மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Thursday, September 29, 2022

வராமல் வந்த தேவதை-22

 


அத்தியாயம்-22

 

ன்றிரவு படுக்கைக்கு வந்தவள் வழக்கம்போல இருவருக்கும் பாலை கொடுத்துவிட்டு, நிகா  குடித்து முடித்ததும்,  தன் மகளை குளியலறைக்கு அழைத்து சென்று ,  பல்துலக்கி, உடம்பு கழுவி,  என இரவு உறங்குவதற்கு அவளை தயார் பண்ணி அழைத்து வந்தாள் சுரபி.  

படுக்கையில் முதுகுக்குப் பின்னால் தலையணையை வைத்துக்கொண்டு, கையில் தன் ஐபோனை நோண்டிக்கொண்டு இருப்பதை போல பாவனை செய்தவாறு, ஓரக்கண்ணால்  தன்னவளின் ஒவ்வொரு செய்கையும் ரசித்துக் கொண்டிருந்தான் விகர்த்தனன்.  

தன் மகளுக்கு பார்த்து பார்த்து செய்யும் அவளின் ஒவ்வொரு செயலும்... அதில் இருக்கும் நளினமும் அவனின் மனதை கட்டி இழுத்தது.

அந்த குட்டிக்கு உடம்பு கழுவி துடைத்தவள்,  வேற ஒரு இலகுவான இரவு உடையை  அணிவித்தாள்.

அந்தக் குட்டியோ குளியலறைக்குள் சென்றதிலிருந்து குளித்து முடித்து வெளியில் வரும்பொழுதும் இப்பொழுதும் கூட ஏதேதோ கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாள்.  

இப்பொழுதெல்லாம் நிறைய கேள்விகளை கேட்க ஆரம்பித்திருந்தாள் கர்ணிகா.

தான் பார்க்கும் ஒவ்வொன்றையும் கேள்வியோடு பார்த்து அதற்கான விளக்கத்தை கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்ளும் வயது என்பதால் தொட்டதற்கெல்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்திருந்தாள்.  

அந்த மழலை கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் சுரபியும் அலுக்காமல் பதில் சொல்வதை கண்டு ஆச்சரியமாக இருந்தது.  

இப்பொழுது கூட இருவரும் ஏதோ பேசிக் கொண்டுதான் இருந்தனர்.

விகர்த்தனன், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று காதை தீட்டி வைத்துக் கொண்டு உன்னிப்பாக கவனிக்க,  அவன் மகளோ நாட்டுக்கு முக்கியமான கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தாL.  

அம்மாநைட் ஏன் நாம பிரஷ் பண்ணனும்? “  என்று சந்தேகத்துடன் கேட்க,

“அதுவா அம்முகுட்டி...  நைட் நாம தூங்கப் போகிறோம்  அல்லவா.  நாம சாப்பிட்ட சாப்பாடு எல்லாம் பல் இடுக்கில் இருக்கும். நாம தூங்கின பிறகு அதெல்லாம் எழுந்து டிஸ்யூம் டிஸ்யூம் னு சண்டைபோட்டு நம்ம பல்லை டேமேஜ் பண்ணி விடும்.  

அதுதான் எப்பொழுதும்  நைட் படுக்கும் முன் ஒரு முறை பல்லை நல்லா பிரஷ் பண்ணிடனும்...” என்று பொறுமையாக விளக்க,  

“அப்படினா... லஞ்ச் அப்ப அம்முகுட்டி சாப்பிட்டுட்டு தூங்குவேன். அப்போ ஏன்  பிரஷ் பண்ணலை? “  என்று தன் ஆட்காட்டி விரலை கன்னத்தில் வைத்து தட்டி யோசித்தவாறு கேட்க, அவளுக்கு  எப்படி விளக்கம் சொல்வது என்று புரியாமல் தினறினாள் சுரபி.  

விகர்த்தன் அதைக் கண்டு இதழ்கடையோரம்  சிரிப்பு பொங்கி வர,  தன் கீழுதட்டை கடித்து கொண்டு சிரிப்பை மறைத்துக்கொண்டு அலைபேசியில் கவனமாக இருப்பதாக காட்டிக் கொண்டான்.  

“அதுவா குட்டிமா... ஒவ்வொரு டைம் சாப்பிட்டால் எல்லாம் பிரஷ் பண்ண தேவையில்லை. அதுதான் கார்கில் (வாய் கொப்பளித்தல்) பண்ணா போதும்...”  என்று சமாளிக்க,  

“அப்படினா இப்பயும்  கார்கில் மட்டும் பண்ணலாமே...ஏன்  பிரஷ் பண்ணனும்...”  என்று மீண்டும் விடாமல் கேட்க, அதற்குமேல் பொறுமை இழந்த சுரபி, அம்மு, செல்லாம் எல்லாம் மறந்து போக, 

“இப்ப  என்னடி பிரச்சனை உனக்கு? இனிமேல் மத்தியானமும் பிரஷ் பண்ணிட்டு தூங்கு. இப்ப என்னை நிம்மதியா விடுறியா..”  என்று சற்றே கடுப்பாக தன் மகளை அதட்டி, அதற்குமேல் அவள் கேள்வி கேட்காதவாறு  அவளை அடக்கியவள் அவள்  உடலுக்கு லேசாக டால்கம் பவுடரை போட்டு விட்டாள்.  

விகர்த்தனனோ சத்தம் இல்லாமல் குலுங்கி சிரித்தான்.

அதோடு தன் மகளின் புத்திசாலித்தனத்தையும்,  எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும் என்ற புத்தி கூர்மையும் கண்டு உள்ளுக்குள் மெச்சிக் கொண்டே  அனிச்சையாக அவர்கள் பக்கம் திரும்பினான்.

திரும்பியவன் அப்படியே ப்ரீஸ் ஆகி போனான்...!

தன் மகளை கவனிப்பதில்  பிசியாக இருந்த சுரபி, அவள் அணிந்திருந்த இலகுவான காட்டன் புடவையின் மாராப்பு விலகியதை கவனிக்கவில்லை.   

ஓரக்கண்ணால் தன் மனையாளின்  செய்கையை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு  அவளின் அந்த கோலம் பார்வைக்கு வர, அப்படியே ஸ்தம்பித்து போனான்..!

அவளின் இடையை மூடியிருந்த புடவை நழுவியதால் அவளின் வெண்ணிற கொடி இடை,  அவனின்  பார்வைக்கு வர, மஞ்சளும், சந்தனமும் சேர்த்து குழைத்ததை போன்று பளபளவென்று, சிக் என்று  இருந்த சிற்றிடை அவனை மொத்தமாய் புரட்டி போட்டது.

ஒரு கணம் அவளின் வெற்றிடையை தாபத்தோடு பார்த்து ரசித்தவன், பார்வையோ இடையோடு நிறுத்திவிடாமல் அத்துமீறி இடைக்கு மேலே சென்றிருந்தது.  

அவளின் வனப்பான, தூக்கலான, வரிவடிவமான முன்பகுதியை கண்டவனுக்கு போதை ஏறியது.

தேன் குடித்த நரியைப் போல எச்சிலை கூட்டி விழுங்கினான்.

அதுவரை அடங்கியிருந்த உணர்வுகள் எல்லாம் கிளர்ந்து எழுந்தன.  

அதோடு  மஞ்சள் வாசம் இன்னுமே மறையாத,  மஞ்சள் கயிற்றில்,, அவன் அணிவித்த  பொன்னிற தாலி, அவளின் வனப்பான மார்புகளுக்கு நடுவில் இறங்கி,  அவளின் பளபளத்த சந்தன நிற வயிற்றில் பட்டு முத்தமிட்டுக் கொண்டிருந்தது.

அதைக் கண்டதும், இன்னுமே அவனுக்கு தலை சுற்றி போனது..!

அந்த தாலி, அவள் தன் மனைவி... தன்னவள்...தனக்கானவள்...என்ற உரிமையை பறைசாற்ற, இன்னுமாய்  தன்னிலை இழந்தான்.

மோகம் கொண்டு, தாபத்தோடு அவளை பார்த்து வைக்க, தன் மகளை கவனித்துக்கொண்டிருந்த பெண்ணவளுக்கோ  யாரோ தன்னை  உற்று பார்ப்பதை போல இருக்க, அனிச்சையாக நிமிர்ந்து விகர்த்தனன் இருந்த பக்கம் பார்க்க, அங்கே விகர்த்தனன் அவளை தாபத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது.

இதுவரை அவன் பார்வை இந்த மாதிரி அவள் மீது அத்துமீறி விழுந்ததில்லை..!  

எப்பொழுதும் ஒரு கண்ணியத்துடன் தான் அவளுடன் பழகுவான்..!  

அப்படிப்பட்டவனின் இந்த பார்வை அவளுக்கு புதிது..!  

அவனின் அந்த அத்து மீறிய,   தாப பார்வைக்கு, அவள் உள்ளே படபடக்க,  அவளின் மெல்லிய  உடல் குழைந்து,  உருகி போவதை போல இருக்க,  உடனே அவன் பார்வை சென்ற இடத்தை குனிந்து பார்த்தாள்.  

அவ்வளவுதான்..!  

அவளின் மாராப்பு முழுவதுமாக விலகியிருந்ததை  கண்டு கொண்டவள்,  உடனே கன்னங்கள் சிவக்க, அதை மறைக்க முயன்றபடி  அவனை முறைத்தபடி,  தன் மாராப்பை இழுத்து விட்டுக் கொண்டு,  அந்த குட்டிக்கு தேவையானதை செய்து வைத்தாள்.

அவனும் அதற்குள் தன்னை சுதாரித்துக்கொண்டு, சிறு வெட்க புன்னகையுடன் தன் பின்னந்தலையை ஒற்றை கையால் வருடியவன், அவளை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி சிரிக்க, அவளோ மீண்டும் ஒரு முறைப்பை பதிலாக கொடுத்தாள்.

ஆடையை மாற்றிய பின் தன் மகளை தூக்கிக்கொண்டு வந்து படுக்கையில் அவன் அருகில் படுக்க வைத்தாள்..!  

மீண்டும் ஒரு முறை தன் புடவையை சரி செய்து கொண்டு,  அதே படுக்கையில் ஏறி அந்த குட்டிக்கு அடுத்து அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.  

அவளின் அந்த கோலத்தையும், அவன் அவளை பார்த்ததை கண்டு கொண்டதில் சிவந்த அவளின் கன்னங்களையும், அதை மறைத்து அவனை முறைத்த இதழ்களையும்  ரசித்தபடி, தன் அருகில் இருத்த தன் இளவரசியை இறுக்க கட்டி கொண்டு, அவள் ஒற்றை காலை எடுத்து தன் மீது போட்டுகொண்டு  அவளுக்கு கதை சொல்ல ஆரம்பித்தான்.  

சற்று நேரத்தில், அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவளையும்,  அவன் பக்கமாக திரும்பி படுக்குமாறு தன் மகளை விட்டே  சாதித்துக் கொண்டான்.

“அம்மா.... நீயும் இங்க பார்.. அப்பா சூப்பரா கதை சொல்லி... நீயும் கதை கேளு...” என்று நச்சு பண்ண, அவளும் வேறு வழியில்லாமல் அவனை பார்த்த படி திரும்பி படுக்க, தன் மகளுக்கு கதை சொன்னாலும், அவனின் பார்வை என்னவோ அவளின் முகத்திலயே நிலைத்து இருந்தது.

அவன் பார்வையை எதிர்கொண்ட பெண்ணவளுக்கோ உள்ளுக்குள் ரசாயன மாற்றங்கள்.

இத்தனை வருடங்களில், அவள் உணர்ந்திராத , அனுபவித்திராத உணர்வுகள் எல்லாம் துள்ளி எழுந்தன.

அவனின் பார்வைக்கே இத்தனை சக்தியா என்ற ஆச்சர்யமும் உடன் வந்து சேர்ந்ததுதான்..!

அவளை அப்படியே அவனுள் இழுத்துக் கொள்வதைப் போன்ற பார்வை அது...!

அப்படியே நகர்ந்து அவனை இறுக்க கட்டிக்கொண்டு, அவன் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்து, அவனின் வலிய கரங்களுக்குள் அடைக்கலம் புகுந்து கொள்ள தூண்டிய காந்த பார்வை அது.

தன் எண்ணம் போகும் போக்கை உணர்ந்ததும் பதை பதைத்து போனாள் பெண்ணவள்..!

“சை... என்னாச்சு எனக்கு? ஏன் என் புத்தி இப்படி போகிறது? “ என்று அவசரமாக தன்னைத்தானே கடிந்து கொண்டவள், அதற்குமேல் அவன் பார்வை வீச்சை தாங்க முடியாதவளாய், உறங்குவதை போல பாவனை செய்து கண்ணை  மூடிக் கொண்டாள்..!

அவளின் அந்த நிலை அவனுக்கும் புரிய, இன்னுமே உல்லாசமாக விசில் அடித்துக் கொண்டான் விகர்த்தனன்.

*****

தே உல்லாசத்தில் தன் மகளுக்கு சின்ட்ரெல்லா கதையை கூறிக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் அந்த குட்டியும் உறங்கிவிட்டாள்.

தன் மீது அட்டையாக ஒட்டிக்கொண்டிருந்த தன் மகளை ஆனந்தத்துடன் அணைத்து,  அவளின் நெற்றியில் முத்தமிட்டவன், அவளை நேராக படுக்க வைத்துவிட்டு,  போர்வையை இழுத்து மூடி விட்டான்.  

அப்பொழுது அனிச்சையாக அவனின் கரம், அருகில் படுத்து இருந்த  பெண்ணவளின் கரத்தின் மீது பட்டுவிட, உடனே தன் கையை விலக்காமல், மெல்ல அதை பற்றினான்.  

அவளிடம் இருந்து வந்த மெல்லிய சீரான மூச்சு காற்றும், மூச்சு காற்றுக்கு தகுந்த மாதிரி ஏறி இறங்கிய அவள் மார்பும், அவள் உறங்கி விட்டாள்  என்று சொல்ல,  பற்றிய  அவளின் கரத்தை மெல்ல தன்பக்கமாக  இழுத்து, அதில் மென்மையாக முத்தமிட்டான்.  

அதுவரை தூங்குபவளை  போல பாவனை  செய்துகொண்டிருந்த பெண்ணவளுக்கோ மேனியில் மின்னல் வெட்டி சென்றது.

முதன் முறையாக ஒரு ஆணின் முத்தம்..! அது அவளின் கரமே என்றாலும், அவனின் அழுத்தமான இதழ்கள்,  அவளின் மென் கரத்தை தொட்டத்தில் உள்ளுக்குள் அப்படி ஒரு சிலிர்ப்பு..!

அவன் தந்த முத்தமும்...முத்தமிடும்பொழுது லேசாக உரசிய அவன் மீசையும் அவளின் கையில் குறுகுறுத்தது.

அடுத்த கணம் அவளின் அறிவு விழித்துக்கொள்ள, உடனே கண்களை திறக்காமலயே வேகமாக தன் கையை இழுத்துக் கொண்டாள் சுரபி.

அதில் திகைத்து விழித்தவன், அப்பொழுதுதான்  அவள் இன்னும் உறங்காமல் இருப்பதை கண்டு கொண்டான்.

“ஹே சுரபி... நீ இன்னும் தூங்கலையா..?  நீ தூங்கிட்டனு இல்ல நினைச்சேன்... பை த வே நீ எனக்கு சப்பாத்தி ஊட்டி விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்... அதற்குத்தான் கிஸ் பண்ணினேன்...”  என்று லேசாக புன்னகைத்து சமாளித்தான்.

“அன்ட் உன் கையில என்னவோ இருக்கு சுரபி...டின்னர் வாஸ் அமேசிங்... ஐ என்ஜாய்ட் அ லாட்...தேங்க்ஸ் அகைன்...”

என்று மீண்டும் உள்ளார்ந்து அவளுக்கு நன்றி சொல்லியவன், அவள் கையை பற்றி இழுத்து மீண்டும் முத்தமிட முயல,  அவளோ இப்பொழுது விழித்துக் கொண்டு,  கன்னம்  சிவக்க,  

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்...”  என்று தன் கையை இழுத்துக் கொள்ள முயன்றாள்.  

“ஏன் ? “  என்று ஒரு மாதிரி கிறக்கத்துடன் கேட்டான் விகர்த்தனன்.

அவள் என்ன பதில் சொல்வாளாம்..!  

ஏற்கனவே அவன் பார்வையில் தெரிந்த மாற்றத்தில், அவன் கண்களில் வழிந்த தாபத்தில்,  நிலைகுலைந்து போனவள்...அவனின் இந்த திடீர் முத்தத்தில்  இன்னுமாய் நிலை குலைந்தாள்.

ஆனாலும் முயன்று தன்னை சமாளித்துக்  கொண்டவள்,  

“நான்  அம்முவுக்காகத்தான் அப்படி செய்தேன்..! அவள் சரியான பிடிவாதக்காரி...”  அவள் அப்பனைப்போலவே என்று மனதுக்குள் செல்லமாக திட்டிக்கொள்ள,

“ஹா ஹா ஹா என் மகள் அல்லவா...அவள் அப்பா ... என்னைப் போலத்தான் இருப்பாள்...” என்று கர்வமாக சிரித்துக் கொண்டான்.

தான் மனதில் நினைத்ததை அப்படியே அவன் சொல்லவும்,  ஒரு நொடி அவள் விழிகள் ஆச்சர்யத்தில் குடை போல விரிந்தன.

“வாவ்....”  என்று விரிந்த அவளின் குடை இமையையும், அதன் உள்ளே பத்திரமாக இருந்த அகன்ற கரு விழிகளையும் காண, அவனுக்குள் மீண்டும் ஹார்மோன்கள் எகிறி குதித்தன..!

அவனின் அந்த காந்த பார்வையை கண்டு கொண்டவள் , மீண்டும் வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் சிறகடித்து பறக்க, அதை மறைக்க, வரவழைத்த  கடுப்புடன், முகத்தை தன் மகள் பக்கமாக திருப்பிக் கொண்டவள்,

“ஹ்ம்ம்ம் அவள் பிடிவாதத்தை பற்றி தெரிந்துதான் அவளுக்காக அப்படி செய்தேன்... சாரி...”   என்றாள்  எங்கோ வெறித்து பார்த்தபடி.

அதாவது அவள் அவனுக்கு ஊட்டி விட்டது தன் மகளுக்காக மட்டும்தான். மற்றபடி அவன் மீது அவளுக்கு துளியும் அக்கறை இல்லை என்றதாய் காட்டிக்கொண்டாள்.

ஆனாலும் அவனுக்கு ஊட்டிய ஒவ்வொரு வாய் உணவிற்கும் அவள் உள்ளே பொங்கிய உணர்வு...!

அவன் ஒவ்வொரு முறை தன் வாயை  ஆ வென்று பிளக்கும்பொழுதும் அப்படியே தன் மகளை உரித்து வைத்து இருந்தான் என்று புரிய, அவனுமே அவளுக்கு ஒரு குழந்தையாகத்தான் தெரிந்தான்.

அதோடு அவள் மகள்,  ஏன் தான் தோற்றத்திலும், குணத்திலும் அப்படியே அவனை உரித்து வைத்து இருக்கிறாளோ  என்று சிறு மகிழ்வும், பெரும் ஆயாசமும் எழுந்ததுதான்..!

ஆனாலும் தன் உணர்வுகளை எல்லாம் உள்ளுக்குள் போட்டு பூட்டிக் கொண்டவள், இப்பொழுது விட்டேத்தியாக சாரி சொன்னாள்.

அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்,

“எதுக்கு சாரி?  ஓ நீ எனக்கு ஊட்டி விட்டதுக்கா? ஏன் நீ என் பொண்டாட்டி தானே...நீ எனக்கு ஊட்டி விடுவதில்  தப்பில்லையே...”  என்று குறும்பாக சிரிக்க,

அதுவரை அவனின் அந்த மையல் பார்வையில் முழுவதுமாய் இலகி, உருகி, நெகிழ்ந்து  இருந்தவள், அவன் சொன்ன பொண்டாட்டி என்றதை கேட்டதும்,  அதைத் தொடர்ந்து அவள் எப்படி இந்த பந்தத்திற்கு, இந்த பதவிக்கு வந்தாள்..

அவளை எப்படி நெருக்கடி கொடுத்து இந்த பந்தத்திற்குள் இழுத்து விட்டான் என்பதும் நினைவு வர, அடுத்த கணம் இலக்கம் மறைந்து அவள் உடல் இறுகியது.

“நீ என் மனைவியாக... நிகா உடன் என் வீட்டிற்கு வர வேண்டும். அது தான் சரியாக இருக்கும்.  நீதான் நிகாவிற்கு அம்மா எனும் பொழுது இன்டைரக்ட்லி யூ ஆர் மை வைஃப்.  

அதுதான் நிகாவின் எதிர்காலத்துக்கும் நல்லது.  சோ நெக்ஸ்ட் வீக் நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.  ஜஸ்ட் ஒரு பார்மாலிட்டிக்காக.. நீ சொன்னியே சோ கால்ட் நாலுபேர் தப்பா பேசுவாங்கனு.

அந்த நாலு பேருக்காக நீ என் மனைவி பதவியை ஏற்கலாம்...  மற்றபடி பதவியை தவிர உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.  

அதேபோல நிகா  தாண்டி,  என் வாழ்க்கை என் இஷ்டப்படிதான் இருக்கும்.  என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது...அதே போல நீயும் உன் விருப்பப்படி உனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து கொள்ளலாம்.  

டேரக்ட்டா சொல்லணும்னா ஊருக்காக, பேருக்காக நீ என் மனைவி... அவ்வளவு தான்...மற்றபடி உனக்கும் எனக்கும் நத்திங்... நத்திங்....”

அன்று அவன் சொன்ன வார்த்தைகள் மீண்டும் காதில் ஒலிக்க, அதில்  தன் விறைக்க, கை முஷ்டி இறுக, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, அவனை பார்த்து கோபமாக முறைத்தவள்  

“அப்படியா? நான் உங்க பொண்டாட்டியா? யு மீன் யுவர் வைப்?  என்னை உங்க மனைவியாக அழைத்து வரவில்லையே... உங்க குழந்தைக்கு அம்மாவாக அழைத்து வந்ததாகத்தான் ஞாபகம்...

டேரக்ட்டா சொல்லணும்னா ஊருக்காக, பேருக்காக நீ என் மனைவி... அவ்வளவு தான்...மற்றபடி உனக்கும் எனக்கும் நத்திங்... நத்திங்.... சொன்னது மிஸ்டர் விகர்த்தனன் தானே..! “

என்று வெட்டும் பார்வை பார்த்து  கோபத்துடன் முகத்தை திருப்பினாள்.  

அதுவரை தன் பார்வைக்கு கட்டுண்டு, குலைந்து, இலகி இருந்தவள் முகத்தில் மலர்ந்திருந்த கோபம் கூட அழகாக தெரிந்தது அவன் கண்ணுக்கு.

அவளின் கோபமும், அவள் பேச்சில் இருந்த உண்மையும் ஒரு நொடி அவனை சுட, அவளை ஆழ்ந்து பார்த்தவன்,  பின் ஒரு நீண்ட மூச்சை எடுத்து விட்டு  கண்களை மூடிக் கொண்டான்.

வாய் திறந்து ஏதோ சொல்ல வந்தவன், பாதியில் நிறுத்திக்கொண்டு  பின் தன் தலையை இடவலமாக ஆட்டி தன்னை நிலைபடுத்திக்கொண்டான்.

அவள் அவனை கேட்டதுக்கு

அப்படி இல்லை...உன்னை என் மனைவியாகத்தான் அழைத்து வந்தேன்... நீ நிகாவுக்கு அம்மா மட்டும் அல்ல.. எனக்கு மனைவியும்தான் என்று சொல்லிவிட மாட்டானா என்று ஆவலாக அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவளுக்கு அவனின் அந்த அமைதி, வேதனையை தந்தது.

அப்படி என்றால் தன் மகளுக்காகத்தான் அவளை உடன் அழைத்து வந்து இருக்கிறான் என்ற தெரிந்த உண்மை அவளை சுட, கண்களில் நீர் திரள, அதை மறைக்க, வேகமாக மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள்..!

அவனும் மீண்டும் ஒரு பெருமூச்சை விட்டு, தன் மகளை அணைத்தபடி கண்களை மூடி உறங்க முயன்றான்..! 
Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *