அத்தியாயம்-6
தன் எதிரில் நின்றிருந்தவனின் முகத்தை அதிர்ச்சியோடு பார்த்து, ஷ்யாம் என்று
அழைத்தவள், அவளைப் போலவே அதிர்ச்சி அவன் முகத்தில், தெரிந்ததும், கூடவே அவன் அவளை ஸ்வாதி என அழைக்கவும் திடுக்கிட்டுப் போனாள்.
ஸ்வாதியா? என்று குழம்பியவள், உடனே தன்னை சமாளித்துக் கொண்டு
“சாரி சார்... ஐம் சுரபி...
இவள் என் மகள் தான்... சோபாவில் உட்கார்ந்து இருந்தவள், எப்படியோ எழுந்து இங்க வந்துட்டா… இவளைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்...” என்று அவசரமாக விளக்கம் கொடுத்தாள்
அதோடு அவனை பார்த்து
“உங்க பெயர்..... நீங்க ஷ்யாம்
தானே...” என்று விசாரிக்க, அவனும் தன் பருவங்கள்
முடிச்சிட, ஒரு நொடி அவளை
ஆழ்ந்து பார்த்தவன், தன் தலையை இடவலமாக அசைத்தவன்,
“இல்லை...... “ என்றான் அழுத்தமான குரலில்.
அவனின் ஆளுமையான, அமர்த்தலான, அதிகாரமான குரலைக்கேட்டதும், அதுவரை இருந்த குழப்பம் மறைந்து போனது...
“இல்லை... இவன் ஷ்யாம்
இல்லை... ஷ்யாம் குரல் இவ்வளவு கடினமாக
இருக்காது...
அவனிடம் இருந்து ஒரு
வார்த்தை கூட அதட்டலாகவோ, ஆளுமையுடனோ, அதிகாரமாகவோ வராது.
அவன் குரலில் எப்பொழுதும் அன்பும், கனிவும் கொட்டிக்கிடக்கும்
“நிச்சயம் இவன் ஷ்யாம் இல்லை...அதோடு ஷ்யாமாக இருக்கத்தான்
முடியாதே...” தன் தலையை உலுக்கிக்
கொண்டவள், மீண்டும் அந்த நெடியவனை பார்த்து
“சாரி சார்... ஏதோ ஞாபகத்தில் அப்படி கேட்டுட்டேன்... சாரி பார் தி
டிஸ்டர்பன்ஸ்... குழந்தையை கொடுக்கறிங்களா? “ என்று அவனிடம் இருந்து தன் மகளை வாங்க முயல,
“மாட்டேன்.....” என்று மழலையில் சொல்லி, தன் தலையை இரு பக்கமும் ஆட்டி, அவன் தோளில்
இன்னுமாய் முகத்தை புதைத்துக் கொண்டு சிணுங்கினாள் அவள் மகள்.
அதைக்கேட்டவளுக்கோ மீண்டும் தூக்கிவாரிப் போட்டது.
இவள் ஏன் இப்படி சொல்கிறாள் என்று ஆராய்ச்சியோடு நிமிர்ந்து அந்த நெடியவன் முகத்தை பார்க்க, மீண்டும் திடுக்கிட்டு அதிர்ந்து போனாள் பெண்ணவள்.
அப்பொழுதுதான் அவனிடம் ஷ்யாமின் லேசான சாயல் தெரிந்தது.
அதனால்தான் அவளே ஆரம்பத்தில் அவனை ஷ்யாம் என்று அழைத்து வைத்தது.
“ஒருவேளை ஷ்யாமின் புகைப்படத்தை காட்டி அப்பா என்று
சொல்லியிருந்ததால், அந்த புகைப்படத்தில் இருந்தவன் மாதிரியே இவனும் இருப்பதால், அவளுடைய அப்பா என்று
எண்ணி விட்டாளோ? “ என்று அவசரமாக யோசித்தவள்,
“அம்மு.... இவர் உன் அப்பா இல்லை...” என்று சொல்ல, அந்த குட்டியே தலையை
மீண்டும் இருபக்கமும் உருட்டி,
“இல்ல... இதான் அப்பா.... என் அப்பா.....” என்று சிணுங்கியவாறு அவன் கழுத்தை மீண்டும் கட்டிக்கொண்டது.
பெரியவளோ என்ன செய்வது
என்று தெரியாமல் கையை பிசைந்தாள்...
விகர்த்தனனால் இன்னுமே நம்ப முடியவில்லை...
முன்ன பின்ன பார்த்திராத ஒரு குட்டி, அவனை அப்பா என்று அழைப்பது ஆச்சரியமாக இருந்தது. கூடவே அவள் அப்படி அழைப்பது ரொம்பவும் பிடித்து
இருந்தது.
தன் தோளில் முகம்
புதைத்துக் கொண்ட அழகு, அவனை இன்னுமாய்
பரவசப்படுத்தியது
அதுவும் அவளின் அந்த மழலை முத்தம்...! சான்ஸ்லெஸ்...!
எத்தனையோ பெண்களுடன் நெருக்கமாக பழகியிருக்கிறான்.. அவர்களின் இதழ்களில்
முத்தமிட்டு இருக்கிறான்.
அதே போல, உலக அழகிகள் முதற்கொண்டு, எத்தனையோ பெண்களிடமும்
இருந்து முத்தத்தை பெற்றிருக்கிறான்.
ஆனால் அதில் எல்லாம் இல்லாத ஒரு பரவசம்... அந்த குட்டி தேவதையின் முத்தத்தில் கிடைத்தது.
அது பெண் பிள்ளையின் முத்தம்..! காமம் இல்லாத , காதல் இல்லாத, அன்பு மட்டுமே
நிறைந்த பெண் பிள்ளையின் முத்தம்..!
ஒரு குழந்தையின் முத்தத்திற்கு இவ்வளவு சக்தி இருக்கும் என்று
இன்றுதான் கண்டு கொண்டான்.
ஒரு கணம் அதை ஆனந்தமாய் ரசித்தவன் மெய் மறந்து நின்றிருக்க,
“சார்.... என் பிள்ளையை கொடுக்கறிங்களா..... ? “ என்று கேட்ட குரலில் திடுக்கிட்டு விழித்துக்கொண்டவன், கனவு கலைந்து விட்டதை போல மனம் பதைத்தது.
அதே நேரம் இப்பொழுது
நிதர்சனம் புரிய, அதோடு அவனுக்காக காத்துக்கொண்டு இருந்த பணிகளும்
நினைவு வர, அந்த பெண் அழைத்ததை போலவே அவனும்
“அம்முமா..... “ என்று அந்த
குட்டியை மிருதுவாய் அழைக்க, அதைக் கேட்ட அந்த குட்டியின் முகம் இன்னுமாய் விகாசித்தது.
அவன் தோளில் இருந்து முகத்தை நிமிர்த்தி , அவன் முகத்தை சந்தோஷத்துடன் பார்த்து “அப்பா.......” என்று மீண்டும் பாசமாக அழைக்க, அதில் உருகியவன்,
“அம்முமா.... அப்பாக்கு
வேலை இருக்கு டா.... நீ அம்மாகிட்ட இருப்பியாம்... என் மீட்டிங் முடிந்ததும், நான் வந்து உன்னை பார்ப்பேனாம்...” என்று பொறுமையாக சொல்ல, பெண்ணவளுக்கோ மீண்டும் தூக்கிவாரிப்போட்டது...
தன் குழந்தையை காணவில்லை என்ற அதிர்ச்சியில் இருந்து
முற்றிலுமாக வெளி வந்திருந்தவள், அவன் தன்னை அப்பா
என்று சொன்னதில் அதிர்ந்து போனவள்,
“அப்பாவா...? என்ன உளறீங்க...? “ என்று கோபத்துடன் அவனிடம் சீறினாள்.
அதுவரை தன் குழந்தையை காணோம் என்று தவித்திருந்தவள்... ஒரு
புதியவனை அவள் மகள் அப்பா என்று அழைத்து
வைத்ததும், அவனும் அதை
திருத்தாமல் அப்பா என்று சொல்லி வைப்பதும் கண்டு அதிர்ந்து போனாள்.
