அத்தியாயம்-12
“ஹலோ என்ன ஜமீன்தாரே..!
உட்கார்ந்துகிட்டே தூங்கறீங்களா? “ என்று அவன் முன்னே விரல் நீட்டி சொடக்கிட்டு சிரித்தாள் பொதிகை.
அவளின் அழைப்பில் திடுக்கிட்டு விழித்தவன், தன் பழைய கல்லூரி நினைவுகளிலிருந்து
மெதுவாக வெளிவந்தான் வெற்றிமாறன்.
பழைய நினைவில், அவளை சந்தித்ததும்
அவளிடம் காதல் கொண்ட அந்த நாள் நினைவில், இப்பொழுதும் அவளைப் பார்த்து காதலுடன் சிரித்து
வைக்க, அவனின் அந்த பார்வை மாற்றத்தை தாளாதவளாய் பேச்சை
மாற்றினாள்.
“என்ன ? எதிர்கால கனவு
கண்டீங்களாக்கும்? “ என்று நக்கலாக
சிரிக்க,
“யெஸ் பேப்... ஆனால் இது ப்யூச்சர் ட்ரீம் இல்ல...ஏழு வருடத்திற்கு முன்பு உன்னை
முதன் முதலாக சந்திக்க அந்த நாள் ஞாபகம்...” என்று கண் சிமிட்டி சிரித்தான்.
“எந்த நாள் ? “ தன் புருவத்தை சுருக்கினாள் தெரிந்து கொண்டே.
“ஹா ஹா ஹா நீ என் வாழ்வில் வந்த அந்த முதல் நாள்..!
நம்ம பசங்க உன்னை
அப்படி ராக்கிங் பண்ணிய பொழுதும் கொஞ்சமும் பயமில்லாமல் எவ்வளவு தைரியமாக
பேசினாய்...அதில்தான நான் விழுந்தேன்...அது எப்படி டி கொஞ்சம் கூட பயமே இல்லாமல் அவ்வளவு போல்ட் ஆ எதிர்த்து
நின்ன? ” என்று
வெற்றிமாறன் சிலாகிக்க
“ஹா ஹா ஹா நீங்கள் லாம்
என்ன சிங்கமா புலியா? உங்களைப் பார்த்து பயந்து நடுங்க?” என்று சிரித்தாள் பொதிகை.
“ஆமாமா... சிங்கமே நேரில் வந்தால் கூட, முறத்தாலயே அடிச்சு
துரத்தற வீரத் தமிழச்சி அல்லவா நீ...முசிறிக்காரி வேற. எப்படி இருப்ப..” என்று
செல்லமாக அவள் கன்னத்தை கிள்ளினான்.
“அது...அந்த பயம் இருக்கட்டும்...சரி
அதவிடு வெற்றி...இப்ப நம்ம மேட்டருக்கு வா...” என்று பொதிகை ஏதோ சொல்லும் முன்னே, பிரகாசமாய் ஒளிர்ந்தது வெற்றியின் முகம். அவளை முந்திக்கொண்ட
வெற்றிமாறன்
“மேட்டரா? கல்யாணத்திற்கு முன்னாடியே
வா? வாவ்... சூப்பர் பேபி...நான்
ரெடி...” என்று தன் காலரை தூக்கி விட்டுக்கொண்டு அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவாறு
மந்தகாசமாக புன்னகைத்தான் வெற்றி...
அவன் பார்வையில் பெண்ணவள் தடுமாறினாலும், நொடியில் சமாளித்துக்கொண்டு, அவனை முறைத்தவள், நங்கென்று தலையில் கொட்டினாள் பெண்.
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆஆஆஆ...” என்று வலிப்பதை போல
நடித்தவன்
“ராட்சசி... இப்ப எதுக்குடி என்னை கொட்டின? நீதான மேட்டர் னு
சொல்லி மனுசனை உசுப்பேத்தின? “ என்று முறைத்தான்
வெற்றி.
“ஐய...புத்தி போகுது பார்... வர வர ரொம்ப
கெட்ட பையனா மாறிகிட்டு வர்றிங்க வெற்றி...” செல்லமாக சிணுங்கினாள் பாவை.
“அடிப்பாவி...நான் ஒன்னுமே பண்ணாமலயே கெட்ட
பையன்னு சர்ட்டிபிகேட் கொடுக்கறியே...அப்ப உண்மையிலயே கெட்ட பையனா மாறிட வேண்டியதுதான்...”
என்று மீண்டுமாய் தாபத்துடன் அவளை பார்த்து வைக்க, அதில் கலவரமானாள் பெண்.
“என்ன ஆச்சு வெற்றி உனக்கு? இன்றைக்கு ஒரு மார்க்கமாகவே பேசற...பார்த்து வைக்கிற? “ என்று முறைத்தாள் பொதிகை.
“ஹ்ம்ம் ஒன்னுமே ஆகலையே... அதுதான்
பிரச்சனை... ஏன் டி... நானும் எவ்வளவு நாள்தான் உனக்காக
காத்துகிட்டு இருக்கிறது? அதுவும் இப்படி மப்பும் மந்தாரமுமா இருக்கிற உன்னை பக்கத்தில் வைத்துக் கொண்டு எத்தனை
நாளைக்கு இப்படியே சைட் அடிச்சுகிட்டு இருக்கிறதாம்...
சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் பொதி. இப்பல்லாம் உன்னை ரொம்பவும் தேடுது. உன்னை என் பக்கத்திலயே வச்சுக்க சொல்லி... உனக்காக
என் உடலும் மனமும் ரொம்பவுமே ஏங்குது.
ப்ளீஸ் டி... என்னை
புரிஞ்சுக்கோ...நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்.. சரியா? “ என்று தன் மன உணர்வுகளை எல்லாம் அவளிடம் கொட்டினான் வெற்றி.
அதைக்கேட்டு அவளுக்கும் கஷ்டமாகத்தான்
இருந்தது/
அதோடு அவன் திருமணத்திற்கு
அவசரபடுத்துவதற்கு இன்னொரு காரணம் அவன் வீட்டார்.
அதுவும் அவனுடைய நண்பர்கள் அனைவருக்கும்
திருமணமாகி விட்டது. இப்பொழுது
குழந்தையும் குடித்தனமுமாக வேற ஆகிவிட்டனர்.
அதனாலயும் மேலும் ஜமீன் பரம்பரைக்கு
அடுத்து இருக்கும் ஒரே வாரிசு... அத்தனை சொத்துக்களுக்கும் ஒரே அதிபதி. அவனுக்கு ஒரு நல்லதை பண்ணி பார்க்க முடியவில்லை
என்று அவன் வீட்டில் அழுது புலம்புவது அவளுக்கும் புரிகிறது தான்.
இவனுடைய காதல் விசயம் ஏற்கனவே அவன்
வீட்டினருக்கு தெரிந்து விட்டது. முதலில் மறுத்தாலும் வெற்றி பிடிவாதமாக
பொதிகையைத்தான் கட்டுவேன் என்று நின்றுவிட அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பின் அவர்களாகவே இறங்கி வந்து அவர்கள்
காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டனர்.
பொதிகை படிப்பு முடியட்டும் என்று
காத்திருந்தவர்கள் இப்பொழுது இனிமேலும் காத்திருக்க முடியாது..சீக்கிரம் கல்யாணம்
பண்ண வேண்டும் என்று அவன் வீட்டினர் அவனுக்கு நெருக்கடி கொடுத்து
கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவள் அறிந்ததுதான்.
ஆனால் அவனுக்காக பார்த்தால், அவள் லட்சியம் என்னாவது? அவள் இத்தனை நாள் போராடியது எல்லாம் பலன் இல்லாமல் போய் விடுமே...
அவள் கண்டு கொண்டிருக்கும் கனவு கை சேராமல்
போய்விடுமே... என்று ஒரு பக்கம் நெஞ்சை பிசைந்தது.
“முடியாது... எனக்கு என் கனவு, லட்சியம் தான்
முக்கியம்...” என்று மானசீகமாக தன் தலையை சிலுப்பி கொண்டவள், தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு இறுகிய முகத்துடன் அவனை
பார்த்தவள்
“லுக் வெற்றி... உனக்கே தெரியும். எனக்கு என் கனவு, லட்சியம் தான்
முக்கியம். அதை அடைந்த பிறகுதான்
மத்ததெல்லாம்...அதுவரைக்கும் கொஞ்சம்
வெய்ட் பண்ணுங்களேன்...” என்று பொறுமையாக விளக்க முயல, அதைக்கேட்ட வெற்றியோ
கடுப்பானான்.
“மண்ணாங்கட்டி லட்சியம்...அதை கல்யாணத்த
பண்ணிக்கிட்டு நிறைவேற்றக் கூடாதா? “ என்றான்
முழுமொத்த எரிச்சலுடன்.
“இல்லை...” என்றதாய் இருபக்கமும் தலையை
ஆட்டினாள் பொதிகை.
“ஏன்? என் மீது நம்பிக்கை
இல்லையா? திருமணத்திற்கு பிறகு உன் லட்சியத்தை தொடர விடாமல் செய்திடுவேன் என்ற பயமா? “ என்றான் கோபத்துடன்
“அப்படியில்லை... வெற்றி...” வார்த்தை
வராமல் தடுமாறினாள் பொதிகை.
“வேற எப்படி? “ என்றான் இடுங்கிய கண்களுடன்.
“திருமணம் முடிந்து உங்க வீட்டுக்கு
மருமகளா வந்துவிட்டால் எனக்கும் நிறைய ரெஸ்பான்சிபிலிட்டிஸ் வந்துவிடும் வெற்றி. உங்களுக்கு மனைவியாய்... உங்க குடும்பத்துக்கு மருமகளாய், அதுவும் பொறுப்புள்ள ஜமீன் மருமகளாய் நடந்துகொள்ள வேண்டும்
அதற்கு என்னைய நான் முழுவதுமாக தயார்படுத்தி இருக்கவேண்டும்
இப்போதைக்கு என்னால் அந்த மாதிரி நடந்து கொள்ள முடியாது.
என் நினைப்பெல்லாம் இந்த ப்ராஜெக்ட்டை
வெற்றிகரமாக முடிக்க வேண்டும்...என் லட்சியம் நிறைவேற வேண்டும்...என் கனவு கை சேர
வேண்டும்... என்றுதான் சுற்றிக் கொண்டிருக்கும்.
ப்ளீஸ் வெற்றி...புரிஞ்சுக்கோ... ஆக்கப்
பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்க முடியாதா? இத்தனை நாள் எனக்காக வெயிட் பண்ணின. இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாட்கள்தான்... எனக்காக வெயிட் பண்ணேன்..ப்ளீஸ்...” என்று கெஞ்சினாள் பெண்.
அவளின் பாவமான முகத்தை கண்டதும் கொஞ்சம்
தன் கோபத்தை தணித்தவன்
“லுக் பொதி... இதையேதான் இரண்டு வருஷமா சொல்லிக்கிட்டு
இருக்க. கொஞ்சமே கொஞ்ச நாள்தான் என்று சொன்ன...
இப்ப அந்த கொஞ்ச நாட்கள், வாரமாகி, வாரம் மாதமாகி, மாதம் வருஷங்களாகியும்
விட்டது...” என்று முறைத்தான் வெற்றி.
அவன் கோபத்தில் நியாயம் இருந்ததுதான்.
ஏழு வருடமாக அவளை காதலிப்பவன்...அவனை மணக்க
எத்தனையோ பெண்கள் வரிசையில் நிக்க, பெட்ரோமஸ்
லைட்டேதான் வேணும் என்பதாய் பொதிகைதான் அவன் மனைவி என்று உறுதியாய் நிற்பவன்.
அவனையும் மேலும் மேலும் காக்க வைக்க கூடாது
என்பதும் பெண்ணவளுக்கு புரிகிறதுதான்...
ஆனால்..?
அவள் கனவு? அவள் லட்சியம்...?
அது அவள் காதலைவிட பெரிதல்லவா? லட்சியத்தை அடைய வேண்டும் என்றால் ரொம்பவும் கஷடபட்டுத்த்தான்
ஆகவேண்டும். ஆனால் இது அவள் மட்டுமே அனுபவிக்கும் கஷ்டம் அல்லவே..அவனையும்
சேர்த்து அல்லவா கஷ்டபட வைத்துக் கொண்டிருக்கிறாள்..
“ப்ச்..ஆனால் என்னால் இப்போதைக்கு ஒன்னும்
செய்ய முடியாது. இப்போதைக்கு இந்த வெற்றியை சமாளிக்க வேண்டும்...” என்று எண்ணியவள், அந்த சூழ்நிலையை
இலகுவாக்க எண்ணியவள்
“ஹீ ஹீ ஹீ எனக்கு அன்னைக்கு ஒரு
பேச்சு..இன்னைக்கு ஒரு பேச்சு என கிடையாது ஆபிசர். அப்பவும், இப்பவும் எப்பவுமே ஒரே பேச்சுதான்... “ என்று தலை சரித்து
பக்கவாட்டில் பார்த்து குறும்பாக சிரித்து
செல்லம் கொஞ்சினாள்.
மற்ற நேரமாக இருந்திருந்தால் அவளின் ஆக்சனை
ரசித்து பார்த்து அவளை அள்ளிக் கொண்டிருப்பான் வெற்றி.
ஆனால் இப்பொழுது கொஞ்சம் கோபமாக இருக்க, அப்பொழுதுதான் கொஞ்சமாக
இறங்கி வந்திருந்தவன், அவளின் மலுப்பலான
பதிலில் கோபம் மீண்டும் கிடுகிடுவென
உயர்ந்து உச்சத்தை தொட்டது.
“இங்க பாருடி... உனக்கு நான் இன்னும் ஒரு
இரண்டு மாசம் டைம் தர்றேன்.. அதுக்குள்ள உன் கனவோ, லட்சியமோ... குறிக்கோளோ, கொள்கையோ...எதையோ பண்ணித்தொலை.
ஆனால் ரெண்டு மாசத்துக்கு மேல ஒரு நிமிடம் கூட வெய்ட் பண்ண
மாட்டேன்..” என்று உறுமினான்.
அதைக்கேட்டவள் கொஞ்சம் அதிர்ந்துதான்
போனாள்.
காத்திருக்க மாட்டேன் என்றால் என்ன
செய்வான் என்று அதற்குமேல் யோசிக்க முடியாதவளாய், அடிபட்ட பாவத்துடன் அவனை பார்த்தவள்
“ரெண்டு மாசத்துல முடியலைனா? “ என்றாள் சந்தேகமாக..
கூடவே முகம் முழுவதும் முழுமொத்த பதற்றம்.
என்ன சொல்வானோ என்று தவிப்புடன் அவன் முகம்
நோக்கியவள், பின் தன்னை
கல்லாக்கி கொண்டு
“ரெண்டு மாசம் வரைக்கும் எதுக்கு
காத்திருக்கணும்? நீ வேற பொண்ணா பாத்து
கட்டிக்க வெற்றி. நான் உனக்கு செட்டாக மாட்டேன்...” என்று கண்ணில் நீர் தழும்ப
சொல்லிவிட்டு தலையை குனிந்து கொண்டாள் பொதிகை.
பின்ன? அவள் கண்ணில் நீரை அவன் பார்த்துவிடக்கூடாது என்று அவசரமாக
தரையை பார்த்தாள் பெண்.
“ஓங்கி அறைஞ்சனா..உன் முப்பத்திரண்டு
பல்லும் உன் கைல வந்திடும். அப்புறம் நான் பல் இல்லாத பொக்கை வாய் கிழவி கூடதான்
குடும்பம் நடத்தவேண்டி இருக்கும். அதுக்காக பாவம் பார்த்து விடறேன்.
என்னை என்னானு நினச்ச டி? பொம்பள சுகத்துக்கு அலையறவன் னா? யாரையோ கல்யாணம் பண்ணிக்கறதா இருந்திருந்தா எப்பவோ எனக்கு
கல்யாணம் ஆகி இந்நேரம் ரெண்டு புள்ளைக்கு அப்பாவாகி இருப்பேன்.
இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்க… இந்த வெற்றிமாறனின்
வாழ்வில் பொண்டாட்டி என்றால் அது நீ மட்டும் தான்.
இந்த ரெண்டு மாசத்துல நீ செய்ய வேண்டியதை
செஞ்சுட்டு மணமேடையில் வந்து உட்காரணும். இல்லைனா உன்னை தூக்கிட்டு போய் தாலிகட்டி
குடும்பம் நடத்த வேண்டி வரும்.
அதுவும் இல்லனா, அதான் நான் ஏற்கனவே உனக்கு தாலி கட்டிட்டேனே...! அதுவே
போதும்னு நேரா தூக்கிட்டுப் போய் குடும்பம் நடத்திடுவேன்..! எழுதி வச்சுக்க...”
என்று படபடவென்று பொரிந்து தள்ளினான் வெற்றிமாறன்.
அதைக்கேட்ட பெண்ணவளோ ரொம்பவும் நெகிழ்ந்து போனாள்.
அவனுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாதவள்
அவள். அழகிலும் சரி..அந்தஸ்திலும் சரி. அவன் உயரத்துக்கு அவள் பத்து ஏணி வைத்தால் கூட தொட்டுவிட முடியாத உயரம்தான்.
அப்படிப்பட்டவன் தன் மீது உயிராக இருப்பதை
எண்ணி மனம் நெகிழ்ந்து போனாள் பெண்ணவள்.
இப்படி ஒருவன் காதலை பெற தான் என்ன தவம்
செய்திருக்க வேண்டும் என்று நெஞ்சம் பொங்கியது.
அவளின் லட்சியத்தை புரிந்து கொண்டு
இன்றுவரை அவள் உடன் துணை நிற்கிறான். அவளுக்கு கர்வமாக இருந்தது. ஆனாலும் அவன்
கேட்பதற்கு உடனே தலையை ஆட்டிவிட முடியாதே...என்ன செய்ய?
என்ன செய்வதென்று புரியாமல் உள்ளுக்குள்
வெதும்பியவள், தன்னை மறைத்துக் கொண்டு, வெற்றிமாறனை சமாதானபடுத்த முயன்றாள்.
அவனோ இன்னுமாய் கோபத்தில்
வெடித்துக் கொண்டிருந்தான்.
காலையில் அவன் வீட்டில் அவனுக்கு கொடுத்த ப்ரஸ்ஸர் இப்பொழுது
அவன் வாயிலிருந்து வார்த்தைகளாக வெளி வந்து கொண்டிருந்தது.
பெண்ணவளும் ஏதேதோ சமாதானம் செய்து பார்க்க, அவனோ கொஞ்சமும் மலை இறங்காமல் கோபத்தில் பொங்கி
கொண்டிருந்தான்.
அதற்குமேல் அவனுடன் போராட முடியாது என முடிவு செய்தவள், தன் அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்திருந்தாள்.
அவனின் கோபத்தை தணிக்கும் வித்தையை கற்று இருந்தவள்... அதை பயன்படுத்தி
இருந்தாள்.
திடீரென்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவள், தன் அருகில் அமர்ந்து இருந்தவனின் தாடையை பற்றி நிமிர்த்தி, அவனை நோக்கி குனிந்தவள், படபடவென்று பொரிந்து கொண்டிருந்த
அவனின் இதழோடு தன் இதழை சேர்த்து அவனை மேல பேச விடாமல் லாக் செய்து விட்டாள் பெண்.
அவளின் அந்த திடீர் செய்கையில் இன்பமாய் அதிர்ந்து போனாலும் அடுத்த
கணம் அவளின் மென்மையான இதழ் தீண்டலில் அவன் உள்ளே இருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து
கொண்டிருந்தது.
அவளோ அவனை விட்டுவிடாமல் இன்னுமாய் அவனின் அழுத்தமான இதழில் கதை எழுதிக் கொண்டிருக்க, அதில் தேன் குடித்த
நரியாக கிறங்கிப் போனவன், முற்றிலுமாகவே அவளின் முத்தத்தில் கரைந்து போனான்.
அடுத்த நொடி கைக்கு அருகில் இருந்த பெண்ணவளை, இடையோடு சேர்த்து வளைத்து
இழுத்து தன் மடியில் கிடத்திக் கொண்டவன், அவளை தன்னோடு சேர்த்து
இறுக்கி அணைத்துக் கொண்டான் வெற்றிமாறன்.
இருவருக்குமே அந்த நொடி இன்பமாய் இருந்தது.
அவனின் கோபத்தை தணிக்க என்று முத்தமிட ஆரம்பித்து இருந்தவள், அவனின் இறுகிய அணைப்பில் தன்னை மறந்து அவனுடன்
ஒன்றிக்கொண்டாள்.
நீண்ட நெடிய நேரம் தங்களை மறந்து இருவரும் வேற உலகத்தில்
சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவர்களின் சந்தோசத்தை பறிப்பதற்கு என்றே வந்தது
அந்த அலைபேசி
அதில் திடுக்கிட்டு முதலில் சுதாரித்த பொதிகை, அவசரமாக அவன் இதழில்
இருந்த தன் இதழை விடுவித்துக் கொண்டவள், அவனிடமிருந்தும்
விடுபட முயல,
அவளின் முத்தத்தில் கல்லுண்ட வண்டாய் கிறங்கி கிடந்தவன் மீண்டுமாய்
அவளை இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டு அவன் முகம் எங்கும்
முத்தமழை பொழிந்தான்.
அதே நேரம் அலைபேசி மீண்டும் அடிக்க, அதை கண்டு கொள்ளாமல் தன்னவளிடம் தன் தேடலை தொடங்கி இருந்தான்
வெற்றி.
அவனின் காட்டாறு போன்ற வேகத்தில் திக்குமுக்காடி போனாள் பாவை.
அவனின் கோபத்தை தணிக்க என்று அவள் எடுத்த ஆயுதம் அவளுக்கு
எதிராக போய்விட்டதை போல இருந்தது.
உள்ளம் படபடக்க, அவனிடமிருந்து
திமிறி விடுபட முயல, ம்கூம் அவள்
சுண்டுவிரலை கூட அசைக்க முடியவில்லை.
அந்த அளவுக்கு அவளை உடும்பு பிடியாக தன்னோடு சேர்த்து இறுக்கி
அணைத்திருந்தான் அவள் காதலன்.
இத்தனை நாள் அவளுக்கான ஏக்கத்தையும், தவிப்பையும், தாபத்தையும் அந்த முத்தத்தில் கொட்டி விடுபவனைப் போல இன்னும்
இன்னுமாய் அவளை தழுவிக்கொண்டவன் மென்மையாய் ஆரம்பித்து பின் ஆழமாய், அழுத்தமாய் வன்மையாய் முத்தமிட்டான் வெற்றிமாறன்..!