அத்தியாயம்-5
ஜாயினிங் பார்மாலிட்டிஸ் முடிய, கிட்டதட்ட ஒரு மணி நேரம் ஆகியது.
அவளுடைய சான்றிதல்களை எல்லாம் சரிபார்த்து, சில பல படிவங்களில் அவளை கையெழுத்து இடச்சொல்லி என நீட்டி
இருக்க, அவளோ தன் மகள் தனியாக அமர்ந்து இருக்கிறாளே என்ற தவிப்பில் இருந்தாள்.
அந்த கேபினில் இருந்த கண்ணாடி தடுப்பின் வழியாக, அவள் மகள் அமர்ந்திருந்த சோபாவை பார்க்க முடிந்ததுதான்.
ஆனாலும் ஏனோ அவள் மனம் வேகமாக அடித்துக்கொண்டது.
பேசாமல் போய் அவளை தூக்கி கொண்டு வந்து விடலாமா என்று
யோசித்தவள், இங்கே இருந்து
எப்படி பாதியில் செல்வது என்ற தயக்கமும் மேல் எழுந்தது.
ஜாயினிங் ப்ராசஸ் ரெப்ரசென்டேட்டிவ் அவளிடம் சில கேள்விகளை
கேட்டுக் கொண்டிருக்க, அவளும் அவனுக்கு
விளக்கி சொல்லிக் கொண்டு இருந்தாள்.
கூடவே அந்த குட்டி மீதும்
ஓரு கண் வைத்திருந்தாள்.
அதிசயத்திலும் அதிசயமாக, இன்று எங்கயும் எழுந்து போகாமல், உட்கார்ந்த இடத்திலயே உட்கார்ந்து கொண்டு, கையிலிருந்த பொம்மையுடன்
விளையாண்டு கொண்டிருந்தாள் அந்த குட்டி.
இதுவே அவள் வீடாக இருந்திருந்தால், ஒரு இடத்தில் அவளை அமர வைத்து விட்டு, திரும்பி பார்க்கும் முன்னே குடுகுடுவென்று எங்கயாவது நழுவி
ஓடியிருப்பாள்.
அப்படிப்பட்ட அறுந்த வாலான தன் மகள் .. இன்று அதிசயமாக ஒரே
இடத்தில் அமர்ந்திருப்பதை கண்டு ஆச்சர்யபட்டுக்கொண்டே , அந்த பார்மாலிட்டிஸ் சீக்கிரம் முடியவேண்டும் என்று
ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில் எல்லா பார்மாலிட்டிஸ் ம் முடிய, அவளுடைய ஐ.டி கார்டை கொடுத்தவன், லேப்டாப் ஐ ஸ்டோர் ல் சென்று வாங்கிக்க சொல்லி, அவளுக்கு வாழ்த்து சொல்லி, கை குலுக்கி அனுப்பி வைத்தான்...
ஊப்ப்ப்ப்ப்ப் என்று ஒரு பெருமூச்சு விட்டவள், விட்டால் போதும் என்று தன்னுடைய உடைமைகளை எல்லாம்
எடுத்துக்கொண்டு, அவசரமாக அந்த
கேபினை விட்டு வெளியில் வந்தாள்.
வேகமாக அவள் மகள் அமர்ந்து இருந்த சோபாவின் அருகில் செல்ல, தூக்கிவாரிப்போட அதிர்ந்து
நின்றாள்.
ஒரு நிமிடம் முன்னால் வரைக்கும் சோபாவில் சமத்தாக அமர்ந்து
இருந்த அவள் மகள், இப்பொழுது சோபாவில்
காணவில்லை.
எங்கே சென்றாள் என்று அவசரமாக
கண்களால் சுற்றிலும் துலாவி பார்க்க, எங்கேயும் காணவில்லை அந்த குட்டியை.
பதற்றத்துடன் அந்த வரவேற்பையின் உள்ளேயே இங்கயும் அங்கயும் ஓடிச்சென்று
பார்த்தவள், எங்கயும் தன் மகளை காணாமல் தவித்துப் போனாள்.
வெளியில் எதுவும் சென்று விட்டாளோ என்று வாயில் பக்கம்
விரைந்தவள், கதவை திறந்து
கொண்டு வெளியில் நின்றவாறு நாலா பக்கமும் தேடிப்பார்க்க, காணவில்லை அவள் மகளை.
அவளின் பதற்றத்துடனான முகத்தை
கண்ட சோதனை பிரிவில் இருந்த பெண்,
“வாட் ஹேப்பன்ட் மேம்...? “ என்று ஆங்கிலத்தில் கேட்க,
“நத்திங்.....” என்று
சமாளித்தாள்.
அப்பொழுது தான் இவளிடம் கேட்டு பார்க்கலாம் என்ற யோசனை வர,
“சாரி சிஸ்டர்... என் குழந்தை
இந்தப் பக்கம் எதுவும் போனாளா? “ என்று ஆங்கிலத்தில் விசாரிக்க,
‘இல்லையே மேம்...என்னாச்சு? “ என்று விசாரிக்க,
“உள்ளே உட்கார்ந்து இருந்த என் பொண்ணை காணவில்லை...” என்று சொல்லும்பொழுதே அவள் குரல் கரகரத்தது.
அவள் கண்களில் நீர் சர்ரென்று சுரந்தது.
அவள் கண்களில் தேங்கி நின்ற கண்ணீரையும் முகத்தில் தெரிந்த நடுக்கத்தையும் கண்டவள்,
“டோன்ட் வொர்ரி மேம்… உங்க குழந்தைக்கு ஒன்னும் ஆகியிருக்காது. கண்டிப்பா உள்ள எங்கயாவது
தான் இருப்பா.. நல்லா தேடி பாருங்க...”
என்று ஆறுதல் சொல்ல,
அவளோ விருட்டென்று வேக நடையுடன் திரும்பவும் உள்ளே வந்தவள்
மீண்டும் எல்லா பக்கமும் நன்றாக தேடி பார்த்தாள்.
*****
அந்த பிரம்மாண்ட வரவேற்பறையில் நூறு பேர் ஒரே
நேரத்தில் அமரும்படி வரிசையாக சோபாக்கள்
போடப்பட்டு இருந்தது.
அதில் எந்த சோபாவிலும் அவள் மகள் இல்லை.
இப்பொழுது வரவேற்பறையை ஒட்டி ப வடிவில், வரிசையாக சில சிறிய கான்ப்ரென்ஸ் அறைகளும், ஒன்றிரண்டு பெரிய அறைகளும் இருந்தன.
எல்லா அறைகளிலும் யாராவது அமர்ந்து எதையோ டிஸ்கஸ் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
ஒருவேளை இந்த கான்ப்ரென்ஸ் ரூம்குள்ள ஏதாவது ஒன்றில் சென்று விட்டாளோ? என்று எண்ணியவள்
எப்படி கண்டுபிடிப்பது? கண்ணாடி தடுப்பிலான அந்த அறைகள், உள்ளே இருந்து வெளியில் பார்க்க முடியும். ஆனால் வெளியில்
இருந்து உள்ளே இருப்பதை பார்க்க முடியாது.
அப்ப எந்த அறையில் இருக்கிறாள் என்று எப்படி கண்டுபிடிப்பது.?
ஒவ்வொரு அறையையும் திறந்து பார்ப்பது நாகரீகம் அல்ல... என்ன
செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தாள்.
*****
“அப்பா......” என்ற அந்த
குட்டி தேவதையின் அழைப்பில், மெய் சிலிர்த்து போனான் விகர்த்தனன்.
சற்று முன் அவன் முகத்தில் கொந்தளித்து கொண்டு இருந்த கோபம்....டென்ஷன்...அழுத்தம்
எல்லாம் காற்றோடு கரைந்த கற்பூரமாய் காணாமல் போயிருந்தது.
அனிச்சையாய் அவன் உயர தூக்கி இருந்த அந்த குட்டியின் முகத்தை மீண்டும்
பார்க்க, அவன் வீட்டின் அறையில் மாட்டியிருந்த குழந்தைகளை
போலவே இருந்தாள் அந்த குட்டி.
கொலு கொலு வென்று செல்லுலாய்ட் பொம்மை போல இருந்த வட்ட முகம்...
சிறிய கருந்திராட்சை போல கருவிழிகள்... ஆப்பிள் போல சிவந்த கன்னங்களுமாய் இருந்த குட்டி, அவனைக் கண்டதும் மலர்ந்து
சிரித்து வைக்க, அந்த தேவதையை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவளோ மீண்டும் அப்பா.... என்று அழைத்து, அவன் தாடையை தொட்டு வருட, இன்னுமே சிலிர்த்துப்
போனான் விகர்த்தனன்.
அவளின் பட்டுக் கரங்கள் அவன் தாடையை மிருதுவாக வருட, அதிலிருந்த மென்மையான ஸ்பரிசம், அதுவரை இருந்த அழுத்தத்தை...
அவன் மனதில் இருந்த வெறுமையை ஓட்டி
விட்டதைப் போன்று குபீரென்று பாய்ந்தோடியது
புதுவெள்ளம் அவன் உள்ளே.
அதோடு அவளின் அப்பா என்ற விளிப்பில், இன்பமாய் அதிர்ந்தவன், பெரிதாக தன் கண்களை
ஆச்சரியத்தில் விரித்தவன், தன்னை மறந்து
“ஹாய் பிரின்ஸஸ்.... “என்று ஆவலாக அழைக்க, அந்த குட்டிக்கு என்ன புரிந்ததோ,
மீண்டும் அப்பா.... என்று
அழைத்து, அவன் கழுத்தை கட்டிக்கொண்டு, அவன் தோளில் முகம் புதைத்து, தன் உடலையும்
சந்தோசத்தில் மேலும் கீழும் ஆட்டி குலுக்கினாள்.
அதில் அவள் காலில் அணிந்திருந்த முத்துக்கள் நிறைந்த கொலுசு ஜல்ஜல்
என்று ஓசை எழுப்ப, அவனுக்கோ எல்லாமே புதுவித உணர்வாக இருந்தது.
அவன் முகத்தில் அப்படி ஒரு பரவசம்...அதுவரை அவன் அறிந்திராத தந்தை
பாசம்...தானாக அவன் உள்ளே சுரந்தது...
எப்பொழுதும் தன் முகத்தை இறுக்கி கொண்டும், அடுத்தவர்களை ஊடுருவி பார்க்கும் கலுகு பார்வையுடன் பார்த்து
இருந்தவன், முகத்தில் இப்பொழுது அப்படி ஒரு கனிவு.
அந்த கான்பிரன்ஸ் அறையில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாருக்கும் அவனின் கனிவான முகத்தை காண ஆச்சரியமாக இருந்தது.
ஒரு சிலருக்கு அந்த காட்சியை நம்பமுடியாமல், தன் கண்களை கசக்கிக்
கொண்டு மீண்டும் உற்றுப் பார்த்தனர்.
இன்னும் சிலரோ, அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் தங்கள் நெஞ்சை
பிடித்துக் கொண்டனர்.
அந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்த விஷ்வாவுக்கும் பலத்த ஆச்சரியம் தான்.
“யார் இந்த குட்டி? பாஸ் ஐ அப்பா என்று வேறு அழைக்கிறாளே..” என்று யோசனையுடன் தன் இருக்கையில் இருந்து எழுந்து
வேகமாக விகர்த்தனன் அருகில் வந்தான்.
“சாரி பாஸ்...இது யாருடைய குழந்தைனு தெரியலை. எப்படியோ லேசாக திறந்திருந்த கதவு
வழியாக உள்ளே வந்துவிட்டாள் போல.
நீங்க கொடுங்க பாஸ்.. நான் போய் இந்த குழந்தையை அதன் உரிமையாளரிடம் கொடுத்து விட்டு
வந்து விடுகிறேன்...”
என்று அந்த குட்டியை வாங்க கை நீட்ட, அதில் மிரண்ட அந்த
குட்டியோ, விகர்த்தனன் தோளிலிருந்து தன் முகத்தை நிமிர்த்தி, திருப்பி விஷ்வாவை
அதிர்ச்சியோடு பார்த்துவிட்டு, மீண்டும் விகர்த்தனன் கழுத்தை இறுக்கி கட்டிக் கொண்டு
“மாட்டேன்..... “ என்று
மழலையில் பிதற்றியவாறு அவன் வலிய தோளில் இன்னுமாய் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அதைக் கண்டதும் விகர்த்தனனுக்கு இன்னும் ஆச்சரியம்.
யார் இந்த குட்டி தேவதை என்று தெரியாத பொழுதும், அவளை விஷ்வா இடம்
கொடுக்க மனம் வரவில்லை.
திரும்பி, கான்ப்ரென்ஸ்
அறையில் அமர்ந்திருந்தவர்களை பார்த்தவன்
“ஸாரி கைஸ்... ஐ வில் பி பேக் இன் ப்யூ மினிட்ஸ்...” என்று
சொல்லியவன், விஷ்வாவிடம் நான்
பார்த்துக்கிறேன் என்று பார்வையால் சொல்லி விட்டு, தன் தோளில் கிடந்தவளை தன்னோடு அணைத்தவாறு அறைக்கு வெளியில் வந்தான்.
அவன் அறையை விட்டு வெளியில் சென்றதும், அவன் தலை மறைந்ததும் அதுவரை அட்டென்சன் பொசிஷனில்
அமர்ந்திருந்தவர்கள் எல்லாரும் ஒரே நேரத்தில்
“ஊப்ப்ப்ப்ப் ...” என்று ஊதி விட்டு தளர்ந்து இருக்கையில் அமர்ந்தனர்.
அடுத்து யார் அந்த குழந்தை என்ற கேள்விக்கு தங்களுக்குள்ளேயே
கிசுகிசுத்தவாறு தங்கள் கற்பனை குதிரையை தட்டி விட்டனர்.
“ஒருவேளை பாஸ் உடைய குழந்தைதானா? அப்பானு அழைக்கிறதே... அந்த குட்டியை பார்க்கறதுக்கு பாஸ் உடைய
சாயல் தெரியுது...” என்று எல்லாரும் தங்களுக்குள் கிசுகிசுக்க, விஷ்வாவிற்கும் அதே
கேள்விதான்
ஏனென்றால் அந்த குழந்தையின் உருவம் அச்சு அசல் விகர்த்தனனை
போலவே, அவனின் ஜெராக்ஸாய் இருந்தாள்.
“எல்லாரும் சொல்வதைப்போல, ஒருவேளை பாஸ் உடைய குழந்தைதானா? அது எப்படி? இல்லை... இருக்காது.. இருக்கவும் முடியாது... “ என்று தன் தலையை இடவலமாக ஆட்டிக் கொண்டான் விஷ்வா..!
*****
அதே நேரம் அந்த குட்டியை தோளில் சாய்த்தவாறு விகர்த்தனன் வெளியில் வர, அங்கு வரவேற்பறையில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாரும்
அவனை கண்டதும் வேகமாக எழுந்தனர்.
தொலைவிலிருந்த ரிசப்ஷனிஸ்ட் கூட தன்னுடைய இருக்கையிலிருந்து வேகமாக
எழுந்து நின்றாள்.
அறையை விட்டு வெளியில் வந்தவன், சுற்றிலும் யாராவது
குழந்தையை தேடுகிறார்களா என்று கண்களால் துலாவ,
அப்பொழுதுதான் சற்று தொலைவில் நின்று ஒவ்வொரு சிறிய
கான்ப்ரென்ஸ் அறையின் முன்னாலும் நின்றவாறு எட்டி எட்டி கண்ணாடி தடுப்பின்
வழியாக உள்ளே பார்க்க முயன்று கொண்டிருந்தவள் கண்ணில் பட்டாள்.
மற்ற அறைகளை பதற்றத்துடன் நோட்டமிட்டவள், அனிச்சையாக திரும்பவும், அங்கே ஒரு நெடியவன் கையில்
குழந்தையுடன் நின்றிருப்பதை கண்டதும் அவள் முகம் பிரகாசித்தது.
அடுத்த நொடி பாய்ந்து அவன் அருகில் ஓடி வந்தவள், கண்களில் தாரை தாரையாக
கண்ணீர் வழிய, வெளிவராத குரலில் அம்முமா.... என்று தவிப்புடன்
அழைத்தாள்.
அவள் பார்வை, அந்த நெடியவன்
தோளில் முகம் புதைத்திருந்த தன் மகளின்
மீது மட்டுமே குத்திட்டு நின்றது.
நிமிர்ந்தும் அவன் முகம் பார்க்கவில்லை.
அவள் தவிப்புடன் மெல்ல அழைத்தது அவளின் மகளுக்கு கேட்காமல் போய்விட, இந்த முறை கொஞ்சம் தன்னை சமனபடுத்திக்கொண்டவள்,
“அம்மு...எங்கடா போன?...அம்மா ரொம்ப
பயந்து போய்ட்டேன்...அம்மா கிட்ட வா.... “ என்று தழுதழுத்தவாறு, தன் மகளை வாங்க கையை
நீட்ட,
தன் தாயின் குரல் கேட்டதும், விலுக்கென்று திரும்பி
பார்த்தவள், தன் தாயை கண்டு கொண்டதும், இன்னுமாய் மலர்ந்து சிரித்தவள், உடனே தன் தாயிடம் பாய்ந்து செல்ல வில்லை.
மாறாக அந்த நெடியவன் முகம் பார்த்து
“அப்பா... அப்பா....” என்று தன் தாயின் முகம் பார்த்து சொல்லி விட்டு அடுத்த கணம் அவன் கழுத்தை
கட்டிக்கொண்டு, தன் பிஞ்சு இதழ்களால் அவன்
கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
அவ்வளவுதான்.... இந்த
உலகமே மறந்து போனது விகர்த்தனனுக்கு.
அப்படியே இறக்கை இல்லாமல் வானத்தில் பறப்பதைப் போல...இதுவரை
அவன் பார்த்திராத, அனுபவித்திராத சொர்க்கத்தில் நுழைந்து விட்டதை போல பூரிப்பு..பரவசம்
அவன் உள்ளே...
எத்தனையோ வகையான மதுபான வகைகள், அவனுக்கு அளித்த போதையை விட, அந்த குட்டியின் முத்தம் போதை அளித்தது.
அதில் கிறுகிறுத்து போனவன், அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, அந்த குட்டியோ ஒன்றோடு
நிறுத்தாமல் அப்பா... அப்பா... என்று ஆசையோடு அழைத்தவாறு அவன் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டாள்.
பின் வெட்கம் வந்தவளாய், அவன் கழுத்தை கட்டிக் கொண்டு, தோளில் முகம் புதைத்துக் கொண்டு மீண்டும் தன் இரண்டு கால்களையும் உதைத்தாள்
சந்தோஷத்தில்.
அதைக் கண்ட பெண்ணவளுக்கோ தூக்கிவாரிப் போட்டது.
அவள் யாரை அப்பா என்று அழைக்கிறாள் என்று திடுக்கிட்டவள்
அப்பொழுதுதான் நிமிர்ந்து அந்த நெடியவன் முகம் பார்த்தாள்.
அதே நேரம் அந்த குட்டியின் செய்கையில் பரவசமடைந்து போயிருந்தவன்
அனிச்சையாய் இமை தாழ்த்தி, எதிரில் நின்றவளை
பார்க்க, அடுத்த கணம் அவனுமே அதிர்ந்து போனான்.
அவளின் அதிர்ச்சி கொஞ்சமும் குறையாமல் அப்பட்டமாக அவன்
முகத்திலும் தெரிந்தது.
அந்த நெடியவனை கண்டு அதிர்ந்தவள் உதடுகள் ஷ்யாம்.... என்று
முனுமுனுக்க, அவனின் அழுத்தமான உதடுகளோ ஸ்வாதி? என்று கேள்வியோடும் மற்றும் அதிர்ச்சியோடும் மெல்ல முனகின...!
0 comments:
Post a Comment