொண்டு மேலே தூக்கிப் போட்டு பிடிக்க, அதில் அந்த குட்டியும் மலர்ந்து கிளுக்கி சிரிக்க, அதில் இன்னுமாய் உருகியவன், அவளின் பட்டு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.  

அந்த குட்டியும் தன் தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் பசக் என்று அழுத்தமாக முத்தமிட்டாள்

கூடவே முத்தமிடும்போது அவன் கன்னத்தை செல்லமாக கடித்து வைத்தாள் அந்த குட்டி...!

தன் மகளின் செயலில் தன் மனையாளின் நியாகம் தான் வந்தது ராசய்யாவுக்கு..!

பூங்கொடியும் அப்படித்தான்..!

ரொம்பவும் மோகம் கொண்டு கிளர்ந்து இருக்கும் நாட்களில் அவன் கன்னத்தை நன்றாகவே கடித்து வைப்பாள்..!  

இப்பொழுது அதே போல் அவன்  மகளும் செய்து வைக்க, சிரிப்பு வந்தது..!  

“ஹா ஹா ஹா ஹா எல்லாத்திலயும் எதிரும் புதிருமாக இருக்கும் தாயும், மகளும், இந்த முத்தம் கொடுப்பதில் மட்டும் ஒரே மாதிரி...”  என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.!  

அவர்கள் இருவரையும் ஒருவித பொறாமையோடு பார்த்தவாறு நின்றிருந்தாள் பூங்கொடி.

தன் மகளை மார்போடு அணைத்தவாறு  தன் மனைவியை நோக்கி வந்தான். கூடவே தன் மகளுடன் வளவளத்தபடி..!  

“ஏன் டா...  கண்ணு எதுக்கு இம்புட்டு வேகம் ஓடி வர..  வரப்புல வழுக்கி விழுந்துட்டா... அதோட அங்கங்க பாம்பு  இருக்கும்...அதனால் எப்பொழுதும் பாத்து கவனமாதான் வரணும்... “ என்று தன் மகளை செல்லமாக கண்டிக்க, அதைகேட்ட பூங்கொடிக்கு சுருசுருவென்று கோபம் பொங்கி வந்தது.  

“டேய் கருவாயா...  நானும்தான் உன் மகளை விட வேகமா ஓடி வந்தேன் கொஞ்சமாச்சும் என்னை கண்டுகிட்டியா நீ...அக்கறை காட்டினியா?  என்று உள்ளுக்குள் கருவியவாறு  அவனை முறைக்க,  

அவளின் மனதை கண்டு கொண்டவனாய் ஒற்றைக்கண் சிமிட்டி மந்தகாசமாக புன்னகைத்தான் அவள் கணவன்.

அவளோ அந்த புன்னகையை ரசித்தாலும், வரவழைத்த மிடுக்குடன், கழுத்தை நொடித்தபடி மறுபக்கம் திருப்பி கொண்டாள்.  

“ஆமா...  எதுக்கு குட்டிமா இங்கே ஓடி வந்த? “ என்று  தன் மகளை விசாரிக்க,  

அவளுக்கும் அப்பொழுதுதான் தான் எதுக்கு  வந்தோம்   என்பது நினைவு வந்தது

“சும்மாதான் பா...  உன்னை பாக்கணும் போல இருந்துச்சு... அதான் விளையாண்டுக்கிட்டு இருந்த நான்  அப்படியே ஓடி வந்துட்டேன்...”  என்று தன்  பச்சரி பற்கள் வரிசையாக தெரிய வெள்ளையாய் சிரித்தாள் மகள்.  

“அடிப்பாவி...  உனக்கு இப்பதான் உன் அப்பனை  பாக்கணும்னு நினைப்பு வரணுமா? உன் அருமை அப்பாதான் இன்னும்  கொஞ்ச நேரத்தில அங்க வருவாறு இல்ல.. அப்ப பாத்துக்க வேண்டியது தான... அதுக்கா இம்புட்டு தூரம் ஓடி வந்த? “ என்று தன் மகளை செல்லமாக முறைக்க,

“ஆமா... எனக்கு என் அப்பாவ  பாக்கணும்னு தோணுச்சுனா உடனே  வந்திடுவேன்...அவர் வரும்வரைக்கு எல்லாம் காத்திருக்க மாட்டேன்...”  என்று பெருமையாக சொல்ல, தன் மகளின் அந்த பாசத்தில் நெகிழ்ந்து போனான் ராசய்யா.

இப்பொழுது மட்டும் அல்ல. வீட்டில் இருக்கும் பொழுதும், விளையாடுவதற்கு என்று ஊருக்குள் சென்றாலும் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு ஓடி வந்து அவனிடம் ஒட்டி உரசி செல்லம் கொஞ்சிவிட்டு மீண்டும் விளையாட ஓடி விடுவாள்.

தன் மகளின் பாசத்தில் நெகிழ்ந்தவன், அவளை இன்னுமாய் மார்போடு அணைத்துக்கொண்டான்..!  

“அது சரி... நீ  எதுக்கு இங்க வந்த மா? என்று  தன் அன்னையை குறுகுறுவென்று பார்த்தவாறு இப்பொழுது  மகள்  கேள்வி கேட்க,  பூங்கொடிக்கும் அவள் எதுக்கு இங்க வந்தாள்  என்று அப்பொழுது தான் யோசித்தாள்.  

அவளுக்கும் தன் கணவனை பார்க்க வேண்டும்..!  அதுவும் இந்த அந்திசாயும் மாலை நேரத்தில்...  வயல் நடுவே தன்னவனின் இறுகிய அணைப்பையும்பு, காதலோடு அவன் கொடுக்கும்  முத்தம்...  

இதையெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று தான் தன் வேலை எல்லாம் முடிந்த கையோடு அவனைத் தேடி ஓடி வந்தது.!  

இப்பொழுது அது நினைவு வர,  அவளின் கன்னங்கள் தானாக தூரத்தில் தெரிந்த அந்தி வானமாக சிவந்து போனது..!

“சொல்லு மா...  நீ எதுக்கு வந்த? என்று அவள் மகள்  விடாமல் கேட்க,  

“ஹ்ம்ம்ம் நீ எதுக்கு வந்தியோ.. அதுக்குத்தான் நானும் வந்தேன்... “ என்று கழுத்தை வெட்டினாள் பெரியவள்.

“ஹா ஹா ஹா என் அப்பாவை பாக்க நான் வந்தேன்...” என்று மகள் பெருமையாக சொல்ல,

“நானும் என் புருஷனை பாக்க வந்தேன்..” என்றாள் அவளும் கெத்தாக.

“நான் என் அப்பாக்கு இப்படி முத்தம் கொடுக்க வந்தேன்...” என்றவாறு அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் முத்தம் பதிக்க,

“ஏன்?  நீ மட்டும்தான் முத்தம் கொடுப்பியா? உனக்கு மட்டும் தான் உரிமையா? .. நானும் என் புருஷனுக்கு முத்தம் கொடுக்கத்தான் வந்தேன்...” என்றவாறு அவன் அருகில் வந்தவள், அவனின் மறு கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தாள்..!

கூடவே இலவச இணைப்பாக செல்ல கடியும்...!   

அதில் இன்னுமாய் நெகிழ்ந்து போனான் அந்த ஆறடி ஆண்மகன்..!  

அதோடு தனக்காக அந்த இரு பெண்களும் போட்டி போட்டுக்கொள்வதை காண, கர்வமாக, பெருமையாக இருந்தது ஆணவனுக்கு..!

ஒரு காலத்தில், அவன் சாப்பிட்டானா என்று கூட கேட்க ஆளில்லாமல் அனாதையாக இருந்தவனுக்கு...  இன்று அவனை உரிமை கொண்டாட போட்டி போடும் அந்த இரு பெண்களும் அவனுக்கு தேவதைகளாக தெரிந்தனர்.

தன்னை ரட்சிக்க வந்த யட்சினி... தேவதைகள் என பூரித்தவன், ஒரு கையில் தன் மகளை வைத்திருந்தவன்...  மறு கையால் தன்னவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன்...  அவளின் நெற்றியில் மெல்ல இதழ்  பதித்தான்..

“ரொம்ப நன்றி டி கருவாச்சி....” என்று குரல் கரகரக்க, அவளின்  காதோரம் நெகிழ்ச்சியுடன் கிசுசுக்க, அதுவரை தன் மகளுடன் மல்லு கட்டி கொண்டிருந்தவள்...

தன் கணவனின் மனநிலையை கண்டு கொண்டு அவளும் நெகிழ்ந்து போய் அவன் இடுப்பை கட்டிக்கொண்டு, அவன் தோளில் வாகாக சாய்ந்து கொண்டாள்.

யாருமில்லாத அனாதையாக இருந்தவனுக்கு இப்பொழுது அவன்  மீது அன்பையும் பாசத்தையும் அளவில்லாமல் கொட்டும் தன் மனைவியையும்   மகளையும் எண்ணி நெஞ்சம் பூரித்து போனது.

******  

அதேநேரம்

“என்ன மச்சான்?  குடும்ப போட்டோ எதுவும் எடுக்கறியா?  இப்படி பொண்டாட்டி ஒரு கையிலயும், புள்ளைய இன்னொரு கையிலயும்  வச்சுக்கிட்டு போஸ் கொடுத்து கிட்டு இருக்க...”  

என்று நக்கல் அடித்த படி அந்தப் பக்கமாக வந்தான் பாண்டி....ராசய்யாவின் நண்பன்..!

அவனைப் பார்த்ததும் பூங்கொடி, தன் கணவனை விட்டு சற்றுத் தள்ளி நின்று கொண்டாள்..!

“என்ன பூங்கொடி..!  என்னைப் பார்த்ததும் வெட்கப் பட்டு உன் புருஷனை விட்டு தள்ளி நிக்கற?  நான் பாக்காத காட்சியா?  அது தான் ஏழு வருஷத்துக்கு முன்னாடியே உங்களோட ஆட்டத்தை எல்லாம் பாத்தாச்சே..!  

இனிமேல் என்ன?  ஆனால் உனக்கு ரொம்ப தான் மச்சம் மச்சான்..!  

கல்யாணமாகி ஏழு வருஷமாகியும் இன்னும்  உன் பொண்டாட்டி உன்னையே சுத்தி சுத்தி வர்ற  மாதிரி மயக்கி  வச்சிருக்க.

ஹ்ம்ம்ம் என் பொண்டாட்டியும் தான்  இருக்காளே..! கல்யாணம் ஆன நாள் அன்றே அவ சுயரூபத்தை காட்ட ஆரம்பிச்சா...!  கொஞ்சம் கூட அவளை என்னால வசியம் பண்ண முடியல...”  என்று சோக கீதம் வாசிக்க,

“ஹா ஹா ஹா அதுக்கெல்லாம் நீ செட்டாக மாட்ட  மச்சான்..பல் இருக்கிறவன் தான் பக்கோடா சாப்பிட முடியும்..!  அதனால பேசாம கிடைக்கிற மிக்சரை தின்னுட்டு போ..” என்று ராசய்யா நக்கலாக சிரிக்க, பூங்கொடியும் சிரித்து வைத்தாள்.

“போதும் மச்சான்.!  இதுக்கு மேலயும் என்னை டேமேஜ் பண்ணாதய்யா.. நாம தனியா  பேசிக்கலாம்... “ என்று சொல்லி,   ராசய்யாவின் பேச்சுக்கு முற்று புள்ளி வைத்துவிட்டு வேற பேச்சுக்கு மாறினான்..!

அப்போது தான் ராசய்யாவின் கையில் இருந்த அவன் மகளை பார்த்தவன்,

“ஹோய்... குட்டி கருவாச்சி..!  ஏழு கழுதை வயசு ஆயிடுச்சு..!  இன்னும் உங்க அப்பா மேல ஏறிக்கிட்டிருக்கிற...இறங்கி நடந்து வாடி...”  என்று அவள் கன்னத்தை பிடித்து செல்லமாக கில்ல,  

பட்டென்று அவன் கையை தட்டி விட்டவள்,

“என் பெயர் ஒன்னும் கருவாச்சி இல்லை...அப்புறம் எனக்கு தமிழில்  பிடிக்காத ஒரே வார்த்தை கருவாச்சியாக்கும்   

இன்னொரு தரம் என்னை அப்படி கூப்பிட்டிங்க, என்ன செய்வேனு எனக்கே தெரியாது... ஜாக்கிரதை... அம்புட்டுதான்... சொல்லிபுட்டேன்......” என்று படபடவென்று பொரிந்தாள் அந்த குட்டி.  

அதைக்கேட்டு வாயடைத்து நின்றான் ராசய்யா...!  தன் மகளின் அதட்டலில், பாண்டியோ பேயறைந்த மாதிரி அதிர்ந்து நின்றான்..!

அவன் முகத்தைக் கண்டதும் வாய் விட்டு சத்தமாக சிரித்தான் ராசய்யா..!  

“அப்படி சொல்லுடா குட்டி தங்கம்...இப்பதான் நீ என் பொண்ணு...”  என்று தன் மகளை கட்டிக் கொள்ள அவளும் பெருமையாக சிரித்தாள்..!  

அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்ட பாண்டி,

“சரிதான்...சரியான வாயாடி இவ...  அப்புறம் வாயாடி பெத்த புள்ள வேற எப்படி இருப்பா...”  என்று பூங்கொடியை பார்க்க,

அதைக்கேட்டு கடுப்பான பூங்கொடியோ  அவள் கையில் அணிந்திருந்த வளையலை பின்னுக்கு தள்ளி, தன் கை முஷ்டியை இறுக்கி, அவனை அடித்து விடுவதை போல, அவனைப் பார்த்து முறைத்தாள்.  

“ஆத்தி..! பூவு..நீ பூவல்ல... ஒரு ரௌடிங்கிறதை மறந்துட்டேன்...அதுவும் இப்ப  ராசய்யா பொண்டாட்டிங்கிறதையும் சேர்த்து மறந்துட்டேன்...! 

உனக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் உன் ரௌடித்தனத்தை எல்லாம் விட்டு போட்டு நல்ல புள்ளையா...குடும்ப குத்துவிளக்கா மாறிட்டனு தப்பு கணக்கு போட்டுட்டேன்...

தப்புதான் தாயி..!  என்ன விட்டுடு...!  இனிமேல் நான் அப்படி சொல்ல மாட்டேன்...” என்று தன் இரு காதையும் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதை போல ஆக்சன் பண்ணி, அவளிடம் மன்னிப்புக் கேட்க,  

“அது... அந்த பயம் இருக்கட்டும்..  என்ன பத்தி தெரியும் இல்ல...என்கிட்ட வச்சுக்காத பாண்டி..! “ என்று நம்பியார்  குரலில் மிரட்டலாக சொல்ல,  

“ஹ்ம்ம்ம் தெரியும்...தெரியும்....”  அந்த பாண்டி தன் தலையை வேகமாக உருட்டினான்..!  

மீண்டும் அதைக்கண்டு ராசய்யா வாய் விட்டு சிரிக்க,   அவன்  மகளும் மலர்ந்து சிரித்தாள்.  

“டேய்....என்னை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கு? குடும்பமே ஒரு மார்க்கமாதான் இருக்கிங்க...“  என்று பாவமாக கேட்டு வைக்க, அதற்கும் ராசய்யா வெடித்து சிரித்துக் கொண்டிருந்தான்..!  

பின் நால்வரும் வீட்டை நோக்கி நடக்க, ராசய்யாவிடம் பேசிக் கொண்டு வந்த பாண்டி, அந்த குட்டியிடம் திரும்பியவன்,

“ஆமாம்....வாயாடி...  நீ படிச்சு என்னவாகப் போற? என்று கேட்க,  

அப்பொழுதுதான் தன் தந்தையின் இடுப்பில் இருந்து இறங்கி, அவனின் கையை பிடித்தபடி வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தவள், ஒரு நொடி நின்று ,நேராக நிமிர்ந்து, தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு மிடுக்காக நிமிர்ந்து

“நான் டாக்டராகப் போறேன்...  டாக்டராகி இந்த ஊர்ல எல்லாருக்கும் இலவசமாக  வைத்தியம் பார்க்க போறேன்...”  என்று மிடுக்குடன் சொன்னாள் அந்த செல்ல குட்டி.  

தன் மகளின்  தோரணையில்...அவளின் நிமிர்வில்... அவளின் வார்த்தையில்  தெரிந்த உறுதியிலும் திகைத்துப் போய் விட,  

“எப்படியாவது தன் மகளை டாக்டராக்க வேண்டும்...”  என்பதையே தன் வாழ்நாள் கனவாக, லட்சியமாக முடிவெடுத்தான் ராசய்யா..!  

அவனின் கனவு கை சேருமா? பார்க்கலாம்..!

Share:

1 comment:

Followers

Total Pageviews

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *