அத்தியாயம்-15
“மார்னிங் ஹெட் ஆபீஸ் ல எனக்கு முக்கியமான மீட்டிங். அதுதான்
காலையில் வர முடியல...”
என்று காலையில் அவர்களை அழைத்துக் கொள்ள வராததற்கு விளக்கம் அளித்தான் விகர்த்தனன்.
“நான் கேட்டேனா? நீ வந்தா எனக்கு என்ன? வராட்டி எனக்கென்ன?” இன்று எண்ணியவளாய், அலட்சிய பார்வையை செலுத்தி, வேற பக்கம் பார்த்து வைத்தாள்
சுரபி.
“ஆனால் எனக்கு ஹெட் ஆபீஸ் போயும் என் ப்ரின்சஸ் நியாபகமாகவே
இருந்தது. எந்த வேலையும் ஓடலை. ஃபுல்லா மைன்ட் அப்செட் ஆனது போல ஆயிடுச்சு
நிகாவை பார்க்க வேண்டும் போல இருந்தது. உடனே கிளம்பி என்
தேவதையை பார்க்க வந்து விட வேண்டும் போல இருந்தது...” என்றான் முகத்தில் மெல்லிய
இளநகையுடன்.
அவன் முகத்தில் இளநகையை கண்டவளுக்கு, அவளையும் அறியாமல் மனதில் இதம் படர்ந்தது.
ஏனோ அவனை அப்படியே இலகிய நிலையில், குறுஞ்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றதாய்
ஒரு ஆசை அவள் மனதில் சிறு அலையாய் பொங்கி எழுந்தது.
“ஆனால் ஹெட் ஆபிஸ் ல் அட்டென்ட் பண்ண வேண்டிய மீட்டிங் நிறைய
இருந்தது. அதனால் என்னால் உடனே கிளம்பி வரமுடியல. அட்லீஸ்ட் நம்ம டேக்கேர்க்கான
ஆப் வழியாக அவளை பார்க்கலாம் என்றுதான் நிகாவை பார்த்தேன்.
அவளை பார்த்ததும் திக் என்றாகி போனது. எப்பொழுதும் மலர்ந்து இருக்கும் அவள் முகம்
வாடிக்கிடந்தது. என்னைக் காணாமல் தான் அவள் முகமும் வாடிக் கிடந்தது என்று
புரிந்தது...” என்றான் சிறு வேதனையுடன் கொஞ்சம் கர்வத்துடன்.
“ஹ்ம்ம் அவள் மட்டுமா? நானும், என் முகமும் கூடத்தான் வாடிக்கிடந்தது.. “ என்றது சுரபியின்
மனஸ்.
“அவள் யாருடனும்
சேர்ந்து விளையாடாமல் அவள் பாட்டுக்கு
முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சென்று ஒரு மூலையில் அமர்ந்து இருந்தாள்.
வாடிய அவள் முகத்தை கண்டதும் என்னால் நிலைகொள்ள முடியவில்லை. அதற்குமேல்
என்னால் அங்கு இருக்க முடியவில்லை.
அதனால் தான் என்னுடைய முக்கியமான எல்லா மீட்டிங்ஸ் ஐயும் கேன்சல் பண்ணிட்டு இங்க ஓடி வந்துட்டேன்.
என்னை கண்டதும் அப்படி ஒரு மகிழ்ச்சி நிகா முகத்தில். ஓடி வந்து என் காலை கட்டிக்கொண்டாள்..”
அவன் முகம் ரொம்பவும் இலகி, பெருமையில் பூரித்தது. குரல் கம்மி லேசாக கரகரத்தான்.
திரும்பவும் அவன் முகத்தில் இலகிய நிலை.
அந்த இன்ப நொடிகளை திரும்பவும் எண்ணிப் பார்த்து பரவசமடைந்தான் விகர்த்தனன்.
தன்னை கண்டதும் அந்த குட்டி தேவதையின் முகத்தில் வந்த மலர்ச்சியும், அப்பா ... என்று அழைத்தவாறு
ஓடிவந்து அவன் காலைக் கட்டிக் கொண்டதும் எண்ணும்பொழுது அப்படி ஒரு பரவசம் அவன் உள்ளே.
மனதில் பெரும் இதம் பரவ, அப்படி ஒரு சந்தோசம்
புன்னகை அவன் முகத்தில்.
அவன் முகத்தையே பார்த்திருந்த பெண்ணவளுக்கு அவன் புன்னகை காந்தமாய் ஈர்த்தது. வசீகர புன்னகை....! காந்த புன்னகை..! ஆளை மயக்கும்
புன்னகை..!
எப்பொழுதும் இவன் இதே புன்னகையோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்று அவளையும்
அறியாமல் அவள் மனம் பிரார்த்தித்தது
“இப்ப சொல்லு ஸ்வாதி...” என்று அவளை பார்க்க, அதுவரை அவனையே ரசித்துக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு
விழித்துக் கொண்டாள்.
அதோடு அவளை ஸ்வாதி என்று அழைத்து வைத்தது, அவள் மனதில் அதுவரை பரவி இருந்த இதம் மறைந்து, முகம் கடுகடுத்தது.
“சுரபி..... “ என்று திருத்தி அவனை முறைத்தாள் பெண்ணவள்.
“சாரி... சொல்லு சுரபி. வாடிக் கிடந்த குழந்தையின் முகத்தில் சந்தோஷத்தை
கொண்டு வரலாமா? வேண்டாமா? “ என்று கேட்க, அதற்குள் தன்னை
சமாளித்துக்கொண்டவள், கொஞ்சமும் அசராமல்
“என் பொண்ணு டல்லா இருந்தா எனக்கு இன்பார்ம் பண்ணி இருக்கலாம் இல்ல. அது எப்படி என்கிட்ட சொல்லாம விட்டாங்க... “ மீண்டும் அவனை முறைத்தாள்.
அவன் முகத்திலோ அவளை
மெச்சும் பார்வை...அவள் பார்வையில் தவறு என்று பட்டதை தைர்யமாக எதிர்த்து கேட்கும்
அவளின் அந்த துணிச்சல் அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.
இதுவரை எந்த பெண்ணிடமும் கண்டிராத துணிச்சல்...நிமிர்வு...ஒரு
கணம் தன்னை மறந்து அவளை ரசித்து வைத்தவன், பின் தன் தலையை உலுக்கிக் கொண்டு
“அப்புறம் டேக்கேர் ஊழியர்கள் எதற்கு இருக்கிறார்களாம்? அங்க இருக்கும்
குழந்தைகளை பார்த்துக் கொள்ளத்தானே மாதம் மாதம் சம்பளம் கொடுக்கிறோம்...
ஏதாவது எமர்ஜென்சி என்றால் மட்டும் தான் அவர்கள் குழந்தைகளின் பேரண்ட்ஸ் ஐ அழைப்பார்கள்.
இந்த மாதிரி சின்ன விசயத்துக்கெல்லாம்
பேரண்ட்ஸ் ஐ கூப்பிட்டால் உங்க வேலை தடைபடும் இல்லையா.
அதோடு டேக்கேரில் இருக்கும் எம்ப்ளாய்ஸ்க்கு முக்கிய வேலையே
அங்கு இருக்கும் குழந்தைகளை சந்தோஷமாக வைத்து கொள்வதாகும்.
இதுபோல சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் பேரண்ட்ஸ் ஐ டிஸ்டர்ப் பண்ணினால்
அவங்க வேலையில் கவனம் சிதறும். வேலை நேரங்களில் உங்களைப் போன்றவர்களை அழைக்கக்கூடாது
என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லியிருக்கிறேன்.
நிகா சீக்கிரம் நார்மல் ஆகிடுவானு அவர்களும் விட்டிருக்கலாம்.
பை தி வே உன்கிட்ட தான்
டேக்கேர் உடைய ஆப் இருக்குமே... அதுல நேரடியாக கண்காணித்து இருக்கலாமே..
இன்றைக்கு ஏன் நிகா டல்லா இருந்தானு முன்னரே பார்த்து இருக்கலாமே...”
என்று அவளை குற்றம் சாட்டும் பாவணையில் பார்த்து வைத்தான் விகர்த்தனன்.
அதைக் கேட்டதும் சுரபிக்கும் அப்போதுதான் உரைத்தது.
இன்று வேலை கொஞ்சம் அதிகம் இருந்ததால் டேக்கேர் ஆப் ஐ அவள் பார்க்கவில்லை. அதோடு அவனை காணாததாலோ என்னவோ, அவள் மூளையும் வேலை நிறுத்தம் செய்து இருந்தது.
எதையும் சரியாக யோசிக்க முடியவில்லை. தன் மகனை கண்காணிக்க
வேண்டும் என்று கூட தோன்றியிருக்கவில்லை.
“அது வந்து....” என்று
தயக்கத்துடன் இழுத்து,
“கொஞ்சம் வேலை அதிகம்.. அதான் பார்க்கலை...” என்று சமாளித்தாள்.
“இட்ஸ் ஓகே... எனிவே நிகா
இப்ப நார்மல் ஆகிவிட்டாள்.. அதோடு என்னைத் தவிர, மற்றவர்கள் யாரும் அனுமதி இல்லாமல் டேக்கேர் உள்ளே செல்ல முடியாது.
குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லவும் முடியாது.
நான் என்றதும் ப்ரியா அலவ் பண்ணிட்டாங்க. நீ நினைக்கிற மாதிரி
செக்யூரிட்டி சிஸ்டம் பக்காவாக இருக்கிற டேக்கேர்தான்...”
என்று அவளை சமாதானப்படுத்த, கொஞ்சம் இறங்கி வந்தவள், மீண்டும் முறுக்கி
கொண்டு,
“அதற்காக நீங்கள் எப்படி என் மகளை வெளியில் தூக்கி போகலாம்? நீங்கள் இந்த நிறுவனத்திற்கு எம்.டியாக இருக்கலாம். அதற்காக அவர்கள்
எப்படி என் மகளை உங்களுடன் அனுப்பி வைக்கலாம்? “ மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றாள் சுரபி.
“அப்புறம் உங்க கிட்ட அவள் ரொம்ப க்ளோஸ் ஆ பழகறா... இது
நல்லதுக்கு இல்லை. அவளை விட்டு கொஞ்சம் தள்ளி நில்லுங்க...” என்று விரல் நீட்டி
எச்சரிக்க, அவனுக்கோ மீண்டும் ஆச்சரிய மின்னல் முகத்தில் வந்து சென்றது.
அவன் எதிரில் நின்று
பேசவே தயங்கும் ஆண்கள்... அவனின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி தவித்து, அவனிடம் உருகி, குலைந்து, மயங்கி, கிறங்கி வளைந்து நிற்கும் பெண்களைத்தான் பார்த்திருக்கிறான். .
இதுவரை அவனை யாரும் முறைத்தோ விரல் நீட்டி மிரட்டியோ பார்த்ததில்லை.
முதன்முதலாக ஒரு பெண் தன்னை மிரட்டுகிறாள் என்கவும், கோபத்திற்கு பதிலாக ஆச்சர்யம் கலந்த சிரிப்பு பொங்கி வந்தது.
அதை அடக்கி கொண்டவன் தன் முகத்தை சீரியஸ் ஆக வைத்துக்கொண்டு
“அது முடியாது ஸ் வாதி.... சாரி சுரபி...” என்க,
“ஏன் முடியாது? “ என்று முறைத்தவள் மீண்டும் விரல் நீட்டி மிரட்ட ஆரம்பிக்க, அதற்குள் எக்ஸ்க்யூஸ்
மீ என்றபடி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் விஷ்வா .
உள்ளே வந்தவன் விகர்த்தனன் எதிரில் அமர்ந்திருந்த சுரபியை கண்டு
ஒரு கணம் ஆச்சரியத்தில் புருவங்கள் ஏறி இறங்கியது.
சுரபி விகர்த்தனனை சந்திக்கும் அப்பாயின்ட்மென்ட் எதுவும் இல்லை
இன்று.
அன்று சந்திப்பதாக இருந்த ஒரு க்ளைன்ட் கடைசி நேரத்தில்
வரமுடியாமல் போய்விட, அந்த ஸ்லாட்
காலியாக இருந்தது.
“இவள் எப்படி இங்கே..? . இவள்தான் அன்று
குழந்தையை தொலைத்துவிட்டு தேடியவள். இவன்
குழந்தையைத்தான் அன்று பாஸ் தூக்கி வைத்திருந்தார்..”
என்பது புரிய, அவளை ஆராய்ச்சியோடு பார்த்தவாறு விகர்த்தனன் பக்கம்
திரும்பியவன்
“பாஸ்... நெக்ஸ்ட் மீட்டிங் இன்னும் சில நிமிடங்களில் ஸ்டார்ட்
ஆகப் போகிறது. இந்நேரம் நீங்க அந்த மீட்டிங்
ஹாலில் இருக்க வேண்டும்.. உங்களை காணாமல் ஓடிவந்தேன்...” என்று அவனுக்கு இருக்கும்
அடுத்த மீட்டிங் ஐ பற்றி சொல்ல,
“ஓ யா.. ஐ ரிமெம்பர்... “ என்று புன்னகைத்தவன், சுரபியின் பக்கம்
திரும்பி,
“ஆல் ரைட் சுரபி.. இப்பொழுது வேலை அழைக்கிறது. நாம அப்புறம்
பேசலாம்.“
என்று தோளை குலுக்கிவிட்டு இருக்கையிலிருந்து எழுந்து, அங்கே ஹேங்கரில் மாட்டி
இருந்த கோட்டை எடுத்து அணிந்து கொண்டு, வாயிலை நோக்கி நடக்க, சுரபியும் அதற்கு மேல்
அங்கே நிற்க முடியாமல், தன் இருக்கையிலிருந்து எழுந்து வெளியேறினாள்...!
*****
மேலும் சில வாரங்கள் கடந்திருந்தது.
விகர்த்தனன் மற்றும் நிகா குட்டியின் பாசப்பிணைப்பு இன்னுமாய் இறுகிப்
போனது.
இப்பொழுதெல்லாம் காலையில் அந்த குட்டியை பார்ப்பது
மட்டுமல்லாமல் மதியம் உணவு இடைவேளையின் பொழுதும், அவளை சென்று பார்த்து வருகிறான் விகர்த்தனன் .
வழக்கம்போல சுரபி போர்க்கொடியை உயர்த்தினாலும், அதே வழக்கம் போல அதை கண்டு கொள்ளாமல், அந்த குட்டியை பார்ப்பதும், அவளுடன் பத்து நிமிடமாவது செலவிடுவதும் தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது.
அது போதாதென்று வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமையையும் விட்டு
வைக்கவில்லை.
அவள் எவ்வளவுதான் மறுத்தாலும் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தை தன்
மகளுடன் அவன் செலவிடுவதை சுரபியால் தடுக்க முடியவில்லை
எப்படி இதைத் தடுப்பது என்று எல்லா திசையிலும் ஆழ்ந்து யோசித்து
பார்த்துவிட்டாள். விடைதான் ஒன்றும் கிடைக்கவில்லை.
பேசாமல் இந்த வேலையை விட்டுவிட்டு வேற எங்கயாவது போய் வேற
வேலையை தேடிக்கலாமா என்று கூட யோசித்து பார்த்தாள்.
ஆனால் இப்பொழுதுதான் அந்த அலுவலகமும், வேலையும், வீடும் வீட்டைச்
சுற்றி இருக்கும் மனிதர்கள் என எல்லாமே செட் ஆகியிருந்தது
இதையெல்லாம் கலைத்துவிட்டு எங்கேயாவது ஓடிப்போய் மீண்டும்
முதலில் இருந்து ஆரம்பிக்க அவளுக்கு ஆயாசமாக இருந்தது
ஏற்கனவே சென்னையிலிருந்து இப்படித்தான் ஓடி வந்திருந்தாள்.
சென்னையில் இத்தனை வருடங்களாக பின்பற்றி வந்த வழக்கத்திற்கு
மாறான வேற ஒரு வாழ்க்கை முறையை இங்கே பெங்களூரில் அமைப்பதற்குள்ளே அவளுக்கு நாக்கு
தள்ளியது.
அப்பொழுதாவது அவள் மட்டும்தான். கர்ணி கைக்குழந்தையாக
இருந்ததால் அவளுக்கு பிரச்சனையில்லை. எந்த புது இடத்தையும் ஈஸியாக அடாப்ட்
பண்ணிக்கொண்டாள்.
ஆனால் இப்பொழுது அவள் மகளும் கொஞ்சம் வளர்ந்திருக்க , இனி வேறு ஒரு இடத்திற்கு சென்றால் அது அவளுக்கும் அவள் மகளுக்கும் செட் ஆகுமா ? தெரியவில்லை. அவ்வளவு
சீக்கிரம் செட் ஆகாது என்றுதான் தோன்றியது.
“அதோடு எலிக்கு பயந்து கொண்டு வீட்டையே கொழுத்துவானேன்? இவன் பெரிய ஆளாக, அப்பா டக்கராக இருக்கலாம்.
அதற்காக என்னை மீறி என்ன செய்துவிடுவான்? “ என்று அசட்டு
தைர்யமும் சேர்ந்து கொள்ள, தன்னைத்தானே தேற்றிக்
கொண்டாள்.
ஆனால் அப்படி எளிதாக சமாளித்து விடக் கூடியவன் அல்ல விகர்த்தனன் என்று விரைவிலயே தெரிந்து கொண்டாள்.
விரைவிலேயே அதை தெரிந்து கொண்டவளுக்கு அடுத்த
அதிர்ச்சி காத்திருந்தது.
அதுவும் தன் செல்ல மகளே
அந்த அதிர்ச்சியை கொடுத்தாள் பெரியவளுக்கு.
******
அன்று ஞாயிற்றுக்கிழமை..!
வழக்கம் போல பூங்காவில் விளையாடாமல், அன்று மதியமே அவளின்
வீட்டிற்கு வந்தவன், அந்த குட்டியை அழைத்துக்
கொண்டு ஜெ.சி ரோடில் உள்ள ஃபன் வோர்ல்ட்க்கு சென்றான் விகர்த்தனன்.
சுரபி அங்கெல்லாம் வேண்டாம் என்று மறுக்க,
“லுக் சுரபி....இந்த வயதில்தான் குழந்தைகள் நிறைய இடங்களை சுற்றி
பார்க்க வேண்டும்... நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டும். அவளின் சந்தோசத்தை நாலு
சுவற்றுக்குள் போட்டு பூட்டி வைக்காதே...
என் ப்ரின்சஸ் எப்பவும் ஹேப்பியா இருக்கணும். உனக்கு
பிடிக்கலைனா நீ இங்கயே இருந்துக்க. நான் குட்டிம்மாவை அழைத்துக்கொண்டு சென்று
வருகிறேன்...” என்று அமர்த்தலாக சொல்ல,
“ஹலோ மிஸ்டர்... என்
புள்ளையை எப்படி வளர்க்கறதுனு எனக்கு தெரியும். நீங்க ஒன்னும் எனக்கு டியூசன்
எடுக்க வேண்டாம்...” என்று சிலிர்த்துக்கொண்டு
சண்டைக்கு நிற்க,
“ஓ அப்படியா... அப்ப
சொல்லுங்க டீச்சரம்மா... நான் குழந்தையை அழைத்துக் கொண்டு அவுட்டிங் செல்வதில் உனக்கு
என்ன கஷ்டம்? “ என்று அவளை ஊடுருவிப் பார்க்க,
“நீதான் டா கஷ்டம்....உன்னோட நான் எப்படி ஊர் சுற்றுவதாம்...
நாலு பேர் என்ன சொல்வார்கள்...இந்த மடையன் கொஞ்சம் கூட அதை யோசிக்க
மாட்டேங்கிறானே...” என்று மனதிற்குள் திட்டிக்
கொண்டவள்,
“வந்து... நானே அவளை
கூட்டிக் கொண்டு போய் காட்டுகிறேன்... “ என்றாள் வெளிவராத குரலில்.
“ஓஹோ... அப்ப நான் உன்னுடன் வருவதுதான் கஷ்டமா? “ என்று அவள் மனதை
கண்டறிந்து நேரடியாக கேட்க,
“ஹப்பாடா...இந்த மர மண்டைக்கு இப்பயாவது புரிஞ்சுதே... சந்தோசம்...” என்று உள்ளுக்குள் நக்கல் அடித்தவள்,
“ஆமாம்... நான் முன்பு
சொன்னது தான். நாலு பேர்...” என்று
ஆரம்பிக்க உடனே அவள் முன்னே கையை நீட்டி
அவளை தடுத்து நிறுத்தியவன்,
“ஷட் அப்... இந்த நாலு பேர் புராணத்தை நிறுத்தறியா? உன் புருஷன் என்ன சொல்றார்? அதை மட்டும் பார்... கிவ்
ஹிஸ் நம்பர். ஐ வில் டாக் டு ஹிம்...” என்று தடாலடியாக மடக்க, அவளுக்குத்தான் என்ன
சொல்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி போனாள்.
வேறு வழியில்லாமல் அவளும் தயாராகி அவனுடன் செல்ல வேண்டியதாயிற்று.
ஆனால் அங்கே சென்ற பிறகுதான் அந்த நெட்டை சொன்னது எவ்வளவு உண்மை
என்று புரிந்தது.
******
எங்கு பார்த்தாலும் பட்டாம்பூச்சிகளாய் சுற்றித்திரியும்
குழந்தைகள் எத்தனை எத்தனை..!
எல்லாருமே முகம் கொள்ளா மகிழ்ச்சியோடு இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.
அவர்களை எல்லாம் ஆவலுடனும், ஆச்சர்யத்துடனும் பார்த்து வைத்தது கர்ணி குட்டி.
அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சியையும், கண்களில் தெரிந்த ஆனந்தத்தையும் கண்டவன், சுரபிக்கு கண்ணால் ஜாடை காட்டி, பார்த்தாயா என்று
புருவத்தை உயர்த்தினான்.
அப்பொழுதுதான் அவள் தவறு புரிந்தது.
இந்த மாதிரி குழந்தையை வெளியில் அழைத்து வந்து காண்பிக்க
வேண்டும் என்ற அறிவு அவளுக்கு தோன்றியிருக்க வில்லை.
அவளை பொறுத்தவரை அவள் உலகம்
மிகச் சிறியது.
அவள் வீடு… அருகில் இருக்கும்
பார்க்...எப்பயாவது சற்று தள்ளி இருக்கும் மால்... இதுமட்டும்தான் சுற்றி
பார்க்கும் இடங்கள்.
ஆனால் தன் மகளுக்கு அதையும் தாண்டி இன்னும் பெரிய உலகத்தை காட்ட
வேண்டும்... நிறைய மனிதர்களை அறிமுக
படுத்தவேண்டும் என்றெல்லாம் தோன்றியிருக்கவில்லை.
ஏனென்றால் அவளும் சிறுவயதில் அந்த மாதிரி எல்லாம் சுற்றி
பார்த்ததில்லை அவள் பழகியதைத்தான் தன் மகளுக்கும் பழக்கியிருந்தாள்.
ஆனால் இப்பொழுது இருக்கும் தலைமுறையின் தேடல் வேறல்லவா?
“ஒருவேளை ஷ்யாம் இருந்திருந்தால் இப்படி எங்களை பொறுப்பாக
அழைத்துக்கொண்டு சென்றிருப்பானோ? அவளுக்கு தெரியாததை
எல்லாம் அவன் காட்டி இருப்பானோ? “ என்று எண்ணும் பொழுதே அவளின் கண்களில் நீர்
சுரந்தது.
சிங்கில் மதராய் ஒரு குழந்தையை வளர்ப்பது தவறா? கஷ்டமா? என்று யோசித்தவளுக்கு கஷ்டம்தான் என்று விடை கிடைத்தது.
இப்பொழுது மட்டுமல்ல..! கர்ணிகா அவள் வயிற்றில் உருவானதிலிருந்து தனி
ஆளாய் நின்று தன்னைத்தானே கவனித்துக் கொள்வதற்கும்...தனியாய் நின்று அவளை பெற்று
எடுக்க... அடுத்து வளர்க்க... என்று எல்லா இடத்திலும் அவள் பட்ட கஷ்டங்கள்..வேதனைகள்...வலிகள் எத்தனை எத்தனை.!
ஆனால் அவள் பட்ட கஷ்டங்களை எல்லாம் அசால்ட்டாக தாங்கிக் கொண்டால் தான். அதெல்லாம் ஒரு கஷ்டமாகவே தெரியவில்லை அவளுக்கு.
ஆனால் அவள் மகள் என்று வரும்பொழுது , அவளின் உலகம்...அவள் எதிர்பார்ப்பு... அவளுக்கு கொடுக்க வேண்டியது... எல்லாம் வேறு
அல்லவா.
அதை சிங்கில் மதர் ஆக கொடுக்க முடியுமா இன்று முதன்முறையாக சிறு
கலக்கம் தோன்றியது.
“வாட் ஹேப்பன்ட் சுரபி? “ என்ற குரலில்
திடுக்கிட்டு விழித்தாள் சுரபி.
அவளையே ஆராய்ச்சியோடு பார்த்தவாறு நின்றிருந்தான் விகர்த்தனன்.
கண்ணோரம் திரண்டிருந்த விழி நீரை, அவசரமாக சுண்டி விட்டு கொண்டவள், தன் வேதனையை அவனிடம் காட்டாதவாறு முகத்தை மறைக்க வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
ஒரு நொடி அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன்,
“என்ன? உன் ஹஸ்பன்ட் ஞாபகம் வந்திடுச்சா? “ என்று அவளை
ஊடுருவிப் பார்த்து கேட்க,
தன் மனதில் இருந்ததை கண்டு கொண்டானே என்ற ஆச்சரியமும், வேதனையும் ஒன்றாக கலந்து வந்தது.
“நத்திங்... சரி வாங்க உள்ளே
போகலாம்...” என்று அந்தப் பேச்சை மாற்ற விரும்புபவளாய்
முன்னே நடக்க, அவளையே யோசனையோடு பார்த்தவாறு கர்ணி குட்டியை
கைகளில் அள்ளிக் கொண்டு உள்ளே நடந்தான் விகர்த்தனன்.
*****
அங்கிருக்கும் குழந்தைகள் விளையாடும் வகையில்
இருந்த எல்லா ரைடுகளிலும் அந்த குட்டியை தூக்கி கொண்டு சென்று சுற்றி வந்தான்
விகர்த்தனன்.
அந்த குட்டியும் முதல்முறையாக இந்த ரைடில் போகிறோம் என்று கொஞ்சமும் பயமின்றி, ஒவ்வொன்றிலும் செல்லும் பொழுது கை தட்டி ஆரவரித்து ஆர்வமாக விளையாட, சுரபிக்குத்தான் கஷ்டமாக இருந்தது.
ஏனோ அவர்களோடு இணைந்துகொள்ள மனம் விரும்பினாலும், ஏதோ ஒன்று அவளை
தடுத்தது..
தனக்கு தலை சுத்தும். அலர்ஜி..வாமிட் வரும்... என்று
ஏதேதோ காரணத்தை அடுக்கி அவர்களோடு செல்ல மறுத்தாள்.
விகர்த்தனனும் அவளை கட்டாயபடுத்தாமல், அவளை கண்டு கொள்ளாமல் தன் தோளை குலுக்கி விட்டு அந்த குட்டியுடன் சேர்ந்து சுற்றினான்.
ஒரு வழியாக குழந்தைகள் விளையாடும் எல்லா ரைடுகளையும், முடித்துவிட்டு, அந்த வளாகத்திலயே இருந்த
உணவகத்திற்கு சென்றனர்.
அங்கிருந்த டேபிளில் விகர்த்தனன், கர்ணி குட்டி இருவரும் ஒரு பக்கம் அமர்ந்து இருக்க, அவர்களின் எதிர்ப்புறமாய்
அமர்ந்து கொண்டாள் சுரபி.
விகர்த்தனன் அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை ஆர்டர் பண்ணிவிட்டு, அந்த குட்டியோடு ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தான்.
சுரபி அமைதியாய் அவர்களை பார்த்து இருந்தாள். இடையிடையே அவன்
பார்வை மட்டும் அவள் பக்கம் வந்து சென்றது.
சுரபியோ அவனை பாராதவளாய் வேற பக்கம் திருப்பி கொண்டாலும், ஓரப்பார்வையில் அவனை அளவெடுக்க தவறவில்லை.
அலுவலகத்துக்கு எப்பொழுதும் அணியும் பார்மல் இல்லாமல், கருப்பு நிற ஜீன்ஸும், சந்தன நிறத்திலான
ரவுண்ட் நெக் முழுக்கை டி-சர்ட் ம் அணிந்து இருந்தான்.
கண்களில் கருப்பு நிற கூலர். தலை முடியை கொஞ்சம் மாற்றி சீவி
இருந்தான்.
எதற்காக இப்படி மாற்றி இருக்கிறான் என்று யோசித்தவளுக்கு உடனே
புரிந்து போனது.
அவன் தன் அடையாளத்தை கொஞ்சமாய் மாற்றி இருக்கிறான். இன்று அவள்
வீட்டுக்கு வந்த பொழுது கூட அவன் வழக்கமாக பயன்படுத்தும் ஜாகுவார் இல்லாமல் சிறிய
ரக காரைத்தான் எடுத்து வந்திருந்தான்.
“எதற்காக இதையெல்லாம் செய்கிறான்? அவ்வளவு ப்எரிய மல்ட்டி மில்லினர் இந்த மிடில் க்ளாஸ்
குழந்தையுடன் இழைவது ஏன்? “ விடை தெரியவில்லை...
லேசாக வீசிய தென்றலில் முன்னால் வந்து விழுந்த அடர்ந்த
கருகருவென்று இருந்த கேசத்தை ஸ்டைலாக
ஒதுக்கி கொண்டு, அவள் மகளிடம் செல்லம் கொஞ்சி கொண்டிருந்தான்.
அவளோ தன் அன்னை என்று ஒருத்தி அங்கே இருப்பதையே மறந்து போய்
அவனுடன் ஒன்றிக் கொண்டாள்.
அதைப்பார்த்து கொஞ்சம் பொறாமையும்...கொஞ்சம் ஆதங்கமும்..கொஞ்சம்
கவலையும் கொண்டால்தான். ஆனாலும் மழலையில் ஏதேதோ பிதற்றிக்கொண்டிருக்கும் தன்
மகளைக்காண அவள் மனம் நிறைந்து போனது.
தன்னிடம் இருக்கும்பொழுது இந்த அளவுக்கு அவள் உற்சாகமாகவும், துள்ளலுடனும் இருந்ததில்லை என்றும் உரைத்தது.
எதிரில் அமர்ந்து இருந்தவள், தன் மகளையே முதன் முறை பார்ப்பவளை போல ஆழந்து பார்த்து
ரசித்தாள்.
அந்தக் குட்டிக்கும் விகர்த்தனன் அணிந்திருந்த அதே டிசைனில் குட்டி ஜீன்ஸ்...முழுக்கை சந்தனநிறத்திலான டி-ஷர்ட்..சற்று உற்று பார்த்தவளுக்கு அப்பொழுதுதான் உரைத்தது.
அவர்கள் இருவரும் அணிந்து இருப்பது, இப்பொழுது ட்ரென்டிங் ல் இருக்கும் அப்பா-மகள் ஒரே மாதிரியான ட்ரெஸ் கலெக்சனில் ஒரு டிசைன் அது.
சுரபி வழக்கம்போல அவளுக்கு ப்ராக்தான் போட்டு விட்டிருந்தாள்.
அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த விகர்த்தனன், அதை பார்த்து முகத்தை சுளித்தான்.
“லுக் சுரபி. நாம போகப்போறது தீம் பார்க். அங்க அம்மு, ஓடி ஆடி விளையாடுவா.
தவறி கீழ விழுந்தால் கூட அடிபடாமல் இருக்க, இந்த மாதிரி ப்ராக்
எல்லாம் செட் ஆகாது.
இந்த ஜீன்ஸ் அன்ட் புல்
ஸ்லீவ் தான் செட்டாகும்...இதை
போட்டுவிடு... ” என்று பொறுப்புடன் சொல்லி, அவன் வாங்கி வந்திருந்த ட்ரெஸ்சை கொடுத்தான்.
அதைக்கேட்டதும் முகம் கன்றிப் போனது பெண்ணவளுக்கு.
அவளுக்கு கூட அது
மாதிரி யோசிக்க தோன்றவில்லை.
இவன்தான் எவ்வளவு பொறுப்பாக ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து
செய்கிறான் என்று ஒருகணம் ஆச்சரியமாக இருந்தது.
அவனிடம் மறுக்க தோன்றாமல், அவன் கொடுத்த ட்ரெஸ் ஐ மாற்றி அழைத்து வந்திருந்தாள்.
அப்பொழுது கவனிக்கவில்லை.. இது அவர்கள் இருவருக்கும்
பொருத்தமாய் அவன் பார்த்து வாங்கி வந்திருந்த ட்ரெஸ் என்று.
இப்பொழுது பார்க்கும்பொழுது அவளுக்கு நெஞ்சை அடைத்தது.
அவன் அவளை அவன் மகளாகவே பார்க்கிறான் என்பது அவளுக்கு
புரிகிறது. ஆனால் இது தப்பு... தன் மகளுக்கு தந்தை பாசத்தை காட்டி ஏமாற்ற கூடாது
என்று சொன்னால் புரிந்து கொள்ள மாட்டேங்கிறான்.
அதுவும் அவனைப்பற்றி அறிந்த பிறகு சுரபிக்கு இன்னுமே பயம்
தொற்றிக் கொண்டது.
அவனுடைய ஸ்டேட்டஸ்க்கு அவன் ஏன் தன் மகளையே சுற்றி வருகிறான்
என்றுதான் பயமாக இருந்தது.
ஆனால் அவனிடம் சந்தேகப்படும்படி எந்த நடவடிக்கையும் தெரியவில்லை.
தன் மகளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறான்.
ஆனால் ஏன்? அதுதான் அவளுக்கு புரியவில்லை. அவனிடம்
கேட்டாலும்
“என் பிரின்சஸ்க்கு
என்னை பிடிக்கிறது. எனக்கும் அவளை ரொம்ப பிடிக்கிறது. வி ஸ்பென்ட் அவர் டைம்
டுகெதெர்....லெட் ஹெர் என்ஜாய் ஹெர் சைல்ட் குட்... என்று தோளை குலுக்கிவிட்டு
கேசுவலாக சென்று விடுகிறான்.
அதற்குமேல் அவளால் மல்லுகட்ட முடியவில்லை.
யாரிடம் சென்று இந்த சிக்கலை சொல்லி புகார் கொடுப்பது. தன் மகளே
அல்லவா அப்பா என்று அழைத்து அவனிடம் ஒட்டிக்கொள்கிறாள்.
பேசாமல் நடப்பதை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் என்று ஒரு
பெருமூச்சை இழுத்து விட்டாள் சுரபி.
*****
அங்கிருந்த சர்வர், அவன் ஆர்டர் பண்ணிய உணவை கொண்டு வந்து வைத்து விட்டு செல்ல, விகர்த்தனன், வெகு இயல்பாக
அங்கிருந்த நாப்கினை எடுத்து அவன் மடியில் விரித்து வைத்துக் கொள்ள,
அந்த குட்டியும் அதே போல
அவள் அருகில் இருந்த அவளுடைய நாப்கினை எடுத்து அவள் மடியில் விரித்து வைத்துக்கொண்டு அவனைப் பார்த்து பால் பற்கள்
தெரிய சிரித்தாள்.
அதில் மயங்கியவன்
“குட் கேர்ள்... மை ஸ்வீட் ஏஞ்சல்....” என்று அவள் கன்னத்தை தட்டிவிட்டு, அருகில் இருந்த உணவை எடுத்து அவள் தட்டில் கொஞ்சமாக வைத்தவன்,
“இன்னைக்கு குட்டிமா நீங்களே சாப்பிடுவிங்களாம். அப்பா எப்படி சாப்பிடறனோ, அதே மாதிரி நீங்களும் சாப்பிடனும்...” என்று புன்னகைத்தவன், தன் தட்டில் இருந்த உணவை ஸ்பூனால் அள்ளி சாப்பிட, அந்த குட்டியும் அதே மாதிரி செய்தாள்.
அதைக் கண்டு அதிர்ந்து
போனாள் சுரபி.
ஏனென்றால் விகர்த்தனன் இடது கையில் ஸ்பூனை பிடித்திருந்தான். அப்பொழுதுதான் அவளுக்கு தெரிந்தது அவன் லெஃப்டி என்று.
ஆனால் தன் மகள் எப்படி
இடது கையில் சாப்பிடுகிறாள்? ஒருவேளை அந்த நெட்டையை பார்த்து அவளும் காப்பி
அடிக்கிறாளோ? என்று அவசரமாக ஆராய்ந்தவள் திடுக்கிட்டாள்.
ஆரம்பத்திலிருந்தே அந்த குட்டி எல்லாவற்றையும் இடது கையில்தான்
செய்து வந்தாள். அப்பொழுது அது அவள் கவனத்தில் பட்டிருக்கவில்லை.
இப்பொழுதுதான் அவளாகவே தன் வேலைகளை செய்ய ஆரம்பித்திருக்க, இப்பொழுதுதான் அவளின் இடது கை பழக்கம் சுரபிக்கு தெரிய வந்தது.
“இது எப்படி சாத்தியம்? பொதுவாக குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்கள், இருவரின் குடும்பத்தின் பாரம்பரிய பழக்கம் தானே ஜெனிடிக்
ஆக தொடரும்.
அப்படிப் பார்த்தால் அவள் வீட்டில் யாருக்கும் இடது கை பழக்கம்
இல்லை. ஷ்யாம்...? ஷ்யாம் பக்கத்திலும் யாருக்கும் இடது கை பழக்கம் இல்லை. அப்படி
என்றால் இவள் எப்படி? “ என்று அவசரமாக யோசித்தவள் மீண்டும் அதிர்ந்தாள்.
விகர்த்தனன் சிரித்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருக்க, முன்னால் வந்து விழுந்த முடியை வலது கையால் ஒதுக்கி கொண்டு
சாப்பிட, அதையே அவள் மகளும்
பின்பற்றினாள்.
தன் முன்னால் வந்து
விழுந்த முடியை வலது கையால் ஸ்டைலாக ஒதுக்கி
விட்டு, லாவகமாக இடது கையில் இருந்த ஸ்பூனால் அள்ளி சாப்பிட்டாள்.
அதைக் கண்டு திடுக்கிட்ட பெரியவள் மீண்டும் அவசரமாக யோசித்தாள்.
“ஒருவேளை ஒருவருடன் நெருங்கி பழகும் பொழுது அவரின் பழக்க வழக்கங்கள்
மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும் என்பார்கள்.
அப்படித்தான் இவளும். இந்த நெட்டையை காப்பியடித்து வைக்கிறாள்
போல. ஆமாம்..ப்படித்தான்...சரியான காப்பி கேட்...”
என்று தனக்குத்தானே சாமாதானம் செய்து
கொண்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.
அதே நேரம் ஓரக்கண்ணால் முதல் முறையாக இருவரையும் ஆழ்ந்து பார்க்க, அவள் சற்றுமுன்
செய்து கொண்ட சமாதானம் அடுத்த நொடி காணாமல் போனது.
அதற்கு பதில் பெரிய அதிர்ச்சி வந்து அவள் நெஞ்சை அடைத்தது..
மீண்டும் கண்ணை சிமிட்டி விட்டு, இருவரையும் ஆழ்ந்து உற்று பார்க்க, அடுத்த கணம் விதிர்விதிர்த்து போனாள்.
அந்தக் குட்டி அப்படியே விகர்த்தனன் சாயலில் இருந்தாள்.
இதுவரை தெரியாத, அவள் கண்டு
கொண்டிராத உருவ ஒற்றுமை... தன் மகளின் சாயல்... இப்பொழுது வளர ஆரம்பிக்கும் தன் மகளின் சாயல் வெளிவர
தொடங்கியிருந்தது.
அதைக் கண்டு தான்
அதிர்ந்து போனாள் சுரபி.
மேலோட்டமாக பார்க்கும்பொழுது தெரியாத இருவரின் ஒற்றுமை, கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் நன்றாகவே தெரிந்தது.
“இது எப்படி
சாத்தியம்? இவள் எப்படி அந்த
நெட்டையை போல இருக்கிறாள்..” என்று யோசிக்க,
“ஒருவேளை இந்த நெட்டை கொஞ்சம் ஷ்யாம் ஜாடையில் இருப்பதால், அவள் மகள் அவனைப் போல
இருப்பதாக தோன்றுகிறதோ? அவள் கூட முதலில்
அந்த நெட்டையை பார்த்து ஷ்யாம் என்றுதானே அழைத்து வைத்தாள்.
அதனால் இவள் அவன் ஜாடையில் தெரிகிறாளோ? ஆனாலும் இவள் ஷ்யாம்
ஜாடையில் எப்படி? “ என்று இன்னுமாய் குழப்பமாக இருந்தது.
“ஒருவேளை அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, நான் ஏதோ ஒரு
குழப்பத்துடன் இருவரையும் ஒப்பிட்டு பார்ப்பதால் அதே போல தோன்றுகிறதோ?
ஆம் அப்படித்தான் இருக்கும். நாம் ஒன்றை எப்படி பார்க்கிறோமோ
அதே போலத்தான் தோன்றும் என்பார்களே..! “
கல்லைக் கண்டால் நாயைக்
காணோம்... நாயை கண்டால் கல்லைக் காணோம்
என்ற பழமொழி நினைவு வந்தது.
அதுவும் உண்மையான பழமொழி:
கல்லைக் கண்டால் நாயகனைக்
காணோம்...நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம் என்பதாகும்.
நாயகன் என்றால் கடவுள்.
அதாவது கல்லால் செதுக்கப்பட்ட கடவுளின் சிலையை காணும்பொழுது, அங்கே கடவுள் மட்டுமே தெரிவார். கல் தெரியாது.
ஆனால் அதையே வெறும் கல்லாக பார்க்கும் பொழுது கடவுள் தெரிய
மாட்டார். கல் மட்டும்தான் தெரியும் என்று சமீபத்தில் அவள் படித்த அந்த பழமொழியின்
விளக்கம் நினைவு வந்தது.
அதே பழமொழியை நாம் எப்படி வேற மாதிரி மாற்றி விட்டோம்.
நாயகனை நாய் ஆக்கி, பழமொழியையும், நாய் இருந்தால் அதை
அடிக்க கல் இருக்காது , கல் இருந்தால் நாய் இருக்காது என்றதாய் மாறிப்போனது நினைவு வர, தன் குழப்பம்...அதிர்ச்சியை மறந்து மெல்ல புன்னகைத்து வைத்தாள் சுரபி.
“என்ன பிரின்சஸ்? உன் அம்மா மட்டும்
தனியா சிரிக்கிறாங்க? என்ன ஜோக்குனு கேளு?” என்ற விகர்த்தனனின்
குரல் கேட்டு, திடுக்கிட்டவள், தன் சிந்தனையிலிருந்து வெளி
வந்து, அவர்களைப் பார்த்து
அசட்டு சிரிப்பு சிரித்தாள்.
“வாட் ஹேப்பன்ட் மாம்...” என்று தன் குட்டி கையை ஆட்டி கேட்டாள்
அவள் மகள்.
இப்பொழுதெல்லாம் அவனைப் போலவே ஸ்டைலாக ஆங்கிலத்தில் அதிகம்
பேசுகிறாள் என்பதையும் மனதின் ஓரத்தில் குறித்துக் கொண்டாள் சுரபி.
ஆனால் அவள் ஸ்டைலாக பேசும் அழகு, மனதை அல்ல, அதை மாற்ற முயலவில்லை
சுரபி. தன் மகளின் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாய்
“நத்திங் செல்லம்....” என்று தன் தோளை குலுக்க, அதைக்கண்டு விகர்த்தனன் முகத்தில் மின்னல் வெட்டிச் சென்றது.
அது அவனுடைய மேனரிசம்...!
சமீபத்தில் அடிக்கடி சுரபியும் தன் தோளை குலுக்குவது... ஒற்றை
புருவத்தை உயர்த்துவதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள் அவளையும் அறியாமல்.
அதைக் கண்டு தன் கீழ் உதட்டை கடித்துக் கொண்டு தனக்குள்ளே
சிரித்துக் கொண்டான் விகர்த்தனன்..!
Nice
ReplyDelete