மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Tuesday, September 27, 2022

வராமல் வந்த தேவதை-18

 


அத்தியாயம்-18

 

ன்ஃபார்மா சொல்றேன்.  அவள் உங்கள் குழந்தை தான்.. என்று டாக்டர் உறுதியாக அடித்துச் சொல்ல,  அதைக் கேட்டு பலமாக அதிர்ந்து போனான் விகர்த்தனன்..! .  

“நிகா என் குழந்தையா?  அது எப்படி?  இல்லை... இந்த டாக்டர் ஏதோ உளறுகிறார்...”  என்று அவரை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான் விகர்த்தனன்.  

“நோ மிஸ்டர் விகர்த்தனன்... நான் எதுவும் உளறவில்லை. எனக்கு  ஜெனிடிக்ஸ்  ல் கொஞ்சம் ஆர்வம். அதனால் பகுதி நேரமாக என்னுடைய ஓய்வு நேரத்தில் ஜெனிடிக்ஸ் ஐயும் படித்து வருகிறேன்.

அதை வைத்து ஒரு க்யூரியாசிட்டியில் தான் உங்க ரெண்டு பேருடைய டி.என்.ஏ வை மேட்ச் பண்ணி பார்த்தது. அதில்தான் உங்க ரெண்டு பேருடைய டி.என்.ஏ வும் 100% ஒத்து போனது தெரிந்தது.  

அதனால்தான் சொல்கிறேன். கண்டிப்பா அந்த குட்டி உங்க குழந்தைதான். எனிவே  இப்போதைக்கு குழந்தையை நார்மலாக்க முயற்சி செய்யலாம். அதற்கு பிறகு பார்த்துக் கொள்ளுங்கள்.  

இப்போதைக்கு   உங்களின் கவனிப்பு தான் அவளுக்கு ரொம்பவும் தேவை. அதுவும் நீங்கள் சொன்னதை வைத்து பார்த்தால்,  அந்த குட்டி அவள் அம்மாவை விட உங்களைத்தான் அதிகம் தேடுவாள் என்று நினைக்கிறேன்.

அதனால் நீங்கள் அவள் பக்கத்திலயே இருந்து பார்த்துக்கொண்டால், இன்னும் சீக்கிரமே குணமாகிடுவா...நோ வொர்ரிஸ்...நான் சொன்னதை வைத்து குழம்பிக்க வேண்டாம். டேக் கேர் ஹெர்..”  என்று புன்னகைத்தவாறு அவனிடம் கை குலுக்கி விடை கொடுத்தார்.  

*****

ருத்துவரின் அறையைவிட்டு யோசனையோடு வெளியே வந்தவன்  யார் மீதோ  இடித்துக் கொண்டான்.  

அவன் கையிலிருந்த அந்த குட்டியின் மெடிக்கல் ரிப்போர்ட் பைல் நழுவி கீழ விழ, அதன் உள்ளே இருந்த பேப்பர்கள் எல்லாம் பறந்தன.  

உடனே அவன் இடித்த நபரும் பதறி,

“சாரி சார்...”  என்றவாறு குனிந்து அதை பொறுக்கிக் கொண்டு  நிமிர்ந்தாள் பின் முப்பதில் இருக்கும் பெண் ஒருத்தி. .  

விகர்த்தனனை கண்டதும் அந்த பெண்மணியின் முகம் மலர்ந்தது

“ஹலோ விகா சர்... எப்படி இருக்கீங்க?  உங்க வைஃப் ஸ்வாதி எப்படி இருக்காங்க?  உங்க குழந்தை எப்படி இருக்கா?  மூன்று வயது இருக்குமே..!  

சாரி சார்...  உங்க வைஃப் டெலிவரி டைம் அப்போ நான் பாரின்ல ஒரு கான்ப்ரென்ஸ்க்காக போக வேண்டியதாயிடுச்சு. அதனால் உங்க வைஃப் டெலிவரியை நான்  அட்டென்ட் பண்ண முடியல...”  என்று படபடவென்று பேசித் தள்ளினாள்.  

முதலில் அந்த பெண்ணை யார் என்று தெரியாமல் முழித்தவன் பின்  அடையாளம் கண்டு கொண்டு,  

“டாக்டர் லதா?  ரைட் ? …”   என்று கேள்வியோடு அந்த பெண்ணை பார்க்க,

“யெஸ் விகா சார்.. நான் டாக்டர் லதான்...” என்று அந்த பெண்ணும்  முறுவலிக்க,

“ஹலோ டாக்டர்....நீங்களா? எப்படி இருக்கீங்க? என்று புன்னகைத்து நலம் விசாரித்தான் விகர்த்தனன்.  

“சூப்பரா இருக்கேன் விகா சர். அப்புறம் உங்க வைப் எப்படி இருக்காங்க? “ என்று ஆர்வமாக விசாரிக்க, ஒரு நொடி தயங்கியவன், பின் தொண்டையை செருமிக்கொண்டு  

“சாரி டாக்டர்...ஷி இஸ் நோ மோர்...  அவளுக்கு ஏழாவது மாசத்தில்... மாடியிலிருந்து தவறி கீழ விழுந்து...  வயிற்றில் அடிபட்டதால்,  அவளையும் என் பேபியையும் காப்பாற்ற முடியல...”  என்றான்  சகஜமாக.  

ஏனோ ஸ்வாதியின் இழப்பு அவனை  பெரிதும் பாதித்திருக்கவில்லை தான்

அதனால் அதைச் சொல்லும் பொழுது அவனுக்கு எந்த ஒரு வருத்தமும் சோகமும் வேதனையும் இதுவரை இருந்ததில்லை.

இப்பொழுது கூட மிக இயல்பாகத்தான் அவளின் இழப்பை பற்றி சொன்னான்.  

அதைக்கேட்ட அந்த மருத்துவரின்  முகத்தில்தான் வேதனை வந்தது.  

“ஓ மை காட்...  சோ சாரி விகா சார்... அந்தக் குழந்தைக்காக உங்க வைஃப் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க...  எத்தனை வேதனைகளை அனுபவித்தார்கள்...  கடைசியில் அதற்கு பலன் இல்லாமல் போய்விட்டதே...பாவம்... “ என்று ஸ்வாதிக்காக ஒரு நொடி இரக்கப்பட்டாள் அந்த மருத்துவர் லதா.  

அதே நேரம் பின்னால் இருந்து யாரோ அவளை அழைக்க

“ஓ.கே விகா சார்... ஒரு அர்ஜென்ட் வொர்க். நாம அப்புறம் பேசலாம்... டேக் கேர்...”  என்று புன்னகைத்து விட்டு, வேகமாக  அங்கிருந்து நகர்ந்து சென்றாள் லதா  

விகர்த்தனன் அவள் செல்வதையே  ஒரு நொடி  பார்த்து விட்டு பின்  யோசனையோடு கர்ணிகா இருந்த அறைக்குள்  வந்தான்.  

*****

ங்கு சுரபி, அவனின் வருகைக்காக ஆர்வமாகவும்  கொஞ்சம் பதற்றத்துடனும்  காத்துக் கொண்டிருந்தாள்.

அவன் உள்ளே வந்ததும் வேகமாக அவனிடம் வந்தவள்

“என்னாச்சு சர்?  டாக்டர் என்ன சொன்னார்?  அது ஏன் உங்களை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு சென்றார்?  எனி ப்ராப்ளம்? அம்முவுக்கு ஏதாவது பெருசா?..”  என்று பதற்றத்தோடு கேள்விகளை அடுக்கினாள் சுரபி  

ஏனென்றால் அந்த மருத்துவரின் கண் ஜாடையை சுரபியும் கண்டு கொண்டிருந்தாள்.  

தன்னிடம் எதையோ மறைப்பதற்காக டாக்டர் அவனை வெளியே அழைத்துச் சென்றார் என்று அறிந்துகொண்டவளுக்கு அது என்ன விஷயம் என்று  தெரிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது.  

“ஒன்னும் இல்ல சுரபி...நிகாவுக்கு காலில் பலமாக அடிபட்டு இருப்பதால் சரியாவதற்கு கொஞ்ச நாள் ஆகும். அதுவரைக்கும் அவளை கவனமாக  பார்த்துக்க   சொன்னார்...”  

என்று எங்கோ பார்த்தபடி சொன்னவன்,  மீண்டும் அந்த குட்டியின் அருகில் சென்று  அமர்ந்து கொண்டவன்  அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.  

அப்பொழுது சற்று முன் டாக்டர் சொன்னது நினைவு வந்தது.  

அந்த குழந்தை உங்களுடைய குழந்தைதான் என்று அவர் அடித்துச் சொன்னது நினைவு வர, அவளையே உற்றுப் பார்த்தான் விகர்த்தனன்.

அவர் சொன்னது போலவே அந்த குட்டியின் முகம் அவன்  ஜாடையில் தான் இருந்தது.  

இத்தனை நாள் அதை அவன் கவனிக்கவில்லை.

ஏதோ யோசித்தவன்  தன்னுடைய அலைபேசியை எடுத்து அதில் ஃபேஸ் டிடெக்டர் ஆப் வழியாக அந்த குட்டியின் சமீபத்திய புகைப்படத்தை திறந்து அவனுடன் மேட்ச் பண்ணி பார்க்க, அது அப்படியே அவனுடைய முகத்திற்கு ஒத்துப் போனது.

அவனுடைய புகைப்படங்கள் எல்லாம் நிகாவின் முகத்திற்கு ஒத்து போனதாக காட்டியது.  

அப்பொழுதுதான் கை பட்டு அவனுடைய போட்டோ கேலரி திறந்துகொள்ள நிகா குட்டியுடன் அவன் எடுத்திருந்த விதவிதமான செல்பிகள்  அவன் பார்வைக்கு வந்தன.  

அந்த புகைப்படங்களை இப்பொழுது உற்றுப் பார்க்க அந்த டாக்டர் சொன்னது போல் அவனின் ஜெராக்ஸ் ஆக இருந்தாள் நிகா குட்டி.

அதுவும் இருவரும் ஒரே மாதிரி ஆடை அணிந்திருந்த அந்த நாளில் அவனையே உரித்து வைத்திருந்தாள் அந்த குட்டி.

கூடவே அவன் தன் நெற்றியில் புரண்ட முடியை ஸ்டைலாக ஒதுக்கி விடுவதை போலவே  அவளும் செய்து இருந்தாள். இன்னும் சில புகைப்படங்களில் இருவரும் ஒரே மாதிரி ஸ்டைலில் போஸ் கொடுத்து இருந்தனர்.

அப்பொழுது  அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை அவன்.  அவள் தன்னை பார்த்து காப்பி அடிக்கிறாள்  என்றல்லவா சிரித்துக்கொண்டான்.  

ஆனால் இது அப்படியில்லை என்று இப்பொழுது புரிய, மீண்டும் ஏதோ யோசித்தவன், அவசரமாக படுக்கையில் கிடந்த அந்த குட்டியை  லேசாக திரும்பி அவளுடைய வலது தோள்பட்டையில் பார்வையை பதித்தான்.

அடுத்த கணம்  அப்படியே உறைந்து போனான்.  

அங்கே ஒரு பெரிய சூரியன் போன்ற மச்சம் இருந்தது

அவனுடைய வலது தோள்பட்டையிலும் அதே போன்றதொரு மச்சம் இருக்கிறது.  

அதை பார்க்கும் பொழுதெல்லாம் அவனுடைய அன்னை சிலாகித்து கொள்வார்..

“டேய் விகா...  நாம வந்து சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள்.  அதனால் நம் பரம்பரையில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த மாதிரி சூரியன் முத்திரை மாதிரி மச்சம் இருக்குமாம்.  

நீ பிறந்த உடன் உன் அப்பா,  நீ  பையனா பொண்ணானு  கூட பார்க்கலை.  இந்த மச்சம் இருக்கானு தான் பார்த்தார். அதை பார்த்ததும் தான் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி...” என்று சிரித்துக் கொள்வாள்.  

அது நினைவு வரவும்,

இந்தக்  குட்டிக்கு எப்படி என்னை போலவே மச்சம் இருக்கிறது என்று அவசரமாக யோசித்தான்.

“ஒருவேளை அந்த டாக்டர் சொன்னது போல இவள்  என் மகள்  தானா? ஆனால் இவள் எப்படி  சுரபியின் வயிற்றில்.?  சுரபியை  நான் முன்ன பின்ன பார்த்தது இல்லையே..!

முதல் நாள் அவளை பார்த்த அன்று,  அவன் மனைவி ஸ்வாதியை போல ஜாடையில் இருந்தால் தான்.  

ஆனால் பெரிய அளவுக்கு ரொம்பவும் ஒற்றுமை இல்லை.  

“ஒருவேளை எங்கேயாவது நான் குடித்துவிட்டு நிலை தடுமாறி சுரபியிடம் தவறாக நடந்து இருப்பேனோ?  

இல்லையே அப்படி நடந்திருந்தால் சுரபி என்னை வெறுப்புடன் தானே பார்த்திருப்பாள்.  

அன்றும், இன்றும் என்னை தெரியாதவனை போலத்தானே இயல்பாக பார்த்து வைக்கிறாள்.  அப்புறம்  எப்படி? என்று யோசித்தவனுக்கு தலைவலிதான் வந்தது.  

“என்னங்க?  தலை வலிக்குதா? என்று இதமாக கேட்ட சுரபியின் குரளில் திடுக்கிட்டு  விழித்தான் விகர்த்தனன்.

அவனை யோசனையுடன்  பார்த்தவள்,

“என்னாச்சு சார்...? ஏதோ  தீவிரமாக  யோசிச்சுகிட்டு இருக்கீங்க?  இப்படியெல்லாம் யோசிச்சா கண்டிப்பா தலைவலி வரும்...!  

நீங்க அம்முவை நினைத்து கவலைப்பட வேண்டாம். சீக்கிரம் அவ சரியாயிடுவா. உங்களுடைய தொழிலை போய் பாருங்க. இனி இவளை நான் பார்த்துக்கிறேன்...”  என்று அவனுக்காக பார்த்து அக்கறையுடன் பேசினாள்  சுரபி

முதன் முறையாக அவளை  ஆழ்ந்து பார்த்தான் விகர்த்தனன்.  

அவன்  பார்வை வீச்சை   தாங்க முடியாதவளாய் தலையை குனிந்து கொண்டாள் சுரபி.

“சுரபி.... நீ என்னை முன்பே எங்கயாவது சந்திச்சிருக்கியா? “ என்று திடீர் என்று கேட்க,  அதில் நிமிர்ந்து முழித்தவள்,  இல்லை  என்று தன் தலையை இருபக்கமும் ஆட்டி வைத்தாள்.

“நமக்குள்ள ஏதாவது   ரிலேசன்ஷிப்...?   என்று தயக்கத்துடன்  இழுக்க, அவளோ அவன் கேட்பதின் அர்த்தம் புரியாமல், புருவ முடிச்சுடன் அவனை  குழப்பமாக பார்த்து வைத்தாள்.  

“ஐ மீன்... நான் உன்கிட்ட எப்பயாவது என்னை அறியாமல் தப்பா நடந்துக்கிட்டேனா? என்று கேட்க, அதில் கோபமானவள்,  

“ஷட் அப்... என்ன உளறீங்க மிஸ்டர்....?  என்னை பார்த்தால்  அப்படிப்பட்ட பொண்ணு மாதிரியா  தெரியுது?  என்று முகம் சிவக்க, கோபத்தில் பொரிந்தாள்.

“ஹே... நோ டென்ஸன்.. சும்மாதான் கேட்டேன்...” என்று சமாளிக்க,

“ஹ்ம்ம்ம் உங்களை நான் பார்த்ததே இல்லை. அலுவலகத்தில்தான் முதல் முறை பார்த்தது...”  என்று முறைத்தாள்.

“ஓகே ஓகே கூல் டவுன்.... சரி உன் ஹஸ்பன்ட்க்கு வலது தோளில்  சூரியன் மாதிரி மச்சம் இருக்குமா? என்று அடுத்த சம்பந்தமில்லாமல் கேட்க,  அதைக்கேட்டு அதிர்ந்தவள்,

“இவருக்கு என்ன ஆச்சு? எதுக்கு இப்படி சம்பந்தம் இல்லாமல்  கேட்டு வைக்கிறார்? ஒருவேளை அம்முவுக்கு அடிபட்டதில் இவருக்கு மூளை குழம்பி விட்டதா? “ என்று எண்ணி அவனை ஒரு   மாதிரி பார்த்து வைத்தாள்  சுரபி.

அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்,

“சொல்லு சுரபி... உன் ஹஸ்பன்ட்க்கு வலது தோளில்  சூரியன் மாதிரி மச்சம் இருக்குமா? “ என்று மீண்டும் படபடப்புடன் கேட்டு வைக்க,

“இருக்குமா? “ என்று யோசித்தவாறு   திருதிருவென்று விழித்தாள் சுரபி.  

“அப்படி எல்லாம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்...”  என்றாள்  தரையை பார்த்தவாறு.  

அதைக்கண்டு ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு.

அது எப்படி தன் கணவனுக்கு மச்சம் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியாமல் இருக்கிறாள் என்று ஆச்சர்யபட்டவன்,  

“ஆஹான்... உன் ஹஸ்பென்ட்க்கு எங்கெல்லாம் மச்சம் இருக்குனு  தெரியாதா? அதுவும் சரிதான்.

இப்படி ஒரு அழகான பொண்டாட்டியை தனியா விட்டுட்டு பணத்துக்காக வெளிநாடு ஓடிப்போனவனுக்கு மச்சம் இருக்கா இல்லையானு உனக்கு எப்படி தெரியுமாம்?”   

என்று தன்னை மறந்து நமட்டு சிரிப்பை சிரிக்க,  அவன்  சொல்வதின்  அர்த்தம் அப்பொழுதுதான் புரிந்தது பெண்ணவளுக்கு .  

உடனே அவள் முகம் சிவக்க, தன் கீழ் உதட்டை அழுந்த கடித்துக் கொண்டு தலையை குனிந்து கொண்டாள்.

அவளின் அந்த வெட்கம் கலந்த முகமும், கீழ் உதட்டை அடிக்கடி கடித்துக் கொள்ளும் மேனரிசமும் வித்தியாசமாக இருந்தது.

தன்னை மறந்து ஒரு நொடி அவளை ரசித்து பார்த்து வைத்தான்.

நொடியில் தன் தலையை உலுக்கி கொண்டு, முக்கியமான பிரச்சனைக்கு வந்தான்.  

“அது சரி... நிகாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுனு உன் ஹஸ்பென்ட் கிட்ட சொல்லிட்டியா? என்று அவளை ஆராய்ச்சியோடு பார்க்க,  அதைக் கேட்டவளோ  திடுக்கிட்டு போனாள்.  

என்ன பதில் சொல்வது என்று திருதிருத்தவள், அவசரமாக

“சொல்லிட்டேன்...”  என்று  முனகி வைத்தாள்.  அதைக்கேட்டவன் இன்னும் கடுப்பானான்.

“ஓ... தன் பொண்ணுக்கு அடி பட்டிருக்கு...  அவனுடைய அப்பா வேற உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.  இவர்கள்  இரண்டு பேரையும் பார்க்கக்கூட வரவில்லையா?  அப்படி என்னத்த சம்பாதிச்சு தொலைக்கிறான்?  இர்ரெஸ்பான்ஸிபில் பெர்சன்...“ என்று  ஏக வசனத்தில் சுரபியின் கணவனைத் திட்ட,  

“ப்ளீஸ்...  அவரை பத்தி எதுவும் பேசாதீங்க... அதோடு இது எங்க குடும்ப விஷயம். அது உங்களுக்கு தேவையில்லாதது.

எனிவே இதுவரை நீங்கள் செய்த உதவிக்கு நன்றி. இதுக்கு மேலயும் நீங்க எதுவும் அட்வான்டேஜ் எடுத்துக்க வேண்டாம். தயவுசெய்து இங்கிருந்து போயிடுங்க...” என்று  அவனை முறைத்து வைத்து,  கையெடுத்து கும்பிட்டாள் சுரபி.  

அவள் முகபாவத்தில் இருந்து அவள் எதையோ மறைக்கிறாள் என்பது மட்டும் அவனுக்கு புரிகிறது தான்.

அவளுடைய கணவனை பற்றி பேசும்பொழுதெல்லாம் அவன் மீது சுள் என்று எரிந்து விழுந்து எதையோ  சமாளித்து வைக்கிறாள் என்பது புரிந்தது.

ஆனால் என்ன அது? எதை மறைக்கிறாள் என்றுதான் புரியவில்லை. அதை அவன் புரிந்து கொள்ளவும் முயலவில்லை. அவனுக்கு அது தேவையும் இல்லை. அவன் கவனம் முழுவதும் அவனுடைய நிகா குட்டியிடம் மட்டும்தான்.

ஆனால் இப்பொழுது அந்த நிகா குட்டியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அவளுடையை கணவனை பற்றி நோண்டினான். அவன் எதிர்பார்த்த படியே அவள் எரிந்து விழ,  

“ஓகே ஓகே உன் ஆருயிர் காதல் கணவனை பற்றி நான் எதுவும் சொல்லலை. நிகா  கண் முழிக்கட்டும். நான் போயிடுறேன்.  இவளை இப்படி விட்டு விட்டு போனாலும், என்னால்  வேற எந்த வேலையும் செய்ய முடியாது...” என்று வேதனையுடன் தன் இமைகளை அழுந்த மூடிக்கொண்டான்.

பின் மெல்ல திறந்து அந்த குட்டியை மீண்டும் ஒரு முறை ஆழந்து பார்த்தான். பின் ஏதோ யோசித்தவனாய்,    

“சரி ஒரு ஃபைவ் மினிட்ஸ் நிகா கூட இரு சுரபி. இதோ வந்திடறேன்...” என்று சொல்லிவிட்டு ,  அங்கிருந்து வெளியேறினான் விகர்த்தனன்.

*****

றையை விட்டு வெளியில் வந்தவனுக்கு, அந்த மருத்துவமனையின் வளாகத்திலயே மற்றொரு பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த  சுரபியின் மாமனார்,  மாமியார் நினைவு வந்தனர்.

சரி.... சுரபியின் மாமியாரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று அவர்கள் தங்கி இருந்த கட்டிடத்திற்கு  விரைந்தான்.  

இப்பொழுது சந்திரசேகர்   உடல் நன்றாக தேறி இருந்தார்.  

இவனைப் பார்த்ததும் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தவர் அவனை பார்த்து நட்புடன்  புன்னகைத்தார்.  

அவரின் நலம் விசாரித்தவன், அவர்களும் அந்த குட்டியின் நலம் விசாரித்து முடிக்க, பின் சுந்தரியை பார்த்து,  

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் மா.. கொஞ்சம் வெளில வர்ரீங்களா?”  என்றவன்  அடுத்து அங்கிருந்த சிறு பூங்காவிற்கு அவரை அழைத்துச் சென்றான்.

அருகில் இருந்த கேன்டினில் இருந்து இருவருக்குமாக காபியை வாங்கி கொண்டு வந்து ஒன்றை அவர் கையில் கொடுத்துவிட்டு மற்றொன்றை அவன் உறிஞ்சியபடி,

“உங்க மூத்த பையன் எப்ப இந்தியாக்கு திரும்பி வர்றார் மா? “ என்று தடாலடியாக கேட்க,  அந்த பெரியவளோ  பேந்த பேந்த முழித்தாள்.

“என்ன தம்பி சொல்றீங்க?  எங்க பையன் திரும்பி வருவதா? என்று குழப்பத்தோடு கேட்க,

“ஆமாம் மா.. உங்க மூத்த பையன் வெளிநாட்டுல தான இருக்கார்..!  இப்படி புள்ளைக்கு அடிபட்டு இருக்கிறத கேட்டு கூட நேரில் பார்க்க வரவில்லையே..

அதோடு அவருடைய அப்பாவுக்கும் முடியாமல் இருக்கிற இந்த நேரத்தில் நேரில் வந்து அவரை பார்த்துக்க வேண்டாமா?  அப்படி என்ன காசு முக்கியம்? “ என்று திட்ட,  அடுத்த நொடி தன் புடவை முந்தானையை இழுத்து வாயில் வைத்துக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள் சுந்தரி.  

அதைக் கண்டு அதிர்ந்தான் விகர்த்தனன்.

தன் மகனைப்பற்றி சொன்னதுக்கு எதுக்கு இப்படி எமோஸனல் ஆகறாங்க என்று குழப்பமாக இருந்தது. ஆனாலும் அந்த பெரியவளின் கண்ணீரைக் காண பொறுக்காமல்

“ஸாரி மா... ஏதோ தெரியாம கேட்டுட்டேன்.  நீங்க அழாதிங்க...”  என்று அவரை மெல்ல அணைத்துக் கொள்ள,  சில நொடிகள் தன் மகனின்  நினைவில் சத்தம் இல்லாமல் அழுது  கரைந்தவர்,  

“என் மூத்த பையன் ஷ்யாம்...ஷ்யாம் சுந்தர்...  திரும்பி வரமுடியாத இடத்துக்கு அல்லவா போய்விட்டான்.  அவன்  எப்படிப்பா இவர்களை பார்க்க வருவான்,,,”

என்று மீண்டும் துக்கம்  தொண்டை அடைக்க, புடவை முந்தானையை வாயில் வைத்து அழுத்தியபடி இன்னுமாய் குலுங்கி அழுதார்.

அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனான் விகர்த்தனன்.  

“வாட்? என்னம்மா சொல்றீங்க? இன்று அதிர்ச்சியோடு கேட்க,

“ஆமாம் பா... ஒரு ஆக்சிடென்டில் என் பையன் எங்களையெல்லாம் விட்டுட்டு அந்த கடவுள் கிட்ட போயிட்டான்.  இப்ப அவன்  உயிரோடு இல்லை...”  

என்று மீண்டும் கண்ணீர் சொரிய, அதைக்கேட்டு அதிர்ந்த விகர்த்தனன்

“அப்ப  உங்க மருமக  சுரபி.... விடோ வா? என்று சந்தேகமாக கேட்க, உடனே பதறியவர்

“ஐயோ இல்லப்பா... அவ விடோ இல்ல... “ என்றார் பதற்றத்துடன்.

அதைக்கேட்டவன் இன்னும் குழப்பமானான்.

“என்னம்மா சொல்றிங்க ? “ என்று குழப்பத்தோடு அவர் முகத்தை பார்க்க,

“என் பையன் கல்யாணம்  கூட பண்ணிக்காமல்...  எந்த சுகத்தையும் அனுபவிக்காமல்...அல்ப  ஆயுசுல போய் சேர்ந்துட்டானே..!

இதுக்கா நான் பத்துமாசம் சுமந்து பெத்தேன்... அவனை ராஜாவாட்டம் வளர்த்தேன்... இப்படி எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு போயிட்டானே...” என்று சுந்தரி சத்தம் இல்லாமல் ஒப்பாரி வைக்க,  

“வாட்? கல்யாணம் கூட ஆகலையா?  அப்ப சுரபி? என்று அதிர்ச்சியோடு மீண்டும் சுந்தரியை பார்க்க,

“சுரபி... எங்க மருமகள்  இல்லப்பா...  மருமகளாக வரவேண்டி இருந்தவள்...  அடுத்த மாசம் என் பையன் ஷ்யாமுக்கும், சுரபிக்கும் கல்யாணம் என்று இருந்த நிலையில்,  ஒரு விபத்தில் என் மகன்  இறந்துட்டான்..  

அதிலிருந்து சுரபி என் பையன் இடத்தில் இருந்து எங்கள் வீட்டு  பொறுப்பை எடுத்துக்கிட்டா.  நான் பெறாத மகள் அவள்.  அவள் எங்க  வீட்டிற்கு மருமகளா வர நாங்க கொடுத்து வைக்காதவர்கள்..” என்று மீண்டும் வேதனையோடு சொல்லி,  கண்ணை அழுந்த மூடிக்கொண்டாள் சுந்தரி.  

அதைக் கேட்டவனுக்கோ  அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.  அதைவிட குழப்பம் இன்னும் அதிகமானது.  

“சுரபிக்கு திருமணமே ஆகவில்லை...அவள் கணவன் வெளிநாட்டில் இருக்கிறான் என்றதெல்லாம் கட்டுக்கதை... அப்படி என்றால் அந்தக் குழந்தை?  நிகா எப்படி? அதுவும்  என் குழந்தையாய்... என் உயிருடன் எப்படி ஒத்து போகிறாள்?

ஒருவேளை அனாதை ஆசிரமத்தில் இருந்து தத்து எடுத்து வளர்க்கிறாளோ?  அதுவும்  எப்படி என் குழந்தை அனாதை ஆசிரமத்தில்...? என்று மீண்டும் யோசனையுடன்  பெரியவளை பார்த்தவன்,  

“மா... நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதிங்க...  சுரபிக்கு திருமணம் ஆகவில்லை என்றால் அவள் குழந்தை...நிகா...  அவள் எப்படி? ஒருவேளை  அனாதை ஆசிரமத்தில் இருந்து தத்து எடுத்து வளர்க்கிறாளா? “ என்று கேட்க, அதைக்கேட்டு பதறியவள்,    

“ஐயோ... அப்படி எல்லாம் இல்லப்பா... கர்ணி குட்டி, சுரபி பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த  குழந்தைதான்...அவள்  அவளுடைய குழந்தை தான்.  

அவளுடைய வாழ்வில் ஒரே ஆதாரமாக இருப்பது அந்த பிள்ளை மட்டும் தான்...” என்று தழுதழுத்தார் சுந்தரி.

அதைக்கேட்டவனுக்கோ இன்னும் குழப்பம் தான் கூடிக்கொண்டே சென்றது.

ஏதோ ஒரு முடிச்சை அவிழ்க்க முயல, அது அவிழாமல் இன்னும் சிக்கலாகிக் கொண்டே செல்வதைப்போல இருந்தது.

“மா.. கொஞ்சம் புரியும்படி தெளிவாக சொல்லுங்களேன்...” என்றான் குழப்பத்துடன்.  

“ஹ்ம்ம்ம் இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு ரகசியத்தை உன்னிடம் மட்டும் சொல்கிறேன் பா... ஏனோ உன்னை பார்த்தால் என்னுடைய மூத்த மகனே நேரில் வந்ததை போல இருக்கிறது.  

அந்த குழந்தையும் உன்னிடம் ரொம்பவே ஒட்டிக் கொள்கிறாள் .

அம்முக்குட்டி அடிபட்டதை பார்த்து நீ தவித்த தவிப்பை நானும் பார்த்தேன்.  எனக்கு என்னவோ உன்னால் தான் சுரபிக்கும்,  அவள் குழந்தைக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்கமுடியும் என்று தோன்றுகிறது.

அந்த நம்பிக்கையில்  இதை சொல்கிறேன்

இதை யாரிடமும் சொல்லி விடாதே என்று அவனிடம் வாக்கு வாங்கிக்கொண்டு சுரபியை பற்றிய கதையை சொன்னாள்  சுந்தரி

அதை கேட்டவனுக்கு அதிர்ச்சி... ஆச்சரியம்...

கண்டிப்பா உன்னால அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முடியும் என்ற ஆசையில் இதை சொல்கிறேன்.  உன் மனதில் வைத்துக்கொள்... என்று ஆரம்பித்தவர் சுரபியை பற்றிய கதையை முழுவதுமாக கூறி முடித்தார்.  

 இப்படியும் ஒரு பெண்ணா என்று வியப்பாய் பெரியவளை நோக்கியவன்

“இதெல்லாம் உண்மையா...? என்று தயக்கத்துடன் இழுக்க

“100% உண்மை தம்பி...  எனக்கு சுரபியும்  மகள் மாதிரிதான்.  அவள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் இதை சொன்னேன்...”  

என்றவர் தழுதழுக்க,  

அவசரமாக அவர் சொன்ன விவரத்தை வைத்து சில கணக்குகளை போட்டுப் பார்க்க,  உடனே ஓரளவுக்கு எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்து போனதை போல இருந்தது. 

இத்தனை நாள் நிகா பற்றிய அவன் கேள்விக்கு விடை தெரிந்தது போல இருந்தது.  .  

அப்பவும் நூறு சதவிகிதம் ஊர்ஜித படுத்திக்க, அவன் போட்ட கணக்கு சரிதானா  என்று தெளிவாக வேண்டும் என்று யார் யாரிடமோ போன் அடித்து சில விவரங்களை கேட்டு குறித்துக் கொண்டான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனுக்குள் இருந்த கேள்விக்கு முழுவதுமாக விடை கிடைத்து விட்டது.

அதன் பதிலில், அவன் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம் வந்து சேர்ந்தது.  

“நிகா இஸ் மை பேபி...! மை டாட்டர்... என் ரத்தம்... என் உயிர்...  என் உயிரில் ஜனித்தவள்... எனக்கே எனக்கான என் தேவதை....  என் மகள்..”  என்று துள்ளி குதித்தான் விகர்த்தனன்..!

Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *