மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Thursday, September 29, 2022

வராமல் வந்த தேவதை-23

 


அத்தியாயம்-23

 

ன்று சனிக்கிழமை..!  

நிகா குட்டியை ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்தாள் சுரபி...!

இல்லை... தன் அன்னைக்கு போக்கு காட்டி,  அந்த பெரிய பங்களாவில் இப்படியும் அப்படியுமாக வளைந்து வளைந்து ஓடி  தன் அன்னையையும் ஓட வைத்துக் கொண்டிருந்தாள் அந்த குட்டி இளவரசி.

சனி நீராடு என்பதை கட்டாயமாக பின்பற்றும் சுரபி, தன் மகளின்  தலைக்கு கொஞ்சமாக எண்ணை  தேய்த்து குளிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவளை துரத்திக்கொண்டிருக்க, அவளோ  தன் அன்னையின் கையில் அகப்பட்டுக் கொள்ளாமல்  தப்பி ஓடிக்கொண்டிருந்தாள்.

சாமி, முத்து, பூங்கோதை என எல்லா வேலைக்காரர்களும், தங்கள் குட்டி எஜமானியின் அலப்பறைகளை கண்டு ரசித்துக்கொண்டே தங்கள் வேலையை தொடர்ந்தனர்.

சிரிப்பு என்றால் அர்த்தம் தெரியாமல், வெறும் கடமைக்காக எல்லாரும் வந்து போய்க்கொண்டிருந்த அந்த மாளிகையில், அந்த குட்டி தேவதை வந்த பிறகு அமைதி என்பதே காணாமல் மறைந்து போனது.

எப்பொழுதும் அவளின் வாய் ஓயாத மழலை பேச்சும், அருகில் செல்ல வேண்டும் என்றால் கூட நடந்து செல்லாமல் ஓடி வரும் அந்த குட்டி பாதங்களும், அந்த பாதத்தில் அணிந்திருக்கும் சலங்கை கொலுசு ஜல்ஜல் என்று சத்தமிட்டு அந்த மாளிகை முழுவதுமே கேட்கும்.

அந்த அளவுக்கு அந்த மாளிகை இப்பொழுது உயிர்ப்போடு மிளிர்ந்தது...!

வரவேற்பறையில் மாட்டியிருந்த புகைப்படத்தில், புகைப்படமாக இருந்த அந்த மாளிகையின் பெரிய எஜமானி அகல்யா, மற்றும் ப்ரகாஷ் அவர்களின் ஆளுயர புகைப்படம் கூட இப்பொழுது தங்கள் பேத்தியை பார்த்து நிறைவுடன் புன்னகைப்பதை போல இருக்கும்.

இன்று காலையில் இருந்து தன் சின்ன எஜ்மானி அவள் அம்மாவை படுத்தும் பாட்டை ரசித்தபடி இருந்தனர் அந்த வீட்டு வேலைக்காரர்கள்.

“சாமி தாத்தா... என்னை காப்பாத்து...”  என்று திடீரென்று ஓடி வந்து சாமியின் காலை கட்டிக்கொண்டாள் அந்த குட்டி.

அதைக்கண்டு திடுக்கிட்ட சாமிக்கோ அடுத்த கணம் மனம் நெகிழ்ந்து போனது..!

இதுவரை அவனை யாரும் இப்படி உறவு முறை சொல்லி அழைத்தது இல்லை. எப்பயாவது தன் தங்கைகளை பார்க்க சென்றால், அவர்களின் பிள்ளைகள் மாமா என்று அவனை கட்டிக்கொள்வார்கள் தான்..!

ஆனால் தாத்தா..?

அப்பா ஆகாமலயே தாத்தா ஆகிவிட்ட மகிழ்ச்சி அவன் முகத்தில் மிளிர, ஆனந்த கண்ணீருடன் அந்த குட்டியை தூக்க குனிய, அதற்குள் அவளை பிடிக்க சுரபி அருகில் வந்துவிட்டதால், சாமியின் காலை விட்டு விட்டு அடுத்து பூங்கோதையிடம் ஓடினாள்.

“அத்தை..... நீ காப்பாத்து.... “ என்று கொஞ்ச, பூங்கோதைக்கும் உள்ளம் குளிர்ந்து போனது.

தங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களே என்றாலும், அவர்களும் நம்மில் ஒருவர்தான் என்று தன் மகளுக்கு உறவுமுறை சொல்லி அழைக்க பழக்கி இருந்தாள் சுரபி.

அவளுமே சாமியை அண்ணா என்றும் பூங்கோதையை அக்கா என்றுதான் அழைப்பாள்.

அவளின் அந்த குணத்திற்கே அந்த வீட்டு வேலைக்காரர்கள் உருகி போனார்கள்.

அப்படியே தங்கள் பெரிய எஜ்மானி அகல்யா அம்மாவே மீண்டும் அந்த வீட்டிற்கு வந்து இருப்பதாக ஒரு பிரம்மை..!

இந்த பிரம்மை அந்த வீட்டிற்கு முதலில் மருமகளாக வந்த ஸ்வாதியிடம் காணவில்லைதான்..!

ஏனென்றால் ஸ்வாதி மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவள்..

அந்த வீட்டு வேலைக்காரர்களை வேலைக்காரர்களாக, தனக்கு அடிபணிந்து நடக்கும் கூலிக்காரர்களாக மட்டும்தான் பார்த்து வைப்பாள்.

எல்லாரையும் பேர் சொல்லி அழைப்பதோடு மட்டும் அல்லாமல் அவ்வபொழுது அவர்களை அதட்டுவதும், கை நீட்டுவதும் கூட நடந்து இருக்கிறது.

பூங்கோதை கூட ஒரு முறை அடி வாங்கி இருக்கிறாள்.

ஸ்வாதி என்றால் எல்லாரும் ஒவ்வொரு இடத்தில் பதுங்கி கொள்வார்கள். ஸ்வாதி பாதி நாட்கள் ரூமை விட்டு கீழ வருவதில்லை... சாப்பாடு கூட அவள் அறைக்கே சென்று விடும்.

அப்படி இருந்த இந்த வீட்டில் இப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருந்த அந்த இரண்டு தேவதைகளையும் மனதார வாழ்த்தி ரசித்தனர்.

******

ஹே...குட்டி பிசாசு... நீ ஒவ்வொருத்தரா ஓடிப் போய் ஹெல்ப் கேட்டாலும் அது வேலைக்கு ஆகாது..! நீ இன்னைக்கு எண்ணை தேய்ச்சு குளிச்சே ஆகணும்...கிட்ட வாடி...

நீயா கிட்ட வந்திடு... அம்மா உன்னை புடிச்சா, நிறைய எண்ணையை அப்பி விட்டுடுவேன்...” என்று மிரட்டியபடி சுரபி அந்த குட்டியின் அருகில் வர, அவளோ

“நீ என்ன என்னை மிரட்டறது?.. முடிந்தால் பிடித்து பார்...” என்று லுக் ஒன்றை விட்டுவிட்டு,  வெற்றி சிரிப்பை சிரித்தபடி, மீண்டும் தன் ஓட்டத்தை தொடர்ந்தாள்.

இந்த முறை வாயில் பக்கமாக ஓடி இருக்க, அதே நேரம் பக்கவாட்டில் இருந்த ஜிம்மில் இருந்து  தனது காலை உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு தன் உடலை டவலால் துடைத்தபடி வெளி வந்தான் விகர்த்தனன்..!

அவனைப் பார்த்ததும், முகம் மலர,

 “அப்பா... ஹெல்ப் மீ... “  என்று ஓடிச்சென்று அவன் காலை கட்டிக்கொண்டாள் அந்த குட்டி.

எண்ணை தேய்ப்பதற்காக அவளின் ஆடையை கழட்டி விட்டு, வெறும் ஜட்டி மட்டும் அணிவித்திருக்க, ஆடை இல்லாத  வெள்ளை வெளேரென்று,  பாலை  கொட்டி செய்த ரசகுல்லாவை போன்று தன் காலை கட்டிக்கொண்டிருந்த தன் மகளை கண்டதும் அப்படி ஒரு சிலிர்ப்பு அவன் உள்ளே.

என் மகள்....என்று உள்ளம் பூரிக்க,  குனிந்து  அவளை  தூக்கி தலைக்கு மேல தூக்கி போட்டு பிடித்தவன், அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தவன்,   

“என்னாச்சு குட்டிமா ?  ஏன் இப்படி ட்ரெஸ் இல்லாம ஓடிக்கிட்டு இருக்க? “  என்று புன்னகையோடு விசாரிக்க,  

“அம்மா... தைக்கு  எண்ண  தேச்சு...கண்ணு எய்யும்....வுவ்வே....”  என்று தன் தலையை தொட்டு காட்டியவள், தன் குண்டு கண்களை  உருட்டி,  மிரட்சியோடு சுரபியின் கையிலிருந்த கிண்ணத்தை பார்த்தாள்.  

அவனோ புரியாமல் சுரபியை பார்த்து என்ன இது என்று பார்வையால் வினவ, அவளோ மந்திரித்து விட்டவளைப் போல திருதிருத்துக் கொண்டிருந்தாள்.

பின்ன..! ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு அப்படியே வந்திருந்ததால், உடற்பயிற்சி செய்யும்பொழுது அணிந்திருந்த அரைக்கால் ட்ராயரும், டைட்டான ஸ்லீவ்லெஸ் ஸ்போர்ட்ஸ் டீசர்ட்ம் அணிந்திருக்க, அவனின் அந்த அரைகுறை கோலத்தை கண்டு ஸ்தம்பித்து நின்றுவிட்டாள் பெண்ணவள்.

இதுவரை ஒரே அறையில் தங்கி இருந்த பொழுதும், இப்படி அவள் முன்னே அரைகுறையாக வந்து நின்றதில்லை அவள் கணவன்.

எப்பொழுதும் அவள் எழுவதற்கு முன்னரே எழுந்து, காலை உடற்பயிற்சியை செய்து முடித்து குளித்து விடுவான்.

பெரிய சின்சியர் சிகாமணி, பஞ்சுவல் பழனிசாமி.. என்று உள்ளுக்குள் கிண்டல் அடித்தும் கொள்வாள் சுரபி.

அப்படி இருக்க, இன்று சனிக்கிழமை என்றதால் தாமதமாக எழுந்தவன் இப்பொழுது தான் தன் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு வெளிவந்து இருக்க, அவனை அப்படி பார்த்துதான் திருதிருத்து கொண்டிருந்தாள் அவன் மனையாள்.

அவளின் முழியை கண்டவன், குனிந்து அவனை பார்க்க, அப்பொழுதுதான் அவள் திருதிருப்புக்கு காரணம் புரிந்தது.

“ஆஹான்... பொண்ணு ரொம்பவும் பயந்துடுச்சு போலவே... பயமா? இல்லை மயக்கமா? “ என்று தனக்குள்ளே சிரித்துக் கொண்டவன்

“என்னாச்சு சுரபி.. ஏன் குட்டிமா பயப்படறா? ஆமா உன் கையில என்ன? “ என்று விசாரிக்க, அதில் தன் சுயத்துக்கு வந்தவள், தன்னை சமாளித்துக் கொண்டு,

“அது வந்து இன்று சனிக்கிழமை...” என்று தயக்கத்துடன் வார்த்தை வராமல் இழுக்க,

“ஆஹான்.. அதுதான் எல்லாருக்கும் தெரியுமே... நேற்று வெள்ளிக்கிழமை... இன்று சனிக்கிழமை...நாளைக்கு ணாயிற்று கிழமை...அதுக்கு என்ன? “ என்று குறும்பாக சிரித்தபடி அவளை பார்க்க,

“வந்து... சனிக்கிழமை அன்று தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்.  அப்பொழுதுதான் உடலில் இருக்கும் சூடு தனியும். எண்ணை தேய்க்கத்தான் இவளை  விரட்டி கொண்டிருக்கிறேன். கையில் சிக்காமல் எஸ் ஆகி கிட்டே இருக்கா...

என் கிட்ட  வாடி குட்டி பிசாசு...”  என்று தன் மகளை முறைக்க,  

அவளோ மாட்டேன் என்று தலையை இருபக்கமும் உருட்டி மறுத்தவள், நாக்கை துருத்தி ஒழுங்கு காட்டியவள்,  திரும்பி விகர்த்தனன் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் கழுத்து வளைவில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

அதில் இன்னுமாய் கரைந்து போனான் விகர்த்தனன்.

“விட்டுவிடேன்..” என்று சுரபியிடம் கண்ணால் கெஞ்ச, அவளோ அவனை முறைத்தவள்,

அதெல்லாம் முடியாது..! அவளை என்கிட்ட கொடுங்க...” என்று விகர்த்தனன் அருகில் வர, அவளோ அவனை இறுக்கி கட்டிக்கொண்டு தலையை இரு பக்கமும் வேகமாக உருட்டினாள்..     

அவனும் தன் மகளுக்கு ஏதேதோ சமாதானம் சொல்லி கொண்டிருக்க,  ஒரு வழியாக தன் தந்தையின் பேச்சுக்கு கட்டுபட்டு மனமே இல்லாமல் தன் அன்னையிடம் சென்றாள்.

“குட்டி பிசாசு.. ஒரு மணி நேரமா என்னை உன் பின்னால ஓடவச்சிருக்க... உனக்கு இருக்குடி..” என்று திட்டியபடி அவளை அறைக்கு தூக்கி செல்ல, விகர்த்தனனும் சிறு புன்னகையோடு அவளை தொடர்ந்தான்.

*****

வளை தன் மடியில் அமர்த்திக்கொண்டு, அவளின் குட்டி தலைக்கும் பட்டு உடலுக்கும் எண்ணை வைத்து நன்றாக சூடு பறக்க தேய்த்தும், உடலுக்கு நன்றாக மசாஜ் செய்ய, அவளோ அது பிடிக்காமல் முகத்தை சுளித்து அழ ஆரம்பித்தாள்.

தன் மகளின் முகசுளிப்பை கண்டதும் விகர்த்தனன் தவித்து போனான்...!

“ஹே சுரபி.. விட்டுடு புள்ளைய.. பாவம் கண்ணை கசக்கறா பார்... “ என்று தன் மகளுக்கு வக்காலத்து வாங்க,  அவளோ அவனை முறைத்தவள்

“அதெல்லாம் உங்க இளவரசி ஒன்னும் கரைஞ்சிட மாட்டா.. ஒருநாள் அழுதா ஒன்னும் குறஞ்சு போய்ட மாட்டா...சும்மா இருங்க.. இது வெறும் ஆயில் மசாஜ் தான்..

இவ தினமும் ஓடற ஊட்டத்துக்கு இப்படி நல்லா எண்ணைய தேய்ச்சு கை, காலை உருவி விட்டாதான் நல்லா இருக்கும்..”

என்று சிறு அதட்டலுடன் அவனை தடுத்தவள், தன் வேலையை தொடர்ந்தாள் சுரபி.

அதுவரை எப்படியாவது இந்த டார்ச்சரில் இருந்து தப்பித்துக் கொள்ள, பல வழிகளை முயன்றவள், எதுவும் வெற்றி வெற்றி பெறாமல் போய்விட, ஏதோ யோசித்து தன் அன்னைக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்தாள் நிகா...

அருகில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டு, தன் மகளையும், அவளுக்கு சுரபி செய்யும் அந்த ஆயில் மசாஜையும் ரசித்துக்கொண்டிருக்க, அவன் பக்கமாக கையை நீட்டி, 

“அப்பாக்கும்  எண்ணை  தேச்சு....”  என்று ஆரம்பித்தாள் நிகா குட்டி.

அப்பாவுக்கும் எண்ணை தேய்ச்சு விடு என்று தன் மழலையில் சொல்ல,  அதைக்கேட்டு ஜெர்க் ஆனாள்  சுரபி. நொடியில் சுதாரித்தவள்,

“அப்பா எல்லாம் எண்ணை தேய்ச்சுக்க மாட்டாங்கடா.....” என்று சமாளிக்க முயல,

“ஏன் ? “ என்றாள் பெரிய மனுசி தோரணையில்.

அவளுக்கோ என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென்று முழிக்க, அதைக்கண்டு வாய் விட்டு சிரித்தான் விகர்த்தனன்.

அவனை ஒரு கார பார்வை பார்த்து முறைத்தவள், தன் மகளிடம் திரும்பி,

“அது வந்து...  அப்பா பெரியவங்க இல்லையா? அதான்....” என்று சொல்ல,

“ஏன் பெரியவங்க எண்ண தேச்சு கூடாது ?”  என்று அடுத்த தொடர் கேள்வியை கேட்க, தன் மகளின் அந்த பிடிவாத குணமும், எதையும் ஆராய்ந்து முழுமையாக அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பும் புத்தி கூர்மையும் கண்டு ஆச்சர்யமாக இருந்தது.

அதோடு அப்படியே குட்டி வெர்சனில்...தன்னையே உரித்து வைத்ததை போல இருக்க,

என் மகள் என்ற பூரிப்பில் அவன் முகம் விகாசித்தது.

சுரபியோ என்ன சொல்லி சமாளிப்பது என்று இன்னுமாய் முழித்துக்கொண்டு நிற்க, அவனுக்கோ  சுரபியை கொஞ்சம் சீண்ட வேண்டும் போல இருந்தது.  

“ஆமா குட்டிமா.... நீ கேட்பதுதான் கரெக்ட். பெரியவங்க ஏன்  எண்ணை  தேய்ச்சுக்க கூடாது? அதெல்லாம் தாராளமா தேய்ச்சு குளிக்களாம்...!

அப்பாக்கும்  அம்மாவை எண்ணை  தேய்ச்சு விட சொல்லேன்...”  என்றவாறு  அவன் மேல அணிந்திருந்த அந்த ஆம்கட் டி-ஷர்ட்டை கேசுவலாக கழற்றி விட்டு, சுரபிக்கு அருகில் வந்து அமர்ந்து கொள்ள,  அவனின் அந்த திடீர் செயலில் விக்கித்து போனாள் சுரபி.

சட்டையில்லாத அவனின் பரந்து விரிந்திருந்த வெற்று மார்பும், திஅன்மும் செய்யும் உடற்பயிற்சியால் முறுக்கேறிய கட்டான உடற்கட்டும். உருண்டு திரண்டிருந்த இறுகிய வலிய புஜங்களும்   பார்க்க குப்பென்று வியர்த்துப் போனது.  

இதுவரை எந்த ஒரு ஆணையும் இந்த மாதிரி அவள் வெற்றுடலுடன் பார்த்ததில்லை.

சிறுவயதிலயே தந்தையை இழந்து, தாயை மட்டும் பார்த்து வளர்ந்ததால் தந்தையாக ஒரு ஆணை பார்க்கும் வாய்ப்பு கூட அவளுக்கு கிட்டவில்லை...!

ஷ்யாம்....?

அது வேற கதை...!

விகர்த்தனனை அப்படி பார்க்க, அவளின் பெண்மை விழித்துக்கொண்டது.

ஹார்மோன் ஈர்ப்பு என்பது ஒரு பெண்ணை பார்த்ததும் ஆணுக்கு மட்டும் தோன்றுவதல்ல. அதே அளவு பெண்ணுக்கும் தோன்றும் என்று அன்றுதான் கண்டு கொண்டாள் சுரபி.

முப்பத்திரண்டு வரடங்களில், யாரை பார்த்தும் ஈர்த்திராத, விழித்திராத அவள் பெண்மை , தன் கண் முன்னே கட்டு கோப்பான உடற்கட்டுடன்... கொஞ்சமும் சதை பிடிப்பில்லாத, ஒட்டிய வயிறும், சிக்ஸ் பேக் தேகமும் ஆண்மையின் இலக்கணமாய் அமர்ந்து இருந்தவனை காண அவளின் ஹார்மோன்கள் ஏகத்துக்கும் எகிறி குதித்தன..!

“கமான் சுரபி...ஸ்டார் பண்ணு....” என்ற விகர்த்தனன் குரலில் மீண்டும் தன்னிலை பெற்றவள்    

“அது வந்து...”  என்று தயங்கி நிற்க,  

“ஹ்ம்ம், லாஸ்ட் ப்யூ மன்த்ஸ்  ஆ பல டென்சனில் எனக்கும்  உடம்பும் மனமும் ரொம்பவும் சூடாகித்தான் போயிருக்கு... குட்டிமா மாதிரி  எனக்கும் ஆயில் மசாஜ் பண்ணி விடு...”  என்று கண் சிமிட்டி சிரித்தான்.

அதில் இன்னுமே உள்ளுக்குள் படபடத்தாலும், அவன் சொன்ன பல டென்சனில் ஒன்று தன் மகளின் ஆக்சிடென்ட்ம் அதைத்தொடர்ந்து அதிரடியாக அவளை மணம் முடித்து அழைத்து வந்ததும் ஒன்று என உணர்ந்தவளின் உடல் இறுகி போனது.

முகத்தை கடுப்புடன் வைத்துக்கொண்டு, வேற பக்கம் திரும்பிக்கொள்ள,

“கமான் சுரபி...” என்று அவனும் மீண்டும் அவளை சீண்ட,

“கமா....மா...” என்று தன் தந்தையை காப்பி அடித்து அவள் மகளும் பிடிவாதம் பிடிக்க, வேறு வழியில்லாமல் பல்லை கடித்தபடி எழுந்தவள், தன் கையில் வைத்திருந்த கிண்ணத்தில்,  இன்னும் கொஞ்சம் எண்ணையை நிரப்பிக்கொண்டு அவன் அருகில் சென்றாள். 

தரையில்  வெற்று மார்புடன் இருந்தவனை பார்த்தும் பார்க்காமலும் தயக்கத்துடன் கையில் இருந்த கிண்ணத்தில் இருந்த எண்ணையை ஒரு கை அள்ளி, அவன் தலையின் உச்சியில் வைத்து  நன்றாக மசாஜ் செய்து விட்டாள்.  

அவளின் அந்த மென்மையான வெண்டை பிஞ்சு விரல்கள்,  அவன் தலையில் இங்கேயும் அங்கேயும் ஓடி விளையாட, அது தந்த சுகத்தில்  கண்மூடி கிறங்கித்தான் போனான்  விகர்த்தனன்.  

இந்த மாதிரி எல்லாம் யாரும் அவனுக்கு பார்த்து பார்த்து செய்ததில்லை.

பொதுவாக வேலைப் பளுவினால் மூளை சூடேறி போகும் நாட்களிலும்... அதிக உடல் உழைப்பினால் அயர்ந்து போகும் உடலையும் குளிர்விக்க புகழ்பெற்ற மசாஜ் சென்டர்களை நாடி சென்றிருக்கிறான்.  

சில சமயங்களில் இதற்காகவே வெளிநாட்டுக்கு கூட சென்று வந்திருக்கிறான்.. தாய் மசாஜிலிருந்து எத்தனையோ விதமான மசாஜ் எல்லாம் அனுபவித்தவன் தான்...!  

ஆனால் அதில் இல்லாத வித்தியாசம்...ஏதோ ஒரு மயக்கம்...  கிறக்கம்.... தன்னவளின் இந்த மெல்லிய வருடலில் தெரிந்தது.  

அது என்ன வித்தியாசம் என்று ஆழ்ந்து யோசிக்க, உடனே விடை கிடைத்தது.

மற்ற இடங்களில் எல்லாம் கடமைக்காக... அவன் தரும் காசுக்காக  அவனுக்கு மசாஜ் செய்திருக்கிறார்கள்..!  

மற்ற பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் பொழுது கூட அவர்களின் தேவைக்காக அவனை நாடியதால் பெரியதாக வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை தான்.

ஆனால் சுரபி..!  அவளின்  இந்த இதமான வருடலில் அவனுக்கே அவனுக்கான அன்பும் அக்கறையும் கரிசனமும் கொட்டிக்கிடந்தது.

அவளின் நீண்ட விரல்களிலிருந்த  மென்மையான  மற்றும் அழுத்தமான ஸ்பரிசத்தில் இருந்தே அதை உணர முடிந்தது அவனால்.  

என்ன தான் அவனை முறைத்துக் கொண்டிருந்தாலும் அவன்  முகத்தை பார்க்காமலே அவள் விரல்கள் அவன் தலையில்  இங்கும் அங்கும் நர்த்தனமாடிக் கொண்டிருந்தன.

அவளின் விரல்களிலிருந்து அவன் மீதான அக்கறை அவனுக்கும் புரிந்தது அது மட்டும் தானா?  அதையும் தாண்டி கூட ஏதோ ஒன்று இருப்பதை போலத்தான் உணர்ந்தான் விகர்த்தனன்.  

அந்த ஏதோ ஒன்று என்னவென்று தான் புரியவில்லை.  

கண் மூடி கிறங்கி அமர்ந்திருந்தான்..!

*****

ற்று நேரம் அவன் தலைக்கு மசாஜ் செய்தவள்,

“அவ்வளவுதான்...கொஞ்ச நேரம் கழிச்சு குளிங்க..” என்று மெல்ல முனுமுனுத்தவள், அங்கிருந்து   நழுவ முற்பட,  அதுவரை  ஏதோ ஒரு மாயலோகத்தில் சஞ்சரிப்பதை போல மெய் மறந்து இருந்தவன்...அவள் கை விலகவும், அவனின் கிறக்க நிலையும் விலகியது

தன்னிலை பெற்றவன், அவள் தன்னை விட்டு விலகுவது பிடிக்காமல்..வளை தன் அருகிலயே வை

“ஹே சுரபி...மசாஜ்  தலைக்கு மட்டும் தானா?  அம்முக்கு மாதிரி எனக்கும் பாடிக்கெல்லாம் மசாஜ் கிடையாதா“  என்று மீண்டும் குறும்பாய் சிரித்து வம்பு இழுக்க,

“இதுதான் இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்குமாம்.. என்று கழுத்தை நொடிக்க,

“படுக்க பாய் எதுக்கு மா?  அதான் இவ்ளோ பெரிய பெட் இருக்கே...!” என்று மீண்டும் விஷமமாக கண் சிமிட்டி சிரிக்க, அவள் முகமோ குப்பென்று வியர்த்தது.

இவனுக்கு இப்படியெல்லாம் கூட பேசி சிரிக்க தெரியுமா என்று ஆச்சர்யம் கூடவே எழுந்தது. ஆனாலும் தன் ஆச்சர்யத்தை மறைத்துக்கொண்டவள், வரவழைத்த கடுப்புடன், மீண்டும் எரிக்கும் லுக் விட்டவள்,

“தலைக்கு மட்டும் போதும்...”  என்று முறைத்தாள்.

“ம்ஹூம்...செல்லாது...செல்லாது... இதெல்லாம்  செல்லாது... அது எப்படி என் பொண்ணுக்கு மட்டும் புல் மசாஜ்... எனக்கு மட்டும் ஒன்லி ஹெட் மசாஜ்...இது செல்லாது..! அம்முகிட்டயே நியாயத்தை கேட்கலாம்...”

“யாரு? இந்த அமுக்கினிகிட்டயா? இவ ஏற்கனவே சரியான அப்பா பைத்தியம்... எப்பவும் உங்க பக்கம்தான் நிப்பா... நீங்க சொல்றதுதான் அவளுக்கு வேதவாக்கு. அவகிட்ட போய் நியாயம் கேட்டால் விளங்கின மாதிரிதான்...” என்று மீண்டும் கழுத்தை நொடித்தாள்.

ஹா ஹா ஹா...அவளுக்கு கூட தெரிஞ்சிருக்கு.. யார் கரெக்ட்டா பேசுவாங்க..நடந்துப்பாங்கனு. அதான் அவள் எப்பவும் என் பக்கம் என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.

“ஐய.ரொம்பத்தான்...” என்று உதட்டை சுளித்து அவனுக்கு ஒலுங்கு காட்ட, அவளின் சுளித்த இதழ்களில் ஒரு நொடி சொக்கித்தான் போனான்.

அதுவரை அவளை கிண்டல் அடித்துக்கொண்டு, சாதாரணமாக பார்த்திருந்த அவன் பார்வை அந்த நொடி கணவன் பார்வையாக மாறிப்போனது.

அதுவரை இலகுவாய் அவனிடம் வாயாடியவள்..வனின் இந்த மோக , தாப பார்வைக்கு கட்டுண்டவளாய் விக்கித்து போக, அவன் பார்வையை தாளாமல் தரை பார்த்தாள்.

அவளின் நிலையை ஒரு கணம் ரசித்தவன், இயல்புக்கு வந்தவனாய் தன் தொண்டையை கணைத்துக்கொண்டு,

“ஹே பிரின்சஸ்....  நீயே சொல்லுடா...  உனக்கு மட்டும் அம்மா பாடிக்கெல்லாம் எண்ணை  தேச்சு மசாஜ் பண்ணி விட்டுருக்காங்க.  எனக்கு மட்டும் இல்லையாம்...!  

இது எப்படி நியாயமாகும்?  எனக்கும் உன்னை மாதிரியே மசாஜ்  பண்ண சொல்லு டா...”  

என்று தன் மகளிடம் வழக்கை வைக்க, அவளோ தன் அன்னை கண்களுக்கு வைத்திருந்த எண்ணையால்,  கண்ணை திறக்க முடியாமல்  மூடியபடி அமர்ந்தவாறு

“ஆமாம் மா...  எனக்கு பண்ணின  மாறி அப்பாக்கு பண்ணு...”  என்று கட்டளை இட,

“ஆமாம் பண்ணு சுரபி... பிள்ளையே சொல்லிட்டா பாரு...”  என்று  அவனும் குறும்பாக சொல்ல,  பெண்ணவளுக்குத் தான் சங்கடமாக இருந்தது.  

தலையாவது பரவாயில்லை... அவன் தலை மீது  பட்டும் படாமலும் தேய்த்து விட்டாள்.  ஆனால் அவன் உடலில்  எப்படி பட்டும் படாமலும் எண்ணையை தேய்த்து விடுவது?  

இந்த குட்டி பிசாசு வேறு இந்த  நெட்டையோடு சேர்ந்துகொண்டு படுத்தறாளே..! “  என்று உள்ளுக்குள் பல்லைக் கடித்தாள்.  

பின் வேற வழியில்லாமல் மீண்டும் கைகளில் எண்ணையை எடுத்து,  திடகாத்திரமான அவனின் வலிய  தோள்களில் குட்டி தேய்க்க, அவள் கை பட்டதுமே இருவரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்ததை போல ஷாக் அடித்தது...  

பெண்ணவளின் பெண்மை கிளர்ந்து எழுந்தது. அவனின் வலிய கரத்திற்குள் அடைக்கலம் ஆகிவிட தகித்தது அவள் உள்ளே.

தரையில் அமர்ந்து இருந்தவன் பின்னால் நின்றவாறு, அவனின் பரந்து விரிந்திருந்த வலிய தோள்களை எண்ணையை வைத்து மெல்ல தேய்த்து விட, அவனின் இறுகிய தசைக்கோலத்தை அழுத்தி விடும்பொழுது, அவள் கரம் நடுங்க, உதடு துடிக்க ஆரம்பித்தது.

அவள் உடல் எடை அற்று போக, காற்றில் மிதப்பதை போல தள்ளாடியவள் தன் கவனம் சிதற, இருபக்கமும் அவன் தோளை பற்றி இருந்தவள் கை நழுவ, அதில் வழுக்கி அவன் பின்புறமாய் அவன் மீது சரிந்தாள் பெண்ணவள்...!

இதுவரை அவளின் கைகள் அவனின் இறுகிய புஜங்களை பிடித்து விட்டதிலயே நிலைகுலைந்து போயிருந்தவன்...  

இப்பொழுது தன்மீது மெத்தென்ற பூச்செண்டாய்  விழுந்ததும்,  வனப்பான அவளின் முன்பகுதி, அவன் முதுகில் நன்றாக மோதி அழுத்தவும்... அவ்வளவுதான்..!  

அவனின் ஆண்மை வீறு கொண்டு விழித்துக் கொள்ள, அடுத்த கணம் பின்னால் கைநீட்டி, தன் முதுகில் படர்ந்து இருந்தவளின் இடையை பற்றி முன்னால் இழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டவன், அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.

அவன் அருகில், குட்டி நாற்காலியில் அமர்ந்திருந்த நிகா குட்டி கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்து இருக்க, அடுத்த நொடி எதுவும் யோசிக்காமல் அவளின் திரண்ட செவ்விதழை சிறை பிடித்தான் விகர்த்தனன்.

அவனின் கரமோ பற்றியிருந்த அவளின் இடையை விட்டு விடாமல் இன்னும் அழுத்தமாக அழுத்த, அதில் முற்றிலும் தன் வசம் இழந்து போனாள் பெண்ணவள்..!

அவனின் அழுத்தமான இதழ்கள், அவள் இதழோடு சரசமாடிக்கொண்டிருக்க, இடையை பற்றியிருந்த அவன் கரமோ இடை தாண்டி எல்லை மீறிக் கொண்டிருந்தது.  

அவனின் கரம், அவளின் சிற்றிடையில் ஆரம்பித்து, மெல்ல மெல்ல மேலே ஊர்ந்து சென்றவாறு பெண்ணவள் மேனி என்ற வீணையை  தீண்ட, அவள் உள்ளே சொல்ல முடியாத கிறக்கம் தழும்பியது.  

அதுவரை எந்த ஒரு ஆணின் ஸ்பரிசத்தை அனுபவித்திராத அவள் உடலுக்கு, அந்த ஆண்மகனின் அந்த தீண்டல்  புதிதாக இருந்தது.  

அவளை புதுவித மாய உலகத்திற்குள் அழைத்து சென்றது.

அவனின் அத்து மீறலை தடுக்க முடியாமல், தடுக்க பிடிக்காமல், எங்கயோ தொலைந்து விட்டவளை  போல கண்மூடி கிறங்கிப் போனாள் பெண்ணவள்...!  

அவளின் கண்களில் பொங்கிய கிறக்கத்தையும், அவளின் மேனியில் தோன்றிய குழைவையும்  கண்டவனுக்கு  இன்னுமாய் போதை ஏறிப்போக, மென்மையாய் ஆரம்பித்து இருந்த இதழ் யுத்தத்தை வன்மைக்கு மாற்றினான்...!

அவளின் இதழை இன்னுமாய் கவ்வியவன்... ஆழமாய்..அழுத்தமாய்... வன்மையாய் முத்தமிட்டவாறு,  கை அத்துமீறி அவளின் பெண்மையை தீண்ட எத்தனிக்க, அதை உணர்ந்தவளுக்கோ உடல் இன்னுமாய் சூடேறிப் போனது.

அவனின் தீண்டலை தாங்க முடியாதவளாய் தவித்தவள் கரம் நீண்டு,  அவன் பின்னந்தலை கேசத்தை கெட்டியாக இறுக்கி பிடித்துக் கொள்ள, அவளின் அந்த மோக நிலையை கண்டவனுக்கு இன்னுமே தாபம் ஏறிப்போனது.

தன் மடியில் கிடந்தவளை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டு, அருகில் இருந்த படுக்கைக்கு செல்ல அடி எடுத்து வைக்க, அதே நேரம்

“அம்மா... கண்ணை தொக்க வா...ரொம்ப வைக்கி...” கண்ணை திறக்கவா.. ரொம்ப வலிக்குது...  என்று கேட்ட அந்த குட்டியின் குரலில் இருவருமே திடுக்கிட்டு விழித்துக் கொண்டனர்.

அதுவரை அவளை சுற்றி இருந்த மாய வலை அறுந்து விழ, எங்கயோ விண்ணில் பறந்து கொண்டிருந்தவள் பொத்தென்று பூமியில் வந்து விழுந்தாள்..!

அவ்வளவுதான்...அடுத்த கணம் நிதர்சனம் உரைக்க,  சுரபி அவன் கையிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கியவள்...தீச்சுட்டதை போல அவனை விட்டு விலகி தள்ளி நின்று கொண்டாள்.  

அவனுக்கோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத தூரத்தில் போய்விட்டதை போல இருக்க,  சுரபியை ஏக்கத்துடனும், தாபத்துடன் பார்த்தவாறு எட்டி அவளை பிடிக்க முயல,

சட்டென்று அவன் கைக்கு சிக்காமல் பின்னால் நகர்ந்து நின்றவள்,  தன் கன்னங்கள் சிவக்க, அடுத்த கணம்  தன் மகளை அள்ளிக் கொண்டு வேகமாக குளியலறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்...!

இன்னுமே அவளின் மயக்கத்தில் இருந்து வெளிவராமல் கிறங்கிப் போய் குளியலறை கதவையே ஏக்கத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தான் விகர்த்தனன்...!  
Share:

2 comments:

Followers

Total Pageviews

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *