அத்தியாயம்-24
சற்று நேரத்தில் அவனுக்கும் போதை தெளிந்து விட, அப்பொழுதுதான் என்ன நடந்தது என்று ரிவைண்ட் பண்ணி பார்த்தான்
விகர்த்தனன்..!
மந்தகாச புன்னகையுடன், சற்று முன் நடந்த நிகழ்வின் தாக்கத்தை அசை போட்டபடி
அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு கண் மூடி ரசித்து கொண்டு இருந்தான்.
அவனின் தீண்டலுக்கு அவள் உருகி, குலைந்து, கரைந்து நின்றது உரைக்க,
“ஆஹான்... அப்ப பொண்ணுக்கு என்னை பிடிச்சிருக்கு...என்னை
ஏத்துக்க எந்த தயக்கமும் இல்லை அவள் இடத்தில்.. இடையில் நிகா குட்டி வராமல் இருந்திருந்தால்....?”
அடுத்து என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கும் பொழுதே
உள்ளுக்குள் ஜிவ் என்று இருந்தது.
அவன் உடல் முறுக்கேற, அவன் உடலின் ஒவ்வொரு
அணுவும் அவளுக்காக ஏங்கியது.
முயன்று தன் கிளர்ச்சியை அடக்கியவன், மீண்டும் சற்றுமுன் நடந்ததை, நடக்க இருந்ததை எண்ணி உள்ளுக்குள் பரவசபட்டுக் கொண்டிருந்தான்.
*****
சற்று நேரத்தில் தன் மகளை குளிப்பாட்டி, அவளை தூக்கி இடுப்பில் வைத்தவாறு, அவளின் தலையை துடைத்தபடி வெளிவந்தாள் சுரபி.
மறந்தும் அவன் இருந்த பக்கம் திரும்பவில்லை அவள்.
ஆனால் அவனோ அவளின் முகத்தை தவிர வேற ஒன்று இந்த உலகத்தில் இல்லை
என்பதாய், ஆர்வமாக அவள் முகத்தையே... முகத்தை மட்டுமேதான் பார்த்துக்
கொண்டிருந்தான் விகர்த்தனன்.
அவளும் அதற்குள் தன் உணர்வுகளை முழுவதுமாக கட்டுப்படுத்தி
இருந்தவள், எதுவும் நடக்காதது
போல தன் மகளுக்கு தலையை துவட்டி கொண்டு இருந்தாள்.
“அப்பா... நீ போய் குளி.....”
என்று நிகா குட்டி அவனைப் பார்த்து ஆர்டர் போட, அவளின் அந்த அமர்த்தலான
கட்டளைக்கு ஒரு நொடி ஆச்சர்யத்தில் விழி விரித்தவன்,
பின் மெச்சுதலாக தன் மகளை பார்த்து புன்முறுவலித்தவாறு, தன் தொடை மீது கை ஊன்றி அவன் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து
எழுந்து அவள் அருகில் வந்தவன்,
“உத்தரவு இளவரசியாரே...” என்று வாயில் கை வைத்து, லேசாக தலை குனிந்து பவ்யமாக கூற, அவனின் செய்கையில் கிளுக்கி சிரித்தாள் அவன் மகள்.
தன் மகளையே ஒரு நொடி இமைக்க மறந்து பார்த்திருந்தவன், அவளை மேலும் சிரிக்க வைகக், அவள் வெற்றுடலில் கையால் ஊர்ந்து கிச் கிச் மூட்ட, அவளோ உடலை வளைத்து நெளிந்தபடி கலகலவென்று சிரித்தாள்.
தன் மகளின் சிரிப்பைக் கண்ட சுரபிக்கும் சிரிப்பு வந்தது...!
அதோடு தன் மகளின் இந்த மலர்ந்த சிரிப்பை காண அவள் மனம் நிறைந்து போனது.
அவளின் இந்த சிரிப்பு விகர்த்தனனை பார்த்த பிறகுதான்...அதாவது
அவள் தன் தந்தை... தன் அப்பா என்று இவனை
அடையாளம் கண்டு கொண்ட பிறகுதான் என்பது மனதில் உரைத்தது.
அப்படி என்றால் இந்த மாதிரி விளையாட்டெல்லாம்...மகளை கொஞ்சுவது
எல்லாம் அப்பாக்களுக்கே உரித்தான இயல்போ? சிங்கிள் மதராக
அவளை வளர்த்த பொழுது இப்படி மலர்ந்து விகாசிக்கவில்லையே..!
அப்பொழுதும் சிரிப்பாள் தான்.. ஆனால் இப்படி கலகலவென்ற
சிரிப்பல்ல.. அவள் சிரிப்பில் ஏதோ ஒரு குறை.. ஏக்கம் இருக்கத்தான் செய்தது. அது
அப்பாவுக்கான ஏக்கம் என்பது இப்பொழுது புரிந்தது.
சற்று நேரம் தன் மகளுடன் கிச் கிச் மூட்டி விளையாண்டவன், நாற்காலியில் நின்றிருந்த தன் மகளை வெற்று மார்போடு சேர்த்து
அணைத்துக் கொண்டவன்,
“உன்னால எனக்கு இன்னைக்கு ஸ்பெஷல் டே குட்டிமா...ஐம் சோ ஹேப்பி
டுடே... இதோ அப்பா குளிச்சிட்டு வந்திடறேன்...” என்றவாறு அவளின் கன்னத்தை செல்லமாக பிடித்து இழுத்து
கொஞ்சியவன்,
“உன்னாலயும் தான் மை டியர் பொண்டாட்டி.... “ என்று தன்
மனையாளின் காதில் ரகசியமாய் மீசை உரச கிசுகிசுத்தவன், அவள் குண்டு கன்னத்தை அழுத்தமாக
நிமிண்டி விட்டு வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
திடீரென்ற அவனின் அந்த தொடுகையில்...அவன் கன்னத்து நிமிண்டலில்
ஸ்தம்பித்து நின்றாள் சுரபி..
கூடவே சற்று முன் நடந்த நிகழ்வு மீண்டும் கண் முன்னே வந்தது.
அவன் கரத்தின் மெய் தீண்டலும், அவன் இதழின் இதழ் தீண்டலும், அந்த தீண்டலுக்கு தன் எதிர்ப்பை காட்டாமல் அவள் உருகி, குலைந்து இழைந்து கிடந்ததும் நினைவு வர, விதிர் விதிர்த்துப் போனாள்.
அப்பொழுது மட்டும் அல்ல...இப்பொழுது அதை நினைக்கும்பொழுது கூட
அவள் உடல் நெகிழ்வது புரிந்தது.
“இல்லை.... இது தப்பு...
இவனிடம் நான் குலைந்து நிற்கக்கூடாது.
அவன் என்னிடம் அத்து மீறக்கூடாது. அதற்கு
நான் இடம் கொடுக்கக் கூடாது...
அவனுக்கு நான் வெறும் பெயர் அளவில் மனைவி மட்டும்
தான்...மற்றபடி மனைவிக்கான எந்த ஒரு உரிமையும் அவனுக்கு நான் கொடுக்க கூடாது...
அவனாகவே அதை எடுத்துக்கவும் அனுமதிக்க கூடாது... ”
என்று உருப்போட்டுக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.
ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை பட்டு தெரிந்து கொண்டாள்
அந்த பேதைப்பெண்.
******
குளியலறைக்குள் சென்றவன், ஷவரை திறந்து விட்டு, அதன் அடியில் நிக்க, ஷ்வரில் இருந்து கொட்டிய அந்த
சில்லென்ற குளிர்ந்த நீர், உடலில் பட்டதும், தேகம் சிலிர்க்க, மீண்டும் அவன் உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.
அதை முயன்று கட்டுப்படுத்தியவன் குளித்து முடித்து ஒரு டவளை இடுப்பில்
கட்டியபடி வெளிவர, அதை கண்டவளுக்கோ மீண்டும் அவள் கன்னங்கள்
குங்குமம் ஆனது.
“சீ...கருமம்..கருமம்...” என்றபடி தன் வெட்கத்தை மறைக்க, மறுபக்கம் முகத்தை திருப்பிக்
கொண்டாள் சுரபி.
அவளின் சிவந்த கன்னங்களை வருட தவித்தது அவன் கரம்.
சற்றுமுன் உறவாடிய தன் இணையுடன் மீண்டும் ஜோடி சேர தவித்தது
அவன் இதழ்கள்.
அதை அடக்குவதற்கு அவன் பெரும்பாடு பட்டு போனான்...!
அதோடு இதுவரை, இந்த மாதிரி தன் உணர்வுகளை அவன்
கட்டுப்படுத்தியது இல்லை. அதற்கான அவசியமும் இருந்தது இல்லை.
அவன் கண் பார்வையிலேயே அவன் மஞ்சத்தில் பெண்கள் வந்து விழுந்து
கிடக்க, அவர்களுடன் உல்லாசமாக இருக்கவும், நினைத்த நேரத்தில் தன் வேட்கையை...தேவையை தீர்த்து கொள்வதிலும் எந்த தடையும் இருந்ததில்லை.
ஆனால் இப்பொழுது தனக்கு உரியவளான தன் மனைவியை நாடவும், அவளை ஆட்கொள்ளவும் தான் எத்தனை தடைகள்..!
முதலாவது அவன் மகள்.. அடுத்தது அவன்.!
ஆம்...அவனேதான்..!
ஏனோ அவளிடம் உடனே கணவனுக்கான உரிமையை எடுத்துக்
கொள்ள அவனுக்கு தயக்கமாக இருந்தது
அது ஏன், என்னவென்று தான் அவனுக்கு புரியவில்லை.!
அவனை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாகவும் சிரிப்பாகவும் வர, மெல்ல விசில்
அடித்தவாறு, புன்னகைத்தபடி அந்த ஆளுயர
கண்ணாடி முன் நின்று இருந்தான் விகர்த்தனன்...!
அப்பொழுதுதான் அவள் சீ...கருமம்..கருமம் என்று சொல்லி தலையை
திருப்பி கொண்டதில், அப்படி என்ன கருமமா
இருக்கு என்று குனிந்து பார்த்தவன்
“ஆஹான்... தொடை வரைக்குமாய் இருந்த டவலை பார்த்துதான் கருமம் னு முகத்தை திருப்பி
கொண்டாளா? சீக்கிரம் அதுவும் இல்லாமல்
பார்க்க வச்சிடலாம்..” என்று தனக்குள்ளே சிரித்துக் கொண்டான் விகர்த்தனன்.
******
தன் மகளுக்கு தலையை துவட்டிக் கொண்டு இருந்தாலும், பார்வை என்னவோ அடிக்கடி
கண்ணாடியில் தெரிந்த அவனின் பிம்பத்திடம் தான் சென்று நின்றது.
அதை ஓரக்கண்ணால் கண்டு கொண்டவனுக்கு மீண்டும் உள்ளுக்குள்
ஜிவ்வென்ற ஒரு உணர்வு...
“ப்ராடு... ஓரக்கண்ணால் என்னை சைட் அடிக்கிறாளா? இருக்கட்டும் அப்புறம்
வச்சிக்கிறேன் அவளை...” என்று உள்ளுக்குள்
சிரித்தபடி, கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தை பார்த்து
குறும்பாக கண்சிமிட்டி சிரித்து வைத்தான்.
அனிச்சையாக திரும்பியவள் பார்வை, கண்ணாடி வழியாக அவன் பார்வையை சந்திக்க, அதே நேரம் அவன் கண் சிமிட்டி மந்தகாசமாக சிரித்து வைப்பதையும் கண்டவள், தன்னை கண்டு கொண்டானோ என்று முகத்தில் அசடு வழிய, அவசரமாக வேற பக்கம் திரும்பி கொண்டாள்.
அவளின் செய்கையை ரசித்தபடி, உல்லாசமாக விசில் அடித்தபடி, தன் முன்னந்தலை கேசத்தில் கையை விட்டு இருப்பக்கமும் ஆட்ட, அவன் தலை முடியிலிருந்து நீர் துளிகள் கீழே
பட்டு சிதறியது.
அவன் குளித்துவிட்டு வெளியில் வந்து இன்னும் தலையை துவட்டாமல்
அப்படியே நின்று கொண்டு இருப்பது அப்பொழுதுதான் உரைத்தது.
அதைக்கண்டவளுக்கோ மனம் பதைத்தது.
“சை... ஆளு மட்டும் எருமை மாதிரி வளர்ந்து வச்சிருக்கான்... குளிச்சி
முடிச்சதும், அதுவும் எண்ணை தேய்ச்சு குளிச்சி முடிச்சதும்
உடனே . தலையை துவட்ட வேண்டும் என்ற பேசிக் அறிவுகூட இல்லை.
இப்படியே இருந்தால் சளி பிடிக்காதா?... இந்த எருமை…நெட்டை..க்கு இதுகூட தெரியலையே... “ என்று மனதுக்குள் தன் கணவனாகியவனை திட்டி கொண்டே
தன் மகளின் காதில் ஏதோ ரகசியமாக சொன்னாள்.
அடுத்த நொடி,
“அப்பா...தலைய துவட்டு... அம்மா சொன்னா...” என்று சுரபி சொல்லி
கொடுத்ததையும், சொல்லி
கொடுத்தவளையும் போட்டு கொடுத்துவிட, பெரியவளின் முகமோ அஷ்ட கோணலாகியது.
“அடிப்பாவி... கடைசியில் என்னையே போட்டுக் கொடுத்து விட்டாளே.
தலையை துவட்டுனு சொல்லுடினா , நான் சொன்னதாவும்
சேர்த்து சொல்லி வச்சிருக்கே இந்த குட்டி பிசாசு...
என்னை பற்றி என்ன நினைப்பான் இந்த நெட்டை? “ என்று செல்லமாக தன்
மகளை முறைக்க, தன் மீதான தன்னவளின்
அக்கறையில் மனம் நெகிழ்ந்தவன் மீண்டுமாய் உல்லாசமாக விசில் அடித்த படி
“தேங்க்ஸ் டா செல்லம் பார் யுவர் கேரிங்.... “ என்று சுரபியை
பார்த்து கண் சிமிட்டிவிட்டு, அருகில் இருந்த மற்றொரு
டவலை எடுத்து தலையை துவட்டியவாறு,
“அப்புறம் உன் அம்மாவுக்கும் எல்லாத்துக்கும் தேங்க்ஸ் சொன்னேன்
னு சொல்லு...” எல்லாம் என்பதை அழுத்தி சொன்னான்.
கூடவே தன் இதழை தன் கட்டை விரலால் வருடியபடி மந்தகாச
புன்னகையுடன் கண்ணாடி வழியாக அவளையே
பார்த்து கொண்டு இருந்தான்.
தன் மகளுக்கு தலையை துவட்டிக் கொண்டு இருந்தாலும், அந்த கண்ணாடியின்
வழியாக அவனின் செய்கை ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தாள்.
கண்ணாடியில் தெரிந்த அவனின் குறும்பு முகமும், இறுதியாக அழுத்தி சொன்ன
எல்லாத்துக்கும் தேங்க்ஸ்...
கூடவே அவனின் இதழை
சுட்டிக் காட்டியதும் அவன் எதை சொல்கிறான் என்று புரிய, மீண்டுமாய் அவள் கன்னங்கள்
அந்திவான செம்மையை பூசிக் கொண்டது.
******
அன்றிரவு விகர்த்தனன் வழக்கம்போல தன் மகளுக்கு கதை
சொல்லி உறங்க வைத்துக் கொண்டிருக்க, அவன் மஞ்சத்தில்
தலை வைத்து படுத்தவாறு ஒற்றைக்காலை எடுத்து அவன் மீது போட்டுக்கொண்டு கதை கேட்டு
கொண்டிருந்தாள் கர்ணிகா குட்டி.
இடையில் அவளின் கேட்கும் திறமையை ஆராய, சிறு சிறு கேள்விகளை கேட்டும், அவள் பதில் சொன்னால் அவளுக்கு ஹை-பை கொடுத்தோ, முத்தமிட்டோ பாராட்டை தெரிவித்தான்.
அதில் இன்னும் உற்சாகம் ஆனவள், தந்தை சொல்லும் கதையை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
சுரபியும் அவன் கதை சொல்லும் அழகை ரசித்தபடி, அவர்கள் பக்கமாய் திரும்பி பார்த்தவாறு கண் மூடி படுத்திருந்தாள்.
திடீரென்று அவள் இடையில் விழுந்தது வலிய கரம் ஒன்று.
திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க, இருவருக்கும் இடையில்
இருந்த கர்ணிகா இப்பொழுது படுக்கையின் மறு ஓரம் உறங்கி கொண்டிருந்தாள்.
அவள் கீழே விழுந்துவிடாமல் படுக்கையின் ஓரத்தில் சுற்றிலும்
தலையணையை வைத்திருந்தவன், இப்பொழுது
சுரபியின் அருகில்...! அவளை ஓட்டி..!
எப்பொழுது இந்த இடமாற்றம் நடந்தது என்று அவள் யோசிக்கும் முன்னே, இன்னுமாய் நெருங்கி
வந்தவன், அவளின் கழுத்து
வளைவில் முகம் புதைத்திருந்தான்.
அவள் தலையில் சூடியிருந்த முல்லைப்பூ வாசம் அவனை இன்னுமாய்
கிறங்கடிக்க, அந்த வாசத்தை
உள்ளிழுத்து மனதில் நிரப்பிக் கொண்டவன், அவளின் இடையில்
போட்டிருந்த கையை இடையில் அழுந்த பற்றி தன் பக்கமாக இழுத்தவன் அவளை தன்னோடு சேர்த்து
இறுக்க அணைத்துக் கொண்டவன்,
“சு....பி.... “ என்று
கரகரப்பான குரலில், காதோரம் ரகசியம் பேசுபவனைப் போல அவளை கிறக்கத்துடன் அழைத்தான்.
அந்தக் குரல் அவளுக்கு புதிதாக இருந்தது.
அதோடு அவனின் இந்த செய்கையும் புதிது.
அவன் காலையில் அப்படி நடந்து கொண்டதுக்கே அதிர்ந்து போயிருந்தவள், இப்பொழுது அவனின் இந்த செய்கையில் திடுக்கிட்டு விழித்துக் கொண்டவள், அவனிடமிருந்து திமிறி விலக
முயன்றாள்.
ஆனால் ஒரு இன்ச் கூட அவளால் அசையமுடியவில்லை... கிடுக்கி
பிடியாய் அவளை இறுக்க பிடித்து இருந்தவன், அவள் நெளியவும், இன்னுமாய் அவன்
பிடி இறுகியது.
“சு......பி... நீ எனக்கு வேண்டும்...ஐ நீட் யு மேட்லி....” என்று போதையான குரலில், அவளின் செவி மடலை முரட்டு இதழ்களால் மெல்ல கடிக்க, அவளோ தடுமாறித்தான்
போனாள்.
ஆனாலும் அவளின் அறிவு விழித்துக்கொள்ள,
“இல்லை... வேண்டாம்....”
என்றாள் வெளிவராத தீனமான குரலில்.
“ஏன் வேண்டாம்? எனக்கு வேண்டும்... உன்னை காலையில் அப்படி
பார்த்ததில் இருந்தே ஐ வாஸ் அவுட் ஆப் மை கன்ட்ரோல்... இதுக்கு மேல என்னால
முடியாது... ப்ளீஸ்...“ என்று மீண்டும்
தாபத்துடன் கேட்க,
“வந்து... இல்லை வேண்டாம்... இது தப்பு...” என்று அவனிடம்
இருந்து திமிறி விலக முயன்றாள்.
ம்கூம்... இப்பொழுதும் ஒரு இன்ச் கூட அவளால் அசைய முடியவில்லை.
அந்த அளவுக்கு அவளை இன்னுமாய் இறுக்கி அணைத்து இருந்தான்.
“என்ன தப்பு? நீ என் பொண்டாட்டி... உன்னை அடைய எனக்கு எல்லா ரைட்ஸ் உண்டு. அப்புறம்
என்ன தயக்கம்? “ என்று சிறு எரிச்சலுடன் போதையும் கலந்தவனாய், அவளின் சங்கு கழுத்தில்
முத்தமிட்டான்.
அவனின் மீசை உரசலில் பெண்ணவள் உள்ளேயும் தீப்பற்றிக் கொண்டது. அவளின்
பெண்மையும் விழித்துக்கொள்ள, கன்னிமனம் ததும்பியது
கழுத்தில் முத்தமிட்டவன், மெல்ல அவளின் காது மடலை
வருடியவன் இதழ்கள் முன்னேறி, அவளின் ஆப்பில்
கன்னத்தில் ஊர்வலம் வர, அவனின் கரமோ அதன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது.
அவளின் சிற்றிடையில் தன் வேலையை முடித்திருந்த அவன் கரம், மேலும் முன்னேறி அவளின்
அந்தரங்க பகுதியை தாபத்துடன் தீண்ட
ஆரம்பித்திருந்தது..!
அதில் பளீரென்று வயிற்றுக்குள் மின்னல் வெட்ட, இன்னுமே நிலை குலைந்துதான் போனாள் சுரபி..! ஆனாலும் ஏனோ அவனை ஏற்க, அவனோடு ஒட்டி உறவாடி இழைந்து ஒன்றர கலக்க, அவள் உள்ளே சிறு தயக்கம்..!
அவளுக்கும் ஆசைதான்..! அவன் தன்னை இப்படி தாபத்தோடு
அணுகும்பொழுது ஒரு மனைவியாய் அவன் கேட்பதை எல்லாம் வாரி வழங்கி அவன் தாபத்தை, மோகத்தை தீர்த்து வைக்க
அவளுக்கும் ஆசைதான்..!
ஆனாலும்..........?
ஏதோ ஒன்று அவளை தடுத்தது..! அது என்னவென்று அவசரமாக
யோசித்தவளுக்கு புரிந்து விட்டது.
“தன் மகளுக்காகத் தானே என்னை மணந்துகொண்டான். இப்பொழுதும் அவன்
உடல் தேவைக்காத்தானே என்னை நாடி இருக்கிறான்.
மற்றபடி என் மீது அவனுக்கு எள்ளளவும் அன்பு இல்லை.... பாசம்
இல்லை... காதல் எதுவும் இல்லை.. நான் அவனுக்கு ஒன்றுமே இல்லை... அவன் மகள்
மட்டும்தான் அவனுக்கு பிரதானம்...” இதுதான் அவளை இன்னுமே உறுத்திக் கொண்டே இருந்தது.
காதல் இல்லாத கூடல்...அன்பு இல்லாத தாம்பத்தியம்...நேசம் இல்லாத
இணைவு எப்படி சரியாகும்? என்ற கேள்வி அந்த நொடியில் வந்து நிற்க, அடுத்த நொடி அதுவரை அவனின் செய்கையில் உருகி, குலைந்து கரைந்து இருந்த அவள்
உடல் இறுகிப் போனது.
நாணத்தில் குளித்திருந்த அவள் கன்னங்கள். இப்பொழுது வெளிறி இருக்க, மையலை சுமந்து நின்ற அவள் விழிகள் இப்பொழுது வெறுப்பை கக்கி
கொண்டிருந்தன.
அவள் மனதில் இருக்கும் போராட்டத்தை அறியாதவனோ, அவள் கன்னத்தில் ஊர்ந்த இதழ்கள், இப்பொழுது அருகில் இருந்த தன் இணையை கண்டு கொண்ட மகிழ்ச்சியில்
அவள் இதழை நோக்கி வர,
அடுத்த கணம் இரு இதழ்களுக்கும்
இடையில் கை வைத்து தடுத்து தடை போட்டவள், தன் முழு பலத்தையும் திரட்டி, அவன் பிடியிலிருந்து திமிறி, விடுபட்டு துள்ளிக் குதித்து படுக்கையில் இருந்து இறங்கி நின்று
கொண்டாள்.
அவளின் அந்த திடீர் செய்கையில் திடுக்கிட்டு அதிர்ந்து போனான்
விகர்த்தனன்.
அவளின் செய்கையில் அவன் உள்ளே பொங்கி கொண்டிருந்த உணர்வுகள் எல்லாம் வடிந்து விட, அவளை முறைத்து பார்த்தவன்,
“என்ன ஆச்சு? “ என்றான் பல்லை கடித்தவாறு அவளை ஊடுருவி
பார்த்தவாறு.
அவளோ அவன் முகம் பார்க்க இயலாமல், தரையை பார்த்தவள், தயக்கத்துடன்
“இல்லை.. இது தப்பு...
“ என்று அவள் ஏதோ சொல்ல வர
“என்னடி தப்பு? நீ என் பொண்டாட்டி தானே? அப்புறம் என்ன?” என்று எரிச்சலுடன் வார்த்தையை கடித்து துப்ப, அதற்குள் தன்னை முழுவதுமாக சமாளித்துக் கொண்டவள்,
“அப்படியா? உங்க பொண்டாட்டியா? நானா? அப்படி என்னை நீங்க இங்க அழைத்து வரவில்லையே..!
உங்க பொண்ணுக்கு அம்மாவா என்னை கட்டாய கல்யாணம் பண்ணி அழைத்து
வந்ததாக நியாபகம்...” என்று இதழை வளைத்து நக்கலாக சொல்ல, அவனுக்கோ கோபம் உச்சத்திற்கு சென்றது.
“ஆமான் டி.. என் பொண்ணுக்காகத்தான் உன்னை கார்னர் பண்ணி என்
மனைவியாக்கி கொண்டேன். அதுக்கு என்ன இப்ப? எப்படினாலும் நீ என் பொண்டாட்டிதானே... அதுக்கான கடமையை செய்ய
வேண்டியதுதானே..” என்று வார்த்தையை கடித்து துப்ப,
“கடமை..? . அப்ப கடமைக்காக
மனைவியாக இவனோடு கட்டிலில் சரசமாட வேண்டுமா? காதல் இல்லாமல் கடமைக்காக நான் இவனுடன் சரசமாடினால், காசை வாங்கி கொண்டு கடமைக்காக படுக்கும் விலைமாதுக்கும் எனக்கும் என்ன
வித்தியாசம்?
ஓ.. ஒருவேளை என்னை இவன் அப்படித்தான் எண்ணி இருக்கிறானோ? காசுக்கு பதிலாக தாலி கட்டி இருக்கிறான்... அதுக்காக அவனுக்கு
தேவையான உடல் சுகத்தை தர வேண்டுமா? இதுதான் ஒரு
மனைவியின் கடமையா?
இல்லையே.. கணவன் மனைவி என்றால் அன்பும், பாசமும், காதலும் அல்லவா
கொட்டி கிடக்க வேண்டும்.
இங்கே என்மீது இதில் ஒன்று கூட இவனுக்கு இல்லை.. ஆனால் படுக்க
மட்டும் மனைவி என்ற வார்த்தையை பயன்படுத்தி கொள்கிறான்..!
இல்லை.. இந்த சுரபி ஒரு நாளும் இவன் ஆசைக்கு இணங்க மாட்டாள்...
காதல் இல்லாமல் ஒருநாளும் இவன் கூட மனைவியாக சேர மாட்டாள்...“ என்று உள்ளுக்குள்
சபதம் எடுத்துக்கொண்டவள்,
அதுவரை தயக்கத்துடன் கூனி குறுகி நின்றவள், இப்பொழுது முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்று, அவனை நேருக்கு நேராக
பார்த்தவள், தன் கழுத்தில்
தொங்கி கொண்டிருந்த தாலியை தூக்கி காட்டி
“இந்த தாலியை நீங்க கட்டிவிட்டால் உடனே நான் ஒன்றும் உங்களுக்கு
அடிமை இல்லை...
நீங்கள் எதிர்பார்க்கும் உடல் சுகத்தை எல்லாம் வாரி வழங்கி மனைவிக்கான
கடமையை என்னால் செய்ய முடியாது...” என்றாள் மார்புக்கு குறுக்காக கைகளை
கட்டிக்கொண்டு மிடுக்குடன்.
அவளின் நிமிர்வையும், மிடுக்கையும் கூடவே
அவள் தன்னை உதாசினபடுத்துகிறாள் என்பதும் உரைக்க, அதிர்ந்து போனான் விகர்த்தனன்.
இதுவரை எந்த பெண்ணும் அவனை விலக்கியதில்லை... இன்பேக்ட் அவன்
பார்வை தன் மீது படாதா என்று ஏங்கி தவிக்கும் பெண்களைத்தான் பார்த்து இருக்கிறான்.
அவன் வேண்டாம் என்று நிராகரித்த பெண்கள் ஏராளம்... ஆனால் அவனை
வேண்டாம் என்று நிராகரித்த பெண் யாரும்
இந்த உலகத்திலயே இல்லை.
அப்படி எல்லா பெண்களின் கனவு நாயகனாக உலா வருபவன்.. இந்த பெண்ணிடம், அதுவும் தன் மனைவியிடம் நிராகரிப்பை எதிர்பார்க்கவில்லை.
“என்கிட்ட என்னடி குறைச்சல் ? ஏன் என்னை ஏற்க உனக்கு தயக்கம்? “ என்று முயன்று தன் கோபத்தை கட்டுபடுத்தியவன், அடிபட்ட பாவத்துடன் அவளை பார்த்து கேட்க,
“காதல்.... அது இல்லையே.... என்னை பிடிச்சிருக்கு என்று ஒரு
வார்த்தை இல்லையே... இந்த ஒற்றை வார்த்தை இல்லாமல் எல்லாம் இருந்து என்ன
புரயோஜனம்.” தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள்.
அவனிடம் அதை வெளிப்படையாக சொல்லி , காதலை யாசித்து பெற அவளுக்கு விருப்பமில்லை. அது தானாக மலர
வேண்டும்...
“சொல்லுடி.. ஏன் அமைதியா இருக்க? அப்படி என்ன என்கிட்ட இல்ல...” அவன் தோளை அழுத்தமாக பற்றி
உலுக்கினான்.
அவளின் நிராகரிப்பு அவன் உள்ளே கோப அலைகளை தோற்றுவித்திருக்க, அவன் கோபத்தின் அளவு அவன் பற்றியிருந்த அவள் தோள்பட்டையின்
வலியில் தெரிந்தது.
அவன் அழுத்திய வேகத்தில் அவன் கைபட்ட இடம் தீயாய் எரிந்தது.
ஆனாலும் பொறுத்துக் கொண்டு , பல்லை கடித்துக்கொண்டு அமைதியாக நின்றாள்.
அவளை ஓரு முறை ஆழந்து பார்த்தவன், அப்பொழுதுதான் ஏதோ நியாபகம் வந்தவனாக, அவன் தோள்பட்டையில் இருந்து தன் கையை எடுத்துக் கொண்டவன்,
“புரிஞ்சிடுச்சு...இப்ப எனக்கு புரிஞ்சிடுச்சு... நீ உன் மாஜி ஹஸ்பென்ட்...
சாரி ஹஸ்பென்ட்டாக ஆக வேண்டி இருந்த ஷ்யாமை மறக்க முடியாமல் தான் என்னை ஏத்துக்க தயங்குகிறாய்.
அவனை மனதில் நினைத்துக் கொண்டு இருப்பதால் தான் என்னிடமிருந்து தள்ளி தள்ளி போகிறாயா? “ என்று கண்கள் இடுங்க, அவளை துளைக்கும் பார்வை பார்த்து கேட்க,
“ஷ்யாம்...” என்று அவன்
சொன்னதும் விலுக்கென்று நிமிர்ந்து அவனை
பார்த்தாள் பெண்.
அவனோ இறுகிய முகத்துடன் அவளையே துளைக்கும் பார்வை பார்த்து
கொண்டிருந்தான்.
அதே நேரம் சுரபிக்கு அதுவரை
மறந்திருந்த ஷ்யாமின் முகம் கண் முன்னே
வந்தது.
கடைசியாக அவன் சொன்ன லவ் யூ சுரபி... என்றதும் நினைவு வந்தது.
அவன் கண்களில் எத்தனை காதலை தேக்கி வைத்துக்கொண்டு அதை
சொன்னான்..!
மூன்று வருடங்களாக தன்னை மட்டுமே நினைத்து, தன்னை மட்டுமே சுற்றி வந்து, தன் மீது எவ்வளவு உயிராக இருந்தான்..!
அவன் காதலை புரிந்து கொள்ளாமல் கடைசி வரைக்கும் தத்தியாக
இருந்து விட்டேனே...!
அதுக்கான தண்டனைதான் இந்த நரக வாழ்க்கையா? அவள் மனம் ஓ வென்று ஓலமிட்டது.
ஷ்யாம் அவளை பார்த்த தருணங்கள்...அவளிடம் பேசிய பொழுதெல்லாம்
டாலடித்த அவன் முகம்...
அந்த முகத்தில் எப்பொழுதும் பூத்திருக்கும் இளநகை... யாரையும்
அதிர்ந்து கூட பேசிடாத கனிவு... எல்லாமும் நினைவு வர, கண்களில் தானாக கண்ணீர் பெருக்கெடுத்தது.
ஷ்யாமின் நினைவோடு இலவச இணைப்பாக, அவள் அன்னையின் முகமும்
கண் முன்னே வர, அவள் அன்னைக்காக போய்தானே தன் உயிரையே இழந்து
விட்டான்
என்ற பழைய சம்பவம் நினைவு வர, இப்பொழுது கண்களில்
கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, உடனே உடல் தொய்ந்து
போய், அப்படியே மடிந்து, சரிந்து தரையில் அமர்ந்து, தன் முகத்தை இரு கரங்களால் மூடிக்கொண்டு
குலுங்கி அழுதாள் சுரபி.
அதுவரை அவனை எதிர்த்துக்கொண்டு... விரைத்து கொண்டு நின்றவள்... ..
விகர்த்தனன் ஷ்யாம் பெயரை சொன்னதும் உடைந்து குலுங்கி அழுவதைக் கண்ட விகர்த்தனன் உள்ளுக்குள் நொறுங்கி போனான்.
எதையோ பெரிதாக இழந்து விட்டதை போன்ற வலி அவன் இதயத்தில்..!
அவள் ஷ்யாமை நினைத்து, அவனை மறக்க
முடியாமல் தான் அழுகிறாள் என்று எண்ணியவன், முகம் இறுக, தாடை விடைக்க, வேகமாக
படுக்கையிலிருந்து எழுந்து அந்த அறையை ஒட்டி இருந்த பால்கனிக்கு சென்றான்
ஒரு சிகரெட்டை பற்ற வைத்து ஆழ்ந்து இழுத்தபடி அந்த பால்கனியில்
நடை பயின்றான் விகர்த்தனன்.
இங்கு அழுது கொண்டிருந்த சுரபியோ சற்றுமுன் விகர்த்தனன் கேட்ட,
“நீ உன் மாஜி ஹஸ்பென்ட் சாரி ஹஸ்பென்டாக ஆக இருந்த ஷ்யாமை மறக்க முடியாமல் தான் என்னை
ஏத்துக்க தயங்குகிறாய்...” என்ற வார்த்தையே திரும்ப திரும்ப காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
அதோடு அவள் மனம் பழைய நினைவுகளை...அவள் மறக்க தவிக்கும் பழைய
நினைவுகளை... வலிக்க வலிக்க திரும்பி பார்த்தது...!







0 comments:
Post a Comment