அந்த அதிர்ச்சியே கோபமாக மாற, அவனிடம் சீறினாள்.
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பெண்ணே... கொஞ்சம் அமைதியா இரு...” என்றவன் தன்
தோளில் பல்லியாய் ஒட்டிக் கொண்டிருந்தவளின் தலையை மிருதுவாய் வருடி விட்டவன்
“ப்ரின்ஸஸ்... இப்ப அம்மாகிட்ட போங்க.. அப்பா ஈவ்னிங்
வர்றேன்....” என்று மீண்டும் கனிவோடு சொல்ல, அதில் இன்னுமே கொதித்து போனாள் பெரியவள்.
“ஷட் அப் மிஸ்டர்.... யார் யாருக்கு அப்பா ? “ என்று தன் ஒற்றை விரல் நீட்டி, மிரட்டி அவனை முறைத்தாள்.
அவனோ அவளின் முறைப்பை சட்டை செய்யாதவனாய்,
“இவளுக்குத்தான்... அப்படித்தானே என்னை கூப்பிடுகிறாள்...” என்றான் அமர்த்தலாக.
“ஷட் அப்...அவள்
விவரம் தெரியாத பச்ச குழந்தை... நீங்க, அவள் அப்பாவை போல கொஞ்சம் ஜாடையில் இருக்க, அப்படி கூப்பிட்டு
தொலைத்து விட்டாள்.
அதற்காக விவரம் தெரிந்த நீங்க, அதை பெருசு பண்ண வேண்டாம். அவளை என்கிட்ட கொடுங்க...” என்று மீண்டும் எகிற ஆரம்பித்து, இறுதியில் கொஞ்சம்
கெஞ்சலுடன் குரலை தாழ்த்திக் கொண்டாள்.
அதே நேரம் ஆங்காங்கே நின்றிருந்தார்கள் திரும்பி அங்கே நடந்து கொண்டிருந்த காட்சியை சுவாரஸ்யமாக பார்க்க
ஆரம்பித்தனர்.
தி க்ரேட் இன்டஸ்ட்ரியலிஸ்ட் ...பிசினெஸ் மேக்னென்ட்... அவன்
அருகில் நின்று பேச அஞ்சும் ஒருவனை, பெண் ஒருத்தி விரல் நீட்டி எச்சரிக்கிறாள். அவனை கோபத்துடன் பார்த்து முறைக்கிறாள்.. யார் இந்த
பெண்? என்றுதான் ரிசப்ஷனிஸ்ட் முதற்கொண்டு எல்லாருமே ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
ஒருவேளை பாஸின் மனைவியாக இருக்குமோ? என்று யோசனையாக பார்த்தவர்கள், அவன் கையில் இருந்த
குழந்தையின் முகம் அப்படியே அச்சு அசல் விகர்த்தனனை போன்று இருக்க, அந்த பெண்ணை பற்றிய சந்தேகம் எல்லாருக்கும் இன்னும் வலுத்தது.
அதோடு அந்த பெண் அவ்வளவு கோபமாக சீறினாலும், தன் கோபத்தைக் காட்டாமல் பணிவுடன் பேசும்
தங்களுடைய பாஸ் ஐ பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருந்தது
அப்பனா கண்டிப்பாக அந்த பெண் அவருடைய மனைவியாகத்தான் இருக்கும்.
ஏனேன்றால் உலகத்தையே ஆளும்
பெரிய மகாராஜாவானாலும் வீட்டில் பொண்டாட்டிக்கு அடங்கித்தான் போகணும் என்ற காலங்காலமான இல்லற வாழ்க்கையின்
தாரக மந்திரம் அது.
தன் நெற்றிக்கண் பார்வையிலயே உலகையே எரித்து சாம்பலாக்கும்
வள்ளமை கொண்ட சிவபெருமானே தன் மனைவிக்கு அடங்கித்தானே போனார்.
அப்படி என்றால் இவள் கண்டிப்பாக பாஸ் ன் மனைவிதான் என்று
எல்லாரும் தங்களுக்குள் உறுதி செய்து கொண்டனர்.
அதே நேரம் அறைக்கு வெளியில் சென்ற தன் பாஸ் ஐ இன்னும்
காணவில்லையே என்ற பொறுப்புடன், அறைக்கு வெளியில் வந்த விஷ்வா வும் அவளைக் கண்டு
ஆச்சர்யபட்டான்.
மற்றவர்களைப்போல பாஸ் ன் மனைவியாக இருக்குமோ என்ற சந்தேகம்
இல்லை.
ஏனென்றால் அவன் விகர்த்தனனின் பெர்சனல் செகரெட்டரி ஆயிற்றே... பாஸ்ன் தொழில் மட்டும் அல்லாது தன் பாஸ் ன் பெர்சனல்
ஐயும் அறிந்தவன் ஆயிற்றே..!
“யார் இந்த பெண்? எதற்காக பாஸிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாள்?” என்று யோசித்தவாறு வேகமாக
அவர்கள் அருகில் சென்றான்.
“பாஸ்... எனி ப்ராப்ளம்? “ என்று கேட்கும்
முன்னே
“ஒரு சாக்லேட் பார் எடுத்து வா... விஷ்வா...” என்று கட்டளை இட்டான் விகர்த்தனன்.
அவனும் வேகமாக நகர்ந்து, அங்கே ஓரமாக வைக்கப்பட்டிருந்த
விதவிதமான சாக்லெட் டப்பாக்களில் இருந்து, டைரிமில்க் சாக்லெட் சிலவற்றை அள்ளிக்கொண்டு ஓடிவந்தான்.
அதைக் கண்ட பெரியவள், அவன் தன் மகளுக்குத்தான் அதை கொடுக்கப் போகிறான் என்று கண்டு கொண்டவள் பதறி,
“இல்ல... அவ சாக்லெட் சாப்பிட மாட்டா... கொடுக்காதிங்க...”
என்றாள் பதற்றத்துடன்.
விகர்த்தனன் அவள் சொன்னதை சட்டை செய்யாமல், விஷ்வா கையில் இருந்த ஒரு சாக்லெட் பார் ஐ எடுத்து அந்த
குட்டியிடம் நீட்ட, அதைக்கண்டவளின் முகம் பூவாக
மலர்ந்தது.
அதை பிடுங்கிக் கொள்ள கை நீட்டி இருக்க, அதை அவள் கைக்கு எட்டாதவாறு நீட்டிக்கொண்டவன்,
“ப்ரின்ஸஸ் செல்லம்...அம்மா கிட்ட போவிங்களாம். அப்பதான் அப்பா இந்த சாக்லேட்டை உனக்கு
தருவேணாம்... “ என்று செல்லம் கொஞ்ச, அதைக்கேட்டவள்
மீண்டும் அதிர்ந்து தன் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டாள் அந்த பெண்
“ஹலோ மிஸ்டர்...யார் யாருக்கு அப்பா? “ என்ற மீண்டும்
கண்ணகி அவதாரம் எடுத்தாள்.
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கிப் குவைட் பெண்ணே... உன் மகள் இப்ப உன்னிடம்
வரணுமா? வேண்டாமா? “ என்றான் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி.
“என் மகள் என்னிடம் வருவதற்கு என்னிடமே பேரம் பேசுகிறானே..
எல்லாம் இவளால் வந்தது...” என்று தன் மகளை முறைத்தாள் பெரியவள்.
“அவளை என்கிட்ட கொடுங்க சார்...” என்று தன் மகளை வலுக்கட்டாயமாக
பிடுங்க முயல, அந்த குட்டியோ
வரமாட்டேன் என்று தலையை இருபக்கமும் உருட்டி, அவன் கழுத்தை மீண்டும் இறுக்கி கட்டிக்கொண்டாள்.
அதைப் பார்த்தவள் முகம் கன்றிப்போனாள்.
அதை கவனித்தாலும் கண்டு கொள்ளாதவன்
“நான் தான் கொஞ்சம் அமைதியா இருனு சொல்றேன் இல்ல. அதுக்குள்ள
என்ன அவசரம்... “ என்று அவளை முறைத்தவன்
“அம்மு... அப்பாக்கு இப்ப வேலை இருக்குடா... நீ அம்மாகிட்ட
போ... ஈவ்னிங் வந்து அப்பா உன்னை பார்க்கிறேன். அதுவரைக்கும் இந்த சாக்லெட் ஐ
சாப்பிடு...” என்று அவளின் தாடையை பிடித்து செல்லம் கொஞ்ச,
அந்த குட்டியும், அவனின் பேச்சை
கேட்டதும் ஏதோ புரிந்தவளாய் தன் அன்னையிடம் தாவினாள்.
சுரபியும் அவளை வாங்கி கொள்ள, தன் கையிலிருந்த
சாக்லெட்டை சிரிப்புடன் அவள் முன்னே ஆட்டி காட்ட, அவளும் தன் அன்னையின் கையில் இருந்தபடி எட்டி அந்த சாக்லெட்டை பிடுங்கிக் கொண்டாள்.
“குட் கேர்ள்.....” என்று அவளின் கன்னத்தை தட்டியவன்
“இனிமேல் குழந்தையை பத்திரமா பார்த்துக்க... அப்படி பார்க்க
முடியலைனா வீட்லயே விட்டுட்டு வரணும்...கேர்லெஸ் பெல்லோ.. பி கேர்புல்...”
என்று அடிக்குரலில் அவளிடம் சீறியவன், அடுத்த நொடி முகம் கனிய, அந்த குட்டியின் கன்னத்தை வருடிவிட்டு , மனமே இல்லாமல் கான்ப்ரென்ஸ்
அறையை நோக்கி சென்றான்.
அறைக்குள் நுழையும் முன்னே திரும்பி குழந்தையை பார்க்க, அவளோ அவனை பார்த்ததும் மீண்டும் அப்பா... என்று புன்னகைத்து
அவனுக்கு கையசைத்து டாட்டா சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவனும் உதட்டோரம் மிளிர்ந்த குளிர் புன்னகையுடன் அந்த குட்டிக்கு கை அசைத்து டாட்டா
சொல்லிவிட்டு அறைக்குள் சென்றான்.
அங்கு நடந்தது, நடப்பதை எல்லாம்
பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் சிலையாக சமைந்து நின்றாள் சுரபி.
*****
அன்றிரவு தன் இரவு உணவை முடித்து, படுக்கையில் விழுந்தவன் கண் முன்னே மீண்டும் வந்து மழலை
சிரிப்பை சிரித்தாள் அந்த குட்டி தேவதை.
அதுவும் அந்த கான்ப்ரென்ஸ்
அறைக்கதவை தன் இரண்டு கரங்களால் பிடித்தபடி, அறைக்குள் எட்டி பார்த்த அந்த குட்டியின் முகமே மீண்டும் மீண்டும் அவன் கண் முன்னே வந்து
சென்றது.
அதிலும் அவள் கொடுத்த செல்ல
முத்தம் இன்னுமே அவன் உள்ளே தித்தித்தது
அவளின் அப்பா என்ற அழைப்பே அவன் காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
அப்பா என்ற அழைப்பில், அவனை சூழ்ந்து இருந்த தனிமை, வெறுமை எல்லாம் எங்கயோ
ஓடிச்சென்று ஒளிந்துகொள்ள, இப்பொழுது அவனின் மனதில் அமைதியும், சாந்தமும், சந்தோஷமும், உற்சாகமும் நிறைந்திருந்தது.
ஏனோ அந்த குட்டியை இப்பொழுதே பார்க்க வேண்டும் போல இருந்தது.
“மை பேபி...மை ப்ரின்ஸெஸ்... மை ஏஞ்சல்.. “ என்று அருகிலிருந்த தலையணையை கட்டிக்கொண்டு, அதற்கு முத்தமிட்டவன், நீண்ட
வருடங்களுக்கு பிறகு அன்றுதான் நிம்மதியாக உறங்கினான் விகர்த்தனன்..!
0 comments:
Post a Comment