அத்தியாயம்-3
அதே நேரம் அவனுடைய ஐ-போனில் இருந்து விஷ்வா காலிங்...
என்று சிரி கொஞ்சும் குரலில் அவனுக்கு சொல்ல, அந்த குழந்தையின் கன்னத்தை வருடிக் கொண்டு இருந்த தன் கையை மனமே
இல்லாமல் விலக்கி கொண்டவன், தன் அலைபேசியில்
வந்த அழைப்பை ஏற்றான்.
அவனுடைய உதவியாளன் விஷ்வா
மறுமுறையில்.
“குட் மார்னிங் பாஸ்...” என்று துள்ளலுடன் தன் எஜமானனுக்கு ஒரு
காலை வணக்கத்தை சொல்லிவிட்டு,
“பாஸ்... இன்னைக்கு காலைல ஒரு இம்பார்ட்டன்ட் மீட்டிங்
இருக்கு. அதை ஞாபகப்படுத்த தான் கால் பண்ணினேன்...”
என்றான் தயக்கத்துடன்.
“எஸ் மேன்... ஐ நோ... ஐ வில் ஸ்டார்ட் இன் ஃப்யூ மினிட்ஸ்... அடுத்த அரை மணி நேரத்தில் அங்க இருப்பேன். எல்லாரையும்
முன்னதாகவே கான்ப்ரென்ஸ் ஹாலுக்கு வரச்சொல்லிடு...”
என்று கடகடவென்று தன் ஆணைகளை பிறப்பித்தவன், மறுமுனையில் இருந்தவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல், தன் அலைபேசியை அணைத்து விட்டு அந்த படத்தை மீண்டும்
ஒருமுறை ஆசையாக பார்த்துவிட்டு, தன் ப்ரீப்கேசை எடுத்துக்கொண்டு கடகடவென்று மாடியில்
இருந்த படியில் இறங்கினான்.
*****
பாதி இறங்கியவனை, பக்கவாட்டு சுவற்றில் மாட்டி இருந்த மற்றொரு புகைப்படம்
தடுத்து நிறுத்தியது.
அனிச்சையாய் அவன் பார்வை அந்த புகைப்படத்தில் குத்திட்டு நிக்க, மாலையும் கழுத்துமாக தன் மனைவியுடன் நின்றிருந்த அவனுடைய திருமண
புகைப்படம் அது.
அவன், அவளின் தோளை சுற்றி
கை போட்டு லேசாக அவனுடன் சேர்த்து அணைத்தபடி நின்றிருக்க, அதில் இருவருமே சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் ஏனோ அந்த புகைப்படத்தில்
உயிர்ப்பு இல்லை.
அந்த புகைப்படத்தில் இருந்த இருவரையுமே ஒரு கணம் ஆழ்ந்து
பார்க்க, அதில் தெரிந்த
அவர்களின் புன்னகையை பார்த்தவனுக்கு, அது வெறும் நடிப்புக்காக... போட்டோவுக்காக காட்டிய புன்னகை என்பது நினைவில் வந்தது.
அடுத்த கணம் அவன் முகம் இறுகியது...!
கொஞ்சமாக மறைந்திருந்த வெறுமை மீண்டும் அவனை சூழ்ந்து கொள்ள, தன் தோளை குலுக்கிவிட்டு, தலையை சிலுப்பியவாறு விடுவிடுவென்று மீண்டும் கீழே இறங்கி
சென்றான்.
அதே நேரம் டைனிங் டேபிளில், இந்தியன், வெஸ்டர்ன், இட்டாலியன் என்று பலவகை
காலை உணவை எடுத்து வைத்து விட்டு, சமையல்காரன் சாமி பவ்யமாக தன் எஜமான் வரவுக்காக காத்திருந்தான்.
அவனோ டைனிங் டேபில் பக்கமே
திரும்பாமல், விடுவிடுவென்று வாயிலை நோக்கி நடக்க, அதைக் கண்டு பதறிய சாமி,
“சின்னய்யா.........” என்று இழுக்க,
“வேண்டாம்....” என்று ஒற்றை
வார்த்தையில் காலை உணவை மறுத்தான்.
******
நேற்று இரவு அவன் தாமதமாக வந்ததும், எதுவும் சாப்பிடாமல் மேலே சென்று விட்டதையும், சமையல் அறையில் மறைந்து நின்றவாறே கவனித்துக் கொண்டிருந்தான்
சாமி.
மற்ற வேலையாட்கள் எல்லாரும் தங்கள் முதல் தூக்கத்தை முடித்து
இரண்டாவது தூக்கத்தை தொடங்கி இருந்தார்கள்.
ஆனால் அந்த வீட்டில் இருக்கும் அனைவருக்கும் படி அளக்கும் , அனைவரின் வயிற்றை நிறைக்கும் சமையல்காரன் சாமி...
அவன் படி அளப்பதற்கு காரணமான அந்த வீட்டின் எஜமான்...அவன் வயிறு
நிறைந்ததா இல்லையா என்று தெரியாமல் அவனுக்கு தூக்கம் வரவில்லை.
அதனாலயே தன் அறையில் படுத்து இருந்த பொழுதும், தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த சாமி...
தன் எஜமானனின் கார் வரும் சத்தம் கேட்டதும், விலுக்கென்று எழுந்தவன்
வேகமாக வீட்டிற்குள் புகுந்து, அவன் தன்
எஜமானனுக்காக செய்து வைத்திருந்த உணவு பதார்த்தங்களை சூடு படுத்த ஆரம்பித்தான்.
ஆனால் உள்ளே வந்தவனோ, டைனிங் ஹால் என்ற
ஒன்று அந்த வீட்டில் இருக்கிறது என்ற நியாபகமே இல்லாதவனாய், கிடுகிடுவென்று மாடி ஏறிச் சென்றான்.
ஏறும்பொழுது அவன் நடையில் தெரிந்த தடுமாற்றம்...தள்ளாட்டம்...
அவன் குடித்திருக்கிறான் என்பதை உணர்த்த, ஒரு பெருமூச்சை
விட்டான் சாமி.
இந்த மாதிரி, நேரம் கெட்ட நேரத்தில், குடித்து விட்டு
வருபவனை தட்டிக்கேட்க அந்த வீட்டில் அவனுக்காக யாரும் இல்லையே என்று வேதனையாக
இருந்தது சாமிக்கு.
காசு, பணம் கோடி கோடியாக
கொட்டி கிடந்தாலும் சாப்டியா என்று பாசத்துடன் ஒரு வார்த்தை கேட்க யாருமில்லை
என்றால் அந்த வாழ்க்கை எப்படிப்பட்ட நரகம் என்று அவனுக்கும் தெரியும்தான்.
ஏனென்றால் அவனும் அந்த மாதிரி சொந்தம்... உறவு.. குடும்பம்
என்று சொல்லிக் கொள்ள யாருமில்லாத தனி ஆள்தான்.
இப்படி எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் குடித்துவிட்டு
படுத்தால், அது குடலுக்கு நல்லதில்லை என்று அவன் அறிந்து
வைத்திருந்தான்.
அவன் தந்தை குடித்து
குடித்தே குடல் வெந்து புண்ணாகி உயிரை
விட்டவர் ஆயிற்றே.
அதை நேரில் பார்த்தவனுக்கு தன் சின்னய்யாவுக்கு அந்த மாதிரி ஒரு
நிலை வந்துவிடக்கூடாது என்று கவலையாக இருந்தது.
அவன் அறியவில்லை...!
குடல் வெந்து புண்ணாகும் மட்டமான சரக்கு அல்ல அவன் சின்னய்யா
அடிப்பது என்று.
ஆனாலும் தன் சின்னய்யா மீதான பாசத்தில் அவன் மனம் அடித்துக்
கொண்டது.
சரி..காலையிலாவது வயிறார சாப்பிடட்டும் என்று அவனுக்கு
பிடித்தமான எல்லா வகையான உணவுகளையும் சமைத்து, உணவு மேஜையில் கடை பரப்பி வைத்திருக்க, அதை திரும்பி கூட பார்க்காமல் விடுவிடுவென்று செல்லும் தன்
எஜமானனை பார்த்து கஷ்டமாக இருந்தது.
மீண்டும் மனசு கேட்காமல், அவன் வேக நடைக்கு ஈடு கொடுத்து ஓடியவன்,
“சின்னய்யா... நைட் ம் எதுவும் சாப்பிடல... இப்பவும் எதுவும்
சாப்பிடாம போறிங்களே....” என்று தயக்கத்துடன் இழுக்க, அவன் பக்கம் திரும்பாமலயே
“எனக்கு தெரியும்....” என்று முகத்தில் அடிக்காத குறையாக கர்ஜித்து விட்டு விடுவிடுவென்று
வெளியேறி சென்றான்.
ஆங்காங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாரும் நிமிர்ந்து
சாமியை பார்த்து
“இது உனக்கு தேவையா? “ என்று நக்கலாக
பார்த்து வைத்தனர்.
அவர்களின் நக்கலையும், எள்ளலையும் கண்டு
கொள்ளாதவன், மனம் மீண்டும்
பதைத்தது.
மற்ற எல்லாரும், வாங்கும்
சம்பளத்திற்கு கொடுத்த வேலையை மட்டும் செய்துவிட்டு, மரியாதையோடு தன் எஜமானனிடம் இருந்து தள்ளி நின்று கொள்ள, சாமி மட்டும் தன் எஜமானனின் மீது மரியாதையோடு பாசமும் கலந்து வைத்திருந்தான்.
அதனால் தான், தன் முதலாளி என்று மற்றவர்களை போல விலகி நிற்காமல், அவன் சாப்பிடாமல்
போவதை கண்டு அவன் மனம் வேதனை கொண்டு
பதைத்தது.
தன் மீது எரிந்து விழுந்தாலும் மனசு கேட்காமல், அவசரமாக சமையல் அறைக்கு ஓடிச்சென்று சில ஆப்பிள் பழங்களை கழுவி எடுத்துச்சென்று வெளியில் நின்றிருந்த கார்
ட்ரைவர் முத்துவிடம் கொடுத்து கண்ணால் ஜாடை காட்டினான்.
முத்துவும் புரிந்து கொண்டு தலை அசைத்தான்.
சின்னய்யா மீது மரியாதையும் , பாசமும் கலந்து வைத்திருக்கும் அடுத்த விஸ்வாசி.
*****
தன் அலைபேசியில் பேசியவாறு வெளி வந்தவன், போர்டிகோவில் நின்றிருந்த
விலையுயர்ந்த ஃபெராரியை அடைந்தான்
அதே நேரம் அவனுக்காக காத்திருந்த ட்ரைவர், கருப்புநிற ஃபெராரியின்
முன் கதவை திறந்து விட, அதன் உள்ளே அமர்ந்தவன், தன் செல்போனை அணைத்து விட்டு, கழுத்தில் கட்டியிருந்த
டையை கொஞ்சமாக தளர்த்திவிட்டு, தளர்வாக பின்
இருக்கையில் சாய்ந்து கொண்டான்.
அன்றைய அஜென்டாவையும், அன்று பல
மீட்டிங்கில் அவன் பேச வேண்டியதை மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரம் சென்றதும், லேசாக பசிப்பதை போல இருந்தது. அப்பொழுதுதான் நேற்று
மதியத்திலிருந்து அவன் எதுவும் சாப்பிடாதது நினைவு வந்தது.
நேற்று இரவும் அளவுக்கு மீறி ஆல்கஹால் எடுத்துக்கொண்டதால்
அவனுக்கு பசிக்கவில்லை.
இப்பொழுது அதன் தாக்கம் முற்றிலுமாக நீங்கி இருக்க, இப்பொழுதுதான் அவன் உடலில் வயிறு என்ற ஒன்று இருப்பது நினைவு
வந்தது.
பசிக்கவும் அனிச்சையாய்
நிமிர்ந்து பார்க்க, காரின் முன்னால் பிரஷ்ஷாக இருந்தது ஆப்பிள் பழங்கள் சில.
அதை பார்த்ததும் ஒரு
நொடி அவன் முகம் கனிந்தது.
இது சாமியின் வேலையாகத்தான் இருக்கும் என்று எண்ணியவன், இதழோரம் சிறு புன்னகை தவழ, அந்த ஆப்பிள் பழத்தை
எடுத்து கடித்தவாறு தன் வேலையை தொடர்ந்தான்.
*****
“குட்மார்னிங்... லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென்...” என்ற அவனின் கம்பீரமான, ஆளுமையான குரலை
கேட்டதும் , அதுவரை இருந்த திங்கட்கிழமைக்கே உரித்தான
சோம்பலில், இருக்கையில் தளர்ந்து
அமர்ந்திருந்தவர்கள்... விலுக்கென்று நிமிர்ந்து அட்டென்சன் பொசிசனில் அமர்ந்தார்கள்.
அவனின் கணீரென்ற குரல், அந்த காலை வேளையிலும் சோம்பலுடன் உறங்கி கொண்டிருந்த ஒவ்வொருவரின்
மூளையையும் தட்டியெழுப்பியது.
கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த கடைசி வரிசையில் அமர்ந்திருந்த
ஒருவன், தன் கொட்டாவியைக் கூட பாதியில் நிறுத்திக்கொண்டு நிமிர்ந்து
விரைப்புடன் அமர்ந்தான்.
கண்ணாடி தடுப்புகளால் மறைக்கப்பட்டிருந்த அந்த கான்ப்ரென்ஸ்
அறையில் நடுநாயகமாக அவன் நின்றிருக்க, அவனுக்கு முன்னால்
பயபக்தியுடன் அமர்ந்திருந்தார்கள் அந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில்
இருப்பவர்கள்.
அனைவரையும் தன் லேசர் பார்வையால் ஊடுருவி பார்த்துவிட்டு , பேச ஆரம்பித்தான்.
******
இரண்டு வருடங்களுக்கு முன்பு அவன் ஆரம்பித்திருந்த விகர்த்தனன் சாப்ட்வேர்
சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் மாதாந்திர கூட்டம் அது.
விகர்த்தனன் க்ரூப் ஆப் கம்பெனிஸ், விகர்த்தனன்
இன்டஸ்ட்ரிஸ், இந்தியாவின் முன்னனி நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் கால்
பதிக்காத துறைகள் இல்லை.
இம்போர்ட், எக்ஸ்போர்ட் பிசினஸ் ல் இருந்து, மேனுஃபாக்சரிங், கன்ஸ்ட்ரக்சன், சூப்பர் மார்க்கெட் என எல்லாத் துறைகளிலும் நிறுவனங்கள் இருந்தன.
ஆனாலும் அவன் மனதிற்கு பிடித்தமான ஐ.டி நிறுவனம் இல்லாதது
அவனுக்கு குறையாக இருந்தது.
அதனால் இரண்டு வருடத்திற்கு முன்பு தான் இந்த நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தான்...விகர்த்தனன்...
விகர்த்தனன் க்ரூப் ஆப் கம்பெனிஸ், விகர்த்தனன் இன்டஸ்ட்ரிஸ் என்று அழைக்கப்பட்ட
நிறுவனங்களின் உரிமையாளன்.
நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு சிறிய ஐ.டி நிறுவனத்தை
வாங்கி, அதில் சில பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து, இரண்டே வருடத்தில்
கிடுகிடுவென வளர்த்திருந்தான்.
வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள, எந்த மாதிரியான யுக்திகளை கையாள்வது... எப்படி புது புது வாடிக்கையாளர்களின்
ப்ராஜெக்ட்களை பெறுவது என்று பல புது யுக்திகளை கையாண்டான்.
தன் புது முயற்சிகளை வாடிக்கையாளர்களிடத்தோடு
நிறுத்தி விடவில்லை.
ஒவ்வொரு முதலாளிக்கும் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளி தான்
மிகப்பெரிய அச்செட் என்று அறிந்து வைத்திருந்தவன், அங்கு வேலை செய்யும் திறமைமிக்க தொழிலாளர்களை எப்படி தக்க
வைத்து கொள்வது என்ற யுக்திகளையும் செயல் படுத்தியிருந்தான்.
மார்க்கெட் சம்பளத்தை விட, இரண்டு மடங்கு அதிக சம்பளம்… எம்ப்ளாயி நலனுக்காக பல்வேறு வசதிகள் என அமுல் படுத்தி இருக்க, அதில் கவரபட்ட எம்ப்ளாயிஸ் இன்னும் உற்சாகத்தோடு அந்த
நிறுவனத்தில் வேலை செய்ய ஆரம்பித்தனர்.
இப்பொழுது விகர்த்தனன் சாப்ட்வேர் சொல்யூசன்ஸ், எல்லாருடைய மனதிலும் ட்ரீம் கம்பெனியாக வளர்ந்து நின்றது
என்றால் அதற்கு அந்த தனி ஒருவனின் அயராத உழைப்பு, அவன் வகுத்த வியூகம்தான் காரணம்.
*****
இதோ இப்பொழுது கூட, அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை இன்னும் எப்படி துரிதபடுத்துவது
என்பதை பற்றி அலசி ஆராயத்தான்
டைரக்டர்கள்... மேனேஜர்களின் கூட்டம் அது.
விகர்த்தனனிடம் நிறைய
கெட்ட குணங்கள் இருந்தாலும், சில பல நல்ல குணங்களும் இருக்கத்தான் செய்தது.
அதில் ஒன்றுதான் டைம் மேனேஜ்மென்ட்...
எவ்வளவு பிசியாக இருந்தாலும், அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக சென்று விடுவான்.
அதே போல எந்த ஒரு மீட்டிங்ம் கூட, சொன்ன நேரத்தில் சரியாக ஆரம்பித்து விடுவான்.
அதே மாதிரி மற்றவர்களும் சரியான நேரத்திற்கு மீட்டிங்கிற்கு
வந்திருக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவன்.
எப்பொழுதும் நேரத்தை வீணாக்காமல், எவ்வரி செகண்ட்ஸ் கவுண்ட்ஸ் என்பது அவன் பின்பற்றும் தாரக
மந்திரம்.
அதனாலேயே இன்று காலையில் அவ்வளவு சோம்பலாக... தனிமையாக... வெறுமையாக இருந்தாலும்... அதையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு சரியான
நேரத்திற்கு அந்த அலுவலகத்தை அடைந்தவன், அந்த மீட்டிங் ஐயும் சொன்ன நேரத்தில் ஆரம்பித்து
விட்டான்.
அனைவருக்கும் காலை வணக்கத்தை சொல்லியவன், இதுவரை அவர்கள் அவனுக்கு அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி பாராட்டி, அவனுடைய புது
திட்டங்களை உற்சாகத்தோடு விவரிக்க ஆரம்பித்தான்.
அதே நேரம் கான்ஃபரன்ஸ் அறையின் வாயில் அருகே எக்ஸ்க்யூஸ் மீ
என்ற குரல் கேட்க, அதைக் கேட்டு
எரிச்சலுடன் திரும்ப, அங்கே அந்தக் கான்ஃபரன்ஸ் அறையின் கதவை திறந்துகொண்டு உள்ளே எட்டிப் பார்த்தான் ஒரு இளைஞன்...விக்ரம்...ப்ராஜெக்ட் மேனேஜர்..
அவன் முகத்திலோ அப்படி
ஒரு பதற்றம்...
எம்.டி கூட்டியிருந்த அந்த மீட்டிங்கிற்கு தாமதமாக வந்துவிட்ட குற்ற
உணர்வும், கலக்கமும் அவன் முகத்தில் குடி கொண்டிருந்தது.
அவனும் தான் என்ன செய்வான்.
அவன் இருப்பதோ அல்சூரில். அவன் வேலை செய்யும் நிறுவனம் இருப்பது
எலெக்ட்ரானிக் சிட்டியில்..!
பெங்களூரிலயே இருக்கும் அல்சூரில் இருந்து, இந்த மூலையில் இருக்கும் எலெக்ட்ரானிக் சிட்டிக்கு வருவதற்குள்
, அந்த சந்திரனுக்கே சென்று திரும்பி விடலாம் என்று
தோன்றும்.
அந்த அளவுக்கு புகழ் பெற்றது பெங்களூர் ட்ராபிக்...
இன்று காலையிலயே வழக்கமாக கிளம்பும் நேரத்தை விட ஒரு மணி
நேரத்திற்கு முன்பாகவே வீட்டிலிருந்து கிளம்பி விட்டான் தான்.
ஆனால் பெங்களூர் டிராபிக் ஜாம் என்பது யாராலும் கணிக்க முடியாது...
மழை வருவதும், பிள்ளை பெறுவதும் அந்த மகாதேவனுக்கே தெரியாது என்பது கூட இப்பொழுது மாறி விட்டது.
மழை வருவதைக்கூட வானிலை நிலையங்களில் கணித்து சொல்லி
விடுகிறார்கள்... பிள்ளை பெறுவதைக்கூட கணித்து விடலாம்.
ஆனால் பெங்களூரில், எந்த இடத்தில் எப்போ
டிராபிக் ஆகும் என்று யாராலும் கணித்து சொல்ல முடியாது.
அதனாலயே வழக்கமான நேரத்தை கணக்கிட்டு அதற்கு முன்னதாகவே கிளம்பி
விட்டான் தான்.
ஆனால் அவன் போதாத நேரம், வழியில் ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டான்.
ஏழு மலை. ஏழு கடல் தாண்டி வருவதைப்போல, பெங்களூர் ட்ராபிக் ஐ கடந்து வருவதற்குள் பத்து நிமிடம் தாமதமாகி இருந்தது.
அதிலயே பயம் தொற்றிக்கொண்டது அவனுக்கு.
காலையில் அவன் அம்மா ஆசையாக தட்டில் அடுக்கி வைத்து, கலக்கலான தேங்காய் சட்னியிலும், மணக்க மணக்க வைத்திருந்த சாம்பாரிலும் குளிப்பாட்டி வயிற்றுக்குள் தள்ளி இருந்த இட்லி
துண்டுகள் எல்லாம் அவன் கலக்கத்தில் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொள்ள
ஆரம்பித்து இருந்தன.
அதே கலக்கத்துடன், கதவை லேசாக
தட்டிவிட்டு எக்ஸ்க்யூஸ் மீ... என்றவாறு கதவை
திறந்து, தலையை மட்டும் உள்ளே நீட்டியபடி எட்டி பார்த்தான்
விக்ரம்.
அவனைக் கண்டதும் எரிச்சல் அடைந்தவன், கையில் வைத்திருந்த மார்க்கரை அவன் மீது விசிறி அடித்தான் விகர்த்தனன்.
“இடியட்... வாட் இஸ் தி
டைம் நவ்? “ என்று கர்ஜித்தான்.
முகம் கோபத்தில் கொதிக்க, உறுமி கொண்டிருந்த தன் முதலாளியை பார்த்த விக்ரமின் உதடுகள்
வார்த்தைகள் வராமல் தந்தி அடித்தன...
அவன் பேச நினைத்தாலும், எதிரில் இருந்தவனின் கடும் கோபத்தை கண்டு அவன் வார்த்தைகள்
எல்லாம் பயந்து ஓடி ஒளிந்து கொண்டன.
அவற்றை கண்டு பிடித்து, காதை பிடித்து திருகி, இழுத்து வந்து முன்னால்
நிறுத்தி, வார்த்தைகளை
ஒவ்வொன்றாக கஷ்டபட்டு கோர்த்து
“சா........ சா...... சா..... ரி..... சா.....ர்..... “ என்று
தயக்கத்துடன் இழுத்தவாறு தலைகுனிய, அதில் இன்னும் எரிச்சலானவன்
“இடியட்...ஆனா ஊனா எல்லாத்துக்கும் சாரி னு வெறும் வார்த்தையை சொல்லிட்டு தலையை குனிஞ்சுக்கறது...
இந்த அறிவு... அக்கறை முன்னாடியே இருந்திருக்கணும்...
இதுதான் நீ மீட்டிங் வரும் லட்சணமா? உன்னால் உன் நேரத்தையே
மேனேஜ் பண்ண முடியல... நீயெல்லாம் எப்படி ஒரு ப்ராஜெக்ட் ஐ மேனேஜ் பண்ணுவ...
க்ளைன்ட் மீட்டிங் அப்ப இப்படித்தான் லேட் ஆ போயிட்டு சாரினு
சொல்லிட்டு தலையை குனிஞ்சுக்குவியா..? “ என்று கடித்து குதறினான்.
எம்.டியிடம் திட்டு வாங்குவது ஒன்றும் புதிதில்லை...
அதோடு அது ஒன்றும் பெரிய விஷயமும் இல்லை.
கை நீட்டி சம்பளம் வாங்க என வேலைக்கு என்று வந்து விட்டாலே, அடி மட்ட தொழிலாளியில்
இருந்து, மேல் மட்ட ஐ. டி மேனேஜர், டைரக்டர் என எல்லாரும் திட்டு வாங்குவது சகஜம் தான்.
ஆனால் எல்லார் முன்னிலையிலும்
திட்டு வாங்குவது தான் கஷ்டமாக இருந்தது.
என்னவோ நடுரோட்டில்
சட்டையை கழட்டிவிட்டு வெற்று உடலுடன் சுரீர் சுரீர் என்று சாட்டையால் அடிப்பது போல
இருந்தது.
தன் எம்.டி திட்டும் வார்த்தைகளை விட, அத்தனை பேர் மத்தியில் திட்டுவதுதான் அவனை சுட்டது.
இதே அவனுடன் பணி செய்யும் வேறு யாராவது திட்டியிருந்தால், எத்திக்ஸ்... வொர்க் பிளேஸ் ஹரஸ்மெண்ட் என்று ஹச். ஆர் இடம்
சென்று நின்று விடலாம்.
ஆனால் திட்டுவது அந்த ஹச்.
ஆர் க்கே படி அளக்கும் அந்த நிறுவனத்தின் தலைவன் ஆயிற்றே..! இவனைப் பற்றி யாரிடம் சென்று முறையிடுவது என்று உள்ளுக்குள் நொந்து
கொண்டான்.
“போடா... நீயும் உன் வேலையும்... இந்த வேலையே எனக்கு
வேண்டாம்...“ என்று கழுத்தில் மாட்டி இருந்த ஐ.டி கார்டை தூக்கி எம்.டியின்
முகத்தில் விட்டு எறிந்து விட்டு
போய்விடலாம் தான்.
ஆனால் மாதக்கடைசியில், அடுத்த மாதம் ஆரம்பிக்க ஒரு நாள் இருக்கும் பொழுதே… காலையில் ஏழு மணிக்கு டிங் னு வந்து குதிக்கும் அவனுடைய மாத சம்பளம்
அக்கவுண்டில் கிரெடிட் ஆகியிருக்கும் குறுஞ்செய்தியும்..
அந்த செய்தியில் தெரியும் அவனுடைய மாத சம்பளத்தின் ஆறு இலக்க தொகையும் கண்முன்னே வந்தது.
வேறு எங்கு சென்றாலும் இந்த சம்பளம் கிடைக்காது.
இந்த நிறுவனத்தில் வேலைக்கு, மார்க்கெட்டை விட
கூடுதலாக சம்பளம் கிடைப்பதும், அந்த சம்பளத்தை
வைத்து சென்ற வாரம் தான், சர்ஜாபூர் ரோட்டில்
புக் பண்ணி இருந்த வில்லாவும் நினைவு வந்தது
அதற்கான வீட்டு லோனுக்கான ப்ரி இ.எம்.ஐ(pre-emi) அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்க இருக்கிறது என்பதும் நினைவு
வந்தது.
இரு கோடி மதிப்பு மிக்க அந்த லக்சுரி வில்லாவில் சொகுசாக வாழ வேண்டுமென்றால் இந்த மாதிரி ஏச்சுக்களையும்
பேச்சுக்களையும் கத்தலையும் திட்டுக்களையும் வாங்கித்தான் ஆகணும்
என்று தனக்குத் தானே சமாதானப் படுத்திக் கொண்டவன், அடுத்த வருடம் அவனுக்கு
கைக்குக் கிடைக்க இருக்கும் அந்த லக்சுரி வில்லாவை நினைவில் கொண்டு வந்து
குதூகலித்தான்.
*****
“கெட் அவுட் மேன்...பஞ்சுவாலிட்டி இல்லாத, டைம் மேனேஜ் மென்ட் பாலோ பண்ணாத யாரும் என் ப்ராஜெக்ட்டிற்கு தேவையில்லை...
என் நிறுவனத்திற்கும் தேவையில்லை... கெட் அவுட்...” என்று கத்தியது, திடீரென்று மண்டையில் உரைக்கவும்,
அதுவரை பாஸ் என்ன திட்டினான் என்பதை எல்லாம் கண்டுகொள்ளாமல், தன் லக்சுரி வில்லாவில், சொகுசு மெத்தையில் புரண்டு கொண்டிருந்தவன் கடைசியாக அவன் பாஸ் சொன்ன கெட்
அவுட் என்பது மட்டும் காதில் விழ, உடனே திடுக்கிட்டு விழித்துக் கொண்டான்.
கெட் அவுட் என்ற வார்த்தையை கேட்டதும், அதிர்ந்தவன்
“ஐயயோ... இந்த
ரூமிலிருந்து மட்டும் கெட் அவுட் சொல்றானா? இல்லை வேலையிலிருந்தேவா? “ என்று
அதிர்ச்சியுடன் முன்வரிசையில் அமர்ந்திருந்த, எம்.டியின் உதவியாளன் மற்றும் அவனுடைய
நண்பனுமான விஷ்வாவை பார்க்க, அவனோ விக்ரமை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.
விஷ்வா காலையில் எழுந்ததுமே, போன் அடித்து இன்று
காலையில் இருக்கும் மீட்டிங் ஐ பற்றி விக்ரம்
க்கு நினைவு படுத்தி இருந்தான்.
அதோடு பாஸ்க்கு டைம் மேனேஜ்மென்ட் ரொம்ப முக்கியம் என்று சொல்லி நேரத்திற்கு வந்து விடச் சொல்லி
தன் நண்பனுக்கு முன்னெச்சரிக்கை செய்திருந்தான்.
விக்ரமோ அதையெல்லாம் தூக்கி உடைப்பில் போட்டுவிட்டு, இப்பொழுது தாமதமாக
வந்து நிற்க, அதில் எரிச்சலான விஷ்வா
“இது தேவையா டா உனக்கு? “ என்று பார்வையாலேயே அவனை எரித்தான்.
விக்ரமோ தன்
நண்பனை பாவமாக பார்த்து வைத்தவன்,
“எப்படியாவது என்னை இந்த இக்கட்டில் இருந்து காப்பாத்துடா
மச்சான்... “ என்று பார்வையாலயே தஞ்சம் அடைய, அதற்குள் மீண்டும் கத்த ஆரம்பித்து இருந்தான் விகர்த்தனன்.
“ஐ செட் கெட் அவுட் மேன்... “ என்று கர்ஜித்தவன், விஷ்வா பக்கம் திரும்பி,
“விஷ்வா... இந்த இடியட்க்கு
இன்னையோட எல்லா செட்டில்மெண்ட்ம் முடிச்சு, ரிலீவ் லெட்டரை கையில கொடுத்து
இவன் கணக்கை முடிச்சிடு...” என்று
கட்டளையிட்டான்.
“யெஸ் பாஸ்... “ என்று விஷ்வா வும் பதில் சொல்ல, அதைக்கேட்டு அதிர்ந்து போனான் விக்ரம்.
“அடப்பாவி நண்பா... இப்படி காலை வாரி விட்டுட்டியேடா...” என்று விக்ரம் தன் நண்பனை எரிக்கும் பார்வை
பார்க்க, விஷ்வா, பார்வையாலயே
“நான் பாத்துக்கிறேன்.. நீ இப்ப வெளியில் வெயிட் பண்ணு...” என்று ஜாடை சொல்ல, விக்ரம் இருண்ட முகத்தோடு அந்த அறையின் கதவை சாத்திவிட்டு
வெளியேறி சென்றான்.
ஊப்ப்ப்ப் என்று ஊதி விட்டு தன் தோளை குலுக்கியவன், தனக்கு முன்னால் இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தான் விகர்த்தனன்.
யார் முகத்திலும் ஈயாடவில்லை.
பின் ட்ராப் சைலன்ட் என்பது போல, எல்லாருமே முகத்தில் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார்கள்.
ஒரு பத்து நிமிடம் தாமதமாக வந்ததற்கே சீட்டை கிழித்து விட்டான் என்றது பெரும் அதிர்ச்சியாக இருந்தது எல்லாருக்கும்.
இனி தாமதமாக வந்தால் அவர்களுக்கும் இதே கதி தான்... என்று
உறைக்க, இனிமேல் மறந்தும் தாமதமாக வந்துவிடக்கூடாது
என்று மனதுக்குள் சங்கல்பம் செய்து கொண்டார்கள்.
அவனுக்கு வேண்டியதும் அதுதான். விக்ரமை பார்த்து மற்றவர்கள் டைம் மேனேஜ் பண்ண
வேண்டும் என்றுதான் விக்ரமை அப்படி கத்தி வைத்திருந்தான்.
அவன் தந்திரம் நன்றாகவே வேலை செய்ய, இப்பொழுது அவன் உள்ளே ஒரு வெற்றி களிப்பு வந்திருந்தது.
*****
விக்ரம் மீண்டும் ஒரு முறை தன் நண்பனை அடிபட்ட
பார்வை பார்த்துவிட்டு தயக்கத்துடன் கதவை மூடி விட்டு வெளியேறினான்.
விகர்த்தனன் னும் எதுவும் நடக்காதது போல, தன் முகத்தை இப்பொழுது
இலகுவாக்கிக் கொண்டு தன் உரையை தொடர்ந்தான்.
எல்லாரும் அவனுடைய யோசனைகளை, திட்டங்களை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் மீண்டும் அந்த கான்பிரன்ஸ் கதவு திறக்கும் ஓசை
கேட்க, அதில் டிஸ்டர்ப் ஆனவன், சை என்று எரிச்சலுடன் திரும்பி
கதவை பார்த்து கையில் இருந்த டஸ்டரை தூக்கி எறிய தயாரானான்...
அதே நேரம் மெல்ல கதவை திறந்தவாறு, தலையை மட்டும் உள்ளே நீட்டி
எட்டி பார்த்துக் கொண்டு இருந்தது குட்டி வாண்டு ஒன்று.
அதன் பிஞ்சு தளிர் கரங்கள் இரண்டும், கதவின் ஓரத்தை பிடித்தபடி இருக்க, தலையை மட்டும் உள்ளே நீட்டி எட்டிப்
பார்த்தாள் ஒரு குட்டி.
அழகான மலர்ந்த தாமரை பூ போன்ற முகம்... மிரட்சியோடு இங்கும் அங்குமாய் சுழன்ற குட்டி
திராட்சை போன்ற கருவிழிகள்...
ஆப்பிளைப் போன்று செக்கச்செவேலென்று திரண்டிருந்த குண்டு
கன்னங்கள்... கூர்மையான மூக்கு... செக்கச்
சிவந்த செப்பு வாய்... அதில்
குட்டியாய் இரு உதடுகள்...
கோபத்துடன் திரும்பிய விகர்த்தனன், தன் கையில் இருந்த டஸ்டரை விசிறி அடிக்கும் முன்னே நல்ல
வேளையாக அந்த குட்டியை பார்த்து
விட்டான்.
அடுத்த கணம் அவன் உள்ளே பொங்கி கொண்டிருந்த கோபம், தண்ணீர் தெளித்த பாலாய் புஸ் ஆகிப்போனது.
தன் கையில் இருந்த டஸ்டரை மேஜை மீது வைத்து விட்டு, அனிச்சையாய் அவன் கால்கள் கதவை நோக்கி சென்றது.
அந்த குட்டியும் கொஞ்சமும் பயம் இல்லாமல், தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தவனை, தன் குட்டி கண்களையும், மூக்கையும் சுருக்கி, ஆராய்ச்சியோடு கூர்ந்து பார்க்க, அதன் செய்கையில் கவரப்பட்டவனாய், மெல்ல புன்னகைத்தவன், இரண்டே எட்டில் கதவை அடைந்திருந்தான்.
ஒருவேளை திடீரென்று கதவு மூடினால், அந்த குட்டியின் பிஞ்சு கை நசுங்கி விடும் என்ற பதற்றத்துடன்
வேக நடையிட்டு சென்றவன், தன் வலிமையான ஒரு கரத்தால், கதவு மூடிக்கொள்ளாதவாறு
பிடித்துக் கொண்டு, அந்த குட்டியின்
கால்கள் நசுங்கி விடாமல், கதவை நன்றாக உள்நோக்கி திறந்து கொண்டவன், குனிந்து அந்த குட்டியை தன் கரங்களில் அள்ளிக் கொண்டான்.
அந்த குட்டியோ இன்னுமே அந்த நெடியவன் யார் என்ற தன் ஆராய்ச்சியை
தொடர்ந்து கொண்டிருந்தாள்.
இப்பொழுது அந்த நெடியவன் அவளை தூக்கிக் கொள்ளவும், தனக்கு வெகு அருகில் தெரிந்த அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவள், அடுத்த கணம், முகம் சூரியகாந்தியை
போல மலர,
0 comments:
Post a Comment